தொழுகையை விட்டவன்

தொழுகையைவிட்ட என்சோதரனே!

தொழுகையை உரியநேரத்தில் நிறைவேற்றுவதில்அலட்சியமாக இருக்கும்என் நன்பனே! நீஉன் மனதில்என்னதான் நினைத்துக்கொண்டிருக்கின்றாய்.. உன்னைப்படைத்து உணவளித்துஇரட்சித்துக் கொண்டிருக்கும்உன் றப்புக்குஸுஜூது செய்யும்அவசியம் கூடஇல்லாதளவுக்கு – அவனதுஅருளே தேவையில்லாதஅளவுக்கு நீஉன் விடயத்தில்தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும்இன்னல்களில் துன்பங்களில்அவனது உதவியேதேவைப்படாதளவுக்கு நீஅவ்வளவு ஆற்றல்பெற்று விட்டாயோ!.

அல்லதுஉன்னைப் பிடித்திருக்கின்றகர்வமும் ஆணவமும்படைத்தவனுக்கு சிரம்சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீபெற்ற பதவியும்சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப்பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ!

அல்லதுஉன்னிடம் இருக்கின்றஷைத்தான் உன்னைஆக்கிரமித்து இறைவனைமறக்கச் செய்துவிட்டானோ! உனது மனச்சாட்சியை சாகடித்துவிட்டு உன்உள்ளத்தில் குடியேறிஉன்னை வழிகெடுத்துநரகில் தள்ளத்திட்டமிட்டிருக்கின்றானோ!

நன்றாகத்தெரிந்து கொள்சோதரனே! நீ இவ்வுலகில்எவ்வளவுதான் ஆடம்பரமாகவாழ்ந்தாலும் – எவர்உதவியும் உனக்குத்தேவையில்லாமல் இருந்தாலும்என்றோ ஒருநாள் நீஇந்த உலகைவிட்டுப் பிரிந்துசெல்வது மட்டும்உறுதி. அது உனக்குத்தெரியாதா?! அவ்வேளை நீசேகரித்த செல்வத்தில்எதை எடுத்துக்கொண்டு செல்லஇயலும்!. நீ பிறக்கும்போது இடுப்பில்ஒரு முழக்கயிறு கூடஇல்லாமல்ப் பிறந்தாயே! நீபோகும் போதுஅதையேனும் உன்னால்எடுத்துக் கொண்டுசெல்ல இயலுமா!? முடியவேமுடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம்அறிந்த பின்பும்எப்படி உன்னால்படைத்த இறைவனைமறந்த வாழமுடிகின்றது.

இவ்வுலகில்அவனை மறந்துவாழும் நீநாளை மரணித்தபின்னர் அவனதுசன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே! அவ்வேளைஎந்த முகத்தோடுஅவனைச் சந்திப்பாய்?, உன்னைப்படைத்து உணவளித்துக்காத்த எனக்குநீ செய்தகைமாறு இதுதானா? என்றுஅவன் கேட்டால்நீ என்னபதில் சொல்வாய்?. நீஎன்னைப் படைக்கவில்லையென்று சொல்வாயா?, நீஎனக்கு உணவளிக்கவில்லையென்று சொல்வாயா?, நீஎன்னைக் காக்கவில்லையென்றுசொல்வாயா?.

நீஅவனைச் சந்திக்கும்நாள்- அதுதான் நீமரணிக்கும் நாள்எப்போதென்று நீஅறிவாயா?. இல்லையே! அது நாளையாகவும்இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூடஇருக்கலாம். அந்த நாள்வந்து விட்டால்அதிலிருந்து தப்பித்துக்கொள்ள உன்னால்முடியுமா?. இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா? முடியவேமுடியாது. அப்படியானால் நீபிறந்த, வாழ்ந்த இந்தஉலகை விட்டுச்செல்லும் போதுஉனக்கு வழித்துணையாகவருவது எது? துன்புறுத்தும்வேதனையிலிருந்து உன்னைக்காப்பாற்றுவது எது? உனதுபணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை.

