மார்க்க பிரிவும் தீர்வும்!

இஸ்லாத்தில் பிரிவுகள் ஓர் ஆய்வு! ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் உலக அழிவுநாள் வரை சற்றும் தடம்புரலாமல், இசகு பிசகாமல் செல்லக்கூடிய ஒரு கொள்கை பிரிவினை கொள்கைதான். வாருங்கள் இதன் வரலாற்றை காண்போம்!

 மனிதன் நிலத்தில் காலடி பதிப்பதற்கு முன் ஏற்பட்ட பிரிவுகள்

  • ஆதம் நபி படைக்கப்பட்டதும் அவருக்கு அனைத்து படைப்பினங்களும் சஸ்தா செய்ய அழைப்பு விடுக்கப்பட்டதும் இப்லிஷ் மட்டும் தனித்து நின்று அல்லாஹ்வுக்கு கட்டுப்பட மறுத்தான் பிரிந்து நின்றான் இது முதல் பிரிவு!

 

  • சுவனத்தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் கட்டளை விடுத்ததும் ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) தவறிழைத்து அல்லாஹ் விடமிருந்து பிரிந்து நின்றனர்.

 

  • அல்லாஹ்வின் சபையில் ஒற்றுமையாக இருந்த ஆதம் (மனிதன்), மலக்குமார்கள், இப்லிஷ் (ஜின் கூட்டங்கள்) பிரிந்தன. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட மலக்குமார்கள் மட்டும் அல்லாஹ்விடமே தங்கிவிட்டனர் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்தவர்களாக இருக்கின்றனர். (சுப்ஹானல்லாஹ்) மாறாக மனிதனோ, இப்லிஷ் (ஜின் கூட்டங்களோ தங்கள் இறைவனை அஞ்சும் விதமாக அஞ்சவில்லை! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்)

 

ஆதம் நபியின் சந்ததியினர் இடையே ஏற்பட்ட பிரிவுகள்

ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோருக்கு பிறந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டு கொலைகளில் ஈடுபட்டனர் இது நம்முடைய ஆதிகுடும்பத்தில் ஏற்பட்ட முதல் பிரிவு ஆகும்! இதோ உங்கள் பார்வைக்கு ஓர் இறை வசனம்

 

நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னை நோக்கி நீட்டினாலும் கூட நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை ஓங்கமாட்டேன். இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனை நான் அஞ்சுகிறேன். (அல்குர்அன் 5:28)

 

இந்த திருமறைவசனத்தில் உள்ள படிப்பினையை அறியமுடிகிறதா? ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை கொல்ல முற்படுகிறான் ஆனால் தாம் கொல்லப்படுவோம் என்பதை அறிந்தும் அந்த சகோதரன் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்கிறார்! அல்லாஹ்வின் மீது இவருக்கு உள்ள பயம் உங்களுக்கு உள்ளதா?

 

 

நபிமார்களின் காலத்தில் ஏற்பட்ட பிரிவுகள்

நபிமார்களான நூஹ் (அலை), இப்ராஹீம் (அலை) யுசுப் (அலை) முதல் நபிகள் நாயகம் (ஸல்) வரை அனுப்பப்பட்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களும் உண்மையைத் தவிர வேறு எதனையும் போதிக்கவில்லை ஆனால் இவர்களை ஏற்றுக்கொண்ட சமுதாயத்திற்கும் ஏற்றுக்கொள்ள தயங்கிய சமுதாயத்திற்கும் இடையே பிரிவு ஏற்பட்டது அதன் விளைவுகளாக புதுப்புது மதங்கள், சாதிகள், போலி தெய்வங்கள் உருவாக்கப்பட்டன. அல்லாஹ் அருளிய இஸ்லாம் அப்போதும் நிலைத்து நின்றது உலக அழிவு நாள்வரை இறைவனின் அருளால் தனித்தே நிற்கும்!

 

ஒரு நபியின் பிரிவும் அவர் பெற்ற தண்டனையும்

நபி யுனுஸ் (அலை) தம் சமுதாயத்திடம் நன்மையை எத்திவைத்தார் வரவிருக்கும் அல்லாஹ்வின் தண்டனை பற்றி முன்னெச்சரிக்கையை அறிவித்தார் ஆனால் அவர் சமுதாயம் திருந்தவில்லை உடனே நபி யுனுஸ் (அலை) தம் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு அவர்களை விட்டுப் பிரிந்து சென்றார் ஆனால் அவர் பிரிந்த உடனேயே அல்லாஹ் அவருயை சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டினான் அவர்கள் தங்களை சுதாரித்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டனர்.  ஆனால் கோபம் கொண்டு மக்களைப் பிரிந்த நபி யுனுஸ் (அலை) அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார் மீனுடைய வயிற்றுக்குள் தள்ளப்பட்டு வேதனைக்குள்ளானார் இறுதியில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு பெற்று திருந்திக்கொண்டார். ஆதாரம் இதோ!

 

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம் என்று நினைத்தார்.உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்என்றுஇருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்.கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக்காப்பாற்றுவோம். (அல்குர்ஆன் 21-86, 87)

 

 

இறுதி நபியின் மறைவுக்குப் பின் சத்திய சஹாபாக்களிடம் ஏற்பட்ட பிரிவுகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேரடிப்பார்வையில் இருந்த சத்திய சஹாபாக்கள் ஓருடல் ஈருயிராகவும் வாழ்ந்துவந்தார்களே ஆனால் அந்த மாநபி மரணமடைந்த பின் ஆட்சித்தலைமைக்கு ஆசைப்பட்டு தங்களுக்குள் பிரிந்து நின்றார்களே இதுவும் ஒருவகை பிரிவுதானே! மாநபியின் நேரடிப்பார்வையில் இருந்த இவர்கள் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்ளாமல் தங்களுக்குள் பின்னிப் பிணைந்து வாழந்திருந்தால் இன்றைக்கு இஸ்லாத்தில் ஷியா பிரிவும், சன்னி பிரிவும் தோன்றியிருக்குமா? இதோ கீழ்கண்ட நபிமொழிக்கு இவர்கள் கட்டுப்படவில்லையே!

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகைநடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகுசொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்)காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான்இப்போது (அல்கவ்ஸர்எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்குபூமியின் கருவூலத் திறவுகோல்கள்அல்லது பூமியின் திறவுகோல்கள்கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆம்விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச்செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடுவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றேஅஞ்சுகிறேன்என்றார்கள். (புகாரி 6690 Volume:7 Book:83)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போதுஅவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்என்பேன். அதற்கு இறைவன் உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப்பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்என்றுசொல்வான்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 6585 Volume:7 Book:83)

 

நல்ல அறிஞர்கள் மரணித்தபின் ஏற்பட்ட மார்க்கப் பிரிவுகள்

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலிருந்தே இறுதிவடிவம் பெற்ற இஸ்லாம் உலகில் பரவ ஆரம்பித்தது ஆங்காங்கே மக்கள் உண்மையை உணர ஆரம்பித்தனர். நபிகளாருக்குப் பின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களும் இமாம்களும் மார்க்கத்தை போதித்தனர் ஆனால் மக்களோ இந்த நல்ல அறிஞர்களும் இமாம்களும் மரணித்தவுடன் அவர்களில் சிலர் சிலரை அவ்லியாக்களாகவும் மற்றும் சிலர் சிலரை தலைவர்களாக ஏற்றனர் இதன் விலைவுகள் தர்காஹ் வழிபாடு, ஹனபி, ஷாஃபி மத்ஹபுகள் போன்றவை.

 

வழிகெட்ட தலைவர்களால் ஏற்பட்ட மார்க்க பிரிவுகள்

சிலர் வழிகெட்ட தலைவர்களை பின்பற்றினர் அவர்களோ முழுமையடைந்த மார்க்கதின் உன்னத 5 அடிப்படைக் கோட் பாடுகளில் புதிய கோட்பாடுகளை கலந்து ஷியா பிரிவு, தப்லீக் பிரிவு கொள்கைகளை உருவாக்கினர். சிந்தித்துப்பாருங்கள்! மக்களை சீர்த்திருத்த மார்க்கம் வந்ததா அல்லது மார்க்கத்தை சீர்திருத்த மக்கள் வந்தார்களா? என்னய்யா கொடுமை இது!

 

விஞ்ஞான தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் மார்க்கப் பிரிவு

மாற்றுமதத்திலிருந்தவர்கள் முஸ்லிம்களானார்கள் ஆனால் அவர்களுக்கு நேர்வழியை எடுத்துக்கூற போதிய வழிகாட்டல்கள் இல்லாததால் தங்கள் பழைய வழியை இஸ்லாத்திற்குள் புகுத்த ஆரம்பித்தனர். இவ்வாறு உருவானவைகள்தான் இன்றைக்கு நம் பகுதி மக்களிடம் உள்ள புதுப்புது அநாச்சாரங்கள். இவைகளை அன்றைக்கே கலைந்திருக்கலாம் ஆனால் தற்போது நம்மிடம் உள்ளது போன்ற விஞ்ஞான தொழில்நுட்பமும், வழிகெட்ட மக்களை நாள்தோறும் சந்தித்து நல்லறிவை எத்திவைக்கும் சூழலும் இல்லாததால் மக்கள் தரம்புரண்டார்கள். இது அவர்களது விதியாகவே நாம் கருத வேண்டும் மாறாக அன்றைய மார்க்க அறிஞர்களின் தவறு என கூற இயலாது பாவம் அவர்கள் நெடுந்தூரம் குதிரைகளில் பயணித்த மனிதர்கள்தானே!.

 

விஞ்ஞான தொழில்நுட்ப காலத்தில் மார்க்கப் பிரிவு

விஞ்ஞானம் தொழில்நுட்பமும் வளர்ந்தது, தொலைக்காட்சியும்,  கணிணியும் உதையமானது இதற்கிடையில் ஏகத்துவவாதிகளும் விழித்துக்கொண்டு அயராது வீரியமிக்க பிரச்சாரம் செய்தார்கள் முடிவு பட்டிதொட்டி எங்கும் மார்க்கம் பரவியது இதுதான் இஸ்லாம் என்பது மக்களுக்கு புரிய ஆரம்பித்தது ஆனால் இந்த விஞ்ஞானம் ஏகத்துவவாதிகளின் மத்தியில் பிளவையும் பிரிவையும் ஏற்படுத்தியது. மார்க்க்ததில் புதுமையை புகுத்தாதீர்கள் என்று கூறிய ஒருசாரார் பிறையை விஞ்ஞானத்தில் தீர்மானித்தனர், இதனால் மனம் நொந்துபோன மற்றொரு சாரார் குர்ஆன்-ஹதீஸ்களைத் தவிர வேறு எதையும் பின்பற்றமாட்டோம் மார்க்கத்தில் புதுமையை புகுத்தமாட்டோம் என்று கூறி அவர்களை விட்டும் பிரிந்தனர். ஏகத்துவத்தின் முதல் பிரிவு இதுவாகத்தான் இருக்கும்!

 

ஜமாஅத்துக்கள் உதயம்

சத்தியத்தை எடுத்துக்கூற வீரியமிக்க மார்க்க அறிஞர்களும் அவர்களுக்கு உறுதுணையாக கொள்கைச் சகோதரர்களும் அவர்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து மோதல்கள் தலைதூக்க விளைவோ மேலும் சில ஜமாஅத் உட்பிரிவுகள். சிலர் அரசியலிலும் சிலர் ஆன்மீகத்திலும் வேகம் காட்டினர் இன்றைக்கு விளைவோ உங்கள் கண் முன்னே! கொள்கையில் பிரிந்த சகோதரர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் குறை கண்டுபிடித்து வசைபாட ஆரம்பித்தனர் விளைவுகளோ ஆளுக்கொரு ஜமாஅத், ஆளுக்கொரு தலைவன்.

 

இணைவைப்பு ஜமாஅத்துகளுடன் என்ன செய்வது?

இஸ்லாம் என்பது ஒன்றே! இதன் முதல் முக்கிய கோட்பாடாகிய தவ்ஹீது ஒரு கடவுளை மட்டுமே வணங்குமாறும் ஏனைய நபிமார்களை பின்பற்றுமாறும் கூறுகிறது ஆனால் இந்த கொள்கைக்கு மாற்றமாக அல்லாஹ்வுடன் வேறு ஒன்றை இணையாக்கி நபிமார்களை புரக்கணிக்கும் விதமாக நடந்துக்கொள்ளும் கப்ருவணங்கிகளுடன் எவ்வாறு இணைவது? இவர்கள் தாங்களாகவே முன்வந்து கப்ருகளை வணங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தாலே தவிர ஒற்றுமைக்கு வழி பிறக்காது! இப்படிப்பட்ட நிலையில் இந்த கப்ருவணங்கிகள் தங்கள் மறுமைக்கு தாங்களே பொறுப்பாளர்களாகிறார்கள் மாறாக முதல் கலிமாவை ஏற்றுக்கொண்ட ஏகத்துவவாதிகள் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டார்கள்! இதோ ஆதாரம்

 

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்.எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம்கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதைநீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 5:92)

 

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையேபின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடையவழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி)பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.அல்குர்ஆன் 6:153

 

ஏகத்துவவாதிகளின் ஒற்றுமைக்கு தீர்வு என்ன?

  • முதலில் ஒவ்வொருவரும் தங்களின் மறுமை வெற்றிக்காக ஒருவரையொருவர் வசைபாடுவதை நிறுத்த வேண்டும்.

 

  • தவறு செய்யக்கூடிய எந்த சகோதரனாக இருந்தாலும் கண்ணியமான முறையில் ஆதாரத்தின் அடிப்படையில் அவரை அணுக வேண்டுமே தவிர கேவலமான வார்த்தைகளால் ஒருவரையொருவர் நோகடிக்கும் போக்கை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்!

 

  • மறுமைக்காக தங்களுக்குள் உள்ள கருத்து மோதல்களை அலசிப்பார்த்து தாங்கள் எடுத்து வைக்கும் வாதம் மார்க்க வரம்புக்கு உட்பட்டதா! நேர்மையானதா என்பதை தாங்களே உணர வேண்டும் தங்கள் வாதம் மார்கத்திற்கு புரம்பாணவையாக இருந்தால் தாங்களே முன்வந்து அவைகளை உதரித்தள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

  • அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் தங்களிடம் ஏதாவது தவறான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இருந்தால் அவைகளை திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் நபிகளார் காட்டிய வழியில் ஒப்பந்தங்களையும் வகுத்து ஒற்றுமைக்கான கரம் நீட்ட வேண்டும்!

 

  • ஒரு ஏகத்துவ சகோதரனுக்கு துன்பம் ஏற்பட்டால் மற்றொரு ஏகத்துவ சகோதரன் உதவ முன்வர வேண்டும் இது ஜமாஅத் தலைவர்கள் மத்தியில் முதலில் நடைபெற வேண்டும். ஒரு ஜமாஅத் உண்மைக்காக கலத்தில் இறங்கினால் மற்றொரு ஜமாஅத் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு அணியணியாக கலத்தில் இறங்க வேண்டும்!

 

  • எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் மீது பயம் இருக்க வேண்டும், நபிகளார் (ஸல்) காட்டிய வழியை பின்பற்றும் உறுதி இருக்க வேண்டும்!

 

  • இறுதியாக மறுமையில் முஸ்லிம்கள் அனைவரும் சுவனத்திற்கு செல்ல வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை வேண்டும் அதற்காக தன்னலம் விட்டு பிறர்நலம் பேணும் உன்னதமான உத்திகளை கையாள வேண்டும்!

 

மக்கள் எதில் கருத்து வேறுபட்டுள்ளனரோ அவற்றை நீர் தெளிவுபடுத்த வேண்டுமென்பதற்காகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அருளாகவும் தான்உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்”.(அல்குர்ஆன் 16:64)

 

“:உமது இறைவன் மேல் ஆணையாக! தங்களிடையே பிணக்கு ஏற்படும்போது உம்மை நீதிபதியாகஏற்று, பின்னர் நீர் அளித்த தீர்ப்பில் எந்தக் குறையும் காணாமல் முழுமையாகக்கட்டுப்பட்டால் தவிர அவர்கள் மூஃமின்களாக மாட்டார்கள்”. (4:65)

 

அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்(அல்குர்ஆன் 3:132)

 

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் சுய விருப்பம்கொள்ளமூஃமினான ஆணுக்கோ,மூஃமினான பெண்ணுக்கோ உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமாக வழிகெட்டுவிட்டார்.(அல்குர்ஆன் 33:36)

 

அல்லாஹ்வின் பக்கமும்அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவனது தூதரின்பாலும் அழைக்கப்படும்போதுநாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதுதான் மூஃமின்களின் பதிலாக இருக்கவேண்டும். மேலும் அவர்களே வெற்றி பெற்றவர்கள்.(அல்குர்ஆன் 24:51)

முடிவுரை

கவலைப்படாதீர்கள் தோழர்களே இவர்கள் இணையவில்லை என்றால் என்ன! நாம் நல் அமல்களை செய்து நம்மால் ஆன மார்க்கப்பணிகளை செய்துவருவோம்! மஹ்ஷரின் கேள்விக் கணக்குகளுக்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடினால் நமக்கு நல்லருள் புரிந்து சுவனத்தை அளிப்பான் அங்கு நாம் ஒற்றுமையாக இருப்போம்! அந்த சந்தோஷமாவது நமக்கு அல்லாஹ் கொடுப்பானல்லவா? கவலை விடுங்கள் இன்றே மார்க்கப் பணிக்கு உங்களாலான ஒத்துழைப்புகளை கொடுத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!

 

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று ) இருப்பார்கள் (அல்குர்ஆன் 15-45)

 

(அவர்களை நோக்கி) சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள் (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 15-46)

 

மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம், (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள் (அல்குர்ஆன் 15-47)

 

அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர் (அல்குர்ஆன் 15-48)

 

(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக! ”நிச்சயமாக நான மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையேவனாகவும் இருக்கிறேன் (அல்குர்ஆன் 15-49)

 

தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வோம் திருந்திக்கொள்வோம்!

அல்ஹம்துலில்லாஹ்

நன்றி: Islamic Paradise

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.