முஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு

முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னர்.

இஸ்லாமிய இயக்கம் அதற்கு முன்னால்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் வாயிலாக இறைவன் வழங்கிய தூது – அதாவது இஸ்லாம் – உலகின் ஒரு மாபெரும் சீர்திருத்த இயக்கமாக விளங்குகிறது. இது ஒரு புதிய இயக்கமல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் இறைத்தூதர்கள் எந்த நெறியினைக் கொண்டு வந்த வண்ணமிருந்தார்களோ அதே நெறியைத்தான் எடுத்துரைக்கிறது இந்த இயக்கம். இந்த இயக்கம் ஆன்மீகத் துறையை மட்டுமல்ல, மனித வாழ்வின் ஒவ்வொரு துறையையும் நிகர் காண முடியாத அளவிற்கு சீர்திருத்தம் செய்துள்ளது. இது வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்கிறது. மேலும் அவற்றை ஒருங்கிணைத்தும் நிற்கிறது.

ஒரே நேரத்தில் இது ஆன்மீக ஒழுக்க இயக்கமாகவும் : பொருளியல் இயக்கமாகவும் இயக்கிறது. இது தனிப்பட்ட மனிதனுக்கு பயிற்சியளிக்கும் இயக்கமாகவும் இருக்கின்றது. கூட்டு வாழ்வின் பிரச்சனைகளை ஒழுங்குபடுத்தும் அரசியல் இயக்கமாகவும் இருக்கின்றது. ஆக, மனித வாழ்வின் ஒவ்வொரு துறையையும் அது தழுவி நிற்கிறது. இன்னும் மனித வாழ்வின் எந்த ஒரு துறையும் அதன் செயல் வட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல. 

இஸ்லாமிய இயக்கத்தின் முக்கியத்துவம்

உலகில் சீர்திருத்த, புரட்சி இயக்கங்கள் பல எழுந்துள்ளன.  ஆனால் இஸ்லாமிய இயக்கம் தன் விசாலத்தன்மையாலும் இன்னும் இதர சிறப்பியல்புகளின் காரணத்தாலும் அத்தகைய இயக்கங்களிலிருந்து மேம்பட்டு சிறந்து நிற்கிறது.

இந்த இயக்கம் எவ்விதம் எழுந்தது? இதனைச் சமர்ப்பித்தவர் இதனை எவ்விதம் சமர்ப்பித்தார்? ஆதனால் விளைந்த எதிர் விளைவு என்ன?

இந்த இயக்கத்தைப் பற்றி சிறிதளவேனும் அறிந்திருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளத்திலும் துவக்கத்தில் சொன்ன கேள்விகள் எழுகின்றன.

ஆனால் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நாம் ஏன் தெரிந்துக்கொள்ள வேண்டும்;? வெறும் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆவலையோ, ரசனையையோ, பூர்த்தி செய்து கொள்வதற்காகவா? அல்ல. மாறாக  இந்தக் கேள்விக்கான விடைகளை அறிந்து கொள்வதன் முக்கியத்துவம் அவற்றை விட அதிகமானதாகும். காரணம் அந்த விடைகள் ஒரு சீர்திருத்த இயக்கத்தின் தெளிவான – முழுமையான தோற்றத்தை நம்முன் வடித்துத் தருகின்றன. ஆது  எத்தகைய இயக்கமென்றால், மனிதன் சிக்கியுழன்று கொன்டிருக்கும் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய அனைத்து ஆற்றல்களையும் போதுமான அளவுக்குத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த இயக்கம் ஒரு புறம் மனிதனுக்கு அவனது உண்மையான – நன்மை தீமைக்கான சரியான பொருளை எடுத்துரைக்கின்றது. ஓவ்வொரு மனிதனுக்கும் அவனது இருதி இலக்காத் திகழும் நிரந்தர வாழ்வின் உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறது. முறுபுறம் அவனது இம்மை வாழ்வுக்காக ஒர் அற்புதமான செயல் திட்டம். அந்த மறுமையின் நிரந்தர வாழ்வையும் அழகிய முறையில் சீர்படுத்திவிடுகின்றது. ஆதனால தனது வாழ்வின் எந்தப் பிரச்சனைகளை – சிக்கல்களைத் தீர்க்க வழிதேடி மனிதன் நிம்மதியின்றி இதுவறை தடுமாறிக் கொண்டிருந்தானோ, இன்னும் தடுமாறித் தத்தளித்மு கொண்டிருக்கிறானோ, அந்த பிரச்சனைகள், சிக்கல்களிலிருந்து அவனை விடுவிக்கின்றது.

இஸ்லாமிய இயக்கத்தின் இந்தச் சிறப்பியல்புதான், அறிவைத் தேடும் ஒவ்வொருவழரயும் அதனை அருகேயிருந்து பார்த்திடவும், ;இந்த இயக்கத்தைப்பற்றி – இத்துணைப் பெரிய சக்தியுடையதன்று பேசப்படுகின்றது!  இது எந்த அளவிற்கு உண்மை? ஏன்று புரிந்து கொள்ள முயலவும் தூண்டுகின்றது.

இயக்க நாயனரும் இயக்க சாத்திரமும்.

இஸ்லாமிய இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்;கென்று ஏரபளமான  நூல்கள் இதுவரை எழுதப்பட்டுவிட்டன. இனியும் எழுதப்படும். ஆந்த நூல்களின் வாயிலாக இஸ்லாமிய இயக்கம் மிகத் தெளிவான முறையில் அறிமுகமாகியும் விடுகின்றது. ஆனால ;வெளிச்சத்தை எண்ணிப் பார்க்கும்போது எப்படி விளக்கை எண்ணிப் பார்க்காமல்  இருக்க முடியாதே, நறுமணத்தை உணரும்போது எப்படி அதற்க்கு காரணமான மலரை எண்ணிப் பார்க்காமலிருக்க முடியாதோ- அதைப்போன்றே ஒரு மாபெரும் இயக்கத்தை எண்ணிப் பார்க்கின்றபோது  அந்த இயக்கத்திற்குத் தூண்டுக்கோலாக, முதல்வராக விலங்கி அதனை இயக்கியவறையும் எண்ணிப் பார்க்காமலிருக்க முடியாது. ஏனவேதான் இஸ்லாமிய இயக்கம் குறித்து மக்கள் முன்னால் சேப்படும்போது, அவர்கள் உடனே அந்த இயக்கத்தின் தளபதியும் தலைவருமான  முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும்¬ – இயக்கத்தின் அழைப்புக்கு மூலாதார நூலான திருக்குர் ஆனின் விளக்கத்தையும் ஆவலுடன் கேட்கத் தலைப்படுகின்றனர். இந்த முனைப்பும் ஆவலும் முற்றிலும் இயற்க்கையானதாகவும்.

இஸ்லாமிய இயக்கத்திற்கே உரிய சிறப்பியல்புகள்

மக்களுக்கு ஒழுக்கப் பயிற்சியளிப்பதில், அவர்களுடைய தீய குணங்களை சீர்ப்படுத்துதல், அவர்களிடையை நிலவும் தீமைகளை களைதல், மனிதன் சரியான பொருளில் வெற்றியடைந்திட வழி வகுக்கும் மழுமையான வாழ்க்கைத் திட்டம் ஒன்றை அவர்கள் முன் சமர்ப்பித்தல் ஆகிய இவைதாம்  மனித இனத்திற்கு ஆற்றஆவண்டிய மிக முதன்மையான கடமை என்னதையும் மிகச் சிறந்த சேவை என்பதையும் அனைவரும் அறிவர். இந்த நேக்கத்திற்காக மாந்தர் பலரும் தத்தம் பாதைகளில்- தத்தம் வழிமுறைகளில் பணி புரிந்திருக்கிநார்கள்.ஆனால் இத்தகைய சீர்திருத்தப் பணிப்புரிவோர். முனித வாழ்வில் சில துறைகளை மட்டும் தமக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொண்டு – அந்தத் துறைகயயளில் மட்டும் தம்மால் செய்யமுடிந்த (சீர்திருத்தத்)தைச் செய்திருக்கின்றார்கள்.

சிலர் ஒழுக்கம், ஆன்மிகம் ஆகியவற்றை தமது சிர்திருத்தக் களமாக ஆக்கிக்கொண்டார். சுpலர் நாகரீகத்தையும் பண்பாட்டையும் சீர்படுத்த முயன்றார்கள்.

சிலர் அரசையும். ஆரசியலையும் தமது காளமாக ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் மனிதனின் வாழ்க்கை முழவதையும் சீர்த்திருத்திட  முடிவுசெய்து எழுந்திடட் சீர்த்திருத்தவாதிகள் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்களேயாவர்.

அந்த மரியாதைக்குரிய அறைத்தூதர்கள் அனைவரிலும் இறுதியாக வருகை தந்த

இறைத்தூதரின் அழைப்பும் வாழ்க்கை வரலாறும் மனித வரலாற்றிலேயே நிகர் கானமுடியாத விதத்தில் இன்றுவரை பாதுகாப்பாக உள்ளன. இது இந்தப் பேரண்டப் படைப்பாளன் அல்லாஹ் மனித இனத்திற்குப் புரிந்திருக்கும் மாபெரும் உபகாரமாகும். முஹம்மது (ஸல்) வாழ்க்கை வரலாறு எவ்வளவு துல்லியமாக, ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது! இதனைப்போல் எந்த வரலாற்று நிகழ்ச்சியும் பதிவு செய்யப்படவில்லை. ஆண்ணலாரின் சொற்கள், செயல்கள்,  வாழும்முறை, தோற்றம், உருவம், நடை, உடை, பாவனைகள், பழக்க வழக்கங்கள், பேச்சு, கொடுக்கள் – வாங்கள், ஏன் – உண்ணல், பருகல், உறங்கள், விழித்தல், சிரித்தல், பேசுதல் வறை அவர்களின் அசைவு ஒவ்வொன்றும் பாதுகாப்பாக எழுதி வைக்கப்பட்டு விட்டது. சுருங்கச் சொன்னால், நமக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்துவிட்டுச் சென்ற பெரிய மனிதர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஆனபல் 1400 ஆண்டுகள் கழிந்த பின்னரும் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி நம்மால் முழமையாக  அறிந்துகொள்ள முடிகின்றது.

பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையை ஆய்வதற்கு முன்னால் இன்னொரு தனித்தன்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியின் முக்கியத்துவத்தையும் எந்தச் சூழ்நிலைகளில் அந்தப் பணி ஆற்றப்பட்டதோ. ஆந்த சூழ்நிலைகளில் மிக விரைவாக வளர்ச்சியடைந்து உச்சநிலைக்குச் சென்று விடும் அதே இயக்கங்கள்,  சாதகமற்ற சூழ்நிலைகளிpல் முற்றிலும் வாடி வதங்கி வலிவும், பொலிவும் இழந்த விடுகின்றன.

பொதுவாக இயக்கங்களின் நிலை முதலில், மக்களுக்கிடையே அதனை ஏற்றுக் கொள்ளத் தோதான கருத்துகளும், எண்ணப்போக்குகளும் வேர் பிடித்து வண்ணமிருக்கும். பின்னர் ஒரேடியாக (தீடீரென) ஏதேனும் ஒரு திசையிலிருந்து ஓர் இயக்கம் எழுந்துநிற்க்கும். உடனே மக்களின் அனுதாபம் முழவதும் அந்த இயக்கத்திற்குக் கிடைக்கும். இயக்கமும் சூடுபிடித்து வெற்றிகரமாக நடைப்போட ஆரம்பிக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் விடுதலை இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கள் பொதுவாக அயல்நாட்டு ஆட்சியாளர்களின் அநீதியாலும் இக்கிரமங்களாலும் வெறுப்படைந்திருப்பார்கள். அவர்களுடைய உள்ளங்களில் அந்த அயல்நாட்டு சக்திக் கெதிரான ஓர் உணர்வு எழுந்த வண்ணமிருக்கும். அந்த நேரம் பார்த்து துணிச்சலானதொரு மனிதர் எழுந்து நாட்டை விடுதலை செய்யக் கோரி முழக்கத்தை எழுப்பினால், ஆபத்துகளுக்கும், இழப்புகளுக்கும் அஞ்சி சிலர் மட்டுமே அம்மனிதருடன் ஒத்துழைப்பார்கள் என்றாலும் பெரும்பான்மை மக்களின் மனர்பூர்வமான அனுதாபங்கள் அந்த மனிதருக்குத்தான் – அந்த விடுதலை இயக்கத்திற்க்குத்தான் கிடைக்கும். இதேதான் பொருளாதாரப் புரட்சிக்காக எழும் இயக்கங்களின் நிலையும்! முக்கள் தமது நிர்ப்பந்தங்கள் மற்றும் பொருளாதார சுரண்டல்கள் புரிவோரின் அக்கிரமங்களின் காரணத்தால் வெறுப்படைந்து நிற்க்கின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் புரட்சிக்கான ஓர் இயக்கம் எழுந்தால், மக்கள் அனைவரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு விடுகின்றார்கள்.

ஆனால் மேற்சொன்ன நிலைகளும் முற்றிலும்மாறான சூழ்நிலையில் ஒரு இயக்கம் எழுந்தால்,  அதன் நிலை என்னவாகும் என்று சற்று சிந்திப்பாருங்கள். உதாரணமாக ஒரு சுதந்திரத்தை மிகப்பிரியமாக நேசிக்கின்றனர். இந்நிலையில் ஒருவர் எழுகின்றார். முக்களை நோக்கிக் கூறுகிறார்: நம் சுதந்திரத்தை: நடத்தையை நாம் துறக்க வேண்டும். ஒரு பேராற்றல் மிக்க சக்திக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்று கூறுகிறார். இந்த அடிப்படையில் ஒரு இயக்கத்தையும் நடத்துகிறார் என்றால் அவர் எத்தகைய துன்பங்கள், தொல்லைகள், எதிர்ப்புகளுக்கு ஆளாவார் என்பதனை சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாமிய அழைப்பை எத்தகைய பாதகமான சூழ்நிலைகளில் அண்ணலார்(ஸல்) அவர்கள் சமர்ப்பித்தார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளாதவரை, இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் – அதன் தளகர்த்தர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய அசல் முக்கியத்துவத்தையும், அவர்களுடைய மாபெரும் பணியின் உண்மையான மகத்துவத்தையும் நீங்கள் ஒரு சிறிய அளவில்கூடப் பார்க்கமுடியாது.

அண்ணலார் இஸ்லாமிய அழைப்பு விடுக்கத் தொடங்கியபோது உலகத்தின் நிலை

இஸ்லாமிய அழைப்பின் அசல் அடிப்படை கவ்ஹீத்-ஏகத்துவம் ஆகும். ஆனால் இந்த (நேர்வழியின்) ஒழியை அன்று அரபுலகம் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இழந்துவிட்டிருந்தது. ஏகத்துவத்தின் சரியான கருத்தோட்டம் மனித உள்ளத்தில் இல்லாதிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர், சரியான – பிழையற்ற – ஆதாரப்பூர்வமான இஸ்லாத்தை போதித்தவர்கள் அதன்பால் அழைத்தவர்கள் எண்ணற்றோர் வந்து சென்றுவிட்டிருந்தனர். இந்த பூமிப் பந்தில் மக்கள் வசிக்கின்ற ஒவ்வொரு பகுதியும் தூய, கலப்பற்ற ஏகத்துவக் கொள்கையின் செய்தியைப் பெற்றுவிட்டிருந்தது. ஆனால் மனித இனத்தின் துரதிர்ஷ்டம், அது இந்த செய்தியை மறந்து விட்டிருந்தது! தன் இச்சைக்கேற்றபடி சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ஜின்கள், வானவர்கள், தேவர்கள், தேவியர்கள், மலைகள், ஆறுகள், பிராணிகள், மனிதர்கள் பங்குடையவர்களாய், இணையானவர்களாய் எடுத்துக் கொண்டிருந்தத. இப்போது மனிதன் ஒரேயொருவனுக்கு அடிமைப்பட்டு வாi;வில் அமைதிகாண்பதற்கு பதிலாக,  எண்ணற்ற கடவுள்களின் மயக்கத்தில் சிக்கிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் உலகில் அரசியல் ரீதியாக இரு முக்கியம் சக்திகள் இருந்தன. (1) பாரசீகம், (2) ரோமபுரி.

பாரசீக (ஈமான்) நாட்டின் மாதமாக மஜுஸிய்யத் விளங்கியது. இந்த மஜுஸிய மதம் இராக்கிலிருந்து இந்தியாவன் எல்லைகள் வரை பiவியிருந்தது. ரோமாபுரியின் மதமாக கிறிஸ்துவம் விளங்கிற்று. அது ஐரோப்பாவையும் ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் சூழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த மதத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர சமய ரீதியாக யூத மதமும், பிராம்மணமும் கூட  முக்கியத்துவம் பெற்றிருந்தன. அவர்களில் ஒவ்வொறுவறும் தத்தம் கருத்துப்படி தாமே வாய்மையுடையவர்கள் என்று வாதிட்டனர்.

ஈரானில் நட்சத்திர பூஜை பரவலாக இருந்தது. அது தவிர மன்னர்கள், ஆட்சியாளர்கள் வணக்கத்திற்குரியவர்களாய்க் கருத்தப்பட்டனர். குடிமக்கள் பல்வேறு மட்டத்தில் இவர்களுக்கு வணங்கியும், சாஷ்டாங்கம் செய்துகொண்டும் இருந்தனர். அவர்களுடைய இறைமையைக் குறித்து ஏராள நூல்களும் தொன்றியிருந்தன. துதிப்பாடல்களும் பாடிய வண்ணமிருந்தனர். ஆக அந்த நாட்டில் ஏகத்துவக் கருத்தோட்டமே இருக்க வில்லை.

ரோமாபுரி அரசு

கிரேக்க நாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு ரோமபுரி அரசு உலகின் மிகப் பெரிய அரசு  என்று கருத்தப்பட்டு வந்தன. கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் இதே அரசு தன் வீழ்ச்சியின் கடைசியை அடைந்து விட்டிருந்தது.

இரசு நிர்வாகத்தில் ஒழுங்கினம், சுPர்கேடு, எதிரியைப் பற்றிய அச்சம், நாட்டுக்குள அமைதியின்மை, கடுமையான ஒழுக்க வீழ்ச்சி, எல்லை மீறிய உல்லாச வாழ்வு ஆக ரோமர்களுக்குள் உருவாகாத தீமை ஏதும் இருக்கவில்லை. முத ரீதியாக சிலர்  நட்சத்திரங்கள் மற்றும் தேவதைகளின் சிலைகளை வணங்குவதில் ஈடுப்பட்டிருந்தனர். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள் கூட ஏகத்துவக் கருத்தோட்டம் இல்லாதவர்களாய் இருந்தனர். அவர்கள் பிதா, மகன், பரிசுத்த ஆவி, மரியம் ஆகியோருக்கு இறைமை உண்டு என நம்பிக்கை கொண்டுரந்தனர். ஏராலமான சமயப் பிரிவுகள் உருவாக்கிவிட்டிருந்தன. அவையனைத்தும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன! கல்லறைகளை வணங்கும் வழக்கம் பரவலாக இருந்தது. பாதிரிமார்களுக்கும், மத குரமார்களுக்கும் சிர வணக்கம் (சஜ்தா) செய்யப்பட்டு வந்தது. போப்புகளும், அவர்களுக்குப் பின்னர் படிப்படியாக மத குருமார்களும் சமயத்துறையில் பொறுப்புகள் வகித்து வந்தவர்களும் தத்தம்வட்டாரங்களில் அரசு அதிகாரங்களை – ஏன், இறைமையதிகாரங்களையயே தம் கரங்களில் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு விஷயத்தை ஆகுமான தாய் ஆக்குகின்ற மற்றும் தடை செய்கின்ற அதிகாரங்களை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய சொல் இறைவனின் வாக்காகக் கருதப்பட்டு வந்தது. துறவறம் – உலகைத் துறந்து விடுதல், சமயப்பற்றின் உச்சக் கட்டமாகக் கருதப்பட்டிருந்தது. எல்லா வகையான இன்பங்களையும் விட்டு உடலை விலக்கி வைத்திருப்பது மிகப் பெரிய இறைவணக்கமாக கதருப் பட்டு வந்தது.

இந்தியா

இந்தியாவில் அப்போது சமய காலங்களில் புராணகாலம் எனப்படும் காலமே நிலவி வந்தது. இந்தப்புராண காலம் இந்தியாவின் சமய வரலாற்றிலேயே மிக இருண்ட காலமாகக் கருதப்படுகின்றது.  அப்போது பிராமணீயம் மீண்டும் ஆதிக்கம் பெற்று ஒங்கிக் கொண்டிருந்தது. புத்த மதத்தினர் ஏறத்தாழ வேருடன் அழித் தொழிக்கப்பட்டிருந்தனர்.  அந்தக் கால கட்டத்தின் தனித்தன்மை என்னவெனில் – இணைவைப்பே பரவலாய் இருந்தது. தேவதைகளின் எண்ணிகைப் பெருகிப் பெருகி முப்பது ழூன்று கோடியை எட்டி விட்டுருந்தது. வேதகாலத்தில் சிலை வணக்கம் வழக்கல் இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்தப் புராண காலத்தில் ஆலயங்களில் சிலை வணக்கம் பரவலாக இருந்தது.  ஆலயங்களில் கவனிப்பவர்கள் ஒழுக்கக்கேட்டின் முன் மாதிரிகளாக இருந்தனர். விறிவும், விளங்கும் ஆற்றலும் குறைந்த பொதுமக்களைச் சுரண்டுவது அவர்களின் வேலையாக இருந்தது.

இதே காலக்கட்டதில்தான் சாதி  வேற்றுமையும்  உச்ச நிலையில் இருந்தது. ஆனால் ஆரம்பக் காலங்களில் இத்தகைய வேற்றுமை இருக்கவில்லை. இந்த சாதி பாகுபாடு சமூகத்தின் அமைப்பு மழுவதையும் அழித்துவிட்டிருந்தது. நீதியையேகெபலை செய்யும் வகையிலமைந்த சட்டங்களை அவர்கன் (தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக) இயற்றிக் கொண்டுரந்தனர். அந்தச் சட்டங்களில் இனம், குடும்பம் ஆகியவற்றை கவனித்துத் தவறான பல சலுகைகள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்தனர். மது அருந்தும் வழக்கம் பரவலாக இருந்தது. இறைவனைத் தேடி குகைகளிலும் காடுகளிலும் மலைகளிலும் வாழ்நாளை கழிப்பது அவசியம் என்று கருதப்பட்டு வந்தது. மூடநம்பிக்கைகளும் தவறான கொள்கைகளும் உச்சத்தில் இருந்தன. பேய், பிசாசு, பூதம் பற்றிய நம்பிக்கைகளும் நூற்றுக்கணக்கான சகுணங்களும் மனித வாழ்வை இறுகிப் பிடித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வினோதப் பொருளும் கடவுளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவை ஒவ்வொன்றின் முன்னாலும் தலையைத் தாழ்த்தி விடுவதே சமயம் என்றாகி விட்டிருந்தது. தேவதைகள், பெண் தெய்வங்கள், சிலைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை கணிக்கவோ, மதிப்பிடவோ முடியாத அளவிற்கு அதிகமாகி விட்டிருந்தது.

அந்தக் கொடுமைக்கு முன்னால் ”சதி” அற்பம்

தேவதாசிகளின், பெண் பூசாரிகளின் ஒழுக்க நிலை மிகவும் வெட்கக்கேடாக இருந்தது. வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் இவையனைத்தும் மதத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததே! பெண்கள் சூதாட்டத்தில் பணயப் பொருளாக வைக்கப்பட்டனர். ஓரு பெண்ணுக்குப் பல கணவன்மார்கள் இருந்தனர். விதவைப் பெண் சட்ட ரீதியாகவே எல்லாவித இன்பங்களையும் அனுபவிப்பதிலிருந்து ஆயல் முழவதிலும் தடுத்து வைக்கப்பட்டாள். சுழூகத்தின் இந்த அருவருப்பான போக்கின் காரணத்தால் ஒரு பெண், தன் கணவன் இறந்த பின் உயிரோடு எரிந்து கருகி மடிந்து விடுவதையே (சதி) மேலாகக் கருதி, கணவருடன் சேர்ந்து தானும் எரியூட்டப்பட்டு விடுவதைச் சகித்துக்கொண்டாள். போரில் தாம் இறந்து  விடுவோம் என்றஞ்சிப் பெண்களை அவர்களுடைய தந்தை, சகோதரன், கணவன் ஆகியோரே தமது கரங்களால் பொண்று விடுவார்கள்! அதனைப் பெருமையுடன் பறைசாற்றியும் கொள்வார்கள்.

நிர்வாணமான ஆண்களையும் நிர்வாணமான பெண்களையும் வணங்கி வந்தார்கள், நிர்வாணமாக வணங்கும் வழக்கமும் நிலவிவந்தது. சமய விழாக்களில் மதுவருந்தி, தன்னுணர்வு அற்றுவிடுவார்கள்.  இவையனைத்தையும் நற்செயல் என்று கருதியே செய்து வந்தார்கள். ஆக ஒழுக்கம், மதம், சழூகக் கூட்டு வாழ்க்கை ஆகியவற்றைப்

பொறுத்த அளவில் இறைவனின் இந்தப் பூமி,  சாத்தானின் வலையில் மிக மோசமாகச் சிக்கிக் கொண்டிருந்தது.

யூதர்கள்

இறைமார்க்கத்தினைத் தாங்கி  நிற்பவர்கள் என்னும் ரீதியில் சீர்திருத்தப் பணியை அப்போது எவரிடமிருந்து எதிர்பார்த்திருக்க முடியும் என்றால் அதனை யூதர்களிடமிருந்து தான் எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் அவர்களுடைய நிலையும் மிகவும் மோசமானதாகி விட்டிருந்தது. அவர்கள் தமது நீண்ட வரலாற்றில் எத்தகைய பொடூரமான முற்றங்களையெல்லாம் புரிந்திருக்கிறார்கள் என்றால் – அக்குற்றங்களின் காரணத்தால்  அவர்கள் சீர்திருத்தப் பணி எதனையும் செய்யக் கூடிய அந்திஸ்திலேயே இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எந்த அளவிற்குக் குற்றவாளிகளாகி விட்டிருந்தார்கள் என்றால், அவர்களிடையே எப்போதாவது இறைத்தூதர் ஒருவர் வருகை தந்தால் அவரது அறிவுரைகளை அவர்கள் சகித்துக் கொள்ளமுடியாத அந்த அளவிற்கு குற்றம் புரிந்தவர்களாயிருந்தனர். அவர்கள் பல இறைத்தூதர்களைக் கொன்றுவிட்டும் இருந்தார்கள். அவர்கள் தமக்கு, இறைவனுடன் ஏதோ பிரத்யேகமான ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணத்தால் அவன், அவர்களை வேதனைப்படுத்தமாட்டான் என்றும் தவறான எண்ணத்தில் ஆழ்ந்து விட்டிருந்தனர். சவனத்தின் இன்பங்கள் அவர்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். நபித்துவத்தைளும் இதைத்தூத்துவத்தையும் அவர்கள் தம் சமுதாயச் சொத்து என்று கூறி வந்தனர்.

அவர்களுடைய மார்க்க அறிஞர்கள் மாபெரும் உலகாயதவாதிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருந்தனர். அவர்கள் தனவந்தாhகள் மற்றும் ஆட்சியாளர்களின் திருப்தியையும், உவப்பையும் பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் மார்க்கச் சட்டங்களை மாற்றியும், திரித்தும், கூட்டியும்,  குறைத்தும் வந்தனர். இறைவனின் சட்டங்களில் எது எளிதாகவும் தம் விருப்பத்திற்கேட்பவும் உள்ளதோ அதனைக் கைக்கொண்டு நடப்பார்கள். எது கடினமாகவும் விருப்பமில்லாததாகவும் உள்ளதோ அதனை விட்டு விடுவார்கள். தமக்குள் சண்டை சச்சரவிட்டுக் கொண்டு  செத்து மடிவது அவர்களுடைய அன்றாட வழக்கமாகி விட்டிருந்தது. அந்த செல்வத்தின் மீதான மோகம் கண்மூடித்தனமாக இருந்தது. அற்ப காசக்காக ஆயளையும் இழக்கத்தயாராய் இருந்தனர். இதனாலேயே அவர்களுடைய ஒழுக்க நிலை மிக பலவீனமடைந்து  விட்டிருந்தது. அவர்களிடையே இணைவைக்கும் கோட்பாட்டையொட்டிய சிலைவணக்கத்தின்  அறிகுறிகள்கூட தோன்றி விட்டிருந்தன.

மூட நம்பிக்கைகள், கட்டுக் கதைகள். தாயத்துக்கள், கங்கணக் கட்டுகள், மந்திர மாயங்கள், பில்லி சூனியம், பேய்விரட்டுதல் முதலான ஏராளமான தீமைகள் –  அவர்களிடையே புகந்து படிப்படியாக ஏகத்துவத்தின் அசல் கருத்தோட்டத்தைச் சிதித்து முற்றிலுமாக அழித்தொழித்து விட்டன. இந்நிலையில் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தின் தெளிவான கருத்தோட்டத்தைச்  சமர்ப்பித்தபோது, இதே யூதர்கள்தான் இந்த முஸ்லிம்களைவிட அரபுலக இணைவைப்பாளர்கள் எவ்வளவோ மேலானவர்கள் என்று கூறினார்.

அரபுலகத்தின் நிலை

அண்ணாலார் (ஸல்) வருகை தந்தபோது இந்த உலகில் நிலவி வந்த சமய, அரசியல் சூழ்நிலைகளை நோட்டமிட்டோம். இனி குறிப்பாக, அரபுகளின் நிலையையும் சற்று நோட்டமிட்டுக் கொள்வோம். ஏனொனில் இந்த அரபகம்தான் அல்லாஹ்வின் திருத்தூதர் தம் இயக்கத்தை ஆரம்பித்த இடமாகும். இந்த அரபுலகத்தின் நிலைமைகளைத்தான் அவர்கள் முதன் முதலாகச் சந்திக்க நேரிட்டது.

அரபு நாட்டின் பெரியதொரு பாகத்தில் அதாவது வாதில் குரா, கைபர் ஃபதக் ஆகிய பிரதேசங்களில் யூதர்கள் அதிகமாக வசித்து வந்தனர். மதீனா நகரத்தில்கூட யூதர்களின் ஆட்சி இருந்தது. அரபு நாட்டின் இதர பகுதிகளில் இணைவைக்கும் சடங்குகள் நடைபெற்று வந்தன. மக்கள் சிலைகளையும், கற்களையும், மரஞ்செடி கொடிகளையும், நட்சத்திரங்களையும், வானவர்களையும், ஜின்களையும் பூஜித்து வந்தனர். ஆனால் அல்லாஹ்வைப் (உண்மை இறைவனைப்) பற்றிய கருத்தோட்டமும் அவர்களிடையே இருக்கத்தான் செய்தது. அந்த உண்மையான இறைவனை அவர்கள் கடவுள்களின் கடவுள் என்றோ, அனைவரையும் விடப் கெரிய கடவுள் என்றோ ஏற்றுக் கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த நம்பிக்கை எந்த அளவிற்க்குப் பலங்குன்றி விட்டிருந்ததொன்றால், செயல் அளவில் அவர்கள் அல்லாஹ்வைத் தவிர தாங்கள் கடவுளாக்கிக் கொண்டிருந்த அந்தச் சின்னச் சின்ன கற்பனைக் கடவுள்களிடையேதான் சிக்கியுழன்று கொண்டிருந்தார்கள். அன்றாட வாழ்வில் இந்தச் சிறிய கடவுள்களெ(நம் உதவிக்குத்) தேவைப்படுகின்றன என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே அவர்கள் அந்தக் குட்டிக் கடவுள்களையே வணங்கி வந்தார்கள். அவற்றிடமே தம் நாட்டுகனையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும்படிக் கோரி வந்தார்கள். இந்த குட்டிக் கடவுள்களைத் திருப்தி செய்துவிடுவதால் அல்லாஹ்வும் மகிழ்ச்சி யுற்று விடுகின்றான் என்று அல்லாஹ்வைப் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

அவர்கள் வானவர்களை இறைவனின் பென் மக்கள் என்று கூறி வந்தார்கள். ஜின்களை இழறவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள்: அவனது நேசத்திற்குரியவர்கள்;: இறைமையில் பங்குடையவர்கள் என்று கருதினர். ஆதனாலேயே அவற்றை வணங்கியும் வந்தார்கள்;. ஆவற்றிடம் உதவி கோரினர். ஏவற்றையெல்லாம் அவர்கள் இறைமையில் பங்குடையவை என்று கருதினார்களோ – அவற்றையெல்லாம் சிலைகளாக வடித்து அவற்றை வணங்கி வந்தார்கள். சிலை வணக்கத்தின்மீது எந்த அளவிற்கு ஆர்வம் பெருகி விட்டது என்றால் எங்கேனும் ஒரு கல் கிடைப்பதைக் கண்டுவிட்டால் அதனைக்கூட வணங்கும்  அளவிற்கு மோகம் பெருக்கிவிட்டது. அதுவும் கிடைக்காவிட்டால் மண்னை தண்ணீரில் குழித்துப் பிண்டம் போன்று ஒரு உருவத்தைச் செய்து, ஆட்டுப் பாளைத் தெளித்து அதனை வளம் வர ஆரம்பித்து விடுவார்கள். ஆக அரபுகளிடம் ஏராளமான சிலைகள் இருந்தன. இந்த சிலைகளைத் தவிர அவர்கள் நட்சத்திரங்களையும் வணங்கி வந்தனர். பல்வேறு குலங்கள் பல்வேறு நட்சத்திரங்களை வணங்கி வந்தன. அந்த விண்மீன்களிடையே சூரியனுக்கும் சந்திரனுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்தது. ஜின்களும் பூதங்களும்கூட வணங்கப்பட்டன. ஆவற்றைப் பற்றி அவர்களிடையே விநோதமான கட்டுக் கதைகள் பிரபலமாக வழக்கில் இருந்தன. இவை மட்டுமின்றி பலப்பல இழிசடங்குகளும் மூட நம்பிக்கைகளும் அவர்களிடையே காணப்பட்டன.

இந்தச் சமய ரீதியான சீர்குலைவுடன் தமக்குள் ஒருவரோடுஒருவர் சண்டையிட்டுக் கொள்வது அவர்களின் பரவலான ஒரு வழக்கமாயிருந்தது. மிக மிகச் சபதபரண விஷயங்களுக்கெல்லாம்சண்டை மூண்டு விடும். அந்தப் போர் பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து நடக்கும். சூதாடு வதும், மது அருந்தும் பழக்கமும், இந்த விவகாரங்களில் அவர்களுடன் வேறெந்தச் சமுதாயமும் போட்டியிட முடியாது என்னும் அளவிற்கு அவர்களிடையே பரவலாக இருந்தன.

மதுவைப் புகழ்வதும் அதன் காரணமாக உருவாகும் தீய செயல்களைப் பெருமையுடன் எடுத்துரைப்பதும் அவர்களுடைய கவிதைகளில் நிறைந்து காணப்பட்டன. இவை மட்டுமின்றி வட்டி வாங்கி துன்பதும், கொலை, கொள்ளை, திருட்டு, ஈவிரக்கமில்லாமை, ரத்தம் சிந்தல், விபசாரம் மற்றும் இன்னபிற தீய செயல்கள் அனைத்துமாகச் சேர்ந்து அவர்களை மனித வடிவில் வாழும் மிருகங்களாய் ஆக்கிவிட்டிருந்தன. அவர்கள்  தம்  பெண்  குழந்தைகளை உயிரோடு புதைத்து வந்தார்கள். வெட்கமின்மையும், மானங்கெட்ட போக்கும் அதிகரித்துவிட்டிருந்தன.  ஆண்களும், பெண்களும் ஆடைகளின்றி நிர்வாணமாக இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த அநாகரீகச் செயலை மதக் கடமை என்று கருதி வந்தனர். ஆக – சமயம், ஒழுக்கம், கூட்டு வாழ்க்கை, அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அரபுகள் வீழ்ச்சியின் படுகுழியில் விழுந்து விட்டிரந்தனர்.

இஸ்லாமிய இயக்கத்திற்கு ஏற்புடையதாய் அமைந்திருந்த அரபுகளின் சிறப்பியல்புகள்

அப்போது அரபுவகம் மட்டுமில்லாமல் உலகம் முழவதுமே காரிருளில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்த காரணத்தால் இருள்கள் அனைத்தையும் போக்கி, வழி தவறித் தத்தளிக்கும் உலக மக்களுக்கு இறை வழியைக் காட்டுகின்ற வைகறை வெளிச்சம் ஒன்று தேவைப்பட்டது. இந்த வைகறையின் உதயத்திற்காக உலகமனைத்திலும் அரபு நாட்டை மட்டும் அல்லாஹ் ஏன் தோடந்தெடுத்தான் என்பதைக் குறித்து சிந்சிக்கத்தக்க சில விஷயங்கள் உண்டு.

உலகமனைத்திற்கும் நேர்வழியின் இறுதிச் செய்தியை அளிப்பதற்காக முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அண்ணலாரின் அழைப்பு உலகம் முழவதிலும் பரவ வேண்டியிருந்தது. இம்மக்கத்தான பணியைத் தொடர்ந்து செய்து வரக் கூடிய சீர்திருத்தவாதிகளின் குழு ஒன்றை தாம் உலகில் இருக்கும்போதே (தமது) ஆயுளிலேயே) உரு வாக்கிவிட்டுச் செல்வது அல்லாஹ்வின் தூதருக்கு அவசியமானதாயிருந்தது.

இந்த முக்கியப் பணிக்காக எத்தகைய சிறப்பியல்புகள் தேவைப்பட்டனவோ அவையனைத்தும் அரபு மக்களிடையே மிக உயப்ந்த அளவிலும் பரவலாகவும் காணப்பட்டன. மேலும் அரபு நாட்டின் பூகோள ரீதியான அமைவிடம் எத்தகையதென்றால், அது உலகின் ஏறத்தாழ மையமான – வசதிமிக்க ஒரு அமைவிடமாய் இருந்தது. இவ்விதம் இந்தச் செய்தியை நாலா திசைகளிலும்  பரப்பிட நிறைய வசதி வாய்ப்புகள் அங்கு இருந்தன.

இவற்றுடன் அரபு மொழியின் விசாலத்தன்மையும் தனித்தன்மையும் எத்தகையதென்றால் ஒரு கருத்தை அரபு மொழியில் எந்த அளவிற்குச் சுலபமாக – சிரமமின்றி சமர்ப்பிக்க முடியுமோ அந்த அளவிற்குச் சுலபமாகவும் எளிதாகவும் உலகின் வேறெந்த மொழியிலும் சமர்ப்பிக்க முடியவில்லை.

அரபுகளின் பெரியதொரு தனித்தன்மை என்ன வென்றால் அவர்கள் அடிமைப்பட்டவர்களாக, எவரது ஆளுகைக்கும் உட்பட்டவர்களாக இருக்கவில்லை. ஆடிமைப்பட்டிருப்பதன் காரணத்தால் உள்ளத்தில் ஏற்படக்கூடிய சிந்தனை வீழ்ச்சி, தாழ்வு மனப்பான்மை, உயர்ந்த மனிதப் பண்புகளில் ஏற்படும் சரிவு  ஆகியவற்றை விட்டு அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். அவர்களைச் சுற்றி நாலா பக்கங்களிலும் ஈரான், ரோமாபுரி ஆகிய வல்லரசுகளின் பெரும் அரசாட்சிகள் இருந்தன. ஆனால் இவற்றில் எதுவுமே அரபுகளைத் தம் அடிமைகளாக ஆக்க முடியவில்லை.

அவர்கள் மிகுந்த வீரமுடையவர்களாய்த் திகழ்ந்தனர். ஆபத்துக்களை எப்போதும்

பொருட்படுத்துவனார்கள். உத்வேகம் நிறைந்தவர்களாக இருந்தனர்.மன உறுதி

மிக்கவர்களாகவும் தெளிவாhன உள்ளமுடையவர்களாகவும் விளங்கினர். உள்ளத்தில்

இருக்கும் கருத்தையே உதட்டிலும் வெளிப்படுத்துவார்கள். அடிமைத்தனமும்

கோழைத்தனமும் நிறைந்த சமுதாயங்களிடையே பரவலாகக் காணப்படுகின்ற

ஏமாற்று, மோசடி, சதிசெய்தல், கூட இருந்தே குழி;பறித்தல் ஆகிய நோய்களை

விட்டு அவர்கள் தூய்மையாக இருந்தனர். பொதுவான அறிவு, விளங்கும் ஆற்றல்

ஆகியவற்றில் உயர்ந்த தரமுடையவர்களாய்த் திகழ்ந்தனர். அறிவுத் திறன் மிக்கவர்களாய் விளங்கினர். நுட்பமான விஷயங்களையும் விளங்கிக் கொள்ளும்

துகுதியுடையவர்களாய் இருந்தனர். கூர்மையான நினைவாற்றல் உடையவர்களாய் இருந்தனர். உலகில் அப்போதிருந்த சமுதாயங்களிலேயே நினைவாற்றலில் நிகரற்றவர்களாக அவர்கள் திகழ்ந்தார்கள். தாராளமனம் உடையவர்களாய், பரோபகாரப் பண்புடையவர்களாய் திகழ்ந்தார்கள், தன்மானம், சுயமரியாதையுடையவர்களாய் இருந்தனர். தம்மை அவமானப்படுத்துவதை கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தனர். பாலைவனதின் கடுமை நிறைந்த வாழ்க்கைக்குப் பழக்கமான மக்களாக (Pசயஉவiஉயட Pநழிடந) இருந்தனர். ஒரு கருத்தை ஏற்றுக் கொண்ட பின்னால், வீட்டில் அமர்ந்த வண்ணம் அதை வாயால் வெறுமனே பாராட்டிக் கொண்டிருப்பது அவர்களால் முடியாத காரியமாய் இருந்தது. அதற்கு முற்றிலும் மாறாக, அவர்கள் அந்தக் கருத்தை ஏந்தியவண்ணம் எழுவார்கள். நாளடைவில் தம் வாழ்க்கை முழவதையும் தமக்கு விருப்பமான அப்பணியில் அர்ப்பணிதது விடுவார்கள்.

அரபுகளைச் சீர்திருத்துவதில் இருந்த சிரமங்கள்

ஒருபுறம் அரபுநாடு,அரபுகளின் மொழி,அரபுக் குடிமக்கள் இந்த விசேடப் பண்புகள் காணப்பட்டன. அவற்றின் அடிப்படையில்தான் அல்லாஹ், தன் இறுதித் தூதை இந்த நாட்டின் மக்களிடையே அனுப்பிட முடிவு செய்தான்.ஆனால் அதே நேரத்தில் மறுபுறம் இந்தத் சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்காக அண்ணலார் (ஸல்) சகித்துக் கொள்ள நேரிட்ட சிரமங்களும் குறைவானவையாய் இல்லை.

ஒரு பணியின் மகத்துவத்தை ஆய்ந்திட அது எந்தச் சூழ்நிலையில் ஆற்றப்பட்டது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம் என்று இந்நூலின் தொடக்கத்திலேயே எழுதியிருந்தோம். எனவே இஸ்லாமிய இயக்கம் எந்தக் காலகட்டதில் எழுந்த வெற்றியடைந்ததோ அந்தக் காலகட்டதைக் கருத்தில் கொண்டு  பார்க்கும்போது அது உலக வரலாற்றிலேயே மகாத்தான ஒரு சாதனையாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் அண்ணலார் எந்தச் சமுதாயத்தை உலகின் தலைமைப் பெறுப்புக்காக உருவாக்கினார்களோ அதற்காகப் பலவிதமான இன்னல்களையும் சிரமங்களையும் சமாளித்து வென்றார்களோ அது ஒர் அற்புதத்திற்குச் சற்றும் குறைந்தல்ல.

அரபுச் சமுதாயத்தின் இந்த பிரத்யேகப் பண்புகளை தனிதன்மைகளை அறியாதவரை, அல்லாஹ்வின் இறுதித் தூதர் தம் கரங்களால் ஆற்றிய மாபெறும் சீர்திருத்தப் பணியை மதிப்பிடுவதற்கு முடியாது. அந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்திட  சில தடைக்

கற்கல் இருந்தன. அவற்றில் பெறும் பெறும் தடைக் கற்களாகக் கூறத்தக்கன இவையாகும்.

அரபுச் சமுதாயம் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு சமுதாயம் எனச் சொல்லும்படியே இருந்தது.

இறைவனின் உள்ளமை, அவனது பண்புகள் பற்றிய சரியான கருத்தோட்டம், இறைத் தூதுத்துவத்தின் தன்மை, முக்கியத்துவம், வஹீ – வேத வெளிப்பாட்டின் கருத்து, இறை வேதத்தின் பொருளைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல், மறுமைக் கருத்தோட்டம், இறைவணக்கத்தின் சரியான பொருள் ஆகியவற்றைத் தெரிந்தும் தொரியாதவர்களாய் இருந்தனர். மேலும் அவர்கள் தம் முன்னோர்களின் சடங்கு சம்பிரதாயங்களை எந்த அளவிற்குக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர் என்றால், அவற்றிலிருந்து ஒரேயோர் அங்குலம் விலகிச் செல்வதைக்கூட அவர்களால் சகித்துக்கொள்ள முடியாதிருந்தது. அந்த அளவிற்குக் கண்மூடித்தனம் இருந்தது.அதிலும் குறிப்பாக இஸ்லாம் சமர்ப்பித்த செய்தியும் மார்க்கத்திற்கு முற்றிலும் எதிரானதாய் இருந்தன. இணைவைப்பின் காரணத்தால் தோன்றக்கூடிய மனநோய்கள் அனைத்தும் அவர்களுக்குள் இருந்தன.மூடநம்பிக்கை அவர்களின் அறிவைப் பயனற்றதாக்கி விட்டிருந்தது.

அரபு சமுதாயத் தனித்தன்மை சுழல், பழிவாங்கள், போர்.

உட்பகையும், பூசலும் பரஸ்பரச் சண்டைகளும் அச்சமுதாயத்தின் தனித்தன்மையைப் போல் ஆகிவிட்டிருந்தன. இவற்றின் காரணத்தால் ஒரு பிரச்சனையைக் குறித்து கருத்தார்ந்த முறையில் – பொறுப்புணர்வோடு சிந்திப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கவில்லை. போர், உள்நாட்டுக் குழப்பம் ஆகியவற்றின் பாணியில் தான் அவர்கள் சஜந்தித்த வண்ணமிருந்தனர். பொதுவாக, கொலை, கொள்ளை, சூறையாடல் ஆகியனதாம் அவர்களின் வருவாய்க்கான வழிகளாய் இருந்தன.

நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அழைப்பை அவர்களுக்கு விடுத்தபோது, அரபு மக்கள், அதற்கு முன்பு எப்போதும் அவர்கள் கேட்டிராத, எண்ணியும் பார்த்திராத ஒரு செய்தியை அவர்கள் சமர்ப்பிக்கப் பெற்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தச் செய்தி அவர்களுடைய முன்னோர்களின் நடைமுறை, அவர்கள் இதுவரை தம் நெஞ்சோடணைத்துப் போற்றி வந்த எண்ணங்கள், கருத்துக்கள், சடங்குகள் ஆகியவற்றுக்கும் முற்றிலும் எதிரானதாய் இருந்தது. ‘சண்டைகளை நிறுத்துங்கள்! அமைதி சமாதானத்துடன் வாழ்ந்திடத் தீர்மானியுங்கள்! கொலை, கொள்ளை சூறையாடல் புரிவது தவறு: தவறான சிந்தனைகளையும், கெட்ட பழக்கங்களையும், அனைத்துக்கும் மேலாக விலக்கப்பட்ட வழிகளில் பொருளீட்டுவதையும் விட்டு விடுங்கள்! என்று இந்த அழைப்பு கோரியது, இத்தகைய ஓர் அழைப்புக்கு ஆதரவளிக்க அவர்களை ஆய்த்தப்படுத்துவது மிக்க கடினமான ஒரு காரியம் என்பது வெளிப்பட்டவை.

ஆக, இந்த உலகம் முழுவதின் சூழ்நிலை, அரபு நாட்டின் சூழ்நிலை, அண்ணலார் சந்திக்கவிருந்த சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், தனித்தன்மைகள் ஆகிய இவை எவற்றிலும் ஒன்றுகூட இந்த அழைப்புக்குச் பலன்கள், விளைவுகள் தெளிவரத் தொடங்கிய போதுதான் இது உறங்கும் உள்ளங்களைத் தட்டியெழுப்பி தன்பால் ஈர்த்துக் கொள்ளக்கூடிய அழைப்பு பாதகமான சூழ்நிலையையும் தனக்குச் தாசகமாக்கி கொள்ளக்கூடிய அழைப்பு என்று தெரியவந்தது.

இதனை வருனித்த பிரபல உருதுக்கவிஞர் ஹாலி அவர்கள் இவ்வாறு பாடினார் :

அந்த நேர்வழியின் முழக்கம்

ஓர் இடியோசையாக எழுந்தது…!

அரேபியாவின்

அனைத்து மூலை முடுக்குகளையும்

அது அதிர வைத்தது…!

மக்கள் மனங்களில்

மகத்தானதோர் உத்வேகத்தை

மலரச் செய்தது…!

ஒரே ஒரு முழக்கம்தான்!

உறங்கிக் கிடந்த நகரம்

உற்சாகத்துடன் எழுந்தது…!

திரும்பிய திசையெங்கும்

இந்தத்

திருச்செய்தியின் சர்ச்சை…!

மணல்வெளிப் பாலைகளில்

மலை முகடுகளில்

இந்தச் சத்திய நாதம்

எதிரொலித்துக்கொண்டே இருந்தது…!

இந்த அற்புதச் சாதனையைக் காணும்போது தான் இதனை நிகழ்த்திக்காட்டிய அந்த மாமனிதரைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும், அவர் கொண்டுவந்த சமர்ப்பித்த அந்த அழைப்பை விரிவாகப் பார்த்துப் புரிந்து கொள்ளவும், மனித மனம் ஆசைப்படுகின்றது.

இனிவரும் அத்தியாயங்களில் இந்த விவரங்களே உங்கள் முன் வைக்கப்படுகிறது.

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம்

குடும்பம்

முஹம்மது (ஸல்) அவர்களின் கண்ணியமிக்க தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். இவர் அப்துல்லா முத்தலிபின் மகன் ஆவார். இவர்களுடைய வம்சாவளித் தொடர் ஏறத்தாழ அறுபது தலைமுறைகளைக் கடந்து நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் nருமானார் நபி (அலை) அவர்களைச் சென்றடைகிறது. அண்ணலாருடைய குலத்தின் பெயர் குறைஷ்  என்பதாகும். இது அரபுக் குடும்பங்கள் அனைத்திலும் மிகுந்த கண்ணியமும் சிறப்பும் வாய்ந்த தாகக் கருதப்பட்டது. அரபுகளின் வரலாற்றில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கண்ணியத்திற்குரியவர்களாயும் செல்வாக்குடையவர்களாயும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக நஸ்ரு, ஃபத்ஹ்ரு, குசை பின் கிலாப் ஆகியோர். குசை தமது காலத்தில் புனித கஅபாவின் நிர்வாகப் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். இவ்விதம் அவருடைய மதிப்பு இன்னும் அதிகரித்து விட்டது. குசை பெரும் பணிகள் பல ஆற்றினார். எடுத்துக்காட்டாக ஹஐ; பயணிகளுக்கு நீர் புகட்டவும் அவர்களுக்கு விருந்துபசாரம் செய்யவும் ஏற்பாடு செய்தார். இந்தப் பயணிகளை  குசைக்குப் பின்னர் அவரது குடும்பத்தார் செய்து வந்தார்கள். இந்த திருப்பணிகளைச் செய்து வந்தாலும் இறையில்லம் கஅபாவின் நிர்வாகப் பொருப்பாளர்களாக இருந்து வந்த காரணத்தாலும் குறைஷிகளுக்கு அரபுகள் அனைவரிடையேயும் கண்ணியமும் முக்கியத்துவமும் கிடைத்துவிட்டிருந்தது.

பொதுவாக அரபுகளிடையே கொலை. கொள்ளை, ஆகியன பரவலாக வழக்கிலிருந்து வந்தன. அரபு நாடு முழவதும் பாதைகள் பாதுகாப்பாய் இருக்கவில்லை ஆனால் புனித காபாவுடன் இருந்த தொடர்பின் காரணத்தாலும், ஹஐ; பயணிகளுக்குச் சேவை செய்து வந்த காரணத்தாலும் குறைஷிகளின் வானிவக் குழுக்களை மட்டும் எவரும் கொள்ளை அடிப்பதில்லை. அவர்கள் அச்சமின்றித் தம் வாணிப பொருட்;களை ஓரிடத்திதிலிருந்து மற்றோர் இடத்திற்க்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

அபூலஹப்

________________________________________

அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பத்து அல்லது பன்னிரண்டு புதல்வர்கள் இருந்தனர். ஆனால் நிராகரிப்பு அல்லது இஸ்லாத்தின் காரணத்தால் அப்பன்னிருவரில் ஐந்து பேர் மிகப் பிரபலமானவர்களாய் திகழ்கின்றனர். ஓருவர் அண்ணலாரின் கண்ணியத்திற்;குறிய தந்தையாரான அப்துல்லா அவர்கள். இரண்டாமவர், இஸ்லாத்தைத் தழுவாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அண்ணலாறை பராமரித்து வந்த அபூதாலிப் அவர்கள். மூன்றாமவர் ஹம்ஸா(ரலி) அவர்கள். நான்காமவர் அப்பாஸ் (ரலி) அவர்கள் அண்ணலாரின் இந்த இரு தந்தையரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றனர். ஐந்தாமவன் அபூலஹப். இவன் இஸ்லாத்தின் வரலாற்றில் இஸ்லாத்துடன் பகைமை பாரட்டும் போக்கிற்கு மிகவும் பிரசித்தி பெற்றவனாவான்.

ஆப்துல்லாஹ், ஸஹ்ரா குலத்தைத் சேர்ந்த வஹ்ப் பின் அப்துமனாஃப் என்பவரின் மகள் ஆமினாவை மணந்துக் கொண்டார். குறைஷிக் குடும்பத்தில் இந்த ஆமினா பெரும் சிறப்பு வாய்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார். துpருமணத்தின்போது அப்துல்லாஹ்வின் வயது ஏறத்தாழ பதினேழு. திருமணத்திற்குப் பிறகு குடும்ப மரபுக்கேற்ப மூன்று நாட்கள் வறை அப்துல்லாஹ் தமது மாமியார் வீட்டில் இருந்தர். அதன் பிறகு தமது ஊரான ‘மக்கா’ திரும்பினார்.

இரண்டு மாதம் களித்து வாணிபத்திற்காக ஷாம் (சிரியா) தேசம் சென்றுவிட்டார். தம் வணிகப் பயணத்திலிருந்து திரும்பி வரும்போது மதீனா நகரில் நோய்வாய் பட்டு அங்கேயே இறப்பெய்திவிட்டார். அப்போது அன்னை ஆமினா அவர்கள் கருவுற்றிருந்தார்கள்.

பிறப்பு

ரபீஉல் அவ்வல் மாதம் 9ஆம் தேதி திங்கட் கிழமை – கி.பி. 571 ஏப்ரல் 20ஆம் தேதியின் பாக்கிய மிக்க அந்தக் காலை நேரத்தில்தான்- எவருடைய வரவால் உலகம் முழவதிலும் மண்டிக்கிடந்த இருள்கள் அனைத்தும் அகல வேண்டியிருந்ததோ, இறுதி நாள்வரை இப்பூமியில் வசிக்கும் மாந்தர் அனைவருக்கும் இப்பேரண்டத்தின் அதிபதியாம் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையான நேர்வழியின் வெளிச்சம் எவரால் கிடைக்க வேண்டியிருந்ததோ அந்தப் பெரும்பேறுடைய மாமனிதர் பிரந்தார். அவர் தந்தையோ அவர் பிறப்பதற்கு முன்பே இறையடி சேர்ந்து விட்டிருந்தார். எனவே அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப், ‘முஹம்மத்’ என்று பெயர் சூட்டினார்.

வளர்ப்பும் குழந்தைப் பருவமும்

அண்ணலாருக்கு அவர்களுடைய கண்ணியத்திற்குரிய தாயார் ஆமினா அவர்களே முதன்முதலாகப் பாலூட்டினார்கள். அவர்களுக்குப் பின் அபூலஹபின் பணிப்பெண் சுவைபா பாலூட்டினார்கள். அந்தக் காலத்தில் நகரத்தின் பிரமுகர்களும் செல்வந்தர்களும் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டிடவும் அவர்களை வளர்த்திடவும் கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இருந்த செவிலித்தாய்களிடம் அனுப்பி வந்தனர். அவ்விடங்களிலுள்ள திறந்த வெளிகளின் தூய்மையான காற்றை சுவாசித்த வண்ணம் வசித்து, குழந்தைகள் ஆரோக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் மிகத் தூய்மையான அரபி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான் இவ்வாறு செய்துவந்தனர். அரபு நாட்டின் கிராமங்களில் பேசப்படும் மொழி, நகரங்களில் பேசப்படும் மொழியைவிட மிக அதிகத் தூய்மை உடையதாகவும் சிறந்ததாகவும்  கருதப்பட்டு வந்தது. மேற்சொன்ன மரபுக்கேற்ப கிராமத்துப் பெண்கள் நகரத்திற்கு வந்து, அங்குள்ள குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள்.

இவ்வாறே அண்ணலார் (ஸல்) பிறந்த சில நாட்களுக்குப் பிறகு ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த சில பெண்கள் வளர்ப்புக் குழந்தைகளைத் தேடி மக்கா நகரத்திற்கு வந்தார்கள். அவர்களிடையே ஹலீமா சஅதிய்யா என்னும் பெண்மணியும் இருந்தார். இவர் வேறெந்தக் குழந்தையும் கிடைக்காத நிலையில் நிர்ப்பந்தமாக ஆமினாவின் அனாதைக் குழந்தையையே எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நற்பாக்கியம் பெற்ற பெண்மணி ஆவார்.

ஈராண்டுகளுக்குப் பிறகு ஹலீம் சஅதிய்யா அண்ணலாரைத் திரும்பவும் அழைத்துவந்தார். ஆனால் அந்த நேரத்தில் மக்கா நகரில் ஏதோ ஒரு நோய் பரவியிருந்தது. எனவே ஆமினா அவர்கள் அண்ணலாரை மீண்டும் செவிலித்தாய் ஹலீமாவுடன் மீண்டும் கிராமத்துற்கு அனுப்பி விட்டார்கள் அங்கு அண்ணலார் (ஸல்) ஏறத்தாழ ஆறு வயது வரை இருந்தார்கள்.

அண்ணலாரின் ஆறாவது வயதில் அவர்களுடைய அன்னையார் மதீனாவுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். அநேகமாக தமது கணவரின்அடக்கத் தலத்தை சந்திப்பதற்காக அங்கு அவர்கள் சென்றிருக்கலாம். ஆல்லது அங்கிருக்கும் தமது உறவினர் எவறையாவது சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம். ஆன்னை ஆமினா அவர்கள் அங்கு ஏறத்தாழ ஒரு மாதம் வரை தங்கியிருந்தார்கள். மதீனாவிலிருந்து திரும்பும்போது வழியில் அபுவா என்னும் இடத்தில் அன்னை ஆமினர் அவர்கள் காலமாகி விட்டார்கள் அங்கேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டாக்கள்.

அன்னையின் மறைவிற்குப் பின்னால் அண்ணலாரைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பை அப்துல் முத்தலிப் அவர்கள் ஏற்றார்கள். அப்துல் முத்தலிப் அவர்கள் அண்ணலாரை  எப்போதும் தம்முடனேயே வைத்திருப்பார்கள். அண்ணலாரின் எட்டாவது வயதில் அப்துல் முத்தலிப் அவர்களும் இறந்து விட்டார்கள். இறக்கும் தருவாயில் அவர்கள், தமக்குப்பின் அண்ணலாரைப் பராமரிக்கும் பொறுப்பை தமது புதலாவர் அபூதாலிப் அவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். அபூதாலிப் அவர்களும் அண்ணலாரின் தந்தை அப்துல்லாஹ் அவர்களும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஆவர். இந்தக் காரணத்தாலும் அபூதாலிப் அவர்கள் அண்ணலாரின் மீது அளப்பரிய நேசம் கொண்டிருந்தார்கள். அண்ணலாரின் முன்பு தம்முடைய குழந்தைகளைக் கூடப் பொருட்படுத்துவதில்லை. உறங்கும்போதும் அண்ணலாருடன் தான் உறங்குவார்கள். வெளியே செல்லும்போது அண்ணலாரை உடன் அழைத்துக் கொண்டுதான் செல்வார்கள்.

அண்ணலாருக்குப் பத்து அல்லது பனனிரண்டு வயதிருக்கும். அப்போது அவர்கள் சமவயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஆடு மேய்த்தும் இருக்கின்றார்கள். அரபு நாட்டில் இந்த ஆடு மேய்க்கும் பணி இழிவானதாகக் கருதப்படவில்லை. கண்ணியமும் செல்வாக்கும் மிக்க குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்கூட ஆடு மேய்த்து வந்தார்கள்.

அபூதாலிப் வாணிபம் புரிந்து வந்தார். குறைஷிகளின் வழக்கப்படி ஆண்டுக்கொருமுறை சிரியா தேசத்திற்க்குச் செண்றுவந்தார். அண்ணலாருக்குப் பன்னிரண்டு வயதிறுக்கும்போது அபூதாலிப் சிரியா தேசத்திற்;குப் பயணம் செல்ல முற்பட்டார். பயணம் செய்வதில் இருக்கும் சிரமங்களைக் கருதி அண்ணலாரைத் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஆயினும் அழைத்துச் செல்லவில்லை என்றால் அண்ணலாரின் உள்ளம் நோகும் என்பதை உணர்ந்தார். அவ்வாறே அண்ணலார் அபூதாலிப் அவர்களை மறித்து, கட்டிப்பிடித்து உடன் புறப்பட முறன்டு செய்தார்கள். எனவே அவர்களைத் தம்முடன் அழைத்துச் சென்றார் அபூதாலிப்.

நபித்துவத்திற்கு முன்னர் முஹம்மத் (ஸல்) அவர்கள்

ஃபிஜார் யுத்தம்

இஸ்லாத்தின் எழுச்சிக்கு முன்னர் அரபுகளிடையே முடிவேயில்லாத போர்கள் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. அத்தகைய போர்களில் மிக அபாயகரமானதும், பிரபலமானதுமான ஒரு போர்தான் ஃபிஜார் போர் ஆகும். இந்தப் போர் குறைஷிக் குலத்தாருக்கும் கைஸ் குலத்தாருக்கும் இடையே நடைப்பெற்றது. இந்தப் போரில் குறைஷிகள் பக்கம் நியாயம் இருந்த தால் அண்ணலாரும் குறைஷிகளின் தரப்பில் இந்தப் போரில் கலந்து கொண்டார்கள். ஆனால், அண்ணலார் (ஸல்) எவருக்கெதிராகவும் தம் கரத்தை ஓங்கவில்லை. இந்தப் போரில் முதலில் கைஸ் குலத்தார் வெற்றி பெற்றார்கள். பின்னர் குறைஷி குலத்தார் வெற்றி பெற்றார்கள். இறுதியில் சமாதான உடன்படிக்கையுடன் போர் முடிந்தது.

சீர்திருத்தச் சங்கம் – ஹில்ஃபுல் ஃபுளூல்

இவ்விதம் அன்றாடம் நடைப்பெற்று வந்த போர்களினால் ஏராளமான குடும்பங்கள் நாசமாயின. பகலிலும் அமைதியில்லை; இரவிலும் நிம்மதியில்லை. இந்த றிலைமையினால் துன்பமுற்று ஃபிஜார் போருக்குப் பிறகு நன்மையே நாடுவோர் சிலர் ஒரு சீர்திருத்த இயக்கத்தை தொடங்கினார்கள். அண்ணலாரின் பெரிய தந்தையருள் ஒருவரான ஸுபைர் பின் அப்துல் முத்தலிப் என்பவர் இனி றிலைமைகளைச் சீர்திருத்திட ஏதேனும் செய்தாக வேண்டும் என்னும் யோசனையைச் சமர்ப்பித்தார். எனவே, குறைஷி குலத்தின் பெரியவர்கள் எல்லாம் ஒன்று திரண்டனர்.

அவர்களுள் ஒர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் வருமாறு:-

1.நாட்டிலிருந்து அமைதியின்மையை, பாதுகாப்பற்ற நிலையைப் போக்குவோம்.

2.பிராணிகளைப் பாதுகாப்போம்.

3.ஏழைகளுக்கு உதவி புரிந்து வருவோம்.

4.குற்றமற்றவர்கள், அநீதிக்குள்ளானவர்களை ஆதரிப்போம்.

5.அக்கிரமக்காரன் எவனையும் மக்கா நகருக்குள் வசிக்க விடமாட்டோம்.

அண்ணலார் (ஸல்) அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் பங்கு கொண்டார்கள். இதில் பங்கு பெறுவது அவர்களுக்குப் பெறும் விருப்பமானதாயிருந்தது. எனவே தாம் நபியான பிறகு அண்ணலார் (ஸல்), ‘இந்த ஒப்பந்தத்திற்குப் பகரமாக எனக்குச் சிவப்பு ஒட்டகங்கள் தரப்பட்டாலும் கூட நான் வாங்கிக் கொள்ளமாட்டேன். இன்று கூட அத்தகைய ஓர் ஒப்பந்தத்திற்காக என்னை எவரேனும் அழைத்தால் நான் அதற்கு உடன்படத் தயாராக உள்ளேன்’ என்று கூறினார்கள்.

கஅபாவின் நிர்மாணம்

கஅபா கட்டிடம் நான்கு சுவர்களாக மட்டுமே இருந்தது. அந்தச் சுவர்களும் ஒரு மனிதனின்  அளவிற்கே உயரமாக இருந்தன. அதற்கு முகடும் கிடையாது. மேலும் அந்தக் கட்டிடம் பள்ளத்தில் இருந்தது. மழைக்காலத்தில் நகரத்தின் தெருத் தண்ணீர்ரெல்லாம் சேர்ந்து வடிந்து கஅபாவின் பக்கமே வந்து கொண்டிருந்தது. அந்தத் தண்ணிரைத் தருத்து நிறுத்துவதற்காக அனை கட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த அணை கரைந்து உடைந்து போவதும் அந்த இடத்தில் தண்ணீர் நிரம்பி விடுவதும் வழக்கம். இதனால் கஅபாவின் கட்டிடம் சேதமடைந்து வந்தது. எனவேஅந்த கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுப் புதிதாக ஒரு வலிமைமிக்க கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று முடிவ செய்யப்பட்டது. குறைஷிகள்

அனைவரும் சேர்ந்து கட்டப்பணியை ஆரம்பித்தார்கள். பல்வேறு குலங்களும் கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளைக் கட்டுவதில் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டார்கள். எவரும் கட்டடப் பணியில் பங்கு பெற்றதற்கான சிறப்பினை இழக்கக்கூடாது என்பதற்காகவே  அவ்வாறு செய்தார்கள்.

ஆனால் ஹஜருல் அஸ்வத்ழூ எனும் கல்லை நாட்டுகின்ற சந்தர்ப்பம் வந்தபோது பெரும் சச்சரவு எழும்பிற்று. ஒவ்வொரு குலத்தாரும் இந்தப் புனிதப் பணியினைத் தாம்தான் செய்ய வேண்டும் என்று எண்ணினர்.பெரும்போர் ஒன்று மூண்டுவிடுவது போன்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. நான்கு நாட்கள் இந்தச் சச்சரவு நடைபெற்ற வண்ணமாயிருந்தது. ஐந்தாம் நாள் குறைஷிக் குலத்தின் மிக வயதான முதியவர் ஒருவர், ‘ நாளை அதிகாலை நேரத்தில் முதலாவதாக எவர் வருகிறார்ரோ அவரையே நடுவராக நியமித்துக் கொள்ள வேண்டும் ‘ என்று யோசனை கூறினார்.எல்லோரும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

இறைவனின் செயலைப் பாருங்கள்: அடுத்த நாள் அண்ணலாரே முதன்முதலாக கஅபாவிற்கு வந்தார்! எனவே அண்ணலார், ‘எந்தெந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை அதன் இடத்தில் நாட்டவிரும்புகிறார்களோ அவர்கள் தத்தமக்கென்று ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்’ என்று ஆனையிட்டார்கள். பின்னர், அண்ணலார் (ஸல்) தம் திருக்கரங்களால் ஒரு போர்வையை விரித்து அதன்மீது ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்தார்கள். பிறகு அத்தலைவர்களிடம் அப்போர்வையின் மூலைகளைப் பிடித்து, கல்லைத் தூக்கும்படிக்  கூறினார்கள். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் அக்கல்லை தாமே எடுத்து அதன் இடத்தில் பதித்து விட்டார்கள். இவ்விதம் ஏராளமான உயிர்களும் உடைமைகளும்  சேதமாகயிருந்த ஒரு பெரும் கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தற்போது கட்டப்பட்ட கஅபாவின் கட்டிடத்தின் மீது கூரையும் அமைக்கப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணிக்குத் தேவையான தளவாடங்கள் போதுமானவையாக இல்லாததால், ஒரு புறம் கஅபாவுடைய தரையின் ஒரு பகுதியை வெளியே விட்டுவிட்டு புதிய அடித்தளங்கள் இடப்பட்டன. வெளியே விடப்பட்ட இந்தப் பகுதியைத்தான் இன்று ‘ஹதீம்’ என்று கூறுகிறார்கள் .

ழூ ஹஜருல் அஸ்வத் : கஅபாவில் பதித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு நிற கல்.

———————————————————————————————————————————–

வாணிபம்

அரபுகளுக்கு அதிலும் குறிப்பாக குறைஷிகளுக்குப் பன்னெடுங் கபலத்திலருந்து வாணிபமே பிழைப்புக்கான வாழியாயிருந்தது. அண்ணலாரின் பெரிய தந்தையார் அபூதாலிப் அவர்களும் வணிகராகவே விளங்கினார்கள். எனவே அண்ணலார் வாலிபப் பருவம் எய்தியவுடன் வாணிபத்தையே தம் வருவாய்க்கான வழியாகத் தேர்ந்தெடுத்தார்கள். தம் பெரிய தந்தையாருடன் சிறு பிராயத்தில் அவர்கள் செய்த வாணிபப் பயணத்தின் வாயிலாக அவர்களுக்கு நிறைய அனுபவம் கிட்டியிருந்தது. மேலும் அண்ணலார் (ஸல்) வாணிபத்தில் அடியெடுத்து வைத்தபோது அவர்களின் நன்னடத்தையும் நற்பண்புகளும் நான்கு திசைகளிலும் பரவிப் பிரபலம் அடையத் தொடங்கின.

மக்கள் அண்ணலாரைக் கொடுக்கல் வாங்களில் நாணயமானவராகவும் மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும் கண்டார்கள். எனவே தம் மூலதனங்களை அவர்களிடம் தமது வாணிபப் பங்காகக் கொடுக்கலாயினர்.

வாக்கைப் பேணி நடத்தல், கொடுக்கல் வாங்கலில் நேர்மை,மிகவும் வெளிப்படையான – ஒளிவு மறைவற்ற போக்கு, நம்பிக்கை, நாணயம் ஆகிய இந்தப் பண்புகள் அனைத்தும் சேர்ந்து அண்ணலாரை மக்களின் பார்வையில் மிகவும் கண்ணியத்திற்குரியவராய் ஆக்கிவிட்டிருந்தன. பொதுவாக, மக்கள் அண்ணலாரை, சாதிக்- வாய்மையாளர், அமீன் – நம்பிக்கைகுரியவர் ஆகிய சிறப்புப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். அண்ணலார் வாணிபத்திற்க்காக சிரியா, பஸ்ரா, யமன் ஆகிய நாடுகளுக்குப் பலமுறை பயணம் சென்று வந்தார்கள்.

திருமணம்

கதீஜா அவர்கள் ஒரு கண்ணியமிக்க செல்வச் சீமாட்டியாக இருந்தார்கள். அவர்கள் அண்ணலாருக்குத் தூரத்து உறவில் ஒன்றுவிட்ட சகோதரியாவார்கள். (தங்கையின் சகோதரர் மகள்) அவர்கள் ஒரு விதவை. எனவெ மறுமணம் புரிந்து கொண்டார்கள். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு இரண்டாவது கணவரும் இறந்துவ்ட்டார். மீண்டும் விதவையான அவர்கள் மிகவும் கண்ணியம் நிறைந்த தூய பண்புகள்கொண்ட பெண்மணியாகத் திகழ்ந்தார்கள். மக்கள் அவர்களுடைய கண்ணியத்தையும், உயர் குணத்தையும் கருதி அவர்களை தாஹிரா (தூய்மையானவர்) என்னும் பெயரால் அழைத்து வந்தார்கள். அவர்கள் பெரும் தனவந்தராயிருந்தார்கள். அவர்கள் தமது வாணிபப் பொருட்களை மக்களிடம் கொடுத்து வணிகம் புரிந்து வந்தார்கள்.

அந்த தேரத்தில் அண்ணலாருக்கு 25வயது ஆகிவிட்டிருந்தது. அதற்குள் பல வாணிபப் பயணங்களை அண்ணலார் (ஸல்) செய்துவிட்டிருந்தார்கள். அப்பயணங்களின் போது அண்ணலாரின், உண்மை, வாய்மை, நேர்மை, நம்பகமான தன்மை, அமாணிதம் பேணல், தூய குணங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரிந்து விட்டிருந்தன. எனவே அண்ணலாரின் புகழையும், நற் பெயரையும் கேள்விப்பட்ட கதீஜா அவர்கள், ‘தாங்கள் என் வாணிபப் பொருட்களை எடுத்துக்கொண்டு சிறியா நாட்டிற்குச் செல்லுங்கள்: நான் மற்றவர்களுக்குத் தருகின்ற ஊதியத்தை உங்களுக்குத் தருவேன்’ என்று தூதனப்பிக் கேட்டுக் கொண்டார்கள். கதீஜா அவர்களின் வாணிபப் பொருட்களை எடுத்துக் கொண்டு பஸ்ரா நகருக்குச் சென்றார்கள். மக்கா நகர் திரும்பி- ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு கதீஜா அவர்கள் அண்ணலாரை மணம் புரிந்து கொள்ளத் தூதனப்பினார்கள். அண்ணலாரும் அவாகளை மணமுடிந்துக் கொள்ள இசைவு தெரிவித்தார்கள். உடனே தேதி நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் அபூதாலிப், ஹம்சா, மற்றும் குடும்பத்தின் பல பெரியவர்களுடன் கதீஜாவின் வீட்டிற்கு அண்ணலார் சென்றார்கள். அபூதாலிப் திருமண உரை நிகழ்த்த, 500 வெள்ளி நானயங்கள் பரிசம் வழங்க (மணமகளின் அன்பளிப்புத் தொகை) திருமணம் இனிது நிகழ்ந்தது.

திருமணத்தின்போது கதீஜாவின் வயது நாற்பது. முந்தைய இரு கணவர் வாயிலாக இரு ஆண் மக்களும், ஒரு மகளும் இருந்தனர்.

அசாதாராணமான நிகழ்ச்சிகள்

பெருமானாரின் எதிர்காலம் பற்றிய அடையாளம் காட்டுகின்ற மாதிரியான சில அசாதாரணமான சம்பவங்களைக் காண்போம்.

அண்ணலார் (ஸல்) நவின்றார்கள்: ‘நான் என் அன்னையின் வயிற்றில் இருந்தபோது என் அன்னையார் கனவொன்று கண்டார்கள். அக்கனவில் அவர்களின் உடலிலிருந்து ஒளியொன்று புறப்பட்டது: அந்த ஒளியினால் சிறியா நாட்டின் அரண்மனைகள் பிரகாசமடைந்தன

பல அறிவிப்புகளிலிருந்து அந்தக் காலகட்டத்தில் குறிப்பாக யூதர்களும், கிறிஸ்தவர்களும்-வரவிக்கின்ற ஓர் இறைத்தூதரை எதிர்பார்த்த வண்ணமிருந்தனர் என்றும் அவரது வருகை குறித்துப் பல முன்னறிவிப்புகளைச் செய்த வண்ணமிருந்தனர் என்றும் தெரிய  வருகின்றத.

அண்ணலாரின் சிறுபிரதயத்தில் நடந்த நிகழ்ச்சி இது. இறையில்லம் கஅபாவின் கட்டுமானப் பணி ஏதோ நடந்து கொண்டிருந்தது. பெரியவர்களுடன் சிறுவர்களும் செங்கற்களை எடுத்து வருவதில் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சிறுவர்களில் அண்ணலாரும், பெரியவர்களுள் அவர்களின் பெரிய தந்தையார் அப்பாஸ் (ரலி) அவர்களும் இருந்தனர்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘உங்கள் அரைக்கச்சையை அவிழ்த்துத் தோளில் வைத்துக் கொள்ளுங்கள்: செங்கற்கள் அழுத்துவதால் வலி உண்டாகாது’ என்று கூறினார்கள். அரபுலகின் அப்போதைய சூழ்நிலையில் இந்த விஷயம் ஒன்றும் விநோதமானதோ, வியப்பற்குரியதோ அல்ல. சிறுவர்கள் என்ன, பெரியவர்கள்கூட அங்கு நிர்வாணமடைவதற்க்கு வெட்கப்படுவதில்லை. ஆனால் அண்ணலார் (ஸல்) அவ்வாறு செய்யமுயன்றபோது வெட்க உணர்வு மேலிட்டு தன்னுணர்விழந்து கீழே விழுந்து விட்டார்கள். கண்கள் நிலை குத்திவானை நோக்கி நின்றன. உணர்வு வந்தபோது, ‘என் அரைக்கச்சை எங்கே! என் அரைக்கச்சை எங்கே!’ என்றே அண்ணலார் கூறிக் கொண்டிருந்தார்கள். மக்கள் உடனடியாக அரைக்கச்சையை அவர்களின் இடுப்பில் இறுகக் கட்டிவிட்டனர். அபூதாலிப் அவர்கள் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு அண்ணலாரிடம் நடந்ததை விவரிக்கும்படிக் கேட்டபோது, ‘வெள்ளுடை அணிந்த ஒரு மனிதர் என் கண்களில் தெரிந்தார். அவர் என்னிடம், ‘மானத்தை மறைத்துக் கொள்’ என்று கூறினார்’ என்று அண்ணலார் கூறினார்கள்.

பொரும்பாலும் இதுவே அண்ணலார் கேட்ட முதன் முதல் அசரீரி.

அரபுலகத்தில் கதை சொல்லும் வழக்கம் பரவலாக இருந்து வந்தது. மக்கள் இரவு நேரங்களில் ஓரிடத்தில் ஒன்று கூடுவர் கதை சொல்பவன் எவனாவது இரவு முழுவதும் கதை சொல்வான். தமது சிறுபிராயத்தில் ஒருநாள் அண்ணலாரும் அத்தகைய ஒரு உல்லாசக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினார்கள்;. ஆனால் தற்செயலாக வழியில் மணவிழாவொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அண்ணலார் அதனைக் காண்பதற்காக அங்கே தங்கினார்கள். அங்கேயே அவர்களுக்கு உறக்கம் வந்துவிட்டது. கண்களைத் திறந்து பார்க்கும்போது பொழுது விடிந்துவிட்டிருந்தது. இதே போன்றே ஒரு நிகழ்ச்சி இன்னொரு முறையும் உறங்கி விட்டார்கள். இவ்விதம் அண்ணலாரை அல்லாஹ் அந்தக் கூடாத நட்பிலிருந்து பாதுகாத்துவிட்டன.

அண்ணலார் பிறந்த அந்தக் காலகட்டத்தில் மக்கா நகரம் சிலைவணக்கத்திற்கு அனைத்தையும்விடப் பெரும் கேந்திரமாக ஆகிவிட்டிருந்தது. இறையில்லம் கஅபாவில் மட்டும் 360 சிலைகள் வணங்கப்பட்டு வந்தன. அண்ணலாரின் குடும்பத்தார் அதாவது குறைஷ் குலத்தார் அந்த நேரத்தில் இறையில்லம் கஅபாவின் நிர்வாகப் பொறுப்பாளர்களாகவும், பூசாரிகளாகவும் இருந்தனர். ஆனால் அவ்வாறிருந்தும் அண்ணலார் (ஸல்) அவர்கள் என்றுமே சிலைகளின் முன்னால் தலை சாய்த்ததில்லை. அங்கு நடக்கும் இணைவைப்புச் சடங்குகளில் எப்போதும் எந்த விதமான பங்கும் கொண்டதில்லை. அவை தவிர குறைஷிகள் பழகிவிட்டிருந்த தவறான சடங்குகள் விஷயத்திலும் தம் குடும்பத்தாருடன் ஒத்துழைத்ததுமில்லை.

நபித்துவத்தின் தொடக்க நிலைகளில்

நபித்துவத்தின் துவக்கம்

அண்ணலாரின் வாழ்வில் இப்போது இன்னொரு புரட்சி ஏற்படலாயிற்று. தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை வணங்குவதிலும் தம்மைச் சுற்றிலுமுள்ள ஒழுக்க, வீழ்ச்சி, மார்க்கப் பக்தியில்லாமை ஆகியன குறித்துச் சிந்திப்பதிலும் அவர்களின் கவனம் திரும்பலாயிற்று: ‘என் சமூகத்து மக்கள் சிலைகளை எப்படி வணக்கத்திற்குரிய கடவுள்களாக்கிக் கொண்டார்கள்? அவர்கள் ஒழுக்க ரீதியாக எந்த அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டிருக்கின்றார்கள்! இவர்களின் இறைவழிபாட்டின் பாதை எது? இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளனை, அதிபதியை எவ்விதம் வணங்குவது? அவர்களுக்கு அதனை எப்படி உணர்த்துவது?’ என்றெல்லாம் அவர்கள் தொடர்ந்து சிந்தித்து வந்தார்கள். இத்தகைய ஏராளமான சிந்தனைகளும், கேள்விகளும் அவர்களின் உள்ளத்தில் தொடர்ந்து வட்டமிட்டு வந்தன. அவற்றைக் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் சதா சிந்தித்து வந்தார்கள்.

ஹிரா குகை

மக்கா நகரிலிருந்து மூன்று மைல் தொலைவில் ‘ஹிரா’ எனப்படும் குகை ஒன்று இருந்தது. அண்ணலார் (ஸல்) அவர்கள் பெரும்பாலான நேரங்களில் அங்கு சென்று தங்கிச் சிந்திப்பதிலும் இறைவழிபாட்டிலும் ஈடுபடுவார்கள். உண்ணவும் பருகவும் தேவையான பொருட்களை உடன் எடுத்துச் செல்வார்கள். அவை தீர்ந்து போனவுடன் மீண்டும் வீட்டிற்கு வந்து எடுத்துச் செல்வார்கள். அல்லது கதீஜா (ரலி) அவர்கள் கொண்டு வந்து தருவார்கள்.

முதல் வஹீ – வேத வெளிப்பாடு

ஒருநாள் அண்ணலார் வழக்கப்படி ஹிரா குகையில் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். அது ரமளான் மாதம். அப்போது திடீரென அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட வானவர் ஒருவர் அண்ணலாரின் முன்னால் தோன்றினார்கள். அந்த வானவர், வானவர்களிலெல்லாம் மிக உயர்ந்த படித்தரமுடையவரும் இறைச்செய்தியைத் தொன்றுதொட்டு அவனது திருத்தூதர்களிடம் கொண்டு சென்று சமர்ப்பித்து வருப வருமான ஜிப்ரீல் (அலை) அவர்னளேயாவர். ஜிப்ரீல் (அலை) அவர்கள், அண்ணலாரிடம் ‘ஒதுவிராக!’ என்று கூறினார்கள்.

அண்ணலார் (ஸல்) ‘எனக்கு ஓதத் தெரியாதே!’ என்று கூறினார்கள். இதனையடுத்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்ணலாரைப் பிடித்து, அவர்கள் களைப்படையும் அளவிற்குக் கட்டியணைத்தார்கள். பின்னர் அண்ணலாரை விட்டு விட்டார்கள். மீண்டும் ‘ஓதுவீராக!’ என்று கூறினார்கள். அண்ணலார் மீண்டும் அதே பதிலை தந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் மீண்டும் அண்ணலாரைக் கட்டியணைத்து நெருக்கினார்கள். பின்னர் விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று மறுபடியும் கூறினார்கள். அண்ணலார் ‘எனக்கு ஓதத் தெரியாதே’ என்று கூறினார்கள். இப்போது மூன்றாம் முறையாகக் கட்டியணைத்துப் பின்னர் விட்டுவிட்டார்கள். பிறகு பின்வருமாறு ஓதினார்கள்:

‘உறைந்த ரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்த உம் அதிபதியின் திருப்பெயரைக் கொண்டு ஓதுவீராக! ஓதுவீராக! மேலும் எழுதுகோலைக் கொண்டு கற்பித்த உமதிறைவன் மேன்மை மிக்கவன், அவன் மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்’. (96: 1- 5)

இதுதான் முதலாவது தேவ வெளிப்பாடாகும். அண்ணலார் (ஸல்) இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தமது இல்லத்திற்குச் சென்றார்கள். அச்சமயம் அவர்கள் ஒருவிதமான நடுக்கத்திற்கு உள்ளாகி இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களிடம் ‘எனக்குப் போர்த்துங்கள்’, ‘எனக்குப் போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். அவர்கள் மீது கம்பளி போர்த்தப்பட்டது. சற்று அமைதியடைந்தவுடன் அண்ணலார் கதீஜா (ரலி) அவர்களிடம் நடந்தவை அனைத்தையும் விவரித்துவிட்டு ‘என் உயிர் ஆபத்திலிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது’ என்று கூறினார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள், ‘இல்லை, ஒருபோதுமில்லை. உங்கள் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை. இறைவன் உங்களை இழிவுக்குள்ளாக்க மாட்டான். நீங்கள் உறவினர்களை உரிமைகளைப் பேணுகின்றீர்கள். பிற மக்களின் சுமைகளை நீங்கள் தாங்கிக் கொள்கின்றீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவுகின்றீர்கள். பயணிகளை உபசரிக்கின்றீர்கள். நீதியை நிலைநாட்டுகின்றீர்கள். மக்களின் துயரங்களை நீக்கப் பாடுபடுகின்றீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள்.

அதன் பின்னர் கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரை அழைத்துக் கொண்டு வரகா பின் நவாஃபல் ஒரு வயது முதிர்ந்த மார்க்கப்பற்று மிக்க கிறிஸ்தவராவார். இவர் தவ்ராத் வேத விற்பன்னர். கதீஜா (ரலி) அவர்கள் அப்பெரியவரிடம் நடந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிவித்தார்கள். இவற்றைச் செவியுற்ற வரகா ‘அவர் மூஸா (அலை) அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதே (மறைவான உண்மைகளை அறிந்த) வானவர் ஆவார். அந்தோ! (முஹத்ததே) உங்களை உங்கள் சமூகத்தார் இந்நகரை விட்டு வெளியேற்றும்போது நான் உயிரோடு இருக்கக் கூடாதா!’ என்று பெரு முச்சுசிட்ட வண்ணம் கூறினார். அண்ணலார் வியப்புற்று ‘என்ன, எனது சமூகம் என்னை வெளியேற்றிவிடுமா!’ என்று வினவினார்கள். அதற்கு அப்பெரியவர் ‘ஆம்! நீர் கொண்டு வந்திருக்கும் இந்தச் செய்தியை இதற்கு முன் கொண்டு வந்த எந்த மனிதரையும் அவரது சமூகத்தார் பகைத்தே வந்திருக்கினறார்கள். நான் அந்த நேரத்தில் உயிருடனிருந்தால் உங்களுக்குத் துணைபோவேன்’ என்று கூறினார். இதற்குச் சில நாட்களுக்குள்ளயே வரகா இறையடி சேர்ந்துவிட்டார்.

இதன் பின்னர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகை நின்றுபோய் விட்டது. அண்ணலார் (ஸல்) அவர்கள் எப்போதும் போல் ஹிரா குகைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த இடைவெளி குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் நீடித்தது. இந்த இடைவெளியின் பயனாக ஒரு மனிதர் என்னும் ரீதியில் அண்ணலாரின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த தீடீர் தாக்கங்கள் நீங்கிவிட்டன. அண்ணலாரின் புனித உள்ளம் மீண்டும் வேத வெளிப்பாடு இறங்குவதை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியது. இந்த இடைவெளி சற்று நீண்டவுடன் அண்ணலாருக்கு அமைதியும் ஆறுதலும் அளித்திட ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவ்வப்போது வருகை தந்தார்கள். ‘நிச்சயம் தாங்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டீர்கள். தாங்கள் அமைதியுடன் எதிர்பாருங்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தார்கள்.

அழைப்புப் பணியின் தொடக்கம்

அழைப்புப் பணியின் தொடக்கம்

ஹிரா குகையில் முதல் வேதவெளிப்பாடு ஆனபின் சில நாட்கள் வரை வஹீ (வேதவெளிப்பாடு) நிகழவில்லை. அதன்பின்னர் அத்தியாயம் அல்முத்தஸ்ஸிரின் ஆரம்ப வசனங்கள் இறங்கின. இவைதாம் அந்த வசனங்கள்:

‘போர்வை போர்த்தியவரே! எழும்! (மக்களை வழி கேட்டின் விளைவைக் குறித்து) அச்சுறுத்தி எச்சரியும்! உம் அதியதியின் மேன்மையையும் பொருமைகளையும் எடுத்துரையும்! உம் ஆடைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும்! சிலைகளை விட்டு விலகியிரும்! அதிகமாகப் பொற்றுக் கொள்ளும் எண்ணத்தில் எவருக்கும் உபாகாரம் செய்யாதீர்! உம் அதிபதியின் பணியில் (துன்ப துயரங்கள் நேரும்போது) பொறுமையைக் கடைப்பிடியும்! (74: 1-7)’

நபித்துவப் பணியில் அண்ணலார் (ஸல்) அதிகாரப் பூர்வமாக அமர்ந்திட இதுவே தொடக்கமாக இருந்தது. இப்போது முறைப்படியான ஆணைக் கிட்டிவிட்டது: எழுங்கள்! வழி தவறிய சமுதாயத்திற்கு வெற்றிக்குரிய பாதையைக் காட்டுங்கள்! வெற்றிக்குரிய வழி ஒன்றே என்பதை மக்களுக்கு எடுத்துரைத்து எச்சரித்துவிடுங்கள்! அந்த வழி ஒரே இறைவனுக்கு வணங்கி அவனுக்கு மட்டுமே கீழ்ப்டியும் மார்க்கமாகும்! எவர் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கின்றாரோ அவரே வெற்றியடைவார் என்று கூறிவிடுங்கள். எவர் இதனை விடுத்து வேறேதேனும் ஒரு பாதையை மேற்கொள்கிறார்களோ – அவர்கள் மறுமையில் தீயகதிக்கு ஆளாக நேரிடும் என்று அச்சுறுத்தி எச்சரித்து விடுங்கள்! மனித வாழ்வு, இறைனுக்கு அடிமைப்படுதல்? அவனது மேன்மையையும் பொருமையையும் மகத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய அடிப்படைகளின் மீதே நிலைபெற வேண்டும். அப்போதுதான் மனித வாழ்வு எல்லாவிதமான புறஅசுத்தங்கள், அகஅழுக்குகள் அனைத்திலிருந்தும் தூய்மையாகித் திகழ முடியும். இறைவனை விடுத்துப் பிறருக்குக் கீழ்ப்படிவதும் அடிமைசெய்து வாழவதும்தான் மனிதனுக்கு அழவுக்குக் காரணமாக மாறும் தீமையின் ஆணிவேர் ஆகும். மனிதர்கள் தமக்கிடையே நல்ல முறiயில் நடந்து கொள்ளவேண்டும். அந்த நன்னடத்தை எந்தச் சுயநலத்தின் அல்லது பேராசையின் அடிப்படையிலும் அமைந்திடக் கூடாது. தூய எண்ணத்துடன் கூடிய நன்னடத்தையாக இருக்க வேண்டும்.

அழைப்புப் பணியின் இரு பொரும் காலகட்டங்கள்

இங்கிருந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய திருவாழ்வின் அழைப்புப்பணிக் கட்டம் தொடங்குகின்றது. இந்தக் காலகட்டத்தை நாம் இரண்டு பெரும் காலகட்டங்களாகப் பங்கிடலாம். ஒன்று ஹிஜ்ரத்திற்கு முன்னர் மக்கா நகரில் நிகழ்ந்த முதல் சகாப்தம். இதனை ‘மக்கீ சகாப்தம்’ என்று கூறுவர். மற்றொரு பகுதி ஹிஜ்ரத்திற்குப் பிறகு மதீனா நகரில் நிகழ்ந்த காலகட்டம். இதனை ‘மதனீ சகாப்தம்’ என்று கூறுவர். முதல் சகாப்தம் 13 ஆண்டுகள் நீடித்தது இரண்டாவது சகாப்தம் ஏறத்தாழ 10 ஆண்டுகள் நீடித்தது.

மக்கீ சகாப்தம்

அண்ணலாருடைய அழைப்புப் பணியில் மக்கா நகர்க் காலகட்டம், அதன் விளைவுகளின் கோணத்திலிருந்து பார்க்கும்போது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. உண்மையில் இந்தக் காலகட்டம் தான் இஸ்லாம் எனும் வயலில் விதைகள் ஊன்றப் பட்ட காலகட்டமாகும். இந்தக் காலகட்டம்தான் இஸ்லாமிய இயக்கத்தை அகிலம் முழுவதிலும் அறிமுகப்படுத்திய மிக உயர்ந்த முன் மாதிரியான மனிதப் புனிதர்கள் மனித சமுதாயாத்தைதில் உருவாகிய புண்ணியம் வாயந்த காலகட்டமாகும்.

இன்று நம்மிடையே உலவிக் கொண்டிருக்கும் வரலாற்று நூல்கள். நபிவாழ்வு மற்றும் நபித்தோழர்களின் வரலாறு கூறும் நூல்கள் ஆகியவற்றில் மக்கீ சகாப்தத்தைப் பற்றிய விவரங்களும், தகவல்களும் மிகக் குறைவாகவே நமக்குக் கிடைக்கின்றன.

அந்த சாகப்தத்தின் முக்கியத்துவத்தையும் அதன் படிப்பினை தரும் நிலைமைகளையும் அறிந்திட, அண்ணலாரின் மக்கா வாழ்வின் போது இறங்கிய திருக்குர்ஆனின் பகுதிகளை அழ்ந்து அராய்வது அவசியமாகும்.

திருக்குர்ஆனில் மக்கீ சகாப்த அத்தியாங்களின் அழைப்புமுறை, அப்போதைய சூழ்நிலை, அப்போது நடந்த நிகழ்ச்சிகளின் விவரங்கள், ஏகத்துவம் மற்றும் மறுமைக்கான ஆதாரங்கள், தூய நடத்தையையும் நற்பண்புகளையும் உருவாக்கிட அது அளிக்கும் போதனைகள், சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையே நடைபெற்ற – பொறுமையைச் சோதிக்கும் நெடிய போராட்டத்தின்போது இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் இயக்கத் தளபதிகளை அவர்களின் நிலையில் உறுதியாக நிறுத்திடவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விவரங்கள் அனைத்தும் நமக்குத் தெரியவரும்போதுதான், உண்மையில் மக்கீ சகாப்த அத்தியாயங்களின் சரியான முக்கியத்துவத்தையும் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

திருக்குர்ஆனை நேரடியாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்யாமல் இந்த விவரங்களையெல்லாம் நம்மால் அறிய முடியாது. எனினும் அவ்வளவில் இல்லாவிடினும் சற்று சுருக்கமாகவாவது அந்தச் சகாப்தத்தைப் பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மக்கீ சகாப்தத்திக் நான்கு காலகட்டங்கள்

அண்ணலாருடைய வாழ்வில் ஹிஜ்ரத்திற்கு முன்பு மக்கா நகரில் கழிந்த சகாப்தத்தில்தான் இஸ்லாமிய இயக்கம் தனது அழைப்புப் பணியில் பல்வேறு கட்டங்களையும் போராட்டங்களையும் கடந்துசென்றது. இந்த மக்கீ சகாப்தத்தை, தன் சிறப்பியல்புகள் சிலவற்றைப் பொறுத்து, நான்கு வௌ;வேறுப்பட்ட காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.

முதல் காலகட்டம்

இது அண்ணலார் (ஸல்) நபித்துவம் பெற்றதிலிருந்து ஏறத்தாழ மூன்றாண்டுகள் வரையுள்ளதாகும். இந்தக் காலகட்டத்தில் அண்ணலார் தம் அழைப்புப்பணியையும் பிரச்சாரப் பொறுப்பையும் ரகசியமாக, மறைவான முறையில் செய்து வந்தார்கள்.

இரண்டாம் காலகட்டம்

இது நபித்துவத்தைப் பகிரங்கமாக அறிவித்ததிலிருந்து ஏறத்தாழ இரண்டாண்டுகள் வரையுள்ளதாகும். இந்தக் காலகட்டத்தில் முதலில் சிறிது எதிர்ப்புக் காட்டப்பட்டது – பின்னர் கேலி, கிண்டல், நையாண்டி செய்யப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகள் புனைந்து கூறப்பட்டன. மற்றும் இவ்வாறான யுத்திகளின் வாயிலாக இஸ்லாமிய அழைப்பை அமுக்கி நசுக்கிட முயன்றனர்.

மூன்றாவது காலகட்டம்

இத்தனை எதிர்ப்புகளுக்குப் பின்னரும் இஸ்லாமிய இயக்கம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் அதன்மீது கொடுமைகளும் அக்கிரமங்களும் கட்டவிழ்த்து விடப்படலாயின். முஸ்லிம்களை வரம்பு மீறிச் சித்திரவதைகள் செய்யலாயினர். இந்தக் காலகட்டம் ஏறத்தாழ ஐந்தாறு ஆண்டுகள் நீடித்தது. இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் விதவிதமா துன்பங்களுக்குள்ளாக நேர்ந்தது.

நான்காம் காலகட்டம்

இது அபூதாலிப், கதீஜா (ரலி) அகிய இருவரின் மறைவிற்குப் பின்னாலிருந்து ஹிஜ்ரத் வரையுள்ள ஏறத்தாழ மூன்றாண்டு காலமாகும். இந்தக் கால கட்டம் அண்ணலாருக்கும் அவர்களின் தோழர்களுக்கும் மிகத் துன்பகரமான, வேதனை மிக்க காலகட்டமாய் இருந்தது.

முதல் காலகட்டம் :

மௌன அழைப்பு

நபித்துவப் பணிக்கு அதிகாரப்பூர்வமாக நியமிpக்கப்பட்ட பின்னர், ஒரே இறைவனுக்கு அடிமைத்துவத்தை மேற்கொண்டு, ஏராளமான பிற கடவுள்களை நிராகரித்துவிடும் அழைப்பை முதன்முதலாக எவருக்கு விடுப்பது என்பதை அண்ணலார் (ஸல்) அனைத்துக்கும் முதலாகக் தீர்மானிக்க வேண்டியிருந்தது. நாட்டு மக்களும் சமுதாய மக்களும் எந்த நிலையிலிருந்தனர் என்பதை குறித்து ஓர் எளிய சித்திரத்தை நாம் இதற்கு முன்பே பார்த்துவிட்டோம். இத்தகைய மனிதர்களின் முன்னே அவர்களுடைய சுபாவம், விருப்பம், மற்றும் பழக்க வழக்கங்களுக்கு முற்றிலும் எதிரான ஒரு செய்தியைச் சமர்ப்பிப்பது உண்மையிலேயே கடினமான ஒரு விஷயமாகவே இருந்தது.

எனவே அண்ணலார் (ஸல்) அனைவருக்கும் முன்பாக இதுவரை தமக்கு எவர்களுடன் நெருங்கிய நட்பும் உறவும் இருந்துவந்ததோ, எவர்கள் தமது பழக்க வழக்கங்களையும் பண்புகளையும் நேரடியாக அறிந்திருந்தார்களோ அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் அண்ணாரின் வாய்மை, இறையச்சம், நம்பிக்கை, நாணயம் ஆகியன குறித்து திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்து விட்டவர்களாய் இருந்தார்கள். பெருமானாரால் கூறப்பட்ட ஒரு விஷயத்தை நிராகரித்துவிடுவது அவர்களால் எளிதில் முடியாத ஒன்றாய் இருந்தது. அவர்களில் அனைவரையும் விட அதிகமாக அண்ணாரின் அந்தரங்க வாழ்க்கையை அறிந்திருந்தவர்கள் கதீஜா (ரலி) அவர்களாயிருந்தார்கள். அவகளுக்குப் பிறகு அலீ, ஸைத், அபூபக்ரு (ரலி – அன்ஹும்) ஆகியோராவர்.

அலீ (ரலி) அவர்கள், அண்ணலாரின் ஒன்றுவிட்ட சகோதரராகவும், ஸைத் (ரலி) அவர்கள் அண்ணலாரின் அடிமையாகவும், அபூபக்ரு (ரலி) அவர்கள் அண்ணலாரின் நண்பராகவும் இருந்தனர். இவர்கள் நால்வரும் பல்லாண்டுகளாக அண்ணலாரின் தோழழை வாய்க்கப் பெற்றிருந்தார்கள். எனவே முதன் முதலாக அண்ணலார் இந்தச் செய்தியை கதீஜா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதன் பின்னர், மற்றவர்கள் மூவருக்கும் தெரியப்படுத்தினார்கள். இவர்கள் அனைவருமே முன்பிருந்தே இறைநம்பிக்கை கொண்டிருந்தவர்களைப் போன்று, இதனைச் செவியுற்றவடனே உண்மையென ஏற்றார்கள். இவர்கள்தாம், இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக இறைநம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். இதன் பின்னர் அபூபக்ரு (ரலி) அவர்கள் ஆர்வமூட்யதாலும் அறிவுரைகள் புரிந்ததன் மூலமாகவும் ஸுபைர் , அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், சஃதுபின் அபீவக்காஸ், தல்ஹா (ரலி அன்ஹும்) ஆகியோர் இறைநம்பிக்கை கொண்டார்கள் இவ்விதம் இஸ்லாத்தின் அழைப்பு ஆரலாரமின்றிப் பரவிக் கொண்டிருந்தது. முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு சென்றது.

திருக்குர்ஆனின் தாக்கம்

இந்தக் காலகட்டத்தில் இறங்கிக் கொண்டிருந்த திருக்குர்ஆனின் பகுதிகள், அழைப்புப் பணியின் ஆரம்பக் கட்டத்திற்குக் பொருத்தமான முறையில், சிறு சிறு வாக்கியங்கள் கொண்டனவாய் விளங்கின. அந்த மிக்கதாயும், கேட்பார் பிணிக்கும் தம்மையுடையதாயும் திகழ்ந்தது. அவற்றைச் செவியுறுவோர் மீது உடனே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவற்றில் இலக்கியகளில் அம்பைப் போல் ஊடுருவின. அவற்றைச் செவியுறுவோர் அவற்றில்லயித்து நின்றனர். அவ்வுரைகளை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என அவர்களின் உள்ளம் விரும்பியது.

கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளைச் சீர்திருத்துதல்

திருக்குர்ஆனின் இந்த அத்தியாங்களில் ஏகத்துவம், மறுமை ஆகிய உண்மைகள் எடுத்துரைக்கப்பட்டன. அவற்றைக்குறித்து, உள்ளங்களில் பதிந்துவிடும் வகையில் அமைந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்காக அவற்றைச் செவிமடுப்பவர்களுக்கு மிக அருகிலுள்ள சூழ்நிலைகளிலிருந்தே ஆதாரங்களும், சான்றுகளும் தரப்பட்டு வந்தன. எவர்களை முன்னிலைப்படுத்திப் பேசப்பட்டு வந்ததோ அவர்களுக்கு மிகப் பரிச்சயமான, பழக்கமான பாணியிலேயே இந்த ஆதாரங்கள் வைக்கப்பட்டன. அவர்களுடைய வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்தே – அவர்களுடைய மரபு வழி அறிவிப்புகள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்பமையிலேயே அசல் செய்தியைப் புரிய வைத்திடும் பாங்கு மிளிர்ந்தது. அந்த மக்கள் அன்று சிக்கியுழன்று கொண்டிருந்த கொள்கை வழிகேடுகளும் எடுத்துரைக்கப்பட்டன. அவர்களே அறிந்து வைத்திருந்த ஒழுக்ககேடுகள், சமூகத் தீமைகள் ஆகியனவும் விமர்சிக்கப்பட்டன. எனவேதான் இந்த உரையைச் செவிமடுப்பவர் எவராயினும் அதனால் ஈர்க்கப்படாமல், பாதிக்கப்படாமல் இருக்கவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், தன்னந் தனியராய் இந்த அழைப்பைத் தொடங்கினார்கள். ஆனால் திருக்குர்ஆனின் இந்தப் ஆரம்ப வசனங்கள் இறங்கியதே இந்தப் பிரச்சாரக் களத்தில் மகிப் பயனுள்ள ஓர் ஆயுதமாகச் செயல்பட்டு வந்தது. இந்த அழைப்பும் மெல்ல மெல்ல பரவிக் கொண்டிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் அழைப்பு மற்றும் பிரச்சாரப் பணிக்காக ஏகத்துவம், மறுமை ஆகியவற்றுக்குரிய ஆதாரங்களை அளிப்பதுடன் இந்த மாபெரும் பணிக்காக அண்ணலார் (ஸல்), தம்மை எவ்விதம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மகத்தான பணியை நிறைவேற்றிட என்னென்ன வழி முறைகளைக் கையாள வேண்டும் என்கிற அறிவுரைகளும் அண்ணலாருக்குத் தொடந்து அளிக்கப்பட்டு வந்தன.

ஒளிந்தும் மறைந்தும் இறைவனைத் தொழுதல்

இப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தவை அனைத்தும் மறைவாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தன. நம்பிக்கைக்குரியவர்களைத் தவிர வெளியே எவருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிடக் கூடாது என்று மிக எச்சரிக்கையாக இருந்தனர். தொழுகைக்குரிய நேரம் வந்தவுடன் அண்ணலார் ஏதேனுமொரு மலைக் கணவாய்க்குச் சென்று அங்கு தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஒருமுறை அண்ணலார், அலீ (ரலி) அவர்களுடன் ஒரு கணவாயில் தொழுது கொண்டிருந்தார்கள். தற்செயலாக அண்ணலாரின் பெரிய தந்தையார் அபூதாலிப் அவர்கள் வந்துவிட்டார்கள். இறைவழிப்பாட்டின் இந்தப் புதிய முறையை நெடுநேரம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்குப் பிறகு ‘இது என்ன மார்க்கம்?’ என்று வினவினார்கள். அண்ணலார். ‘இது நமது பாட்டனார் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்’ என்று கூறினார்கள். அபூதாலிப், ‘நன்று! நான் இதனை தேற்கொள்ள முடியாது, ஆனால் நீங்கள் இதனைப் பின்பற்றி நடந்திட அனுமதியளிக்கிறேன். எவரும் உம்மை எதிர்த்திடவோ – இதனை கைவிட்டு விடும்படி உம்மை நிர்பந்திக்கவோ முடியாது’ என்று கூறினார்கள்.

இந்தக் காலகட்டதில் இருந்த இறை நம்பிக்கையாளர்களின் சிறப்பியல்புகள்

இந்த ஆரம்ப காலகட்டத்தின் தனித்துவம் என்னவெனில், அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதும் அண்ணலாருடன் ஒத்துழைப்பதும் உயிருடன் விளையாடுவதாக இருந்தது. இந்தக் காலகட்டதில் தாமே முன்வந்து துணிச்சலுடன் இஸ்லாத்தைத் தழுவிய மக்களுக்குள் நிச்சயம் சில சிறப்பியல்புகள் இருந்தன. அச்சிறப்பியல்புகளின் அடிப்படையில்தான், அவர்கள் இந்தக் காலத்தில் முன்னேறிட முடிந்தது.

அவர்களின் சில கூட்டுச் சிறப்பியல்புகள் வருமாறு:-

அவர்கள் முன்னபிருந்தே இணைவைக்கும் சடங்குகளையும் வணக்கவழிபாட்டு முறைகளையும் குறித்து சலிப்படைந்து, அவற்றை வெறுத்துக் கொண்டிருந்தார்கள் இயற்கைச் சுபாவத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். இயற்கைச் சுபாவத்தைப் பொறுத்தவரை அவர்கள் நல்லவர்களாகவும் தூய குணங்களை உடையவர்களாகவும் விளங்கினார்கள்.

ஏறத்தாழ மூன்றாண்டுகள் வரை அழைப்பு மற்றும் பிரச்சாரப்பணி மறைவாகவே நடைபெற்று வந்தது. ஆனால் எதுவரைதான் இப்படியுயே மறைந்தும் ஒளிந்தும் பிச்சாரம் செய்து கொண்டிருக்க முடியும்? எந்தச் சூரியன், தன் ஒளிக் கிரணங்களால் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்ய வேண்டியிருந்ததோ அந்தச் சூரியன் எப்படியும் வெளிப்பட்டு மக்களின் பார்வைகளைத் தன்பால் ஈர்த்துத்தானே ஆக வேண்டும்? எனவே இந்த அழைப்பு இப்போது இரண்டாவது கட்டத்தினுள் பிரவேசித்தது.

பகிரங்க அழைப்பு

பகிரங்க அழைப்பு

இப்போது பிகிரங்கமாக அழைப்புக் கொடுத்திடும்படி தெளிவான கட்டளை கிடைத்துவிட்டது. எனவே ஒரு நாள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்குன்றின் மீது எறிச் சென்றார்கள். அங்கு நின்று கொண்டு ‘யா ஸபாஹா’ என்று கூவினார்கள். ஆபத்து ஏதும் வந்துவிட்டால் எவரேனும் ஒருவர், ஏதேனும்மோர் உயர்ந்த இடத்தில் ஏறிநின்று இவ்வாறு கூவி மக்களை எச்சரித்திட அழைப்பதும் மக்கள் குரலைக் கேட்டு ஒன்று திரண்டுவிடுவதும் அரபுகளின் வழக்கமாக இருந்துவந்தது. எனவே ஸஃபா மலைக் குன்றிலிருந்து அண்ணலார் (ஸல்) இந்தக் குரலை எழுப்பி குறைஷிகளை அழைத்தவுடன் ஏராளமான மக்கள் ஒன்று கூடிவிட்டனர். அவ்வாறு ஒன்று திரண்ட மக்களிடையே அண்ணலாரின் பெரிய தந்தை அபூலஹபும் இருந்தான்.

மக்கள் ஒன்று திரண்டவுடன் அண்ணலார் கூறினார்கள்: ‘மக்களே! இந்த மலையின் பின்புறத்தில் பெரும் படையொன்று உங்களைத் தாக்கிடத் தயாராக உள்ளது என்று நான் கூறினால் நீங்கள் என் சொல்லை உண்மையென ஏற்பீர்களா?’

மக்கள் ‘நிச்சயம், சந்தேகத்திற்கிடமின்றி உங்கள் சொல்லை உண்மையென நாங்கள் ஏற்போம். நீங்கள் இதுவரை எந்தப் பொய்யான செய்தியும் சொன்னதில்லை. நாங்கள் உம்மை ஸாதிக் – உண்மையாளர், அமீன் – நம்பிக்கைக்குரியவர் என்றே அறிவோம்!’ என்று பதிலளித்தார்கள்.

அப்போது அண்ணலார் (ஸல்) கூறினார்கள்: ‘மக்களே! நான் உங்களை ஒரே இறைவனை வணங்கி அவனுக்கே கிழ்ப்படிந்து வாழும்படி அழைக்கின்றேன். சிலைகளை வண்ங்குவதிலிருந்து காப்பாறிட விரும்புகிறேன். ஆனால் நீங்கள் என் சொல்லை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் உங்களை மிகக் கடுமையான, துன்பமிக்க வேதனையைக் குறித்து எச்சரிக்கின்றேன்’.

குறைஷிகள் இந்தச் செய்தியைச் செவிமடுத்தவுடன் கடுங்கோபமுற்றார்கள். அபூலஹப் வெகுண்டுடெழுந்து, ‘என்ன இதற்காகத்தானா நீர் எங்களை அழைத்தீர்?’ என்று கேட்டான்.

இதுவே இஸ்லாமிய தூதின் பொதுவான அழைப்பாக இருந்தது, இப்போது இறைவனின் திருத்தூதர் தௌ;ளத் தெளிவாகவும் வெளிப்படையாகவும், தம்மை எதனைச் சொல்வதற்காக இறைவன் நியமித்துள்ளான் என்பதையும் தாம் ஒவ்வொருவரையும் எதன்பால் அழைத்துக் கொண்டிருக்கின்றார்களோ அந்த ராஜபாட்டை எது என்பதையும் அறிவித்து விட்டாhகள். இப்போது இறைத்தூதரின் திருநாவிலிருந்தே பின்வரும் செய்தி அறிவிக்கப்பட்டது. உண்மையில் இந்த எல்லையற்ற பேரரசின் படைப்பாளன் மற்றும் உரிமையாளன் அல்லாஹ் மட்டுமேயாவான். மனிதனையும் அவன்தான் படைத்திட்டான். அவனே மனிதனின் அதிபதியையும் ஆவான். மனிதனின் அந்தஸ்து, அவன் அல்லாஹ்வின் அடிமை – பணியாள் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை, அல்லாஹ்விற்கு மட்டுமே பணிந்து வாழ்வது தான் அவனது கடமையாகும். அல்லாஹ்வை விட்டுவிட்டு பிறர் முன்னால் தலைவணங்குவது அல்லது அல்லாஹ்வுடன் பிறரை இணை கறிபிப்பது அனைத்துமே மனிதனுக்கு அவனது அதிபதியின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் அந்தஸ்திற்கு மாற்றமானதாகும். உண்மையில் ஒரே இறைவன்தான் மனிதனின் மற்றும் பேரண்டம் முழுவதின் படைப்பாளனும், வணக்கத்திற்குரிய கடவுளும், ஆட்சியாளனும் ஆவான். அவனது இந்தப் பேரரசில் மனிதன் சுயாதிகாரம் உடையவனும் அல்லன். மற்றவர் எவருடைய அடிமையும் அல்லன். மனிதனுக்கு அல்லாஹ்வைத் தவிர கீழ்ப்படிதலுக்கும் அடிமைப்படுவதற்கும் வணங்குவதற்கும் உரியவர் வேறொருவர் இலர். அல்லாஹ் மனிதனுக்கு சில அதிகாரங்களை அளித்து அனுப்பியுள்ள இந்த உலக வாழ்க்கை, அவனுக்குத் தேர்வுக்குரிய சோதனைக்குரிய ஒரு காலகட்டமாகும். இந்தத் தேர்வுக் காலத்திற்குப் பிறகு அவன் அவசியம் அல்லாஹ்விடம் சென்றாக வேண்டும். அவன் மனிதனின் எல்லாச் செயல்களையும் ஆராய்ந்து மனிதர்களில் எவர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றார், எவர் தோல்வியடைந்தார் என்று தீர்ப்பளிப்பான்.

இந்த அறிவிப்பு சாதாரண அறிவிப்பாக இருக்கவில்லை. இது குறைஷிகளுக்கிடையேயும் பிற மக்களுக்குக்கிடையேயும் காட்டுத் தீயெனப் பற்றிக் கொண்டது. நாலா பக்கங்களிலும் இந்த அறிவிப்பைப் பற்றிய சர்ச்சைகள் எழத் தொடங்கின. சில நாட்களுக்குப் பிறகு அண்ணலார், அலீ (ரலி) அவர்களிடம் ‘விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறினார்கள். இந்த விருந்தில் அப்துல் முத்தலிபின் குடும்பத்தார் அழைக்கப்பட்டார்கள். ஹம்ஸா (ரலி), அபூதாலிப், அப்பாஸ் (ரலி) ஆகியோர் கலந்து கொண்டார்கள். அனைவரும் உணவுண்டு முடிந்தபின் அண்ணலார் (ஸல்) எழுந்து நின்று பின்வருமாறு கூறினார்கள் ‘நான் இம்மை மறுமை இரண்டிற்கும் போதுமான வழிகாட்டுதலைத் தருகின்ற ஒரு செய்தியைச் சுமந்து கொண்டு வந்திக்கின்றேன். இந்தப் பெருஞ்சுமையைச் சுமப்பதில் என்னுடன் ஒத்துழைப்பவர்கள் யார்?’

இது மிகக் கடினமானதொரு கட்டமாக இருந்தது, இந்தப் பெருஞ்சுமையைச் சுமப்பதில் அண்ணலாருடன் ஒத்துழைப்பதன் பொருள், குடும்பத்தை மட்டுமல்லாமல் குலம், நகர மக்கள் ஏன் அரபுலகம் முழுவதையும் எதிர்த்துப் போராடிடத் தயாராகி விடுவதாக இருந்தது. அதுவும் அதற்கு பகரமாக மறுமை வாழ்வில் வெற்றி கிடைக்கும் என்பதற்காகவும் அதிபதியாம் அல்லாஹ்வின் திருச்சமூகத்தில் உயர்வும் அந்தஸ்தும் கிடைக்கும் என்பதற்காகவும் மட்டுமே அவ்விதம் தயாராகி விடுவதாக இருந்தது. இதனைத் தவிர வேறெந்தப் பலனும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவே இல்லை. எனவே சபை முழுவதையும் நிசப்தம் கவ்விக் கொண்டது. இளம் வயதினரான அலீ (ரலி) அவர்கள் மட்டுமே எழுந்து பின்வருமாறு முழங்கலானார்கள்:

‘என் கண்கள் நோய் வாய்ப்பட்டிருக்கின்றன. (அவை வலித்துக் கொண்டிருந்த போதிலும்) என் பாதங்கள் மெலிந்தவையே என்றாலும், இவர்கள் அனைவரையும் விட நானே சிறய வியதுடையவனாக இருந்த போதிலும் நான் உங்களுடன் ஒத்துழைப்பேன்’.

பதின்மூன்று வயதுச் சிறுவனொருவன் எதனையும் பொருட்படுத்தாமல், சற்றும் அச்சமில்லாமல் எத்துணைப் பெரிய முடிவை எடுத்து விட்டான்! குறைஷிகளுக்கு இந்தக் காட்சி வியப்பூட்டுவதாக இருந்தது.

அழைப்புப் பணிக்கு எதிர்ப்பு வருதல்

இதற்குள் இஸ்லாமியக் குழுவில் நாற்பது பேரைவிட அதிகமானவர்கள் இணைந்து விட்டிருந்தார்கள். இப்போது ஒரு நாள் அண்ணலார் (ஸல்) புனித கஅபாவிற்குச் சென்று ஏகத்துவச் செய்தியை பிரகடனம் செய்தார்கள். இணைவைப்போர் இதனைப் புனித கஅபாவிற்கு இழைப்பட்ட அவமானம் என்று கருதினார்கள். அண்ணலார் (ஸல்) இந்தப் பிரகடனத்தைச் செய்தவுடன் பெரும் அமளியென்று எழுந்தது. எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் அண்ணலாரின் மீது பாய்ந்தார்கள். ஹாரிஸ் பின் அபூஹாலா (ரலி) அவர்கள் அண்ணலாருக்கு உதவிட ஒடினார்கள். ஆனால் அவர் நாலா பக்கங்களிலிருந்தும் பொழியப்பட்ட வாள் விச்சீகளால் தாக்கப்ப்டார். எனவே ஷஹீதாகி விழ்ந்தார். இதுவே இஸ்லாத்தின் பாதையில் செய்யப்பட்ட முதல் உயிர்த் தியாகமாகும். அல்லாஹ்வின் அருளால் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். ஒரு விதமாக அந்த அமளி அடங்கிவிட்டது.

எதிர்ப்பு எழுந்ததற்கான காரணங்கள்

இஸ்லாமிய அழைப்பின் இந்தப் பிரகடனம் அனைவரையும் விட அதிகமாக குறைஷிகளுக்கே கலக்கத்தையும் கவலையும் அளிப்பதாக இருந்தது. அவர்கள்தாம், இந்த அழைப்புக்கு மிகப் பெரும் எதிரிகளாக விளங்கினார்கள். அப்போது மக்கா நகருக்கு அரபுகளிடையே கிட்டியிருந்த கண்ணியமும் மதிப்பும் இறையில்லமான கஅபாவின் காரணத்திலேயே கிட்டியிருந்தது. குறைஷிகளின் குடும்பத்தினர், கஅபாவின் பொறுப்பாளர்களாகவும் தொண்டர்களாகவும் இருந்துவந்தனர். இவ்விதம் குறைஷிகளின் ஒரு வகையான மத ஆதிக்கம் ஏறத்தாழ அரபுலம் முழுவதுமே நிலைபெற்றிருந்தது. மத விவகாரத்தில் மக்கள் அவர்களையே நம்பியிருந்தனர். அவர்களிடம் ஆலோசனை கலந்துவந்தனர். அவர்களின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையுமே பெரும்பாலும் நம்பி வந்தனர். குறைஷிகள் எந்த (போலி) மதத்தின் பிரதிநிதிகளாய் இருந்து வந்தார்களோ அந்த மதத்தின் மீது தான் இஸ்லாமிய அழைப்பின் முதல் அடி மிகக் கடுமையாக விழந்தது!

தம் முன்னோர்களின் மார்க்கத்தின் மீது அறியாமை மிக்க சமூகங்கள் கண்மூடித்தனமான (வெறி கலந்த) பற்றுதல் கொண்டிருந்தன. அந்தப் பற்றுதலுக்கு முன்னால், எந்த அறிவுப் பூர்வமான விஷயத்தையும் கொண்டு செல்வதற்கு அவை தயாராக இல்லை. இது அனைவரும் அறிந்த ஒன்றே. எனவேதான் மக்கள் இந்தப் புதிய அழைப்பைக் கேட்டு ஆத்திரமடைந்து வந்தார்கள். மேலும் ‘இந்த அழைப்பு வேர் பிடித்துப் பரவிட ஆரம்பித்தால் நமது அதிகாரம் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிடும், நமக்குக் கிடைத்திருக்கும் இந்த மதத் தலைமை, தானாகவே பறி போய்விடும்’ என்பதை அதிகாரத்திலிருந்த குறைஷிகள் நன்கு புரிந்து கொண்டார்கள்.

இந்த ரீதியில் ஒருவன் எந்த அளவிற்குப் பெரிய பதவியிலும் அந்தஸ்திலும் இருக்கின்றானோ அந்த அளவிற்கு அதிகமாக இஸ்லாமிய இயக்கத்தை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்தான். மேலும் குறைஷிகளிடையே ஏராளமான தீய குணங்கள் பரவியிருந்தன. பெரும் முக்கியஸ்தர்கள்கூட அந்தத் தீமைகளில் மூழ்கியிருந்தார்கள். இவை அனைத்தும் இருந்தும்கூட அவர்களின் சமய அந்தஸ்துதான் அவர்களை மக்களின் பார்வையில் தாழ்வானவர்களாய் ஆகிவிடாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தது. அவர்கள் (கஅபாவின் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையில்) மக்களிடம் புனிதத்துவமும் அந்தஸ்தும் பெற்றிருந்த காரணத்தால் மக்கள் அவர்களின் குறைகளைக் கண்டு கொள்ளாமலே இருந்தனர்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் ஒருபுறம் சிலைவணக்கத்தின் தீமைகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பதிலாக தூய ஏகத்துவக் கொள்கையின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள். ‘நம் செயல்களுக்கு மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லவேண்டும்’ என்னும் உணர்வையும் ‘அனைவரும் இறைவனின் முன்னே சென்று நின்றேயாக வேண்டும்’ என்னும் அச்சத்தையும் ஊட்டிக் கொண்டிருந்தார்கள். மற்றொருபுறம் மனிதனின் அடிப்படை ஒழுக்கங்களில் காணப்படும் ஒவ்வொரு பலவீனத்தையும் வெளிப்படையாக எடுத்துரைத்தார்கள். அவற்றின் விளைவுகளைக் குறித்து அச்சுறுத்தி எச்சரித்தார்கள். அவற்றை விட்டு விலகிக் கொள்ளும்படி அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

இத்தகைய கருத்துக்கள் அந்தப் ‘பெரிய’ மனிதர்களைக் கடும் கலக்கத்தில் ஆழ்த்திவந்தன. ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை அவர்களை ஆட்டுவித்தது. இந்தக் கருத்துக்கள் மிகவும் தூய்மையானதாக இருந்தன. ஆனால் அவை சரியானவையென்று அவர்களால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களே அத்தீமைகளின் மொத்த உருவமாய் இருந்தனர். மேலும் அவற்றை விட்டுவிடும் மனவலிமையும் தம்மிடம் இல்லாதவர்களாய் அவர்கள் விளங்கினர்.

இந்நிலையில், மக்கள் முன்னே இந்தச் செய்திகள் வரும்போது மக்களின் கண்களில் நமது மதிப்பும் அந்தஸ்தும் வீழ்ந்துவருகின்றன என்றும், நம் முன்னால் பேசாவிட்டாலும் நமக்குப் பின்னால் நம்மை விமர்சிக்கின்றார்கள் என்றும் அவர்கள் உணர்ந்தார்கள். இந்த ஒரு விஷயமே அவர்களின் எரிச்சலை அதிகப்படுத்திடப் போதுமானதாய் இருந்தது. திருக்குர்ஆனில் தொடர்ந்து தீயவர்கள் கெட்ட நடத்தை கொண்டவர்களைப் பற்றிசாடும் வசனங்கள் இறங்கிக் கொண்டிருந்தன. அவர்களுடைய இந்தத் தீவினைகளுக்கு மிகமிகக் கடுமையான வேதனைகள் உண்டு என எச்சரிக்கைகள் தரப்பட்டு வந்தன. இந்த வசனங்களில் பொதுவான முறையில் விஷயங்கள் சொல்லப்பட்டு வந்தன என்றாலும் இவை மக்களிடையே பரவும்போது ஒவ்வொருவரும் இவை யாரையெல்லாம் குறிக்கின்றன என்று புரிந்து கொண்டார்கள்.

இஸ்லாமிய இயக்கத்தை எதிர்ப்பதற்கும் பகைப்பதற்கும் இந்தக் காரணங்களே போதுமானவையாய் இருந்தன. இந்த அகராதி வர்க்கத்தினர், ‘இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர்களாக இருந்த வெகு சிலருக்கு எதிராக வெகுண்டெழுந்து, வாளேந்தி இந்த ‘அபாயத்தை’ ஒரேயடியாக ஒழித்துக் கட்டியிக்க முடியும். மனிதர்கள் வாயிலாக மனித சமுதாயத்தின் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்கும் ஒரே தீர்வாகத் திகழும் அந்த இறைக் கருணையான இஸ்லாமிய நெறி உலகம் முழுமைக்கும் கிடைத்திட வேண்டும் என முடிவு செய்து விட்டிருந்தது! எனவே அந்த நேரத்தில் குறைஷிகள் இப்படியொரு அதிரடி நடவடிக்கை எடுக்க முடியாதபடி சில காரணங்கள் அங்கு உருவாகிவிட்டிருந்தன.

எதிர்ப்பாளர்களுக்கிருந்த இக்கடான நிலைமைகள்

சமீபத்தில்தான் குறைஷிகள் உள்நாட்டுப் போர்களின் காரணத்தால் பெரும் அழிவுக்கும் சேத்திற்கும் உள்ளாகியிருந்தனர். ஃபிஜார் போருக்குப்பின் ‘போர்’ என்ற சொல்லைக் கேட்டாலே அஞசும் அளவிற்கு அச்சமுற்று விட்டிருந்தார்கள். பல்வேறு குலங்களிலிருந்தும் விடுபட்டு இஸ்லாமியக் குழுவில் இணைந்து விட்டிருந்த இந்தச் சிறு தொகையினரான முஸ்லிம்களைக் கொலை செய்வதின் பொருள். அரபுலகத்தின் பல்வேறு குலங்களுடன் போர் தொடங்குவதாகிவிடும். ஏனெனில் அப்போது ஒரு தனி மனிதனைக் கொல்வது என்பது உண்மையில் அவன் சார்ந்துள்ள அந்தக் குலத்திற்கெதிரான போர்ப் பிரகடனம் செய்வதாகக் கருதப்பட்டுவந்தது. இவ்விதம் மக்கா நகரம் முழுவதும் போர்களமாக மாறிவிடும் அபாயம் இருந்தது. எனவே இந்தக் காலகட்டத்தில் இந்த இயக்கத்தை நசுக்கிட வேறு சில வழிமுறைகள் கையாளப்பட்டன.

அந்த வழிமுறைகள் இவைதாம். எதிரிகள் அழைப்புப் பணியையும் அழைப்பாளரையும் கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினார்கள். தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். முஸ்லிம்களைப் பாதையில் காணும்போது திட்டினார்கள், வசைப்பாடினார்கள், கொச்சை வார்த்தைகளை வீசினார்கள், புதிய புதிய பாணிகளில் தவறான பொய்ச் செய்திகளும், புனைந்துரைகளும், அபாண்ட புளுகுகளும் கட்டிவிட்டுப் பிரச்சாரம் செய்தார்கள். ‘பைத்தியக்காரர்’ என்றும் ‘சித்தம் கலங்கியவர்’ என்றும் பட்டம் சூட்டினார்கள். ‘மந்திரவாதி’ என்று விளம்பரம் செய்தார்கள் அண்ணலாரின் பேச்சைக் கேட்கக்கூடாது என்று மக்களைத் தடுத்தார்கள்.

சூழ்நிலையை எதிர்த்துப் போராடல்

அப்பொழுது உருவாகிய சூழ்நிலையை எதிர்த்துப் போராடுவதற்காக இறக்கியருளபட்;ட குர்ஆனின் அத்தியாங்களில் தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வந்தன. எதிர்ப்பாளர்களின் ஆட்சேபனைகள் மற்றும் கேள்விகளுக்குரிய அறிவுப் பூர்வமான பொருத்தமான பதில்கள் அவற்றில் இருந்தன. எடுத்துக்காட்டாக 68 ஆவது அத்தியாயம் அல்கலமில் அண்ணலாரின் மன அறுதலுக்காகப் பின்வருமாறு கூறப்பட்டது:-

‘உங்கள் மீது அல்லாஹ்வின் பெருங்கொடையும் கருணையும் உள்ளது. நீங்கள் சித்தம் கலங்கியவர் அல்லர். உங்கள் மீது எல்லையற்ற அருள்கள் பொழியப்பட்டுள்ளன. எவருடைய சித்தம் கலங்கி விட்டிருக்கின்றது என்று விரைவில் தெரிந்துவிடும். யார் நேர் வழியில் இருக்கின்றார், யார் வழி பிறழ்ந்து செல்கின்றார் என்பதை உமது அதிபதி நன்கு அறிந்தே இருக்கின்றான். இந்த அழைப்பைப் பொய்யென மறுத்துக் கொண்டிருப்பவர்களின் சொல்லை ஒரு போதும் ஏற்காதீர்கள்’.