ஓரேயொன்றைத்தவிர அதுதான்நீ செய்தநல்லமல்கள். நீ புரிந்ததொழுகை நோன்புஇன்ன பிறவணக்கங்கள்.. அதைத் தான்நீ உலகத்தில்சேமிக்க வில்லையே! நீஉண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தைஅனுபவித்தாய். உன்னைப்படைத்தவனை நினைக்கவில்லையே!. அவனுக்காக உன்சிரம்பணிய வில்லையே, அவன்பள்ளி நோக்கிஉன் கால்கள்செல்ல வில்லையே!. அவனைப்பயந்து உன்விழிகள் அழவில்லையே! அவன் பாதையில்உன் பணத்தைசெலவு செய்யவில்லையே! நீ உனக்காகவேஉலகில் அழாதபோது உனக்காகப்பிறர் அழுவார்கள்என்று நினைக்கின்றாயா?. உனக்கெனநீ இறைவனிடம்பிரார்த்திக்காத போதுபிறர் உனக்காகப்பிரார்த்திப்பார்கள் என்றுஎண்ணுகின்றாயா?. அதுஒரு போதும்நடக்காது.. நடக்கவும் முடியாது…

போதும்நண்பனே! போதும். விட்டுவிடு உன்பாவங்களை. இன்பம் துன்பத்தில்முடிகின்றது. யவ்வனம் விருத்தாப்பியத்தில்முடிகின்றது. அன்பு பிரிவில்முடிகின்றது. வாழ்வு மரணத்தில்முடிகின்றது. மரணத்தின் பின்உன் நிலைஎன்ன? என்பதற்கு நீதான்விடை காணவேண்டும்.

தொழுகையைமறந்த என்தோழனே! தொழுகைதான் ஒருமனிதன் முஸ்லிம்என்பதற்குரிய எளியஅடையாளமென்பது உனக்குத்தெரியாதா?. அது ஒருவனிடம்இல்லாவிட்டால் தீனேஅவனிடம் இல்லையென்பதையும்நீ அறியாயோ! நபியவர்கள் கூறினார்கள்…

‘இஸ்லாத்தின்கயிறுகள் இறுதிகாலத்தில் ஒவ்வொன்றாகஅறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொருகயிறும் அறும்போதுமக்கள் அடுத்துள்ளகயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன்இறுதிக் கயிறுதான்தொழுகையாகும். (அதுவும்அறுந்து விட்டால்அவனிடத்தில் இஸ்லாமேஇல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னுஹிப்பான்)

தொழுகையைமறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும்வழிகேடுமாகும் எனஉனக்குத் தெரியாதா? நபியவர்கள்’ எங்களுக்கும்காபிர்களுக்கும் மத்தியிலுள்ளவேறுபாடே தொழுகையைநிறைவேற்றுவதுதான். எவன்அதை விட்டுவிடுகின்றானோ அவன்காபிராகி விட்டான்’ என்றுகூறியிருப்பதைக் கொஞ்சம்சிந்தித்துப் பார். உன்னைஎல்லோரும் முஸ்லிம்என்கின்றார்கள்தானே! ஆனால்உண்மையில் அல்லாஹ்விடத்தில் நீமுஸ்லிம்தானா?. தொழாதவன்காபிர் எனநபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால்நீயும்???

‘நபித்தோழர்கள் தொழுகையைத்தவிர வேறெந்தஇபாதத்தையும் விடுவதைகுப்ர் எனக்கணிக்க மாட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஷகீக்.)

இமாம்தஹபி அவர்கள்கூறுகின்றார்கள் … ‘தொழுகையை அதன்உரிய நேரத்தைவிட்டும் பிற்படுத்துபவன்பெரும்பாவம் செய்தவனாவான். யார்தொழுகையை விட்டநிலையில் இறக்கின்றானோஅவன் துரதிஷ்ட்டவாதியும் பெரும்பாவியுமாவான்.’ என்கின்றார்கள்.

