இஸ்லாத்தை நோக்கி அலையாய் வரும் பிரிட்டன் மக்கள்

அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்; பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்)இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. 

கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுபில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000முதல் 25,000 வரை இருக்கலாம் எனகணெக்கடுக்கப்படது,ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).

பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர்.இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .

ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உன்னத பாட்டு போன்ற ஆபாசங்களும்,அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.

இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும்,தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும்,ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தைவாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.

ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்”என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.

பொது மேடையில் வாசிக்கும் தகுதி கூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.

அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார்.இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்

பிரிட்டனைசேர்ந்தஇஸ்லாத்தைதழுவியசிலர்கருத்துதெரிவிக்கையில்…

பவுல்மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து)இஸ்லாத்தை தழுவினேன்.

(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியுன் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது,லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர் னின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).

டென்னிஸ்ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி,தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)

கதீஜாரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன்,நோன்பு வைக்கின்றேன்,வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்

ஹனாதஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்

இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை

இத்தூதருக்கு(முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)

கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,

சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள உலரள்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.

S.சித்தீக்.M.Tech

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.