‘மேலும் நீங்கள் உங்கள் இயக்கத்தையும் அழைப்புப் பணியையும் சற்று மட்டுப்படுத்தித் தளர விட்டுவிட்டால் நாமும் சற்று மென்மையாகி விடலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றுவது உங்கள் பணியன்று. நீங்கள் சமர்ப்பித்துக் கொண்டிருப்பவற்றை ஏற்க மறுப்பவர்களின் விவகாரத்தை எம்மிடம் நீர் விட்டுவிடும்! அவர்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் அவகாசத்தின் பொருள் என்ன என்று அவர்களுக்கு விரைவில் தெரிந்துவிடும்.’

‘நான் உங்களிடம் ஏதேனும் கேட்டிகின்றேனா அல்லது என் சுயநலத்திற்காக உங்களிடம் எதையும் பெற விரும்புகின்றறேனா அல்லது என் கருத்திற்கெதிராக உங்களிடம் அறிவுப்பூர்வமான ஆதாரம் ஏதும் இருக்கின்றதா?’ என்று நீர் அவர்களிடம் வினவும்! அப்படியேதும் இல்லையென்பது வெளிப்படை. எனவே நீர் நிலைகுலையாமல் முழு உறுதிப்பாட்டுடன் உமது பணியில் நிலைத்திரும்! நீரும் உமது தோழர்களும் மிகுந்த பொறுமையுடன் நிலைமைகளை எதிர்த்துப் போராடுங்கள். இந்தச் சூழ்நிலைகள் தமக்குரிய வேளை வரும்போது மாறிவிடும்’ (இத்தகைய கருத்துக்கள் பொதிந்த வசனங்கள் இறங்கின.)

இந்த உரை ஓர் எடுத்துக்காட்டாகும். இத்தகைய உரைகள் தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்தன, பின்வரும் கருத்து அவற்றில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது: ‘சத்திய அழைப்பாளரான இவர் சித்தம் கலங்கியவருமல்லர், குறிகாரரும் அல்லர், மந்திரவாதியும் அல்லர், குறிகாரர்கள், கவிஞர்கள், மந்திரவாதிகள் ஆகியோருக்கேயுரிய தனிப்பண்புகளை முன்னே வைத்து அவற்றில் எநதப் பண்பு இவரிடம் காணப்படுகின்றது என்று பாருங்கள்! இவர் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் வாக்கிற்கும் இவரது ஒவ்வொரு செய்கையிலிருந்து வெளிப்படும் உயர் குணத்திற்கும், உங்களிடையே இவர் வாழந்து கொணடிருக்கும் வாழக்கைக்கும் கவிஞர்கள், குறிகாரர்கள் மற்றும் மந்திரவாதிகளின் பண்புகளுடனும் அடையாளங்களுடனும் தொடர்பே இல்லையே!’

இஸ்லாமிய அழைப்பின்கால் மக்களின் கவனம் திரும்புதல்

இத்தகைய பொய்யான விஷயங்களைப் பிரபலப்படுத்தி மக்களைத் தடுத்திட மக்காவாசிகள் எந்த அளவிற்கு முயற்சி செய்தார்களோ அந்த அளவுக்கு மக்களிடையே ‘இவர் என்னதான் சொல்லுகிறார் என்று பார்ப்போம்!’ என்னும் ஆவல் அதிகரிக்கலாயிற்று. எனவே அரபுலகின் பிற பகுதிகளிலிருந்து ஹஜ் பருவத்திலோ அல்லது மற்ற நேரங்களிலோ மக்கா நகருக்கு வந்து கொண்டிருந்தவர்களில் பலர், ஒளிந்தும் மறைந்தும் அண்ணலாரின் திருச்சமூகத்தில் வந்து விடுவார்கள். அங்கு சென்று அண்ணலாரின் உயர் குணங்களைப் பார்க்கும் போதும் இறைவசனங்களைச் செவி மடுக்கும் போதும் அவர்களின் உள்ளமே மாறிவிடும். அதிலிருந்து தத்தம் பகுதிகளுக்குச் சென்று இஸ்லாத்தின் அழைப்பைப் பரப்பத் தொடங்கிவிடுவார்கள்.

இந்தச் செய்தி மற்ற நகரங்களிலும் பரவியபோது தொலைதூரப் பகுதிகளிலிருந்து மக்கள் அண்ணலாரைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவென்றே மக்கா நகருக்கு வர ஆரம்பித்தார்கள். இத்தகைய நிகழ்சிகளில் அபூதர் (ரலி) அவர்களின் நிகழ்ச்சி நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

கிஃபாரி குலத்தினர், குறைஷிகள் வாணிபத்திற்காக ஷாம் நகருக்கு செல்லுகின்ற வழியில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டிபோது அக்குலத்தினரான அபூதர் (ரலி) அவர்களின் உள்ளதில் அண்ணலாரைச் சந்திக்கும் ஆர்வம் பிறந்தது. அபூதர் (ரலி) அவர்கள் தம் சகோதரர் அனீஸ் அவர்களை அழைத்து ‘தம்மை நபி என்று வாதிக்கும் இந்த மனிதரின் போதனை என்னவென்று நீங்கள் சென்று பார்த்துவிட்டு வாருங்கள்’ என்று கூறி மக்கா நகருக்கு அனுப்பிவைத்தார். அனிஸ் மக்கா நகருக்கு வந்தார். அண்ணலாரைக் குறித்து விவரமறிந்துகொண்டு திரும்பிவந்து தம் சகோதரரிடம் கூறினார்:

‘அந்த மனிதர் மிக உயர்ந்த நற்குணங்களையுடைய மனிதர் ஆவார். நறிகுணங்களைக் கைக்கொள்ளும்படி அறிவுறுத்துகின்றார். ஒரே இறைவனுக்கு அடிபணிந்து வாழும்படி மக்களை அழைக்கின்றார். அவர் சமர்ப்பிக்கின்ற வாக்கு கவிதையிலிருந்து வேறுபட்டதாகும்.’

அபூதர் (ரலி) அவர்களுக்கு இந்தச் சுருக்கமான தகவல் நிம்மதியளிக்கவில்லை. தாமே பயணம் செய்ய ஆயத்தமாகிவிட்டார். மக்கா நகரை அடைந்தபோது அச்சத்தின் காரணத்தால் அண்ணலாரின் பெயரைக் கூட கேட்டு தெரிந்துகொள்ள முடியவில்லை. இறை இல்லமான ஹரம் ஷரீஃபில் அலீ (ரலி) அவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டது. மூன்று நாட்கள் அலீ (ரலி) அவர்களின் விருந்தினராக இருந்தார்கள். அதன் பிறகு தான். தம் பயணத்தின் நோக்கம் என்னவென்பதைக் கூறிடும் துணிவு வந்தது. அவரது விருப்பத்தைச் செவியுற்ற அலீ (ரலி) அவர்கள் அபூதர் அவர்களை அண்ணலாரின்; திருச்சமூகத்தில் கொண்டு சென்றார்கள் அங்கு சென்ற பின்னர், அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அண்ணலார் (ஸல்), அபூதர் (ரலி) அவர்களுக்கு ‘இனி உம் குலத்தரிhடம் நீர் திரும்பிச் செல்லும்!’ என்று கட்டளையிட்டார். தூய ஏகத்துவ நம்பிக்கையின் தாக்கம் அப்போது அவர்களின் உள்ளத்தில் பொங்கிப் பெருகியது. அந்த நம்பிக்கை எல்லா தன்னலங்களையும் அச்சங்களையும் உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டிருந்தது. எனவே, அபூதர் (ரலி) அண்ணலாரிடமிருந்து புறப்பட்டவுடன் இறையில்லமான ஹரம் ஷரீபில் வந்து பின்வருமாறு அறைகூவினார்கள்:

‘அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’

‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என்று நான் சான்று பகர்கின்றேன்’. இந்த முழக்கத்தைச் செவிமடுத்தவுடன் மக்கள், நாற்புறங்களிலிருந்தும் ஒடிவந்து அபூதரை அடிக்கலானார்கள். அபூதர் (ரலி) அவர்கள் அடி வாங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்துவிட்டார்கள். அபூதரை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி அவர்கள் கூறினார்கள்: ‘இவர் கிஃபாரி குலத்தவர். உங்கள் வியாபாரக் குழு இவருடைய குலத்தவர் வசிக்கும் இடத்தைக் கடந்தே செல்கிறது. அவர்கள் உங்கள் பாதையை அடைத்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார்கள். இதனைச் செவி மடுத்தவுடன் மக்கள் அபூதரை விட்டுவிட்டார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரிடம் திரும்பிச் சென்று இஸ்லாமிய அழைப்பு விடுத்தபோது கிஃபாரி குலத்தாரில் ஏறத்தாழ பாதிப்பேர் அப்போதே முஸ்லிம்களாகி விட்டனர். கிஃபாரி குலத்தாருக்கருகில்தான் அஸ்லம் குலத்தார் வசித்துவந்தனர். கிஃபாரி குலத்தாரின் தாக்கத்தால் அவர்களும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆக இஸ்லாத்தின் அழைப்பு இவ்விதம் பரவலாயிற்று. இந்த விஷயம் எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் துன்பம் தரக்கூடிதாயிருந்தது. எனவே அவர்களில் சிலர் வேறு வழியில்லாமல் பெரியவர் அபூதாலிப் அவர்களிடம் முறையிடச் சென்றனர். அந்தக் குழுவில் குறைஷித் தலைவர்கள் அனைவரும் இருந்தனர். அவர்கள் அபூதாலிப் அவர்களிடம் கூறினார்கள்:

‘உங்கள் சகோதரர் மகன் எங்கள் கடவுள்களை இழிவு படுத்துகின்றார். நம் முன்னோர்களை வழிகெட்டவர்கள் என்றும் நம் அனைவரையும் தவறிழைப்போர், அறவீனர்கள் என்றும் கூறுகின்றார். எனவே தாங்கள் இரண்டிலொன்று செய்யுங்கள். ஒன்று, தாங்கள் அவரைப் பழிவாங்க தாங்கள் தடைகல்லாக நிற்காமல் எங்களுக்கிடையேயிருந்து விலகி நில்லுங்கள், நாங்களே இந்த விவகாரத்தைத் தீர்த்துக் கொள்கிறோம் அல்லது அவருக்கு நீங்கள் புத்திமதி கூறுங்கள்.’

‘விவகாரம் முற்றிவிட்டது. மேலும் நாம் எதுவரை குறைஷிகள் அனைவரையும் தனியாக எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்க முடியும்’ என்று அபூதாலிப் அவர்கள் எண்ணியதால் அண்ணலாரிடம் கூறினார்கள்:

‘அன்பு மகனே, நான் தாங்க முடியாத அளவிற்கு சுமையை என் மீது சுமத்திவிடாதே!’

பெரியவர் அபூதாலிபின் பாதங்களும் தடுமாறத் தொடங்கி விட்டன என்று அறிந்த அண்ணலார் (ஸல்) மிகவும் அமைதியாகக் கூறலானார்கள்:

இறைவன் மீதாணையாக! இவர்கள் என் ஒரு கரத்தில் சூரியனையும் இன்னோரு கரத்தில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் கூட நான் என் கடமையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டேன். இறைவன் இந்தப் பணியை முழுமையடையச் செய்வான் அல்லது நான் இந்தப் பணியிலேயே என் உயிரையும் விட்டுவிடுவேன்.’

அண்ணலாரின் இந்த மன உறுதியையும் துணிச்சலான முடிவையும் கண்டு அபூதாலிபுக்கும் சற்றும் ஊக்கம் பிறந்தது. அபூதாலிபும் ‘சரி! அப்படியெனில் நீர் செல்லும்! இனி உம்மை எவராலும் எதுவும் செய்ய முடியாது!’ என்று கூறினார்கள்.

எதரிகளின் அசையூட்டல்கள்

குறைஷிகள் தமது இந்த உபாயமும் பலிக்காமல் நிராசையடைந்து விடவே, இறுதி ஆயுதமாக கடுமையாக முடியாவிட்டால் மென்மையாக நடந்தாவது இந்தப் புதிய இயக்கத்தை ஒமித்துக் கட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். எனவே உத்பா பின் ரபீஅவை அண்ணலாரிடம் அனுப்பி வைத்தார்கள். அவன் வந்து கூறலானான்: ‘முஹம்மதே! நீர் தான் விரும்புகின்றீர் என்று எங்களுக்குக் கூறும்! மக்கா நகரின் ஆட்சியதிகாரத்தை விரும்புகின்றீரா? பெரிய செல்வாக்கு மிக்க குடும்பம் ஒன்றில் திருமணம் செய்ய விரும்புகின்றீரா? அல்லது செல்வக்குவியலை விரும்புகின்றீரா? இவையனைத்துமே எங்களால் தர முடியும். நீர் எதற்காக ஏன் இந்த (அழைப்பு)ப் பணிகளை யெல்லாம் செய்து வருகின்றீர், மக்கா நகரம் முழுவதையும் உமது ஆட்சியிக் கீழ் தந்துவிடவும் நீர் விரும்பும் எதனையும் செய்து தரவும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் நீர் இந்த அழைப்புப் பணியிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்.’

எதிரிகளால் இவ்வளவுதான் சிந்திக்கமுடிந்தது. இயக்கம் ஒன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்க (அல்லது அழைப்பொன்று விடுக்கப்பட்டுக் கொண்டிருக்க) அதன் பின்னே உலகாயத நோக்கம் ஏதும் ஒளிந்திராமலும் இருக்கும் என்று அவர்களால் எண்ணப்பார்க்கவும் முடியவில்லை. இறை உவப்பைக் கருதியே, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காகவேகூட ஒரு பணியைச் செய்திட முடியும் என்று அவர்களால் உடமையயும், ஆட்சியதிகாரத்திற்காகவும் செல்வம் குவிப்பதற்காகவும் தான் அர்பணிக்க முடியும் என்று மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். மறுமையின் நிரந்தர வாழ்வில் வெற்றி பெறுவதற்காகவும், இவர்கள் இத்தகையை விலை கொடுக்க முன்வர முடியும் என்று அவர்கள் அறியாதவர்களாய் இருந்தனர்! தம் கோரிக்கையை அண்ணலார் (ஸல்) நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள் என்று உத்பா உறுதியாக நம்பினான். ஆனால் அண்ணலார் அவனுக்கு பதிலளிக்கும் வகையில் திருக்குர்ஆனில் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள்இ அவ்வசனங்களில் ஏகத்துவ அழைப்பும் அண்ணலாரின் தூதுத்துவமும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தன.

உத்பா இதனைக் கேட்டு திரும்பிச் சென்றுவிட்டான். எந்த அளவிற்குத் தாக்கம் பெற்றுச் சென்றான் எனில் குறைஷித் தலைவர்களிடம் நடந்தவற்றை விவரித்தபோது பின்வருமாறு கூறினான்: ‘முஹம்மத் சமர்ப்பிக்கின்ற வாக்கு கவிதையல்ல வேறு ஏதோ ஒன்று. அவரை அவரது நிலையிலேயே நீங்கள் விட்டுவிட வேண்டும் என்பதே என் கருத்தாகும். அவர் வெற்றியடைந்துவிட்டால் அரபுலகம் முழுவதையும் தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து விடுவார். அதில் உங்களுக்கும் கண்ணியம் உண்டு. அவர் வெற்றி பெறவில்லையென்றால் அரபுகளே அவரை அழித்துவிடுவார்கள்.’ ஆனால் குறைஷிகள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை.

இப்போது ஒரேயொருவழிதான் எஞ்சியிருந்தது. ஒவ்வொரு அசத்தியமும் இந்தக் கட்டத்தில் சத்தியத்திற்கெதிராகக் கையாளுகின்ற வழிதான் அது! வன்முறையையும் பலத்தைiயும் பிரயோகித்து சத்தியத்தின் குரலை ஒடுக்கிட முயல்வதே அந்த வழிமுறை! எனவே குறைஷிகள் முஸ்லிம்கள் மீது, அவர்கள் நிர்பந்தத்திற்குள்ளாகி தம் முடிவை மாற்றிக்கொள்ள நேரிடும் அவவிற்குக் கொடுமைகள் புரிய வேண்டும். எவருக்கு எங்கு வாய்ப்புக் கிடைத்தாலும் அவர்கள் அங்கு முஸ்லிம்களைத் துன்புறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

மூன்றாவது காலகட்டம்

________________________________________

சோதனைகள்

இதுவரை நடைபெற்றிருந்த இஸ்லாமிய அழைப்புப் பணியின் எதிர்வினைவுகள் மூன்று விதங்களில் வெளிப்பட்டிருந்தன:

1. நல்லவர்கள் சிலர் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் ஒரு குழுவாக மாறி இஸ்லாமிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல எல்லாவித தியாகங்களுக்கும் தயாராகிவிட்டனர்.

2.பலர், தம் அறியாமை, சுயநலம் அல்லது தம் முன்னோர்களின் மார்க்கத்தின் மீது கொண்டிருந்த குருட்டுத்தனமான பக்தி ஆகியவற்றின் காரணத்தால் இந்த இயக்கத்தை எதிர்த்திட முனைந்துவிட்டனர்.

3.மக்கா நகரம் மற்றும் குறைஷிகளின் எல்லைகளை யெல்லாம் தாண்டி, இந்தப் புதிய அழைப்பு முன்பிருந்ததைவிட அதிக விசாலமான பகுதிகள் வரை சென்றடையலாயிற்று.

இப்போது இங்கிருந்து புதிய இயக்கத்திற்கும் பழைய அஞ்ஞானத்திற்கும் இடையே கடும் போராட்டம் தொடங்கியது. தமது பழைய மார்க்கத்துடன் பிணைந் திருக்க விரும்பியவர்கள் முழு பலத்துடன் இஸ்லாமிய இயக்கத்தை அழித்திட வரிந்து கட்டிக் கொண்டனர். இஸ்லாத்தை ஏற்பவர்கள் மீது மிகக் காட்டுமிராண்டித் தனமான கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். அவர்களை எல்லா விதத்திலும் இயலாதவர்களாக்கிட முனைந்தனர். எனவே இந்தக் காலகட்டத்தில்தான் குறைஷிகள் செய்த அக்கிரமங்கள், கொடுமைகளின் மிகப் படிப்பினையூட்டும் நிகழ்ச்சிகள் தென்படுகின்றன.

வெப்பம் மிகுந்த அரபு நாட்டில் கடும் வெயிலில் நண்பகல் நேரத்தில் கொதிக்கும் மணலில் முஸ்லிம்களைக் கிடத்துவது. அவர்களுடைய நெஞ்சங்கள் மீது பாரமான கற்களை வைத்து அழுத்துவது, இரும்பை பழுக்கக் காய்ச்சி சூடுபோடுவது, தண்ணீரில் அமிழ்த்துவது, ஈவிரக்கமில்லாமல் அடிப்பது, உதைப்பது ஆக இத்தகைய பெரும் கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டன. அப்போது முஸ்லிம்கள் உயிர் வாழ்வதே கடினமாகிவிட்டது! வரலாற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ள நிரபராதிகள் சிலர் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டுகளாக இங்கே கூறுகின்றோம்.

கப்பாப் (ரலி) அவர்கள் உம்மு அன்மார் என்பவளின் அடிமையாவார். அதுவரை ஏழெட்டுபேரே இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள். அப்போது கப்பாபும் இஸ்லாத்தை தழுவினார்கள். இந்தக் குற்றத்திற்காகத் தான் குறைஷிகளின் கொடுமைகளுக்கு இலக்கானார்கள். குறைஷிகள் ஒருமுறை தரையில் கரியைப் பரப்பி அதில் நெருப்பு மூட்டி, அதன் மீது அவர்களைப் படுக்க வைத்தனர். ஒருவன் அவர்களுக்கு மேலிருந்து நெஞ்சின் மீது காலகளை வைத்து அவர்கள் புரண்டு படுக்காத வண்ணம் அழுத்திக் கொண்டான். இறுதியில் நெப்புப் கங்குகள் முதுகுக்குக் கீழேயே குளிர்ந்து விட்டன. நெடுநாட்கள் கழித்து காப்பாப் (ரலி) அவர்கள் ஒருமுறை தமது எரிந்துபோன முதுகின் மீது உள்சதை வெள்ளையாகத் தெரிகின்ற வடுவைக் காட்டினார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் உமய்யா பின் கலஃப் என்பவனின் அடிமையாக இருந்தார்கள். ஆறேழு பேர் மட்டுமே இஸ்லாத்தை தழுவியிருந்த நிலையில், பிலால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். நண்பகல் நேரத்தில் உமய்யா, பிலால் அவர்களைக் கொதிக்கும் மணலின் மீது படுக்கவைத்து கனமான பாறாங்கல்லை அவர்களுடைய நெஞ்சின்மீது வைத்து ‘இஸ்லாத்தைத் துறந்துவிடு, இல்லையெனில் இப்படியே இறந்துவிடு!’ என்று கூறுவான். ஆனால் அந்த வேதனைமிக்க நிலையிலும்கூட பிலால் (ரலி) அவர்களின் நாவிலிருந்து ‘அஹத் அஹத் – ஏகன் ஏகன்’ என்னும் சொற்களே வெளிப்படும். அவர்களுடைய எஜமான் அவர்களின் கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் ஒப்படைத்து விடுவான். அச்சிறுவர்கள் பிலால் அவர்களை நகரின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிவரை இழுத்துக் கொண்டு திரிவார்கள்.

அம்மார் (ரலி) அவர்கள் யமன் நாட்டில் வசித்து வந்தார்கள். ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய துணிவுமிக்க ஒரு சிலரில் இவரும் ஒருவர். இவர் இஸ்லாத்தை தழுவியபோது குறைஷிகள் இவரைத் தரையில் கிடத்தி மூர்ச்சையாகும் அளவிற்கு அடித்தார்கள்.

லபனிய்யா (ரலி) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணாவார். உமர் (ரலி) அவர்கள் தாம் முஸ்லிமாவதற்கு முன்பு இவர்களை தாமே களைத்துவிடும் அளவிற்கு அடிப்பார்கள். ஆனால் நல்லடியாரான இந்தப் பெண்மணி, ‘நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை யெனில் இறைவன் உம்மிடம் அதற்காகப் பழிவாங்குவான்’ என்று மட்டுமே கூறுவார்.

சுபைரா (ரலி) இவர்களும் உமர் (ரலி) அவர்களுடைய வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தார்கள். ஒருமுறை அபூஜஹ்ல் இவர்களைக் குருடாகிவிடும் அளவிற்கு அடித்தான்.

ஆக ஆண்களிலும், பெண்களிலும் விதவிதமாகத் துன்புறுத்தப்பட்டு வந்த ஆதரவற்ற, இயலாமைமிக்க முஸ்லிம்கள் பலர் இருந்தனர். ஆனால் இந்தக் கொடுமைகளெல்லாம் அந்த முஸ்லிம்களில் ஒருவரையும் இஸ்லாத்தை துறந்திட செய்ய முடியவில்லை. இந்த வலிமையற்ற குற்றமற்ற முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பட்ட போது இவர்கள் பால் மக்களின் கவனம் ஈர்க்கப்படத்தான் செய்தது. முஸ்லிம்களின் இந்த நிலை, இத்தனைத் துண்பங்களையும் அனுபவித்துக் கொண்டு இஸ்லாத்தை விடாப்பிடியாகப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும்படி இவர்களைத் தூண்டிடும் விஷயம் எது? எதற்காக இவர்கள் இத்தனைத் துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு இஸ்லாத்தைப் பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தித்திட வைத்தது. இந்த முஸ்லிம்கள், தம் நற்குணங்களைப் பொறுத்த அளவிலும் கொடுக்கல் வாங்கல் மற்ற மனித உறவுகள் ஆகியவற்றைப் பொறுத்த அளவிலும் மிகச் சிறந்த மனிதர்கள் என்பதையும், ‘நாங்கள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெதையும், வேறெவரையும் எங்கள் ரப்பாக (எஜமானாக, அதிபதியாக, வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் உரியவனாக) எடுத்துக் கொள்ள மாட்டோம், அவனை மட்டுமே வணங்கி, அவனுக்கு மட்டுமே அடிமைப்பட்டு கீழ்ப்படிந்து வாழ்வோhம்’ என்று கூறுகின்றார்கள் என்பதைத் தவிர இவர்கள் செய்த குற்றம் வேறெதுவுமில்லை என்பதையும் அனைவரும் அறிந்திருந்தனர்.

அநீதிக்குள்ளாக்கப்பட்ட நிரகராதிகளான இந்த முஸ்லிம்களின் நிலைகுலையாத இந்தப் பண்பு, மக்களுக்கு முன்னால் ஒரு கேள்விக்குறியாக நின்று கொண்டிருந்தது. விரைப்பும் வன்மையும் இருந்த அவர்களின் சித்தத்தில் ஒரு மென்மை அரும்பிக் கொண்டிருந்தது. அவர்கள் இந்தப் புதிய இயக்கத்தை அருகேயிருந்து பார்த்திடவும், புரிந்து கொள்ளவும் தலைப்பட்டனர். வரலாற்றில் சத்தியவாதிகளின் நிராதரவான அநீதிக் குள்ளான நிலையும், குற்றமற்ற தன்மைiயும் சத்தியத்தின் வெற்றிக்கான படிகளாகவே எப்போதும் அமைந்து வந்திருக்கின்றன. எனவே தற்போதும், ஒருபுறம் கொடுமைகள் இழைக்கப்பட்டு வந்தன. ஆனால் மறுபுறம் இஸ்லாமிய இயக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே சென்றது. மக்கா நகரில் எவரேனும் ஒரு வராவது இஸ்லாத்தைத் தழுவிக் கொள்ளாத குடும்பம் ஏதும் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. இதன் காரணமாகவே இஸ்லாத்தின் எதிரிகள் இன்னும் அதிக சினத்திற்கும் எரிச்சலுக்கும் உள்ளாகி விட்டனர். தமது சகோதரர்கள், சகோதரர் மக்கள், சகோதரிகள், சகோதரிகளின் கணவர்கள், புதல்வர்கள், புதல்விகள் அனைவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொண்டே செல்வதும் இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்துவிட்டு உற்றாரையே பிரிந்து தனியாகச் சென்றுவிடவும் தயாராக இருப்பதும் அவர்களால் சகிக்க முடியாதுனவாய் இருந்தன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் புதிய இயக்கத்தில் இணைந்து கொண்டிருந்தவர்கள் அவர்களின் சமுதாயத்திலேயே மிகச் சிறந்தவர்களாகக் கருதப்பட்டு வந்தவர்களாய் இருந்தார்கள். அவர்களின் அறிவாற்றல் சிந்தனைத்திறன், நற்குணங்கள், பிற மனிதப் பண்புகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்தனவாய் இருந்தன. இத்தகைய மனிதர்கள் இஸ்லாத்தை ஏற்று, தமது நலன்கள் அனைத்தையும் இழந்துவிடத் தயாராகி விட்டபோது இந்த இயக்கத்திலும் இதன் அழைப்பாளரிடத்திலும் மக்கள் இந்த அளவிற்குத் தியாகம் புரியத் தயாராகின்ற ஈர்ப்பு சக்தி என்ன தான் இருக்கும் என்று ஒவ்வொருவரும் ஆழமாக சிந்திக்கலாயினர்.

மேலும் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் வந்துவிட்ட பின்னால் இவர்கள் இன்னும் அதிக நேர்மையாளர்களாயும், உண்மையாளர்களாயும், ஒழுக்க மிக்கவர்களாயும், கொடுக்கல் வாங்களில் நல்லவர்களாயும், தூய மனிதர்களாயும் விளங்கி வருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த விஷயங்களனைத்தும் அவர்கள் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி, தமதுள்ளத்தில் இந்த அழைப்பின் மேன்மையை உணராமல் இருக்க முடியாது என்னும் நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியவையாய் விளங்கின.

அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தல்:

நபித்துவ ஆண்டு – 5

அண்ணலார் (ஸல்) நபித்துவம் பெற்று ஏறத்தாழ ஐந்தாணடுகள் ஆகிவிட்டிருந்தன. குறைஷிகளின் கொடுமைகள் முடிவடைவதற்கான வழியோதுமில்லை என்பதை அண்ணலார் உணர்ந்தார்கள். முஸ்லிம்கள் எந்தக் கொடுமைக்கு அஞ்சியும் இஸ்லாத்தைக் கைவிட மாட்டார்கள் என்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் அவர்களால் தாங்கமுடியாத அளவிற்குச் சென்று கொண்டிருந்தன. அவர்கள் இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுவது கூட முடியாத அவல நிலை உருவாகி வந்தது. இவை அனைத்தையும் கண்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் சிலர் மக்கா நகரைத் துறந்து அபிசீனியாவுக்கு (ஹிஜ்ரத்) செல்ல வேண்டும் என்று முடிவுசெய்தார்கள்.

அபிசீனிய, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் இருக்கும் ஒரு நாடாகும். அந்நாட்டு மன்னர் நல்ல மனமுடைய, நீதியை விரும்புகின்ற ஒரு கிறிஸ்தவராயிருந்தார். இந்த ஹிஜ்ரத்தின் நோக்கம் நிலைமைகள் சீர்திருந்தும் வரை முஸ்லிம்களில் சிலராவது குறைஷிகளின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறட்டும் என்பதாக இருந்தது. ஆனால் இந்தத் தியாகிகளின் வாயிலாக இஸ்லாமிய அழைப்பு தொலைவிலுள்ள சில பகுதிகள் வரை சென்றடைய வாய்ப்புக் கிட்டியது, அதன் இன்னொரு பலனாக விளங்கிற்று.

எனவே முதல் முறையாக பதினோரு ஆண்களும் நான்கு பெண்களும் இந்த ஹிஜ்ரத்திற்குத் தாயராகிவிட்டனர். இவர்கள் நபித்துவ ஆண்டு 5-இல் ரஜப் மாத்தில் பயணம் மேற்கொண்டனர். இறைவனின் செயலால் இவர்கள் துறைமுகத்திறக்கு வந்தபோது இரு வணிபக் கப்பல்கள் திரும்பிச் செல்லத் தயாராக இருந்தன. அவை அவர்களை மிக மலிவான கட்டணத்தில் ஏற்றிச் சென்றன. குறைஷிகளுக்கு இந்த விஷயம் தெரிந்தபோது அவர்கள் அந்த முஸ்லிம்களைத் துரத்திச் சென்றனர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்களின் கப்பல் குறைஷிகள் வருவதற்குள் புறப்பட்டு விட்டிருந்தது.

அபிசீனியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்புடனும் அமைதியுடனும் வாழத் தொடங்கினர். இந்த விவரங்கள் குறைஷிகளுக்குத் தெரிந்தவுடன் அவர்கள் வெஞ்சினம் கொண்டார்கள்.

இறுதியில் அபிசீனியாவின் அரசிடம் (அரபுகள் அபிசீனிய அரசரை நஜாஷி என்றழைத்து வந்தனர்) சென்று ‘இவர்கள் எங்கள் நாட்டுக் குற்றவாளிகள், இவர்களை நீங்கள் உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றி விடுங்கள்! நாங்கள் இவர்களை எங்களுடன் அழைத்துச் செல்ல ஆணையிடுங்கள்’ என்று கூற வேண்டும் என முடிவு செய்தார்கள்.

அப்துல்லாஹ் பின், ரபீஆ, அமர் பின் ஆஸ் ஆகிய இருவரும் இந்தப் பணிக்காக தெரிவு செய்யப்பட்டார்கள். மிகவும் பகட்டுடனும் படாடோபத்துடனும் இவர்கள் அபிசீனியா புறப்பட்டார்கள். முதலில் இவர்கள் அபிசீனியாவின் பாதிரியார்களைச் சந்தித்தார்கள்.

அவர்களிடம் ‘இவர்கள் புதிய ஒரு மார்க்கத்தைக் கண்டு பிடித்துள்ளார்கள். நாங்கள் இவர்களை வெளியேற்றிவிட்டதால் இவர்கள் அங்கிருந்து தப்பியோடி உங்கள் நாட்டிற்கு வந்து விட்டிருக்கின்றார்கள். உங்கள் அரசின் அவையில் ‘இவர்கள் எங்கள் நாட்டுக் குற்றவாளிகள் தப்பியோடி வந்திருப்பவர்கள், இவர்களை எங்களிடம் திரும்ப அனுப்பி விடுங்கள்’ என்று கோரிக்கை சமர்ப்பிக்க விரும்புகின்றோம். நீங்களும் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று கூறினார்கள்.

நஜாஷியின் அவையில் முஸ்லிம்கள்

மக்காவாசிகளின் கோரிக்கை மன்னர் நஜாஷியின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டபோது அவர் முஸ்லிம்களைக் கூப்பிட்டனுப்பினார். ‘நீங்கள் எந்தப் புதிய மார்க்கத்தை உருவாக்கியுள்ளீர்கள்?’ என்று வினவினார்.

முஸ்லிம்களின் சார்பாகப் பேசுவதற்காக, ஜஅஃபர் பின் அபூதாலிப் (அலீயின் சகோதரர்) நியமனம் செய்யப்பட்டார். ஜஅஃபர் (ரலி) அவர்கள் நஜாஷியின் அவையில் இந்தச் சந்தர்ப்பத்தில் ஆற்றிய உரை, வரலாற்று ஏடுகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

அவ்வுரையின் சாரம் வருமாறு :-

‘அரசே! நாங்கள் பலகாலமாக அறியாமை, வழிகேடு என்னும் இருள்களில் சிக்கித் தடுமாறி கொண்டிருந்தோம்.

ஒரே இறைவனை மறந்து நூற்றுக்கண்க்கான சிலைகளை வணங்கி வந்தோம்.

செத்த விலங்குகளையும், பறவைகளையும் புசித்து வந்தோம்.

விபச்சாரம், கொலை, கொள்ளை, அல்லும் பகலும் ஒருவர் மற்றவரைக் கொடுமைப்படுத்துவது, அநீதியிழைப்பது ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தோம்.

எங்களில் வலியவன் ஒவ்வொருவனும் தன்னைவிடப் பலங்குன்றிய எளியவனை அழிப்பதில், வஞ்சித்துப் பிழைப்பதில் பெருமை பாராட்டி வந்தான்.

ஆக எங்கள் வாழ்கை, விலங்குகளை விடவும் மோசமானதாய் விளங்கிற்று. இறைவன் எங்கள் நிலையைக் கண்டு இரங்கினான். எங்களிடையிலிருந்தே மாமனிதர் ஒருவர் தோன்றினார். அவரை அல்லாஹ் தன் திருத்தூதராக ஆக்கினான். நாங்கள் அவரது குலச்சிறப்பை நன்றாக அறிவோம்.

அவர் மிகவும் கண்ணியமாகவர். நாங்கள் அவரது வாழ்கை நிலைகள் அனைத்தையும் அறிவோம்.

அவர் மிகவும உண்மையானவர், நம்பிக்கைக்குரியவர், தூய ஒழுக்கமுடையவர், அவருடைய நண்பர்கள், எதிரிகள் அனைவரும் அவருடைய நற்குணத்தையும் கண்ணியத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர். அவர் எங்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார்.

பின் வருமாறு அவர் எங்களுக்கு அறிவுரை செய்தார் :- ‘ நீங்கள் கற்சிலைகள் வணங்குவதை விட்டுவிடுங்கள். ஒரே இறைவனை அல்லாஹ்வை உங்கள் அதிபதியாகவும், உரிமையாளனாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவனுக்கு மட்டுமே அடிமைப்பட்டு அவனுக்கே பணிந்து வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். கொலை, கொள்ளைகள் நடத்துவதை விட்டுவிடுங்கள், அனாதைகளின் சொத்துகளை உண்ணாதிருங்கள். அண்மை வீட்டாருக்கு உதவுங்கள். விபச்சாரம் மற்றும் தீய பேச்சுகளை விட்டு விலகி இருங்கள்’.

‘நாங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டோம், இணைவைப்பையும் சிலை வணக்கத்தையும் விட்டு விட்டோம். எல்லாத் தீய செயல்களையும் விட்டு மீண்டும் மனம்திருந்தி பாவ மன்னிப்புக் கோரினோம். இதனால் எங்கள் சமூகத்தினர் எங்கள் பகைவர்களாகி விட்டனர். நாங்கள் மீண்டும் அவர்களின் பழைய மார்க்கத்திற்கே திரும்பி வந்துவிட வேண்டும் என்று எங்களை நிர்ப்பந்தித்தனர். இந்த நோக்கத்தில் தான் இப்போது இவர்கள் உங்களிடம், எங்களைத் திரும்பி அனுப்பும்படி வற்புறுத்துகின்றார்கள்.’

இவையனைத்தையும் செவிமடுத்த மன்னர் நஜாஷி ‘சரி, உங்கள் இறைத்தூதர் மீது அல்லாஹ் இறக்கியருளிய புனித வாக்கிலிருந்து ஒரு பகுதியை எனக்கு ஓதிக் காட்டுங்கள்’ என்று கேட்டார். ஜஅஃபர் (ரலி) அவர்கள் 19 ஆவது அத்தியாயமான மர்யமின் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அது நஜாஷியின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்திற்று. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. ‘இறைவன் மீதாணையாக! இந்த இறைவாக்கும் (திருக்குர்ஆனும்) இன்ஜீலும் ஒரே விளக்கின் இரு சுடர்களே!’ என்று கூறினார். பின்னர், ‘இந்த முஸ்லிம்களை உங்களிடம் ஒப்படைக்க முடியாது’ என்று குறைஷிகளிடம் தெளிவாகக் கூறிவிட்டார்.

நஜாஷி இஸ்லாத்தைத் தழுவுதல்

இரண்டாவது நாள் குறைஷிகள் இன்னொரு சூழ்ச்சி செய்தார்கள். அரசவைக்குச் சென்று ‘ஈஸா (அலை) அவர்களைப் பற்றி இவர்கள் என்ன நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்று இந்து முஸ்லிம்களை சற்றுக் கேளுங்கள்’ என்று கூறினார்கள். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு எதிராக ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் குமாரர் என்று சொல்வதற்குப் பதில், மர்யமின் குமாரர் என்று குமாரர் என்று கூறினார்கள் என்பதை குறைஷிகள் எறிந்திருந்தனர். எனவே இந்த நம்பிக்கை நஜாஷிக்குத் தெரியவந்தால் அவர் முஸ்லிம்கள் மீது சினம் கொள்வார் என்று அவர்கள் கருதினர். குறைஷிகளின் சொல்லை ஏற்று முஸ்லிம்களை மீண்டும் அரசவைக்கு அழைத்து வரச் செய்தார் நஜாஷி. இந்த நிலையில் முஸ்லிம்களுக்கிடையே, என்ன செய்வதென்ற கலக்கம் ஏற்பட்டது. ஆனால் ஜஅஃபர் (ரலி) அவர்கள், ‘என்ன ஆனாலும் சரி, உண்மையையே எடுத்துரைக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

எனவே ஜஅஃபர் (ரலி) அவர்கள், அனைவரும் திரண்டிருந்த அரசவையில் ‘எங்கள் இறைத்தூதர், ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரென்றும் அவனது திருத்தூதர் என்றும் எங்களுக்குக் கூறியுள்ளார்’ என்று அறிவித்தார்.

இதனைச் செவியுற்ற நஜாஷி, தரையிலிருந்து ஒரு துரும்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு ‘இறைவன் மீதாணையாக! ஈஸா (அலை) அவர்கள் இந்தத் துரும்பின் அளவிற்குக்கூட நீங்கள் சொன்னதைவிட அதிகமான அந்தஸ்துடையவரல்லர்’ என்று கூறினார்.

இவ்விதம் குறைஷிகளின் இந்த உபாயமும் தோல்வியடைந்தது. நஜாஷி, ஜஅஃபர் (ரலி) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் அவர்களுடைய கண்ணியத்துடன் தன் நாட்டில் வசிக்க அனுமதியளித்தார். அண்ணலாரின் நபித்துவத்தை உண்மையென ஏற்று இஸ்லாத்தை தழுவிக் கொண்டார். இந்த நஜாஷியின் பெயர் ‘அஸ்ஹமா’ என்பதாகும். அவர் மரணமடைந்த போது அண்ணலார் (ஸல்) ‘காயிப் ஜனாஸா’ தொழுகை (உடல் முன்னால் இல்லாமலே தொழப்படும் ஜனாஸா தொழுகை சம்பந்தப்பட்ட இடத்தில் அல்லாமல் வேறு இடங்களில் நடத்தப்படும் தொழுகை) தொழுதார்கள்.

சிறுகச்சிறுக 83 முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தனர்.

ஹம்ஸா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்

மக்கா நகரில் ஒருபுறம் குறைஷிகளின் கொடுமைகள் நடைபெற்று வந்தன. மறுபுறம் அண்ணலாரும் அவர்களின் தோழர்களும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் நிலைகுலையாத போக்கினைக் காட்டி வந்தார்கள். இந்தப் பழைய போராட்டத்திற்கிடையே மக்கா நகரிலிருந்த மிகச் சிறந்த மனிதர்கள் பலர் தாமாகவே ஈக்கப்பட்டு, இஸ்லாதின் வட்டதில் இணைந்து கொண்டிருந்தார்கள். ஹம்ஸா (ரலி) அவர்கள் அண்ணலாரின் பெரிய தந்தையாயிருந்தும் இன்னும் அவர்கள் முஸ்லிமாகவில்லை.

அண்ணலாரை எதிர்பவர்கள், அவர்களுடன் கொண்ட ஈவிரக்கமற்ற போக்கைக் கண்டு அண்ணலாரின் உறவினாகள், அவர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமல்ல, அந்நியர்களும்கூட மனம் பொறுக்காமல் கொதித்தார்கள்.

ஒருநாள் அபூஜ்ஹ்ல் அண்ணலாருடன் மிக மோசமாகவும், ஒழுங்கீனமாகவும், அவமரியாதையாகவும் நடந்து கொண்டான். ஹம்ஸா (ரலி) அவர்கள் வேட்டைக்குச் சென்றிருந்தவர்கள் திரும்பி வந்தபோது பணிப்பெண் ஒருத்தி நடந்தவை அனைத்தையும் கூறிவிட்டாள். ஹம்ஸா (ரலி) அவர்கள் கோபத்தால் கொதித்துப்போய் விட்டார்கள்! வில்லையும் அம்பையும் கையிலெடுத்துக் கொண்டு ஹரமுக்கு (இறைஇல்லம்) வந்தார்கள். சினத்துடன் அபூஜஹ்லை அதட்டினார்கள். பின்னர் ‘நான் முஸ்லிமாகிவிட்டேன்’ என்று கூறினார்கள்.

உணர்ச்சி வேகத்தில், சொல் அம்புகள் பாய்ந்து விட்டன. ஆனால் இன்னும் அவர்களுடைய உள்ளம் தம் முன்னோர்களின் மார்கத்தை விட்டுவிடத் தயாராக இல்லை. நாள் முழுவதும் யோசித்த வண்ணமே இருந்தார்கள். இறுதியில் சத்தியத்தின் குரலெ வெற்றி பெற்றது. ஹம்ஸா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி நபித்துவ ஆண்டு 6-இல் நடந்தது. அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இஸ்லாமிய அழைப்பின் வரலாற்றில் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானதாகும்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நபித்துவ ஆண்டு 6

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களில் ஒருவராக இருந்தார்கள். ஒருபுறம் குறைஷிகளில் பெரும் பிரமுகர்களெல்லாம் இஸ்லத்தின் அழைப்பாளர் நாயம் (ஸல்) அவர்ளையும் இஸ்லாமிய அழைப்பையும் எதிர்ப்பதில் கடுமையான அதிகரித்துக் கொண்டே சென்றார்கள். இன்னொருபுறம் அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அண்ணலாரின் உள்ளத்தில் அன்பு, இரக்கம், பரிவு, அனுதாபம் ஆகிய உணர்வுகள் சுரந்து கொண்டிருந்தன.

அபூஜகஹ்லும், உமர் (ரலி) அவர்களும் அண்ணலாரை எதிர்ப்பதில் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள். அழைப்பு மற்றும் பிரச்சார முயற்சிகள் எதுவும் அவரை திருத்தமுடியாமல் போய்விடவே அண்ணலார் ஒருமுறை அல்லாஹ்விடம், ‘இறைவா! அபூஜஹ்ல், உமர் இருவரில் உனக்கு எவர் அதிகப் பிரியமுடையவரோ அவர் வாயிலாக இஸ்லாத்தை கண்ணியப்படுத்து!’ என்று இறைஞ்சினார்கள். இந்தப் பிராத்தனைக்குச் சில நாட்கள் பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியம் கிட்டியது. அந்த நிகழ்ச்சியின் விவரம் வருமாறு:

உமர் (ரலி) அவர்களே கூறுகின்றார்கள்: ‘ஒர் நான் அண்ணலாரைத் துன்புறுத்தும் எண்ணத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டேன். அண்ணலார் புனித இறையில்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னேறிச் சென்று இறையில்லத்திற்குள் நுழைந்து விட்டார்கள். தொழுகையைத் தொடங்கி விட்டார்கள். நான் தொழுகையில் அவர்கள் ஓதவதைக் கேட்பதற்காக நின்று கொண்டேன். அண்ணலார் 69 ஆவது அத்தியாயமான ‘அல்ஹாக்கை’ ஓதினார்கள். அந்த வாக்கைச் செவியுற்ற நான் திகைப்பிலாழ்ந்து விட்டேன். அந்த வாக்கின் அமைப்பும் பாணியும் மிகவும் மனம் கவரக் கூடியதாகத் தோன்றியது. என் உள்ளத்தில் ‘இறைவன் மீதாணையாக! இவர் கவிஞர்தான்’ என்னும் எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் தோன்றி மறைவதற்குள் அண்ணலார் (ஸல்) அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதலானார்கள்:

‘இது கண்ணியமிக்க தூதர் ஒருவர் கொண்டு வரும் வாக்காகும்! இது ஒரு கவிஞனின் வாக்கல்ல, எனினும் நீங்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.’ (69 : 40 – 41)

இதனைச் செவியுற்றவுடன் ‘ஓஹோ! இவர் நம் உள்ளத்தில் ஓடிய எண்ணத்தை அறந்துகொண்டார். எனவே இவர் குறிசொல்பராகத்தான் இருக்க வேண்டும்’ என்று நான் எண்ணினேன். இதற்கிடையில் அண்ணலார் (ஸல்) பின்வரும் வசனத்தை ஓதலானார்கள்:

‘இது குறிகாரனின் வாக்கல்ல, நீங்கள் மிகக் குறைவாகவே நல்லறிவு பெறுகின்றீர்கள். இது அகிலங்களின் அதிபதியிடமிருந்து இறங்கியுள்ளது.’ (69 : 42 – 43)

அண்ணலார் இந்த அத்தியாயத்தை இறுதிவரை ஓதினார்கள். நான், இஸ்லாம் என் உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது என உணர்ந்தேன்.’

ஆனால் உமர் (ரலி) அவர்கள் நிலையான சுபாவமும் உறுதியான செயல்பாடும் கொண்ட மனிதராகத் திகழ்ந்த காரணத்தால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்குள்ளே முழுமையான மாற்றம் ஏற்படவில்லை. தமது போக்கிலேயே அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். இறுதில் ஒருநாள் பகைமை உணர்வின் ஆவேசத்தில் வாளை எடுத்துக் கொண்டு, இன்று அண்ணலாரைத் தீர்த்துக்கட்டி விடுவதென்ற (நஊதுபில்லாஹ்) எண்ணத்துடன் வீட்டிலிருந்து கிளம்பினார்கள் விழியில் தற்செயலாக நுஐம் பின் அப்துல்லாஹ் என்பவரைச் சந்தித்தார்கள்.

நுஐம் உமரை நோக்கி ‘உமரே என்ன விஷயம்? எங்கே சென்று கொண்டிருக்கிறீர்?’ என்று வினவினார் உமர் அவர்கள் ‘இன்று நான் முஹம்மத் (ஸல்) அவர்களின் விஷயத்தில் ஒரு தீர்வு காணபதற்காகச் சென்று கொணடிருக்கின்றேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு நுஐம் ‘முதலில் உமது வீட்டைக் கவனியும்! உமது சகோதரியும், சகோதரியின் கணவருமே இஸ்லாத்தைத் தழுவி விட்டிருக்கின்றனரே!’ என்று கூறினார்.

இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் உடனே திரும்பி நேரகாத் தம் சகோதரியின் இல்லத்திற்குச் சென்றார்கள். அங்கு அவரது சகோதரி திருக்குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் வருவதைக் கண்டவுடன் மௌனமாகி விட்டார்கள். திருக்குர்ஆனின் சுவடிகளை மறைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர் எதனையோ ஓதிக் கொண்டிருந்ததைத் தாம் கேட்டுவிட்டதால் உமர் அவர்கள் ‘என்ன ஓதிக் கொண்டிருந்தாய்?’ என்று வினவினார்கள். பின்னர் ‘நீங்கள் இருவரும் நமது முன்னோர்களின் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டீர்களா?’ என்று கூறிக் கொண்டே தமது சகோதரியின் கணவரை அடிக்கத் தொடங்கினார்கள். அவர்களின் சகோதரி இடையில் வந்து தமது கணவரை அடிக்கவிடாமல் தடுத்தபொழுது அவர்களையும் அடிக்கலானார்கள். உமர் அவர்கள். இருவரையும் ரத்தத்தில் தோய்ந்து போககுமளவிற்கு அடித்தார்கள்.

‘நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிவிட்டோம். இனி உங்கள் கொடுமை எதுவுமே எங்களை இந்தப் பாதையிலிருந்து விலகச் செய்திட முடியாது!’ என்று இருவரும் தெளிவாகக் கூறிவிட்டபோதுதான் உமருக்கு சற்றே உணர்வு வந்தது. தம்மை சுதாகரித்துக் கொண்டு. ‘சரி, கொண்டு வாருங்கள்! நீங்கள் என்ன ஓதிக் கொண்டிருந்தீர்கள் என்று எனக்கும் ஓதிக் காட்டுங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களின் சகோதரி கொண்டு வந்து முன்னால் வைத்துவிட்டார்கள். அது 20ஆவது அத்தியாயமான ‘தாஹா’ வாக இருந்தது.

அவாகள் ஓதத் தொடங்கினார்கள். ‘நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை, எனவே என்னையே வணங்குங்கள். என்னை நினைவு கூர்வதாகத் தொழுகையை நிலைநாட்டுங்கள்’ (20 : 14) என்னும் வசனத்தை அடைந்தவுடன் அதன் தாக்கதால் ஈர்க்கப்பட்ட உமர் (ரலி) அவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று உரக்க முழங்கினார்கள். நேராக அண்ணலாரின் திருச்சமூகத்திற்குச் சென்று விட்டார்கள்.

இது அண்ணலார் அர்கம் (ரலி) அவர்களின் வீட்டில் தங்கியிருந்த காலமாகும். உமர் (ரலி) அவர்கள் அவ்வீட்டின் வாயிற்கதவை அடைத்தபோது, அவர்களின் கரத்தில் வாள் இருந்த காரணத்தால் நபித் தோழர்களுக்கு ஐயம் ஏற்பட்டது. அனால் ஹம்ஸா (ரலி) அவர்கள், ‘அவரை வரவிடுங்கள், அவர் நல்லெண்ணத்தில் வந்திருப்பாராயின் நல்லது. இல்லையெனில் அவரது வாளாலேயே அவரது தலையைக் கொய்தெறிந்து விடுவேன்.’ என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் வீட்டினுள் அடியெடுத்து வந்தவுடன் அண்ணலார் (ஸல்) முன்வந்து உமர் அவர்களின்; சட்டை முனையைப் படித்துக் கொண்டு ‘உமரே! எந்த எண்ணத்தில் இங்கு வந்துள்ளீர்?’ என்று வினவினார்கள். உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தில் ஒரு விதமான மிதிப்பச்சம் ஏறபட்டது. உமர் (ரலி) அவர்கள் கனவுடன் கூறினார்கள்: ‘இந்த நன்நெறியைத் தழுவுவதற்காகவே வந்தேன்’ இதனைக் கேட்ட மாத்திரத்தில் அண்ணலார் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹுஅக்பர்’ அல்லாஹ் மிகப் பெரியவன் என்று முழங்கினார்கள். அவர்களுடனே நபித்தோழர்கள் அனைவரும் தக்பீர் முழங்கனார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு இஸ்லாமியக் குழுவின் விலிமை பெருமளவு அதிரித்துவிட்டது. எந்த அளவிற்கென்றால், அதுவரையிலும் முஸ்லிம்கள் தம் சமயக் கடமைகளை பகிரங்கமாக நிறைவேற்ற முடியாதிருந்தார்கள். கஅபாவில் கூட்டாகத் தொழுவது என்பது அறவே சாத்தியமற்றதாய் இருந்தது.

ஆனால் உமர் (ரலி), இஸ்லாத்தைத் தழுவிய பின்னால் நிலைமை மாறிவிட்டது. உமர் (ரலி) அவர்கள், தாம், இஸ்லாத்தைத் தழுவியதை பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார்கள். இதனால் பெரும் அமளி ஏற்பட்டது என்றாலும் இறுதியில் முஸ்லிம்கள் கஅபாவின் ஒரு பகுதிக்குள் கூட்டாக (ஜமாஅத்தாக)த் தொழுதிட ஆரம்பித்து விட்டார்கள். இப்போது அவர்களுடைய ஜமாஅத் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக வலிமை வாய்ந்த ஜமாஅத்தாகி விட்டது. மேலும் இறுதி நபியவர்கள் செய்த பிராத்தனை எந்த அளவிற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது என்பதற்கும், இன்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட உமர் (ரலி) அவர்களின் கரங்களால் அல்லாஹ் இஸ்லாத்திற்கு அளித்த கண்ணியத்திற்கும் உயர்விற்கும் நிகரேதுமில்லை என்பதற்கு வரலாறே சான்று பகர்வது உலகம் கண்டுவிட்டது.

அபூதாலிப் பள்ளத்தாக்கில் சிறைவைக்கப்படல் – நபித்துவ ஆண்டு 7

இஸ்லாமிய அழைப்புப்பணி வெகுவேகமாக முன்னேறி வருவதைக் கண்ட குறைஷித் தலைவர்கள் மனங்கொதித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இயக்கத்தை நசுக்கிட ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களைச் சந்தித்து வந்தார்கள். எனவே அவர்கள், ஒரு புதிய சூழ்ச்சியினைச் செய்தார்கள். அதன்படி, ‘எல்லாக் குலத்தினரும் ஒன்று சேர்ந்து அண்ணலாருடய குடும்பமான பனீஹாஷிம் கிளையினர் அனைவருடைய எந்த விதமான உறவும் வைத்துக் கொள்ள கூடாது. அவர்களுடன் வியாபாரத் தொடர்புகள், கொடுக்கல வாங்கள் ஏதும் வைத்துக் கொள்ள கூடாது அவர்களைச் சந்திக்கவும் கூடாது, அவர்களாக முன்வந்து அண்ணலாரை நம்மிடம் ஒப்படைக்காத வரை உண்ணுகின்ற பருகுகின்ற பொருள் எதுவும் அவர்களுக்கு தரக்கூடாது’ என்று ஓர் ஒப்பந்தத்தை தமக்குள் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை எழுதி கஅபாவின் வாயிலில் தொங்க விட்டனர்.

இப்போது பனீஹாஷிம் குலத்தினருக்கு இரண்டே வழிகள்தாம் இருந்தன. ஒன்று, அண்ணலாரை இறைமறுப்பாளர்கள் வசம் ஒப்படைத்து விடுவது, அல்லது இந்தச் சமூக, பொருளாதார பகிஷ்கரிப்பின் விளைவாக நேரிடக் கூடிய துன்பங்களையும், துயரங்களையும் சகித்துக் கொள்ள தயாராகிவிடுவது, எனவே எனவே பெரியவர் அபூதாலிப் அவர்கள் வேறு வழி ஏதுமில்லாததால் நிர்ப்பந்தமான நிலையில் பனீஹாஷிம் குடும்பத்தினர் அனைவரையும் தம்முடன் அழைத்துக்கொண்டு வாரிசுரிமைப்படி பரம்பரைச் சொத்தாக விளங்கிய மலைக்கணவாய் ஒன்றில் சென்று தங்கிவிட்டார்கள்.

இந்த மலைக்கணவாயில் பனீஹாஷிம் குடும்பத்தினர் அண்ணலாருடன் மிகக் கடுமையான துன்பம் நிறைந்த வாழ்க்கை வாழவேணடிய நிலை ஏற்பட்டது. இந்தக் கொடுமை மூன்று ஆண்டுகாலம் வரை நீடித்தது. இங்கு இவர்கள் பல நேரங்களில் செடி கொடிகளிலுள்ள இலை தழைகளைத் தின்று நாட்களைக் கழித்து வந்தனர்! சில வேலைகளில் பசிக் கொடுமை தாங்காமல் காய்ந்த தோலை வேகவைத்தும் தின்றார்கள். குழந்தைகள் பசியால் துடித்த செய்தியைக் கேட்டு வன்மனம் கொண்ட கொடுமையாளர்களான குறைஷிகள் மகிழ்ந்துபோயினர். இரக்கம் மனம் கொண்ட சிலருக்குப் பரிதாப உணர்வும் அனுதாபமும் மேலிட்டு அவர்கள் அவர்கள் உண்பதற்காக எப்போதேனும் உணவும் சிறிது அனுப்பி வைத்து விடுவார்கள்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை பனீஹாஷிம் குலத்தார் நிலை குலையாமல் உறுதியுடன் இந்தத் துன்பங்களைச் சகித்தார்கள். இறுதியில் அந்த அக்கிரமக்காரர்களின் உள்ளங்களிலேயே அல்லாஹ் இரக்கத்தைத் தோற்றுவித்தான். அவர்களின் தரப்பிலிருந்தே இந்த ஒப்பந்தத்தை முறித்திட வேண்டும் என்று கிளர்ச்சி தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் மனம் இளகலானார்கள். அபூஜஹ்லும் அவனுக்கு ஒத்த கருத்துடையவர்கள் சிலரும் மட்டும்தான் பிடிவாதமாக இருந்தனர். ஆனால் இறுதியில் அவர்களின் பிடிவாதம் செல்லுபடியாகவில்லை, ஏறத்தாழ நபித்துவ ஆண்டு 10இல் பனீஹாஷிம் குடும்பத்தினர் மலைக்கணவாயிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அழைப்புப் பணியின் வேகம்

முன்னரே கூறியதுபோல் மக்கா வாழ்;கையில் நடைபெற்ற போராட்டங்களைப் பற்றிய விவகாரங்கள் வரலாற்று நூல்களிலும் நபிவாழ்வு கூறும் நூல்களிலும் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன.

எனவே இந்தக் சமூக பொருளாதார புறக் கணிப்புக்கு இடையிலான காலகட்டத்தில் அழைப்புப்பணி மற்றும் இயக்கப்பணிகள் எவ்விதம் நடைபெற்றன? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் யாவை என்பன பற்றியெல்லாம் முழுமையான விவரங்களும் கிடைக்கவில்லை. எனினும் திருக்குர்ஆன் தொடர்ந்து இறங்கிய வண்ணமே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் இறங்கிய அத்தியாயங்களின் கருத்துகளையும் போதனைகளையும் வழிக்காட்டுதலையும் முன்வைத்துப் பார்த்தால், இஸ்லாமிய இயக்கம் இந்தக் காலகட்டத்தில் எத்தகைய நிலைமைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை பெருமளவு கணித்தறிந்து கொள்ளலாம்.

இந்த நீண்ட நெடிய கடுமையான போராட்டத்திற்கிடையே அல்லாஹ் இறக்கிய உரைகள். உத்வேகமிக்கவையாகவும் தாக்கம் மிக்கனவாகவும் விளங்குகின்றன. அவ்வுரைகளில் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களின் கடமைகள் எடுத்துரைக்கப்பட்டன. அவற்றைப் பேணிப் பாதுகாக்கும்படி அறிவுரைகள் செய்யப்பட்டது. அவர்களுடைய தனிப்பட்ட குணநலன்களை மிக உயர்ந்த படித்தரத்திற்குக் கொண்டுசெல்லும் வழி வகைகள் எடுத்துரைக்கப்பட்டன. இறையச்சப் பயிற்சி பெற்றிடும்படியும் இறையச்சப் பண்பை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டது. உயர்ந்த ஒழுக்கப் பண்புகளைக் கைக்கொள்ளும் படியும் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்திக் கொள்ளும் படியும் அறிவுரைகள் அளிக்கப்பட்டன.

கூட்டு வாழ்க்கையுணர்வு தோற்றுவிக்கப்பட்டது. கூட்டு வாழ்கைப் பண்புகள் உருவாகிடப் பயிற்சியளிக்கப்பட்டது. சத்திய மார்க்கத்தின் பிரச்சாரத்திற்கான வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. கடுமையான, சகிக்க முடியாத சூழ்நிலையிலும் நிலைகுலையாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி அடிக்கடி வலியுறுத்தப்பட்டது.

வெற்றிக்கான வாக்குறுதிகளையும் சொர்க்க வாழ்வு பற்றிய நற்செய்திகளையும் அளித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. தீனின் கடினமான பாதையில் நிலைத்து நின்றடவும் ஊக்கத்துடனும் உற்சாகத்துட்னும் இறைவழியில் தொடர்ந்து போராடிடவும் தூண்டப்பட்டது. அவர்களுக்குள் தியாகம், மற்றும் அர்ப்பணிப்புக்கான ஆர்வம் எந்த அளவிற்கு ஊட்டப்பட்டதென்றால் அவர்கள் எந்தத் துன்பத்தையும் சகித்துக் கொள்ளவும் எந்தக் கொடுமையையும் பொறுத்துக் கொள்ளவும் சக்தியுடையவர்களாகி விட்டார்கள்.

மற்றொருபுறம், எதிரிகளையும் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்களையும் அவர்கள் அடையவிருக்கும் தீயகதி குறித்துக் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வந்தது. அவர்களுக்கு முன் அலட்சியம், இறைமறுப்பு ஆகிய போக்குகளை மேற்கொண்டு அதன் விளைவாக அழிவுக்குள்ளான சமுதாயங்களின் படிப்பினைமிக்க நிகழ்ச்சிகள் எடுத்துரைக்கப்பட்டு வந்தன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அரபுகள் அறிந்தவைதாம். அவர்கள் அல்லும் பகலும் கடந்து சென்று கொணடிருந்த அழிந்துபோன நகரங்களின்பால் அவர்களுடைய கவனம் திருப்பப்பட்டது.

பின்னர் அவர்களின் முன்னே ஏகத்துவம், மறுமை ஆகியவற்றுக்கான தெளிவான ஆதாரங்களும் அவர்கள் வானத்திலும் பூமியிலும் அல்லும் பகலும் தம் கண்களால் பார்த்துக் கொண்டிருந்த பகிரங்கமான சான்றுகளிலிருந்து தரப்பட்டன.

இணைவைப்பின் தீமைகள் தெளிவுபடுத்தப்பட்டன. இறைவனுக்கு எதிராக கலகப் போக்கை மேற்கொள்வதால் நேரும் விளைவுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டன. மறுமையை மறுப்பதால் மனித வாழ்வில் ஏற்படும் சீரழிவு வெளிப்படையாக விளக்கப்பட்டது. முன்னோர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சிந்திப்பவர் உள்ளத்தில் பதிந்துவிடும் ஆதாரங்களுடன் இவையனைத்தும் எடுத்துரைக்கப்பட்டன.

எதிரிகளும் இறைமறுப்பாளர்களும் முன்வைத்த ஆட்சேபணைகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்கள் அளிக்கப்பட்டன. அவர்களின் ஐயங்கள் அகற்றப்பட்டன. ஆக அவர்கள் சிக்கியுழன்று கொணடிருந்த சஞ்சலங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. ஆயினும் இந்தக் காலகட்டம் முழுவதிலும் எதிர்ப்பும், பகைமையும் தொடர்ந்து பெருகின்கொண்டே வந்தது.

நான்காவது காலகட்டம்

________________________________________

கொடுமைகளின் எல்லை

அண்ணலார் (ஸல்), அபூதாலிப் கணவாயிலிருந்து கணவாயிலிருந்து வெளியே வந்தபோது குறைஷிகளின் கொடுமைகளிலிருந்து சில நாட்களுக்குச் சிறிது பாதுகாப்புக் கிட்டியது. சில நாட்களிலேயே அபூதாலிப் அவர்கள் இறந்துவிட்டார்கள். சில நாட்களில் கதீஜா (ரலி) அவர்களும் இறையடி சேர்ந்துவிட்டார்கள். இந்த ஆண்டை நாயம் (ஸல்) அவர்கள் ‘துக்க ஆண்டு’ என்று அழைத்துவந்தார்கள்.