என்தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும்நேரம் கிடைக்கும்போது தொழுவதும்முனாபிக்- நயவஞ்சகர்களின் செயல்என்பதை நீஅறிவாயா? அல்லாஹ் சொல்கின்றான்…

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُواْ إِلَى الصَّلاَةِ قَامُواْ كُسَالَى يُرَآؤُونَ النَّاسَ وَلاَ يَذْكُرُونَ اللّهَ إِلاَّ قَلِيلاً

நிச்சயமாகநயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்குசதி செய்யஎத்தனிக்கின்றனர் . ஆனால்அவனோ அவர்களுக்கெல்லாம்பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள்தொழுகைக்குச் செல்லும்போது சோம்பேறிகளாகச்செல்கின்றனர். அல்லாஹ்வைமிகச் செற்பமாகவேயன்றிஅவர்கள் நினைவுகூர்வதில்லை. (நிஸாஃ142ம் வசனம்)

நயவஞ்சகர்களுக்குஇஷாத் தொழுகையையும்ஸுப்ஹுத் தொழுகையையும்விட மிகவும்சிரமமான தொழுகைவேறு ஏதுமில்லை. அவ்விருதொழுகையிலுமுள்ள நன்மைகளைஅவர்கள் அறிந்துவிட்டால்(நடக்க முடியாதவர்கள்கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறுஅத்தொழுகைகளில் கலந்துகொள்வார்கள் எனநபியவர்கள் சொல்லியிருப்பதுஉன் செவிகளில்விழவில்லையா?

பார்நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள்கூட பள்ளிக்குவராதிருந்ததில்லை. அவர்களோதமது தொழுகையைப்பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப்பள்ளிக்கு வந்தார்கள், ஆனால்நீயோ நிரந்தரமாகப்பள்ளிவாயலுக்கே முழுக்குப்போட்டு விட்டாயே!

கொஞ்சம்சிந்தித்துப் பார்நண்பா! உனக்குப் பகுத்தறிவுண்டல்லவா?. அதனாலேயேஉனக்கு மனிதன்எனப் பெயர்வந்தது. ஆனால் பார்! உன்னைவிடக் கேவலமானஐயறிவுள்ள மிருகங்கள்பறவைகள் கூடஅல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருக்கின்றனவே! அவனைமறந்து நொடிப்பொழுதுகூட அவைஇருந்த தில்லையே!

அல்லாஹ்கூறுகின்றான் ..
‘நிச்சயமாக வானங்கள்பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும்அனேக மனிதர்களும்அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றனஎன்பதை நீபார்க்க வில்லையா? (இவ்வாறுசெய்யாத) அதிகம் பேருக்குஅவனது வேதனையும்நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)

ஆனால்பகுத்தறிவுள்ள உன்னால்உன்னைப் படைத்தகடவுளை மறந்துஎங்ஙனம் இருக்கமுடிகின்றது.?, ஐயறிவுள்ள மிருகங்களுக்கேஇப்படி நன்றியுணர்வுஇருக்கின்றதே! உனக்குஅந்த நன்றிஎங்கே?. உன் வீட்டுஎச்சில் பாத்திரத்தைஉண்ணும் நாய்கூட உனக்குநன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோஉன்னைப் படைத்தவனானஅல்லாஹ்வின் இடத்தில்இருந்து கொண்டு, அவனதுஉணவை உண்டுகொண்டு அவனைமறந்து வாழ்கின்றாயே! அவனுக்குமாறு செய்கின்றாயே! உனக்குமனச் சாட்சியேஇல்லையா? உன் உள்ளம்மரத்துப் போய்விட்டதா?.

