மஹ்ஷரும் இளைஞனும்

இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது இதற்கு  இஸ்லாத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா? என்றால் இல்லை  ஒவ்வொரு  குடும்பத்திலும் ஒரு இளைஞானவது சீரழிகிறான் இந்த சீரழிவிற்கு 2 காரணங்கள்  உள்ளன ஒன்று தவறான நண்பர்கள் இப்படிப்பட்ட நட்பின் காரணமாக அவர்களிடம்  கட்டுக்கடங்காத வேகமும் துணிச்சலும் நிறைந்துவிடுகிறது இதனை நன்முறையில்  பயன்படுத்தினால் அவன் மிகச் சிறந்த மனிதனாக வரலாம் ஆனால் ஷைத்தான் அவனை சூழ்ந்துக்கொண்டு அவனை சிந்தனையை மறக்கடித்து விடுகிறான்! 

மற்றொரு காரணம் இஸ்லாம் அவர்களை சென்றடைவதில் ஏதோ சிக்கல் உள்ளது அப்படியே சென்றடைந்தாலும் அவர்கள் புரிந்துக்கொள்ள தடுமாறுகிறார்கள்!  இத்தனைக்கும் காரணம் நம் குடும்ப உறுப்பினர்கள் இப்படிப்பட்ட இளைஞர்களை  திட்டுவதும், தரக்குறைவாக நாலுபேர் முன்னாடி அவமானமாக பேசுவதாலும்  அவர்கள் மனம் உடைந்து  போய் இதற்குமேல் என்ன உள்ளது பெயர் கெட்டுப்போக  என்று எண்ணி விடுகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களிடம்  இஸ்லாத்தை எடுத்துச்சொன்னால் உன் வேலையைப் பார்த்து விட்டுப் போங்கள் என்றும் உதாசீனப்படுத்தி தங்களைத்தாங்களே நஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள்!

இப்படியே இவர்களை விட்டுவிட்டால் இவர்கள் கைசேதப்பட்டுவிடுவார்கள் எனவே தான் ஒரு வித்தியாசமான முறையில் இவர்களை அணுக எண்ணி இந்த கட்டுரையை வரைந்துள்ளேன்!  இதைப்படிக்கும்போது நகைச்சுவையாகவும் கிண்டல் அடிப்பது போன்றும் சிலருக்கு தோன்றும் ஆனால் இந்தக் கட்டுரையை சிந்தித்து படித்தால் இக்கட்டுரையின் உண்மை நோக்கம் தங்கள் முன் வரும்! தயவு செய்து சிந்தித்துப்படியுங்கள் உங்கள் சகோதரர்களுக்காக! தங்களது குடும்பங்களில்  இஸ்லாத்தின் தாவா பணி மேற்கொள்ள இது சிறந்த வழியாகவும் ஒரு சிறு உதவியாகவும் தங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்! அல்லாஹ் நமக்கு தெளிவுபடுத்துவானாக!

மனிதன் மஹ்ஷரில் வெற்றி பெற நபிகளாரின் அறிவுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்சரின் கேள்விக் கணக்கைப்பற்றி கூறும்போது பின்வரும் 5 கேள்விகளை முன்வைத்தார்கள் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்றார்கள்

1) வாழ்நாளை எப்படி கழித்தான்,

2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்,

3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்,

4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்,

5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)

குறிப்பு-

இங்கு ”நான்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் ஒவ்வொருவரும் இதை உள்ளத்தால் உணரவேண்டும் என்பதற்காகவே! தவறாக எண்ணிவிடவேண்டாம். இந்தக் கட்டுரை ஒரு பிராக்டிகல் (ஒரு செயல்முறை விளக்கமாக உள்ளது)

இனி இந்த கட்டுரையின் உள்ளே செல்வோம்!

நான் மரணித்துவிட்டேன், கப்ருவாழ்க்கையை அணுபவித்து விட்டேன்! இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்! அவன் அர்ஷிலிருந்து என்னைப்பார்த்து கேட்கிறான்!

அல்லாஹ்

ஆதமின் மகனே! நீ உன் வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்?

இன்றைய இளைஞன்

என் இறைவா! நான் பெண்கள் பின்னால் நாயாக அழைந்தேன்! ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நின்றுக்கொண்டு அவர்களில் ஒருத்தியை கடைக்கண் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தேன்! இதைக்கண்ட அந்தப் பெண்ணின்    உறவினர்கள்  என்னை துரத்தி துரத்தி அடித்தார்கள்!

இதைக்கண்ட என் தந்தை என் படிப்பை நிறுத்திவிட்டு என்னை தனது கடையில் அமர்த்திக்கொண்டார். அப்போதும் நான் திருந்தவில்லை என் தந்தை இல்லாத சமயத்தில் கல்லாப் பொட்டியில் தினமும் சில ரூபாய்களை திருடினேன்! என் தந்தையோ மகன்தானே என்று கண்டுக்காமல் இருந்துவிட்டார்!

திருடிய பணத்தில் கடைத்தெருவின் ஒரு ஓரத்தில் ஒழிந்துக்கொண்டு புகை பிடித்தேன்! இதைக்கண்ட என் தந்தை ஓட, ஓடு விரட்டியடித்தார்! இதைக்கண்ட ஒரு மாற்றுமத பெண் சிறித்தால் உடனே இருவருக்கும் காதல் மலர்ந்தது! இப்படியே சில மாதங்கள் என் இளமைப்பருவம் கழிந்தது பிறகு ஒருநாள் என் தந்தை இல்லாத நேரத்தில் கடையில் இருந்த 10000 ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டேன். பத்து நாட்கள் உல்லாசமாக திரிந்ததால் பணம் குறைந்தது உடனே வீட்டிற்கு தெரியப்ப டுத்தினோம் நம் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்து எங்களை மீட்டனர்! என்னுடன் இருந்த அந்த பெண்ணின் குடும்பம் அவமானம் தாங்காமல் ஊரை காலி செய்துவிட்டு சென்றனர்! சனியன் தொலைந்து போனதாக எண்ணி என நான் நிம்மதி பெறுமூச்சு விட்டேன்!

அல்லாஹ்

என் மீது பயம் வரவில்லையா? பாங்கு சப்தம் உண் காதுகளில் விழவில்லையா?

இன்றைய இளைஞன்

இல்லையே! காரணம் நான்தான் செல்போனுடன் கூடிய ஏர் போன்-ஐ காதில் மாட்டிக்கொண்டு எப்போதும் சினிமா பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேனே எவ்வாறு பாங்கு சப்தம் கேட்கும்.

அல்லாஹ்

ஆதமின் மகனே நீ எவ்வாறு செல்வத்தை ஈட்டினாய்?

இன்றைய இளைஞன்

நான் தவறான பாதையில் சென்றதை கண்டு என் தாயார் கவலையடைந்து பெண் பார்க்க ஆரம்பித்தனர் மாப்பிள்ளை வெத்துவேட்டு என்று கூறிவிடுவார்களோ என்று பயந்த என் தந்தை கடையின் முழு பொறுப்பையும் எண்ணிடம் கொடுத்து விட்டு வீட்டில் அமர்ந்துவிட்டார். நானோ புது முதலாளி என் நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திரப்பறவை போல் என் இளமையை கழித்தேன் யாரும் என்னை இஸ்லாத்தை பற்றி எடுத்துக்கூறவில்லை!

1000 பொய் சொல்லி நிறை பணத்தை செலவழித்து மார்க்க ஒழுக்கம் பற்றி அறியாத ஒரு பெண்ணை மணந்துக் கொண்டேன் காரணம் நிறைய தங்கமும், கை நிறைய வரதட்சணை பணமும் கொடுத்தார்கள்!  8 மாதங்கள் கழிந்தன தலைப்பிரசவத்தை என்னுடைய குடும்பத்தில் பார்ப்பதில்லை என்று என் தாயார் அறிவுரை கூறியதன் படி கர்ப்பிணிப்பெண்ணாகிய என் மனைவியை அவளது தாயார் வீட்டிற்கு பிரசவம் முடிந்து வா! என துரத்தினேன்! அவளும் கை குழந்தையுடன் 6 மாதம் கழித்து புத்தாடைகள், நகைகள், குழந்தையின் பெயரில் வைப்புத்தொகை (Fixed Deposit) போன்ற வற்றை கொண்டுவந்தால் உடனே ஏற்றுக்கொண்டேன்! என் மாமனாரோ என்னால் கடனாளியாக மாறினார்!  இவ்வாறுதான் நான் செல்வத்தை ஈட்டினேன் என்பான்!