இந்த இருவரும் மறைந்த பின்னால் குறைஷிகள் அண்ணலாரை எதிர்ப்பதிலும் அவர்களுக்கு தொல்லை கொடுப்பதிலும் இன்னும் அதிகமாகக் கடுமைக்காட்ட தொடங்கினார்கள். இதுதான் இஸ்லாமிய இயக்கத்திற்கு அனைத்தையும் விடக் கடினமானதாய் விளங்கிய காலகட்டமாகும். இப்போது குறைஷிகள் முஸ்லிம்களையும் அண்ணலாரையும் மிகவும் ஈவிரக்கமின்றியும் சிறிதும் அச்சமில்லாமலும் துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

மக்காவுக்கு வெளியே பிரச்சாரம் செய்தல்

மக்கா நகரவாசிகளில் மிகச் சிறந்த மனிதர்களாயிருந்தவர்கள் ஏறத்தாழ அனைவருமே இஸ்லாமியக் குழுவில் இணைந்து விட்டிருந்தனர். எனவே இப்போது இஸ்லாத்தின் அழைப்பாளர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்கா நகரிலிருந்து வெளியே சென்று இறைத்தூதை எடுத்துரைக்க முடிவு செய்தார்கள். இந்தத் திட்டத்தின்படி அண்ணலார் தாயிஃப் நகரத்திற்குச் சென்றார்கள். தாயிஃப் நகரில் மாபெரும் செல்வர்களும் செல்வாக்கு மிக்க பிரமுகர்களும் வசித்துவந்தனர். அண்ணலார் இஸ்லத்தின் அழைப்பை ஏந்தியவண்ணம் அவர்களிடம் சென்றார்கள். ஆனால் செல்வம், அதிகாரமும் சத்தியத்தை ஏற்கும் பாதையில் பெரும்பாலும் தடைக்கல்லாகவே விளங்கி வந்திருப்பதைப் போன்றே இங்கும் அவை விளங்கின.

ஒரு தலைவர், ‘தன்னுடைய தூதராக ஆக்குவதற்கு உம்மைத் தவிர வேறெவரும் இறைவனுக்குக் கிடைக்கவில்லையா?’ என்று கேட்டார்.

இன்னொருவர், ‘நான் உம்மிடம் பேச முடியாது. ஏனெனில் நீர் உண்மையாளராக இருப்பின் உம்மிடம் பேசுவது மரியாதைக்கு மாற்றமானதாகும். (உயர்ந்தவர்களிடம் பேச என்னைப் போன்ற சிறியவர்கள் முன்வருவது மரியாதைக்குறைவாகும்). நீர் பொய்யராக இருப்பின் (இப்படி எண்ணுவதிலிருந்து இறைவன் காப்பாற்றட்டும்) என்னிடம் நீர் பேசுவதற்கு அருகதை இல்லாதவராவீர்!’ என்று கூறினார்.

இந்தப் பெரியவர்கள் இப்படி இந்த அழைப்பைப் பரிகாசங்களால் புறக்கணித்துவிட்டனர். இத்துடன் நில்லாமல் நகரத்தின் குண்டர்களையும் தீயவர்களையும் அண்ணலாருக்கு எதிராகத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடைவீதியில் வைத்து அண்ணலாரைக் கேலியும் கிண்டலும் செய்தார்கள், கல்லால் அடித்தார்கள்.

இந்த நேரத்தில் அண்ணலார் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு காயமுற்றார்கள் என்றால், அவர்களின் திருமேனியிலிருந்து வடிந்த இரத்தம் அவர்களின் காலணிகளை நனைத்து விட்டது. ஆனால் அந்தக் கொடியவர்களே தொடர்ந்து கல்லால் அடித்தக் கொண்டும் வசைமொழிகள் கூறிக்கொண்டும் இருந்தனர். இறுதியில் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டதினுள் சென்று தஞ்வம் புகுந்தார்கள்.

தன்னை எதிர்க்கும் ஒரு நகரத்தினுள் தன்னைந்தனியாகச் சென்று தனது பிரச்சாரக் கடமையை நிறைவேற்றிவிட்டு வருவது, உயிரைப் பணயம் வைத்து மக்களிடம் இறைத்தூதை எடுத்துரைப்பது எந்த அளவிற்கு ஊக்கமும் துணிவும் நிரம்பிய செயல் என்பதை அறிந்து கொள்வது கடினமான ஒன்றில்ல. இது அல்லாஹ்வின்மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதற்கும் அவனையே முற்றிலுமாகச் சார்ந்து அவனிடமே தன்னை ஒப்படைத்து விடுவதற்கும் மிக உயர்ந்த ஓர் உதாரணமாகும். பிற்காலத்து மக்களுக்கு பின்பற்றத் தகுந்த ஒரு முன்மாதிரியாகும்.

ஹஜ் பருவத்தில் அரபுலம் முழுவதிலிருந்து பல்வேறு குலங்களைச் சேர்ந்தவர்கள், மக்கா நகருக்கு வரும்போது ஒவ்வொரு குலத்தாரிடமும் சென்று இஸ்லாத்தின் அழைப்பை முன்வைப்பது அண்ணலாரின் வழக்கமாக இருந்ததுவந்தது. இவ்வாறே அரபு நாட்டில் எந்த இடங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றனவோ அங்கும் செல்வார்கள். அங்கு கூடுகின்ற மக்கட் திரள்களைப் பயன்படுத்திக்கொண்டு, மக்கள் முன்னே இஸ்லாத்தின் அழைப்பைச் சமர்ப்பிப்பார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் குறைஷிகளின் தலைவர்கள், குறிப்பாக அபூலஹபும் அண்ணலாருடனேயே வந்துவிடுவான். எந்தக் கூட்டத்தில் அண்ணலார் (ஸல்) உரையாற்றினாலும் இந்தக் குறைஷித் தலைவர்கள், மக்களிடம் ‘இந்தோ பாருங்கள், இவர் நம் முன்னோர்களின் மார்க்கத்திலிருந்து பிறந்துவிட்டார், பொய் சொல்லுகின்றார்’ என்று கூறுவர்.

அண்ணலாருக்கு இத்தகைய சந்தர்ப்பங்களில் திருக்குர்ஆனின் சில பகுதிகளை எடுத்துரைப்பார்கள். குர்ஆனின் அந்தப் பகுதிகள் தமது தாக்கத்தைப் பொறுத்த வரை குறி தவறாமல் சென்று தாக்கும் அம்புகளைப் போல் இயங்கி மக்களின் மனங்களைக் கவரும். அவற்றைக் கேட்கும் மக்களில் பொரும்பாலோரின் உள்ளங்களில் இஸ்லாம் (தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டது)குடியேறிவிடும். அண்ணலாரின் இந்தப் பிரச்சார சுற்றுப் பயண்கள் தமது விளைவுகள், பாதிப்புகளைப் பொறுத்து மிகவும் வெற்றிகரமானவையாய்த் திகழ்ந்தன. இப்போது இஸ்லாத்தின் அழைப்பு அரபுலகத்தில் அந்நியமானதாய் கருதப்படவில்லை, மாறாக நெடுந்தொலைவிலுள்ள இடங்களில் கூட அது அறிமுகமாகி விட்டது. தீர்க்கமான முடிவுடன் இஸ்லாமிய இயக்கத்தின் தோழர்களாகி விட்டார்கள், தத்தம் பகுதிகளில் பிரச்சாரம் மற்றும் அழைப்புப் பணியை ஆரம்பித்துவிட்டிருந்தார்கள்.

ஜின்களின் இரவுகள்

அல்லாஹ்வின் எண்ணற்ற படைப்புகளில் ஜின்னும் ஒன்றாகும். ஜின்களும் மனிதர்களைப் போன்று சுயவிருப்பம், தேர்வுரிமை ஆகியவற்றைப் பெற்றிக்கின்றார்கள். இதே அடிப்படையில் தான் அவர்களும் இறைவனால் அனுப்பப்பட்ட விழக்காட்டுதலை ஏற்றுப் பின் பற்ற வேண்டிய கடமை உடையவர்களாவர்கள். ஏகத்துவம், இறைத்தூதுத்துவம், மறுமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வது அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றுவதும் அவர்களுக்கும் அவசியமேயாகும். இந்த அடிப்படையிலேயே அவர்களிடையேயும் நல்லவர்களும் தீயவர்களும் இருக்கின்றார்கள்.

ஜின்கள் இருப்பதை பற்றி பண்டைக் காலத்திலிருந்து மக்களிடையே வகை வகையான கருத்துகள் நிலவி வந்துள்ளன. அரபுலகத்திலும் ஜின்கள் குறித்து பலத்த சர்ச்சை நிலவிவந்தது. அரபுகளால் அவை வணங்கப்பட்டும் வந்தன. அரபுகள் அவற்றிடம் உதவி தேடியும் வந்தார்கள். மந்திர மாயங்களில் ஈடுபடுவோர் ஜின்களுடன் தமக்குத் தோழமையும் நட்பும் இருப்பதாக கூறிவந்தனர். வகைவகையான கட்டுகதைகள் அவற்றைக் குறித்துப் பிரபலமாக இருந்து வந்தன. ஆயிரக்கணக்கான தேவர்களும் தேவியர்களும் எப்படி இறைமறையில் பங்குடையவர்களாய் கருதப்பட்டு வந்தார்களோ இவ்வாறே ஜின்களும் இறைமறையில் பங்குடையவை என ஏற்கப்பட்டு வந்தன. இஸ்லாம் இந்த நம்பிக்கைகள், கொள்கைகள் அனைத்தையும் சீர்திருத்தியமைத்தது.

இஸ்லாம் பின்வருமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது: ‘ஜின்கள், அல்லாஹ்வின் படைப்புகளே! ஆனால் அவர்களுக்கு இறைமறையில் எவ்விதப் பங்கும் இல்லை. அவர்கள் தம் சுயாதிகாரத்தினால் எவருக்கும் எந்தப் பயனும் அளிக்க முடியாது, எந்த இழைப்பையும் ஏற்படுத்த முடியாது. அல்லாஹ்விற்கு அடிப்பணிந்து நடப்பது அவர்கள் மீதும் கடமையாகும். அவர்களிடையேயும் இறைவனுக்குக் கிழ்ப்படிந்து நடக்கும் ஜின்களும் கீழ்ப்படியாதிருக்கும் ஜின்களும் உண்டு. அவர்களும் மனிதர்களைப் போன்று தமது நல்ல செயல்களுக்கு நற்குலியும் தீயசெயல்களுக்கு தண்டனையும் பெறுவார்கள். இறைசக்திக்கு முன்னால் மனிதர்களைப் போன்றே ஜின்களும் இயலாதவர்கள், சக்தியற்றவர்கள் ஆவர்.’

முஹம்மத் (ஸல்) அவர்கள் வாயிலாக தனது இறுதி வடிவில் மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த இறைமார்க்கத்தினைப் பின்பற்றுவதற்கு மனிதர்கள் எவ்வாறு கடமைப்பட்டிருந்தார்களோ அவ்வாறே ஜின்களும் கடமைப்பட்டிருந்தன. எனவே ஒருமுறை அண்ணலார் தமது பிச்சாரப் பயணத்தின்போது அரபுலகின் பிரபலமான சந்தையான ‘உகாள்’ என்னும் சந்தைக்குச் சென்று கொணடிருக்கின்றார்கள். வழியில் ‘தக்லா’ என்னுமிடத்தில் ஓரிரவு தங்குகின்றார்கள். காலை நேரத்தின் போது அண்ணலார் தமது தோழர்கள் சிலருடன் தொழுது கொணடிருக்கிறார்கள், திருக்குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கின்றார்கள். தற்செயலாக ஜின்களின் ஒரு குழு அந்த வழியாகச் சென்றது. அநத ஜின்கள் திருக்குர்ஆனைச் செவியுற்றன. இந்த நிகழ்ச்சி திருக்குர்ஆனின் 46-ஆவது அத்தியாயமான ‘அல்காஃப்பில் பினவருமாறு கூறப்படுள்ளது :-

‘(நபியே!) நாம் ஜின்களின் ஒரு குழுவை அவை திருக்குர்ஆனைச் செவிமடுப்பதற்காக உம்பால் திருப்பினோம். அவை (அங்கு) வந்தபோது ஒன்றிடம் மற்றொன்று ‘மௌனமாயிருங்கள்’ என்று கூறிக் கொண்டன. திருக்குர்ஆன் ஓதி முடிந்ததும் அவை திரும்பச் சென்று தமது சமூகத்தாரை அச்சுறுத்தி எச்சரித்தன. அவை சகோதரர்களே! நாங்கள் ஒரு நூலைச் செவியுற்றோம், அது மூஸாவுக்குப் பிறகு இறங்கியருளப்பட்டுள்ளது. அதற்குமுன் இறங்கியுள்ள வேத நூல்களையும் அது மெய்பிக்கின்றது. சத்தியத்தின்பால் வழிகாட்டுகின்றது. நேரான வழியின்பால் செலுத்துகின்றது. சகோதரர்களே! அல்லாஹ்வின்பால் அழைப்பவரின் சொல்லை ஏற்றுக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னித்து, உங்களைத் துன்பம் தரும் வேதனையிலிருந்து காப்பாற்றும் பொருட்டு அவர்மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்’ (46: 29 – 31)

இந்த நிகழ்ச்சி நடந்த விவரம் அண்ணலாருக்கு வேதவெளிப்பாட்டின் வாயிலாகவே தெரியவந்தது. இதன் மற்ற விவரங்கள் 72 அவது அத்தியாயமான ‘சூரத்துல் ஜின்’ னில் இடம் பெற்றுள்ளன.

மதீனா மாநகரில் இஸ்லாம் நபித்துவ ஆண்டு 10

இஸ்லாத்தின் குரல் எப்படி நெடுந் தொலைவிலிருந்த அரபுலகின் பிற பகுதிகளுக்கு எட்டி வந்ததோ அவ்வாறே மதீனா மாநகருக்கு எட்டியது. மதீனா நகரில் மிகத் தொன்மையான காத்திலிருந்தே யூதர்களும் வந்து குடியேறிவிட்டிருந்தார்கள். அவர்கள் மதீனா நகருக்கு மிக அருகே தமது சிறு சிறு கோட்டைகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்ஸ், கஸ்ரஜ் என்னும் இரு சகோதரர்கள், (யமன் நாட்டைத் தாய்நாடாகக் கொண்டவர்கள்) வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் ஒரு காலகட்டத்தில் யமன் நாட்டிலிருந்து மதீனா நகருக்கு வந்து குடியாறிவிட்டிருந்தார்கள். அவ்விருவரின் சந்ததிகள் வாயிலாகத்தான் மதீனா நகரில் இரு பெரும் குடும்பங்கள் கிளைகள் உருவாகிவிட்டிருந்தன. அவை ‘அவ்ஸ் குலம்’ என்னும் சிற்;ப்புப் பொயரால் அழைக்கப்பட்டனர். இவர்கள், மதீனாவிலும் அதன் சுற்றுப்புற்ங்களிலும் ஏராளமான சிறு சிறு கோட்டைகளைக் கட்டி வைத்திருந்தனர். இவர்கள் கொள்கையால் சிலை வணங்குவோராக இருந்தனர். ஆனால் யூதர்களுடன் கொண்டிருந்த நட்பின் காரணத்தால் இறைத்தூதுத்துவம், வேதவெளிப்பாடு, வான்மறைகள், மறுமை ஆகிய நம்பிக்கைகளை அறிந்தேயிருந்தனர்.

தம்மிடம் இத்தகைய உயர்ந்த நம்பிக்கைகள் இல்லாமலிருந்தால் மத விவகாரத்தில் யூதார்களைக் குறித்து மதிப்பச்சம் உடயவர்களாயும் இருந்தனர். அவர்களுடைய சொற்களுக்கு மதிப்பளித்து வந்தனர். அவ்ஸ், கஸ்ரஜ் குலத்தார் யூத அறிஞர்களிடமிருந்து ‘உலகில் ஓர் இறைத்தூதர் வரவிருக்கின்றார். அவருக்கு துணை நிற்பவர்களதாம் வெற்றியடைவார்கள். அந்தத் தூதருக்கு உதவுபவர்கள்தாம் உலகின் மீது ஆதிக்கம் பெறுவார்கள்’ என்றும் கேள்விப்பட்டு வந்தார்கள். இந்த தகவல்களின் அடிப்படடையில் தான் மதீனாவாசிகள் அண்ணலாரின் அழைப்பின்பால் கவனம் செலுத்தினார்கள்.

ஹஜ் காலத்தில் பல்வேறு குலத் தலைவர்களிடமும் சென்று இஸ்லாமிய அழைப்பை அறிமுகப்படுத்துவது அண்ணலாரின் வழக்கமாககும். நபித்துவ ஆண்டு 10இல் நடந்தது இது. அண்ணலார் (ஸல்) அவர்கள் அகபா என்னுமிடத்தில் கஸ்ரஜ் குலத்தாரைச் சேர்ந்த சிலருக்கு இஸ்லாத்தின் அழைப்பை விடுத்தார்கள். திருக்குர்ஆனின் சில வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். இந்த வாக்கினைச் செவிமடுத்தபோது, அவர்களின் உள்ளத்தில் நல்லதொரு தாக்கம் உண்டாயிற்று.

‘எது எப்படியிருப்பினும், இன்னோர் இறைத்தூதர் ஒருவர் வரவிருப்பதாக யூத அறிஞர்கள் கூறிக் கொணடிருந்த அந்த இறைத்தூதர் இவர்தாம்’ என்று புரிந்து கொண்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ‘இந்த இறைத்தூதர் மீது நம்பிக்கை கொள்வதில் யூதர்கள் நம்மை முந்திக் கொள்ளும்படி நாம் விட்டுவிடக் கூடாது’ என்று கூறிக் கொண்டனர். பின்னர் உடனே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்கள் ஆறுபேர் ஆவர். இவ்விதம் மதீனா நகர அன்சாரிகளிடையே இஸ்லாம் புகலாயிற்று. பிற்காலத்தில் இஸ்லாமிய இயக்கதின் தலைமையிடமாய் ஆகவிருந்த அந்நகரத்தில் இஸ்லாத்தின் பேரோளி சுடர்விடத் தொடங்கியது.

எதிர்ப்பதில் கடுமை

ஒவ்வொரு இயக்கமும் விரிவடையும்போது அதன் வளர்ச்சியுடன் அதற்கு எதிர்ப்பும் போராட்டமும் அதிகரிக்கவே செய்யும். அப்படியே இஸ்லாமிய இயக்கம் விரிவடைந்தபோது, அவ்வளர்ச்சி தன்னுடன் கொண்டுவந்த எதிர்ப்புப் புயலும் போராட்டச் சூறாவளியும் அவ்வியக்கவாதிகளுக்கு மிகக் கடுமையான சோதனையாகவே விளங்கிற்று.

ஒருபுறம் இஸ்லாமி அழைப்பு பெருமளவில் அதிகமாகிக் கொண்டே வந்தது மற்றொரு புறம் சத்திய அழைப்பாளரும் அவரது தோழர்களும் மிகக் கடுமையான நிலைமைகளைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. அண்ணலார் (ஸல்) தாமாகவே நிர்ப்பந்தத்திற்குள்ளாகி தாமாகவே இஸ்லாமிய அழைப்புப் பணியைக் கைவிடுகின்ற அளவிற்கு அவர்களைத் தொல்லைக் குள்ளாக்கிட வேண்டும் எனக் குறைஷித் தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருந்தனர்.

குறைஷிகளின் பெரும் தலைவர்கள் அண்ணலாரின் அண்டை விட்டாராக இருந்தனர். அவர்களே அண்ணலாரின் பெரும் எதிரிகளாக விளங்கினர். இவர்கள் அண்ணலார் நடந்து செல்லும் பாதையில் முட்களைப் பரப்பி வைப்பார்கள், தொழுகையில் ஈடுபட்டிருக்கும் போது கேலியும் கிண்டலும் செய்வார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்து கொண்டிருக்கும்போது குப்பை கூளங்களைக் கழுத்தில் போட்டு விடுவார்கள் அண்ணலாரின் திருக்கழுத்தில் வடுக்கள் பதிந்துவிடும் அளவிற்கு போர்வையைச் சற்றி ஈவிரக்கமின்ற இழுப்பார்கள், சிறுவர்களை அண்ணலரின் பின்னால் ஏவி விடுவார்கள், அவர்கள் அண்ணலாரை ஏசிக் கொண்டும் கைதட்டிக் கொண்டும் செல்வார்கள். அண்ணலார் எங்காவது உரையாற்றினால் இடையே குழப்பங்கள் விளைவிப்பார்கள். இவையெல்லாம் பொய் என்று கூறுவார்கள். ஆக, தொல்லை தரவும் துன்பத்தில் ஆழ்த்திடவும் எத்தனை படுமோசமான வழிமுறைகள் சாத்தியமோ அவை அனைத்தையும் கையாண்டார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அல்லாஹ் தன் திருத்தூதர்மீது இறக்கியருளிக் கொண்டிருந்த வேதவெளிப்பாட்டில் இந்தச் சூழ்நிலைகள், பிரச்சனைகள் அனைத்தையும் சந்தித்து சமாளிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் இருந்தன. இஸ்லாமிய இயக்கத்தின் ஊழியர்கள், தளகர்த்தர்களுக்குப் பின்வருமாறு அறிவுறுத்தப் பட்டு வந்தது: ‘இப்போது சத்தியம் எந்த அநீதிக்கு இரையாகியுள்ளதோ அந்த அநீதியை நிரந்தரமான ஒன்றாகக் கருதி விடக்கூடாது’. உலக வாழ்வில் இத்தகைய வேடிக்கைகள் நிகழ்ந்தே வந்திருக்கின்றன. மேலும் வெற்றிக்கான உண்மையான அளவுகோல் உலக வாழ்க்கையன்று! மாறாக மறுமை வாழ்க்கையேயாகும். இறையச்சமுடைய வாழ்வைக் கைக்கொள்வோருக்கே மறுமை வாழ்வு சிறந்ததாயிருக்கும் என்பது முடிவான ஒன்று.

அண்ணலாரை நோக்கி பின்வருமாறு கூறப்பட்டது: ‘ உங்களுக்கு இழைக்கப்படும் அந்நீதி மிகவும் துன்பம் தரக்கூடியது என்பதை நாம் அறிந்திருக்கின்றோம் என்றாலும் சத்தியத்தைப் பொய்யென வாதிட்டு மறுத்துக் கொண்டிருக்கும் இந்த மக்கள் உங்களைப் பொய்ப்பிக்கவில்லை, நம்மைத்தான் பொய்பிக்க முயன்று கொண்டிருக்கினறார்கள். இது ஒன்றும் புதிய விஷயமன்று. இதற்கு முன்னாலும் இறைத்தூதர்களுடன் இவ்விதமே அவர்கள் நடந்துகொண்டார்கள். ஆனால் அந்த இறைத்தூதர்கள் அந்த நிலைமைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள் அந்த நிலைமைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள், எல்லாவிதமான துன்பங்களையும் துயரங்களையும் சகித்தார்கள். இறுதியில் நமது உதவி அவர்களைச் சென்றடைந்தது. நீரும் அத்தகைய நிலைமைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறீர், அத்தகைய நிலைமைகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்’.

பல்வேறு தொனிகளிலும் பாணிகளிலும் அவர்களுக்குப் பின்வரும் கருத்து அடிக்கடி விளக்கப்பட்டு வந்தது: ‘சத்தியம் மற்றும் அசத்தியத்தின் போரட்டத்திற்காக அல்லாஹ் ஒரு நியதியை நிர்ணயித்து வைத்துள்ளான், அந்த விதியை மாற்றிவிடுவது எவராலும் முடியாத ஒன்று. சத்தியவாதிகளை நீண்டதொரு காலம்வரை சோதிப்பதும் அவர்களுடைய பொறுமை, நிலைகுலையாத தன்மை, நேர்மை, வாய்மை நம்பிக்கை, நாணயம், அர்ப்பணிப்பு, இறைநம்பிக்கையில் உறுதி ஆகியவற்றைப் பரிசோதிப்பதும் இறைவனையே சார்ந்து அவனையே முற்றிலுமாக நம்பி அவனிடத்திலேயே தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் (தவக்குல் என்னும்) பணிபிலும் இறைவனின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையிலும் (ஈமான் பில்லாஹ்விலும்) அவர்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை மதிப்பிடுவதும் அந்த இறை நியதியின்படி இறை விதியின்படி அவசியமானதாகும். தவிர்க்க முடியாததாகும்.’

இந்தப் போராட்டத்தின் போதுதான், பிற்காலத்தில் இறைமார்க்கத்தின் தொண்டர்களாக மாறிட உதவும் உயர் பண்புகள் அவர்களுக்குள் உருவாகுகின்றன. இறைவன் வைக்கும் இந்தச் சோதனையில் தம்மைத் தகுதியுடையவர்கள் என்று அவர்கள் நிரூபிக்கும்போது தான் அல்லாஹ்வின் உதவி மிகச் சரியான வேளையில் வருகின்றது. அதற்கு முன்பாக அது எவர் அழைத்தாலும் வருவதில்லை.

முதல் பைஅத்துல் அகபா நபித்துவ ஆண்டு – 11

இரண்டாவது ஆண்டு மதீனாவாசிகளில் பன்னிரண்டு பேர் அண்ணலாரின் திருச்சமூகத்தில் வருகை தந்தனர். அண்ணலாரின் திருக்கரத்தில் பைஅத் உறுதி பிரமாணம் செய்தனர். இஸ்லாத்தை போதித்திட எவரையாவது தம்முடன் மதீனா நகருக்கு அனுப்பும்படிக் கோரினர். எனவே முஸ்அப்பின் உமைர் (ரலி) அவர்களை அந்த மதீனாவாசிகளுடன் அண்ணலார் (ஸல்) அனுப்பி வைத்தார்கள். முஸ்அப்பின் உமைர் (ரலி) அவர்கள் மதீனா நகரில் ஒவ்வொரு வீட்டிலும் சென்று மக்களுக்குத் திருக்குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள், இஸ்லாமிய அழைப்பைக் கொடுப்பார்கள். இவ்விதம் நாள்தோறும் ஓரிரண்டு பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள். சிறிது, சிறிதாக இஸ்லாம் மதீனா நகருக்கு வெளியேயும் பரவலாயிற்று. அவ்ஸ் குலத்தின் தலைவர் சஅத்பின் முஆத் (ரலி) அவர்களும் முஸ்அப்பின் உமைர் (ரலி) அவர்களின் கரங்களில் இருந்துதான் இஸ்லாத்தை ஏற்றார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது, அவ்ஸ் குலமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்குச் சமமானதாய் விளஙிகிற்று.

இரண்டாம் பைஅத்துல் அகபா நபித்துவ ஆண்டு – 12

அடுத்த ஆண்டு எழுபத்திரண்டு பேர் மீதினா நகரில் இருந்து ஹஜ்ஜுக் காலத்தில் வந்தார்கள். இரகசியமாக அண்ணலாரைச் சந்தித்தார்கள். அகபா என்னுமிடத்தில் அண்ணலலாரின் கரத்தில் பிரமாணம் செய்து இஸ்லாத்தை ஏற்றார்கள். சாதகமான நிலைமையாயினும், பாதகமான நிலைமையாயினும் எத்தகைய நிலையிலும் இஸ்லாமிய இயக்கத்திற்கு உறுதுணையாக ஆதரவாக விளங்குவதாக உறுதிப் பிரமாணம் செய்தார்கள். அண்ணலார் (ஸல்) இந்தக் குழுவினரிடமிருந்து பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை தலைவர்களாக நியமித்தார்கள். அவர்களில் ஒன்பது பேர் கஸ்லஜ் குலத்தையும் மூவர் அவ்ஸ் குலத்தையும் சேர்ந்தவர்கள். அண்ணலார் அவர்களிடம் ஒப்புதல் பிரமாணம் வாங்கிய விஷயங்களாவன:

1.      ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கிட மாட்டோம். அவனைத் தவிர வேறெவருக்கும் கீழ்ப்படிய மாட்டோம்.

2.      திருடமாட்டோம்.

3.      விபச்சாரம் செய்யமாட்டோம்.

4.      எங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டோம்.

5.      எவர் மீதும் அபாண்டமாக அவதூறு புனைந்துரைக்க மாட்டோம்.

6.      அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த நற்செயல்களைப் புரியும்படி கட்டளையிடுகின்றார்களோ அவற்றைப் புறக்கணிக்க மாட்டோம்.

இந்த உறுதி பிரமாணத்திற்குப் பிறகு அண்ணலார், ‘இந்த நிபந்தனைகளை நீங்கள் நிறைவேற்றினால் உங்களுக்கு சொர்க்கம் உண்டு என்னும் நற்செய்தியை அளிக்கின்றேன். இவற்றை நிறைவேற்றத் தவறினால் உங்கள் விவகாரம் அல்லாஹ்விடம் உள்ளது. அவன் விரும்பினால் உங்களை மன்னித்து விடலாம், விரும்பினால் உங்களுக்கு வேதனையும் தரவாம்’.

இவர்கள் உறுதிப் பிரமாணம் செய்து கொண்டிருந்த வேளையில் அஸ்அத் பின் ஸுராரா (ரலி) என்னும் அன்சாரித் தோழர் எழுந்து நின்று பின்வருமாறு உரை நிகழ்த்தினார்கள் : ‘ சகோதரர்களே! நீங்கள் எந்த விஷயத்தில் உறுதிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இது (இந்த உறுதிப்பிரமாணம்) அரபுகளுக்கும் மற்ற சமுதாயங்களுக்கும் எதிரான போர்ப் பிரகடனமாகும்’.

இதனைச் செவியுற்ற அனைவரும் ‘ஆம்! அதனை நன்கு புரிந்து கொண்டேதான் இந்த பிரமாணத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம்’ என்று கூறினார்கள். அந்தக் குழுவினரில் வேறு சிலரும் இப்படிப்பட்ட உத்வேகமிக்க உரைகளை ஆற்றினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அண்ணலார் (ஸல்) என்றாவது ஒரு நாள் மதீனா நகருக்கு வந்து (நிரந்தரமாகத் தங்கி) விடவேண்டுமென்றும் மதீனா நகர மக்கள் எந்த நிலையிலும் சாகும் வரையிலும் அண்ணலாருக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும் முடிவாயிற்று. அப்போதுதான் பர்ரா (ரலி) அவர்கள் ‘நாங்கள் வாட்களின் மடியில் தவழ்ந்து வளர்ந்தவர்கள்’ என்று கூறினார்கள்.

அற்புதங்களும் விண்ணேற்றமும்

________________________________________

அற்புதங்களும் விண்ணேற்றமும் (முஃஜிஸாக்களும் மிஃராஜும்)

ஓர் இறைத்தூதரின் நபித்துவ வாதத்தை நிரூபிப்பதற்காக உலகமக்கள் முன்னால் இறைவன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி தீனின் சொல் விழக்கில ‘முஃஜிஸா’ எனப்படுகின்றது. அந்நிகழ்ச்சி பொதுவான வழக்கத்திற்கு மாற்றமானதாக இருக்க வேண்டும் என்பதும் இதற்கான ஒரு நிபந்தனையாகும்.

எடுத்துக்காட்டாக நெருப்பின் பணி எரிப்பது, ஆனால் அது எரிக்காமலிப்பது, கடல் ஓடிக் கொண்டிருக்கும், ஆனால் அது அப்படியே நின்று விடுவது, மரம் ஓரிடத்தில் நின்று கொணடிருக்கும், ஆனால் அது நடக்க ஆரம்பிப்பது. பிணம் உயிராகி எழுவது அல்லது மரக்கட்டை பாம்பாகி விடுவது..! ஆகியன.

உலகில் ஒவ்வொரு செயலுக்கும் உரிய அசல் காரணம் அல்லாஹ்வின் வலிமையும் அவனது நாட்டமுமே ஆகும். சில நிகழ்ச்சிகள் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட சில விதிமுறைகளின்படி தொடர்ந்து நடைபெற்று வருவதைப் போன்றே இறைசக்தியின் கீழ், சில நிகழ்ச்சிகள் அந்த வழக்கமான விதிகளை விட்டு சற்று விலகி, வழக்கத்திற்கு மாறான வேறு சில விதிமுறைகளின் படியும் நடைபெற முடியும்.

பெரும்பாலான இறைத்தூதர்களுக்கு அவர்களுடைய தூதுத்துவத்திற்கு ஆதாரமாக முஃஜிஸாக்கள் (அற்புதங்கள்) வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த அற்புதங்கள் இறைமறுப்பாளர்கள் இறை நம்பிக்கை கொள்வதற்கு, குறைவாகவே காரணமாகியுள்ளன. அற்புதங்களை வெளிப்படுத்துவது ஒரு வகையில் அவற்றைக் கொண்டு வருபவர் ஓர் இறைத்தூதர்தாம் என்பதற்கான ஆதாரத்தை நிறைவாக எடுத்து வைப்பதாகும். எனவேதான, அற்புதங்களைப் பார்த்த பின்னரும் நபிமார்களை நிராகரித்த மக்கள்மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கியுள்ளது. அவர்கள் உலகிலிருந்து அழித்தொழிக்கப்படிருக்கிறார்கள்.

குறைஷிகளிலிருந்த இறைமறுப்பாளர்கள் அண்ணலாரிடமிருந்து அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்படிகோரி வந்தார்கள். அவர்களின் இந்தக் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்தது. ஏனெனில் தொன்றுதொட்டு இறைவனின் நடைமுறை இதுவாகவே இருந்துவந்தது. மக்களின் முன்னால் அவர்களின் கோரிக்கைக்கு பதிலாக தெளிவான அற்புதம் ஏதும் காட்டப்பட்டு விட்டால் அவர்கள் முன் இரண்டே வழிகள்தாம் எஞ்சி நிற்கும். ஒன்று, இறைநம்பிக்கை கொள்வது, இல்லையெனில் அழிந்துபோவது. குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை அழித்துவிடுவது என்று இன்னும் அல்லாஹ்வின் நாட்டம் முடிவு செய்யவில்லை. எனவே அவர்களுடைய இந்தக் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஏறத்தாழ பத்துப் பிதினோராண்டு காலம் தொடர்ந்து இஸ்லாமிய அழைப்பு விடுத்த வண்ணம் கடந்துவிட்ட இந்நிலையில், முடிந்தவரை அச்சமுதாயத்திற்கு இச்செய்தியை விளக்கிவிட்ட பின்னர் பல நேரங்களில், அண்ணலார் (ஸல்) மற்றும் இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில், ‘அந்தோ! அல்லாஹ்வின் தரப்பிலிருந்து ஏதேனும்மோர் அடையாளச் சான்று வெளிப்படக்கூடாதா, அதனைப் பார்த்தாயினும் இவர்கள் இறைநம்பிக்கை கொண்டு இஸ்லாத்தின் சத்தியத்தன்மையை ஏற்றுக்கொள்ளக் கூடுமே!’ என்னும் ஆவல் உண்டாயிற்று.

ஆனால் அண்ணலாரின் இந்த விருப்பத்திற்கு பதில் தரும் வகையில், ‘பாருங்கள். பொறுமையை இழந்துவிடாதீர்கள். எந்த வரிசைக் கிரமப்படி எந்த முறையில் நாம் இந்த அழைப்புப் பணியை நடைபெறச் செய்து கொண்டிருக்கின்றோமோ, அதனை அந்த முறையிப்படியே பொறுமையுடன் ஆற்றிய வண்ணமிருங்கள். அற்புதங்களைப் பயன்படுத்தி இஸ்லாமியப் பிரசாரம் செய்வதாயிருந்தால் அதனைப் எப்போதோ நாம் செய்துமுடித்திருப்போம். நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு இறைமறுப்பாளனின் உள்ளத்தையும் மெழுகாக்கிவிட்டிருப்போம். அவனை நேர்வழியின் பாதையில் செலுத்தி விட்டிருப்போம். ஆனால் இது நம்முடைய வழி முறையன்று. இவ்விதம் நாம் செய்வோமாயின், மனிதனின் சுயவிருப்பம், தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றுக்கு தேர்வு வைத்திடவும் முடியாது. ஒரு வெற்றிகரமான சமுதாய அழைப்பு எவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றதோ அந்தச் சிந்தனை மற்றும் ஒழுக்கப்புரட்சியும் ஒருவாகிட முடியாது’ எனும் பொருள்படக் கூடிய வசனங்கள் இறங்கின.

மேலும் கூறப்பட்டது: ‘மக்களின் அலட்சியம் மற்றும் நிராகரிப்பின் காரணத்தால் நீங்கள் நிலைமைகளை எதிர்த்துப் பொறுமையுடன் போராடிட முடியாது என்றால் உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள். பூமிக்குள் புகுந்தோ வானத்தில் ஏறியோ அற்புதம் எதனையாவது கொண்டு வாருங்கள்!’ (அல்குர்ஆன் 6 : 35)

அனால் இதன் பொருள் அண்ணலாருக்கு அற்புதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதன்று. திருக்குர்ஆனே அண்ணலாரின் மாபெரும் அற்புதம் ஆகும். இதனைப் பற்றிய விவரம் இனிவரும் பக்கங்களில் இடம் பெறும். இது தவிர பொருத்தமான இடங்களில் அண்ணலாரிடமிருந்து எண்ணற்ற அற்புதங்கள் வெளிப்படிருக்கின்றன. அவற்றில் சந்திரன் இரண்டாக பிளந்தது (ஷக்குல் கமர்), அண்ணலார் (ஸல்) விண்பயணம் சென்றது (மிஃராஜ்) ஆகியன மிக முக்கியமானவை. இவைதவிர ஏராளமான முன்னறிவிப்புகள், அண்ணலாரின் பிரார்த்தனையால் மழைபொழிந்தது, மக்கள் நேர்வழி பெற்றது, தேவைப்பட்ட நேரத்தில் குறைந்த அளவிலிருந்து பொருள் அதிக அளவுடையதாகி விட்டது, நோயாளிகள் குணம் அடைந்தது, நீர் பொங்கி வெளிப்படுவது ஆகிய எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

சந்திரன் இரு கூறாகப் பிளத்தல்

மக்கா நகரத்து இறைமறுப்பாளர்கள் முன்னே இஸ்லாம் உண்மையானது என நிரூபிக்கும் சான்றுகளை முன்வைக்கும் செயலை நிறைவுபடுத்திட அண்ணலார் (ஸல்) நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களில் மிக முக்கியமான அற்புதம் சந்திரன் இரு கூறூகப் பிளந்து விட்டதாகும். சஹீஹ்புகாரீ, சஹீஹ்முஸ்லிம் ஆகிய நபி மொழி நூல்களில் தரப்பபட்டுள்ள இந்த நிகழிச்சியை அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும்போது உயிர் வாழ்ந்தார்கள். அவர்கள் சந்திரன் இரு துண்டுகளாகப் பிளப்பதையும் அதன் ஒரு துண்டு, மலையின் பக்கம் சென்றுவிட்டதையும் தமது கண்களால் கண்டார்கள். அண்ணலார் அப்போது அவர்களை நோக்கி, ‘சாட்சியாயிருங்கள்’ என்று கூறினார்கள். ஆனால் நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் அற்புதங்களைக் கண்ட பின்னர் இறைமறுப்பாளர்கள் இறைநம்பிக்கை கொள்ளவே செய்வார்கள் என்பது நிச்சயமல்ல. ஆனால் பொதுவாக நடப்பது என்னவெனில், எவருடைய உள்ளங்களில் இறைமறுப்பும் பிடிவாத குணமும் நிரம்பிக்கிடக்கின்றனவோ அவர்கள்தாம், அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்படி கோருகின்றார்கள். இவ்விதம் அவர்கள் தமது இறைமறுப்புக்கு தந்திரங்களையும், உபாயங்களையும் சாக்கு போக்குகளையும் தேடித் திரிகின்றார்கள்.

எவருடைய உள்ளங்கள் இறைநம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பொற்றுள்ளனவோ, சுயநல வேட்கைகள், உலக ஆதாயங்களின் வலைகளில் சிக்கியிருக்கவில்லையோ அவர்களுக்கு இறைத்தூதர், இறைத்தூதரின் அறிவுரைகளாகத் தென்படுகின்றன. அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதில் எப்போதும் முந்திக் கொள்கிறார்கள்.

எனவே, சந்திரன் பிளந்துபோன பின்னரும் நிராகரிப்பாளர்கள், ‘இது மந்திரமாயம்தான்! மந்திரத்தின் வலிமையால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தே வந்துள்ளன’ என்றுதான் கூறினார்கள். இவ்விதம் அற்புதங்களைப் பார்த்த பின்னும் அவர்கள் நேர்வழிக்கு வரவில்லை. மாறாக, இவ்வுளவு வெளிப்படையான சான்றினைக் கண்டபின்னரும் அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப் பொய்யர் என்று கருதிய பெருங்குற்றம் ஒன்றும் அவர்களுடைய குற்றப்பட்டியலில் சேர்ந்து கொண்டது.

மிஃராஜ் – விண்பயணம் (இஸ்ரா)

மிஃராஜ் என்னும் சொல்லின் பொருள் ‘உயரே ஏறிச் செல்லுதல்’ என்பதாகும். அண்ணலார் (ஸல்) தமது விண்பயணம் ஒன்றைக் குறித்து இந்தச் சொல்லைக் கையாண்ட காரணத்தால், அண்ணலாரின் இந்தப் பயணத்தை ‘மிஃராஜ்’ என்றழைக்கிறார்கள். இதன் மற்றொரு பெயர் ‘இஸ்ரா’ என்பதாகும். இஸ்ரா எனும் வார்த்தை இரவோடிரவாகப் பயணம் செய்வதைக் குறிக்கும்.

இந்தப் பயணம் இரவோடிரவாக நடைபெற்ற காரணத்தால் இதனை ‘இஸ்ரா’ என்றும் கூறுகின்றனர். திருக்குர்ஆனிலும் இந்தச் சொல்லே கையாளப்பட்டுள்ளது.

இறைத்தூதர்கள் ஆற்ற வேண்டியிருக்கும் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் தீனை நிலைநாட்டும் பணிகளுக்குத் தேவைப்படுகின்ற மிக உறுதியான இறைநம்பிக்கையை அவர்கள் அடைந்திட, அவர்கள் எந்தக் கண்காணாத உண்மைகளின் மீது நம்பிக்கை கொள்ளும்படி அழைப்பு விடுகின்றார்களோ அந்த உண்மைகளை அவர்களே தங்கள் கண்களால் கண்டு கொள்வதும் அவசியமாகத் திகழ்கின்றது. ஏனெனில் அவர்கள் உலகின் முன் முழுபலத்துடனும் வலிமையுடனும் பினவரும் செய்தியைக் கூற வேண்டியுள்ளது: ‘நீங்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையிலும் கணிப்பின் அடிப்படையிலும் ஒரு விஷயத்தை மறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் கண்களால் கண்ட ஒர் உண்மையை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் எங்களிடம் உறுதியான அறிவு உள்ளது’ என்று கூற வேண்டியுள்ளது.

இதனால்தான் எல்லா இறைத்தூதர்களின் முன்பும் வானவர்கள் வெளிப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு வானங்கள், பூமியின் ஆட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. சொர்கமும், நரகமும் கண்முன்னே காட்டப்பட்டுள்ளன. இறந்த பின்னர் மனிதன் அடைந்த நிலைகள் அவர்களுக்கு இந்த உலக வாழிவிலேயே காட்டப்பட்டுள்ளன. விண்பயணமான மிஃராஜ் – இஸ்ரா, அண்ணலாருக்கு மறைவான உண்மைகள் காட்டப்பட்ட பல நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சியோயாகும். அப்பயணத்தில் அண்ணலாருக்கு யதார்த்த உண்மைகள் பல காண்பிக்கப்பட்டன. ஒரு இறைநம்பிக்கையாளன் அந்த உண்மைகளைப் பார்க்காமலேயே இறைத்தூதரின் அறிவிப்பின் அடிப்படையில் அவற்றின் மீது நம்பிக்கை கொள்கின்றான்.

மிஃராஜுடைய நிகழ்ச்சி எந்தக் தேதியில் நடை பெற்றது என்பது குறித்து பல அறிவிப்புகள் உள்ளன. எனினும் எல்லா அறிவிப்புகளையும் முன்னால் வைத்த பின் வரலாற்றாசிரியர்கள் முதலிடம் தரும் கருத்து, இந்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்திற்கு ஏறத்தாழ ஓர் ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டு முன்னர் நடைபெற்றது என்பதேயாகும்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளை ஆராய்ந்த பின் நமக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்தமான விவரம் இதுதான்.

அண்ணலார் ஒருநாள் காலை பின்வருமாறு கூறினார்கள்: ‘கடந்த இரவு என் இறைவன் எனக்குப் பெரும் கண்ணியத்தை அளித்தான். நான் உறங்கிக் கொண்டிருந்தேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து என்னை எழுப்பினார்கள், என்னை கஅபாவின் முற்றத்தில் கொண்டு வந்தார்கள். அங்கு கொணர்ந்த பின் அவர்கள் என் இதயத்தை பிளந்தார்கள். அதனை ‘ஜம்ஜம்’ நீரால் கழுவினார்கள். (ஜம்ஜம், என்பது கஅபாவின் அருகிலுள்ள ஓர் பாக்கியமிக்க கிணறாகும்.) பின்னர், அதில் இறைநம்பிக்கையாலும், விவேகத்தாலும், மதிநுட்பம் இட்டு நிரப்பி மூடி விட்டார்கள். பின்னர் அவர்கள் நான் அமர்ந்து பயணம் செய்வதற்காக ஒரு பிராணியை அளித்தார்கள். அப்பிராணி கோவேறுக் கழுதையைவிட சற்று சிறியதாகவும், வெள்ளைநிறமுடையதாகவும் இருந்தது. அதன் பெயர் ‘புராக்’ என்பதாகும். அது அதிவேகமாக ஓடக்கூடியதாயிருந்தது.

நான் அதில் ஏறி அமர்ந்த கண நேரத்திற்குள் நாங்கள் பைத்துல் முகத்தஸை அடைந்துவிட்டோம். அங்கு புராக் வாகனம், பள்ளிவாசலின் வாயிலில் கட்டப்பட்டுவிட்டது. நான் மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் நுழைந்தேன். இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். இப்போது ஜிப்ரீல் (அலை) என் முன் இரு கிண்ணங்களை வைத்தார்கள். ஒன்றில் மது நிரம்பியிருந்தது. மற்றொன்றில் பால் நிரம்பியிருந்தது. நான் பால் கிண்ணத்தை ஏற்றுக் கொண்டேன். மதுக் கிண்ணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஜிப்ரீல் (அலை) இதனைக் கண்டு ‘நீர் பால் கிண்ணத்தை ஏற்று, இயற்கை நெறியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்’ என்று கூறினார்கள்.

அதன்பின் விண்பயணம் தொடங்கியது. நாங்கள் முதல் வானத்தை (உலக வானத்தை) அடைந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள், அங்கு காவல்காத்து நின்ற வானவரிடம் கதவைத் திறக்கும்படி கூறினார்கள். அவர்கள் ‘உம்முடன் யார் இருக்கின்றார்கள்?’ என்று கேட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘முஹம்மத் (ஸல்) அவர்கள்’ என்று பதிலளித்தார்கள். அந்த வானவர் மீண்டும், ‘இவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?’ என்று கேட்க ஜிப்ரீல் (அலை), ‘ஆம்! அழைக்கப்பட்டிருக்கிறார்’ என்று கூறினார்கள். இதனைச் செவியுற்ற அந்த வானவர். ‘அப்படிப்பட்ட பெருமகனாரின் வருகை நல்வரவாககட்டும்!’ என்று கூறியவண்ணம் கதவைத் திறந்தார்.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது ஆதம் (அலை) அவர்களைச் சந்தித்தோம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம், ‘இவர் உங்கள் தந்தை (மனித மனித இனத்தின் தந்தை) ஆதம் (அலை) ஆவார்கள். நீங்கள் அவருக்கு சலாம் கூறுங்கள்’ என்று கூறினார்கள். நான் சலாம் கூறினேன். அவர்கள் என் சலாத்திற்கு பதிலுரைத்த வண்ணம், ‘வருக! நல்ல மகனே! என் நல்ல நபியே!’ என்று கூறினார்கள்.

இதன்பின் நாங்கள் இரண்டாம் வானத்தை அடைந்தோம். முதல் வானத்தைப் போன்றே விசாரணையும் பதிலும் நடந்து முடிந்தபின் கதவு திறந்தது. நாங்கள் உள்ளே சென்றோம். அங்கு யஹ்யா (அலை), ஈஸா (அலை) ஆகியோருடன் சந்திப்பு நடைபெற்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அவ்விருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள. பின்னர் ‘சலாமுரையுங்கள்’ என்று கூறினார்கள். நான் சலாம் சலாமுரைத்தேன். இருவரும் அதற்கு பதிலளித்த வண்ணம் ‘வருக! வருக! என் நல்ல சகோதரரே! நல்ல நபியே!’ என்று கூறினார்கள். பின்னர் மூன்றாம் வானம்வரை இவ்வாறே சென்று சேர்ந்தோம். அங்கு யூசுப் (அலை) அவர்களைச் சந்தித்தோம். முன்புபோலவே சலாமும் பதிலும் நடைபெற்றன. நான்காம் வானத்தில் இதிரிஸ் (அலை) அவர்களைச் சந்தித்தோம் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களைச் சந்தித்தோம். ஆறாம் வானத்தில் மூஸா (அலை) அவர்களைச் சந்தித்தோம். ஏழாம் வானத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களைச் சந்தித்தோம். அவர்களும் சலாமுக்கு பதில் தருகையில், ‘வருக! என் நல்ல மகனே! நல்ல நபியே!’ என்று கூறினார்கள். பின்னர் என்னை ஸித்ரத்துல் முன்தஹா என்னுமிடம் வரை சென்று சேர்ந்தார். ஜிப்ரீல் (அலை). அது ஓர் இலந்தை மரம், அதில் ஏராளமான மலக்குகள் வானவர்கள் மின்மினியைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தனர்’.

 இங்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் பல உண்மைகளைக் கண்களால் கண்டார்கள். அல்லாஹ்வுடன் பேசவும் செய்தார்கள். அல்லாஹுதஆலா, இரவும் பகலும் ஐம்பது வேளைத் தொழுகைகளை அண்ணலாரின் உம்மத்தினர் (பின்பற்றும் குழுவினர்) மீது கடமையாக்கினான். அண்ணலார் இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டு முடித்து திரும்பிச் செல்லும்போது மீண்டும் மூஸா (அலை) அவர்களைச் சந்தித்தார்கள். மூஸா (அலை) அவர்கள், ‘அல்லாஹ்விடமிருந்து என்ன அன்பளிப்பைக் கொண்டு வந்தீர்கள், சொல்லுங்கள்!’ என்று கேட்டார்கள். அண்ணலார் (ஸல்) ‘இரவும் பகலும் ஐம்பது வேளைத் தொழுகைகளைக் கொண்டு வந்தேன்’ என்று கூற மூஸா (அலை) அவர்கள் ‘உங்கள் சமுதாயம் இந்தச் சுமையைத் தாங்காது. எனவே திரும்பிச் சென்று அவற்றைக் குறைத்து வாங்கி வாருங்கள்’ என கூறினார்கள்.

எனவே அண்ணலார் திரும்பச் சென்று அவற்றைக் குறைத்துத் தரும்படி இறைவனிடம் கோரினார்கள். அதிலிருந்து ஒரு அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் குறைக்கப்பட்டது. ஆனால் மூஸா (அலை) அவர்கள், அண்ணலாரைத் திரும்ப அனுப்பி மீண்டும் மீண்டும் குறைத்து வாங்கச் செய்தார்கள். இறுதியில் இந்த எண்ணிக்கை சிறிது சிறிதாகக் குறைந்து ஐந்தாகி விட்டது. ஆனால் இதிலும் மூஸா (அலை) அவர்கள் திருப்தியடையாமல் இன்னும் குறைத்து வாங்கும்படி கூறினார்கள். ஆனால் அண்ணலார், ‘இன்னும் குறைத்துத் தரும்படி கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது’ என்று கூறினார்கள். இதனைச் சொன்னவுடன் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து ‘நாம் தொழுகையின் எண்ணிக்கையை ஐம்பதிலிருந்து ஐந்தாகக் குறைத்துவிட்டோமென்றாலும், உமது சமுதாயத்தினரில் பேணுதலுடன் ஐவேளைத் தொழுகையை தினமும் நிறைவேற்றி வருபவருக்கு ஐம்பது வேளைத் தொழுகைகளின் நற்கூலியே அளிக்கப்படும்’ என்று அசரீரி வாக்கு ஓலித்தது.

தொழுகை மட்டுமின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இறைவனிடத்திலிருந்து இன்னுமிரு அன்பளிப்புகள் அருளப்பட்டன. அவற்றில் ஒன்று, முஸ்லிம்கள் அனுபவித்துவந்த சோதனைக்காலம் முடிவடையவிருப்பது குறித்தும், இஸ்லாத்தின் கொள்கைகளும் ஈமான் முழுமையடைவது குறித்தும் கூறப்பட்டுள்ள ‘அல்பகரா’ அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்கள். மற்றொன்று முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் இணைவைக்கும் பாவத்திலிருந்து விலகியிருப்பவர் மன்னிப்பு அளிக்கப்படுவார் எனும் நற்செய்தி. இந்தப் பயணத்தில் அண்ணலார் (ஸல்) சொர்கத்தையும் நரகத்தையும் தம் கண்களால் கண்டார்கள். இறந்தபின் தத்தம் செயல்களுக்கேற்ப மக்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கும் பல்வேறு வகைப்பட்ட நிலைமைகளின் சில காட்சிகளும் அண்ணலாரின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டன.

வானங்களிலிருந்து திரும்பிய பின்னர் அண்ணலார் (ஸல்) மீண்டும் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். இங்கு இறைத்தூதர்கள் கூட்டமாகக் குழுமியிருப்பதைக் கண்டார்கள். பின்னர் அண்ணலார் தொழுகை நடத்தினாhகள். இறைத்தூதர்கள் அனைவரும் அண்ணலாருக்குப் பின்னால் தொழுகையை நிறைவேற்றினார்கள். அதன் பின் அண்ணலார் தமது இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். காலையில் அதே இடத்திலிருந்து விழித்தெழுந்தார்கள்.

மிஃராஜின் முக்கியத்துவம் வருங்காலத்திற்கான சமிக்ஞைகள்

காலையில் அண்ணலார் (ஸல்) இந்த நிகழ்ச்சியை மக்களுக்குத் தெரிவித்தவுடன் குறைஷி இறைமறுப்பாளர்களில் அண்ணலாரை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள் அண்ணலாரை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் அண்ணலாரைப் பொய்யர் (நஊதுபில்லாஹ்) என்று கூறினார்கள். எவருடைய உள்ளங்கள் உண்மையையும் வாய்மையையும் உறுதியாக நம்பினவே அவர்கள் இந்தச் செய்தியைச் சொல்லுக்குச் சொல் உண்மையென ஏற்றார்கள். ‘அண்ணலார் கூறுகிறார்கள் என்றால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையானவையே’ என்று கூறினார்கள். இவ்விதம் மிஃராஜின் இந்த நிகழ்ச்சி, ஒருபுறம் மக்களின் இறைநம்பிக்கை மற்றும் இறைத்தூதுத்துவம் ஆகியவற்றை உண்மையென ஏற்கிறார்களா? இல்லையா என்று பார்க்கும் ஒரு சோதனையாகவும், மற்றொருபுறம் அண்ணாருக்கு மறைபொருளான எண்ணற்ற உண்மைகளைக் கண்களால் கண்பதற்கான ஒரு சாதனமாகவும் விளங்கிற்று.

இத்துடன் அண்மையில் வரவிருந்த இஸ்லாமிய இயக்கம், விரைவில் சந்திக்கவிருந்த புரட்சியைச் சுட்டிக் காட்டுவதாகவும் இது நிகழ்ந்தது. இந்தச் சுட்டிக்காட்டலின் விவரங்கள் திருக்குர்ஆனில் மிஃராஜ் குறித்துக் கூறப்பட்டுள்ள ‘பனீ இஸ்ராயீல்’ அத்தியாயத்தில் காணக்கிடைக்கின்றன. இந்த அத்தியாயத்தின் கருத்துக்களில் வெளிப்படையாகக் கிடைக்கும் சமிக்ஞைகளாவன:

யூதர்கள் உலகின் தலைமைக் பதவியிலிருந்து நீக்கப்படுதல்

________________________________________

இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் இதுவரை இறைமார்க்கத்தின் வாரிசுகளாக இருந்துவந்தனர். உலக மக்களுக்கு இறைச் செய்தியை (இஸ்லாத்தை) அறிமுகப்படுத்துகின்ற பணியைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் இந்தப் பணியை நிறைவேற்றவில்லை, மாறாக அவர்களே எண்ணற்ற தீமைகளுக்கு பலியாகி விட்டனர். அல்லாஹ்வுடைய மார்கத்திற்கு சேவை செய்கின்ற தகுதியை இழந்துவிட்டனர். எனவே இப்போது இந்தப் பணியை பனீ இஸ்மாயீல் (இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகள்) வசம் ஒப்படைத்திட தீர்மானித்து இறைவன் அண்ணலாரை அந்தக் குடும்பத்தில் அனுப்பிவைத்தான். இதுவரை, இறைவன் பனீ இஸ்ராயீல்களிடம் பேசாமலிருந்தான். இப்போது பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தில் பினவருமாறு அவர்களிடம் கூறப்பட்டது. ‘இதுவரை நீங்கள் தவறுகள் செய்தது செய்தீர்கள். இதற்கு முன்பும் இருமுறை உங்களை நாம் சோதித்தோம். ஆனால் நீங்கள் உங்கள் நிலைமையைச் சீர்திருத்திக் கொள்ளவில்லை. இப்போது இந்த இறைத்தூதரை அனுப்பி வைத்த பின்னால், உங்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நீங்கள் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவீர்களாயின் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்துவைக்க முடியும்!’

மக்கா நகரின் – பரிதாபத்திற்கும் இரக்கத்திற்கும் உரிய கவலை நிறைந்த சூழ்நிலையில் இந்த சமிக்ஞை பெரியதொரு நற்செய்தியாகத் திகழ்ந்தது. வரும் காலம் அதனை முற்றிலும் உண்மையென நிரூபித்தது.

மக்காநகர இறைமறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை

மக்கா நகர இறைமறுப்பாளர்களின் அக்கிரமங்களும் கொடுமைகளும் எல்லையைக் கடந்து கொண்டிருந்தன. அவர்கள் அடிக்கடி, ‘இவர் உண்மையிலேயே இறைவனின் தூதராக இருப்பாரேயானால் நாங்கள் அவரை நிராகரித்த பின்னரும்கூட இவர்கள் எங்களை எதனைக் குறித்து எச்சரிக்கிறார்களோ அந்த வேதனை எங்கள்மீது ஏன் வரவில்லை?’ என்று கேட்ட வண்ணமிருந்தார்கள்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பின்வரும்மாறு கூறப்பட்டது:

‘அல்லாஹ்வின் வழிமுறை என்னவெனில் ஒரு சமுதாயத்திரிடையே இறைத்தூதர் வருகை தாராத வரை அதன் மீது வேதனை இறங்குவதில்லை. அல்லாஹ்வின் தூதர் வருகை தரும்போது அச்சமுதாயத்தின் செல்வர்களும் உயர் சமூகத்தினரும் அத்தூதர் விடுக்கும் சத்திய அழைப்பின் வேரை அறுத்தெறிந்திட முனைந்து விடுகின்றார்கள். சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் எவருக்குள் இருக்கின்றதோ, எவர் தாமே முனவந்து சத்தியத்தை ஏற்றுக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர அச் சமுதாயத்தின் சாதாரணப் பொதுமக்கள் அச்செல்வந்தர்களுக்கும், உயர் சமூகத்தினருக்கும் துணை நிற்கத் தயாராகி விடுகின்றார்கள். இப்போது இந்த இரு குழுவினருக்கிடையே (சத்தியவாதிகளுக்கும் அசத்தியவாதிகளுக்குமிடையே) போராட்டம் தொடங்கி விடுகின்றது. பின்னர் அல்லாஹ்வின் உதவி வருகின்றது. ஆனால் மனிதன் இயல்பாகவே அவசரக் காரனாக இருப்பதால் உண்மையில் தனக்கு நன்மை பயக்காத தனக்குத் தீமை பயக்கக்கூடிய சில விஷயங்களையும் இறைவனிடம் கோரத் தொடங்கி விடுகின்றான். அல்லாஹ்வின் செயல்கள் அனைத்தையும் குறிப்பிட்ட நேரங்களுடன் தொடர்புடையனவாய் அமைந்துள்ளன எனினும் எண்ணமே அவனுக்கு வருவதில்லை’

பகலையும், இரவையுமே பாருங்களேன். இவை அல்லாஹ்வின் சான்றுகளாகும். ஒருங்கிணைந்த ஓர் அமைப்பின் கீழ் ஒன்றன் பின் ஒன்றாக அவை வருகின்றன. கடந்த கால வரலாற்றைப் பாருங்கள். நூஹ் (அலை) அவர்களின் காலம் தொட்டு இன்று வரை எத்தனை சமுதாயங்கள் அழைக்கப்பட்டுவிட்டன! இறைவன் மக்களின் நிலையை முற்றிலுமாக அறிந்திருக்கின்றான். அவர்களின் நிலையை முற்றிலுமாக அறிந்திருக்கின்றான். அவர்களின் தகுதிக்கும் அருகதைக்கும் ஏற்ப அவன் கூலி வழங்குகின்றான். எனவே மக்கா நகர இறைமறுப்பாளர்களும் இப்போது அவர்கள் இறைத்தூதரின் அழைப்புக்கெதிராக எந்தப் போக்கினை மேற்கொள்வார்களோ, அதே அடிப்படையில்தான் இறைவனும் அவர்களுடன் நடந்து கொள்வான். மேலும் தீர்க்கமான முடிவுக்காக நேரம் இப்போது நெருங்கிவிட்டது. இந்த அடிப்படைக் கருத்துக்கள் அந்த மக்கா நகர இறைமறுப்பாளர்களின் உள்ளங்களில் நன்கு பதியும் வகையில் இப்பொழுது அறிவிக்கப்பட்டன.

இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படைகள்

இப்போது இஸ்லாம் கொடுமைக்குள்ளான கால கட்டம் முடிவடையும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. இஸ்லாமிய நெறிகளை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சமுதாயம் விரைவில் உருவாகவிருந்தது. எனவே அந்த இஸ்லாமிய வாழ்க்கைமுறைக்கான அடிப்படை நெறிகளும் விதிமுறைகளும் இந்த விண் பயண நிகழ்ச்சியுடன் தொடர்புடைய ஓர் அன்பளிப்பாகவே வழங்கப்பட்டன. இந்த அடிப்படை விதிகள்தாம் வருங்கால இஸ்லாமிய வாழ்க்கையமைப்புக்கான வழிகாட்டிக் கொள்கைகளாய் பயன்பட்டன. அந்த அடிப்படைக் கொள்கைகள் வருமாறு:

1.      அல்லாஹ்வுடன் வேறெவரையும் எதனையும் ‘இலாஹ்’ வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் உரியவராய் ஆக்கக்கூடாது. வணக்கம், வாழக்கை, கீழ்ப்படிதல், ஆட்சி செலுத்துதல் ஆகிய உரிமைகளில் எவரையும் இறைவனுக்கு கூட்டாளியாய் இணையானவராய் ஆக்கக்கூடாது.

2.      தாய் தந்தைக்கு கண்ணியமளித்திட வேண்டும் (ஆனால் அவர்களுக்குக் கீழ்ப்படிவது, இறைவனுக்குக் கிழ்ப்படிவதற்கு முரணாகிவிடும் எனும்போது அவர்களுக்குக் கீழ்ப்படியக்கூடாது).

3.      உறவினர்கள், ஏழை எளியவர்கள், பயணிகள், வழிப்போக்கர்களின் உரிமைகளை நிறைவேற்றிட வேண்டும். சமூகத்தில் ஒரு மனிதன் மீது பிற மனிதர்களுக்கிருக்கும் உரிமைகளை அலட்சியப்படுத்திடக் கூடாது. அவற்றை சரியான முறையில் நிறைவேற்றிட வேண்டும். அவ்வாறின்றிந் சமூகத்தின் அடிப்படை சீர்பெற முடியாது.

4.      வீண்செலவு செய்யக்கூடாது. இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகளை, தவறான பாதையில் செலவு செய்வது சாத்தானியச் செலவாகும். எந்தச் சமூதாயத்தில் மக்கள் கண்மூடித்தனமாகச் செலவு செய்ய ஆரம்பிக்கின்றார்களோ, முற்றிலும் கரத்தை இறுக்கிக் கொண்டு விடுகின்றார்களோ, அவர்கள் ஒருபோதும் செல்வ வளமுடையவர்களாய் விளங்க முடியாது. செல்வத்தைச் செலவிடுவதிலும் சேமித்து வைப்பதிலும் நடுநிலையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும்.

5.      வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உண்மையில் உணவளிப்பதும் வாழ்வாதாரங்களை வழங்குவதும் இறைவனின் பணியாகும். அவனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றான். நாளை நாம் என்ன உண்போம் என்னும் அச்சத்தில் உங்கள் சந்ததிகளை அழிக்காதீர்கள். இது மிகப்பெரும் பாவமாகும். மனித சமுதாயத்தைப் பொறுத்தவரை தற்கொலைக்குச் சமமாகும்.

6.      விபச்சாரத்தின் அருகிலும் செல்லாதீர்கள். இந்த அருவருப்பான செயலைவிட்டு விலகியிருப்பது மட்டுமல்ல, அந்த அசிங்கமான செயலைச் செய்திடத் தூண்டுகின்ற அனைத்து தூண்டுகோல்களையும் ஊக்கிகளையும் ஒழித்துக் கட்டுங்கள். இந்தச் சாபக்கேட்டிலிருந்து விடுதலையடையாத சமூகம் தன் அடிப்படையை தானே தகர்த்துக் கொண்டு விடும், மிக விரைவிலேயே அழிவைத் தழுவிக் கொள்ளளும்.