மனிதா! ஐயறிவுள்ளமிருகங்களும் ஏனையஜடங்களும் உன்னைவிட அல்லாஹ்விடம்மதிப்புப் பெறுவதும்அவற்றை விடக்கேவலங் கெட்டவனாகநீ ஆகுவதும்பற்றி உனக்குவெட்கமில்லையா? உனதுதன்மானம் அதைஅனுமதிக்கின்றதா? என்னருமைச் சோதரனே! நிச்சயம்மரணம் வரும்நீ என்றோஒருநாள் இறந்துவிடுவாய். தொழுகையைப் பாழ்படுத்தியநிலையிலேயே நீஇறக்க நேரிட்டால்உன்னைவிட நஷ்டத்துக்கும்கைசேதத்துக்குமுரியவன் வேறுயார்?. கப்ரிலே உனக்குஎப்படி வரவேற்பிருக்கும்என நீஎப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில்எழுப்பப்பட்டதும் உன்கதி என்னவென்றுகொஞ்சம் சிந்தித்துப்பார்த்தாயா?நபியவர்கள் கூறியதைக்கொஞ்சம் கேள்!!

‘ஜும்ஆத்தொழுகைக்குச் செல்லாமலிருப்போர்அதை விட்டும்அவசரமாக விலகிக்கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடையஇதயங்களை அல்லாஹ்முத்திரையிட்டு விடட்டும். பின்னர்அவர்கள் பராமுகமானபாவிகளாகி விடட்டும், (ஆதாரம்முஸ்லிம்)

தொழுகையைப்பாழ்படுத்திய என்சினேகிதா! இதே நிலையில்நீ இவ்வுலகைவிட்டுப் பிரிந்துசெல்லும் நிலைநேர்ந்தால் நீஎந்தக் கூட்டத்தில்மறுமையில் எழுப்பப்படுவாய்என்பதை அறியாயோ?. கேள்நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக்கேள்.

‘யார்ஐவேளைத் தொழுகையினைமுறைப்படி நிறைவேற்றிவருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகைமறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும்வெற்றியாகவும் ஆகிடும். எவர்அதனைச் சரிவரநிறைவேற்றி வரவில்லையோஅவர்களுக் அதுஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகிவிடாது. அவன் மறுமையில்பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப்போன்ற கொடியோர்களுடன்இருப்பான்.’ (ஆதாரம் முஸ்லிம்)

அல்குர்ஆன்சொல்வதைக் கேள்!…

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ، قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا، قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى ، وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى

‘யார்என்னைநினைவு கூர்வதைவிட்டும் புறக்கணித்திருக்கின்றனரோஅவருக்கு(உலகில்) நெருக்கடி மிக்கவாழ்க்கையே அமையும். மறுமையில்அவனை நாம்குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன்என் றப்பே! நான்உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானேஇருந்தேன்? என்னை ஏன்குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? எனவினவுவான்.அதற்கு அல்லாஹ்ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனதுஅத்தாட்சிகள் உன்னிடம்வந்த போதுஅவற்றை மறந்து (குறுடன்போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றையதினம் நீயும் (என்அருளை விட்டும்) மறக்கப்பட்டுவிட்டாய். இவ்வாறே நாம்உலகில் படைத்தவனின்அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம்செய்தவனுக்குக் கூலிவழங்கவிருக்கின்றோம்.

இன்னும்மறுமையில் அவனுக்குள்ளவேதனை மிகக்கடுமையானதும், என்றென்றும்நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124) ஆகவே நண்பா! நீநல்லதொரு முடிவெடுக்கவேண்டும். நீ போகும்பாதையை மாற்றவேண்டும். உன் வாழ்நாளில்பெரும் பகுதியைவீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவதுநீ உபயோகப்படுத்தக்கூடாதா? காலம் பொன்னானதுஅதை இதுவரைக்கும் மண்ணாக்கிவிட்டாய்!. இது வரைதூங்கியது போதும். இனியாவதுநீ விழித்துக்கொண்டால் அதுஅல்லாஹ் நீதிருந்துவதற்காக உனக்களித்தஇறுதிச் சந்தர்ப்பம். அரியவாய்ப்பு, அதையும் வீணாக்கிவிடாதே!

போதும்நண்பா! போதும்!. இத்தோடு நிறுத்திக்கொள். நான் என்னைப்படைத்தவனுக்கு விசுவாசமாய்நடப்பேன் என்றுமனதில் உறுதிகொள். பாவச்சுமைகளை அவன்முன்னிலையில் இறக்கிவை. ஆம் தவ்பாச்செய். அவனிடம் மன்றாடிஉனது பாவங்களுக்காகமன்னிப் கோரிடு. அழு, அழுநன்றாக அழுஉன் இதயச்சுமை குறையும்வரைக்கும் அழுதிடு, இனிமேல்பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளைஜமாஅத் தொழுகையைத்தவற வசிடுவதில்லைஎன உன்னுடன்நீயே உறுதிமொழி எடுத்துக்கொள்.

(அல்லாஹ்வை) நம்பியோருக்குஅவர்களின் இதயங்கள்அவனை அஞ்சிப்பயந்து நினைவுகூர்ந்திட இன்னும்நேரம் வரவில்லையா?

தமக்குத்தாமே அநியாயம்செய்து கொண்டஎனது அடியார்களே! .. நீங்கள்அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும்நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப்பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாகஅவன் மிக்கமன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான். (ஸூரா அல்ஹதீத்53)

 ஒருமுஸ்லிம்தொழுகையைவிட்டுவிட்டால்அவனதுவிடயத்தில்என்னென்னஇஸ்லாமியச்சட்டங்கள்அமுல்ப்படுத்தப்படும்என்பதைநீஅறிவாயா?. இதோகேள்!.
  • தொழுகையை விட்டவன்காபிராகஆகி விடுகின்றான்.
  • அவன் மரணித்தால்அவனைத்தொழ வைக்கக் கூடாது
  • அவனுக்காக எவரும்துஆக் கேட்கக்கூடாது.
  • அவனைக் குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம்செய்யவும் கூடாது.
  • அவனுடைய மகளுக்குவலியாகஇருந்து திருமணம் முடிந்துவைக்கவும் கூடாது.
  • அவன் இறந்தால்அவனதுசொத்தில் உறவினருக்கோ, அவனதுஉறவினர் இறந்தால்அதில் அவனுக்கோஎவ்விதப்பங்குமில்லை.
  • அவன் மக்காஹரத்தின்எல்லைக்குள்பிரவேசித்திட அனுமதியில்லை.
  • அவன் அறுத்தபிராணிகளை யாரும்உண்ணக் கூடாது.
  • அவனுக்கு முஸ்லிம்பெண்ணைமணமுடித்துக்கொடுக்கக் கூடாது. அப்படிமுடித்திருந்தால்அந்தத் திருமணத்தைரத்துச்செய்ய வேண்டும்.
  • அவன் தான்முஸ்லிம்பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்துகொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப்பிறந்தபிள்ளைகள்கூடஅவனதுகுழந்தைகளாகக்கணிக்கப்படமாட்டாது.

பார்த்தாயாசினேகிதனே? நீ செய்துகொண்டிருந்த பாவம்எவ்வளவு மகாகெட்டது என்பதைப்பார்த்தாயா?. ஆனால் அதேபாவத்தை நீதொடர்ந்து செய்ததால்அது பாவமென்றேதெரியாதளவுக்கு உன்உள்ளம் வலித்துவிட்டதே பார்த்தாயா?

இன்றேநீ தவ்பாச்செய்வாயல்லவா? ஆம். அதைத்தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம்தஞ்சமடைந்து விடு. அவன்உன்னைக் கைவிட்டால்வேறு உன்னைக்காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமேகைசேதப் பட்டதில்லை . கடவுளைநம்பினார் கைவிடப்படார்.

அதேபோல் நீசெய்த ஏனையபாவங்களுக்காகவும் சேர்த்தேதவ்பாச் செய்துவிடு. இனிமேல் அவற்றைவிட்டு முழுமையாகவிலகி விடு. அவைபற்றிய எண்ணங்களைக்குழி தோண்டிப்புதைத்துவிடு.

 இன்றிலிருந்துநீயொருபுதியமனிதன்,

(அல்லாஹ்வின்அருள் எம்அனைவர் மீதும்உண்டாகட்டும்.)

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.