பெண்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பா?

பெண்கள் தலைமையேற்றால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்றும், பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவும் கட்டுக் கதையாகும். பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எல்லா சந்தர்ப்பத்திலும் ஆண்கள் தான் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். பொது இடங்களில் பெண்ணுக்கு இடையூறு செய்தால் இவளுக்கு இது வேண்டும்’ என்பது தான் பெண்களின் விமர்சனமாக உள்ளது. ஆண்கள் தான் தட்டிக் கேட்கின்றனர்.

பேருந்தில் பயணம் செய்யும் போது உட்கார இடம் இல்லாத கிழவியாக இருந்தாலும் இன்னொரு பெண் இடம் கொடுப்பது அரிதாகும். ஆண்கள் பெரும்பாலும் தமது இருக்கையைக் கொடுத்து விடுவார்கள்.

அலங்காரம் செய்து கொண்டவளைக் கேவலமாக விமர்சிப்பதும், பெண்களின் நடத்தை பற்றி அவதூறு பேசுவதும் பெண்கள் தான்.

தன்னைப் போன்ற ஒரு பெண்ணிடம் வரதட்சணை கேட்பதிலும் பெண்கள் தான் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

முஸ்லிம் ஜமாஅத்துகளில் குடும்பப் பிரச்சினை பற்றிய வழக்கின் போது அனைவரும் பெண்கள் சார்பாக பேசி வருவதைக் காண்கிறோம். இதன் காரணமாகத் தான் பெண்கள் அதிகப் பாதுகாப்புடன் உள்ளனர்.எனவே நாட்டிற்கு, ஜமாஅத்திற்கு பெண்கள் தலைமை தாங்கினால் பெண்களுக்கு நன்மை என்பதெல்லாம் நூறு சதவிகிதம் கட்டுக் கதையாகும்.

பெண்கள் கல்வி கற்கக் கூடாது.

பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாகவும் அவதூறு கூறுகின்றனர்.

கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது.

ஆயினும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பயிலும் முறையை மட்டும் தான் இஸ்லாம் எதிர்க்கிறது. புகழ்ச்சியில் மயங்கி தம்மை இழப்பவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர்.

கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும், சக மாணவர்களால் ஏமாற்றப்படும் செய்திகளும் அன்றாடச் செய்திகளாகி விட்டன.

இவ்வாறு சேர்ந்து படிப்பதால் தான் ஆண்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது. பெண்கள் தனியாகப் படித்தால் படிப்பு ஏறாது என்று கூற முடியாது.

எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவது தான் அவர்களுக்கும் பாதுகாப்பானது என இஸ்லாம் கூறுகிறது.

பேருந்துகளில் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பேருந்துகளில் விடப் படுகின்றன.

ஒரே பேருந்து விடப்படும் இடங்களில் இருவருக்கும் தனித்தனி வழியும் இடமும் ஒதுக்கப்படுகிறது.

சிறிது நேரப் பயணத்தின் போதே இவ்வளவு பாதுகாப்புநடவடிக்கை என்றால் காலமெல்லாம் ஆண்களுடனே பெண்களை விட்டால் என்னவாகும்?

ஏமாற்றப்படும் அபலைகள் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்கூடாகக் கண்ட பின் இதை யாரும் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாத பெண்களும் கூட பெண்களுக்கே உள்ள கல்லூரிகளில் படிப்பதே பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.

ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பதால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன? இதனால் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தனி நூலாகவே எழுதலாம்.

ஏமாற்றப்படும் அபலைகள் பற்றிய செய்தி செய்தித் தாள்களில் அன்றாடம் இடம் பிடித்து வருவதே இதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாக சிலர் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அறியாமை காரணமாக பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல்: புகாரி 900, 873, 5238.

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 865, 899.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி 578, 372, 867, 87

.’நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.நூல்: புகாரி 707, 862, 708, 709, 710, 868.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று ‘பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்’ என்று தெரிவித்தார்கள். நூல்: புகாரி 866, 569, 862, 864.

தொழுகை முடிந்தவுடன் பெண்கள் முதலில் வெளியே செல்லும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மற்ற ஆண்களும் தமது இடத்திலேயே அமர்ந்திருப்பது வழக்கம்.

நூல்: புகாரி 875, 837, 866

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம். கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன அரபு நாடுகளிலும், மலேசியாவிலும் பெண்கள் இன்றளவும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்துகின்றனர்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் முதலிடம் மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு உண்டு. அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும் நிறைவேற்றுகின்றனர். தொழுகின்றனர்.

மார்க்கம் அறியாத சில பேர் சில பகுதிகளில் பெண்களைத் தடுத்தாலும் அது சிறிது சிறிதாக மாறி வருகிறது.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: