ஜோதிடப் பிரியருக்கு…

மாற்றுமத சகோதரரின் கேள்வி: ஜோதிடத்தால் ஒருவன் லாபமும் மற்றொருவன் நட்டமும் அடையும் நிலையிருந்தால் அது ஏமாற்றும் கலையாகவும், ஏன் குற்றமாகவும் அமையும்?

 பதில்: மாற்றுமத சகோதரர் அவர்கள் இவ்வாறு கூறுவதன் மூலம் ஜோதிடத்தால் யாருக்கும் ஏமாற்றம் ஏற்படுவது கிடையாது என்ற மாயையை ஏற்படுத்துகிறார் மேலும் இந்த ஜோதிடத்தை ஒரு கலையாக வர்ணிக்கவும் முற்படுகிறார்.

என்ன செய்வது தமிழர் பண்பாடு என்று கூறி தவறான விஷயங்களைக்கூட இப்படித்தான் வர்ணித்துவிடுகிறார்கள் உதாரணமாக

களவும் கற்று மற என்று கூறுவார்கள்

அதாவது திருடுவது ஒரு கலை அந்த கலையையும் கற்றுக்கொண்டு அதை மறந்துவிடுங்கள் என்று கூறுவார்கள். திருடுவது, களவாடுவது என்ற குற்றம் ஒரு மனிதனை சீரழித்துவிடுகிறது இப்படிப்பட்ட குற்றத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தமிழர் பண்பாடு கூறுகிறது. இதைப்போலத்தான் ஜோதிடம் என்ற செயலையும் இந்த மாற்றுமத சகோதரர் ஒரு கலையாக வர்ணிக்கிறார்.

திருட்டுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு

ஒரு மனிதன் திருடனிடம் பொருளை பரிகொடுத்துவிட்டு ஏமாற்ற மடைகிறான். தம்முடைய பொருள் திருடனால் திருடப்படும் என்று யாராலும் முன்கூட்டியே அறிய முடியாது!

ஒரு மனிதன் குறி சொல்லும் ஜோதிடரிடம் பணத்தை கொடுத்துவிட்டு குறி பார்க்கிறான் அந்த ஜோதிடர் கூறுவது முற்றிலும் நடக்குமா? இதற்கு ஜோதிடர்கள் வெள்ளைத்தாளில் ஸ்டேட்மென்டு ஒன்று எழுதி உறுதிமொழி கொடுப்பார்களா? அப்படி தாங்கள் கூறுவது நடக்கவில்லையெனில் ஜோதிடத்தை அடியோடு விட்டுவிட இவர்களால் முடியுமா?

சிந்தித்துப்பாருங்கள்

  • திருடனிடம் தற்செயலாக ஏமாறுகிறார்கள்
  • ஜோதிடர்களிடம் வேண்டுமென்றே ஏமாறுகிறார்கள்
திருடன் ஜோதிடன்
என்னுடைய கடைக்கு வாங்க நான் திருடுகிறேன் என்று போர்டு போட்டு மக்களை கூவி அழைக்கமாட்டான். என்னுடைய கடைக்கு வாங்க நான் குறி சொல்கிறேன் என்று போர்டு போட்டு மக்களை கூவி அழைத்து பணத்தை சுரண்டுவான்
திட்டம் போட்டு திருடுவான், திருடும்போது காரியம் கெட்டுப் போய்விடுமே என்ற பதற்றமும் பயம் இருக்கும் திட்டம் போட்டு குறி கூறுவான், காரியம் கெட்டுப்போனால் தோஷம் பரிகாரம் என்ற நொண்டி சாக்கு உள்ளது.
கிடைத்த பொருள் போதும் என்று மனதிருப்பதியுடன் திருடுவான். குறி மட்டும் போதாது என்று எண்ணி பரிகாரம் என்று மற்றொரு பொய் கூறி மக்களை ஏமாற்றுவார்கள்.
மக்களிடம் மாட்டிக்கொண்டால் அடி உதை, சிறை தண்டனை மக்களிடம் மாட்டிக்கொண்டால் ஜாதகத்தில் கோளாறு, லக்கணம் சரியில்லை என்று கூறி சாந்தப்படுத்தி விடுவார்கள்
ஏமாற்றி பொருளை சுரண்டு வதால் திருடன் என்ற பட்டப் பெயரும் இழிவும் ஏற்படும் ஏமாற்றி பொருளை சுரண்டி னாலும் ஜோதிடர் என்று போற்றப்படுகிறான்.

இங்கு மக்களை ஏமாற்றுவதில் திருடனைவிட ஜோதிடன்தான் மகா கெட்டிக்காரனாக இருக்கிறான் காரணம் இந்த ஜோதிடர்கள் கூறுவது உண்மை என்று நம்பி மோசம் போகக்கூடிய மக்கள் அதிகமாக உள்ளனர்.

பொருமையாக சிந்தித்தால் திருடனைவிட ஜோதிடன்தான் மிக நயவஞ்சகத்தனம் கொண்டவன்!

 

மாற்றுமத சகோதரரின் கேள்வி

சிலரின் நம்பிக்கையின் போக்கில் சென்று அவரின் நோயை உளவியல் பாங்கில் அனுகி தன்னம்பிக்கையை மூட்டும் கலையாகவும் மனதில் ஆன்மீக நெறியில் திருப்பி நன்நெறியில் ஒருவரை ஒழுகச்செய்யும் கலையாகவும் ஜோதிடக்கலை உள்ளதை யாரும் மறுக்க இயலாது,

பதில்

சகோதரர் இவ்வாறு கூறுவது முற்றிலும் தவறானது! இதற்கு ஒரு உதாரணம் இதோ.

ஒருவன் தன் மகளுக்கு திருமணம் முடிக்க சரியான மணமகன் தேர்ந்தெடுக்கிறான் உடனே அந்த ஜோதிடன் அந்த மணமகனுக்கு நேரம் சரியில்லை என்று கூறி திருமணத்த நிறுத்துகிறான். மேலும் மணப்பெண்ணுக்கு செவ்வாயில் தோஷம் உள்ளது என்று கூறி 35 வயதுவரை திருமணம் செய்ய வேண்டாம் செய்தால் விதவையாகிவிடுவாள் என்று உளவியல் பாங்கில் அணுகி கெட்ட எண்ணத்தை மூட்டுகிறான். ஆன்மீக நெறி என்று கூறி தவறான நெறியில் பெற்றோர்களை திசை திருப்பி அவ்வப்போது இந்த பரிகாரம், அந்த புஜை என்று ஏமாற்றுகிறார்கள். இதன் மூலம் ஜோதிடம் என்பது கலை அல்ல வெறும் குருட்டு உளரல்கள் என்பது நமக்கு விளங்குகிறது.

 

மாற்றுமத சகோதரரின் கேள்வி

மேலும் மருத்துவம்,பெறியியல் போன்று இதுவும் ஒருவயிற்றுப் பிழைப்பு என்று விட்டு விட்டாலும் சரி, ஆனால் ஜோதிடர்களை ஏமாற்றுப்போர்வழிகள் என்று முடிவு செய்வதும், ஜோதிடத்தை நம்புவர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்பதும் எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சுத்தான்,

பதில்

மருத்துவம், பொறியியயல் என்ற கல்வி பயின்ற நிபுணர்கள் எந்த ஒன்றை கூறினாலும் முதலில் பரிசோதிப்பார்கள், சோதனைக் கூடங்களில் சோதனைகளை நிகழ்த்துவார்கள் பின்னர்தான் உரிய சிகிச்சை அளிப்பார்கள் இது யாராலும் மறுக்க முடியாது ஆனால் இந்த சிறந்த கல்வியை ஜோதிடத்துடன் ஒப்பிடுவது முட்டாள் தனமாகும்.

