ஜின்களும் நாமும்

ஜின்கள் என்ற படைப்பு உண்மைதான் என்று சான்றழிக்கும் திருக்குர்-ஆன் வசனம்

மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்கு வதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் (இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)

(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50) 

ஜின் இனத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்! எச்சரிக்கையும் விடப்பட்டது!

(மறுமை நாளில் இறைவன் ஜின் – மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் – மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா…என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)

 

நிச்சயமாக, ஜின்களில் சில (திருக்குர்ஆனை) செவி மடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்)”நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரிய மான ஒரு குர்ஆனை கேட்டோம் என்று கூறினர் என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே) நீர் கூறுவீராக! (72-1)

 

இறைவிசுவாசியான ஜின் உள்ளது

அது (திருக்குர்ஆன்) நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக்கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம், அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம் (என்ற அந்த ஜின் கூறலாயிற்று) (72-2)

 

நல்ல ஜின்களின் ஏகத்துவ நம்பிக்கை

மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. (72-3)

 

நல்ல ஜின்களின் வாக்குமூலம்

ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். (72-4) ஜின்களின் எண்ணங்கள் மேலும் மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள் என்று நிச்சயமா நாம் எண்ணிக்கொண்டிருந்தோம்! (72-5)

 

ஜின்களின் மமதை

ஆனால் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் (ஜின்களிலுள்ள அவ் வாடவர்களின்) மமதை பெருகிவிட்டனர் ஜின்களின் வாக்குமூலம் இன்னும் நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து எழுப்பமாட்டான் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர் (72-7)

 

ஜின்களின் அபார ஆற்றல்

நிச்சயமாக நாம் வானத்தை தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப் பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். (72-8)

ஜின்களில் பலம் பொருந்திய ஓர் இப்ரீத் கூறியது நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன். நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன் (27-39)

 

ஜின்களுக்கு அபரிமிதமான சக்திகள் இருந்தாலும் குறைகளும் உண்டு அவைகளுக்கு மறைவான ஞானம் பற்றிய அறிவு இல்லை

(சுலைமான்) அவர் மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே ‘மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்குர்ஆன் 34:14)

 

ஜின்களின் சேட்டைகள்

(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில)  இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம், ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ அவன் தனக்காக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான் (72-9)

 

ஜின்களின் இதை அறியமுடியாது!

அன்றியும் புமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாட்டப் பட்டிருக்கிறதா?  அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறியமாட்டோம்! (72-10)

 

ஜின்களிலும் நல்லோர் தீயோர்

மேலும் நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர் அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர். நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்! (72-11)

 

ஜின்களுக்கும் அல்லாஹ்வின் பயம் உள்ளது

அன்றியும் நிச்சயமாக நாம் புமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும் அவனை விட்டு ஓடி (ஒளிந்து) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும் நாம் அறிந்து கொண்டோம். (72-12)

 

நல்ல ஜின்கள் ஈமான் கொள்வார்கள்

இன்னும் நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம். எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ அவன் இழப்பைப ப்பற்றியும் அநீதியைப்பற்றியும் பயப்படமாட்டான் (72-13)

 

ஜின்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர்

இன்னும் நிச்சயமாக நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர், நம்மில் அக்கிகரமக்காரர்களும் இருக்கின்றனர். எவர்கள் முஸ்லிம் களாகி (வழிபட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியை தேடிக்கொண்டனர் (72-14)

 

ஜின்களும் இஸ்லாத்தை (தாவா பணியை) தங்களுடைய சமுதாயத்திற்கு எத்திவைக்கின்றன

(ஜின்கள்) கூறினார்கள் ‘எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் – நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது. (அல் குர்ஆன் 46:30) அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர் (என்று அந்த ஜின் கூறிற்று) (72-15)

 

ஜின்களும் தங்கள் உணவை சமைத்துத்தான் உண்கின்றன

*ஜின்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் – ஜின்களின் காலடி சுவடுகள் – அவர்கள் சமைத்த பாத்திரங்கள் – அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 3311)* மனிதர்கள் மற்றும் ஜின்கள் மீது அல்லாஹ்வின் கருணை (மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம் (72-16)

 

அல்லாஹ் மனிதர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவைகள்

அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும் புமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச்செய்து அதைக் கொண்டு கனிவர்கங்களையும் உங்களுக்கு ஆகாரமாக வெளிப்படு்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப் படுத்தித்தந்தான். (14-32)

(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும் அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான் (14-33)

 

அல்லாஹ் நபிமார்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவைகள்

அப்போது நாம் சுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம், மேலும் அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்) கல்வியையும் கொடுத்தோம், இன்னும் நாம் தாவுதுக்கு மலைகளையும், பறவைகளையும் வசப்படுத்திக்கொடுத்தோம், அவை (தாவுதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் நாமே செய்தோம்.

(21-79) இன்னும் சுலைமானுக்கு கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக்கொடுத்தோம்) அது அவருடைய ஏவலின் படி, நாம் எந்த புமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த புமிக்கு அவரை எடுத்துச்) சென்றது. இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராக இருக்கின்றோம் (21-81)

 

ஜின்களை அல்லாஹ் நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்திக்கொடுத்தாலும் அவற்றின் நடவடிக்கைகளை அல்லாஹ்தான் கண்காணித்து வந்தான் என்பதற்கு ஆதாரம்.

இன்னும் ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காக (கடலிலி) மூழ்கி வரக்கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம், இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும், அன்றியும் நாமே அவற்றை கண்காணித்து வந்தோம் (21-82)

 

நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்களை வசப் படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே

(அவருக்கு தாமாகவே ஜின்களை வசப்படுத்தும் ஆற்றல் இருக்கவில்லை)

(அவருக்குப் பின்னர்) சுலைமானுக்கு காற்றை (வசப்படுத்திக்கொடுத்தோம்) அதனுடைய காலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப்பொல் உருகியோடச்செய்தோம். தம் இறைவனுடைய அனுமிதப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம் செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக் கின்றனரோ அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்)

 

முடிவுரை

மனிதர்களில் சிலர் தங்களிடம் ஜின்கள் உள்ளன அவற்றை தாங்கள் வசப்படுத்தி வைத்துள்ளதாக சொல்லுவார்கள் உண்மையில் அவர்கள் மஹா கெட்டவர்களாத்தான் இருக்கவேண்டும்!

ஏனெனில் கீழே உள்ள அல்லாஹ்வின் வசனத்தை மீண்டும் உண்ணிப்பாக கவனியுங்கள்

(அவருக்குப் பின்னர்) சுலைமானுக்கு காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்) அதனுடைய காலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப்பொல் உருகியோடச்செய்தோம். தம் இறைவனுடைய அனுமிதப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக்கொடுத்தோம்) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம் செய்வதில்)

நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றனரோ அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்)

 

நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு இணையான சக்தியை அல்லாஹ் எந்த மனிதனுக்காவது கொடுப்பானா?

மேலும் நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்தானே ஜின்களை வசப்படுத்திக்கொடுத்தான் அவரால் தன்னைத்தானே ஜின்களை வசப்படுத்தும் திறமை இருந்ததா?

ஒரு நபிக்கு இல்லாத திறமை சாதாரண மனிதர்களுக்கு கிடைத்துவிடுமா?

சகோதரர்களே அல்லாஹ் திருக்குர்ஆனில் அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்கிறானே இன்னுமா தாங்கள் சிந்திக்க வில்லை! சிந்திக்க முற்படுங்கள் வெற்றிபெருவீர்கள்!

 

உங்கள் சிந்தனைகளுக்கு என் அறிவுக்கு எட்டி சில உதாரணங்களை தருகிறேன்.