7.      அநியாயமாக எவரையும் கொலை செய்யாதீர்கள் எந்தச் சமூகத்தில் மக்களின் உயிர் பாதுகாப்பாக இல்லையோ அந்தச் சமூகம் மகிழ்ச்சிகரமானதாக இருக்க முடியாது. பாதுகாப்பான நிலைமை இல்லாமல் எந்தச் சமூதாயமும் முன்னேற முடியாது. எனவே அனைத்துக்கும் முதலாக மக்களின் உயிர் உடைமைகளைப் பாதுகாத்திட ஏற்பாடு செய்வது அவசியம்.

8.      அனாதைகளிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். பலவீணர்களும் தம் உரிமைகளைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்களும் உதவிக்கும் உபகாரத்திற்கும் அருகதை உடையவர்களாவர். எந்தச் சமுதாயத்தில் இத்தகைய பலவீனர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில்லையோ அச்சமுதாயம் ஒருபோதும் முன்னேற முடியாது.

9.      உங்கள் ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள. உங்கள் வாக்குறுதிகளைக் குறித்து கேள்வி கேட்கப்படும். இது மக்கள் தமக்கிடையே செய்து கொள்ளும் வாக்குறுதிகள், ஒப்பந்தங்களையும் குறிக்கும். ஓர் இறைநம்பிக்கையாளன் இறைநம்பிக்கை கொள்ளும்போது தன் இறைவனுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தையும் குறிக்கும்.

10.   அளவை நிறுவையில், அளக்கும் கருவிகளையும் துலாக்கோலையும் சரியான முறையில் வையுங்கள். கொடுக்கல் வாங்கலில் சீரான நெறிமுறைகளும் ஒருவர் மற்றவரின் உரிமைகளைப் பாதுகாப்பதும் சமூகத்தின் அமைதிக்கும் நிம்மதிக்கும் மிகவும் அவசியமானவையாகும். மக்கள் ஒருவர் மீதொருவர் நம்பிக்கை இழந்திருக்கும்போதும் பொதுவாக, பிறரின் உரிமைகளைப் பறிக்க எண்ணும்போதும் பரஸ்பர நம்பிக்கைக்குரிய மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக முடியாது.

11.    எந்த விஷயத்தைக் குறித்து நீங்கள் அறியமாட்டீர்களோ அதன் பின்னே சொல்லாதீர்கள். அறிவு ஏதுமின்றி, தெரியாத விஷயங்களைத் துருவி ஆராய்வதாலும் காரணமின்றி ஊகம், கணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்வதாலும் விவகாரங்கள் எப்போதும் சீர்கெட்டு விடுகின்றன. ஒவ்வொரு நல்ல சமூகமும் இந்தக் குறையிலிருந்து தூய்மையாக இருக்க வேண்டும். மனிதன், அவனது கண், உள்ளம் அனைத்தையும் குறித்து விசாரிக்கப்படுவான் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

12.   பூமியில் கர்வம் கொண்டு நடக்காதீர்கள், மமதையும் பெருமையும் மனிதனை மிக மோசமான குணங்களை ஏற்றுக் கொள்ளும்படி தூண்டுகின்றன. இந்தக் குறையின் காரணத்தால் மனிதன் சமுதாயத்திற்கு மிகவும் தீங்கு பயப்பவனாக மாறிவிடுகின்றான். பரஸ்பரத் தொடர்புகள் நல்லவிதமாக அமைந்திட மக்கள், எல்லோரையும் சமமாகக் கருத வேண்டும், மனிதாபிமான முறையில் நடத்தல் வேண்டும்.

ஹிஜ்ரத்திற்கான சமிக்ஞைகள்

அல்லாஹ் ஒரு சமுதாயத்தினரிடையே தன் தூதரை அனுப்பும்போது மக்கள் அந்த இறைத்தூதரின் அழைப்பைக் கேட்டுப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை வாய்ப்பளிக்கின்றான். இது அல்லாஹ்வின் நியதி ஆகும். இந்த அழைப்பின் பயனாக சிலர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் உலகாயத நோக்கங்களிலும், முன்னோர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதிலும், மனஇச்சைகளிலும் சிக்கியுழன்று கொண்டிருப்பவர்கள் இந்த அழைப்பை நிராகரித்து விடுகிறார்கள், அதனை எதிர்க்கவும் முனைந்துவிடுகின்றார்கள். இருதியில் ஒரு காலகட்டம் வருகின்றது. அப்போது அச்சமுதாயத்தினரில் இந்த அழைப்பை ஏற்கின்ற திகுதியைப் பொற்றிருந்தவர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் இனி இந்த அழைப்பைச் செவியேற்று அதனைச் சிந்திக்கக் கூடியவர்கள் எவரும் எஞ்சியிருக்கவில்லை என்பதும் தெரிந்துபோய் விடுகின்றது.

இத்தகைய காலகட்டதில் அந்தச் சமுதாயம் இறைத்தூதரிடம் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும்படி கோருகின்றது. பெரும்பாலும் அந்தச் சமுதாயத்தினர் முன்னால் அற்புதங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் விடுகின்றன. எனவே அண்ணலாரிடமும் இந்தக் காலகட்டதில் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும்படி கோரப்பட்டது அவ்வாறே அண்ணலாரிடமிருந்து அற்புதங்கள் வெளிப்பட்டன. ஆனால் இவையனைத்துமிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் நிராகரிப்பில் நிலைத்திருந்தனர். எனவே அந்தச் சமுதாயத்தினர் மீது வேதனை இறங்கும் பொருட்டு இறைத்தூதர் அதனிடையேயிருந்து சென்றுவிட வேண்டும் என்று முடிவாகி விட்டது.

இந்த வேதனை சில வேளைகளில் வானம் அல்லது பூமியின் இயற்கைச் சக்திகளான நிலநடுக்கம், பூகம்பம், தண்ணீர், காற்று ஆகியவற்றில் ஏதேனும்மொன்றின் வாயிலாக இறங்கி இறைமறுப்பாளரை அழித்துவிடுவதுண்டு அல்லது சில சமயங்களில் இறைநம்பிக்கையாளரின் கரங்காலேயே அவர்களுக்கு வேதனை மிக்க அழிவு வருவதுண்டு. எனவேதான் இந்த ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்’ அத்தியாயத்திலேயே அல்லாஹ், தனது இந்த வழிமுறையைத் தெளிவுபடுத்துகின்றான். பினவருமாறு தெளிவாகக் கூறுகின்றான்:

‘இந்த மக்கள் தமது அவப்பேற்றின் எல்லையை அடைந்து, உம்மை விரைவில் இந்த மக்கா நகரத்தை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்குவார்கள். அவ்வாறு நடக்குமாயின் உமக்குப்பின் இவர்களும் இங்கு நம்மதியுடன் இருக்க முடியாது. உமக்கு முன்னர் எத்தனை இறைத்தூதர்களை நாம் அனுப்பி உள்ளோமோ அனைவருடனும் நாம் இவ்வாறே நடந்து கொண்டோம். இப்போதும் நமது இந்த நியதியில் மாற்றம் ஏதுமில்லை.’

தஹஜ்ஜுத் தொழுகையின் முக்கியத்துவம்.

இத்துடன் சூழ்நிலையை எதிர்த்துப் போராடிட (தேவையான வலிமையைப் பெற்றிடுவதற்காக) குறிப்பாக தஹஜ்ஜுத் தொழுகையைப் பேணித் தொழும்படி இறைவன் அறிவுறுத்தினான். மேலும் ‘இறைவா! என்னை நல்ல இடத்தில் கொண்டுபோய்ச் சேர்! இங்கிருந்து நல்லவிதமாக வெளியே அனுப்பு! பகைவர்களுக்கெதிராக உன் தரப்பிலிருந்து வெற்றியையும் உதவியையும் எனக்கருள்! என்று நபியே நீர் உம் இறைவனிடம் பிரார்த்தியும்!’ (17:80) எனும் பொருள்படும் வசனம் இறங்கிற்று. இது ஹிஜ்ரத்திற்கான சமிக்ஞையாக அமைந்தது. இதன்பின் ‘சத்தியம் ஓங்கியே அசத்தியம் அழிவதற்காகவேயுள்ளது. ஆனால் ஒரு நிபந்தனை : சத்தியம் அதனை எதிர்த்துப் போராடிடகளத்திலிருக்க வேண்டும்’ என்ற நற்செய்தியும் அளிக்கப்பட்டது.

இதன்பின் மக்கா நகர இறைமறுப்பாளர்கள் தம் மன முரண்பாட்டின் அடிப்படையில் எழுப்பிவந்த ஆட்சேபணைகள் அனைத்திற்கும் பதில்கள் அளிக்கப்பட்டன. இவ்விதம் அவர்கள் முன்பு எல்லாவிதத்திலும் சத்தியத்திற்கான ஆதாரம் நிறைவாக எடுத்து வைக்கப்பட்டுவிட்டது. இறுதியில் படிப்பினைக்காக மூஸா (அலை) அவர்களின் நிகழ்ச்சியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மிஃராஜுக்குப் பிறகு இறங்கிய 17ஆவது அத்தியாயமான இஸ்ராவில் இக்கருத்துக்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய அழைப்பின் சிறப்பியல்புகள்

________________________________________

இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய அழைப்பின் சிறப்பியல்புகள்

இந்தக் காலகட்டதில் இறங்கிக் கொண்டிருந்த திருக்குர்ஆனின் வசனங்கள் சூழ்நிலையைப் பொறுத்து பெற்றிருக்கும் சிறப்பியல்புகள் வருமாறு:

1. பொறுமை – இறைவனைச் சார்ந்திருத்தல்

மனிதன் ஒரு பணிக்காக உழைக்கும்போது அவனது எதிப்பார்ப்புக்கு ஏற்ப விளைவுகள் உண்டாகவில்லையென்றால் அவனுக்கு நிராசை ஏற்படுகிறது. சத்திய அழைப்பாளர்களுக்கு இந்தக் கட்டம்தான் மிகவும் சிரமமான காலகட்டமாகும். அவர்கள் துரதிஷ்டவசமாக நிராசைக்குப் பலியாகி விடுவார்களேயானால், அது அவர்களுக்கும் அழைப்புப் பணிக்கும் மிகப் பெரும் தோல்வியாக அமைந்துவிடும். இந்தக் கட்டதில் மன உறுதியுடன் செயல்படுவதற்கும் விளைவுகளை முழுக்க முழுக்க இறைவனின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே செல்வதற்கும் மிக உறுதியான இறைநம்பிக்கை தேவைப்படுகின்றது.

இந்தக் கடைசி கட்டத்தில் அல்லாஹ் குறிப்பாக இதனைப் பற்றிய போதனைகளை இறக்கியருளினான். ஏறத்தாழ 12 ஆண்டுகள் தொடர்ந்து போராடியும் அதனால் ஏற்பட்டிருந்த விளைவுகள் அவர்களுக்கு முன்பிருந்த (நேர்எதிரான) விளைவுகள் எப்படிப்பட்ட மனிதனுக்கும் மனச்சோர்வை அளிப்பதாகவே இருந்திருக்க முடியும். இத்துணை நீண்டகால அழைப்புப் பணி ஆற்றியபின்னரும் சத்தியவாதிகள் சந்திக்க வேண்டியிருந்த துன்பங்களும் தடைகளும்கூட பொறுமையைச் சோதிப்பனாகவே விளங்கின. எனவேதான் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளங்களுக்கு வலுவூட்டி உறுதிப்படுத்திடவும் அவர்களை சத்தியப் பாதையில் உறுதியாக நிலைத்து நிற்கச் செய்திடவும் இந்தக் காலகட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இவற்றில் 29ஆவது அத்தியாயமான அன்கபூத்தின் கருத்துக்களில் ஒரு நல்ல உதாரணம் உள்ளது. அதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு பின்வருமாறு தெளிவாகக் கூறப்பட்டது: சோதனையும் வேதனையும், நீங்கள் எந்தப்பாதையில் நடத்திட முடிவெடுத்திருக்கின்றீர்களோ அந்தப் பாதையின் தவிர்க்க முடியாத கட்டங்களாகும். இந்த உரைகல்லில் உரைத்துப் பார்த்த பின்னர்தான் தமது இறைநம்பிக்கையில் உண்மையானவர்கள் யார்? பொய்யானவர்கள் யார் என்று வேறுபடுத்தியறிந்திட முடியும். ஆனால் இறைநம்பிக்கையாளர்களுக்கு வைக்கப்படும் இந்தச் சோதனைக்குப் பொருள், இறைமறுப்பாளர்களுக்கு உண்மையிலேயே வெற்றி கிடைத்துக் கொண்டிருந்தது என்பதல்ல, மேலும் இறைவனுக்கொதிராக நாம் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இறுதியில் சத்தியம் ஓங்கியே தீரும். ஆனால் சத்தியவாதிகள் தமது பொறுமைiயாலும் நிலைகுலையாத உறுதியாலும் தம்மை அல்லாஹ்வின் உதவிக்கு அருகதையுடையவர்களென நிரூபித்துக் காட்டிட வேண்டும். மேலும் ‘இந்தப் பாதையில் எத்தனையோ விதவிதமான தடைகள் வருகின்றன. ஆனால் அவர்கள் எவரைக் குறித்தும் மனவெறுப்படைய வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு முன்னால் இஸ்லாமிய அழைப்புப்பணி புரிந்த நல்லடியார்களும் இத்தகைய நிலைமைகளையே சந்திக்க வேண்டியிருந்தது’ என்று இறைநம்பிக்கையாளர்களுக்குக் கூறப்பட்டது.

நூஹ் (அலை) அவர்களின் அழைப்புப் பணியை நினைவூட்டி, ‘அவர்கள் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் எப்படிப் பொறுமையுடனும் நிலைகுலையாமலும் உறுதியுடனும் தமது சமூகத்தினரின் எதிர்ப்பைச் சகித்து வந்தார்கள் என்று எடுத்துரைக்கப்பட்டது.

அவ்வாறே இப்ராஹீம் (அலை), லூத் (அலை), ஷுஐப் (அலை), ஸாலிஹ் (அலை), மூஸா (அலை) ஆகியோரும் கூட இத்தகைய நிலைமைகளையே சந்திக்க நேர்ந்தது. இறுதியில் சத்தியம் வென்றது. அசத்தியம் களத்தை விட்டு ஓட வேண்டியதாயிற்று என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

2. திருக்குர்ஆன் ஒரு முஃஜிஸா – அற்புதமே!

நிராகரிப்போர் அற்புதம் நிகழ்த்திக் காட்டும்படி கோரியபோது அண்ணலாருடைய உள்ளத்திலும் பிற முஸ்லிம்களின் உள்ளத்திலும் ‘அற்புதம் ஏதும் வெளிப்படக் கூடாதா? அதனைக் கண்டு இவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்களே!’ என்னும் ஆவல் பிறந்து வந்தது என்று முன்பே நாம் கூறியிருந்தோம்.

இந்த ஆவலுக்கு இறைவன் அளித்த பதிலும் முன்பே கூறப்பட்டுவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் இறைவன் தன் இறுதித்தூதரின் மிகப் பெரும் அற்புதத்தை தௌ;ளத் தெளிவாக – அடையாளம்; காட்டிய வண்ணம் பின்வருமாறு கூறினான்:

‘அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்படிக் கோருகின்ற நீங்கள் உலகம் உள்ளளவும் மனிதர்களுக்கு ஓர் அற்புதமாக திகழ்கின்ற சிந்தனையும் அறிவுமுடைய இந்த அற்புதத்தை முதலில் பாருங்கள். இந்த அற்புதம்தான் திருக்குர்ஆன்!’

உண்மை என்னவெனில், அண்ணலாருக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் அனைத்திலும் மாபெரும் அற்புதமாக திருக்குர்ஆன் இருக்கிறது. இந்தக் காலகட்டதில் இறக்கியருளப்பட்ட அத்தியாயம் அன்கபூத்தில் -ஆட்சேபனை கிளப்பியவர்களுக்கு பினவருமாறு பதில் கூறப்பட்டுள்ளது:

‘அண்ணலார் (ஸல்) தூதுத்துவம் அருளப் பெறுவதற்கு முன்னர் நூலறிவு பெற்றிருக்கவில்லை என்பதும், அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்பதும் எவருக்குத்தான் தெரியாது! இவ்வாறிருந்தும் அண்ணலார் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் வாக்கு எந்த அளவிற்கு உயர்ந்ததாகவும் விவேகம் நிரம்பியதாகவும் திகழ்கின்றதெனில் உங்களில் பேரறிஞன் என்று போற்றப்படுபவனும்கூட அதற்கு நிகரான ஒன்றை இதுவரை இயற்றிக்காட்ட முடியவில்லை. இத்தகைய ஓர் அற்புத வாக்கை அவர்கள் முன்னால் எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் சமர்ப்பித்துக் கொண்டிருக்க நீங்கள் அற்புதம் நிகழ்த்திக் காட்டும்படிக் கோரிக் கொணடிருக்கின்றீர்களே!

நபியே! நீங்கள் கூறிவிடுங்கள்: அற்புதம் வெளிப்படுவதும் வெளிப்படாதிருப்பதும் என் இறைவனின் கட்டளைப்படியே நடப்பதொன்றாகும். நானோ உங்களை உங்கள் இறுதிகதியைக் குறித்து வெளிப்படையாக எச்சரிப்பவனாவேன். எனினும் ‘என் தூதுத்துவத்தை நிரூபித்திட நான் உங்களுக்கு ஓதிக்காட்டும் இறை வசனங்களே போதுமானவையாகாதா?’ என்று நீங்கள் சிந்தித்திட வேண்டும். நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களேயாயின், இந்த வசனங்கள் முழுக்க முழுக்க அருக்கொடையாகவும் நல்லுபதேசமாகவும் இருப்பதை உணர்வீர்கள். அத்துடன் எவருடைய உள்ளங்கள் பக்குவம் அடைந்துள்ளனவோ – அவர்கள் தாம் இவற்றிலிருந்து பயன்பெறுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்வீர்கள்’.

திருக்குர்ஆனை அண்ணலாரே மாபெரும் அற்புதம் என்று கூறியுள்ளார்கள். அண்ணலார் நவின்றார்கள்: ‘இறைத்தூதர்களில் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் நிறைய அற்புதங்களை அருளினான். அவற்றைக் கொண்டு மக்கள் இறைநம்பிக்கை கொண்டார்கள். ஆனால் எனக்கருளப்பட்ட அற்புதம் என்மீது இறைவன் இறக்கிவைத்த வேத வெளிப்பாடே (குர்Nஆனே)யாகும். இறுதித் தீர்ப்புநாளில் என்னைப் பினபற்றுவோரின் எண்ணிக்கையே அனைவரையும்விட அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.’

திருக்குர்ஆன் எத்தகைய ஓர் அற்புதம் எனில் அது நிரந்தரமானது, மற்ற அற்புதங்கள் தற்காலிகமானவையாகவே விளங்கின. அவை முடிவடைந்தும் விட்டன. அண்ணலாரின் இந்த அற்புதம் மட்டும் மறுமை நாள் வரை இருக்கும். மக்களை தன்பால் ஈர்த்த வண்ணமிருக்கும். திருக்குர்ஆனின் வாக்கிய அழைப்பு, அதன் இலக்கியத் தெளிவு, சொல்லாட்சி, கருத்துச் செறிவு ஆகியவை உன்னதமாய் நிகரற்றவையாய் இருக்கின்றன. அதில் கூறப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் – மறைவான உண்மைகள் பற்றி விவரங்கள் மனிதன் தன் சிற்றறிவைக் கொண்டு படைத்ததல்ல என்று தாமாகவே பறை சாற்றுகின்றன. அதனுடைய ஈர்ப்பாற்றல் இணையற்றதாக விளங்குகின்றது.

அதனுடை கட்டளைகள் அறிவுரைகள் மிகவும் பயனான ஒரு வாழ்க்கை அழைப்பை மனித இனத்திற்குத் தருகின்றன. மனித வரலாற்றில் இந்த அளவுக்கு பயன்மிக்க ஒரு வாழ்க்கைநெறியை யாரும் இதுவரை தந்ததில்லை.

அதுமட்டுமல்ல அதில் விரிவான பல தலைப்புகள் பேசப்பட்டுள்ளன. இருந்தும் அவற்றில் எந்தவிதமான முரண்பாடும் வேற்றுமையும் காணக் கிடக்கவில்லை!

இவ்வற்றிற்கெல்லாம் மேலாக வியப்புக்குரிய விஷயம் என்னவெனில், நடைமுறை வழக்கப்படி முழுக்க முழுக்க எழுதப்படிக்கத் தெரியாத மனிதர் ஒருவரின் நாவினால் இந்த வசனங்கள் முழுவதும் சமர்ப்பிக்கப்பட்டவையாகும்.

இவையனைத்தும் திருக்குர்ஆன் ஓர் அற்புதமே என்பதற்கு வலுவான தெளிவான சான்றுகளாக இருக்கின்றன. அண்ணலாரின் தூதுத்துவம் உண்மையானதே யென்று தெளிந்த உள்ளத்துடன் சிந்திக்கும் ஒவ்வொரு வருக்கும் இந்த ஆதாரங்கள் இன்றும் கூட திருப்தி அளிக்கின்றன. இனிவரும் எந்தக் காலத்திலும் திருப்தி அளிக்கக்கூடியவையான விளங்குகின்றன.

3. தீர்க்கமான சொல்

இந்தக் காலகட்டத்தில் இறக்கியருளப்பட்ட இறைவாக்குகளின் ஒரு சிறப்பியல்பு என்னவெனில், இப்போது நிராகரிப்பாளர்களிடம் இச்செய்தி தீர்க்கமாகவும், திட்டவட்டமாகவும் தெளிவானமுறையில் வெளிப்படையாகவும் கூறப்படலாயிற்று என்பதே! ‘இதுவரை புரியும் வகையில் விளக்கிடவும் – மிகவும் நயமாக எடுத்துரைக்கவும் முடிந்தவரை முயற்சி செய்து பார்த்தாயிற்று. இனியும் வேண்டுகோள் விடுத்துக் கொண்டுருக்கவும் முடியாது. நீங்கள் இந்தச் சத்தியத்தூதை ஏற்றுக் கொள்வதாயிருந்தால் இப்போதும் கூட வாய்ப்புள்ளது, ஏற்றுக் கொள்ளுங்கள்! இனியும் நீங்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லையென்றால் உங்கள் நிராகரிப்புக்கும் முரட்டுப் படிவாதத்திற்கும் உரிய கோர விளைவுகளை தயாராகிவிடுங்கள்!’ என்னும் எச்சரிக்கும் பாணியில் உரை அமைந்திருந்தது.

எனவே பினவருமாறு கூறப்பட்டது:-

‘(நபியே! கூறும்) நானோ என் அதிபதியின் தரப்பிலிருந்து வந்திருக்கும் ஒரு வெளிப்படையான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நிற்கின்றேன். ஆனால் நீங்கள் அதனை பொய்யெனக் கூறி ஏற்க மறுக்கிறீர்கள். ‘இந்த நிராகரிப்பிற்குரிள தண்டனையாக வர வேண்டிய வேதனை வந்துவடட்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நீங்கள் எந்த வேதனையைச் சந்திப்பதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருகிறீர்களோ அந்த வேதனை என் கைவசத்தில் இல்லை. அதற்கான தீர்ப்பு இறைவனின் கரத்தில் உள்ளது. அது என் அதிகாரத்திற்குட்பட்டதாய் இருந்தால் விவகாரம் எப்போதோ முடித்து வைக்கப்பட்டிருக்கும். மறைவான விஷயங்களைக் குறித்து இறைவனே அறிவான். எந்தப் பணிக்கு எந்த நேரம் பொருத்தமானது என்பதை அவனே அறிவான். தான் விரும்பும் போது உங்கள் மீது வேதனையை அனுப்பிவிடும் வலிமை அவனுக்குண்டு.’

பின்னர் இதே விஷயம் தொடர்பாக பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டது:

‘எவர் மார்க்க விவகாரத்தை ஓர் விளையாட்டாக எண்ணிக் கொண்டு உலக வாழ்வில் மூழ்கி மதிமயங்கிக் கிடக்கின்றார்களோ அவர்களை, அவர்களுடைய நினைவிலேயே விட்டுவிடும். எனினும் இந்த திருக்குர்ஆனை மட்டும் அவர்களுக்கு தொடர்ந்து ஓதிக் காட்டி வண்ணமரும். அதன் பின்னரும் ஏற்றுக் கொள்ள வில்லையெனில் அவர்களிடம் கூறிவிடும்: ‘மக்களே! உங்கள் இடங்களில் நீங்கள் விரும்பும் வண்ணம் செயல்பட்டுக் கொண்டேயிருங்கள். நானும் என் இடத்திலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதன் விளைவு விரைவில் உங்கள் முன்னால் வரும். அப்போது எவர் நேரிய பாதையில் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்.’ (6: 60-70, 134-135)

இது இத்தகைய உரையாடும் பாணிக்கு ஓர் எடுத்துக்காட்டேயாகும். இதுவன்றி இந்தக் காலகட்டதில் இறங்கிய வேதவெளிப்பாட்டில். இந்தப் போராட்டம் இனி தீர்க்கமானதொரு கட்டத்தை அடையவிருக்கினறது என்பதை இது அறிவிப்பதை போன்றிருந்தது.

4.      ஹிஜ்ரத்திற்கான ஆயத்தம்

இதுவன்றி ஹிஜ்ரத்திற்கான வெளிப்படையான சமிக்ஞைகளும் இந்தக் காலகட்டத்தின் உரைகளில் அடிக்கடி தென்படுகின்றன.

29ஆவது அத்தியாயமான அல்அன்கபூத்தில் பினவருமாறு கூறப்பட்டது:

‘என் அடியார்களே! நீங்கள் என்னையே வணங்கி எனக்கே கீழ்ப்படிந்து கொண்டிருக்க வேண்டும். என்னை வணங்கி, எனக்குக் கீழ்ப்படிகின்ற காரணத்தால் நீங்கள் வாழுகின்ற நிலப்பகுதி (உங்கள் தாய்நாடு), உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகிவிட்டால் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். என் பூமி மிகவும் விசாலமானது.

இதன் கருத்து, வீடு வாசனை இழக்க நேரிட்டாலும் என அடிமை என்கிற பந்தம் அறுந்துவிடக்கூடாது. ஒருவருக்கு ஏற்படக்கூடிய அதிகபட்ச ஆபத்து மரண ஆபத்தேயாகும். ஒவ்வொருவரும் இறந்தே தீர வேண்டியுள்ளது. திரும்ப என்னிடமே வரவேண்டியுள்ளது. அந்த மரணம் என் பாதையில் போராடிக் கொண்டிருக்கம்போது வருமேயானால் பின்னர் எதற்காக கவலைப்பட வேண்டும்? எவர் இறைநம்பிக்கை, நற்செயல் என்னும் மூலதனங்களைக் கொண்டு வருவாரோ அவர், கிழே நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனத் தோட்டங்களில் நிம்மதியுடன் வசிக்கச் செய்யப்படுவார். அவற்றில் அவர் என்றென்றும் தங்கியிருப்பார். நற்செயல் புரிவோருக்கு அளிக்கப்படும் இந்த நற்கூலி எத்துணை நல்லது! இத்தகையோர் மிக்க கடுமையான சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நிலைத்திருந்தவர்கள். இவர்கள் தம்முடைய ஒவ்வொரு முயற்சியின், போராட்டத்தின்போதும் தம் இறைவனின் மீதே முழு நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்திருந்தவர்கள்!’

பின்னர் இரண்டாவதாக, இறைவழியில் வீடுவாசலைத் துறப்பதினால் பொருளாதார ரீதியாக பலவீனமடைந்து விடுவோம் என்னும் அச்சம் ஏற்படக் கூடும் என்று கூறி உணவு, வாழ்வாதாரம் ஆகியன உண்மையில் இறைவனின் கைவசத்தில் உள்ளன என்னும் அவர்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் கருத்து வருமாறு: ‘பாருங்கள்! பூமியல் ஊர்ந்து திரியும் எண்ணற்ற பிராணிகள் தமது உணவை, தம்முடன் சுமந்துகொண்டு திரிவதில்லை. ஆனால் அல்லாஹ்தான் அவற்றுக்கான உணவைத் திரட்டி உண்ணத் தருகின்றான். எனில், நிங்கள் மட்டும் அவனது உணவளிக்கும் ஆற்றல் குறித்து, அவன் உங்களுக்கு உணவளிக்க மாட்டான் என நம்பிக்கையிழந்து விடுவதேன்?’

இது மட்டுமின்றி, இந்தக் காலகட்டத்தில் மற்றொரு அத்தியாயமான பனீ இஸ்ராயீல் (அத் -17) இறங்கிற்று. ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்லல்) திற்காக இறைஞ்சும் படியும் அதில் கற்றுத் தரப்பட்டுள்ளது: ‘என் இறைவா! என்னை நல்ல இடத்தில் கொண்டு போய்ச் சேர்! (மக்கா நகரிலிருந்து) என்னை நல்லவிதமாக வெளியேற்று! உன் தரப்பிலிருந்து பகைவர்களுக்கெதிரான வெற்றியையும் உதவியையும் எனக்கு அளி என்று நீர் இறைஞ்சும்! மேலும் இறைத்தூதரே! சத்தியம் வந்துவிட்டது! அசத்தியம் அழயத்தான் வேண்டியிருந்தது.’ (17 : 80-81)

ஆக இந்தக் காலகட்டத்தில் இறங்கிய உரைகளில் காணக்கிடைக்கின்ற இந்த அறிவுரையும் இன்னும் இப்படிப்பட்ட பிற சமிக்ஞைகளும், ஒரு புறம் வரவிருக்கின்ற புரட்சியை சுட்டிக்காட்டிக் கொடிருக்கின்றன என்றால் மறுபுறம் இந்த நிலைமையில் சமாளிப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் தேவைப்பட்ட ஆயத்தப் பணிகளையும் அடிக்கடி நினைவூட்டுவதற்கு ஏதுவாய் இருந்தன.

1.      மறுமை மீது உயிரோட்டமுள்ள நம்பிக்கை.

2.      உலக இன்பங்பளில் மீதான ஆசையை உள்ளத்திலிருந்து கெல்லியெறிவது.

3.      தூய கலப்பற்ற ஏகத்துவத்தையும் அதன் தோட்டங்களையும் நனகு மனதில் பதியவைப்பது.

4.      அல்லாஹ்வைத் தவிர வேறெந்தப் பற்றுக் கோலுக்கும் உள்ளத்தில் இடம் தராமலிருப்பது, அவன் மீது மட்டுமே முழுமையாக நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்துநிற்பது.

5.      அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த அறிவுரை எதுவாயினும் அவற்றைக் கூடுதல், குறைவு ஏதுமின்றி தொடர்ந்து மக்கள் முன் சமர்ப்பித்துக் கொண்டேயிருப்பது.

6.      இந்தப் பணிகள் அனைத்தையும் ஆற்றிடத் தேவையான வலிமையைத் திரட்டுவதற்காக தொழுகையை நிலைநாட்டுவது, அதன் மீது முழுமையாக கவனம் செலுத்துவது.

இவை மீது இன்னும் இவை போன்ற வேறுபல அடிப்படைகளின் மீதும்தான் முஸ்லிம்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது, மார்க்க அழைப்புப் பணி செய்திடத் தேவையான அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.

ஹிஜ்ரத் – இறை மார்க்கத்தை நிலைநாட்டிட தாயகம் துறந்து செல்லல்

ஏழுhம் அத்தியாயம்

அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தாயகத்தைத் துறந்து மார்க்கத் தேட்டங்கள் நிலைபெற வாய்ப்புள்ள வேறோர் இடத்திற்குச் சென்று விடுவது இஸ்லாமியச் சொல் வழக்கில் ‘ஹஜ்ரத்’ எனப்படும். இஸ்லாமிய வாழ்க்கை வாழ்ந்திடவும் இறைமார்க்கத்தின்பால் அழைத்திடவும் சுதந்திரமில்லாத இடத்தில் வெறும் வியாபாரத்திற்காகவும் வீடுவாசலுக்காகவும் சொத்து சுகங்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் வேண்டி தொடர்ந்து வசிப்பது ஒரு முஸ்லிமுக்கு ஆகுமானதன்று.

இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைமார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவன் இறைநிராகரிப்பின் அடிப்படையிலமைந்த அமைப்பொன்றின் கீழ் வாழ்வது இரண்டே இரண்டு நிலைகளில்தான் ஆகுமானதாகும்.

1. தாம் வாழும் அந்தப் பிரதேசத்தில் இஸ்லாமிய அறிவுரைகளைப் பரவலாக்கி, மக்கள் உள்ளங்களை அதன்பால் ஈர்த்து சத்தியக் கொள்கைகளை மேலோங்கச் செய்ய கடுமையாக உழைத்த வண்ணமிருத்தல்.

2. உண்மையில், (அசத்திய அழைப்பு ஆதிக்கம் செலுத்தக் கொண்டிருக்கும்) அந்த இடத்திலிருந்து வெளியேறிட எந்த வழியும் கிடைக்காத நிலையிருக்க வேண்டும். அல்லது தனிப்பட்ட முறையிலும் கூட்டான முறையிலும் இஸ்லாமிய வாழ்வு வாழக்கூடிய பிரதேசம் எதுவுமே இல்லாத நிலை இருக்க வேண்டும்.

மக்காவில் கடந்த 12 ஆண்டு காலமாக பல இன்னல்களையும் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு இஸ்லாமிய நெறியை அண்ணலார் (ஸல்) அவர்களும், அவரது தோழர்களும் அறிமுகப்படுத்தவும் மக்கள் உள்ளங்களையும் அதன்பால் ஈர்க்கவும் கடுமையாக உழைத்த வண்ணம் இருந்தது முதல் நிலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மக்கா நகரத்தில் அழைப்புப் பணிக்கு எதிர்ப்புகள் மிகக் கடுமையாகிவிட்டதும் மதீனாவில் இஸ்லாமிய நெறியின்படி வாழ்ந்திட வாய்ப்புகள் உள்ளன என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தது. இரண்டாவது நிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த நிலையில் ஊனமுற்றோர், இயலாதோர், நோய் அல்லது வறுமையின் காரணமாக பயணம் செய்ய வலிமையற்றோர் ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. மற்ற அனைவரும் இறைநெறிக்காக தாம் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து இசைவான பிரதேசத்திற்குச் சென்றுவிடுவது கடமையாகிவிடுகின்றது.

முஸ்லிம் பொதுமக்கள் மதீனா நகரை நோக்கி ஹிஜ்ரத் செய்தல்

மதீனா நகரில் இஸ்லாமிய அழைப்புப் பணி ஓரளவிற்கு நிறைவேறியிருந்தது. இஸ்லாம் ஓரளவு பரவியும் இருந்தது. எனவே மக்கா நகர இறைமறுப்பாளர்களின் கரங்களால் துன்புறுத்தப்பட்டுவந்த முஸ்லிம்களுக்கு மக்கா நகரை துறந்து மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செல்ல அண்ணலார் (ஸல்) அனுமதியளித்தார்கள்.

இதனைக் கண்டு முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்ய விடாமல் தடுப்பதற்காக இறைமறுப்பாளர்கள் தம் கொடுமைகளையும் அக்கிரங்களையும் இன்னும் அதிகமாக கட்டவிழ்த்து விடத் தொடங்கினர். முஸ்லிம்கள் தமது கொடூரப் பிடியிலிருந்து தப்பித்து வெளியேறிவிடக் கூடாதென்று எல்லாவிதத்திலும் முயன்றனர். ஆனால் மக்கள், அவர்களின் இந்தக் கொடுமைகளுக்கு அஞ்சுவதாய் இல்லை. இறைநெறிக்காக எந்தக் தியாகமும் செய்ய தயாராய் இருந்தனர். ஏன் ஆசைப்பட்டனர், வலிந்து துன்பத்தை ஏற்றுக் கொண்டனர், இறைநெறிக்காக தமது தாயகத்தைத் துறந்து செல்லவே விரும்பினர். எந்த ஆசை வார்த்தைகளும் நிர்ப்பந்தங்களும் பல நபித்தோழர்கள் மதீனா நகருக்குச் சென்றார்கள்.

அண்ணல் நபி (ஸல), அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) போன்ற ஒரு சிலர் மட்டும் எஞ்சியிருந்தனர். வறுமையின் காரணத்தால் இயலாமைக்குள்ளாகி பயணம்செய்ய முடியாதிருந்த ஒருசில முஸ்லிம்களும் எஞ்சி நின்றனர்.

அண்ணலாரைக் கொல்ல சதியாலோசனை

நபித்துவத்தின் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிய போது நபித்தோழர்கள் பலர் ஹிஜ்ரத் செய்து மதீனா நகரை அடைந்தனர். முஸ்லிம்கள் மதீனா சென்று தமது வலிமையைப் பெருக்கி கொண்டே செல்வதையும், அங்கு இஸ்லாம் பரவிக் கொண்டே செல்வதையும் பார்த்த குறைஷிகளுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. எனவே அவர்கள் இஸ்லாத்தை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிட பல திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர்.

பொதுவான சமுதாயப் பிரச்னைகள் குறித்து சிந்திப்பதற்காக, ‘தாருத் நத்வா’ என்ற ஆலோசனை மண்டபம் ஒன்று இருந்தது. அங்கு ஒவ்வொரு குலத்தையும் சேர்ந்த பெரும் தலைவர்கள் ஒன்று கூடினார்கள். இனி இந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டிட என்ன செய்வது? என்று யோசித்தனர். சிலர் முஹம்மத் (ஸல்) அவர்களை விலங்குளால் பினைத்து ஏதேனுமோர் இடத்தில் அடைத்து வைத்துவிடலாம் என்று ஆலோசனை கூறினார்கள். ஆனால் அவர்களில் சிலர் ‘முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் அவர்களை விடுவித்துக் கொண்டு சென்று விடுவார்கள். நாம் அவர்களிடம் தோல்வியடைய நேரிடலாம்’ என்று கூறியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

அண்ணலாரை நாடு கடத்திட வேண்டும் என்று மற்றோர் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் அண்ணலார் (ஸல்) எங்கு சென்றாலும் அங்கும். அவர்களை பின்பற்றுவோர் உருவாகி விடுவார்கள் அவர்களுடைய இயக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே சென்றுவிடும் எனபதால் இந்தத் திட்டமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இறுதியில் அபூஜஹ்ல் ஓர் ஆலோசனை கூறினான். அதன்படி ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞ்கர்கள் அனைவரும் சேர்ந்து அண்ணலாரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றுவிட வேண்டும்.

இவ்விதம் அவர்களைக் கொன்ற பழியில் எல்லாக் குலங்களும் சம பங்குபெற வேண்டும். இதனால் பனீஹாஷிம்(அண்ணலாரின்) குலத்தாரால், இங்குள்ள எல்லாக் குலங்களுக்கும் எதிராக தனியாகப் போரிட முடியாது. இந்த ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

இறுதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஓர் இரவையும் நிர்ணயித்துக் கொண்டார்கள். இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த இரவின்போது அண்ணலாரின் இல்லத்தைச் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாலையில் அண்ணலார் (ஸல்) வெளியே வரும்போது தமது திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்றும் முடிவாயிற்று. அரபுகள் இரவு நேரத்தில் யாரும் அறியாவண்ணம் ஒருவரது விட்டில் புகுந்து தாக்குவதை வெறுத்து வந்ததால் மேற்காணும் வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

அல்லாஹ்வின் அருளால் அண்ணலாருக்கும் எதிரிகளின் இந்த இரகசியத் திட்டங்கள் தெரிந்துகொண்டு தானிருந்தன. இச்சூழ்நிலையில்தான் மக்கா நகரைத் துறந்து மதீனா நகரம் செல்லும்படி அண்ணலாருக்கு இறைக்கட்டளை வந்தது. எனவே ஹிஜ்ரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பாக அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களிடம் அண்ணலார் ஆலோசனை கலந்தார்கள். அப்போது அண்ணலாருடன் அபூபக்ரு (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்து என்று முடிவாயிற்று, பயணத்திற்காக ஒட்டகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. பயணத்திற்குத் தேவையான வழித்துணைச் சாதனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மக்காவிலிருந்து புறப்படுதல்

குறைஷி குல இறைமறுப்பாளர்கள் அண்ணலார்ரைக் கொல்வதற்காக முடிவு செய்திருந்த இரவில் அண்ணலார், அலீ (ரலி) அழைத்து ‘எனக்கு ஹிஜ்ரத் செய்யும்படி கட்டளை கிடைத்துள்ளது. நான் இன்றிரவு மதீனா நகர் நோக்கிப் புறப்பட்டு விடுவேன். என்னிடம் பலருடைய அமானிதப் பொருட்கள் உள்ளன. அவற்றை நீர் மக்களுக்கு நாளை காலை திருப்பித் தந்துவிட வேண்டும். எதிரிகள் நான் வீட்டில்தான் இருக்கிறேன் என்று எண்ணிக் கொள்வதற்காக நீர் இன்றிரவு என் படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

குறைஷிக் குல இறைமறுப்பாளர்கள் ஒருபுறம் அண்ணலாரிடன் உயிரைக் குடிக்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த நிலைமையிலும் அண்ணலாரை முன்பு போலவே நம்பிக்கைக்குரியவர், நேர்மையானவர் என்று நம்பினார்கள். அதனால்தான் தமது அமானிதங்களைக் கொண்டுவந்து அவர்களிடமே கொடுத்து வைத்திருந்தார்கள்.

அந்தக் குறிப்பிட்ட இரவில் இறைமறுப்பாளர்கள் அண்ணலாரின் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். நன்கு இருட்டியவுடன் அண்ணலார் அனுமதியுடனும் நிம்மதியுடனும் தமது இல்லத்தைவிட்டு வெளியேறினார்கள். அப்போது அண்ணலார் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான யாஸீனின் வசனங்கள் ஓதிய வண்ணமிருந்தார்கள். கைநிறைய மண்ணை எடுத்து ‘ஷாஹத்துல் உஜூஹ்’ (முகங்கள் சேதமடையட்டும்) என்று கூறிய வண்ணம் இறைமறுப்பாளர்களை நோக்கி வீசினார்கள். அப்போது அல்லாஹ்வின் ஆற்றலால் அந்த முற்றுகையாளர்களுக்கு எத்தகைய மெய்மறந்தநிலை ஏற்பட்டதெனில், அண்ணலார் (ஸல்) அவர்களிடையே புகுந்து வெளியேறியதை அவர்களால் பார்க்கக் கூட முடியவில்லை! அண்ணலார், அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து அவர்களுடன் மக்கா நகருக்கு வெளியே சென்று தவ்ர் மலைக்குகையில் ஒளிந்து கொண்டார்கள்.

தவ்ர் குகையில் தஞ்சம் புகல்

அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களின் திருமகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அப்போது இளைஞராக இருந்தார்கள். இரவு நேரங்களில் அவர்கள் அண்ணலாருடனும் தம் தகப்பனாருடனும் இருப்பார்கள். காலை நேரத்தில் மக்கா சென்று இறை மறுப்பாளர்கள் என்ன ஆலோசனை செய்து கொண்டிருக்கினறார்கள்? என்ன திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று துப்பறிந்து தமக்குக் கிடைக்கின்ற தகவலை இருவரிடமும் தெரிவித்து வந்தார்கள். சில இரவுகள் கழிந்தன. அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களின் பணியாள் ஆட்டுப் பால் அல்லது ஏதாவது உணவுப் பொருள் கொண்டு வருவார். இவ்விதம் மூன்று இரவுகள் வரை அண்ணலாரும் அவர்களின் அன்புத் தோழர் அபூபக்ரு (ரலி) அவர்களும் அங்கு தங்கிவந்தனர்.

காலை வடிந்தவுடன் அண்ணலார் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து விட்டிருந்ததைக் கண்ட இறைமறுப்பாளர்கள் மிகுந்த கவலைக்கும் திகைப்புக்கும் ஆளானார்கள்! அண்ணலாரைத் தேடிய வண்ணம் அங்கும் இங்கும் ஓடினார்கள். அண்ணலாரும் அபூபக்ரு (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த அந்தக் குகையின் வாயிலுக்கே வந்துவிட்டனர்! தேடிவந்த இறைமறுப்பாளர்களின் காலடி ஓசைகளைக் கேட்டு அபூபக்ரு (ரலி) அவர்கள் கவலைக்குள்ளானர்கள். தம் உயிருக்கு ஆபத்து ஏற்படுமே எனறெண்ணி அவர்கள் கவலைப்பட வில்லை, மாறாக, அல்லாஹ்வின் தூதருக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகத்தான் கவலையடைந்தார்கள். அண்ணலார் தம் அன்புத் தோழரின் கலக்கத்தைக் கண்டு மிகவும் அமைதியுடன் பின்வருமாறு ஆறுதலளித்தார்கள்.

‘கவலைப்படாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கினறான்’ (9:40) சில விசித்திர நிகழ்ச்சிகள் நடந்தன. அல்லாஹ்வின் கட்டளையால் குகை வாயிலில் ஒருசில ஆடையாளங்கள் உருவாகி விட்டிருந்தன.—- அவற்றைக் கண்டு இந்தக் குகையில் எவரும் நுழையவில்லை என்று இறைமறுப்பாளர்கள் எண்ணிக் கொண்டனர். இத்துடன் அண்ணலாரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்க்கு நூறு ஒட்டகங்கள் வெகுமதியளிக்கப்படும் என்று குறைஷிக் குல இறைமறுப்பாளர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் பலரும் அண்ணலாரைத் தேடி பல்வேறு திசைகளிலும் புறப்படலாயினர்.

மதீனா நகர்வரை பயணம் மேற்கொள்ளுதல்

நான்காவது நாள் அண்ணலார் தவ்ர் குகையிலிருந்து வெளியே கிளம்பி ஓர் இரவும் ஒரு பகலும் தொடர்ந்து பயணம் செய்தார்கள். பயணத்திற்காக இரண்டு பெண் ஒட்டகங்கள் அபூபக்ரு சித்திக் (ரலி) அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வழிகாட்டுவதற்கும் விவரம் தெரிந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருதார். இரண்டாவது நாள் பிற்பகலில் வெயில் அதிகரித்துவிட்டபோது ஒரு குன்றின் நிழலில் சிறது நேரம் இளைப்பாறுவதற்காக அண்ணலார் தங்கினார்கள். அருகிலேயே இடையர் – மேய்ப்பாளர் ஒருவர் கிடைத்துவிட்டார். அவர் வழங்கிய ஆட்டுப் பாலை இருவரும் பருகிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அண்ணலார் (ஸல்) அங்கிருந்து புறப்பட்ட அதே நேரத்தில் சுராகாபின் ஜுஃஷும் என்பவர் அண்ணலாரைப் பார்த்துவிட்டார். இந்த மனிதர் வெகுமதி பெற வேண்டும் என்னும் ஆசையால் உந்தப்பட்டு அண்ணலாரைத் தேடிப் புறப்பட்டார்! அவர் அண்ணலாரைப் பார்த்துவிட்டு தம் குதிரையை வேகமாகத் தட்டிவிட்டார். குதிரை கால் இடறிக் கிழே விழந்தது. எனினும் அவர் சமாளித்துக் கொண்டு மீண்டும் அண்ணலாரைத் தாக்கிடத் தாயரானார். இப்போது அவர்சற்று முன்னேறி வந்தவுடன் அல்லாஹ்வின் ஆற்றலால் அவரது குதிரையின் கால்கள் முட்டிவரை பூமியில் புதைந்து விட்டன. சுராகா பெரும் கவளைக்குள்ளானார். விவகாரம் நாம் நினைத்ததைப் போலன்று, முற்றிலும் வேறானது. தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது தாக்குதல் நடத்திட முடியாது என்று புரிந்து கொண்டார். உடனே அண்ணலாரிடம் சரணடைந்துவிட்டார். பாதுகாப்பும் அபாயமும் அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அண்ணலார் (ஸல்) அவர்கள் சுராகாவை மன்னித்து அபயமளித்தார்கள். இதுவும் அண்ணலாரின் (வாழ்வில் இறைவன் நடத்திக் காட்டிய) ஓர் அற்புதம் (முஃஜிஸா) ஆகும்.

மதீனா நகருக்கு வருகை தரல்

அண்ணலார் வருகை தரவிற்கும் செய்தி மதீனா நகருக்கு முன்னதாக எட்டிவிட்டது. நகரம் முழுவதுமே அண்ணலாரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. பெரியவர்களும் சிறியவர்களும் நாள்தோறும் அதிகாலை நேரத்தில் நகரத்தைவிட்டு வெளியேறி புறநகர்ப்பகுதிகளில் ஒன்று திரண்டு விடுவார்கள். பிறபகல் நேரம் வரை எதிர்ப்பார்த்துக் காத்திருந்து விட்டு திரும்பி விடுவர். இறுதியில் ஒருநாள் அவர்கள் எதிர்பார்த்திருந்த அருள் மிக்க நேரம் வந்தே விட்டது தொலைவிலிருந்து அண்ணலாரின் வருகையை அறிந்து கொண்ட நகரம் முழுவதும் தக்பீர் முழக்கம் எதிரொலித்தது. காத்திருந்த மக்களின் முகங்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன.

மதீனா நகருக்கு மூன்று மைல் தொலைவில் ஓர் இடம் குபா எனும் ஊர். இங்கு அன்சாரிகளான மதீனா வாசிகள் பலரின் குடும்பங்கள் வசித்து வந்தன. அவர்களிடையே அம்ருபின் அவ்ஃப் (ரலி) அவர்களின் குடும்பம் மிகவும் சிறப்புடையதாய் விளங்கிற்று. குல்தூம் பின் அல்ஹதம் என்பவர் அதன் தலைவராக விளங்கினார்கள். ஈருலகத் தலைவர் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் முதலில் அவருடைய விருந்தாளியாகத் தங்கிட சம்மதித்தார்கள். இந்த நற்பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.

குபா நகரில் அவருடைய இல்லத்தில் அண்ணலார் தங்கினார்கள். அண்ணலார் (ஸல்) புறப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அலீ (ரலி)யும் மக்காவைத் தறந்து புறப்பட்டார்கள். அவரும் இவர்களுடன் சேர்ந்து அந்த இல்லத்திலேயே தங்கி இருந்தாhகள்.

நபித்துவத்திற்குப் பின் பதின்மூன்றாம் ஆண்டில் ரபீஉல் அவ்வல் மாதம் 8ஆம் நாள் (கி.பி. 622 டிசம்பர் திங்கள் 20ஆம் தேதி) குபாவிற்கு அண்ணலார் செய்த முதல் பணி ஓர் இறையில்லத்தைக் கட்டியதேயாகும். அண்ணலார் தமது இரு கரங்களால் அந்த இறையில்லத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். தம் தோழர்களுடன் சேர்ந்த தாமே அந்த இறையில்லத்தைக் கட்டினார்கள்.

சில நாட்கள் குபாவில் தங்கியருந்துவிட்டு அண்ணலார் மதீனாவை நோக்கி புறப்பட்டார்கள். அன்று வெள்ளிக்கிழமை. வழியில் பனூசாலிம் குலத்தார் வசிக்கும் பகுதியை அடைந்தபொழுது லுஹர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது. அங்குதான் அண்ணலார் தமது ஜும்ஆ பேருரையை ஆற்றினார்கள். முதல் முதலாக ஜும்ஆ தொழுகையும் நடத்தினார்கள். பிறகு மதீனா நகருக்குள் பிரவேசித்தார்கள்.

அண்ணலாரை உயிருக்குயிராக மதீனாவாசிகள் நேசித்தனர். அண்ணலார் விருந்தாளியாக இருக்கும் நற்பேறு தமக்கே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பினார்கள். ஒவ்வொரு குலத்தாரும் முன்வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய விருந்தினராகத் தங்குங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். மக்களின் ஆர்வத்துடிப்பைச் சொல்லில் வடித்து அளப்பது அசாத்தியமானதாகும். ஒவ்வொருவரின் உள்ளமும் அண்ணலாரின் கருணைப் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொர் உயிரும் அவர்களுக்காக அர்ப்பணமாகிடத் தவித்துக் கொண்டிருந்தது. பெண்டிர் தம் இல்லங்களில் மேல்தளத்தில் நின்று கொண்டு பினவருமாறு ஆனந்த கீதமீசைத்தார்கள்:

‘விதா மலைக் கணவாய்களின் ஊடேயிருந்து பௌர்ணமி நிலவு முழுமதி, முகிலைக் கிழித்துக் கொண்டு எங்களுக்கு ஒளி தருவதற்காக உதயமாகிவிட்டது! இறைவனிடம் ஒரு கரமேந்தி இறைஞ்சுவோர் உலகில் இருக்கும்வரை (உலகம் உள்ளவரையும்) நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் மீது கடடையாகி விட்டது!’

சின்னஞ்சிறுமிகள் முரசு கொட்டிப் பாடினார்கள்:

‘நாங்கள் பனீ நஜ்ஜார் குலத்துச் சிறுமிகள், முஹம்மத் (ஸல்) அவர்கள் (எங்களுக்கு கிடைத்திருக்கும்) எத்துணை நல்ல அண்டை வீட்டார்!’

அண்ணலார் (ஸல்) அச்சிறுமிகளை நோக்கி, ‘அன்புச் சிறுமிகளே! நீங்கள் என்னை நேசிக்கீர்களா?’ என்று வினவினார்கள். அச்சிறுமிகள் ‘ஆமாம்! அல்லாஹ்வின் தூதரே! உங்களை நாங்கள் மிகவும் நேசிக்கின்றோம் என்றனர். இதனைச் செவியுற்ற அண்ணலார், ‘நானும் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

மதீனா நகரில் தங்குதல்

அண்ணலாருக்கு விருந்துபசாரம் செய்யும் சிறப்புயாருக்கு கிடைக்கப் போகிறது? இது எளிதில் விடைகாண முடியாது கேள்வியாக இருந்தது. ‘என் ஒட்டகம் எவருடைய வீட்டிக்கு முன்னால் போய் நின்று விடுகினறதோ அவரே எனக்கு விருந்துபசாரம் செய்யட்டும்’ என்று அண்ணலார் (ஸல்) கூறினார்கள். எனவே இந்தச் சிறப்பு அபூ அய்யூப் அன்சாரி (ரலி) அவர்களுக்குக் கிட்டியது.

இப்போது மஸ்ஜிதுந் நபவி அமைந்துள்ள இடத்திற்கு அருகில்தான் அபூ அய்யூப் அன்சாரி (ரலி) அவர்களின் இல்லம் இருந்தது. இந்த இல்லம் இரண்டு தளங்கள் கொண்டதாகும். அபூ அய்யூப் அன்சாரி (ரலி) அவர்கள் மேல்தளத்தை – மாடியை அண்ணலாருக்காக அளிக்க முன் வந்தார்கள். ஆனால் மக்கள் வருவதற்கும் போவதற்கும் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அண்ணலார் (ஸல்) அவர்கள் கீழ் தளத்தில் தங்க விரும்பி அதனையே எடுத்துக் கொண்டார்கள். அபூ அய்யூப் அன்சாரி (ரலி) அவர்களும் அவர்களின் துணைவியாரும் மேல்தளத்தில் தங்கினர்.

அண்ணலார் ஒரு மாத காலம் வரை இங்குதான் தங்கினார்கள். அதன்பின் மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் அண்ணலார் (ஸல்) தங்கிட அறைகள் கட்டப்பட்டதும் அங்கு குடியேறினார்கள். சில நாட்களுக்குள் அண்ணலாரின் குடும்பத்தினரும் மதீனா நகருக்கு வந்துவிட்டார்கள்.

மஸ்ஜிதுந் நபவீ நிர்மாணம்

மதீனா நகருக்கு வந்த பிறகு அனைத்துக்கும் முன்பாகவும் அவசியமாகவும் செய்ய வேண்டி பணி ஓர் இறையில்லத்தைக் கட்டுவதாவே இருந்தது. அண்ணலார் (ஸல்) தங்கியிருந்த இடத்திற்கு சிறிது தொலைவிலேயே காலியிடம் இருந்தது. இது இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமானதாயிருந்தது. அவர்களுக்கு அதற்கான விலையைக் கொடுத்து இந்த நிலம் வாங்கப்பட்டது. உடனே இறையில்லத்தை நிர்மாணிக்கும் பணி தொடங்கிவிட்டது. இப்போதும் அண்ணலார் பிற கட்டுமாணத் தொழிலாளர்களைப் போன்றே அனைவரோடும் சேர்ந்து உழைத்து வந்தார்கள்.

இந்த இறையில்லம் மிக எளிய முறையில் கட்டப்பட்டது. பச்சை செங்கற்களாலான சுவர்கள், பேரீத்த ஓலைகளாலான கூரை, பேரீத்த மரத்தால் செய்யப்பட்ட தூண்கள், இவைகளே அந்தப் பள்ளியின் அங்கங்கள். இதன் கிப்லா (முன்னோக்கும் திசை) பைத்துல் முகத்தஸை நோக்கி அமைக்கப்பட்டது. ஏனெனில் அப்பொழுது முஸ்லிம்களின் கிப்லாவாக பைத்துல் முகத்தஸ்தான் விளங்கியது. பின்னர் கஅபத்துல்லாஹ் (மக்காவிலுள்ள இறையில்லம்) முன்னோக்குமிடமாக ஆக்கப்பட்டபோது அதற்கேற்ப இங்கும் கிப்லா திசை மாற்றியமைக்கப்பட்டது. மஸ்ஜிதுந் நபவீயின் தரை மண் தரையாகவே இருந்தது. மழை பெய்யும்போது இறையில்லம் சகதியாக மாறிவிடும். சில நாட்களுக்குப் பின் கற்களால் தளம் அமைக்கப்பட்டது.

இந்தப் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் திண்ணை இருந்தது. இதனை ஸுஃப்பா என்பார்கள். வீடற்ற ஏழை முஸ்லிம்கள் அங்கே தங்கினார்கள்.

இறையில்லம் கட்டி முடித்த பின் அதன் அருகிலேயே அண்ணலார் (ஸல்) தம் தூய துணைவியருக்காக அறைகள் கட்டினார்கள். இந்த அறைகளும், பச்சை செங்கற்காளலும் பேரீத்தந் தட்டிகளாலும் தாம் கட்டப்பட்டன. இந்த அறைகள் ஆறேழு முழம் அகலமும் பத்து முழம் நீளமும் கொண்டவையாயிருந்தன. ஒருவர் எழுந்து நின்றால் தொட்டுவிடும் அளவிற்குத்தான் கூரை முகடு உயரமாக இருந்தது. வாயில்களில் கம்பளித் திரை தொங்கிக் கொண்டிருந்தது.

அண்ணலாரின் இல்லத்திற்கருகே வசித்துவந்த அன்சாரிகளில் வசதியுள்ளவர்கள். அண்ணலாருக்குச் சிறிது பாலைக் கொடுத்தனுப்புவார்கள். சில வேளைகளில் குழம்பும் சில வேளைகளில் வேறு ஏதாவதும் கொடுத்தனுப்புவார்கள். அண்ணலார் (ஸல்) இவற்றையே உண்டு வந்தார்கள். அவர்களுடைய அன்றாட வாழ்க்கை வறுமையுடன் கழிந்துவந்தது.

சகோதரத்துவத்தை நிலைநாட்டல்

மக்கா நகரை விட்டு மதீனா நகருக்கு வீடு வாசகளைத் துறந்து வந்த முஸ்லிம்கள் ஏறத்தாழ அனைவருமே ஏதுமில்லாதவர்களாய் எந்தவித வசதிவாய்ப்பற்றவர்களாய் இருந்தனர். அவர்களில் வசதிவாய்ப்புடையவர்களாய் இருந்தவர்களும் கூட தமது செல்வத்தையும் உடைமைகளையும் மக்காவிலிருந்து தம்முடன் கொண்டுவர முடியவில்லை. அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வெறுங்கையினாரய்த் தான் வரவேண்டியிருந்தது. இந்த முஹாஜிர்கள் (தாயகம் துறந்தோர்) அனைவருமே தற்போது மதீனா நகர முஸ்லிம்களான அன்சாரிகளின் விருந்தினர்களாயிருந்த போதிலும், இனி அவர்களுடைய வருங்கால வாழ்வுக்கும் அவர்கள் நிரந்தமாக அங்கு குடியிருக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதின் அவசியத்தை அண்ணலார் (ஸல்) உணர்ந்தார்கள். மேலும் இந்த முஹாஜிர்களும் தமது கரங்களால் உழைத்து உண்பதையே விரும்பினார்கள். எனவே மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானப் பணி முடிவடைந்தவுடன் அண்ணலார் ஒருநாள் மதீனாவாசிகளை அழைத்து அவர்களிடம் ‘இந்த முஹாஜிர்கள் உஙகள் சகோதரர்கள்’ என்று கூறினார்கள். பின்னர் அன்சாரிகளில் ஒருவரையும் முஹாஜிர்களில் ஒருவரையும் அழைத்து, இன்றிலிருந்து நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்று கூறினார்கள். இவ்விதம் எல்லா முஹாஜிர்களையும் அன்சாரிகளின் சகோதரர்களாக ஆக்கிவிட்டார்கள்.

மேலும் இந்த உள்ளத்தூய்மையுடைய நல்லடியார்கள் உண்மையிலேயே சகோதரர்கள் என்ன, சகோதரர்களைவிட மிக அதிகமாக ஒருவரையொருவர் நேசிப்பவர்களாய் விளங்கினர்.

அன்சாரிகள் முஹாஜிர்களை தத்தம் வீடுகளுக்கு அழைத்துச் சென்றார்கள். தமது சொத்துக்கள், உடைமைகளின் அனைத்து விவகாரங்களையும் அண்ணலாரிடம் சமர்ப்பித்து விட்டார்கள்! ‘பாதி உங்களுடையது, பாதி எங்களுடையது’ என்று கூறி விட்டார்கள். தோட்டங்கள், தோப்புகளின் வருமானம், பயிர் நிலங்களின் விளைச்சல், வீட்டுச் சமான்கள், வீடுகள், பிற சொத்துகள் ஆக ஒவ்வொரு பொருளும் அந்த சகோதரர்களுக்கிடையே பங்கிடப்பட்டன. இந்த வீடற்ற முஹாஜிர்கள் அனைவரும் நிம்மதியடைந்தார்கள். பல முஹாஜிர்கள் உடனே கடை திறந்து விட்டார்கள். வியாபாரமும் செய்யத் தொடங்கி விட்டார்கள். இவ்வதிம் முஹாஜிர்களைக் குடியேற்றும் பணி நிறைவுபெற்றது. இந்தப் பிரச்சனை திருப்திகரமாய்த் தீர்க்கப்பட்டது.

இஸ்லாமிய அழைப்புப் பணி ஒரு புதிய காலகட்டத்தை நோக்கி

எட்டாம் அத்தியாயம்

ஹிஜ்ரத்திற்கு முன்பு இஸ்லாமிய அழைப்பு மக்கா நகர இணைவைப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டு வந்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் இஸ்லாமிய அழைப்பு புதிய ஒன்றாயிருந்தது. ஆனால் ஹிஜ்ரத்திற்கு பிறகு மதீனா நகரில் யூதர்களைச் சந்திக் வேண்டியிருந்தது. யூதர்கள் ஏகத்துவம், இறைத்தூதுத்துவம், மறுமை, வானவர்கள் வேத வெளிப்பாடு ஆகிய அனைத்தையும் ஏற்றுக் கொண்டிருந்தவர்கள். இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றும் சமூகத்தார் என்னும் முறையில் இறைவனிடமிருந்து வந்த ஒரு ஷரீஅத்தை சட்டத்தொகுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டவர்கள் என வாதிட்டுக் கொண்டிருந்தனர்.

அடிப்படையில் – கொள்கையளவில் அவர்களின் அசல் மார்க்கமும் முஹம்மத் (ஸல்) அவர்கள் எதன் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தார்களோ அந்த இஸ்லாமாகவே இருந்தது. ஆனால் பல நூற்றாண்டுகளாய் கொண்டிருந்த அலட்சியப்போக்கின் காரணமாக அவர்களுக்குள்ளே எண்ணற்ற தீமைகள், சீர்கேடுகள், உருவாகிவிட்டன. அவர்களுடைய வாழ்க்கை அசல் இறைச் சட்டதின் விதிமுறைகளிலிருந்து விடுபட்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான நூதனங்களும், சடங்குகளும் சம்பிரதாயங்களும் புகுந்து விட்டிருந்தன. தவ்ராத் அவர்களிடம் இருக்கத்தான் செய்தது. எனினும் அதில் அவர்கள் ஏராளமான மனிதவாக்குகளையும் இணைத்து விட்டிருந்தனர். எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச இறைச் சட்டங்களுக்கும் தான்தோன்றித்தனமாக மனம் போன போக்கில் விளக்கங்கள் அளித்தனர். விரிவுரை செய்தனர். இதனால் இறைச் சட்டங்களின் அசல் வடிவத்தையே உருக்குலைத்து விட்டிருந்தனர். இறைமார்க்கத்துடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்பு மிகவும் பலவீனமானதாய் ஆகிவிட்டிருந்தது.

ஒட்டுமொத்தமாக அவர்களுக்குள்ளே எத்தகைய தீமைகள் வேரோடியிருந்தனவெனில் நல்லடியார் எவரேனும் அவர்களுக்கு நேர்வழிகாட்டிட எப்போதேனும் வருகை தந்தாலும் கூட அவர்கள் அவரது பேச்சுகளில் ஒன்றைக்கூட கேட்கத் தயாராக இல்லை. மாறாக அவரைத் தமது பெரும் எதிரியாகக் கருதி எவ்விதத்திலாயினும் அவரது குரலை ஒடுக்கிட முயன்றார்கள். இவர்கள் தமது அசல் நிலையை பூர் வீகத்தைப் பொறுத்து, முஸ்லிம்களாயிருந்தாலும் அவர்களுடைய அந்த அசல் மார்க்கம் என்னவாயிருந்தது என்று அவர்களுக்கே நினைவில்லாத அளவிற்கு அவர்கள் சீர்கெட்டுப் போயிருந்தனர்.