அல்லாஹ்

ஆதமின் மகனே உன் செல்வத்தை எவ்வாறு செலவழித்தாய்?

இன்றைய இளைஞன்

என் இறைவா! என்னுடைய குழந்தை பிறந்ததும் என் மாமியார் குழந்தைக்கு நாகூர் தர்காவிறகு சென்று மொட்டை அடித்து தலையில் சந்தனம் தடவினால் முடி நன்றாக  முளைக்கும் என்று கூறினார்! உடனே என் தாயாரோ அப்படியே ஏர்வாடிக்கு சென்றுவிட்டுவரலாம் எனக்கு பலநாட்களாக ஒரு நியாஸ் (வேண்டுதல்) உள்ளது என்றார்! உடனே என் மைத்துனரும் தங்கையும் அருகே உள்ள முத்துப்பேட்டை மற்றும் வேளாங்கண்ணிக்கும் சென்று சுற்றுலா செல்லலாம் என்று கூறினார்கள்! உடனே நானும் சம்மதித்து மினி வேன் ஒன்றில் கூட்டுக்குடும்பமாக சுற்றுலா சென்றோம் அதற்கு ஆன செலவுத் தொகை ரூபாய் 30000.

சுற்றுலா சென்று 6 மாதங்களுக்குள் என்னுடைய தொழிலில் பெருத்த நட்டம் ஏற்பட்டது உடனே எனது மனைவியின் நகைகளை அடைமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி தொழில் நடத்தினேன். ஓரளவு லாபம் வந்தது வட்டி கூட கட்டவில்லை!

ஆனால் மனதில் ஒரு நீங்காத ஆசை இருந்தது 2 வட்டிக்கு ரூ.60000- த்தில் லேட்டஸ்ட் மாடலில் ஒரு மோட்டர் பைக் வாங்கினேன்!

மனைவி கோபித்துக் கொண்டால் உடனே 4 வட்டிக்கு ரூ. 1 இலட்சத்தில் 10 சவரன் நகை வாங்கி கொடுத்தேன்!

பிறந்த என் மகனுக்கு எல்.கே.ஜி. சேர்க்க வேண்டும் எனது தந்தையோ செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார் 6 வட்டிக்கு ரூ.40000 செலவானது.

மைத்துனர் வந்தார் மச்சான் ஒரு 3 அடுக்கு மாடி வீடு உள்ளது சீப் ரேட்டில் ரூ.10 லட்சத்தில் முடித்துத்தருகிறேன் என்றார் உடனே என்னிடம் இருந்த சொத்தை 3 இலட்சத்துக்கு விற்று 3 அடுக்கு மாடி வீடு வாங்க திட்டமிட்டு வாங்கிய வீட்டை வங்கியில் அடைமானம் வைத்தேன்.

அல்லாஹ்

ஆதமின் மகனே! நீ அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டாய்?

இன்றைய இளைஞன்

என் இறைவா! கடன் தொல்லை தாங்க முடியவில்லை தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டேன்.

அல்லாஹ்

ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை என்ன?

இன்றைய இளைஞன்

என் இறைவா! நான் மரணித்தபின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது!

அல்லாஹ் (இவ்வாறு சொன்னால்)

ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை இதுதான், கேள்!

விதவையான உன் மனைவியின் நிலை பற்றி கேள்

பெண்ணின் அழுகை

நீ மரணித்தபின் ஒரு நாள் உன் விதவையை உன் நெருங்கிய உறவினர் கையை பிடித்து இழுத்தான் அவளோ பதறித்துடித்து ஓடி அறைக்குள் தாழிட்டு தன் கற்பை காப்பாற்றிக்கொண்டாள்!  அழுதாள்! (இவள் மார்க்க நெறி பேணி தன் கணவனுக்கு நல்ல புத்தியை புகட்டியிருந்தால் இந்த நிலை வருமா? இது இவள் செய்த தீய செயலுக்கான விதி அதனால் அவதிப்படுகிறாள்)

அநாதையான உன் மகனின் நிலை பற்றி கேள்

ஒருநாள் உன் மகன் பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் சொன்னான் என் தந்தை டாக்டர், ஒருவன் என் தந்தை இஞ்ஜீனியர், ஒருவன் என் தந்தை வக்கீல் என்றனர் அவர்கள் உன் மகனிடம் உன் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்க அவனோ மூச்சடைத்து நின்றான்! பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல! என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி! தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான்? இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் உள்ளதா? என்று அல்லாஹ் நம்மை கேட்பானே!)