இதை வைத்தாவது சிந்தித்து வெற்றிபெறுங்கள்

இவர்களை நம்பாதீர்கள்

உங்கள் ஊரில் ஒரு ஹஜரத் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு ஜின்களை வசப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகவும் வைத்துக்கொள்வோம். அவர் அந்த ஜின்-ஐ எங்கு அடைத்து வைப்பார்!

1) கண்ணாடி குடுவை

2) அலாவுதீனுடைய அற்புத விளக்கு போன்று ஒரு கெட்டியான இரும்பு உலோக பெட்டி

மேற்கண்ட இரண்டையும் கீழே தவிடு பொடியாக்குகிறேன் பாருங்கள்

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் (இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)

கண்ணாடிக்குடுவை மற்றும் கெட்டியான இரும்புப் உலோகம் ஆகியவைகளை நெருப்பின் உதவியில்லாமல் உருக்க முடியாது அவ்வாறிருக்க இந்த ஜின்கள் கண்ணாடிக்குடுவையின் உள்ளேயோ அல்லது இரும்பு உலோக பெட்டியின் உள்ளேயோ அடைப்பட்டு இருந்தால் தங்களுடைய அபார ஆற்றலினால் இந்த இரண்டையும் உருக்கி வெளியேற முடியுமே!

 

ஜின்களுக்கு உணவு தேவை

மேலே தாங்கள் கண்டீர்கள் ஜின்களும் அடுப்பு மற்றும் பாத்திரங்களை வைத்து சமைத்து சாப்பிடுகின்றன என்று. இந்த ஜின்கள் மேற்கண்ட பொருட்களில் அடைபட்டுக்கிடந்தால் ஜின்களுக்கு எவ்வாறு உணவு கொடுக்கப்படும்!

யானை கட்டி சோறு போடுவதற்ககே யானைப்பாகன்கள் அல்லல் படுகின்றனர் அவ்வாறிருக்க ஜின்களை கட்டி சோறு போட இந்த ஹஜரத்து மார்களுக்கு முடியுமா?

உலகில் யானைப்பசி என்பது கட்டுக்கடங்காதது அவ்வாறிருக்க ஜின்களின் பசி எவ்வாறு இருக்கும் சற்று யோசியுங்கள்!

ஜின்களை வைத்து பிழைப்பு நடத்தும் ஹஜரத்மார்களால் ஏன் கீழ்கண்டவைகளை சாதிக்க முடியவில்லை!

சற்று சிந்தியுங்கள்!

நபி சுலைமான் (அலை) அவர்களுக்கே அவர் தனது இருக்கை யிலிருந்து எழுந்திருக்கும் முன் அயல்நாட்டு ராணியின் சிம்மாசனத்தை கொண்டு வந்து தருகிறேன் என்று ஒரு ஜின் சொன்னதாக மேலே கண்டீர்கள்

அப்படியானால்

ஈராக்கில் இலட்சம்பேரை கொன்று குவித்த குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க கூட்டுப்படைகளை இந்த ஹஜரத்மார்கள் கண்கூட காண்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் ஏன் இவர்கள் தங்களிடம் உள்ள ஜின்களை உடனே அனுப்பி அந்த நாட்டு உயர் அதிகாரிகளின் கதைகளை முடிக்கவில்லை!

அமெரிக்காவை விடுங்கள் ஏன் பாபர் மசூதியை இடிக்கும்போது இந்த ஹஜரத்களால் தடுக்க முடியவில்லை சரி எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது உடனே தங்களிடம் உள்ள ஜின்களுக்கு கட்டளையிட்டு இரவோடு இரவாக ஏன் மீண்டும் பாபர் மசூதியை கட்டிக்கொடுக்க முடியவில்லை!

ஏன் அல்லாஹ்வின் ஆலையத்தை கட்டுவதைவிட இவர்களுக்கு ஜின்களை வைத்து கத்தம் பாத்திஹா ஓதுவது சிறந்ததாக உள்ளதா?

ஏன் இஸ்லாமியர்களின் மீது இவர்களுக்கு பாசமில்லையா? அல்லது இவர்கள் சொன்னால் ஜின்கள் செய்யதா என்ன?