ஜோதிடர்களுக்கு நிபுணத்துவம் கிடையாது திருநீரும் சந்தனப் பொட்டும்தான் அவர்களுக்கான அடையாளம். குறி கூறுவதற்கு முன் மனிதனின் மனோ நிலையை பார்ப்பதில்லை எடுத்தான் கவிழ்தான் என்று கூறி மக்களை பதறச்செய்து அற்ப இலாபத்திற்காக ஒருவரது வாழ்க்கையையே சோதனையாக மாற்றிவிடுகிறார்கள். நம்மை பொருத்தவரை ஜோதிடர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்தான் அதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை.

 

மாற்றுமத சகோதரரின் கேள்வி

ஒருமதத்தைச் சார்ந்து இருப்பதும், கடவுளை சார்ந்திருப்பதும் ஒரு தூதரின் மொழியை ஆராயாமல் நம்புவதும், உருவ, அருவ வழிபாடுகளும், மறுமை சொர்க்க போகத்திற்கு நோன்பிருப்பதும், தவமியற்றுவதும் எல்லாம் பகுத்தறிவிற்கு சற்றும் ஒவ்வாத விசயங்களே,

பதில்

பகுத்தறியும் திறன் குறைவானவர்களுக்கு இஸ்லாம் ஒரு புரியாத புதிராகத்தான் தென்படும். என்னத்தான் உண்மையை எடுத்துக்கூறினாலும் அது என்ன? இது என்ன? என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத கேள்விகளைத்தான் முன்வைப்பார்கள்.

மதத்தை சார்ந்து இருப்பதும் கடவுளைச் சார்ந்திருப்பதும் என்று பேசுவதன் மூலம் கடவுளை இல்லை என்று கூறவருவது முற்றிலும் முட்டாள்தனமானதாகும் கடவுளை சாராதிருப்பது என்ற தொணியில் பேசக்கூடியவர்கள் ஏன் ஜோதிடத்தின் மீது இவ்வளவு மோகம் காட்டுகிறார்கள்.

தூதரின் மொழியை ஆராயாமல் ஈமான் கொண்டவர்கள் எதையும் செய்வதில்லை, நோன்பு நோற்பதில்லை. மேலும் நோன்பு ஒரு முஸ்லிமுக்கு கேடயமாகத்தான் இருக்கிறது நோன்பு நோற்றுவிட்டால் மட்டும் சுவனம் செல்ல முடியாது மாறாக சுவனம் செல்வது அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. நபிகள் பெருமானாரே தாம் சுவனம் செல்வேனா என்று பயந்தார்கள் அப்படியிருக்க சுவனத்தை பற்றி தீர்மானிக்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது நாம் இறைவனைச் சார்ந்தவர்களே!

 

மாற்றுமத சகோதரரின் கேள்வி

நானும் சாவால் விடுகிறேன், எந்த மதத்தைச் சார்ந்தவரெனினும் சரியே, ஒரு லட்சம் டெப்பாசிட் பரிசு 10கோடி உங்கள் கடவுளை காட்ட வேண்டும்,

பதில்

இது முழுக்க முழுக்க முட்டாள்தனமான சவாலாகும்.  காரணம் இந்த ஜோதிடப் பிரியர் ஒன்றை அறியத்தவறுகிறார். இதோ இவர் கீழ்கண்ட அர்ப்பமாண பொருளைப் பற்றிய அறிவைக்கூட பெறவில்லை கடவுளைக் காண கோடி ரூபாய் சவால் விடுகிறார்.