அநாதையான உன் பெற்றோர் நிலை பற்றி கேள்

தந்தையின் குமுரள்

நீ மரணித்தபின் உன் தந்தை உன்னால் சொத்தை இழந்தார், சுகத்தை இழந்தார் நோய்வாய்பட்டு மருத்துவம் செய்ய வசதியில்லாமல் ”கேடுகெட்ட மகனையா நான் பெற்றேன்”  என்று உன்னை சபித்துக்கொண்டு மரணித்தார்!

அநாதையான தாய்

நீயும் உன் தந்தையும் மரணித்த பின் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து சிரமத்திலும் சிரமமாக பெற்றெடுத்த தாய் அநாதையாக எந்த புகழிடமும் கிடைக்காமல் கிழவியாக ஒவ்வொரு வீட்டிலும் பத்துப்பாத்திரம் தேய்த்து வாழ்கையை கழித்தாள்!  அவளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லாமல் மனம் உடைந்து ”கேடுகெட்ட மகனையா நான் 10 மாதம் சுமந்தேன்” என்று உன்னை சபித்துக் கொண்டு மரணித்தாள்!

இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால்?

இந்த இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மஹ்ஷரில் மன்னிப்பு கேட்பான் அல்லாஹ் மன்னிப்பானா?  கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா? நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள்! உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் ? ? ? ? (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த நிலை நம்மில் யாருக்கும் வரவேண்டாம்)

இளைஞர்களே இதோ  குர்ஆனில் உங்களுக்குள்ள கனிவான அறிவுரை

”இன்னும் நினைவு கூறுங்கள் நாம் (யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது! (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்!  ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்!  (உலகப் பொதுமறை திருக்குர்அன் 2:83)

“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

இளைஞர்களே

“இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!  (திருக்குர்ஆன் 7:199)

“அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)

“அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்! (திருக் குர்ஆன் 39:53)

ஆதமனின் சந்ததிகளே! இவ்வாறு அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்!

”இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலி ஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)

முடிவுரை

என் அருமை மூமின்களே! தந்தை இல்லாத, தாய் இல்லாத அநாதை சிறுவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!

என் அருமை மூமின்களே! கணவனில்லாத ஏழை விதவைகளை தவறான கண்ணோடத்தில் பார்க்காதீர்கள் மேலும் அவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் தங்களது கற்புக்கு புகழிடம் தேடி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!

என் அருமை மூமின்களே! பிள்ளைகளை இழந்து தவிக்கும் அல்லது பிள்ளைகளே இல்லாமல் வயதான காலத்தில் தவிக்கும் பெற்றோர்களை விரட்டிவிடாதீர்கள்! அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!

மூமின்களே அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்

“(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை” ……………..(அல்-குர்ஆன் 107:1-3)

“அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ‘எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்’ என்று; நீர் கூறும்: ‘(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதை களுக்கும்,  மிஸ்கீன்(ஏழை)களுக்கும்,  வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:215)

குறிப்பு மூமின்களே! இங்கு பதியப்பட்டது எனது சொந்தக்கருத்துக்களே! இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும்! இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம்! இந்தக்கட்டுரை உங்களுக்கு அர்ப்பணம்! இதை நீங்கள் வரைந்த கட்டுரையாக நினைத்துக்கொண்டு இளைஞர்களை சீர்படுத்துங்கள் எப்படியாவது நம் இளைஞர்கள் சீர்படவேண்டும் என்பதே நம் ஆசையாக இருக்கட்டும்! பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக! அமீன்!

அன்புடன் அல்லாஹ்வின் அடிமை – உங்கள் நலம் விரும்பி

நன்றி: Islamic Paradise

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s