இவ்விதம் இஸ்லாமிய இயக்கத்தின் முன்னே தற்போது மார்க்கக்கொள்கைகளின் அடிப்படை போதனையை மக்களுக்கு அறிமுகம் செய்யும் பணி மட்டும் காத்திருக்கவில்லை, அத்துடன் இத்தகைய சீர்கெட்ட ‘முஸ்லிம்களிடையே’ (யூதர்களிடையே) அசல் மார்க்க உயிரோட்டத்தை ஏற்படுத்தும் பணியையும் செய்ய வேண்டியிருந்தது. நாலா திசைகளிலிருந்தும் மதீனா நகரில் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு, அங்குள்ள அன்சாரிகளுடன் இணைந்து சிறயதோர் இஸ்லாமிய அரசுக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். எனவே இதுவரை அழைப்புப் பணி, கொள்கைச் சீர்திருத்தம், ஒழுக்க அறிவுரைகள் என்ற அளவில் மட்டுமே வழிகாட்டுதலை வழங்கிவந்த இஸ்லாமிய இயக்கத்தின் மீது இப்பொழுது உருவாகி இருக்கின்ற சமூக அமைப்பின் வாழ்க்கை முறையைச் சீர்திருத்துதல, நிர்வாகச் சட்டங்கள், பரஸ்பரத் தொடர்புகளை சீர்படுத்திக் கொள்வதற்கான விதிமுறைகளையும் புகட்ட வேணடியதாக இருந்தது. ஏற்கனவே உள்ள இரண்டு மாபெரும் பொறுப்புகளுடன் இந்த மூன்றாவது துறையிலும் இஸ்லாமிய இயக்கம் தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியது.

இன்னொரு பெரிய மாற்றமும் ஏற்பட்டது. இதுவரை இறைமறுப்பு ஓங்கியிருந்த சூழ்நிலையில் இஸ்லாமிய அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. அந்தச் சூழலில் வசித்துக் கொண்டு முஸ்லிம்கள் இறைமறுப்பாளர்களின் கொடுமைகளை சகித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுதோ முஸ்லிம்களின் சிறியதோர். அரசு உருவாகிவிட்டிருந்தது. அவ்வரசு நாலா திசைகளிலும் குஃப்ரின் (இறைநிராகரிப்பின்) கோட்டைகளால் சூழ்ப்படிருந்தது. இப்போது முஸ்லிம்களை துன்புறுத்துவதும், நெருக்கடிக்குள்ளாக்குவது ஆகியவற்றுடன் நிற்காமல் அரபுலகம் முழுவதுமே இந்தச் சின்னஞ்சிறு குழுவை முடிந்தவரை சீக்கிரமாக ஒழத்துக் கட்டிட வேண்டுமென்று தீவிரமாக முனைந்து விட்டிருந்தது!.

இஸ்லாத்தின் இந்தப் புதிய கேந்திரம் வலிமை பெற ஆரம்பித்துவிட்டால், பின்னர் நாம் நிலைகொள்வதற்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற பேராபத்தை அவர்கள் உணரத் தொடங்கியிருந்தார்கள். எனவே இந்தச் சின்னஞ்சிறு இஸ்லாமியக் குழுவிற்கு தன்னையும் தன் இயக்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள பினவரும் விஷயங்கள் அவசியமானவையாய் இருந்தன:

1.      முழு வேகத்துடன் தன் கொள்கையைப் பிரசாரம் செய்வது, தம் கொள்கை சத்தியமானது எனபதை ஆதாரங்களால் நிரூபிப்பது, முடிந்தவரை அதிகமான மக்களைத் தம் கருத்தொத்தவர்களாய் ஆக்கிட முயல்வது.

2.      அறிவின் ஒளியில் விஷயத்தைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு அசல் உண்மையை அடைந்திட இருக்கும் தடைகளை, சிரமங்களை அகற்றிட – எதிரிகள் உறுதியாக நம்பிக்கை கொணடிருக்கின்ற கொள்கைகள் தவறானவை என்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தல்.

3.      வீடு, வாசலைத் துறந்து வியாபாரம் மற்றும் தொழில்களைக் கைவிட்ட பின்னால் இந்தப் புதிய அரசில் வந்து ஒன்று திரண்டுகொண்டு இருந்தவர்களுக்காக ஒரு கூட்டமைப்பில் உறுதியுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல். அத்துடன் பசிபட்டினியும் அமைதியின்மையும் நிரம்பிய சூழ்நிலையில்கூட அவர்கள் முழுப் பொறுமையுடன் இருக்கவும், நிலைமைகளை  எதிர்த்துப்  போராடிடவும், மிகக் கடுமையான சந்தர்ப்பங்களில்கூட நிலை தடுமாறாதிருக்கவும் தேவையான ஒழுக்க, ஈமானியப் பயிற்சியை அளித்தல்.

4.      முஸ்லிம்களை அழித்திடும் எண்ணத்துடன் எதிரிகள் அவர்களைத் தாக்கிடும்போது தாம் பலவீனர்களாயும் ஆயுத பலமற்றவர்களாயும் மற்ற வசதிகள் இல்லாதிருந்த போதிலும் உறுதியுடன் அவர்களை எதிர்த்துப் போராடிட அவர்களை ஆயத்தப்படுத்துதல், தாம் காப்பாற்றப்படுவோம், வெற்றியடைவோம் என்பதிலும் அவர்கள் போர்க்களத்தை விட்டு பின்வாங்காத அளவிற்கும் புறமுதுகிட்டு ஓடாத அளவிற்கும் இறைவனின் மீது நம்பிக்கையை உறுதியை ஏற்படுத்துதல்.

5.      நன்கு விளக்கிய பின்னரும் – புரிய வைத்த பின்னரும் இஸ்லாம்; நிலைநாட்டிட விரும்பிய வாழ்க்கையமைப்பு நிலைபெற்றிடத் தடையாக இருப்போரை வலிமையைப் பிரயோகித்து, களத்தைவிட்டு அப்புறப்படுத்தும் அளவிற்கு இயக்கவாதிகளுக்குள்ளே துணிவை உண்டாக்குதல். எனவே, மஸ்ஜிதுந் நபவி மற்றும் பிற முக்கிய கட்டடங்களின் நிர்வாகத்திற்கும் முஹாஜிர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கான உறைவிடங்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்ட பின்னால் அண்ணலார் (ஸல்) மேற் கூறிய பணிகள் அனைத்திலும் கவனம் செலுத்தினார்கள் 2-ஆவது அத்தியாயமான அல்பகராவின் பெரும் பகுதி இந்தக் காலகட்டத்தில்தான் இறங்கிற்று. அதில் இந்த விஷயங்கள் அனைத்தும் விலியுறுத்தப்பட்டுள்ளன.

யூதர்களுடன் ஒப்பந்தம்.

மதீனா நகரின் நான்கு திசைகளிலும் யூதர்களின் சிற்றூர்கள் இருந்தன. யூதர்களிடையே இஸ்லாமிய அழைப்புப் பணி புரிவதுடன். அவர்களுடனான அரசியல் தொடர்புகளின் தன்மையை நிர்ணயிப்பதும் அவசியமாயிருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் மக்கா நகரை விட்டுச் சென்றுவிட்டனர் எனபதையறிந்த குறைஷிகள் நிம்மதியடைந்து அமர்ந்துவிடவில்லை. மாறாக முஸ்லிம்களின் கட்டுக்கோப்பான குழு ஒன்று மதீனா நகரில் ஒன்று திரண்டு கொண்டிருக்கினறது என்பதைக் கண்டவுடன் இஸ்லாத்தின் இந்தக் கோத்திரத்தை தமது வலிமையின் வாயிலாக அழித்துவிட்ட பல திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர்.

இத்தகைய சூழ்நிலையில் மக்கா நகர இணைவைப்பவர்கள் தாக்குதல் நடத்தினால் யூதர்கள் எந்தப் பக்கம் சேர்வார்கள் என்பது ஒரு முக்கிய அம்சமாக விளங்கியது. எனவே இஸ்லாமிய இயக்கத்திற்கு மதீனாவின் நாலா திசைகளிலும் இருந்த யூத ஊர்கள், நகரங்களுடன் தன் அரசியல் உறவுகளை நீர்ணயம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே மதீனா நகருக்கும் செங்கடலின் கரைக்கும் இடையே வசித்து வந்த குலங்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. அந்த யூதக் குலங்களில் சிலவற்றிடம் அண்ணலார் (ஸல்) கோஷ்டி சேரா ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதாவது மதீனா நகர முஸ்லிம்கள் மீது குறைஷிகளோ வேறெவருமோ தாக்குதல் நடத்தினால் யூதர்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்தும் போரிட மாட்டார்கள், முஸ்லிம்களின் எதிரிகளுக்கும் துணைபுரிய மாட்டார்கள். (நடுநிலை வகிப்பவர்கள்) என்பதே அந்த ஒப்பந்தம். சில குலங்களிடம் முஸ்லிம்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்தினால், முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

நயவஞ்சகர்கள்

மதீனா நகரில் இஸ்லாமிய இயக்கம் சந்திக்க வேண்டியிருந்த பல புதிய பிரச்சனைகளில் நயவஞ்சகர்களின் பிரச்சனை மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இஸ்லாமிய அழைப்பு முழுக்க முழுக்க சத்தியமானது. என ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் இருந்தனர். இஸ்லாமிய சத்தியமானது எனக் கருதினாலும் தமது பலவீனமான இறைநம்பிக்கையின் காரணத்தால் இஸ்லாத்திற்காக தமது உலகாயதத் தொடர்புகளை விட்டுவிட மனமில்லாத சிலரும் இஸ்லாமியக் குழுவினுள் இணைந்து விட்டிருந்தார்கள். இவர்களோ விவசாயம் வேளாண்மை அல்லது சொந்தபந்தம் ஆகிய பிணைப்புகள் ஏற்படுத்திய தடைகளால் பல நேரங்களில் இஸ்லாத்தின் தோட்டங்களை நிறைவு செய்யாமல் இருந்தனர்.

இப்போது மதீனா நகரில் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போல நடித்து, உள்ளுக்குள் இஸ்லாத்தை முற்றிலும் நிராகரிக்கின்ற, குழப்பம் விளைவிப்பதற்காகவென்றே முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டிருந்த சில நயவஞ்சகர்களும் இஸ்லாமியக் குழுவினுள் புகுந்து விட்டிருந்தனர்.

நிர்ப்பந்தமான நிலையில் வேறு வழியின்றி தம்மை முஸ்லிம்களாகக் காட்டிக் கொண்டிருந்த சிலரும் இஸ்லாமியக் குழுவில் இருந்தனர். இவர்களின் உள்ளங்கள் என்னவோ இன்னும் இஸ்லாத்தைக் குறித்து திருப்தியடைந்திருக்கவில்லை, ஆனால் தமது குலத்தினர் அல்லது குடும்பத்தினர் பலரும் முஸ்லிம்களாகி விட்டிருந்த காரணத்தால் அவர்களும் முஸ்லிம்களுடன் இணைந்து விட்டிருந்தனர்.

இவர்களுடன் ஒருபுறம் முஸ்லிம்களின் தோழர்களாகி தமது உலக ஆதாயங்களை அடைந்திட ஆசைப்பட்டுக் கொண்டு, மற்றொருபுறம் இறைமறுப்பாளர்களுடன் ரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பவாதிகள் சிலரும்கூட இஸ்லாமியக் குழுவினுள் நுழைந்து விட்டிருந்தார்கள். இஸ்லாத்திற்கும் இறைமறுப்புக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் இஸ்லாம் ஓங்கிவிட்டால் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடட்டும், இறைமறுப்பே வென்று விடுமாயின் அப்போதும் அவர்களுடைய நலன்கள் பாதுகாப்பாக இருக்கட்டும் எனபதே இவர்களுடைய திட்டமாகும்.

இஸ்லாமிய இயக்கத்திற்கு இந்த உள்ளிருந்தே கொல்லும் விரோதிகள், கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் பெரும் துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் காரணமாக இருந்தார்கள். இவர்களைச் சமாளிப்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. மதீனாவில் இந்த நயவஞ்சகர்களின் குழப்பங்களை எவ்வாறெல்லாம் இஸ்லாமிய இயக்கம் எதிர்த்துப் போராடி வந்தது என்னும் விவரங்கள் சம்பந்தப்பட்ட அத்தியாயங்களில் வரும்.

இநதச் சந்தர்ப்பத்தில் இத்தகைய நயவஞ்சகர்களையும் – இஸ்லாத்தின் பாதையில் நன்கு சிந்தித்து அடியெடுத்து வைப்பவர்களையும் வேறுப்படுத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாயிருந்தது. இஸ்லாமிய இயக்கம் இப்பொழுது சந்திக்க வேண்டியிருந்த கடினமான நிலைமையால் இது உடனடி அவசியமாக இருந்தது. அதாவது பழைய மாச்சரியங்களுக்கும் இஸ்லாத்திற்குப் புறம்பான சிந்தனைகளுக்கும் அடிமைகளாய் இருப்பவர்கள் யார்? உண்மையான முஸ்லிம்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டியது இப்பொழுது மிக முக்கியமானதாகி விட்டது.

கிப்லா மாற்றம்

இதுவரை இஸ்லாத்தின் கிப்லா (முன்னோக்கும் திசை) பைத்துல் முகத்தஸாக இருந்தது. முஸ்லிம்கள் அதனையே முன்னோக்கித் தொழுது வந்தார்கள். பைத்துல் முகத்தஸுக்கும் யூதர்களுக்கும் நெருங்கி தொடர்பு இருந்தது. யூதர்களும் அதனை முன்னோக்கியே தொழுது வந்தார்கள். ஹஜ்ரி 2 ஷாபான் மாதத்தில் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போதே கிப்லா மாற்றம் குறித்து கட்டளை இறங்கியது.

இப்போது பைத்துல் முகத்தஸுக்குப் பதிலாக மக்காவிலுள்ள இறையில்லம் கஅபா முஸ்லிம்களின் கிப்லாவாக ஆக்கப்பட்டது. ஆகவே அண்ணலார் (ஸல்) தொழுகை நடந்து கொண்டிருக்கும் போதே பைத்துல்முகத்தஸின் திசையிலிருந்து கஅபாவின் திசை நோக்கித் திரும்பி நின்று தொழுகையைத் தொடர்ந்தார்கள். இஸ்லாமிய இயக்கத்தின் வரலாற்றில் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானதாகும். இதன் முக்கியத்துவத்தை அல்லாஹ்வே பின்வருமாறு எடுத்துரைத்துள்ளான்:

‘நீர் நோக்கி தொழுது வந்த திசையை கிப்லாவாக நாம் ஆக்கி வைத்திருந்ததெல்லாம், யார் இறைத்தூதரைப் பின்பற்றுகிறார்கள்? யார் மாறிச் சென்று விடுகிறார்கள் என்பதை நாம் அறிவித்து விடுவதற்காகத்தான்!’ (2 : 143)

இதுவரை ஒழுக்கம் மற்றும் இறைநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த வாழ்வின் பக்கமாக உலக மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு யூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அந்தத் தலைமைப் பதவியிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் அவர்கள் அகற்றப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அதனை சரிவர நிறைவேற்றிடவில்லை. இந்த அருட்கொடையின் மதிப்பை உணரத் தவறிவிட்டார்கள். எனவே, அவர்களுக்குப் பதிலாக இந்தத் திருப்பணி இனி இஸ்லாமிய சமுதாயத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. இனி இஸ்லாமிய சமுதாயமே இந்தக் கடமையை நிறைவேற்றும் என்று அறிவிப்பதாகவும் பிரகடனம் செய்வதாகவும் இந்த இறைமொழி அமைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியின் விளைவாக, எவர்களுடைய உள்ளத்தில் இறைநம்பிக்கை இடம் பெற்றிருக்கவில்லையோ அத்தகையவர்களுடைய முகத்திரை கிழிந்துவிட்டது! அவர்கள் அண்ணலாரின் இந்தச் செயலைக் கடுமையாகக் குறை கூறினார்கள். இஸ்லாமியக் குழுவில் அவர்களின் நிலை என்ன என்பதும் தெளிவாகிவிட்டது. இவ்விதம் இரு மனம் கொண்ட முஸ்லிம்கள் பலர் இஸ்லாமியக் குழுவிலிருந்து பிரிந்து சென்றுவிட்டனர். இப்படிப்பட்ட கொள்கை பலமற்றவர்கள் வெளியேறியதால் இஸ்லாமியக் குழு தூய்மையடைந்தது.

இஸ்லாமிய இயக்கதின் பாதுபாப்பு நடவடிக்கைகள்

________________________________________

ஒன்பதாம் அத்தியாயம்

மக்கா நகரில் அகபா என்னுமிடத்தில் மதீனாவாசிகள் சிலர் அண்ணலாரின் திருக்கரங்களில் உறுதிப் பிரமாணம் (பைஅத்) செய்து அவர்களின் திருச் சமூகத்தில் ‘தாங்களும் தங்களின் தோழர்களும் மதீனா நகருக்கு வருகை தாருங்கள்’ என்னும் கோரிக்கையைச் சமர்ப்பித்தார்கள். அதே நேரத்திலேயே இந்த உறுதிப் பிரமாணமும், கோரிக்கையும் உண்மையில் மதீனா வாசிகளின் தரப்பிலிருந்து அரபுலகம் முழுமைக்கும் விடுக்கப்படும் அறைகூவலாக அமையும் என்பதை அந்த மதீனாவாசிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.

அதனால்தான் அப்போது உறுதிப் பிரமாணம் செய்தவர்களிடையே இருந்த அப்பாஸ் பின் உபாதா (ரலி) என்பவர் தம் தோழர்களை நோக்கி இவ்வாறு கூறினார். இந்தச் சொற்கள் இன்று வரையும் வரலாற்று ஏடுகளில் பாதுகாப்பாகப் பொறித்து வைக்கப்பட்டுள்ளன: ‘நீங்கள் எவருடைய கரங்களில் உறுதிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? நீங்கள் இவருடைய கரங்களில் உறுதிப் பிரமாணம் செய்து, இந்த உலகம் முழுவதின் எதிர்ப்பையும் விலைக்கு வாங்கிக் கொணடிருக்கிறீர்கள்! உங்கள் செல்வங்கள் அழிக்கப்படலாம், உங்கள் தலைவர்கள் கொல்லப்படலாம், இன்னும் பல ஆபத்துகளுக்கு நீங்கள் ஆளாக நேரலாம்! அத்தகைய நேரத்தில் நீங்கள் இவரை எதிரிகளின் கரங்களில் ஒப்படைத்துவிடலாம் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் இன்றே இவரை விட்டுவிடுங்கள். ஏனெனில் அவ்வாறு இவரை எதிரிகளிடம் ஒப்படைப்பது – இறைவன் மீதாணையாக, இந்த உலகிலும் மறுமையிலும் உங்களை இழிவுபடுத்திடும். நீங்கள் இவர்களுக்கு விடுக்கும் அழைப்பையும் அளிக்கும் வாக்குறுதிகயையும் உங்கள் செல்வங்கள் அழிந்து போனாலும், தலைவர்கள் கொல்லப்பட்டாலும், நிறைவேற்றியே தீருவோம் என்ற உறுதி உங்களிடமிருந்தால் அவசியம் இவரது கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இறைவன் மீதாணையாக, இந்த உறுதியே இம்மை, மறுமை இரண்டிலும் நன்மை பயக்கக்கூடியதாகும்.’

இந்தச் சந்தர்ப்பதில் மதீனாவில் இருந்துவந்த அந்தக் குழுவினர் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இவ்வாறு கூறினார்கள்:

எங்கள் செல்வங்களுக்கும், எங்கள் தலைவர்களின் உயிர்களுக்கும் எத்தகைய பேரபாயம் ஏற்பட்டாலும் சரி நாங்கள் இறுதிவரை இவருக்குத் துணையிருப்போம்!’

மதீனாவாசிகளின் இந்த வாக்குறுதியைப் பரிசோதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

குறைஷிகளுக்கு ஆபத்து

அண்ணலாரும் முஸ்லிம்களும் மதீனா நகருக்குக் குடிபெயர்ந்து சென்றதன் பொருள், இஸ்லாத்திற்கு இனி ஓர் உறைவிடம் கிடைத்துவிட்டது என்பதாகவே இருந்தது. எந்த முஸ்லிம்களின் வாய்மையும், பொறுமையும் நிலைகுலையாப் பண்பும் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு வந்ததோ அவர்கள் ஒரு கட்டுக்கோப்பான குழுவாக உருப்பெற்று விட்டிருந்தார்கள். குறைஷிகளுக்கு இது ஒரு பேராபத்தாகத் தென்பட்டது. இஸ்லாமியக்குழு இவ்விதம் கட்டுக்கோப்பாக அணிதிரண்டு விடுவது உண்மையில் அவர்களுடைய அஞ்ஞான அடிப்படையிலான வாழ்க்கையமைப்புக்கு அடிக்கப்படும் சாவுமணியாக இருந்தது.

இதுவன்றி அவர்கள் நிம்மதியாக இருக்க விடாமல் தவிப்பிலாழ்த்திக் கொண்டிருந்த இன்னோர் ஆபத்தும் இருந்தது. மக்காவாசிகளின் பொருளாதாரம் பெருமளவு யமன் மற்றும் சிரியா நாடுகளில் சென்று, அவர்கள் செய்துவந்த வாணிபத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. சிரியா நாட்டு வாணிபத்திற்காக செங்கடலின் ஓரத்தில் அவர்கள் பயணம் செய்த பாதையில் தான் மதீனா நகரம் அமைந்திருந்தது. மதீனாவில் உருவாகிவரும் இந்த முஸ்லிம்களின் சமூக அமைப்பு வலிமை பெற்றால் குறைஷிகளின் வாணிபம், முஸ்லிம்களுடன் நல்லுறவு வைத்திருப்பதைப் பொறுத்துதான் இருக்கும் என்ற சூழ்நிலை உருவாகியது. இச்சூழ்நிலை இரு பெரும் வினாக்களை குறைஷிகள் முன் எழுப்பியது. ஒன்று முஸ்லிம்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்வதா? அல்லது மதீனாவில் உருவாகிவரும் இந்தச் சக்தியை அது வேரூன்றி நிற்பதற்கு முன்பு நசுக்கிவிட்டு தம் வாணிபப் பாதையைப் பாதுகாப்பதா எனும் கேள்விகளே அவை.

இதனால்தான் ஹிஜ்ரத்திற்கு முன்பே குறைஷிகள் எவ்விதத்திலாவது முஸ்லிம்களை மதீனா நகரில் ஒன்று சேர விடக்கூடாது என்று முழு முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடைய உபயாங்கள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டதால், தலையெடுத்துவரும் இந்த அபாயத்தை எப்படியாயினும் நிரந்தரமாக ஒடுக்கிவிடத்தான் வேண்டும் என்னும் முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.

குறைஷிகளின் சதித்திட்டம்

அப்துல்லாஹ் பின் உபை மதீனாவாசிகளின் தலைவர்களில் ஒருவராவார். ஹிஜ்ரத்திற்கு முன்பு மதீனா வாசிகள் அவரைத் தமது அரசனாக நியமிப்பதற்காக ஆயத்தங்கள் செய்து விட்டிருந்தார்கள். ஆனால் மதீனா வாசிகள் இஸ்லாத்தைத் தழுவிடத் தொடங்கியதும். மக்காவிலிருந்து முஸ்லிம்களும் அண்ணலாரும் மதீனா நகருக்கு வருகை தந்தபொழுது இந்தத் திட்டம் கை விடப்பட்டது. அப்துல்லாஹ் பின் உபையின் ஆசைக்கனவுகளில், மனக்கோட்டைகளில் மண் விழந்துவிட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் மக்காவாசிகள் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதன் விவரம் வருமாறு:

‘நீங்கள் எங்கள நகரத்தைச் சார்ந்த ஒருவருக்குத் தஞ்சம் அளித்திருக்கின்றீர்கள். இறைவன் மீதாணையாகச் சொல்கின்றோம்: ஒன்று நீங்கள் அவருடன் போரிடுங்கள் அல்லது அவரை உங்கள் நகரிலிருந்து வெளியேற்றி விடுங்கள்! இல்லையெனில் நாங்கள் உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். உங்கள் ஆண்களைக் கொன்று விட்டு உங்கள் பெண்களை அடிமைகளாக்கிக் கொள்வோம்’

இந்தக் கடிதம் அப்துல்லாஹ் பின் உபையின் சரிந்துவிட்ட மனக்கோட்டைகளைத் தூக்கி நிறுத்திடும் ஊன்றுகோலாக விளங்கியது. அவனது தீய எண்ணத்தைப் புரிந்து கொண்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் உடனடியாக இந்தத் தீங்கைத் தடுத்து நிறுத்துவதற்காக முயற்சித்தார்கள். ‘நீர் உமது சொந்தப் புதல்வர்களையும் சகோதரர்களையும் எதிர்த்தா போரிடுவீர்?’ என்று அப்துல்லாஹ் பின் உபைக்கு விளங்கும் வகையில் அறிவுறுத்தினார்கள். அன்சார்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாகி விட்டிருக்கவே அப்துல்லாஹ் பின் உபை வேறு வழியின்றி தன் தீய எண்ணங்களை செயல்படுத்தாமல் விலகி ஒதுங்கியிருந்தார்.

இந்தக் காலகட்டதில்தான், மதீனா நகர மக்களின் தலைவர் சஅத்பின் முஆத் அவர்கள் உம்ராவை நிறைவேற்றுவதற்காக மக்கா நகரம் சென்றார்கள். இறையில்லத்தின் வாயிலில் அபூஜஹ்லைச் சந்தித்தார். அபூஜஹ்ல் அவரை நோக்கி, ‘நீங்கள் நமது மார்க்கத்தைக் கைவிட்டு வேறு மார்க்கத்திற்குச் சென்றுவிட்ட துரோகிகளுக்கு (முஸ்லிம்களுக்கு) தஞ்சம் அளிப்பீர், நாங்கள் மட்டும் உம்மை நிம்மதியாக தவாஃப் செய்ய (கஅபாவை வலம் வர) விட வேண்டுமா? நீர் மட்டும் உமய்யாபின் கலஃபின் விருந்தினராக இல்லாதிருந்தால் இங்கிருந்து உயிரோடு திரும்பிச் செல்ல முடிந்திருக்காது!’ என்று காட்டமாகக் கூறினான். இதனைச் செவியுற்ற சஅத் பினவருமாறு கூறினார்.

‘இறைவன் மீதாணையாக! நீர் என்னை இதிலிருந்து தடுத்தால், இதனைவிட உங்களுக்குக் கடுமையான இன்னோர் விஷயத்திலிருந்து உங்களை நாங்கள் தடுத்துவிடுவோம். அதாவது மதீனா வழியாக நீங்கள் வாணிப் பயணம் செல்லும் பாதையை நாங்கள் அடைத்து விடவோம்.’

சஅத்தின் இந்த எச்சரிக்கை குறைஷிகள் குறும்பேதும் புரிந்தால், துனபமேதும் விளைவித்தால் மதீனாவையொட்டிச் செல்கின்ற தமது வாணிபப் பாதை தமக்கு அடைக்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரகடனப்படுத்துவது போலிருந்தது!

குறைஷிகள் மீது நிர்ப்பந்தத்தையும் பிரயோகித்தல்

இந்த நேரத்தில் முஸ்லிம்களையும் இஸ்லாமிய இயக்கத்தையும் அழித்திட குறைஷிகள் தீட்டிக் கொண்டிருந்த திட்டங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது குறைஷிகளைத் தாழ்ந்தவர்களாகக் காட்டிடவும் அவர்களை நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கிடவும், அவர்களுடைய இந்த வாணிபப் பாதையைக் கைப்பற்றிக் கொண்டு சிரியா தேசம் செல்வதற்கான பாதையை அவர்களுக்கு அடைத்து விடுவதை விடச் சிறந்த உபாயமேதும் முஸ்லிம்களின் முன்னே இருக்கவில்லை. இந்த நிர்ப்பந்தம் ஒன்றுதான் மக்காவாசிகளை இயலாதவர்களாக்க வல்லதாயிருந்தது.

ஆகவே, முன்பே கூறியதைப்போல் அண்ணலார் (ஸல்) இந்தப் பாதைக்கு வெகு அருகே வசித்துக் கொண்டிருந்த யூதக் குலங்களுடன் பலவகையான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு அமைதி ஏற்படுத்திக் கொண்டார்கள். பின்னர் வாணிபக் கூட்டங்களை அச்சுறுத்திடவும் மிரட்டிடவும். சிறு சிறு அதிரடிக் குழுக்களை அனுப்பலானார்கள். இந்த அதிரடிக் குழுக்களின் வாயிலாக போர் ஏதும் நிகழவில்லை. எந்த வாணிபக் குழுவும் எப்போதும் கொள்ளையடிக்கப்படவில்லை, என்றாலும் இவற்றை அனுப்பி குறைஷிகளுக்கு இனி அவர்கள் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்று நன்கு உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் எனும் எச்சரிக்கை விடுவதாக அமைந்தது. முஸ்லிம்களுக்குத் துன்பங்களைத் தந்தால் குறைஷிகளும் தமது வாணிபத்தைக் கைகழுவ வேண்டியிருக்கும் என்றும் தெளிவாக உணர்த்தப்பட்டு விட்டது!

ஹள்ரமீ குலத்தவன் கொல்லப்படல்

இதற்கிடையே குறைஷிகள் எத்தகைய திட்டங்களைத் தீட்டிக் கொணடிருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்த வண்ணமிருக்க வேண்டும் என்பதற்காக அண்ணலார் (ஸல்) மக்கா நகர நிலைமைகளைத் தொடர்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஹிஜ்ரீ 2ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் பன்னிரண்டு பேர் கொண்ட ஒரு குழுவை பத்னெ நக்லா என்னுமிடத்திற்கு அனுப்பினார்கள். இந்த இடம் மக்கா நகருக்கும் தாயிப் நகருக்கும் இடையே அமைந்துள்ளது. அண்ணலார் (ஸல்) அப்துல்லாஹ் அவர்களிடம் ஒரு கடிதத்தைத் தந்து ‘இரண்டு நாட்களுக்குப் பிறகு இதனைத் திறக்க வேண்டும்’ என்று கூறினார்கள். அப்துல்லாஹ் அவர்கள் அண்ணலாரின் கட்டளைப்படி இரண்டு நாட்களுக்குப்பின் கடிதத்தைத் திறந்து பார்த்தார்கள்.

அதில் ‘நக்லா என்னுமிடத்தில் தங்கியிருந்து குறைஷிகளின் நிலைகளை வேவு பார்த்து அறிவியுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. தற்செயலாக அப்போது அந்த வழியாக குறைஷிகளின் ஆட்கள் சிலர் சிரியா தேசத்திலிருந்து வாணிபப் பொருட்களை எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்துல்லாஹ் அக்குழுவினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அவ்வாணிபக் குழுவினரில் உமர்பின் ஹள்ரமீ என்பவர் கொல்லப்பட்டார். இருவர் கைது செய்யப்பட்டார்கள். எதிரிகளின் பொருள்கள் கைப்பற்றப்பட்ட பொருளை அண்ணலாரிடம் சமர்ப்பித்த போது அண்ணலார் (ஸல்) மிகுந்த அதிருப்தியையும் கோபத்தையையும் வெளிக்காட்டினார்கள். ‘நான் உங்களுக்கு (தாக்குதல் நடத்தி எதிரிகளின் பொருள்களைக் கொணரும்படி) அனுமதியளிக்கவில்லையே?’ என்று கூறி அந்தப் பொருட்களை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கொல்லப்பட்டவரும் கைது செய்யப்பட்ட இருவரும் மிக கண்ணியம் பெற்றிருந்த உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். இந்த நிகழ்ச்சி குறைஷிகளைப் பெரிதும் கொதிப்பிலாழ்த்தியது. மதீனா நகர் மீது தாம் நடத்த இருக்கும் தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்க இது ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

பத்ருப்போர்

இத்தகைய சூழ்நிலையில் ஹிஜ்ரி இரண்டாமாண்டு ஷஅபான் மாதம் (கி.பி 623 ஆம் ஆண்டு பிப்ரவரி, அல்லது மார்ச் மாதம்) குறைஷிகளின் பெரும் வாணிபக் குழு ஒன்று தன்னுடன் ஐம்பதாயிரம் பொற்காசுகள் விலை மதிப்புள்ள சரக்குகளை எடுத்துக் கொண்டு சிரியா தேசத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்குள்ளிருந்த பகுதிக்கு அருகே அது வந்தது. அந்த வாணிபக் கூட்டத்துடன் முப்பது நாற்பது காவலர்களே இருந்தனர். பின்னால் முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தி விடுவார்களோ என்னும் அச்சமிருந்தது.

இந்த வாணிபக் குழுவிற்கு அபூசுஃப்யான் தலைவராக இருந்தார். அவர் இந்த ஆபத்தையுணர்ந்து மக்காவிற்கு ஒரு ஆளை அனுப்பி அங்கிருந்து உதவி பெற்று வரும்படி ஆணையிட்டார். அவன் மக்கா நகரம் சென்று ‘நமது வாணிபக் குழுவை முஸ்லிம்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள், எனவே நம் குழுவின் உதவிக்காக விரைந்து செல்லுங்கள்’ என்று உரக்கக் கூவி அறிவித்து விட்டான்.

வாணிபக் குழுவிடம் இருந்த சரக்குகளில் பலருடைய பங்கும் இருந்தது. பின்னர் இது ஒரு தேசியப் பிரச்சனையாகவும் இனப் பிரச்சனையாகவும் ஆகிவிட்டது. எனவே குறைஷிகளின் பெரும் தலைவர்கள் போருக்குத் தயாரானவர்கள். உத்வேகமிக்க கோபாவேசம் கொண்ட ஓராயிரம் இளைஞர்களின் படையை அவர்கள் திரட்டினார்கள். இந்த அன்றாடத் தலைவலிக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டனர். இந்த பெரும் படையை வழி நடத்திக்கொண்டு பலத்த ஆவேசத்துடனும் ஆராவாரத்துடனும் மக்காவிலிருந்து மதீனா நோக்கி அவர்கள் புறப்பட்டனர்.

ஒருபுறம் வியாபாரச் சரக்குகளை காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, மற்றொரு புறம் பழைய பகைமை மற்றும் மாச்சரியத்தினால் விளைந்த ஆவேசம் ஆக இவர்கள் வெறியின் உச்சத்திலும் மமதையோடும் ஆணவத்தோடும் மதீனாவின் மீது படையெடுத்தனர்.

குறைஷிகளின் படையெடுப்புகள்

 இங்கு அண்ணலாருக்கும் இந்த நிலைமைகளைப் பற்றிய தகவல்கள் கிடைத்த வண்ணமிருந்தன. இப்போது குறைஷிகளுக்குத் தமது எண்ணத்தில் வெற்றி கிட்டிவிட்டால், அவர்கள் முஸ்லிம்களின் இந்தப் புதிய குழுவை வீழ்த்திக் காட்டிவிட்டார்கள் என்றால், இஸ்லாமிய இயக்கம் வேர் பிடிப்பதும் ஓங்குவதும் மிகவும் கடினமானதாகிவிடும். மேலும் இஸ்லாத்தின் குரல் என்றைக்கும் எழாமல் ஒடுக்கப்பட்டுவிடும். இத்தகைய ஓர் அபாயம் உருவாகிவிட்டதை அண்ணலார் (ஸல்) உணர்ந்தார்கள்.

மதீனா நகருக்கு வருகை தந்து இன்னும் இரண்டு ஆணடுகள்கூட முடிந்திருக்கவில்லை. முஹாஜிர்கள் தமது செல்வங்கள் அனைத்தையும் மக்கா நகரில் விட்டு வெறுங்கையினராய் வந்திருந்தார்கள். அன்சார்கள் போர் விவகாரங்களில் அனுபவமற்றவர்களாய் இருந்தார்கள். யூதர்களிலும் பல குலத்தினர் முஸ்லிம்களை எதிர்த்துப் போராடத் தயாராயிருந்தனர். மதீனாவிலியே நயவஞ்சகர்களும் இணைவைப்போரும் வசித்து வந்தது பெரியதொரு பிரச்சனையாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் குறைஷிகள் மதீனாவின் மீது படையெடுத்து வந்தால் முஸ்லிம்களின் சின்னஞ்சிறு குழு அழிந்து போய் விடவும் கூடும் என்னும் அச்சமிருந்தது. குறைஷிகள் தாக்குதல் நடத்தாவிட்டாலும் தமது வலிமையினால் வாணிபக் குழுவைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டால் வருங்காலத்தில் முஸ்லிம்களின் மதிப்பச்சம் வீழ்ச்சி அடைய நேரிடும். பிறகு அண்டைக் குலத்தார் குறைஷிகளின் சமிக்ஞைகளுக்கேற்ப முஸ்லிம்களுக்குத் தொல்லைதரவும் முஸ்லிம்களை ஒடுக்கிடும் முயற்சிகளில் ஈடுபடவும் தயங்க மாட்டார்கள் என்ற அபாயமும் ஏற்பட்டிருந்தது.

மேலும் இங்கு மதீனா நகரில் வாழந்த யூதர்கள், நயவஞ்சகர்கள், இணைவைப்பாளர்கள் ஆகியோர் கிளர்ச்சி செய்து முஸ்லிம்களை அமைதியாக வாழவிடமாட்டர்கள் என்ற அபாயமும் இருந்தது.

ஆகவேதான் அண்ணலார் (ஸல்) இப்போது நமக்கிருக்கும் சக்தியை வைத்துக் கொண்டு களத்தில் குதித்திட வேண்டும். வாழும் உரிமை யாருக்கிருக்கிறது? யாருக்கு இல்லை என்று தீர்ப்பாகி விடட்டும் என்று முடிவு செய்தார்கள்.

முஸ்லிம்கள் ஆயத்தமாகுதல்

இந்த முடிவை எடுத்த பின்னர் அண்ணலார் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் ஒன்று திரட்டினார்கள். நிலைமையை அவர்கள் முன் தெளிவாக எடுத்து வைத்தார்கள. ஒருபுறம் மதீனாவிற்கு வடக்கே வாணிபக் குழு வந்து கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் தெற்கே குறைஷிகளின் படை விரைந்து வந்த வண்ணமிருக்கிறது, இவ்விரு குழுவினரில் ஏதாவது ஒன்றின் மீது உங்களை வெற்றி பெறச் செய்வதாக இறைவன் வாக்கிளித்திருக்கினறான். இந்த விவரங்களை விரிவாகவும் தெளிவாகவும் உரைத்த பின் அண்ணலார் (ஸல்) அவர்கள் வினவினார்கள்: ‘எந்தக் குழுவை எதிர்த்து நாம் படை கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?’

இதற்கு பதிலளிக்கையில் நபித்தோழர்கள் பலர் ‘வாணிபக் குழுவைத் தாக்கிட வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அண்ணலாரின் நோக்கமோ வேறொன்றாக இருந்தது. எனவே மீண்டும் தமது வினாவை தோழர்களை நோக்கி விடுத்தார்கள்.

இதனைக் கேட்டு முஹாஜிர்களில் ஒரு தோழர், மக்தார் பின் கம்ரு (ரலி) என்பவர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு உங்கள் இறைவன் எதன்பால் செல்லும்படி உத்திரவிடுகின்றானோ அந்த திசையில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் ஒத்தழைப்போம், நாங்கள் பனீ இஸ்ராயீல்களைப் போல் ‘நீரும் உம் இறைவனும் சென்று போரிடுங்கள், நாங்கள் இங்கு உட்கார்ந்திருக்கிறோம்.’ என்று கூறக் கூடியவர்கள் அல்லர்’ என்று கூறினார்.

ஆனால் இந்தப் பிரச்சனையில் இறுதி முடிவு எடுத்திடும் முன்பு அன்சார்களின் கருத்தை அறிவது அவசியமானதாயிருந்தது. ஆகவே அண்ணலார் (ஸல்) அன்சார்களை நேரடியாக முன்னிலைப்படுத்தி தமது கேள்வியை மீண்டும் கேட்டார்கள். இதனைச் செவியுற்று சஅத்பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து பினவரும் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார்கள:

‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். உங்களை உண்மையானவர்கள், இறைத்தூதர் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம். தாங்கள் கொண்டு வந்திருப்பவை அனைத்தும் சத்தியமானவை என சான்று பகர்ந்து விட்டிருக்கிறோம். தாங்களுக்குக் கீழ்ப்படிவதாக உறுதியான பிரமாணம் செய்து கொண்டுள்ளோம்.

எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எண்ணியிருப்பதைச் செய்து விடுங்கள். தங்களை சத்தியமார்க்கத்துடன் அனுப்பி வைத்திருக்கும். அந்த இறைவன் மீதாணையாக, தாங்கள் எங்களை கடலுக்கு அழைத்துச் சென்று அதில் குதித்திடச் சொன்னாலும் நாங்கள் உஙகளுடன் ஒத்துழைப்போம், எங்களில் ஒரே ஒருவர் கூட பின் தங்கிட மாட்டார். நாங்கள் போரில் உறுதியுடன் நிலைகுலையாமல் நிற்போம். எதிரிகளுடன் மோதும் போது உண்மையான அர்ப்பணிப்பையும் தியாகப்பண்பையும் வெளிப்படுத்துவோம். எங்களிடமிருந்து உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி தரும் தியாக உணர்வை, ஈமானிய வலிவை இறைவன் தங்களுக்குக் காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை. எனவே அல்லாஹ்வின் அருள் வளத்தை நம்பி தாங்கள் எங்களை அழைத்துச் செல்லுங்கள்’.

இந்த உரைகளுக்குப்பின், ‘வாணிபக் கூட்டத்திற்கு பதில்’ படையைச் சந்திப்பதற்கே செல்ல வேண்டும்’ என்று முடிவாயிற்று. ஆனால் இந்த முடிவு சாதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. முஸ்லிம்களின் குழு குறைஷிகளுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக பல வீனமானதாக இருந்தது.

போரிடுவதற்குத் தகுதியுடையவர்களின் எண்ணக்கை முன்னூறு பேரைவிட சற்றே அதிகமாக இருந்தது. அவர்களில் இரண்டு மூன்று பேரிடம்தான் குதிரைகள் இருந்தன. ஒட்டகங்களும் எழுபதுக்கு மேல் இருக்கவில்லை. போர்த்தளவாடங்களும் போதுமானவையாய் இருக்கவில்லை. அறுபது பேரிடம் மட்டுமே இரும்புக் கவசங்கள் இருந்தன. எனவேதான் முஸ்லிம்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் உள்ளுக்குள் அஞ்சிக் கொண்டிருந்தனர். அறிந்தும் புரிந்தும் மரணத்தின் வாயினுள் சென்று கொண்டிருப்பது போல் அவர்கள் உணர்ந்தார்கள். 8ஆவது அத்தியாயமான அன்ஃபாலிலுள்ள பின்வரும் வசனங்கள் இந்தச் சித்திரத்தையே சமர்ப்பிக்கின்றன.

‘சத்தியத்திற்காகப் போரிட உம்மை உமது வீட்டிலிருந்து உம்முடைய இறைவன் வெளிக் கொண்ர்ந்தான். அப்போது இறை நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினர் அதனை விரும்பவில்லை. இதேபோன்ற ஒரு நிலைமை தான் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்;பட்ட பொருள்களின் விஷயத்திலும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் சத்தியம் தெளிவாகிவிட்ட பின்னர் அது குறித்து உம்மிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய நிலைமை, கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தின் பக்கமாக இழுத்துச் செல்லப்படுவது போன்று இருந்தது.’

மேலும் இதனையும் நினைத்துப் பாருங்கள்: ‘இரு கூட்டத்தாரில் ஒரு கூட்டம் நிச்சயம் உங்கள் கைக்கு கிடைத்து விடுவர்’ என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான். ஆனால் நீங்கள் நிராயுதபாணிகளான கூட்டத்தினர் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினீர்கள். ஆயினும் அல்லாஹ் தன் வாக்குகளால் சத்தியத்தை மேலோங்கச் செய்யவும், நிராகரிப்பாளர்களை முழுவதுமாக வேரறுக்கவும் நாடுகின்றான். எதற்காகவெனில், சத்தியத்தை சத்தியமென நிரூபித்து அசத்தியத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக! குற்றவாளிகள் இதனை முற்றிலும் வெறுத்தாலும் சரியே! (8 : 5-8)

மதீனாவிலிருந்து முஸ்லிம்கள் புறப்படுதல்

படைபலமோ, ஆயுதபலமோ, மற்ற வசதிகளோ ஏதும் அற்ற இந்த நிலையிலும் ஹிஜ்ரீ 2-ஆம் ஆண்டு ரமளான் மாதம் 12-ஆம் நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து ஏறத்தாழ 300 முஸ்லிம்களை தம்முடன் அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள், குறைஷிகளின் சேனை வந்து கொண்டிருந்த தென் மேற்கு திசையை நோக்கி பயணமானார்கள், ரமளான் மாதம் 16-ம் நாள் பத்ரு என்னுமிடத்திற்கு அருகே வந்து சேர்ந்தார்கள். பத்ரு என்னுமிடத்திற்கு அருகே வந்து சேர்ந்தார்கள். பத்ரு என்பது மதீனா முனவ்வராவுக்கு தென் மேற்கே ஏறத்தாழ 80 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஓர் ஊரின் பெயராகும். இங்கு சென்று சேர்ந்தபொழுது குறைஷிகளின் சேனை பத்ருப் பள்ளத்தாக்கின் அடுத்த முனைக்கு வந்து சேர்ந்து விட்டது என்று தெரியவந்தது. எனவே அண்ணலாரின் கட்டளைப்படி இங்கேயே முகாமிடப்பட்டது.

இனி, இங்கு குறைஷிகளின் நிலையைக் கேளுங்கள். இவர்கள் நிறைய வசதிகளுடன் புறப்பட்டார்கள். ஓராயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்கள் இருந்தனர். ஏறத்தாழ நூறு தலைவர்கள் பங்கு பெற்றிருந்தனர். படைவீரர்களின் உணவுக்கு மிக நல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்பாபின் ரபீஆ படையின் தளபதியாக இருந்தார்.

இந்தப் படை பத்ருக்கு அருகே வந்தது. தாம் நினைத்ததுபோல் வாணிபக் கூட்டம். முஸ்லிம்களின் இலக்கு அல்ல என்பது குறைஷிகளுக்கு தெரிந்துவிட்டது. எனவே ஸஹ்ரா மற்றும் அதீ ஆகிய குலங்களின் தலைவர்கள், ‘இனி போரிடத் தேவையில்லை’ என்று கூறினார்கள். ஆனால் அபூஜஹ்ல் ஒப்புக் கொள்ளவில்லை. ஸஹ்ரா குலத்தினரும், ஆதீ குலத்தினரும், இந்தக் காரணத்தால்தான் போரில் கலந்து கொள்ளமல் திரும்பிச் சென்று விட்டார்கள். மீதமிருந்தபடை முன்னேறலாயிற்று.

போர்க்களம்

போர்க்களத்தில் குறைஷிகள் வசத்தில் இருந்த இடம் அந்தச் சந்தர்ப்பத்தைப் பொறுத்தவரை சிறந்த இடமாக இருந்தது. தரை உறுதியாக இருந்தது. ஆனால் முஸ்லிம்கள் இருந்த இடமோ மண்ணில் கால்கள் அழுந்தி விடும் அளவிற்கு இளகலாக இருந்தது. இரவு சிப்பாய்கள் அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். ஆனால் அண்ணலார் (ஸல்) அவர்கள் இரவு முழுவதும் இறைவனிடம் பிரார்த்தனை புரிவதில் ஈடுபட்டிருந்தார்கள். ரமளான் மாதம் 17-ம் நாள் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘ஜிஹாத்’ (இறைவழியில் போரிடுதல்) குறித்து உரையாற்றினார்கள். போர் விதிகளுக்கேற்ப படையணிகளைச் சீர்படுத்தி ஒழுங்குற அமைத்தார்கள். நோன்பு அந்த ஆண்டில் தான் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் முஸ்லிம்களோ முதல் ரமளானிலேயே தம்மைவிட மும்மடங்கு பெரியதான ஒரு படையை எதிர்த்துப் போரிடத் தயாராக வேண்டியிருந்தது. இது வியப்புக்குரிய சோதனையாக விளங்கிற்று! இதே இரவில் வல்ல இறைவனின் தனிப்பெருங் கருணையை வெளிப்படுத்தும் இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஒன்று முஸ்லிம்களுக்கு நிம்மதியுடன் உறக்கம் வந்தது. அவர்கள் காலையில் புத்துணர்வு பெற்றெழுந்தனர். இரண்டாவது, அன்றிரவே மழை பொழிந்தது. மழை பெய்துவிட்டதால் மணற்பாங்கான நிலப்பகுதி கடினமாகி உறுதிப்பெற்று விட்டது. இவ்விதம் முஸ்லிம்களுக்கு போர்க்களம் சாதகமானதாக மாறிவிட்டது. இதற்கு நேர்மாறாக அதே மழையின் காரணத்தால் குறைஷிகளின் படை இருந்த பகுதியில் சேறும் சகதியுமாகி விட்டது. அவர்களுடைய கால்கள் அழுந்தத் தொடங்கின. இன்னொன்று என்னவெனில், முஸ்லிம்களுக்கு அருகிலிருந்த குளங்களில் தண்ணீரும் நிரம்பிவிட்டது. அதனைப் பயன்படுத்தி அவர்கள் குளித்தார்கள். ஓலுச் செய்தார்கள். சிரம பரிகாரங்கள் செய்து கொண்டார்கள், அவர்களுடைய உள்ளத்திலிருந்து அச்சம், பீதி ஆகியன அகன்று விட்டன. முஸ்லிம்கள் முழு நிம்மதியுடன் பேரிடத் தயாராகி விட்டனர்.

போர் தொடங்குதல்

இரு படைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்ள ஆரம்பித்தபோது, அது வியப்புக்குரிய ஒரு காட்சியாக விளங்கின்று. ஒரு புறம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருந்த – அவனைத்தவிர வேறவரையும் வணங்குவதையும் கீழ்ப்படிவதையும் ஏற்றுக் கொள்ளாத 313 முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் போரிடுவதற்குத் தேவையான தளவாடங்களும் சரிவர இல்லை.

இன்னொருபுறம் ஆயுத தளவாட பலம் நிறைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறைமறுப்பாளர்கள். அவர்களே ஏகத்துவத்தின் இந்தக் குரலை இனி எப்பொழுதுமே தலை தூக்கா வண்ணம் ஒடுக்கிவிட்டுத்தான் ஒய்வோம் என்னும் தீர்மானமான முடிவுடன் வந்திருந்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அண்ணலார் இறைவனின் முன்னால் இரு கரங்களையும் ஏந்தி பெரும் மன்றாட்டத்துடனும் பணிவுடனும் கண்ணீர் சிந்திய வண்ணம் தாழ்ந்த குரலில் ‘இறைவா! உன் திருத்தூதரைப் பொய்யர் என்று நிரூபிப்பதற்காக ஆணவத்தோடும் ஆயுத படை பலத்தோடும் இந்தக் குறைஷிகள் வந்திருக்கின்றார்கள். இறைவா! இனி நீ வாக்களித்திருக்கும் அந்த உதவியை எங்களுக்கு தந்தருள்! இறைவா! இன்று இந்தச் சின்னஞ்சிறு குழு அழிந்துபோய்விட்டால் இந்தப் பூவுலகில் உன்னை வணங்குபவர் உனக்கு கீழ்ப்படிபவர் யாருமே இருக்க மாட்டார்கள்’ என்று இறைஞ்சினார்கள்.

இந்தப் போரில் அனைவரைவிடவும் முஹாஜிர்களுக்கே கடுமையான சோதனை இருந்தது. அவர்கள் தங்கள் சகோதரர்களையும் புதல்வர்களையும் நெருங்கிய உறவினர்களையும் எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது. அவர்களில் ஒருவர் தம் தந்தைக்கெதிராகவும், இன்னொருவர் தன் மகனுக்கொதிராகவும். மற்றொருவர் தம் தாய்மாமனுக்கும், தந்தையின் சகோதரருக்கும் எதிராகவும், தன் சகோதரருக்கொதிராகவும் வாளை ஓங்க வேண்டியிருந்தது. அவர்கள் கரங்களாலேயே தமது இதயக்கனிகளைக் கொய்தெறிய வேண்டிவந்ததது. எவர் உண்மையான உள்ளத்துடன் அல்லாஹ்விடம் பினவரும் உறுதிப் பிரமாணத்தை செய்திருந்தார்களோ அவர்கள்தான் இந்தக் கடினமான சோதனையில் நிலைத்து நிற்கமுடியும்.

எந்த உறவுகளை அல்லாஹ் இணைத்துக் தருகின்றானோ அவற்றுடன் இணைந்து நிற்போம், எந்த உறவுகளை அல்லாஹ் அறுத்தெறியக் கட்டளையிடுகின்றானோ அவற்றை அறுத்தெறிவோம், எந்த உறவுகள் தமக்கு எத்தகைய நேசத்திற்குரியனவாய் இருப்பினும் சரியே!’

இதுதான் அந்த உறுதிப் பிரமாணமாகும். ஆம், இந்தப் பிரமாணத்தைச் செய்தவர்கள்தான் இந்தக் கடுமையான சோதனையில் நிலைத்து நிற்க முடியும்!

ஆனால் அதே நேரத்தில் அன்சார்கள் எதிர் கொண்ட சோதனையும் அதற்கு சற்றும் குறைந்ததல்ல.

இதுவரை அரபு இறைமறுப்பாளர்கள் மற்றும் மக்கா நகர இணைவைப்பாளர்களின் பார்வையில் அவர்களின் ‘குற்றமெல்லாம்’ அவர்கள் தமது பகைவர்களான முஸ்லிம்களுக்குத் தஞ்சம் அளித்தார்கள் எனபதாக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போதே அவர்கள் வெளிப்படையான இஸ்லாத்திற்கு உதவும் வகையில் இறைமறுப்பாளர்களுடன் போரிடுவதற்காகப் புறப்பட்டிருந்தார்கள். இதன் பொருள் அவர்கள் தமது நகரமான மதீனாவிற்கொதிராக அரபுலம் முழுவதின் பகைமையையும் விலைக்கு வாங்கிக் கொண்டார்கள் என்பதாகவே இருந்தது. ஆனால் மதீனா நகரின் மக்கள் தொகை ஓராயிரத்துக் மேல் இருக்கவில்லை.

எவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் அன்பும் அவனது தூதரின் அன்பும், மேலும் மறுமையின் மீது அழுத்தமான் நம்பிக்கையும் குடியேறி முழுமையாகப் பதிந்து விட்டிருக்குமோ அவர்கள்தான் இதற்குத் துணிந்திருக்க முடியும். இல்லையெனில் இவ்விதம் தமது உடமைகள், செல்வங்கள், சொத்துக்கள், தமது மனைவி மக்கள் அனைவரையும் எவர்தான் அரபுலம் முழுவதின் பகைமை நெருப்பிலே தள்ளிட முடியும்?

குறைஷிகளின் தோல்வி

இறைநம்பிக்கையின் இந்தப் படித்தரத்தை அடைந்த பின்னர்தான் அல்லாஹ்வின் உதவி வருகின்றது. அவசியம் வந்தே தீருகின்றது. எனவே தான் பத்ருப் போர்க்களத்திலும், அல்லாஹ் இந்த பலவீனர்களான 313 முஸ்லிம்களுக்கு உதவி புரிந்தான். முஸ்லிம்களைவிட ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களைக் கொண்ட படையைப் படுதோல்வியடையச் செய்தான். குறைஷிகளின் வலிமை முற்றிலும் முறிந்து போனது போன்ற தோல்வியொன்று கிட்டியது. இந்தப் போரில் குறைஷிகளில் ஏறத்தாழ 70 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஏறத்தாழ குறைஷிகளின் பெரும் பெரும் தலைவர்கள் அனைவருமே அழிந்து போயினர். அந்தத் தலைவர்களில் ஷைபா, உத்பா, அபூஜஹ்ல், ஸம்ஆ, அஸ், உமய்யா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்தத் தலைவர்களின் மரணம், குறைஷிகளின் வலிமையை பெருமளவு ஒடுக்கிவிட்டது. முஸ்லிம்களில், ஆறு முஹாஜிர்களும், எட்டு அன்சார்களும் ஷஹீத் எனும் வீரமரணம் எய்தினர்.

சிறைப்படிக்கப்பட்ட போர்க் கைதிகள், நபித்தோழர்களிடையே இரண்டிரண்டு போராகவும் நான்கு நான்கு போராகவும் பங்கிடப்பட்டு விட்டனர். அவர்களிடம் நல்ல விதமான நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்ட்டு விட்டது. எனவே அக்கைதிகளை எந்த அளவிற்கு நலமாகப் பராமரித்தனர் என்றால், பல சந்தர்ப்பங்களில் தாமே சிரமம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு துனபமேதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இந்த உயர்ந்த பண்பும் நன்னடத்தையும் அந்தப் போர்க் கைதிகளான மக்காவாசிகளை இஸ்லாத்தைப் பற்றிய நல்லெண்;ணம் கொள்ளும்படிச் செய்து விட்டது. இதுதான் இஸ்லாமிய இயக்கத்தின் மாபெரும் வெற்றியாகத் திகழ்ந்தது. பின்னர் அந்தக் கைதிகளில் பலர் பணயத் தொகை கொடுத்து விடுதலையாகிவிட்டனர். விறியவர்களாயிருந்து எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் பத்து முஸ்லிம் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தந்திட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பத்ருப் போரின் விளைவுகளும் பாதிப்புகளும்

________________________________________

பத்ருப் போர், அதன் விளைவுகளையும் பாதிப்புகளையும் பொறுத்து மிக முக்கியமானதாயிருந்தது. இந்தப் போர் உண்மையில் இஸ்லாத்தின் அழைப்பை ஏற்க மறுத்து விட்டதற்காக மக்கா நகர இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாக விதிக்கப்பட்டு விட்டிருந்த இறை வேதனையின் முதல் தவணையாகவே விளங்கிற்று. இந்தப் போர் இஸ்லாம், இறைமறுப்பு இந்த இரண்டில் வாழும் உரிமை எதற்குண்டு என்பதையும் இனி வருங்கால நிலைமைகள் இவ்விரண்டிற்கும் இடையில் எதற்குச் சாதகமாக இருக்கும் என்பதையும் காட்டிவிட்டது.

இந்தக் கண்ணோட்டதில் இஸ்லாமிய வரலாற்றின் இந்த முதல் போராட்டம் மகத்தான போராட்டமாகக் கருதப்படுகின்றது. திருக்குர்ஆனின் 8 ஆவது அத்தியாயமான அல்அன்ஃபாவில் இந்தப் போரைக் குறித்து விவரமான விமர்சனம் மன்னன் அல்லது ஒரு போர்த் தளபதி ஒரு போரில் வெற்றியடைந்தபின் பொதுவாகச் செய்கின்ற விமர்சனங்களிலிருந்து வேறுபட்டு விளங்குகின்றது.

இந்த விமர்சனத்தின் சிறப்பியல்புகளை அறிய அவற்றை சற்று விரிவாகப் பார்ப்பது அவசியமாகும். அவ்வாறு விரிவாக ஆராய்வோமாயின் இஸ்லாமிய இயக்கத்தின் சுபாவத்தையும் இயல்பையும் முஸ்லிம்களின் பயிற்சிக்கான திட்டத்தையும் தெளிவாய்க் காண இயலும்.

பத்ருப் போர் குறித்த விமர்சனமும் இறை நம்பிக்கையாளர்களுக்கான பயிற்சியும்

நான் முன்பே கூறியதைப்போல் இஸ்லாத்திற்கு முந்தைய காலங்களில் போர் புரிவது அரபுகளுக்கு மிக விருப்பமான ஒரு செயலாக இருந்தது. போரில் கிடைத்து வந்த பொருட்களை அவர்கள் மிகவும் விரும்பினர். பல நேரங்களில் போர்ப் பொருட்களின்மீதிருந்த இந்த பெருவிருப்பதின் காரணமாகவே போர்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் போரின் குறிக்கோள் செல்வம் குவிப்பதிலிருந்து மாறுபட்ட மிக உயர்ந்த ஒன்றாயிருந்தது. அந்த உயர்ந்த குறிக்கோளை முழுவதுமான உள்ளத்தில் பதித்துவிடுவது மிக அவசியமானதாயிருந்தது.

பத்ருப் போர்தான் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்குமிடையே நடந்த முதல் போராகும். அது மட்டுமல்லாமல் இஸ்லாம் போரைக் குறித்து அறிவுறுத்தியிருந்த கொள்கைகள், ஓழுக்கங்களை முழுமையான முஸ்லிம்கள் கடைபிடிக்கிறார்களா? அல்லது அவர்களின் உள்ளத்தில் போர்களைக் குறித்து இஸ்லாத்திறகு மாற்றமான கருத்துக்கள் கொஞ்ச நஞ்சமாவது இன்னும் எஞ்சியுள்ளதா என்பதை அறிந்து கொள்ளக்கூடிய முதல் சோதனையாகவும் அது அமைந்தது.

1.      பத்ருப் போரில் இறைமறுப்பாளர்களின் பொருளில் எவையெல்லாம் கிட்டடினவோ அவற்றையெல்லாம் தமது பழைய வழக்கப்படி தமது உடமைகளாகவே கருதிக் கொண்டனர். இறைமறுப்பாளர்களைப் பின் தொடர்வதிலும் அண்ணலாரைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் சிறிது கசப்புணர்வு உருவாகத் தொடங்கிற்று.

இதுதான் இஸ்லாமிய இயக்கத்தின் அழைப்பாளர்களுக்குப் பொருத்தமான பயிற்சி அளிப்பதற்குரிய சந்தர்ப்பமாக விளங்கிற்று. எனவே அனைத்திற்கும் முன்னதாக அவர்களுக்கு போரில் கிடைக்கும் பொருள்கள் உண்மையில் போரிட்டதற்கான கூலியல்ல. அதனை நீங்கள் அன்ஃபால் என்று கருதுங்கள். அதாவது எஜமானின் தரப்பிலிருந்து அசல் கூலிக்கு மேலதிகமாக அளிக்கப்படுகின்ற சன்மானமாகவும், வெகுமதியாகவும் கருதுங்கள், அல்லாஹ் மறுமை வாழ்வில் அளித்திடும் நற்கூலியே அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்ததற்கான அசல் கூலியாகும். இங்கு கிடைப்பதெல்லாம் எவருடைய உரிமையுமன்று, மாறாக அல்லாஹ்வின் மேலதிகமான சன்மானமாகும். ஆகவே இந்த சன்மானத்திற்கு உரிமை கொண்டாடும் பிரச்சனையே எழுவதில்லை. இவையனைத்துமே அல்லாஹ்வினுடையவை, அவனது திருத்தூதருடையவை. அவர்கள் விரும்பும் விதத்தில் அதனைப் பங்கிடுவார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது.

எனவே, இதன் பின் பங்கிடுவதற்கான வழிமுறைகளும் வகுத்தளிக்கப்பட்டன. இவ்விதம் போர் விஷயத்தில் மிகப் பெரியதொரு ஒழுக்கச் சீர்திருத்தம் செய்யப்பட்டு விட்டது. ‘ஒரு முஸ்லிம் உலக லாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக எப்போதும் வாளேந்துவதில்லை. மாறாக உலகின் ஒழுக்கச் சீர்குலைவைச் சரிசெய்வதற்காகவும் அல்லாஹ்வின் படைப்பினங்களை மக்களை இறைவனல்லாத பிற சக்திகளுக்கு அடிமைப்பட்டிருப்பதிலிருந்து விடுதலை செய்வதற்காகவும்தான் அவன் வாளேந்துகிறான்.

அதுவும் நிர்ப்பந்தமான நிலையில் எதிர் சக்திகள் அவனது குரலை ஒடுக்குவதற்காக பலத்தைப் பிரயோகிக்க முனைந்து விட்டன. என்பதையும், அழைப்புப் பணியின் வாயிலாக சீர்திருத்தம் செய்வது முடியாது என்றதொரு நிலையை அவர்கள் உருவாக்கும் போதும் தான் தன் பலத்தை அவன் பிரயோகிக்கின்றான். ஒரு முஸ்லிமின் சிந்தனையெல்லாம் அவன் எதற்காக முன் வந்துள்ளானோ அந்த சீர்திருத்தத்தின் மீதே இருக்க வேண்டும். அந்தக் குறிக்கோளை அடைய முயன்றிடும் போது தாமாகவே கிடைக்கின்ற உலக லாபங்களின் மீதிருக்கக் கூடாது.

2.      இஸ்லாமிய அமைப்பில் தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குள்ள முக்கியத்துவம். ஓர் உடலில், உயிருக்குள்ள முக்கியத்துவத்தைப் போன்றது என்று கருதிட வேண்டும். முழுமையான எந்தவித எதிர்ப்பும்காட்டாத, ஆட்சேபணையும் கேளிவியும் எழுப்பாத கீழ்ப்படியும் பண்புக்கு மனித உள்ளங்களை ஆயத்தப் படுத்துவதற்காக அடிக்கடி அறிவுரைகள் அருளப்பட்டன.

