மார்க்கம்

உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி! அழையுங்கள் நம் அல்லாஹ்வை துவா என்ற பிரார்த்தனையின் வாயிலாக! ஏனெனில் அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறிவுரை கூறுகிறான் கீழே உள்ள திருமறை திருக்குர்ஆனின் வசனத்தை சற்று பொறுமையாக கேளுங்கள்!என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான்அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையேநம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”  (என்பதைக் கூறுவீராக!)(அல்குர்ஆன் 2:186) சரி பிரார்த்தனை என்பது பற்றி அல்லாஹ்வின் இறுதி இறை தூதர் நபிகள் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? இதோ ஆதாரத்துடன் விளக்குகிறேன் படியுங்கள்!

”பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனதுவணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்‘ என்றுஉங்கள் இறைவன் கூறுகிறான்”என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372

சரி நம் துவா என்ற பிரார்த்தனைகளை எவ்வாறு கேட்பது?

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனைசெய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது ”இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.

அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மைசெய்வோருக்கு அருகில் உள்ளது.  (அல்குர்ஆன் 7:56)

துவா என்ற பிரார்த்தனையின்போது அவசரப்படக்கூடாது

”நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனைஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனைஏற்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340

உங்கள் துவா என்ற பிரார்த்தனை விரைவாக ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்?

”உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்தஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப்பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான்.அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறுமூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.  அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ   பிரயாணத்தின் போது…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள்இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனதுமகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை.  அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908

கடமையான தொழுகைக்குப் பின்.

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

”எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்)அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இரவில் கடைசியிலும்கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்றுபதிலளித்தார்கள்.அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499

மிகவும் இலேசான அல்லாஹுக்கு மிகவும் விருப்பமான மீஜான் எனும் நன்மையின் தராசில் மிகவும் கனமான(நன்மையைத் தரக் கூடிய)துமான கீழ்கண்ட துவாவும் அதன் பயன்களும்

”தூய்மை என்பது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று துதிப்)பது, (நன்மை-தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.

‘சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி’ (அல்லாஹ் தூயவன்; எல்லாப்புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள்-பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு நன்மைகளைக் கொண்ட) தாகும். தொழுகை என்பது (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் என்பது சான்றாகும். பொறுமை என்பது வெளிச்சமாகும். குர்ஆன் என்பது உனக்குத் தவிர்க்க முடியாத (ஏவல்) தேவையாகும்; அல்லது எதிரான (விலக்கல்) சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மைத் தாமே விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மையே அழித்துக் கொள்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ மாலிக் அல்-அஷ்அரீ (ரலி) (நூல் – முஸ்லிம், 381)

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ بْنُ هِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الطُّهُورُ ‏ ‏شَطْرُ ‏ ‏الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ ‏ ‏أَوْ تَمْلَأُ ‏ ‏مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ ‏ ‏يَغْدُو ‏ ‏فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ ‏ ‏مُوبِقُهَا

(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை, (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை.

1. ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் துய்மையானவன், அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்)

2. ”சுப்ஹானல்லாஹில் அளீம்”  (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துய்மையானவன் எனத் துதிக்கிறேன்)

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி, 6406, 6682, 7563. முஸ்லிம், 5224)

(புகாரி 6682  அறிவிப்பில் ”அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும்” என்று கூடுதலான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன)

‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِشْكَابٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையீன் கதீர்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரிடமிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு அமையும். அவர் புரிந்த இந்த நற்செயலை விடச் சிறந்ததை வேறு எவரும் செய்திட முடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான ஒரு) நற்செயல் புரிந்தால் தவிர”

”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்படுகின்றன, அவை கடலின் நுரைகள் போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே! என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி, 3293, 6403, 6405 முஸ்லிம், 5221)

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏سُمَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ ‏ ‏حِرْزًا ‏ ‏مِنْ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ أَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ وَمَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ ‏ ‏حُطَّتْ ‏ ‏خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ ‏ ‏زَبَدِ الْبَحْرِ

”யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமை நாளில் கொண்டு வருவதில்லை. அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் – முஸ்லிம், 5222)

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏سُمَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ

”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” என்ற திக்ரை ”யார் நூறு முறை சொல்வாரோ” என்றே  நபிவழிச் செய்திகள் அறிவிக்கின்றன! (பார்க்க: ஹை லைட்)

”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையீன் கதீர்” என அல்லாஹ்வை மகத்துப்படுத்தும் வார்த்தைகளை யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும் அவரிடமிருந்து நூறு தவறுகள் அழிக்கப்படும் என்றே நபிமொழியில் குறிப்பிடுப்படுகின்றன. என்னென்ன தவறுகள் என்று பட்டியலிடப்படவில்லை! குர்ஆன், சுன்னாவில் விவரித்துச் சொல்லப்படாத பாவங்களின் விபரங்களை நாம் பட்டியலிடுவது தகுதியற்றதாகும்.

பிறருக்கு இழைக்கும் அநீதியினால் ஏற்படும் பாவங்கள், பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலே தவிர இறைவனும் அதை மன்னிப்பதில்லை என்ற இஸ்லாமின் அடிப்படையில், தனக்குத்தானே செய்துகொண்ட தீமைகள் – தவறுகள் அழிக்கப்படும் என்றே புரிந்துகொள்ள வேண்டும்!

(நன்றி சகோதரர் முஸ்லிம்-இதுதான் இஸ்லாம் வெப்தளம்)

சிராஜ் அப்துல்லாஹ்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.