ஜோதிடத்தின் உயிர் நாடி என்று கூறப்படுவது ஒன்பது  கிரகங்களாகும். இந்த ஒன்பது கிரகங்களில் 7 கிரகங்கள்தான் கண்ணால் பார்க்க முடியும் மற்ற 2 கிரகங்களான இராகு, கேது ஆகியவைகளை கண்ணால் பார்க்க இயலாது. ஜோதிடப் பிரியரான இவர் அர்ப்த்திலும் அர்ப்பமான இராகு கேது என்ற கிரகங்களையே கண்ணால் பார்க்க இயலாத நிலையில் இருக்கும்போது கடவுளை பார்க்க ஆசைப்படுவது முட்டாள்தனம் தானே! நாமும் சவால் விடுகிறோம் இராகு கேது ஆகிய இரண்டு கோள்களை இவர்கள் காட்டிவிட்டல் இவருக்கு 1000 கோடி இனாமாக தருவோம் (இறைவன் நாடினால்)

 

மாற்றுமத சகோதரரின் கேள்வி

முடிந்தால் அவரிடம் தமிழ் நாட்டிற்கு காவிரிநீர் தங்குதடையின்றி வரவும், தனிஈழம் மலரவும் வரம் பெற்றுக்கொடுக்கவும்.

பதில்

காவிரியில் தண்ணீரை அல்லாஹ் கொடுத்துவிட்டான் அதற்கு நீங்கள் குடிக்கும் தண்ணீரே ஆதாரமாக முன்வைக்கிறோம். காவிரி ஆற்றின் நடுவே அணைகட்டி தமிழர்களும், கண்ணடர்களும் சண்டை போட்டுக் கொண்டால் அதற்கு அல்லாஹ் என்ன செய்வான்.

ஈழம் என்ற நிலப்பரப்பை அல்லாஹ் கொடுத்துவிட்டான் அதற்கு அந்த பகுதியின் மண் சாட்சியாக உள்ளது. அப்படியிருக்க ஈழம் என்னுடையது தனி ஈழம் கொடுக்க வரம் தா? என்பது என்னவோ நாம் தனி பாலஸ்தீனம் கேட்டு வரம் பெற்று ஈழத்தமிழர்களை துரோகம் செய்துவிட்டதாகத்தானே இவர் கூற முற்படுகிறார்.

இதோ நானே அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன்

 

மாற்றுமத சகோதரரின் கேள்வி

யா அல்லாஹ் தனி ஈழம் என்ற கொள்கை நியாயமானதாக இருந்தால் அந்த பகுதி மக்களின் நியாயமான கோரிக்கையை படைத் இறைவனாகிய நீயே பெற்றுத்தருவாயாக!

பதில்

மாற்றுமத சகோதரரே இதோ இந்த பிரார்த்தனையை என் இறைவன் ஏற்றுக்கொண்டால் உலக அழிவு நாளுக்கு முன்னர் தனிஈழம் உதயமாவதை யாராலும் தடுக்க இயலாது! (இறைவன் நாடினால் தவிர). இறைவன் நாடினால் தனிஈழம் உதயமாவததை பார்க்க நானோ நீங்களோ உயிருடன் இருப்போமா?

 

மாற்றுமத சகோதரரின் கேள்வி

அப்படியே மற்ற மதங்களை மத நம்பிக்கையை ஏன் உருவாக்கி மதபேதம் தோன்ற காரணமானார் என்பதையும் விளக்கும்படியும் கண்டிப்புடன் கேட்டுக்கூறவும்………

பதில்

மாற்றுமத்தவரின் இந்த கேள்விக்காக முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வை அழைத்து ஏன் இவ்வாறு மதங்களை உருவாக்கினாய் என்று கேட்க வேண்டிய அவசியமும் இழிவையும் அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தவில்லைம மாறாக உங்களைப் போன்ற மனிதர்களின் கேள்விகளை முன்கூட்டிய இறைவன் அறிந்துவைத்திருப்பதால் இந்த கேள்விக்கான பதிலை குர்ஆன் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகிறான். (குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதை அறிந்துக்கொள்க)

மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் – பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்’. (ஆகவே) உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்.’நிச்சயமாக இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்’ (44:13)

அல்ஹம்துலில்லாஹ்!

(எல்லாப்  புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.