ஆகவே, இந்தப் போரின்போதும் அனைத்துக்கும் முன்பாக போரில் கிடைக்கும் பொருட்களின் விஷயத்தில் முழுமையாகக் கிழ்ப்படியும்படி கோரப்பட்டது. இவையனைத்தும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் உரியவை, இது குறித்து அவ்விருவரும் எடுக்கின்ற எந்த முடிவையும் உங்கள் உள்ளங்கள் முழு மனதிருப்தியுடன் ஏற்றுக் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

3.      பொதுவாக இயக்கங்களின் சுபாவம் இதுதான். அதாவது அவை தம்மைப் பினபற்றுவோர் மற்றும் ஊழியர்களின் உள்ளங்களை ஊக்கப்படுத்த அவர்களுடைய சாதனைகளை பெரிதாக எடுத்துரைப்பார்கள். அதனைப் பற்றி பலத்த சர்சைகள் செய்வார்கள். அதன் வாயிலாக பேரையும் புகழையும்; பெற்றிட வேண்டும் என்னும் ஆர்வத்தைக் கிளப்பி ஊழியர்களை தியாகங்கள் புரிந்திடத் தயார்ப் படுத்துவார்கள்.

எனவேதான் பெரும் பெரும் போர்களுக்கும் மோதல்களுக்கும் பிறகு தம்முடைய ஊழியர்களுக்கு அவர்கள் பட்டங்கள், விருதுகள் வழங்குகிறார்கள். பணமுடிப்புகள் வழங்குகிறார்கள். விதவிதமாக அவர்களின் பதவிகளை உயர்த்த ஏற்பாடு செய்கிறார்கள்.

தங்கள் சாதனைக்குரிய சரியான பரிசு பெற்றிருக்கிறோம் என்று ஊழியர்கள் நிம்மதியடைவதற்கும். வரும்காலங்களில் அதிக வீரமும் தியாகமும் வெளிப்படுத்த அவர்களை முனைப்பாக வைக்கவும் இத்தகைய செயல்களில் அத்தலைவர்கள் ஈடுபடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அந்த ஊழியர்களைப் போல செயல்பட்டு அதுபோன்ற அந்தஸ்தையும், கௌரவத்தையும் பெற வேண்டும் என்ற ஆர்வம் மற்றவர்களின் உள்ளத்தில் துளிர்விடவும் இத்தகைய பாராட்டு வகைகளை அவர்கள் செய்கின்றார்கள்.

இஸ்லாமிய இயக்கத்தின் சுபாவமோ இந்த இயக்கங்களின் சுபாவஙகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். 313 முஸ்லிம் வீரர்கள் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிப்படையைப் புறமுதுகிட்டு ஓடச் செய்திருந்தனர். மிகக் குறைந்தளவு ஆயுத வசதிகள் இருந்தபோதிலும் தம்மை விடப் பன்மடங்கு அதிகமான வலிமையுடைய எதிர்ப்படையை வீழ்த்தி விட்டிருந்தனர். இவ்வாறெல்லாம் இருந்தபோதிலும், அவர்களிடம் கூறப்பட்டதை சற்று கவனியுங்கள்.

அவர்கள் இந்த சாதனையை தமது வீரத்தின் உழைப்பின் பலன் என்று எண்ணிவிட வேண்டாம். இது அல்லாஹ்வின் அருளோயாகும். அவனது கருனை மற்றும் அருளின் விளைவால்தான் அவர்கள் தங்கள் எதிரிகளை விரட்டியடிக்க முடிந்தது. அவர்கள் ஒரு போதும் தங்களிடமுள்ள வாய்ப்பு வசதிகள் மீதும் வலிமையின் மீதும் நம்பிக்கை வைக்க கூடாது. மாறாக அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து அவனது அருளை துணையாகக் கொண்டே களத்தில் இறங்குவதுதான் அவர்களின் அசல் வலிமையாகும்.

போர் நடந்து கொண்டிருக்கும்போதே அண்ணலார் (ஸல்) ஒரு கைப்பிடியளவு மணலைத் தமது திருக்கரத்தில் எடுத்து ஷாஹத்துல் உஜுஹ் (முகங்கள் விகாரமடையட்டும்!) என்று கூறியவண்ணம் இறைமறுப்பாளர்களின் பக்கம் அதனை எறிந்தாhகள். அதன் பிறகே முஸ்லிம்கள் ஒரேடியாக இறைமறுப்பாளர்கள் மீது பாய்ந்து தாக்கினார்கள். இறைமறுப்பாளர்கள் வலிமையிழந்தார்கள்.

இது எத்தகைய அசாதாரண நிகழ்ச்சி! மற்ற தலைவர்கள் இந்த நிலையில் இருந்திருப்பார்களேயானால் இது தாம் புரிந்த அசகாய! அற்புதம், அளப்பரியா சாதனை என்று பெருமையடித்துக் கொண்டு இருப்பார்கள். அவரைப் பின்பற்றும் தொண்டர்களோ இந்த நிகழ்ச்சியைத் தவிர விதவிதமான கற்பனைக் கதையைக் கட்டி பிரப்பிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் இங்கே நிலைமை வேறுவிதமாக இருந்தது. அல்லாஹ்வே திருக்குர்ஆனில் முஸ்லிம்களிடம்:

‘நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை, மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான்’ என்று கூறினான்.

பின்னர் அண்ணலாரை நோக்கி:

‘நீர் எறியவில்லை, மாறாக அல்லாஹ்தான் எறிந்தான்’ என்று கூறினான்.

மேலும் :

‘இவையனைத்தும் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை மிகச்சிறந்ததொரு சோதனையில் வெற்றிகரமாகத் தேறிடச் செய்ய வேண்டுமென்பதற்காகவே செய்தான்’ என்று கூறினான். (8 : 17)

உண்மையில் அனைத்துக் காரியங்களின் நிர்வாகமும் அல்லாஹ்வின் கரங்களிலேயே உள்ளன. நடப்பவை அனைத்தும் அவனது கட்டளையின், நாட்டத்தின் படியே நடைபெறுகின்றன.

அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருப்பதும் எந்தநிலையிலும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் முழுக்க முழுக்க பணிந்து வாழ்ந்திடுவதும்தான் இறை நம்பிக்கையாளனின் பணியாகும். இதில்தான் அவர்களுக்கு சோதனை உள்ளது.

4.      இஸ்லாமிய இயக்கத்தில் ‘ஜிஹாத்’ என்பதுதான் இயக்க ஊழியர் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கின்ற இறுதித் தேர்வாகும். இறைமறுப்புக்கும் இஸ்லாத்திற்குமிடையிலான போராட்டம், ஓர் இறை நம்பிக்கையாளன். இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடர்ந்து நடத்திட நிர்ப்பந்தமாக களத்தில் இறங்கியே தீர வேண்டிய கட்டத்தை அடைந்து விடுவானேயானால், களத்திலிருந்து திரும்பிச் செல்வது அவனால் முடியாத ஒன்றாகி விடுகின்றது. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது களத்தை விட்டு ஓடுவதின் பொருள்:

Ø     எந்தக் குறிக்கோலுக்காக போரிடப்படுகிறதோ அந்தக் குறிக்கோளைவிட தன் உயிர்தான் அதிகப் பிரியமுடையதாய் இருக்கிறது.

Ø     மரணமும் வாழ்வும் அல்லாஹ்வின் கரங்களில் உள்ளன. அவனது கட்டளை வராதவரை மரணம் வரமுடியாது, அவனது கட்டளை வந்துவிட்டால் மரணம் வராமல் நிற்க முடியாது. இந்த உண்மை குறித்து அவனது நம்பிக்கை பலவீனமாக உள்ளது.

Ø     அல்லாஹ்வின் உவப்பை அடைவதும் மறுமையின் வெற்றியைப் பெறுவதும் தவிர வேறுசில ஆசைகளும் அவனது உள்ளத்தில் குடிக்கொண்டிருக்கின்றன. மேலும் அவன் தன்னைத் தானே இறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்ளவில்லை என்பதே ஆகும்.

எந்த இறைநம்பிக்கையுடன் இம்மூன்றில் ஏதேனுமொன்று கலந்து விட்டிருக்கினறதோ – அதனை எவ்விதம் முழுமையான இறைநம்பிக்கையென்று கூறமுடியும்? ஆகவேதான் இந்த முதலாவது முக்கிய போரில் முஸ்லிம்களுக்கு, போரிலிருந்து பினவாங்கிச் செல்வது அல்லது அதனைப் புறக்கணிப்பது முஸ்லிம்களின் பணியல்ல என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.

அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: மூன்று பாவங்கள் எத்தகையனவெனில் அவற்றுடன் எந்த நற்செயலும் பலனளிக்க மாட்டா:

1     இணை வைத்தல்.

2     தாய் தந்தையருக்குரிய கடமைகளை ஆற்றாமலிருந்த்தல்.

3     அல்லாஹ்வின் பாதையில் புரியப்படும் போரைப் புறக்கணித்தல் அல்லது அதிpலிருந்து பின்வாங்கி ஓடுதல்.

5.      உலகத் தொடர்புகளில் மனிதனின் ஈடுபாடு ஆகுமான வரம்பைவிட அதிகமாகி விடும்போது அவன் அல்லாஹ்வின் பாதையில் முன்னேறிச் செல்வதில் மந்தமானதாகி விடுகின்றான். செல்வமும், சந்ததீகள் மீதுள்ள மோகமும் இறைப்பாதையில் தீவிரமாக நடைபோடுவதற்கு பெரும் தடைகளாகி விடுகின்றன. எனவேதான் இந்தச் சந்தர்ப்பதிலும் அல்லாஹ் செல்வம், மக்கட்பேறு ஆகியவற்றின் சரியான அந்தஸ்தைக் குறித்து முஸ்லிம்களை எச்சரிக்கின்றான்.

‘தெரிந்து கொள்ளுங்கள்: உங்கள் செல்வமும் உங்கள் சந்ததிகளும் உண்மையில் உங்களுக்கு சோதனைப் பொருட்களாகும். அல்லாஹ்விடம் கூலி வழங்குவதற்கு நிறைய (அருட்பேறுகள்) உள்ளன’ (8: 28)

செல்வத்தை வழங்கி அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை சோதிக்கின்றான். அவர்கள் அதனை சரியான முறையில் செலவழிக்கின்றார்களா? இல்லையா என்றும், அல்லாஹ்வின் பாதையில் செல்வத்தை அர்ப்பணித்திட வேண்டி நேரம் வரும்போது மனம் கருமியாகி விடுகின்ற அளவிற்கு செலவத்தின் மீதான மோகம் அதிகரித்து விடுகின்றதா என்றும் அல்லது அந்தச் செல்வத்தின் மீது மோகம் கொணடதனால் சத்தியப் பாதையில் இலட்சிய நடைபோடுவதற்கு குந்தகம் விளைகிறதா என்றும் இறைவன் சோதிக்கினறான்.

இவ்வாறே சந்ததிகளும் மனிதனுக்குரிய மற்றொரு சோதனையாகும். ஒருபுறம், இறைநம்பிக்கையாளர்கள் தமது மக்களின் ஆகுமான உரிமைகளை நிறைவேற்ற வேண்டியதாய் இருக்கிறது. அந்த சந்ததிகளை இறைவனுக்காகவே பணிந்து வாழும் பாதையில் நடைபோடச் செய்திட முழு முயற்சி மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மறுபுறம் மனித உள்ளதில் இறைவனே அன்பை வைத்துள்ளான். மனிதன் தன் சந்ததிகள் மீது இயற்கையாகவே அந்த அன்பை செலுத்த வேண்டியதாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் நடைபோட முடியாமல் தடுமாறும் அளவிற்கு அந்த அன்பு வரம்பு மீறாமலிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கின்றது. செல்வம் மற்றும் சந்ததிகள் விஷயத்தில் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் ஆயத்தமாயிருக்க வேண்டிய இரட்டை சோதனையாகும் இவை.

6.      பொறுமை நிலைகுலையாமை. இது ஒவ்வொரு இயக்கத்திற்கும் உயிர் நாடியாகும். ஆனால் இஸ்லாமிய இயக்கத்திற்கோ அது உடலுக்கு எப்படி உயிர் அவசியமோ அவ்வளவு அவசியமானதாகும். மக்கா நகரில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், அங்கு நிலவிய சாதகமற்ற சூழ்நிலையிலும் இந்தப் பண்பை முடிந்தவரை அதிகமாக அவர்களுக்குள் உருவாக்கிட கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் அங்கு எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவியதெனில், கொடுமைகளைச் சகித்துக் கொள்வதைத் தவிர வேறெந்த வழியும் முஸ்லிம்களின் முன்னால் இருக்கவில்லை.

இப்போது இயக்கம் இரண்டாவது காலகட்டத்தினுள் பிரவேசித்துக் கொண்டிருந்தது. இனி முஸ்லிம்களின் முன்னால் தம் கரத்தாலேயே பிறருக்கும் அநீதி ஏற்பட்டு விடக்கூடும் என்னும் அச்சமும் இருந்தது. ஆகவே மாறிவிட்ட இந்தச் சூழ்நிலையிலும் இந்தப் பண்பை நிலைப்படுத்திக் கொள்ளவும் பெருக்கிக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.

இறைவன் கூறுகின்றான்:

‘இறைநம்பிக்கையாளர்களே! ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் மோதும்போது உறுதியாக இருங்கள், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள், உங்களுக்கு வெற்றி கிட்டக்கூடும். அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளதீர்கள். அதனால் உங்களுக்குள் பலவீனம் உண்டாகிவிடும். நீங்கள் வலுவிழந்துவிடுவீர்கள். பொறுமையுடன் செயலாற்றுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கினறான்.’ (8 : 45 – 46)

இங்கு பொறுமை என்பதின் கருத்தில் பின்வரும் விஷயங்கள் அனைத்தும் அடங்கும்:

1.      தன் உணர்வுகளையும் வேட்கைகள், இச்சைகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்.

2.      அவசரம், பயம், பீதி ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருத்தல்.

3.      எந்த ஆசையையும் பொருத்தமற்ற வேகத்தையும் அணுகவிடக் கூடாது. ஒவ்வொரு காரியத்தையும் அமையான நெஞ்சுடனும் தெளிவான முடிவுகளுடனும் செய்திடுதல்.

4.      ஆபத்துகளும், துன்பங்களும் எதிர்ப்பட்டால் பாதங்கள் தடுமாறி (நிலைகுலைந்து போய்) விடாமல் இருத்தல்.

5.      ஆத்திரத்திற்கோ, கோபத்திற்கோ பலியாகி எந்தத் தவறான செயலையும் செய்துவிடாமல் இருத்தல்.

6.      துன்பங்கள் தாக்கிடும்போதோ நிலைமைகள் சீர் கெடக்கண்டாலோ அமைதியின்மையாலும் அச்சத்தாலும் புலன்கள் செயலிழக்காமல் இருத்தல்.

7.      அவசரப்பட்டு, ஒரு திட்டத்தை அரைகுறையாக செயல்படுத்துகின்ற அளவிற்கு குறிக்கோளை அடைந்திடும் ஆர்வம் அதிகரித்து விடாமல் இருத்தல்.

8.      உலக இலாபங்களுக்கு முன்னே பலவீனமாக விளங்கி, அந்த இலாபங்களின் பக்கம் தாம் அடித்துக்கொண்டு போகும் அளவிற்கு உலக இலாபங்களின் மீதான ஆசையையும் மோகத்தையும் வளர்த்து விடக்கூடாது என்ற உயர் நோக்கத்திற்காக இந்த மாறுபட்ட சூழ்நிலையில் பொறுமை நிலைகுலையாமை குறித்து இன்னும் சில அறிவுரைகளையும் அளிக்க வேண்டிதாய் இருந்தது.

குறிக்கோளின் மீதான் நேசம் சில வேளைகளில் எந்த அளவிற்கு அதிகரித்து விடுகிறதென்றால், அதன் முன்னே மனிதன் சத்தியம் மற்றும் நீதி நேர்மையைக் கூட முழுமையாகப் பொருட்படுத்துவதில்லை. மேலும் குறிக்கோளை அடைவதற்காக இப்படிச் செய்வதில் தவறில்லை என்றும் கருதுகின்றான். ஆனால் முழுக்க முழுக்க சத்தியத்தின் அடிப்படையில் எழுகின்ற இஸ்லாமிய இயக்கம், தன்னைப் பின்பற்றுபவர்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் சத்தியத்தையும், நீதியையும் விடடு அகன்று செல்ல விடுவதில்லை. ஆகவேதான் இறைமறுப்புக்கும் இஸ்லாத்திற்குமிடையிலான இந்த முக்கிய போராட்டத்தின் போது பிற ஒழுக்க மற்றும் பயிற்சி போதனைகளுடன் எதிரிகளோடு செய்து கொள்ளும் அரசியல் ஒப்பந்தங்கள் பற்றியும், முழுக்க முழுக்க நீதியின் அடிப்படையிலும், சத்தியத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்த போதனைகள் பல முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த போதனைகளின் உயிரோட்டம் இதுதான்:

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் வெற்றி தோல்வியையோ, உலகப் பயன்களையோ உரை கல்லாக்கிதாம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு மாறு செய்யக் கூடாது. அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைக்க வேண்டும். முழு வாய்மையுடன் ஒப்பந்தங்களை மதித்திட வேண்டும். அதன் காரணத்தால் அவர்கள் தங்கள் சொந்த முஸ்லிம் சகோதரர்களுக்கே உதவி செய்ய முடியாமல் போய்விட்டாலும் சரியே!

இவைதாம் பத்ருப் போருக்குப் பிறகு திருக்குர்ஆனில் அநதத் தீர்க்கமான போரைக் குறித்து செய்யப்பட்ட விமர்சனத்தின் பிரதானச் சிறப்பியல்புகளாகும்.

இவற்றின் வாயிலாக, இஸ்லாமிய இயக்கம் உலகின் பிற இயக்கங்கள் எல்லாவற்றுக்கும் எதிரே எந்த அளவிற்குச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது என்பதையும் மேலும் அது தன்னைப் பின்பற்றுவோருக்கு எந்த முறையில் பயிற்சியளிக்கினறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

உஹதுஃப் போர்

________________________________________

காரணங்கள்

பத்ருப் பேரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அந்தப் போரின் விளைவாக எதிர்ப்புகளும் கொந்தளிப்பும் முஸ்லிம்களுக்கு எதிராக வேகமாகத் தோன்றின. குளவிக் கூட்டில் கல்லெறிந்துவிட்டால் உருவாகும் சூழ்நிலைதான் பத்ருப் போருக்குப் பிறகு முஸ்லிம்களைச் சூழ்ந்தது. முஸ்லிம்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் எற்பட்ட முதல் போர் பத்ருப்போராகும். அதில் முஸ்லிம்கள் இறைமறுப்பாளர்களை தீரமாக எதிர்த்துப் போரிட்டனர். மேலும் இந்தப் போரில் இறைமறுப்பாளர்கள் தோல்வியுற்று திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.

இந்த நிகழிச்சி முழு அரபுலகத்தையும் முஸ்லிம்களுக்கெதிராக உன்னிப்பாக செயல்படச் செய்தது.

இந்தப் புதிய இயக்கத்தின் பகைவர்களாக இருந்தவர்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகமாக சீற்றமடைந்து விட்டிருந்தார்கள். மேலும் இன்னொரு புறத்தில், பத்ருப் போரில் கொல்லப்பட்ட மக்கா நகரத் தலைவர்களின் கொலைக்குப் பழி வாங்கிடுவதற்காக ஆயிரக்கணக்கான உள்ளங்கள் நிம்மதியிழந்து துடித்தக் கொண்டிருந்தன. அரபுலகத்தின் ஒரே ஒரு மனிதனின் கொலை கூட பல தலைமுறைகள் வரை போர் நடப்பதற்கான காரணமாக விளங்கி வந்தது. ஆனால் பத்ருப் போரிலோ பலர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களுடைய இரத்திற்கான விலையை நூற்றுக் கணக்கான போர்களினாலும் ஈடுசெய்திட முடியாதிருந்தது. எங்கு நோக்கினும் ஒரு பெரும் புயலுக்கான அறிகுறிகளே தென்பட்டன. அதற்கு முன்பு முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட யூதக் குலங்களும் அந்த ஒப்பந்தங்களைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

இறைவன், இறைத்தூதுத்துவம், மறுமை, இறை வேதம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக யூதர்கள் வாதிட்டதைக் கருதிக் கொண்டு பார்த்தால். அவர்களதாம் முஸ்லிம்களுடன் அதிக நெருக்கமுடையவர்களாயிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுடைய அனுதாபங்கள், அதரவுகளெல்லாம் ஒட்டு மொத்தமாக குறைஷிகளிலிருந்த இணைவைப்பாளர்களுக்கே உரியதாகிவிட்டன். அவர்கள் வெளிப்படையாகவே இணைவைப்பாளர்களை முஸ்லிம்களுக்கெதிராக போரிடும்படி தூண்டலானார்கள்.

குறிப்பாக பகீநதீர் குலத் தலைவர் கஅப் பின் அஷ்ரஃர், இந்த விவகாத்தில் எல்லை மீறிய கீழ்மையுடன் நடந்துகொள்ளவும் குருட்டுத்தனமாகப் பகைமை கொள்ளவும் தொடங்கினார். எனவே யூதர்கள் அண்டைச் சமுதாயம் என்பதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் அண்ணலாருடன் செய்த ஒப்பந்தங்களையும் மதிக்க மாட்டார்கள் என்பது தெரிந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் மதீனா என்னும் இச்சிறு நகரம் நாலா பக்கங்களிலும் ஆபத்தால் சூழுப்பட்டுவிட்டது. மேலும் உள்ளேயும் முஸ்லிம்களின் நிலை ஒன்றும் நன்றாக இருக்கவில்லை. அவர்களுடைய பெருளாதார நிலை முன்பே பலவீனமாகத்தான் இருந்தது. இப்போது போருக்குப் பிறகோ இன்னும் அதிக பொருளாதாரத் துன்பங்களை, நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

மக்கா நகர இணைவைப்பாளர்கள் உள்ளங்களில் முன்பிருந்தே முஸ்லிம்களைப் பழி வாங்கும் உணர்வு தீயாகக் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. எனவே அவர்களின் பெரும் தலைவர்களெல்லாம் முஸ்லிம்களைப் பழிவாங்கியே தீருவோம் என்று சபதமெடுத்தனர். ஒவ்வொரு குலமும் ஆத்திரத்தாலும், கொதிப்பாலும் நிரம்பியிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் மக்கா நகரவாசிகளைப் போர் புரியத் துண்டும் யூதர்களின் முயற்சிகள் ‘எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதாய் இருந்தன’ பத்ருப் போர் நடைபெற்று ஓராண்டுகூடக் கழிந்திருக்காது, அதற்குள் மக்கா நகர இணைவைப்பாளர்கள் பெரும் வலிமை வாய்ந்த படையொன்றைத் திரட்டிக் கொண்டு மதீனா நகரின் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிவிட்டனர் என்னும் தகவல்கள் மதீனா நகரை எட்டலாயின.

குறைஷிகள் போரைத் தொடங்குதல்

________________________________________

அண்ணலார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் முதல் வாரத்தில் சரியான தகவலைக் கொண்டு வரும்படி இரு ஒற்றர்களை அனுப்பினார்கள். அவ்விருவரும் திரும்பி வந்து குறைஷிகளின் படை மதீனா நகருக்கருகிலேயே வந்துவிட்டது என்றும், மதீனா நகரின் மேய்ச்சல் மைதானங்களை குறைஷிகளின் குதிரைகள் மேய்ந்து காலி செய்துவிட்டன என்றும் தகவலளித்தனர். உடனே அண்ணலார் (ஸல்) தம் தோழர்களுடன் குறைஷிப் படையை மதீனாவில் தங்கி எதிர்க்கலாமா? மதீனாவுக்கு வெளியே சென்று எதிர்க்கலாமா என்று ஆலோசனை செய்தார்கள்.

பத்ருப் போரில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்காத, இஸ்லாத்திற்காக வீரமரணம் அடைந்திடும் உத்தவேகத்தில் துடித்துக் கொண்டிருந்து இளைஞர்கள் சிலர் நகருக்கு வெளியே சென்று எதிர்த்திட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். இறுதியில் அவர்களுடைய பிடிவாதத்தைக் கண்டு நபி (ஸல்) அவர்களும் மதீனா நகருக்கு வெளியே சென்று போர் புரிவது என்றே முடிவெடுத்தார்கள்.

நயவஞ்சகர்களின் ஏமாற்றும் மோசடியும்

குறைஷிகள் மதீனா நகருக்கருகே சென்று உஹத் மலையின்மீது முகாமிட்டார்கள். அண்ணலார் (ஸல்) குறைஷிகள் முகாமிட்டதற்கு ஒரு நாளைக்குப் பின் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டு ஆயிரம் தோழர்களுடன் மதீனா நகரிலிருந்து புறப்பட்டார்கள். இந்தத் தோழர்களிடையே அப்துல்லாஹ்பின் உபை என்பானும் இருந்தான். அவன் வெளித்தோற்றத்தில் முஸ்லிமாகி விட்டிருந்தாலும் உண்மையில் முஸ்லிம்களின் பகைவனாக இருந்தான். இறுதி வரை நயவஞ்சகனாகவே இருந்தான். இவனும் முஸ்லிம்களுடன் முஸ்லிமாகக் கலந்து விட்டிருந்தான். அவனது செல்வாக்கை ஏற்றுக்கொள்ளும் இன்னும் பல நயவஞ்சகர்களும் முஸ்லிம்களுடன் இணைந்திருந்தனர். சிறிது தொலைவு சென்ற பின்னால் அப்துல்லாஹ் பின் உபை தன்னுடைன் முந்நூறு பேரைப் பிரித்து அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

இப்போது 700 நபித்தோழர்களே எஞ்சியிருந்தனர். இத்தகைய சிக்கலான, நெருக்கடி மிகுந்த வேளையில் அவனது இந்தச் செயல் மிகக் கொடூரமாக இருந்தது. முஸ்லிம்களிடையே உளரீதியான பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உபாயமாகவே இருந்தது. ஆனால் முஸ்லிம்களின் உள்ளங்களோ இறைநம்பிக்கை, மறுமை நம்பிக்கை, இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் ஆர்வம் ஆகியவற்றால் நிரம்பி வழிந்தன. ஆகவே அவர்கள் மீது இந்த நிகழ்ச்சி எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்போது எஞ்சியிருந்த இந்த முஸ்லிம்களே அல்லாஹ்வின் மீது முழுநம்பிக்கை வைத்து முன்னேறலானார்கள்.

இளைஞர்களின் உத்தவேகம்

இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணலார் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை ஆராய்ந்தார்கள். சிறிய வயதினராக இருந்தவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். இப்படித் திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர்களில் ராஃபிஉ சமுரா என்னும் இரு இளைஞ்கர்களில் அடங்குவர். சிறிய வயதுடைய இளைஞ்கர்களைப் படையிலிருந்து நீக்க முனைந்தபோது இளைஞ்ர் ராஃபிஉ தன்னை உயரமாகக் காட்டிக்கொண்டு படையில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத் தமது கால்விரல்களின் மீது எம்பி நின்று கொண்டார். அவருடைய உபாயம் பயனளித்தது. ஆனால் சமுராவுக்கு படையில் இணைந்திட அனுமதி கிடைக்கவில்லை. ஆதலால் அவர் ‘ராஃபிஉ அவர்களை எடுத்துக் கொண்டீர்களென்றால் என்னையும் படையில் சேர அனுமதிக்க வேண்டும். நான் அவர்களை மல்யுத்தத்தில் வீழ்த்திவிடுவேன்’ என்று கூறினார். ஆகவே சமுரா அவர்களுடைய வாதத்தை நிரூபிப்பதற்காக அவ்விருவருக்கிடையே மல்யுத்தம் நடத்தப்பட்டது. அவர் ராஃபிஉ அவர்களைத் தோற்கடித்து விட்டதால், அவர்களும் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இது ஒரு சிறிய நிகழச்சியே எனினும் இதிலிருந்து முஸ்லிம்களிடையே இறைவழியில் ஜிஹாத் புரிந்திட எத்துணை ஆர்வம் கொப்பளித்துக் கொண்டிருந்தது என்பது தெரியவருகின்றது.

படை நிலைகளின் அமைப்பு முறை

உஹத் மலை மதீனா நகரிலிருந்து ஏறத்தாழ 4 மைல் தொலைவில் உள்ளது. அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது சேனையை மலையின் பின்புறத்தில் அமைந்திருக்கும் படியும் குறைஷிப்படை முன்னாலிருக்கும் படியும் நிலை நிற்கச் செய்தார்கள். இஸ்லாமியச் சேனையின் முதுகுப் புறத்தில் ஒரே ஒரு மலைக் கணவாய் மட்டும் இருந்தது. அதன்வழியாகப் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடக்கும் அபாயமிருந்தது. ஆகவே அண்ணலார் (ஸல்) அவர்கள் அந்த மலைக் கணவாய் மீது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களிடம் ஐம்பது அம்பெறியும் வீரர்களைக் கொடுத்து காவல் படையாக நியமித்து விட்டார்கள். எவரையும் இந்தக் கணவாய் பாதை வழியாக வரவிடக் கூடாது. எந்த நிலையிலும் இங்கிருந்து நகரக் கூடாது. கழுகுகள் எங்கள் குடல்களைக் கீறிக் கிழித்து எடுத்துச் செல்வதை நீங்கள் கண்டாலும் கூட உங்கள் நிலைகளை இடங்களை விட்டு நீங்கள் அசைய்க் கூடாது என்று உத்திரவிட்டார்கள்.

குறைஷிகளின் படை மற்றும் ஆயுத பலம்

குறைஷிகள் இந்த முறை பெரும் ஆயுத பலத்துடன் ஏராளமான வாய்ப்பு வசதிகளுடன் வந்திருந்தார்கள். ஏறத்தாழ மூவாயிரம் படைவீரர்களுடன் நிறைய போர்த் தளவாடங்களும் அவர்களிடமிருந்தன. அரபுகளிடையே எந்தப் போர்களில் பெண்கள் கலந்து கொள்கிறார்களோ அந்தப் போர்களில் அவர்கள் தம் உயிருடன் விளையாடிப் போரிடுவது வழக்கம். போரில் நாம் தோற்று விடுவோமாயின் நமது பெண்களுக்கு இழிவும் மானக் கேடும் உண்டாகும் என்று அவர்கள் எண்ணினார்கள். இந்தப் போரின் போது ஏராளமான பெண்களும் குறைஷிப்படையுடன் வந்திருந்தார்கள். அவர்களில் பலர் பத்ருப் போரில் தமது மகன்களை அல்லது உறவினர்களைப் பலி கொடுத்தவர்களாயிருந்தனர். அப்பெண்கள் தம் உற்றார் உறவினர்களைக் கொன்றவர்களின் இரத்தத்தைக் குடித்துவிட்டுத்தான் ஓய்வோம் என்று சூளுரைகளும் நேர்ச்சைகளும் செய்திருந்தார்கள்.

போர் தொடங்குதல்

குறைஷிகள் தமது படைக்கு மிக நன்றாகப் பயிற்சியளித்திருந்தனர். போர் தொடங்கியபோது அனைவருக்கும் முன்பாக குறைஷிக் குலப் பெண்கள் தாரை தப்பட்டைகளை முழங்கி வெறியும் குரோதமும் ரோஷமும் ஊட்டும் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தார்கள். போரிடுவோருக்குள்ளிருந்து பத்ருப் போரில் கொல்லப்பட்டவர்களின் துக்கமும், அவர்களுக்காக இரத்தப்பழி வாங்கும் வெறியும் நன்றாகப் பொங்கி வெளிவரட்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தார்கள்.

இதற்குப் பின் போர் தொடங்கியது. ஆரம்பத்தில் முஸ்லிம்களின் கரம் ஓங்கியிருந்தது. குறைஷிப் படையிவலிருந்த பலரும் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய சேனையில் கலக்கமும் பீதியும் பரவி விட்டது. தாம் களத்தை வென்று விட்டோம் என்று முஸ்லிம்கள் கருதினார்கள். ஆகவே அவர்கள் இந்த ஆரம்ப வெற்றியை அதன் இறுதிக் கட்டம் வரை கொண்டு சேர்ப்பதற்குப் பதிலாக போர்ப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கி விட்டனர். இங்கு மலைக் கணவாயின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தவர்கள் முஸ்லிம்கள், எதிரிகள் விட்டுச் சென்ற போர்ப்பொருட்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டிருப்பதைக் கண்டும் பகைவர்களின் பாதம் தடுமாறி வீழ்ந்து விட்டிருப்பதைக் கண்டும் போர் முடிந்துவிட்டது போலும் என்று எண்ணி அவர்களும் போர்ப் பொருட்களைச் சேர்த்திடத் தாவியோடினார்கள். அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள், அவர்களைத் தடுத்தார்கள். அண்ணலாரின் கட்டளையை நினைவூட்டினார்கள். ஆனால் சிலருடையது தவிர மற்றவர் அனைவரின் செவிகளையும் சிறைப் பொருள் அடைத்துவிட இடம் பெயர்ந்தோடி விட்டார்கள்.

குறைஷிகள் பின் வழியாக வந்து தாக்குதல்

அப்போது இறைமறுப்பாளர்களின் படையின் ஓர் அணிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மலையைச் சுற்றிக் கொண்டு சென்று பின்னாலிருந்து முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். மலைக் கணவாயைப் பாதுகாப்பதற்காக எஞ்சியிருந்துவிட்ட அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் அவர்கள் இறைமறுப்பாளர்களின் இந்த தீடீர்த் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் வீரமரணம் அடைந்து விட்டார்கள்.

பகைவர்கள் திடீரென பின்பக்கதிலிருந்து முஸ்லிம்கள் மீது பாய்ந்தார்கள். புறமுதுகிட்டுப் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்த குறைஷிப் படை வீரர்கள் இந்த தீடீர் திருப்பத்தைக் கண்டவுடன் திரும்பி வந்து விட்டார்கள். இப்போது இரு பக்கங்களிலிருந்தும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடக்கலாயிற்று. இந்தச் சூழ்நிலை போரின் போக்கையே மாற்றிவிட்டது. முஸ்லிம்களை வலுவிழக்கச் செய்துவிட்டது. முஸ்லிம்கள் தங்கள் வரிசையும் ஒழுங்கும் குலைந்து சிதறி இங்கும் அங்கும் ஓடலாயினர். அச்சத்தினாலும் பீதியினாலும் முஸ்லிம்களின் கரங்களாலேயே முஸ்லிம்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

அதே பீதியில் அண்ணலார் மரணமடைந்து விட்டார்கள் என்று தவறான வதந்தியொன்று கிளம்பிவிட்டது. இந்த வதந்தியினால் நபித்தோழர்களிடம் கொஞ்ச நஞ்சமிருந்த துணிவும் பறி போய்விட்டது. பலரும் ஊக்கமிழந்து போய் விட்டார்கள்.

அல்லாஹ்வின் உதவியின் வெற்றியும்

அப்போது அண்ணலாரை பத்துப் பன்னிரண்டு தோழர்கள் சூழ்ந்து நின்று கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பளித்துக் கொண்டிருந்தார்கள். நபித் தோழர்கள் அண்ணலாரை அழைத்துக் கொண்டு மலைக் பக்கமாக வந்து விட்டனர். அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் நலமுடன் இருப்பது தெரிந்துவிட்டது. எனவே அவர்கள் மீண்டும் ஒன்று திரண்டு அண்ணலாரைச் சுற்றிலும் கூடிவிட்டார்கள். இந்தத் தருணத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இறைமறுப்பாளர்கள் கிட்டிவிட்ட வெற்றியை முழுமைப்படுத்திக் கொள்ளமலே களத்தை விட்டுச் சென்றுவிட்டனர்.

பல காத தூரம் சென்று விட்ட பின்னர்தான் இறைமறுப்பாளர்களுக்குத் தன்னுணர்வே ஏற்பட்டது. ‘நாம் எப்படிப்பட்ட தவறிழைத்து விட்டோம்! முஸ்லிம்களின் வலிமையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிட நமக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை இப்படித் தவற விட்டு விட்டோமே! அப்படியே திரும்பி வந்து விட்டோமே’ என்று ஆதங்கத்துடன் தமக்குள் கூறிக் கொண்டனர். ஆகவே அவர்கள் ஓரிடத்தில் தங்கி, ‘இனி மதீனா நகர் மீது மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டும்’ என்று ஆலோசித்தனர். ஆனால் அதற்கான துணிவு அவர்களுக்கு ஏற்படவில்லை. எனவே மக்கா நகருக்குகே திரும்பிச் சென்று விட்டனர்.

இங்கு அண்ணலாருக்கும் பகைவர்கள் மீண்டும் திரும்பி வந்துவிடக் கூடும் என்கிற ஊகம் இருந்தது. ஆகவே அண்ணலாரும் முஸ்லிம்களை ஒன்று திரட்டி இறைமறுப்பாளர்களைப் பின் தொடர வேண்டும் என்று கூறினார்கள். இது மிக நெருக்கடியான சிக்கல் நிறைந்த சந்தர்ப்பமாக இருந்தது. ஆனால் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருந்தவர்கள் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து உயிரைத் தியாகம் செய்திடத் தயாராகி விட்டனர். அண்ணலார் ‘ஹம்ராஉல் அஸத்’ என்னுமிடம் வரை எதிரிகளைப் பின் தொடர்ந்து சென்றார்கள். இந்த இடம் மதீனாவிலிருந்து 8 மைல் தொலைவில் இருந்தது. ஆனால் குறைஷிகள் மக்கா நகருக்குத் திரும்பிச் சென்றுவிட்ட செய்தியை திட்டவட்டமாக அறிந்து கொண்ட பிறகு அண்ணலாரும் மதீனா நகருக்குத் திரும்பி வந்து விட்டார்கள்.

உஹதுப் போரில் எழுபது நபித்தோழர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் அன்சார்களாயிருந்தார்கள். மதீனா நகரிலிருந்த ஒவ்வொரு இல்லமும் துக்கம் கொண்டாடும் இல்லங்களாக மாறிவிட்டிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணலார், ‘துக்கம் கொண்டாடுவது, ஒப்பாரி வைப்பது, அடித்துக் கொண்டும் கூப்பாடு போட்டுக் கொண்டும் அழுவது போன்றவை முஸ்லிம்களின் பண்பல்ல’ என்று அறிவுரை வழங்கினார்கள்.

ஆரம்பத்தில் தோல்வியடைந்ததன் காரணமும் முஸ்லிம்களுக்குப் பயிற்சியளித்தலும்

உஹதுப் போரில் முஸ்லிம்கள் முதலில் தோல்வியடைந்ததில் நயவஞ்சகர்களின் திட்டங்கள் மற்றும் சூழுச்சிகளுக்குப் பெரும் பங்கு இருந்தது உண்மையே. ஆனால் முஸ்லிம்களிம் காணப்பட்ட பலவீனங்களுக்கும் இத்தோல்வியின் பங்கிருக்கவே செய்தது. இஸ்லாமிய இயக்கம் தம் ஊழியர்களுக்கு எத்தகைய சுபாவத்தை உருவாக்கிடவும் தன் ஊழியர்களுக்கு எத்தகைய பயிற்சியை அளித்திடவும் விரும்பி வந்ததோ அதற்கான முழுவாய்ப்பு இன்னும் கிகை;காமலிருந்தது. அல்லாஹ்வின் பாதையில் உயிரை துச்சமாக மதித்துப் போராடுவது இது இரண்டாம் சந்தர்ப்பமாகவேயிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் சிற்சில பலவீனங்கள் வெளிப்படவே செய்தன.

எடுத்துக்காட்டாக, போர் பொருட்களின் ஆசையால் உந்தப்பட்டு தமது கடமையை விட்டுவிடுதல், தம் தலைமையின் கட்டளைக்கு மாறு செய்தல், பகைவர்களின் வலிமையை ஒடுக்குவதற்கு முன்பாக போர்ப்பொருட்களின்பால் கவனம் செலுத்துதல் ஆகியன. முஸ்லிம்களுக்குள்ளே எஞ்சியிருந்த இந்தக் குறைபாடுகள் ஒவ்வொன்றையும் இஸ்லாமியக் கோணத்திலிருந்து விமர்சிக்க வேண்டியிருந்தது. ஆகவே இந்தப் போருக்குப் பின்னரும் அல்லாஹுதஆலா போர் நிலைமைகளைக் குறித்து விமர்சனம் செய்து, அவர்களின் குறைபாடுகள் ஒவ்வொன்றையும் எடுத்துரைத்தான். இவை திருக்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயமான ஆலஇம்ரானின் இறுதிப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிய இயக்கத்தின் போரின் அந்தஸ்து என்ன? இஸ்லாமிய கண்ணோட்டத்தில் போர் நிகழ்ச்சிகள், நிலைமைகள் குறித்து எவ்விதம் விமர்சிக்கப்படுகின்றது? விவரிக்கப்டுகின்றது? என்பதனை தெளிவாகப் புரிந்து கொள்ள அந்த தெளிவுரையின் சில அம்சங்கள் கீழே தரப்படுகின்றன:

தவக்குல் – அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருத்தல்

முஸ்லிம்கள் போரிடச் சென்றபோது அவர்களுடைய எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரமாக இருந்தது. எதிரிகளின் எண்ணிக்கை மூவாயிரமாக இருந்தது. அதிலும் சிறிது தொலைவு சென்றவுடன் முஸ்லிம்களின் படையிலிருந்து முந்நூறு நயவஞ்சகர்கள் மொத்தமாகப் பிரிந்து சென்று விட்டனர். இப்போது 700 முஸ்லிம்களே எஞ்சியிருந்தனர். போர் தளவாடங்களும் குறைவாகவே இருந்தன. மூன்லொரு பங்கு படையும் குறைந்து விட்டது. இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சிலருடைய உள்ளங்கள் உடையலாயின. இந்த நேரத்தில் முஸ்லிம்களை எதிரிகளுடன் போரிடுவதற்கு அழைத்துச் சென்றது அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் அவனது உதவி நிச்சயம் கிடைக்கும் என்கிற மன உறுதியுமேயாகும். அண்ணலார் (ஸல்) இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு அளித்த அறுதலை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

‘உங்களில் இரு குழுவினர் கோழைத்தனம் காட்டத் தயாராகி விட்டிருந்ததை நீங்கள் நினைவு கூருங்கள். அனால் அல்லாஹ் அவர்களுக்கு உதவி புரிந்திட காத்திருக்கிறான். இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்திட வேண்டும். அவனையே சார்ந்திருக்க வேண்டும். இதற்கு முன் பத்ருப் போரில் அல்லாஹ் உங்களுக்கு உதவியிருக்கின்றான். ஆனால் நீங்கள் அப்போது மிக பலவீனமானவர்களாயிருந்தீர்கள், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு கொல்வதிலிருந்து விலகியிருங்கள். நீங்கள் நன்றியுடையவர்களாய் விளங்கக்கூடும். (நபியே!) நீர் இறை நம்பிக்கையாளர்களிடம் பின்வருமாறு கூறிக் கொண்டிருந்ததை நினைவு கூருங்கள்: ‘அல்லாஹ் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்து உங்களுக்குப் போதுமானதல்லவா? நீங்கள் பொறுமையாயிருந்து இறைவனுக்கு அஞ்சி செயல்பட்டால், எதிரிகள் உங்கள் மீது தாக்குதல் நடத்தும் போது உங்களுக்கு ஐயாயிரம் வானவர்களால் உதவுவான். நீங்கள் மகிழ்வடைவதற்காகவும் உங்கள் உள்ளங்கள் நிம்மதியடைந்திடவும்தான் அல்லாஹ் இதனை உங்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டான். வெற்றி, உதவி எதுவாயினும், அல்லாஹ்வின் தரப்பிலிருந்தே வருகின்றன. அவன் வலிமை மிக்கவன், மிகவும் அறிந்தவன்!’ (3:122 – 3:126)

இறுதியான உண்மையில் உலகாயத வலிமையின் மீது நம்பிக்கை வைப்பது ஒரு முஸ்லிமுக்கு ஏற்றதன்று. மாறாக அல்லாஹ்வின் உதவியை நம்பி இருப்பதும் அவனையே முற்றிலும் சார்ந்திருத்தலும் ஒரு முஸ்லிமுடைய வலிமைக்கான மூல ஊற்றாகும் என விளக்கப்பட்டுள்ளது.

செல்வத்தின் மீது மோகம்

முஸ்லிம்கள் போர் நடந்து கொண்டிருக்கும்போதே செல்வத்தின் மோகத்தில் சிக்கிக் கொண்டதுதான் ஊஹதுப் போரில் அவர்கள் அடைந்த தோல்விக்குப் பெரும் காரணமாக இருந்தது. அவர்கள் தம் எதிரிகளை முழுமையாக விரட்டியடிப்பதற்கு முன்பே போர்ப் பொருட்களின்பால் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார்கள். எந்த அளவிற்கென்றால் மலைக் கணவாய்ப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தவர்களில் சிலரும்கூட இவ்விஷயத்தில் தவறு செய்து விட்டனர். இதனால் போரின் போக்கே திசை மாறிவிட்டது. ஆகவே, அல்லாஹ் முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்து செல்வத்தின் மீதான மோகத்தை நீக்க நாடினான். செல்வத்தின் மீது மோகத்தையூட்டிய பெரியதொரு காரணமாக விளங்கும் ஒரு விஷயத்தையும் இத்தருணத்தில்தான் விட்டியைத் தடை செய்தான். விட்டித் தொழில் செய்பவர்களின் உள்ளத்தில் பொருளாசை எந்த அளவிற்கு ஊறிப் பதிந்து விடுகின்றதெனில், அவர்களை எந்த உயரிய பணிக்கும் அருகதை அற்றவர்களாய் அது ஆக்கிவிடுகின்றது. இந்த வட்டியின் வாயிலாகவே மனித சமுதாயத்தில் ஒரு வர்க்கத்தாரிடையே பேராசை, கருமித்தனம், சுயநலம், பொருளாசை ஆகிய தீய பண்புகள் உருவாகின்றன. மற்றொரு வர்க்கத்தாரிடையே வெறுப்புணர்வு, கோபம், காழ்ப்புணர்வு, பொறாமை ஆகிய தீய குணங்கள் உருவாகின்றன.

வெற்றிக்கான உத்திரவாதம்

ஊக்கங்களை முனைப்பாக வைத்திருக்க உந்து சக்தி ஏதும் இல்வையெனில், தோல்விக்குப் பின்னர் ஊக்கம் தளர்ந்து விடுகின்றது. உஹதுப் போரில் முஸ்லிம்கள் தோல்வியடைந்திருந்தனர். இதனால் சிலருடைய உள்ளம் உடைந்து போகவும் வாய்ப்பிருந்தது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் பின்வருமாறு உத்திரவாதமளிக்கப்பட்டது: நீங்கள் ஊக்கம் தளர்ந்து விடக் கூடாது, கவலையடையவும் கூடாது, நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாயிருந்தால் வெற்றி உங்களுடையதேயாகும். நீங்கள் இறை நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருங்கள், அதன் தோட்டங்களை நிறைவு செய்த வண்ணமிருங்கள். உங்கள் பணி இவ்வளவேயாகும். அதன் பின்னர் உங்களை உயர்த்துவதும், கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் விடுதலை செய்வதும் அல்லாஹ்வின் பணியாகும், தற்காலிகமாக உங்களுக்கு ஏற்படும். இந்தத் துன்பங்களும் தோல்விகளும் உங்கள் எதிரிகளுக்கும் கூடத்தான் ஏற்படுகின்றன. அவர்கள் அசத்தியத்தைப் பின்பற்றுபவர்களாயிருந்தும் ஊக்கமிழக்காமலிருக்கும் போது நீங்கள் சத்தியத்தைப் பின் பற்றுபவர்களாயிருந்து கொண்டு ஏன் கவலைப்படுகின்றீர்கள்?

நீங்களோ சொர்கத்தை அடைந்திட விரும்புகின்றீர்கள். எவ்விதம் துன்பமும் அனுபவிக்காமல் சொர்க்கத்திற்கு அப்படியே சென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியமலும், உங்களில் நிலை குலையாமலும் நிற்பவர்கள் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் எளிதில் சுவனம் சென்று விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? (3:139 – 142)

இஸ்லாமிய இயக்கத்தின் அசல் உந்து சக்தி

பொதுவாக, ஒவ்வொரு இயக்கத்திலும் யாரேனும் ஒரு முக்கியப் பிரமுகர் அந்த இயக்கத்தின் உயிரோட்டமாகத் திகழ்வார். ஆனால் கொள்கைவழி இயக்கங்களின் நிலைபாடும் வளர்ச்சியும் எப்போதுமே எந்த ஒரு பிரமுகரையும் அடைப்படையாகக் கொண்டிருக்காது. மாறாக அந்த இயக்கம் எந்தக் கொள்கைகளை ஏந்திக் கொண்டு எழுகின்றதோ அந்தக் கொள்கைகளின் உறுதிப்பாட்டையும் வாய்மையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இஸ்லாமிய இயக்கத்திற்கு இறைத் தூதர்களின் ஆளுமைகள் எந்த அளவிற்கு முக்கியமாகத் திகழ்கின்றன என்பதை மதிப்பிடுவது கடினமான ஒன்றல்ல. எனினும் இந்த இயக்கம் கொள்கை வழி இயக்கமாக இருப்பதாலும் அதன் நிலைப்பாடும் வளர்ச்சியும் இஸ்லாம் சமர்ப்பிக்கும் கொள்கைகளின் வலிமையையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் முஸ்லிம்களுக்கு கொள்கை ரீதியான விஷயத்தை எடுத்துரைப்பது அவசியமானதாகிவிட்டது.

எதுவரை திருத்தூதர் அவர்கள் நம்மிடையே வாழ்வார்களோ அதுவரைதான் நாங்கள் இறை மார்க்கத்தின் கொடியை உயர்த்திப் பிடிப்போம், ஆனால் எப்போதேனும் அண்ணலாரின் நேரடி வழிகாட்டுதலை இழந்துவிட்டால், இந்த இறைவழியை விட்டு வேறேதேனும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்னும் சிறு எண்ணம்கூட அவர்களுடைய மனத்தின் எந்த மூலையிலும் படிந்திருக்கக் கூடாது என்பதே அந்த விஷயமாகும்.

ஆகவே உஹதுப் போர்க்களத்தில் அண்ணலார் வீரமரணம் அடைந்து விட்டதாகத் தவறான செய்தி பரவிவிட்டபோது முஸ்லிம்கள் சிலரின் உள்ளம் உடைந்து விட்டது. அவர்கள், அண்ணலாரே நம்மிடையேயிருந்து சென்று விட்டபோது இனி நாம் போரிட்டுதான் என்ன செய்யப் போகிறோம்? என்று எண்ணினார்கள். இந்த எண்ணத்தைச் சீர்திருத்துவதற்காக இறைவன் இவ்வாறு கூறினான்:-

‘பாருங்கள்! முஹம்மத் அவர்கள் ஓர் இறைத்தூதரேயன்றி வேறிலர். அவர்களுக்கு முன்னர் இன்னும் பல இறைத் தூதர்கள் சென்றிருக்கின்றார்கள். அண்ணலார் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் வந்த வழியே பின்வாங்கிச் சென்று விடுவீர்களா? நினைவில் வையுங்கள். எவன் பின்வாங்கித் திரும்பிச் செல்கின்றானோ அவன் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பையும் அளித்திட முடியாது. ஆனால் எவர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாகத் திகழ்கின்றார்களே அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான்’ (3:144)

நீங்கள் எந்த மார்க்கத்தைச் சிந்தித்து ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களோ அதன் மீது நிலைத்திருப்பதற்கும் அதனை நிலைநாட்டுவதற்கும் அல்லாஹ்வின் தூதர் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. ஏனெனில் அந்த முயற்சியானது உங்கள் வெற்றிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் செய்யும் வாணிபமாகும். இதில் நிலைத்திருந்தால் நீங்கள் நன்மையடைவீர்கள், இந்த மார்க்கத்தின் அசல் வலிமை அது சமர்ப்பிக்கும் உண்மையாகும். அதன் உயர்வு உங்கள் இதர வலிமைகளையோ குறிப்பிட்ட பிரமுகரை நம்பியே இல்லை என்ற உண்மைகளை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உணர்த்தினான்.

பலவீனத்தின் வேர்

மனிதனின் பலவீனங்கள் அனைத்துக்கும் மூல வேர் மரண பயமாகும். இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்குப் பின் வருமாறு நினைவூட்டப்பட்டது. மரண பயத்தில் ஓடுவது முழுக்க வீணான செயலாகும். தன் மரண வேளை வராதவரை எந்த ஓர் உயிரியும் மரணிப்பதில்லை. அல்லாஹ்வின் நிர்ணயிக்கப்பட்ட அந்த வேளைக்கு முன்னால் எவரும் மரணிக்க முடியாது. அந்த வேளை வந்த பின்னர் ஒரு வினாடி கூட உயிர் வாழ முடியாது. ஆகவே மரணம் வந்து விடுமோ என்று கவலைப்படத் தேலையில்லை. கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை அவகாசம் வீணாகச் செலவழிந்து கொண்டிருக்கின்றதா? அல்லது மறுமை வெற்றியைப் பெற்றுக் கொள்வதில் செலவழிந்து கொண்டிருக்கினறதா என்பதே!

ஆகவே உலக நலன்களை ஈட்டுவதற்காகத் தன் உழைப்பைச் செலவழிப்பவனுக்கு கிடைக்கும் எதுவாயினும் இந்த உலகத்திலேயே கிடைத்து விடுகின்றது. மறுமையில் அவருக்கு எந்தப் பலனும் கிடைக்காது. ஆனால் எவர் மறுமை உலகின் நற்கூலிக்காகப் பாடுபடுகின்றாரே அவருக்கு அல்லாஹ் மறுமையின் நற்கூலியை அளிப்பான். எவருக்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றக் கொள்ளவும். அதில் நிலைத்திருக்கவும், அதனை நிலைநாட்டிடவும், அருள் கிட்டியதோ அவர்கள் அனைத்தையும் விட விலையுயர்ந்த அந்த அருளை மதித்திட வேண்டும். அதற்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்திட வேண்டும். இந்தப் போராட்டத்தின் விளைவு நல்லமாகவே இருக்கும். மறுமையின் நிரந்தர வெற்றி அவர்களுக்கு கிட்டும், அல்லாஹ்வின் இந்த அருட்கொடைக்கு நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் மிகச் சிறந்த அருட்கொடைகளை அளிப்பான். அவர்கள் தம் அதிபதியிடம் மிகச் சிறந்த நற்கூலியைப் பெற்றுக் கொள்வார்கள்.

உஹதுப் போரின் தோல்விக்குப் பின்னால்

ஒரு சில குலங்களைத் தவிர ஏறத்தாழ அரபுக் குலங்கள் அனைத்துமே புதிதாக எழுந்துவந்த இந்த இஸ்லாமிய இயக்கத்தின் எதிரிகளாவே விளங்கின. இந்த இயக்கத்தினால் அவர்களுடைய முன்னோர்களின் மார்க்கமும் அவர்களுடைய பரம்பரைச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாதிப்புக்குள்ளாயின. மனிதன் ஒழுக்க ரீதியாக உயர்ந்தவனாய் விளங்கிட வேண்டும் என்பதும், அன்று அரபுலகத்தில் பரவிவிட்டிருந்த குடி, சூதுஈ விபச்சாரம், கொலை, கொள்ளை போன்ற தீய பழக்கங்களை அவர்கள் விட்டு விட வேண்டும் என்பதும். இந்த இயக்கத்தின் தோட்டமாக இருந்தது. பத்ருப் போருக்கு முன்னால் பல குலங்களும் இந்தப் புதிய இயக்கத்தை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று சிந்தித்த வண்ணமிருந்தன. ஆனால் பத்ருப் போரில் குறைஷிகள் தோல்வியுற்ற பின்னால் அவர்களுடைய ஊக்கம் தளர்ந்து விட்டிருந்தது. இனி எத்தகைய போக்கை மேற்கொள்வது என்னும் குழப்ப நிலைக்குள்ளாகி விட்டிருந்தார்கள். ஆனால் உஹதுப் போருக்குப் பின்னால் நிலைமை மாறிவிட்டது. அரபுலகத்தின் பல குலங்கள் இஸ்லாத்திற்கெதிராக எழுந்து நின்றன. இத்தகைய சில குலங்களின் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

அரபுக் கோத்திரங்களின் ஒப்பந்த மீறல்

1.      ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம், குத்ன் பகுதியிலிருந்து ஜுஃபீத் என்னும் குலமொன்று மதீனா நகரைத் தாக்க வந்தது. ஆனால் அண்ணலார் அபூசல்மா (ரலி) அவர்களை, சிறியதொரு குழுவுடன் அக்குலத்தாரை எதிர்த்துப் போராடிட அனுப்பி வைத்தார்கள். தாக்க வந்தவர்கள் பின்வாங்கி ஓடி விட்டார்கள்.

2.      இதன் பின் இதே மாதத்தில் உர்னா மலைத் தொடரில் வாழந்து வந்த லஹ்யான் என்னும் குலமொன்று மதீனா நகர் மீது தாக்குதல் நடத்திட முனைந்தது. அப்துல்லாஹ் பின் அனீஸ் (ரலி) அவர்கள் அக்குலத்தாரை எதிர்த்துப் போர் புரிய அனுப்பப்பட்டார்கள். அக்குலத்தாரின் தலைவர் சுஃப்யான் கொல்லப்பட்டார், படையெடுப்பாளர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

3.      ஹஜ்ரி 4 ஆம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் கிலாப் குலத் தலைவன் அபூபர்ரா என்பான் அண்ணலாரின் திருச் சமூகத்தில் வந்து ‘உங்கள் ஆட்கள் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்கள், என்னுடைய குலத்தார் இஸ்லாத்தின் அழைப்பைச் செவிமடுக்க விரும்புகிறார்கள்’ என்று கூறினான். அண்ணலார் எழுபது நபித் தோழர்களை அவனுடன் அனுப்பி வைத்தார்கள்.

அவர்களில் பலர் அண்ணலாரின் (அல்ஹாபுஸ் ஸுஃப்ஃபா) திண்ணைத் தோழர்களாயிருந்தனர். அவர்களை அந்தக் குலத்தின் தலைவன் அமிர் பின் துஃபைல் என்பவன் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுக் கொல்லச் செய்தான். இந்த நிகழ்ச்சியால் அண்ணலாருக்கு பெரும் மனவருத்தம் ஏற்பட்டது. ஒரு மாதம் முழுவதும் ஃபஜ்ருத் தொழுகையின் போது அண்ணலார் அந்த அக்கிரமக்காரர்கள் மீது சாபம் உண்டாகட்டும் என பிரார்த்தனை செய்தார்கள்.

அந்த எழுபது நபித்தோழர்களில் ஒரேயொரு நபித் தோழரான அம்ருபின் உமய்யாவைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அந்த குலத் தலைவன் அமீர், அம்ருபின் உமய்யாவை நோக்கி.

‘என் தாய் ஓர் அடிமையை விடுதலை செய்வதாக நேர்ச்சை செய்திருந்தாள். எனவே, போய்விடு! நான் உன்னை அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக விடுதலை செய்கிறேன்’ என்று கூறி அவரை விடுதலை செய்தான்.

அம்ருபின் உமய்யா திரும்பிச் வந்து கொண்டிருந்த போது ஆமிருடைய குலத்தைச் சேர்ந்த இருவர் வழியில் கிடைத்தனர். அம்ருபின் உமய்யா (ரலி) அவ்விருவரையும் கொலை செய்து விட்டார். தாம் ஆமிருடைய குலத்தார் செய்த நம்பிக்கைத் தூரோகத்திற்குச் சிறிதளவாவது பழி வாங்கிக் கொண்டோம் என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அண்ணலாருக்கு இந்த நிகழ்ச்சி தெரிய வந்தபோது மிகவும் வருந்தினார்கள். தமது கடும் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். ஏனெனில் அண்ணலார் (ஸல்) அந்தக் குலத்தாருக்கு பாதுகாப்பு தருவதாக வாக்களித்து விட்டிருந்தார்கள். இந்தக் கொலை அந்த உறுதிமொழிக்கு எதிராக இருந்தது. ஆகவே அண்ணலார் கொல்லப்பட்ட இருவரின் இரத்தத்திற்கும் ஈட்டுத் தொகை தருவதாக அறிவித்தார்கள்.

இவ்வாறே இன்னும் இரண்டு குலங்களும் இதே போன்ற நம்பிக்கைத் துரோகங்களைச் செய்தன. அண்ணலார் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று பத்து நபித்தோழர்களை அவர்களுக்கு மார்க்க போதனை செய்வதற்காக அவர்களுடன் அனுப்பினார்கள். ஆனால் அந்த அக்கிரமக்காரர்கள் நம்பிக்கைத் தூரோகம் செய்தார்கள். அந்தப் பத்து நபித் தோழர்களில் ஏழு பேர் இறை மறுப்பாளர்களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள். மூவர் கைதானார்கள், கைதானவர்களில் குபைப் (ரலி) அவர்களும் ஜைத் (ரலி) அவர்களும் இருந்தனர். எதிரிகள் அவர்களை மக்கா நகருக்கு கொண்டு சென்று விற்று விட்டனர்.

குபைப் (ரலி) அவர்கள் உஹதுப் பேரில் ஹாரிஸ்பின் ஆமிர் என்பவனைக் கொன்று விட்டிருந்தார்கள். ஹாரிஸ் உடைய புதல்வர்கள் தம் தந்தையின் உயிருக்குப் பகரமாக கொலை செய்யும் நோக்கத்துடன் குபைப் (ரலி) அவர்களை விலைக்கு வாங்கி கொண்டார்கள். ஆகவே சில நாட்களுக்குப் பிறகு அவர்களைக் கொலை செய்து விட்டார்கள். இதேபோன்று ஜைத் (ரலி) அவர்களை ஸப்வான் பின் உமய்யா என்பவன் கொலை செய்வதற்காக வாங்கினான். பிறகு அவன் அவரைக் கொன்று விட்டான்.

இவ்விதம் ஒருபுறம் அரபுக் குலங்களுடன் தொடர்ந்து மோதல் நடைபெற்று வண்ணமிருந்து. இதில், எதிரிகள்தான் அத்துதமீறலும், வன்முறையும், கொடுமைகளும் புரிந்து வந்தனர். முஸ்லிம்கள் அவர்களின் கொடுமைகளை தொடர்ந்து சகித்துக் கொண்டிருந்தனர். அது மட்டுமல்ல, இதே காலகட்டத்தில் யூதர்கள் பல பரச்சனைகளில் நடந்து கொண்ட முறை முஸ்லிம்களை இன்னும் அதிகமாக கவலையில் ஆழ்த்தியது.

யூத அறிஞர்கள் மற்றும் யூத குரு மார்களின் எதிர்ப்பு

அண்ணலார் மதீனா நகருக்கு வருகை தந்த பின்னால் யூதக் குலங்களுடன் பல்வேறு வகையான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். அவர்களுடைய உயிர் உடமைகளுக்குப் பங்கம் விளைவிக்கப்படமாட்டாது என்றும் அவர்களுக்கு எல்லா வகையான மத சுதந்திரமும் உண்டு என்றும் அண்ணலார் (ஸல்) நம்பிக்கையூட்டி இருந்தார்கள். ஆயினும் யூத அறிஞ்ர்களும் குறிப்பாக இஸ்லாமிய இயக்கத்தின் வளர்ச்சி அவர்களுக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது! அவர்களது இந்த நிலைக்குரிய காரணங்களில் சில பின்வருமாறு:-

1.      சமய ரீதியாக ஒரு வகையான மேம்பாடும் உயர்வும் இதுவரை யூதர்களுக்கு இருந்து வந்தது. மக்கள் அவர்களை இறையச்சம், சமயப்பற்றுக் கொண்டவர்கள், மதிப்புக்குரியவர்கள் எனக் கருதினர். ஆனால் இப்போது இஸ்லாமிய இயக்கம் பரவத் தொடங்கியதன் விளைவாக யூதர்களிடம் நிலவிய தவறான மதக் கருத்தோட்டம், சமயப் பண்பு, அவர்கள் கடைப்பிடித்த வியாபார நோக்கம் கொண்ட இறைபக்தி ஆகியவை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருந்தன.

அண்ணலாரின் அறிவுரைகளைக் கேட்டு மக்களுக்கு உண்மையான மார்க்கப்பற்று எது? உண்மையான இறைபக்திக்கு பொருள் என்ன என்பதெல்லாம் புரியலாயிற்று. இதன் விளைவாக யூத அறிஞர்கள் மற்றும் குருமார்களின் ‘தொழில்’ குன்றிக் கொண்டிருந்தது. மேலும் அவர்களது செல்வாக்கும் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது.

2.      திருக்குர்ஆனில் யூதப் பொதுமக்கள் மற்றும் அவர்களின் அறிஞ்ர்கள் மார்க்கப் பற்றுடையவர்களின் ஒழுக்கங்களையும் நடைமுறை விவகாரங்கள். செயற்பாடுகளையும் பகிரங்கமாக விமர்சித்துப் பல வசனங்கள் இறங்கிக் கொண்டிருந்தன.

எடுத்துக்காட்டாக, ‘அவர்கள் பொய்யான விஷயங்களை செய்திகளைச் செவிமடுப்பார்கள், விலக்கப்பட்ட உணவை அதிகமாக உண்ணக்கூடியவர்கள்’ (5 : 42) அவர்களுக்கு தடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் வட்டியை வாங்கித் தின்னக்கூடியவர்களாயிருந்தார்கள். மேலும் இவர்கள் மக்களின் செல்வங்களை அநியாயமாக அபகரித்து உண்டு கொண்டிருந்தார்கள். (4 : 161)

இப்படிப்பட்ட பல விமர்சனங்கள் அல்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான அல்பகரா, மூன்றாவது அத்தியாயமான ஆல இம்ரான், ஐந்தாவது அத்தியாயமான அல்மாயிதா ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் செவியுற்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் சிலரைத் தவிர அவர்களில் பலரும் கோபம் கொண்டிருந்தனர், இஸ்லாமிய இயக்கத்தை தாறுமாறாக எதிர்த்துக் கொண்டிருந்தனர்.