உங்களிடம் ஜின்களை வசப்படுத்தும் திறமையிருந்தால் என்ன செய்வீர்கள்! (நிச்சயம் எனக்கு இதற்கான பதிலை அளிக்கவும்)

 

ஒரு ஜோக் ஆனால் சிந்தனைக்கு விருந்து

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் சமுதாயத்தவர்கள் சிலைகளை வணங்கியதை கண்டித்தார்கள் அதே சமயம் மக்கள் இல்லாத நேரத்தில் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் புகுந்து பெரிய சிலையை மட்டும் வைத்துவிட்டு மற்ற சிறிய சிலைகளை இடித்துவிட்டார்கள். மக்கள் உடைத்த காரணம் கேட்ட போது சிலைகளை உடைக்கும் போது பெரிய சிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது எதுவுமே செய்யவில்லை என்று நாசுக்காக சொன்னார்கள்!

இதே வழிமுறையை ஜின்-ஐ வசப்படுத்திய ஒரு ஹஜரத்திடம் ஒருவர் கீழ்கண்ட முறையில் செய்தால் என்ன நிகழும் சிந்தனையை சிதறவிடாமல் கீழே உள்ளதை கவனியுங்கள்.

ஒரு ஹஜரத் தான் ஜின்னை வசப்படுத்தி வைத்துள்ளதாக எல்லோருக்கும் அறிவிக்கின்றார் பிறகு வேலை விஷயமாக பக்கத்தது ஊருக்கு சென்றுவிடுகிறார்.

அது சமயம் நமது ஏகத்துவ சகோதரர் இந்த ஹஜரத்-ன் வீட்டிற்கு சென்று அவருடைய வீட்டின் வாசல் படிகளை உடைத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் காலையில் வீடு திரும்பும் அந்த ஹஜரத் வாசல்படிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு ஆத்திரப்பட்டு எவனடா உடைத்தான் இதை என்று கூறுவார்!

அக்கம்பக்கம் விசாரிப்பார் உடனே (வாசல்படிகளை உடைத்த) அந்த சகோதரர் அந்த ஹஜரத்திடம் சென்று உங்கள் வீட்டின் வாசப்படிகளை நான்தான் உடைத்தேன் அப்போது உங்களுடைய வீட்டில் இருக்கம் ஜின் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தது என்னை எதுவும் செய்யவில்லை ஏன் உங்களுக்கு தகவல்கூட அந்த ஜின் தரவில்லையா? என்று சொன்னால் என்ன நடக்கும்! அடுத்த வினாடியே அந்த ஹஜரத் என்னடா உனக்கு பைத்தியம் பிடித்துக்கொண்டதா ஏன் இவ்வாறு உளருகிறாய் என்பார்!.

உடனே அந்த சகோதரர் நீ உன் வீட்டில் வசப்படுத்தி வைத்துள்ள அந்த ஜின்-ஐ கூப்பிட்டு கேள் என்று சொன்னால் அந்த ஹஜரத்திற்கு மூக்கின்மேல் கோபம் வந்துவிடும் உடனே கல்லை எடுத்து அடிக்க வருவார்! (அப்போதும் ஜின்-ஐ ஏவிவிடமாட்டார் ஏனென்றால் அது முடியாது என்பது அந்த ஹஜரத்திற்கு தெரியும்)

அடுத்த அரைமணி நேரத்தில் அந்த ஹஜரத் தன்னிடம் வைத்துள்ள கத்தம் பாத்திஹா ஓதிய பணத்தைக்கொண்டு ஒரு கொத்தனார் அல்லது மேஸ்திரியை அழைத்து தனது வீட்டின் இடிந்த வாசல்படிகளை கட்டுவார் அப்போதுகூட தனது ஜின்னுக்கு கட்டளை பிறப்பித்து வாசலைகட்டித்தா! என்று ஏவமாட்டார் ஏனென்றால் அது முடியாது என்பது அந்த ஹஜரத்திற்கு தெரியும்!

மேல்கண்டவைகளை தாங்கள் படித்திருப்பீர்கள் ரசித்திருப்பீர்கள் ஒரு உண்மையைச் சொல்கிறேன்!

மனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் தன் திருமறையில் சான்றுபகறுகிறான் அவ்வாறிருக்க எந்த மனிதனுக்கும் எந்தவித அபார சக்தியும் கிடையாது!

மேலும் ஒரு எறும்பு கடித்தாலே தாங்கமுடியாது! மேலும் ஓர் இருட்டறையில் ஒரு எலியைப் பார்த்தாலோ மனிதன் அலறியடித்துக் கொண்டு ஓடுவிடுவான் ஏனெனில் மனிதர்களில் பலர் பயந்தாங் கோளிகளாகவே உள்ளனர் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அதுவும் ஒரு ஜின் எவ்வாறு இருக்கும் என்று கற்பனைகூட செய்ய இயலாது அவைகளை தாங்கள் வசப்படுத்திவைத்துள்ளோம் என்று கூறுபவனை விட மஹா கெட்டவன் யார்?

இவர்கள் பின்னால் மனிதர்கள் செல்வது கூடுமா? இந்த கொடிய பொய்களை அவிழ்த்துவிடும் மக்களை நம்பலாமா?

தங்களின் சுய இலாபத்திற்காக பொய்களை இட்டுக்கட்டி அதுவும் இஸ்லாத்தில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது தகுமா இந்த ஹஜரத்மார்களுக்கு!

ஜின்களை வசப்படுத்துவேன் என்று சொல்கிறவன் ஏதாவது ஒரு வகையில் ஏர்வாடி தர்காவிற்கு சொந்தக்காரனாகவோ அல்லது கத்தம் பாத்திஹா ஓதும் முஷ்ரிக்குகளின் வழிமுறையிலேயேதான் இருப்பான்!

அழகிய நம் இஸ்லாம் எனும் மார்க்கத்தை கேவலப்படுத்தலாமா? காபிர்களுடைய கொள்கைகளை நாம் நடைமுறைப்படுத்தலாமா? உள்ளங்கள் இறைவனை நினைப்பதாலேயே அமைதியுறுகின்றன! தமிழிலும் திருக்குர்ஆன் உள்ளது சகோதரர்களே முதலில் அதை வாங்கி தினந்தோறும் வாசியுங்கள் நீங்கள் தெளிவுபெறுவீர்கள்! பிழை கண்டால் என்னை மன்னிக்கவும் நான் ஆலிம் கல்விபெற்றவனல்ல மாறாக தமிழில் திருக்குர்ஆனை படித்து அல்லாஹ்வின் வார்த்தைகளை புரிந்துக்கொண்டவன்!

இதனால் தான் தங்களுக்கு பதில்கூற முடிகிறது! என்னில் தவறுகள் இருக்கலாம் நானும் தங்களைப்போன்ற உம்மி (அரபி இலக்கணம் அறியாத) இஸ்லாமிய இளைஞனே!

என்னுடைய கருத்துக்களில் ஏதாவது பிழை இருந்தால் தெரிவிக்கவும் அது குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் இருந்தால் நானும் திருந்திக்கொள்கிறேன்.

எனக்கு ஜின் பற்றிய பதில் அளிக்க கேட்டுக்கொண்டதால் எனக்கு ஒரு நன்மையை எத்தி வைத்த பாக்கியம் தங்களால் கிடைத்தது நன்றிகள் நமக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அள்ளிவீசட்டும் நமது பாதங்களை சுவனத்திற்காக நிலைப்படுத்தட்டும்! (ஆமீன்)

மனிதர்களை திருப்திபடுத்தும் அறிய கலை எனும் பொக்கிஷம் அல்லாஹ்விடமே உள்ளது! என்னிடம் இல்லை!

இந்த பதில் திருப்தியானதாக இருந்தால் இதை மக்களிடத்தில் தாங்களும் எத்திவைத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள் சகோதரரே!

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)

சிராஜ் அப்துல்லாஹ்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

2 Responses to ஜின்களும் நாமும்

  1. riyaz says:

    சலாம் அறிவு சார்ந்த அருமையான பதிவு – நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.