3.      இஸ்லாத்தின் வளர்ந்துவரும் அதிகாரத்தைக் கண்டு அவர்களுக்கு, ‘ஒரு நாளில்லா விட்டாலும் இன்னொரு நாள் நாம் இதன் முன்னால் தலை தாழ்த்தியே தீர வேண்டியிருக்கும்’ என்னும் ‘ஆபாய நிலை’ கண்முன்னே தெரியலாயிற்று. இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் யூதர்கள், இஸ்லாமிய இயக்கதின் கடும் எதிரிகளாய் ஆகிவிட்டிருந்தார்கள்.

பானு கைன்காஃ போர்

பத்ருப் போருக்குப் பின்னர் அனைவருக்கும் முதலாக யூதர்கள் தான் எதிர்ப்புக் காட்டினார்கள். இப்போது இஸ்லாம் ஒரு பெரும் சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறது என்னும் அபாய நிலை அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படலாயிற்று. ஆகவே பத்ருப் போர் நடந்து முடிந்த உடனேயே ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் யூதக் குலமான பனூ கைன்காஃ முஸ்லிம்களுக்கெதிராக போர்ப் பிரகடனம் செய்தது. அண்ணலாருடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டது. இந்தப் போருக்கு உடனடிக் காரணமாய் அமைந்த நிகழ்ச்சி இதுதான் :

ஒரு யூதன் ஒரு முஸ்லிம் பெண்ணை அவமரியாதை செய்து விட்டான் இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அவரது கணவன் அந்த யூதனைக் கொன்றுவிட்டார். இதற்குப் பழி வாங்கும் விதத்தில் யூதர்கள் அந்த முஸ்லிம்கைக் கொன்று விட்டார்கள். அண்ணலார் (ஸல்) இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்து விட முயன்றார்கள். ஆனால் ‘பத்ருப் போரில் பின் வாங்கிச் சென்றுவிட்ட குறைஷிகள் அல்லர் நாங்கள், எங்களுடன் மோத நேரிட்டால் உங்களுக்கு போர் என்றால் என்ன என்று காட்டிவிடுவோம்’ என்று யூதர்கள் கூறினார்கள்.

இவ்விதம் யூதர்கள் சார்பில் ஒப்பந்தத்தை மதிக்காமல் போர் அறிவிக்கப்பட்ட போது அண்ணலாரும் போருக்கான ஆயத்தங்களைச் செய்தார்கள். யூதர்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக அடைந்து கொண்டார்கள். பதினைந்து நாட்கள் முற்றுகைக்குப் பிறகு அந்த யூதர்களை நாடு கடத்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி எழுநூறு யூதர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

கஅப் இப்னு அஷ்ரஃப் கொல்லப்படுதல்

யூதர்களிடையே கஅப்பின் அஷ்ரஃப் என்பவன் பிரபலமான கவிஞனாக இருந்தான். அவன் பத்ருப் போருக்குப் பின்னர் சில கவிதைகளை இயற்றினான். அந்தக் கவிதைகளினால் முஸ்லிம்களுக்கெதிராக மக்கா வாசிகளுடைய உணர்வலைகள பொங்கி எழுந்தன. அந்தக் காலத்தில் கவிஞ்ர்களுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இந்த கஅப், பத்ருப் போரில் கொல்லப்பட்ட குறைஷித் தலைவர்களைக் குறித்து துக்கம் ததும்பும் இரங்கற்பாக்களை எழுதி, அவற்றை எடுத்துக் கொண்டு மக்கா நகர் சென்று பாடிக்காட்டுவான். அதனைக் கேட்பவர்கள் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள். மேலும் அவன் அண்ணலாரை ஏசியும் வசைக் கவிதைகள் எழுதினான். மக்களை வித விதமாக அண்ணலாருக்கெதிராகத் தூண்டினான். ஒருமுறை விருந்துக்கு அழைக்கும் சாக்கில் அண்ணலாரைக் கொலை செய்து விடவும் சதி செய்தான். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணலார் (ஸல்) தம் தோழர்களுடன் இந்த சூழ்நிலையில் அடுத்து என்ன செய்வது? என்று ஆலோசனை கலந்தார்கள். பின்னர் அண்ணலாரின் இசைவுடன் முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅபை ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு ரபீ உல் அவ்வல் மாதம் கொலை செய்து விட்டார்கள்.

பனூ நுளைர் வெளியேற்றப்படல்

பனூ நுளைர் குலத்து யூதர்கள் பல விஷயங்களில் நம்பிக்கை துரோகம் செய்து ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்தார்கள். பலமுறை அண்ணலாரைக் கொலை செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட ரகசிய சதித் திட்டங்களைத் தீட்டினார்கள். இந்த நோக்கித்திற்காக மக்கா நகர குறைஷிகளும் அவர்களை தூண்டினார்கள். இவர்களுடைய தீய செயல் எல்லை மீறிப் போய்விட்ட போது அண்ணலார் (ஸல்) இவர்களுடைய கோட்டையை முற்றுகையிட்டார்கள் முற்றுகை 15 நாட்கள் வரை நீடித்தது. இறுதியில் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முற்றுகை தளர்த்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி தம்மால் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு பொருட்களை எடுத்துக் கொண்டு தம் வீடகளிலிருந்து வெளியேற பனூ நுளைர் குலத்தினர் சம்மதித்தனர். இவர்கள் ஏராளமான பொருட்களை தம்முடன் கொண்டு சென்றார்கள். தம்மால் எடுத்துச் செல்ல முடியாத வற்றை மட்டுமே அவர்கள் விட்டுச் சென்றனர்.

இப்போது முஸ்லிம்களின் இரு பகைவர்களான அரபு இணை வைப்பாளர்களும் குறிப்பாக மக்கா நகர குறைஷிகளும், யூதர்களும் சேர்ந்து முஸ்லிம்களை ஒழித்துக் கட்டிட வேறுபல திட்டங்களை சிந்திக்கலாயினர். எல்லாக் குலங்களும் ஒன்று சேர்ந்து மதீனா நகர் மீது தாக்குதல் நடத்திட ஆயத்தங்கள் செய்யலாயின. பல குலங்கள் இணைந்து மதீனா நகரைத் தாக்கிட தயாராகிக் கொண்டிருக்கின்றன என்ற செய்திகள் அண்ணலாருக்குத் தெரிய வந்தது. உடனே அண்ணலார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒரு குழுவை அழைத்துக் கொண்டு அவற்றை எதிர்த்துப் போராடிடப் புறப்பட்டார்கள். ஆனால் எதிரிகள் மோதவில்லை, ஓடி விட்டார்கள். ஒருமுறை ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு முஹ்ர்ரம் மாதத்தில் ‘தாத்துர் ரிகா’ என்னுமிடம் வரை அண்ணலார் சென்றார்கள். இரண்டாம் முறை ஹிஜ்ரி 5 ஆம் ஆணடமு ரபீஉல் அவ்வல் மாதத்தில் ‘தௌமத்துல் ஜன்தல்’ என்னுமிடம் வரை சென்றார்கள்.

அஹ்ஸாப் போர்

பனூ நதீர் குலத்தார் மதீனாவிலிருந்து வெளியேறி கைபர் சென்றார்கள். அங்கு அவர்கள் இஸ்லாத்திற்கெதிராக பெரியதொரு சதித் திட்டத்தைத் தொடங்கினார்கள். அக்கம் பக்கத்திலிருந்து குலங்களை முஸ்லிம்களுக்கெதிராகத் தூண்டி விட்டார்கள். மக்கா நகருக்குச் சென்று குறைஷிகளைப் போருக்காக ஆயத்தப்படுத்தினார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்குதல் தொடுத்தால், இந்தப் புதிய இயக்கத்தை நசுக்கி விடலாம் என்றும் கூறினார்கள். ஆகவே யூதர்களின் குலங்கள் பலவும் மக்கா நகர குறைஷிகளும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரும் படையை ஆயத்தப்படுத்தினார்கள். அதன் எண்ணிக்கை பத்தாயிரம் என்று மதிப்பிடப்படுகின்றது.

இத்துணைப் பெரிய அளவில் மதீனா நகர் மீது தாக்குதல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன என்ற செய்திகள் அண்ணலாருக்கு எட்டின. அப்போது அண்ணலார் தமது தோழர்களுடன் கலந்து ஆலோசித்தார்கள். சல்மான் பார்ஸீ (ரலி) பெரும் எண்ணிக்கையுடன் கூடிய அவர்களது படையுடன் மோதுவது உசிதமானதல்ல, நமது படை பாதுகாப்பான ஓரிடத்தில் இருக்க வேண்டும். பகைவர்கள் நேரடியாக நம்கைத் தாக்க முடியாத வண்ணம் நம்மைச் சுற்றிலும் அகழிகள் தோண்டிக் கொள்ள வேண்டும் என்று அலோசனை கூறினார்கள். இந்தக் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அகழிகள் தோண்டிட ஆயத்தங்கள் நடைபெறலாயின.

அகழிகள் தயாராகுதல்

மதீனா நகரம் மூன்று திசைகளிலும் வசிப்பிடங்களாலும் பேரீத்தந் தோட்டங்களாலும் சூழப்பபட்டிருந்தது. ஒரேயொரு திசை மட்டும் தடுப்பேதுமின்றி திறந்திருந்தது. அண்ணலார் (ஸல்) அவர்கள் மூவாயிரம் தோழர்களை அழைத்துக் கொண்டு அந்த திசையில்தான் அகழ் வெட்டும்படி உத்திரவிட்டார்கள்.

இந்தப் பணி ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் பிறை 8-ல் தொடங்கியது. அண்ணலார் தாமே தமது திருக் கரங்களால் அகழ் வெட்டும் பணியைத் தொடங்கி வைத்தார்கள். பத்துப் பேருக்கு பத்து கெஜ பூமி என்று பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள். 5 கெஜம் ஆழமாக அகழி வெட்ட வேண்டியிருந்தது. 20 நாட்களுக்குள் மூவாயிரம் முஸ்லிம்கள் இணைந்து இந்த அகழிகளை வெட்டி முடித்தார்கள். மக்களோடு சேர்ந்து அகழ் வெட்டும் பணியில் அண்ணலாரும் உழைத்தார்கள். ஓரிடத்தில் பாறையொன்று வந்தது. மக்கள் எவ்வளவோ முயன்றும் அது உடயவில்லை. அண்ணலார் அந்த இடத்திற்குச் சென்று தமது திருக் கரங்களால் அதனை ஓங்கி வெட்ட அது தூள் தூளாக உடைந்து சிதறியது. இந்த நிகழ்ச்சி அண்ணலாரின் முஃஜிஸாத்களில் (அற்புதமான செயல்களில்) ஒன்றாகும்.

இறைமறுப்பாளர்களின் தாக்குதல்

நிராகரிப்பாளர்களின் படை மூன்று பகுதிகளாகப்பிரிந்து மூன்று திசைகளிலிருந்தும் மதீனாவின் மீது தாக்குதல் நடத்தியது. இந்தக் தாக்குதல் மிக்க கடுமையானதாயிருந்தது. இதனைக் திருக்குர்ஆன் பின்வரும் சொற்களில் வர்ணிக்கின்றது:

‘பகைவர்கள் மேல் திசையிலிருந்து (கிழக்கிலிருந்து) பள்ளத்தின் பக்கம் (மேற்கின் பக்கம்) உங்கள் மீது பாய்ந்தபோது (கடுமையான சூழ்நிலையின் காரணத்தால் உங்கள்) விழிகள் இமைக்காமலும், (உங்களுடைய) இருதயங்கள் உங்கள் தொண்டைகளை அடைத்த போதும் எண்ணிய சமயத்தை நினைத்துப் பாருங்கள். அப்போது முஸ்லிம்களை சோதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மேலும் அவர்கள் பலமாக அலைக் கழிக்கப்பட்டனர். (33 : 10 – 11)

இது கடுமையான சோதனைக்குரிய நேரமாக இருந்தது. ஒருபுறம் கடும் குளிர் பெய்யும் மோசமான பருவம், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, பல வேளைகள் பட்டினி, மறுபுறம் இரவில் உறக்கமில்லாமை, பகலில் ஓய்வில்லாமை, இத்துடன் எந்த நேரமும் உயிருக்கு அபாயம்!

செல்வமும், குழந்தை குட்டிகளும் எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய நிலை, எதிரிகளிடம் இருந்த ஏராளமான படைபலம், எத்தகைய கடுமையான சூழ்நிலை இது! வாய்மையான உறுதியான இறைநம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இத்தகைய சந்தர்ப்பத்தில் நிலை குலையாமல் திண்ணமாக நிற்க முடியும்.

பலவீனமான இறைநம்பிக்கையுடையவர்களால், நயவஞ்சகர்களால் இந்த நிலைமைகளை எதிர்த்துப் போராட முடியாது. எனவே முஸ்லிம்களின் படையில் புகுந்து விட்டிருந்த நயவஞ்சகர்கள் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படையாகத் தம்மை இனங்காட்டிக் கொண்டார்கள். மேலும் அவர்கள் மக்களிடம் கூறத் தொடங்கினார்கள். ‘நம்மிடம் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் (வெற்றியும் உதவியும் அளிப்பதாக) செய்திருந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் ஏமாற்றுதான்’ (33 : 12)

இந்த நயவஞ்சகர்கள் தம் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு சாக்குப் போக்குகளைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். மேலும் ‘யத்ரிப் வாசிகளே! திரும்பிச் சென்று விடுங்கள். இன்று உங்களுக்கு நிலைக் கொள்ளுமிடம் ஏதுவும் இல்லை’ என்று கூறினார்கள். இவர்கள் அண்ணலாரிடம் ‘எங்கள் வீடுகள் பாதுகாப்பின்றி இருக்கின்றன. எனவே வீடுகளிலேயே தங்கி அவற்றைப் பாதுகாக்க எங்களுக்கு அனுமதி தாருங்கள்’ (33 : 14) என்று கூறலானார்கள்.

ஆனால், எவருடைய உள்ளங்களில் இறை நம்பிக்கைகுடி கொண்டிருந்ததோ, எவர் தம் இறை நம்பிக்கையில் வாய்மையுடையவர்களாயிருந்தார்களோ அவர்களின் நிலை இந்த சந்தர்ப்பத்தில் முற்றிலும் வேறாக இருந்தது. அவர்கள் இறை மறுப்பாளர்களின் இந்தப் படையைக் கண்டவுடன் ‘அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நமக்கு வாக்களித்த நிலைமைகள் இவைதான் என்று கூறினார்கள். இந்த நிலைமைகளைக் கண்டு அவர்களுக்குள்ளே இறை நம்பிக்கை (ஈமானிய) உணர்வு கிளர்ந்தெழுந்து பசுமையாகிவிட்டது. அவர்கள் இன்னும் அதிகமாக இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் கீழ்ப்படியத் தயாராகி விட்டார்கள். இந்தக் கடுமையாக நிலைமைகள் அவர்களுக்குள் ஒரு சிறிதும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. (33 : 22 – 23)

பகைவர்கள் ஏறத்தாழ ஒரு மாத காலம் வரை முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகை எந்த அளவிற்குக் கடினமாயிருந்ததென்றால் சில சமயங்களில் உணவுப் பொருட்கள் கிடைப்பதுகூட கடினமாக இருந்தது. இதனால் தொடர்ந்து பல வேளைகள் அவர்கள் பட்டினி கிடந்தார்கள். முற்றுகை மிகக் கடுமையானதாகவும் ஆபத்தானதாகவும் ஆகிவிட்டிருந்தது. அண்ணலார் தமது படையை அகழிகளின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைத்து விட்டிருந்தாகள். இறைமறுப்பாளர்கள் வெளியிலிருந்து கற்களும் அம்புகளும் எறிந்த வண்ணமிருந்தனர். முஸ்லிம்களின் தரப்பிலிருந்தும் அவர்களுக்கு பதிலடி தரப்பட்டு வந்தது. இதற்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தாக்குதல்களும் நடைபெற்று வந்தன. சில வேளைகளில் இறைமறுப்பாளர்களின் தாக்குதல் வேகம் எந்த அளவிற்கு அழுத்தமாக இருந்ததென்றால், அவர்களை அப்பாலுள்ள பக்கத்திலேயே தடுத்து நிறுத்திட முழு முயற்சியுடன் மும்முரமாக மோத வேண்டியிருந்தது. எந்த அளவிற்கென்றால் ஒரு சில சமயங்களில் தொழுகையே கூட (களா) வேளை தவறி விட்டதுண்டு. (அதாவது தொழுகைகளைக் கூட உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது).

அல்லாஹ்வின் உதவி

முற்றுகை எந்த அளவிற்கு நிண்டுகொண்டே சென்றதோ அந்த அளவிற்கு தாக்குதல் நடத்துவோரின் ஊக்கம் குறைந்து கொண்டே சென்றது. பத்தாயிரம் பேருக்கு உண்ணவும், பருகவும் ஏற்பாடு செய்வதென்பது எளிதான ஒரு காரியமாய் இருக்கவில்லை, அத்துடன் கடும் குளிர் வேறு வாட்டி வதைத்துக் கொணடிருந்தது. இதற்கிடையே கடுத் புயல் காற்று ஒன்று வீசியது. அதன் விளைவாக இறைமறுப்பாளர்களின் கூடாரங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்துவிட்டன. படை முழுவதும் சின்னாபின்னமாகச் சிதறியது. அது கடும் சூறாவளிக் காற்றாக மட்டும் இருக்கவில்லை. இறைவன் அனுப்பிய வேதனையாகவும் அது இருந்தது. உண்மையிலேயே இந்தப் புயலை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கருணையாகவும் இறைமறுப்பாளர்களுக்கு வேதனையாகவுமே அனுப்பியிருந்தான். இந்த நிகழ்ச்சியை அல்லாஹ் தனது அருட்கொடை என்று கூறுகின்றான்.

‘முஸ்லிம்களே! இறைவனின் இந்த அருட்கொடையை நினைவு கூறுங்கள், உங்களைத் தாக்க படைகள் வந்தபோது நாம் அவர்கள் மீது கடும் சூறாவளிப் புயலை அனுப்பினாம். மேலும் நீங்கள பார்க்க முடியாத ஒரு (வானவர்) படையையும் அனுப்பினோம்’ (33 : 9)

ஆகவே இறைமறுப்பாளர்களால் இந்த நிலைமைகளை எதிர்த்துப் போராடிட முடியவில்லை. அவர்களுடைய வலிமை தகர்ந்து போய்விட்டது. யூதர்கள் முதலில் மதில்மேல் பூனையாக இருந்தனர். முஸ்லிம்கள் மீது சமயம் பார்த்து பாய்ந்திடக் காத்திருந்தனர். ஆனால் படைகள் சிதைந்து, குறைஷிகள் களத்தில் தனிமையில் நிற்கும் நிலை ஏற்பட்டவுடன் அவர்களுக்கும் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

இவ்விதம் வெறும் இறையருள் மற்றும் அவனது மறைவான உதவியினால் மதீனாவைக் கவ்விக் கொண்டிருந்த போர் மேகங்கள் தாமாகவே விலகி வெளுத்து விட்டன. இந்தப் போர் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் பாணி மிகவும் அலாதியானது. அதில் முஸ்லிம்களுடைய பயிற்சிக்கான அம்சங்களும் மற்றும் அவர்களுக்கு அறிவுரையளிக்கும் கருத்துக்களும் எடுப்பாகக் காணப்படுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு :

அல்லாஹ்வின் அருளையே சார்ந்திருத்தல்

‘அசல் வலிமை அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது. நடப்பவை அனைத்தும் அவனது நாட்டம் மற்றும் கட்டளைப்படியே நடக்கின்றன’ என்று இறை நம்பிக்கையாளன் உறுதியாக நம்புகின்றான். அவன் தனது வெற்றி எதனையும் தனது திட்டங்கள், உபாயங்களின் பலனாக அல்லது தனது வலிமையின் விளைவாக ஏற்பட்டவை என்று கருதுவதில்லை, மாறாக உண்மையில் இது அல்லாஹ்வின் அருள் என்றே கருதுகின்றான். அகழ்ப் போரில் பத்துப் பனிரண்டாயிரம் வீரர்களைக் கொண்ட எதிரிப்படை, மூவாயிரம் முஸ்லிம்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. திகைத்துப் போய் அது திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.

இந்தச் சந்தர்ப்பம் எத்தகையதாய் இருந்ததென்றால் முஸ்லிம்களில் சிலர் இவ்வாறு சிந்திக்கலானார்கள். இது அவர்களுடைய உபாயத்தின் பலன் (அதாவது அகழி வெட்டியதின் பலன்) என்று எண்ணலானார்கள். எனவே இது தமது திட்டமிடும் திறன் மற்றும் சமயோ சித அறிவு என அவர்கள் பெருமைப்படக் கூடியதாய் அமைந்திருந்தது அந்தச் சூழ்நிலை. ஆனால் அல்லாஹ் சரியான நேரத்தில் இந்தப் பலவீனத்திலிருந்து அவர்களைப் காப்பாற்றுவதற்காக ‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் உபகாரத்தை நினைவு கூருங்கள்! படைகள் உங்கள் மீது பாய்ந்து தாக்கியபோது நாம் கடும் புயலை அவர்கள் மீது அனுப்பினோம். நீங்கள் (கண்களால்) பார்க்க முடியாத ஒரு படையையும் அனுப்பினோம்’ (33 : 9)

இஸ்லாமிய இயக்கத்தின் ஊழியர்களுக்கு இந்த மனப் பயிற்சியே தேவைப்படுகின்றது. அவர்களுடைய நம்பிக்கை முழுவதும் அல்லாஹ்வைச் சார்ந்தே இருக்க வேண்டும். அல்லாஹ்வை மட்டுமே எல்லா காரண காரியங்களின் மூலகர்த்தாவாகக் கருதிய வண்ணம் இறைநெறியை நிலைநாட்டும் போராட்டத்தில் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டேயிருக்க வேண்டும, எதிரியின் வலிமையும் சக்தியும் எதுவாயிருந்தாலும் சரியே!

இறைநம்பிக்கைக்கான சோதனை

மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களும், துயரங்களும் அவனுடைய இறைநம்பிக்கைக்கு உரை கற்களாக விளங்குகின்றன. அவனுக்கேகூட அப்போது தாம் எந்த அளவிற்கு இந்த இறைப்பணிக்கு தகுதியுடையவர்களாக இருக்கின்றோம் என்று தெரிந்து போய் விடுகின்றது. மற்றவர்களும் இந்தப் பாதையில் எந்த மனிதன் எந்த அளவிற்கு உறுதியாக நிலைத்து நிற்க முடியும் என்பதை மதிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

யார் தம் குறிக்கோளின் மீது வாய்மையான நேசம் கொண்டுள்ளார், மேலும் தம் உயிரையும் கூட பணயம் வைத்து அநதக் குறிக்கோளுக்காக உழைக்கும் தன்மை யாரிடம் எந்த அளவுக்கு இருக்கிறது. என்பதையெல்லாம் சாதாரண சூழ்நிலையில் துல்லியமாக மதிப்பிட முடிவதில்லை. பல சந்தர்ப்பங்களில் மனிதன் தன்னைப் பற்றியே தவறான கருத்தில் உழன்று கிடக்கினறான். ஆனால் கடுமையான ஒரு நேரம் வரும் போது அசலும் போலியும் செல்லக்கூடியதும் செல்லாததும் தெளிவாகப் புலப்பட்டு விடுகின்றது.

அகழிப் போர் இந்தப் பணியைத்தான் செய்தது. மதீனா நகரில் முஸ்லிம்களுடன் கணிசமான ஓர் எண்ணிக்கையில் நயவஞ்சகர்களும் போலியான இறைநம்பிக்கை கொண்டவர்களும் இணைந்திருந்தார்கள். முஸ்லிம் பொதுமக்களுக்கு இவர்களுடைய உண்மை நிலை தெரிந்துவிடுவது அவசியமாயிருந்தது.

ஆகவே இந்தத் துன்ப வேளையில் அவர்களின் முகத்திரை கிழந்து விட்டது! இடைவிடாமல் அகழ் வெட்டுகின்ற பணி, உணவையும் பானத்தையும் பொருட்படுத்தாமல், இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைப்பது. இத்தனை பெரும் கூட்டத்தை எதிர்த்துப் போராட தம் உயிரையும் துச்சமாக மதித்துத் தயாராகிவிடுவது, மேலும் இருபது, இருபத்திரண்டு நாட்கள் வரை தொடர்ந்து அச்சம், பீதி ஆகியவற்றுக்கிடையே இரவுத் தூக்கத்தையும் பகலிக் ஓய்வையும் புறக்கணித்துப் பாடுபடுவது ஆகியன எளிதான காரியங்களாய் இருக்கவில்லை. தமதுள்ளங்களில் உண்மையான இறைநம்பிக்கை கொண்டிராதவர்களால் இந்தக் கடினமான நிலைகளைத் தாங்க முடியவில்லை.

அவர்களில் சிலரோ, ‘சரிதான், இறைத்தூதர் நம்மிடம் வெற்றியும் உதவியும் கிடைக்கும் என்று வாக்களித்திருந்தார்கள். ஆனால்  இப்போதோ, காற்று திசை மாறி வீசிக் கொண்டிருக்கின்றதே! அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நம்மிடம் செய்திருந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் ‘ஏமாற்று மோசடியே’ என்று நாங்கள் தெரிந்து கொண்டோம்’ (33 : 12) எனப் பேசலானார்கள்.

இன்னும் சிலரோ, தமது வீடுகளைப் பாதுகாத்திட வேண்டியிருப்பதாக சாக்கு போக்கு சொல்லி போர்க் களத்திலிருந்து நழுவிச் சென்று விட்டார்கள். ஆனால் இதற்கு நேர் எதிராக எந்த நல்லடியார்களின் உள்ளங்களில் உண்மையான பிழையற்ற, இறை நம்பிக்கை குடிகொண்டிருந்ததோ அவர்கள் மட்டும் இந்தச் சூழ் நிலையினால் முற்றிலும் வேறுவிதமான ஒரு தாக்கத்திற்கு உள்ளானார்கள். எதிரிப் படைகள் அலையென திரண்டு வருவதை கண்டு அவர்கள் பின்வருமாறு கூறலானார்கள்:

‘சரிதான், இந்த நிலைமைகளைப் பற்றிய செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு முன்பே அறிவித்து விட்டிருந்தாகள். இதனைக் குறித்த வாக்குறுதியைத்தான் இறைவனும் இறைத்தூதரும் எங்களுக்கு கொடுத்திருந்தார்கள். அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் உண்மையே கூறியிருக்கிறார்கள்.’ இந்த நிலைமைகளினால் அவர்களுக்கு இறை நம்பிக்கையின் வலிமை இன்னும் அதிகமாகி விட்டது. அவர்கள் இன்னும் அதிகமாகக் கீழ்ப்படிந்திடத் தயாராகி விட்டார்கள். (33 : 22)

பலவீனத்தின் ஆணி வேர்

உயிர், உடைமைக்குச் சேதமேற்படும் என்னும் அச்சம் மனிதனின் மிகப்பெரும் பலவீனமாகும். ஏன், எல்லா பலவீனங்களுக்கும் ஆணிவேராக இருப்பதும் இந்த அம்சம்தான். இஸ்லாம் இறைவனின் மீதும் அவனது பண்புகளின் மீதும் எந்த விதத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று கோருகின்றதோ அதில் அடிப்படையிலேயே இன்னொரு நம்பிக்கையும் அடங்கியுள்ளது. அந்த நம்பிக்கை இதுதான்:

வாழ்வும் சாவும் அல்லாஹ்வின் கைவசத்திலேயே உள்ளன. லாபமும் இழப்பும் அனைத்துமே அல்லாஹ்வின் கரங்களிலேயே உள்ளன. மரணத்தைத் தடுத்து நிறுத்திடவோ லாபத்தை இழப்பாக்கவோ, இழப்பை லாபமாக மாற்றிடவோ வலிமையுடையவர் எவருமில்லை இந்தக் கொள்கையும் இந்த நம்பிக்கையும் தான், ஒரு முஸ்லிமின் வலிமைக்கான அடிப்படையாகும். இந்த அடிப்படை எவ்வளவு பலவீனம் முஸ்லிம்களின் ஒவ்வொரு செயலிலும் தெளிவாகப் புலப்படும். ஆகவே இந்த பலவீனத்தை நீக்குவதற்காக இறைவன் மிகவும் தெளிவாகக் கூறினான்:

‘நபியே! அவர்களிடம் கூறிவிடுங்கள்: நீங்கள் மரணம் நேரிட்டு விடும் அல்லது கொல்லப்பட்டு விடுவோம் என்னும் அச்சத்தால் உந்தப்பட்டு பின்வாங்கி ஓடுவீர்களாயின் அவ்வாறு ஓடுவது உங்களுக்கு யாதொரு பலனுமளிக்காது. மேலும் இதனையும் அறிவித்து விடுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு இழைப்பை உண்டுபண்ணத் தீர்மானித்து விட்டால் அல்லாஹ்விடமிருந்து அவர்களைப் பாதுகாப்பவர் எவர் இருக்கின்றார்? அவர்களுக்கு அல்லாஹ் பயன் ஏதும் அளிக்கத் தீர்மானித்து விட்டால் அவனைத் தடுத்து நிறுத்துபவர் யார் இருக்கிறார் (என்பதையாவது அவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் தம்மைப் பாதுகாப்பவராகவோ தமக்கு உதவுபவராகவோ காணமாட்டார்கள். (என்பதை நினைவில் வைக்க வேண்டும்) (33 : 17)

இந்த நம்பிக்கை ஒருவனின் உள்ளத்தில் குடி கொண்டு இருக்கிறதென்றால் பின்வாங்கிச் செல்வதற்கான பேச்சே இல்லையே? ஒவ்வொரு கடுமையான சாதகமற்ற சந்தர்ப்பத்திலும் நெருக்கடி மிக்க கால கட்டத்திலும் தன் இறைநம்பிக்கையை உரைத்துப் பார்ப்பவனாக சோதனை செய்பவனாக மனிதன் இருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் மனிதன் தன்னைப் பற்றிய ஏமாற்றமான நினைப்பில் ஆழ்ந்து கிடக்கின்றான். சோதனைக்கான நேரம் வரும்போது தான் தன்னைப் பற்றி அவன் சரியான மதீப்பீடு செய்ய முடிகிறது.

இறைத்தூதரின் பின்பற்றத்தக்க முன்மாதிரி

இந்தப் போர் குறித்த விமர்சனத்திற்கிடையே முஸ்லிம்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையும் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வானது நீங்கள் பின்பற்றத் தகுந்த ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. ஆனால் அல்லாஹ்வைச் சந்திக்க இருப்பதை மறுமையில் கிடைக்கவிருக்கும் வெகுமதிகளை நம்புகிறவர்களும் மேலும் இறைவனை அதிகம் நினைவு கூர்பவர்களும்தான் அந்த முன்மாதிரியிலிருந்து பயன் பெற்றிடத் தகுதியானவர்கள் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தம் ஊக்கங்களை முனைப்பாக வைத்துக் கொள்வதற்காகவும், கடினமான இனக்கமற்ற நிலையில் தம் உள்ளங்களை உறுதியாக வைத்துக் கொள்வதற்காகவும், தம் இலட்சியங்களில் நிலைத்திருப்பதற்காகவும் மேலும் எந்நிலையிலும் இறைவனையே நம்பி அவனையே சார்ந்திருப்பதாகவும் முஸ்லிம்களுக்கு பயிற்சி தர இந்தச் சந்தர்ப்பம் பொருத்தமாக அமைந்தது.

நிலைகுலையாமை, தம் முடிவுகளை அழுத்தமாகச் செயல்படுத்தும் மனோபலம், இறைவனையே சார்ந்திருக்கும் போக்கு, கொந்தளிப்பான நிலையிலும் பொறுமையை மேற்கொள்ளுதல் ஆகியவை கொண்ட அண்ணலாரின் ஆளுமை இந்த நோக்கத்திற்கு ஓர் அழகிய நடைமுறை முன்மாதிரியாக விளங்கியது.

அந்தக் காலகட்டத்திற்கு மட்டுமல்லாமல், இறுதி நாள் வரையில் இறைநெறியை நிலைநாட்டுவதைத் தம் குறிக்கோளாய்க் கொண்டு அந்தப் பாதையில் அடியெடுத்து வைக்கும் இலட்சியவாதிகள் அனைவருக்கும் அண்ணலாரின் அந்த முன்மாதிரி பின்பற்றத்தக்கதாக விளங்குகிறது. அது அந்த இலட்சியவாதிகள் தமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு திருப்பத்திலும் தம் முன் வைத்திருக்க வேண்டிய முன்மாதிரியாகும். இதுதான் அவர்களுக்கு சத்தியப் பாதையில் ஒளியூட்டும் எழில் விளக்காகும்.

பனூ குறைலா குலத்தாருக்குத் தண்டனை

அண்ணலார் (ஸல்) மதீனா நகருக்கு வருகை தந்தவுடன் யூதக் குலங்களுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார்கள். சில நாட்கள் வரை யூதர்கள் தம் ஒப்பந்தங்களின் மீது நிலைத்து நின்றார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அவற்றை முறிக்கத் தொடங்கினார்கள். இந்தக் காரணத்தினால்தான் பனூ நுளைர் குலத்தார் மதீனாவை விட்டே வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் பனூ குறைலா குலத்தினர் மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அவர்கள் தம் கோட்டைகளில் அமைதியாக வாழ அண்ணலார் அனுமதி தந்தார்கள்.

அகழ்ப்  போரின்போது, மற்ற யூதக் குலங்கள் பனூ குறைலா குலத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக உசுப்பிவிட்டார்கள். எனவே அவர்களும் அகழ்ப் போரில் கலந்து கொண்டார்கள். அண்ணலாருடன் தாம் செய்து கொண்ட ஒப்பந்தங்களைச் சிறிதும் மதிக்கவில்லை. அகழ்ப்போர் மேகங்கள் விலகிவிட்ட பின்னால் அண்ணலார் (ஸல்) அவர்கள் அனைவருக்கும் முதலாக பனூ குறைலா குலத்தாரின்பால் கவனம் செலுத்தினார்கள். அவர்களுடைய ஒப்பந்த விரோதப் போக்கிற்கும் நம்பிக்கைத் துரோகத்திற்குமுரிய தண்டனை அந்த குலத்தவருக்கு அவசியம் தரப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிராக அரபுலம் முழுவதுமே திரண்டு வந்த நேரத்தில் வெளித் தோற்றத்தில் முஸ்லிம்கள் தப்பிக்க வழியேதும் இல்லாதிருந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் இந்த நம்பிக்கை துரோகத்தைச் செய்திருந்தனர். பனூ குறைலாவினர் முஸ்லிம்கள் விஷயத்தில் வெளிப்படையாக எதிர்க்கும் பகைவனைவிட மிக அதிக ஆபத்தானவர்கள் என்று தமது செயலால் நிரூபித்து விட்டார்கள். அவர்கள் முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து, தம்மைக் குறித்து அச்சமற்றவர்களாகவும் ஆக்கி விட்டாகள். பின்னர் நேரம் பார்த்து தங்கள் வேலையைக் காட்டி விட்டார்கள். முஸ்லிம்களை அழித்தொழிக்கும் முயற்சியில் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

ஆகவே பனூ குறைலா
குலத்தாரின் கோட்டைகள் முற்றுகையிடப்பட்டன. முஸ்லிம்களின் இந்த முற்றுகை ஒரு மாத காலம் வரை நீடித்தது. இறுதியில் நிர்ப்பந்தத்திற்கும் இயலாமைக்கும் உள்ளாகி பனூ குறைலா குலத்தார் சரணடைந்தனர். அப்பொழுது அவர்களின் மத கிரந்தமான தவ்ராதின் கட்டளைபடியே அவர்களைக் குறித்து முடிவு செய்யப்பட்டது. அவர்களில் போர் புரிய ஆற்றலுடையவர்கள் கொல்லப்பட வேண்டும். மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய செல்வமும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஏறத்தாழ 1400 பேர் அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் கோட்டைச் சுவரின் மீதிருந்து ஒரு கல்லைப் புரட்டி விழச்செய்து, இறைநம்பிக்கை கொண்ட ஒரு நிரபராதியை கொன்ற குற்றத்திற்காக கொல்லப்பட்டாள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை

________________________________________

இறையில்லமான கஅபா இஸ்லாத்தின் அசல் கேந்திரமாக இருந்தது. அதனை இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் திருமகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் கட்டளையால் நிர்மாணித்திருந்தார்கள். இஸ்லாத்தின் இந்தக் கேந்திரத்தை விட்டு முஸ்லிம்கள் வெளியேறிச் சென்று இப்போது ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டிருந்தன. மேலும் இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் அதன் முக்கியத் தூண்களில் ஹஜ்ஜும் ஒன்றாக இருக்கின்றது. ஆகவே இப்போது முஸ்லிம்கள் இறையில்லம் கஅபாவிற்குச் சென்று ஹஜ்ஜு செய்ய வேண்டும் என மிகவும் விரும்பினார்கள்.

இறையில்லமான ‘கஅபா’ வை நோக்கி பயணம்…

அரபுகள் ஆண்டு முழுவதுமே போரிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் மக்கள் கஅபாவரை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் சென்றுவர, மேலும் அவர்கள் திருப்தியாகவும் நிம்மதியாகவும் கஅபாவை திரிசிக்கத் தேவையான சூழ்நிலை உருவாக்கும் நோக்கத்துடன் ஹஜ்ஜுக் காலத்தில் நான்கு மாதங்கள் வரை அவர்கள் போரை நிறுத்தி விடுவார்கள். ஹஜ்ரி 6 ஆம் ஆண்டு துல்கஃதா மாதம் அண்ணலார் (ஸல்) அவர்கள் கஅபாவை தரிசித்திட நாடினார்கள். முஹாஜிர்களிலும், அன்சார்களிலும் பலர் இறையில்லம் கஅபாவை தரிசித்திடும் பாக்கியத்தைப் பெற்றிடக் காத்திருந்தார்கள். ஆகவே, 1400 முஸ்லிம்கள் அண்ணலாருடன் புறப்படத் தயாராகி விட்டார்கள். துல்ஹுலைஃபா என்னுமிடத்தை அடைந்து குர்பானியின் ஆரம்ப சடங்குகளை நிறைவேற்றினார்கள்.

இவ்வாறாக முஸ்லிம்களின் இந்தப் பயணத்தின் நோக்கம் இறை இல்லமான கஅபாவை தரிசிப்பதாக இருந்ததே தவிர போர் புரிவதோ, தாக்குதல் நடத்துவதோ அல்ல என்பது தௌ;ளத் தெளிவாகப் புலனானது. எனவே மோதலுக்கோ ஏதாவது அசம்பாவித்திற்கோ அறவே இடமில்லாமல் இருந்தது. இருப்பினும் குறைஷிகளின் எண்ணத்தை அறிவதற்கு ஓர் ஒற்றரை அண்ணலார் (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.

அவர் பின்வரும் செய்தியைக் கொண்டு வந்தார் :

குறைஷிகள் எல்லாக் குலத்தாரையும் ஒன்று திரட்டியிருந்தார்கள், முஹம்மத் (ஸல்) அவர்களை மக்கா நகருக்குள் நுழைய விடக் கூடாது என்று முடிவு கட்டியுள்ளார்கள். மேலும் அவர்கள் ஒன்று திரண்டு அண்ணலாருடன் போரிடத் தயாராகி உள்ளார்கள். இந்த நோக்கத்திற்காக மக்கா நகருக்கு வெளியே படைகளை திரட்டவும் துவங்கிவிட்டார்கள். ஆக அவர்கள் போரிட முற்றிலும் தயார் நிலையிலேயே இருக்கின்றார்கள்.

குறைஷிகளுடன் பேச்சுவார்த்தை

அண்ணலார் இந்தத் தகவலைப் பெற்ற பின்னரும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டேயிருந்தர்கள். ஹுதைபிய்யா என்னுமிடத்திற்கு வந்து முகாமிட்டார்கள்.

மக்காவிற்கு சற்று தொலைவில் ஹுதைபிய்யா என்னும் பெயருடைய கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றின் அருகிலிருந்து ஊருக்கும் இந்தப் பெயரே வழங்கப்படலாயிற்று. இந்த இடத்தில் தங்கியிருந்த போது பனூகுஸாஆ குலத் தலைவர் அண்ணலாரின் திருச் சமூகத்திற்கு வருகை தந்தார். ‘குறைஷிகள் போர் புரியத் தயாராகி விட்டார்கள். தங்களை அவர்கள் மக்கா நகர் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.’ என்று கூறினார்.

அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் ‘நாங்கள் உம்ரா செய்யும் எண்ணத்தில்தான் வந்திருக்கின்றோம், போர் புரிவது எங்கள் நோக்கமல்லஈ எங்களுக்கு இறையில்லத்தை வலம் வருவதற்கும் (தவாஃப் செய்வதற்கும்), தரிசிப்பதற்கும் (ஜியாரத் செய்வதற்கும்) வாய்ப்பளித்திட வேண்டும் என்று அவர்களிம் தாங்கள் அறிவித்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி குறைஷிகளை எட்டிபோது அவர்களில் துட்டர்கள் சிலர், ‘நாம் முஹம்மதின் செய்தியைக் கேட்கவேண்டி தேவையில்லை’ என்று கூறினர். ஆனால் பொறுப்பும், நிதாகமும் மிக்கவர்களில் ஒருவரான உர்வா என்பவர், ‘இல்லை, நீங்கள் என் மீது நம்பிக்கை வையுங்கள், நான் சென்று முஹம்மதிடம் பேசிவிட்டு வருகிறேன்’ என்று கூறினார்.

அதன்படி உர்வா, அண்ணலாரின் திருச் சமூகத்திற்கு வருகை தந்தார். ஆனால் எது ஒன்றும் முடிவாகவில்லை. இதற்கிடையே குறைஷிகள் முஸ்லிம்களை தாக்கிட ஒரு சிறு படைப் பிரிவை அனுப்பி விட்டார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அண்ணலார் (ஸல்) அவர்கள் அவர்களை மன்னித்து விட்டார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இத்தருணத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக உஸ்மான் (ரலி) அவர்கள்  மக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு கஅபாவை தரிசிக்க வாய்ப்பளித்திட குறைஷிகள் எவ்விதத்திலும் இசையவில்லை. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களைக் கூட திரும்பிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டார்கள்.

பைஅத்துர் ரிள்வான்

இந்த நேரத்தில் முஸ்லிம்களிடையே உஸ்மான் (ரலி) அவர்கள் ஷஹீதாதக்கப்பட்டு (கொல்லப்பட்டு) விட்டார்கள் என்கிற வதந்தி எப்படியோ பரவிவிட்டது. இந்த வதந்தி முஸ்லிம்களை பெரும் தவிப்புக்குள்ளாக்கி விட்டது. அண்ணலார் (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, ‘இனி உஸ்மானின் இரத்திற்குப் பழிவாங்க வேண்டியது அவசியம்’ என்று கூறிவிட்டார்கள்.

இவ்வாறு சொல்லிவிட்டு அண்ணலார் ஒரு கருவேல மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டார்கள். இங்கு அண்ணலார் (ஸல்) தமது தோழர்களிடம் ‘நாங்கள் இறந்தாலும் இறப்போமே தவிர போரிலிருந்து பின் வாங்க மாட்டோம். குறைஷிகளிடம் உஸ்மானின் இரத்திற்குப் பழி வாங்குவோம்’ என்று உறுதிப் பிரமாணம் வாங்கினார்கள்.

இந்த உறுதிமொழி முஸ்லிம்களிடையே வியக்கத்தக்க ஓர் உத்வேகத்தைத் தோற்றுவித்தது. அவர்களில் ஒவ்வொறுவரும் இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்திடும் ஆவல் நிரம்பியவர்களாய், இறை மறுப்பாளர்களைப் பழி வாங்கத் தயாரகி விட்டனர். இந்த பைஅத்தின் பெயர் ரிள்வான் என்பதாகும். இது குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணலாரின் திருக்கரத்தில் உறுதிப் பிரமாணம் செய்த பாக்கியவான்களை தான் பொருந்திக் கொண்டதாக, அவர்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை

முஸ்லிம்களின் உத்வேகம் பற்றிய தகவல் குறைஷிகளுக்கும் கிட்டியது. உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதாக வந்த தகவல் தவறானது என்று முஸ்லிம்களுக்கும் தெரியவந்தது. குறைஷிகள் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சுஹைல் பின் அம்ர் என்பவரை தம் தூதராக்கி அனுப்பினார்கள். சுஹைல் பின் அம்ருடன் வெரு நேரம்வரை சமாhதானப் பேச்சு நடைபெற்ற வண்ணமிருந்தது. இறுதியில் சமாதான உடன்படிக்கையின் ஷரத்துகள் முடிவாயின. உடன்படிக்கைப் பத்திரத்தை எழுதுவதற்காக அலீ (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். உடன்படிக்கை பத்திரத்தில் ‘இந்த ஒப்பந்தம் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து செய்யப்படுகின்றது’ என்று எழுதப்பட்டபோது குறைஷிகளின் பரதிநிதியான சுஹைல் அவர் ‘இறைத்தூதர் என்னும் சொல்லை எழுதக் கூடாது, இதில்தான் நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறோம்’ என்று கூறி ஆட்சேபித்தார். ஆகவே அண்ணலார் (ஸல்) அவருடைய சொல்லை ஏற்றுக் கொண்டார்கள். தமது திருக் கரங்களால் இறைத்தூதர் என்னும் சொற்களை அழித்து விட்டர்கள். ‘நீங்கள் ஏற்றுக் கொள்ள விட்டால் என்ன இறைவன் மீதாணையான நான் அல்லாஹ்வின் திருத்தூதராவேன்’ என்று கூறினார்கள்.

சமாதான உடன்படிக்கையின் ஷரத்துகள்

1.      முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் சென்று விட வேண்டும்.

2.      அடுத்த ஆண்டு வர வேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே தங்கி திரும்பிச் சென்று விட வேண்டும்.

3.      ஆயுதங்களோடு வரக்கூடாது. வெறும் வாளுடன் மட்டும் வரவேண்டும். அதுவும் வெளியே எடுக்கப் படாமல் உறைக்குள் போட்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

4.      மக்கா நகரில் எஞ்சியிருக்கும் முஸ்லிம்களில் ஒருவரையும் முஸ்லிம்கள் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. முஸ்லிம் ஒருவர் மக்கா நகர் திரும்பி வர விரும்பினால் அவரைத் தடுக்கக் கூடாது.

5.      இறை மறுப்பாளர்கள் அல்லது முஸ்லிம்களில் எவரேனும் மதீனா நகருக்கு வந்து விட்டால் அவரை மக்கா நகருக்குத் திருப்பியனுப்பிட வேண்டும். ஆனால் முஸ்லிம்களில் எவராவது மக்கா நகருக்குச் சென்றால் அவர் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.

6.      அரபுக் குலங்கள் விரும்பினால் முஸ்லிம்கள் அல்லது இறை மறுப்பாளர்கள் இருவரில் எவரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ள உரிமையுண்டு.

7.      இந்த ஒப்பந்தம் பத்தாண்டுகள் வரை நீடித்திருக்கும். (அதாவது பத்தாண்டுகளுக்குப் போர் புரிய மாட்டோம்)

இந்த நிபந்தனைகள் (ஷரத்துகள்) அனைத்தும் வெளிப்படையாகப் பார்க்கும்போது முஸ்லிம்களுக்கு எதிரானவையாக இருந்தன. இவற்றிலிருந்து முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்து, பணிந்து போய் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.

அபூஜந்தல் (ரலி) அவர்களின் விவகாரம்

இப்போதுதான் சமாதான உடன்படிக்கைப் பத்திரத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தற்செயலாக குறைஷிப் பிரதிநிதி சுஹைலின் மகனார் அபூஜந்தல் (ரலி) அவர்கள் மக்கா நகரிலிருந்து எப்படியோ தப்பியோடி அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். விலங்குகளை அணிந்து கொண்டு முஸ்லிம்களின் முன்னால் வந்து விழந்து விட்டார்கள்! அனைவருக்கும் தன் பரிதாப நிலையை எடுத்துரைத்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்கு தண்டனையாக அவர்களுக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் இழைக்கப்பட்டு வந்தன என்று எடுத்துக் கூறினார்கள்.

அபூஜந்தல் அண்ணலாரிம், ‘நாயகமே! என்னை இறைமறுப்பாளர்களிடமிருந்து விடுவித்து தங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்’ என்று வேண்டினார்கள். இதனைக் கண்ட சுஹைல், ‘சமாதான ஒப்பந்ததடதை நிறைவேற்றிட இதுவே முதல் சந்தர்ப்பமாகும். ஒப்பந்தத்தின் படி தாங்கள் அபூஜந்தலை தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாது’ என்று கூறினார்.

இது மிகச் சிக்கலான ஒரு நேரமாக இருந்தது. ஒருபுறம் உடன்படிக்கை மதித்து நடக்க வேண்டியிருந்தது. மற்றொரு புறம் நிரபராதியான ஒரு முஸ்லிமின் மீது அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக கொடுமையிழைக்கப்படும் பிரச்சனை முன் நின்றது. மேலும் அவர் ‘என் முஸ்லிம் சகோதரர்களே! நீங்கள் என்னை இறை மறுப்பாளர்களின் கரத்தில் ஒப்படைக்க விரும்புகிறீர்களா?’ என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்கள் அனைவரும் இந்தப் பரிதாப நிலையைக் கண்டு கொதித்தெழுந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ‘தாங்கள் உண்மையான இறைத் தூதராயிருப்பின் நாங்கள் இந்த இழிவை ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?’ என்று கூடக் கேட்டு விட்டார்கள்.

ஆனால் அண்ணலார் ‘நான் இறைவனின் திருத்தூதரேயாவேன், அவனது கட்டளைக்கு நான் மாறு செய்ய முடியாது. இறைவன் எனக்கு உதவி புரிவான்’ என்று கூறினார்கள். ஆக, சமாதான உடன்படிக்கை எழுதி முடிக்கப்பட்டது. அபூஜந்தல், உடன்படிக்கையின் விதிமுறைப்படி திரும்பிச் செல்ல நேரிட்டது. இஸ்லாத்தின் தொண்டர்கள் இறைத் தூதருக்குக் கீழ்ப்படிவதற்கான கடும் சோதனை ஒன்றில் வெற்றி பெற்றார்கள். ஒருபுறம் வெளிப்படையில் இஸ்லாம் இழிவுபடுத்தப்பட்டிருந்தது. அபூஜந்தலின் பரிதாப நிலை இருந்தது. மற்றொரு புறம் இறைத் தூதருக்கு எந்தக் கேள்வியும் மறுப்புமின்றி கீழ்ப்படியும் பண்பும் இருந்தது.

அண்ணலார் அபூஜந்தலிடம் கூறினார்கள். ‘அபூஜந்தலே! நீர் பொறுமையைக் கடைப்படியும். இறைவன் உங்களுக்கும் மற்ற நிரபராதிகளுக்கும் உங்களைப் போல் கொடுமைக்குள்ளானவர்களுக்கும் ஒரு வழியைக் காட்டுவான். இப்போது சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது. இனி நாம் அவர்களிடம் ஒப்பந்தத்தை முறிக்கவோ அதற்கு எதிராகச் செயல்படவோ முடியாது’ என்று கூறினார்கள். அபூஜந்தல் (ரலி) அவர்கள் எப்படி அங்கு வந்தார்களோ அப்படியே விலங்குகளை அண்ந்த வண்ணம் திரும்பிச் சென்று விட்டார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் தாக்கங்கள்

சமாதான உடன்படிக்கைப் பத்திரம் எழுதி முடித்துவிட்ட பின்னால் அண்ணலார் (ஸல்) தம்முடன் வந்திருப்பவர்கள் இங்கேயே குர்பானி கொடுத்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். முதலில் அண்ணலாரே குர்பானி கொடுத்தார்கள். தலை முடியைக் களைத்தார்கள். அதன் பின்னர் நபித் தோழர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றினார்கள்.

சமாதான ஒப்பந்தத்திற்குப் பின்னால் அண்ணலார் மூன்று நாட்கள் வரை ஹுதைபிய்யாவிலேயே தங்கியிருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்லும்போது திருக்குர்ஆனின் 48 ஆவது அத்தியாயமான ஃபத்ஹு இறக்கிளருப்பட்டது. இந்த அத்தியாயத்தில் இந்த உடன்படிக்கை நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி ‘பகிரங்கமான, வெளிப்படையான வெற்றி இது’ என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது எந்த ஒப்பந்தத்தின்படி முஸ்லிம்கள் பணிந்துபோய் ஒப்பந்தம் செய்து கொண்டார்களோ அந்த ஒப்பந்தத்தை ‘பகிரங்கமான வெற்றி’ என்று வர்ணிப்பது வியப்பிற்குரிய ஒன்றாகும். ஆனால் அதன் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளும் உருவான சூழ்நிலைகளும் உண்மையிலேயே ஹுதைபிய்யா உடன்படிக்கை, இஸ்லாமிய இயக்கத்தின் வரலாற்றில் பெரியதொரு வெற்றிக்கான முன்னோடியாகத் திகழ்ந்தது என்பதை நிரூபித்து விட்டன.

அதன் விவரம் வருமாறு :-

இதுவரை முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்குமிடையே போர்மயமான சூழலே நிலவி வந்தது. இரு பிரிவினரும் ஒருவரோடுடொருவர் கலந்து பழகிடும் சந்தர்ப்பமோ, வாய்ப்போ அறவே இல்லாதிருந்தது. இந்தச் சமாதான உடன்படிக்கை இத்தகைய சூழ்நிலைக்கு முடிவு கட்டி விட்டது. இப்போது முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கிடையே குடும்ப, மற்றும் வர்த்தகத் தொடர்புகள் ஏற்படலாயின. முஸ்லிமல்லாதவர்கள் அச்சமின்றி, தயக்கமின்றி மதீனா நகருக்கு வந்தனர். பல மாதங்கள் அங்கு தங்கி முஸ்லிம்களுடன் பழகலாயினர்.

இவ்விதம் இந்தப் புதிய இஸ்லாமியக் குழுவினரை மிக அருகேயிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிட்டியது. அங்கு சென்று அவர்கள் வியக்கத்தக்க முறையில் ஈர்க்கப்பட்டார்கள். எவர்களுக்கெதிராக அவர்களுடைய உள்ளங்கள் வெறுப்பாலும், கோபத்தாலும் நிரம்பியிருந்தனவோ அவர்களை, குணவொழுக்கங்களிலும், கொடுக்கல் வாங்கலிலும், பழக்க வழக்கங்களிலும் தம் சமுதாயத்தை சேர்ந்தவர்களை விட மிகவும் உயர்ந்தவர்களாகக் கண்டார்கள்.

எந்த நல்லடியார்களுடன் நாம் போரை வாங்கிக் கொண்டிருக்கின்றோமோ அவர்களுடைய உள்ளங்களில் நமக்கெதிராக இம்மியளவும் வெறுப்போ பகைமையோ இல்லை என்பதையும் உணர்ந்தார்கள். அவர்களுக்கிருக்கின்ற வெறுப்பெல்லாம் நமது தவறான கொள்கைகள் தவறான வழிமுறைகள் ஆகியவற்றுடன் தானே தவிர, நம் மீதல்ல என்பதையும் புரிந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் சொல்லிவந்த செய்திகள், விஷயங்கள் அனைத்தும் அனுதாபம், மனிதாபிமானம் ஆகியவற்றால் நிரம்பியிருந்தன.

இத்தனைப் போர்களும் பகைமையும் இருந்தும் முஸ்லிம்கள் அவர்களிம் மனிதாபிமானத்தோடும் நல்ல முறையிலும் நடந்து கொள்வதில் சற்றும் குறைவைக்கவில்லை. மேலும் இவ்விதம் கலந்து பழகுவதால், அடிக்கடி சந்திப்பதால் முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி கொண்டிருந்த ஐயங்கள், ஆட்சேபனைகள் குறித்து பரஸ்பரம் உரையாடுவதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. முஸ்லிமல்லாதவர்களுக்கும் நாம் இஸ்லாத்தைக் குறித்து எந்த அளவிற்குத் தவறான எண்ணங்களில் ஆழ்த்தப்பட்டிருந்தோம் என்று தெரிந்துவிட்டது.

ஆக, இந்த உடன்படிக்கை இஸ்லாத்திற்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி தந்தது. முஸ்லிம்மல்லாதவர்கள் தாமாகவே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு வந்தனர். அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய உள்ளங்களில் விதைத்து விட்டிருந்த தவறான எண்ணத் திரைகள் அகலத் தொடங்கின. ஆகவே இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வெறும் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டு காத்திற்குள்ளாகவே இதற்கு முன்பு வேறெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இதே காலகட்டத்தில்தான் குறைஷிகளின் புகழ்பெற்ற தலைவர்கள் சிலர் இஸ்லாத்தினால் கவரப்பட்டு, முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கி, முஸ்லிம்களின் நண்பர்களாய், உற்ற உறவினர்களாய் மாறி விட்டார்கள். காலித் பின் வலீத், அம்ரு பின் ஆஸ் (ரலி) ஆனியோர் இதே காலகட்டத்தில் தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

இப்போது இஸ்லாத்தின் செல்வாக்கும் தாக்கமும் எந்த அளவிற்கு விரிவடைந்து வலிமை பெற்றுவிட்டன என்றால் அஞ்ஞானத்திற்கு, தன் மரணம் தன் கண் முன்னாலேயே தெளிவாகத் தென்படலாயிற்று. இறைமறுப்பாளர்கள் இந்த நிலையைக் கண்டு பதறினார்கள். இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தில் நிச்சயமாக நாம் தோற்றுப்போய் விடுவோம் என்பது குறைஷிகளுக்குப் புலப்படலாயிற்று.

இப்போது முடிந்தவரை சீக்கிரமாக ஒப்பந்தத்தை முறித்து விடுவதைத் தவிர வேறெந்த வழியும் இருப்பதாக அவர்களுக்குத் தென்படவில்லை. அந்த சமாதான ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை இஸ்லாமிய இயக்கத்துடன் மும்முரமாக மோத வேண்டும். பெருகி வரும் இந்த புரட்சி வெள்ளத்திற்கு எப்படியாவது அணை கட்டிட வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டனர். இந்த ஒப்பந்தத்தை அவர்கள் முறித்த விதத்தை இனி மக்கா வெற்றி பற்றி குறிப்பிடும்போது பார்க்கலாம்.

அரசர்களுக்கு கடிதங்கள் இஸ்லாமிய அழைப்பு விடுத்தல்

________________________________________

பத்தாம் அத்தியாயம்

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு சற்று ஓய்வும் அமைதியும் கிட்டின. ஆகவே அண்ணலார் (ஸல்) இஸ்லாமிய அழைப்பு மற்றும் பிரச்சாரப் பணியில் தீவிர கவனம் செலுத்தலானார்கள். ஒருநாள் அண்ணலார் தமது தோழர்களை நோக்கி உரையாற்றினார்கள். ‘மக்களே! அல்லாஹ் என்னை உலக மனைத்திற்கும் அருட்கொடையாக அனுப்பியுள்ளான். (எனது செய்தி அகிலமனைத்திற்கும் உரியது. ஆகவே இது அனைவருக்குமே அருட்கொடையாகும்) நீங்கள் ஈசா (அலை) அவர்களின் சீடர்களைப் போல் கருத்து வேறுபாடு கொண்டு பிளவுபட்டு விடக்கூடாது. நீங்கள் உலகமெங்கும் கொண்டு பிளவுபட்டு விடக்கூடாது. நீங்கள் உலகமெங்கும் பரவிச் செல்லுங்கள். என் சார்பாக சத்தியத் தூதை அனைவருக்கும் எடுத்துரையுங்கள்’.

இந்த காலகட்டத்தில் அதாவது ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது ஹிஜ்ரி 7ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அண்ணலார் (ஸல்) பெரும் பெரும் அரசர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து கடிதங்களும் எழுதினார்கள். அந்தக் கடிதங்களுடன் பல நபித் தோழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். வரலாற்றில் நமக்கு கிடைக்கின்ற இத்தகைய அழைப்புக் கடிதங்களில் சில வருமாறு :-

கடிதங்கள் அனுப்பப்பட்ட மன்னர்கள்  கடிதத்தைக் கொண்டு சென்ற நபித் தோழர்கள்

1. ரோமப் பேரரசர் கைஸர் (சீசர்) வஹ்யா கல்பி (ரலி)

2. ஈரானிய மன்னர் குஸ்ரு பர்வேஸ்  அப்துல்லாஹ் பின் குஸஃபா சஹ்மீ (ரலி)

3. எகிப்து நாட்டு மன்னர்   ஹாதிப் பின் அலீ பல்தஆ (ரலி)

4. அபிசீனியா மன்னர் நஜாஷி   உமர் பின் உமய்யா (ரலி

ரோமப் பேரரசர் சீசருக்கு கடிதம் அனுப்புதல்

ரோம நாட்டு மன்னர் சீசருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விவரம் பின் வருமாறு:

பேரன்புடையோனும் பெருங்கருணையாளனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்….!

ரோம நாட்டின் தலைமை நிர்வாகியான ஹெராக்ளியஸ் அவர்களுக்கும் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மத் (ஸல்) அவர்கள் தரப்பிலிருந்து எழுதப்படும் கடிதம். எவர் நேர்வழியைப் பின்பற்றுகின்றாரோ அவர் மீது சாந்தியுணடாகட்டும்! நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கின்றேன்.

அல்லாஹ்விற்கே கீழ்ப்படிந்து அவனுக்கே முற்றிலுமாக அடிபணிந்து நீங்கள் வாழ்ந்தால் ஈடேற்றமும் சாந்தியும் பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு இருமடங்கு நற்கூலியை வழங்குவான். ஆனால் நீங்கள் அல்லாஹ்வுக்கு பணிந்து வாழ்வதைப் புறக்கணிப்பீர்களாயின் உங்கள் நாட்டு மக்களின் பாவங்களுக்கும் நீங்களே பொறுப்பாளியாவீர்கள்! (எனெனில் உங்கள் நிராகரிப்பின் காரணத்தால் அவர்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு கிட்டாமல் போய் விடும்.)

வேதம் வழங்கப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே உள்ள பொதுவான ஒரு விஷயத்தினபால் வாருங்கள். அந்த விஷயம் இதுதான். ‘நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் கீழ்ப்படியக் கூடாது. அவனுக்கு வேறெவரையும் இணை கற்பிக்கக்கூடாது. நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் தன் அதிபதியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஆனால் நீங்கள் இந்தச் செய்தியை ஏற்காமல் இதனைப் புறக்கணித்தால் ‘நாங்கள் முஸ்லிம்களே! என்பதற்கு (அதாவது இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து அவனையே வணங்குபவர்கள் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாயிருங்கள்’ (என்று தெளிவாகக் கூறிவிடுகின்றோம்)

அபூசுஃப்யானுடன் உரையாடல்

பஸ்ரா நகரைத் தலைநகராகக் கொண்டு சிரியா பிரதேசத்தில், ரோமப் பேரரசர் சீசரின் பிரதிநிதியாக ஆட்சி செய்து கொண்டிருந்த ஹாரிஸ் கஸ்ஸானி என்பவரிடம் இந்தக் கடிதத்தை வஹ்யா கல்பீ (ரலி) அவர்கள் கொண்டு போய்க் கொடுத்தார்கள். அவர் அதனை சீசரிடம் அனுப்பிவிட்டார்.

சீசருக்கு இந்தக் கடிதம் கிடைத்தவுடன் அவர் அரபு நாட்டைச் சேர்ந்த எவராவது இங்கு இருந்தால் தன் அவைக்கு அவர்களை அழைத்து வரும்படிக் கட்டளையிட்டார். இந்த காலகட்டத்தில்தான் அபூசுஃப்யான் வாணிபத்தின் நிமித்தம் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தார். சீசருடைய ஆட்கள் அவரை அரசவைக்கு அழைத்துச் சென்றனர். அபூசுஃப்யானுக்கும் சீசருக்கும் நடைபெற்ற உரையாடல் வருமாறு:

சீசர்  : நபித்துவ வாதம் புரிவரின் குடும்பம் எத்தகையது?

அபூசுஃப்யான்   : அவர் உயர்ந்த குலத்தை சேர்ந்தவர்.

சீசர்  : அந்தக் குடும்பத்தில் இவரைத் தவிர இன்னும் எவராவது தம்மை நபி என்று வாதிட்டிருக்கிறார்களா?

அபூசுஃப்யான   : இல்லை.

சீசர் அந்தக் குடும்பத்தில் எப்போதேனும் மன்னர் எவராவது பிறந்திருக்கிறார்களா?

அபூசுஃப்யான   : பிறந்ததில்லை.

சீசர்  : இந்த மார்க்கத்தை தழுவியவர்கள் பலவீனர்களா? தனவந்தர்களா?

அபூசுஃப்யான   : பலவீனர்கள்தாம்.

சீசர்  : இந்த மார்க்த்தைப் பினபற்றுவோர் (எண்ணிக்கையில்) பெருகி வருகின்றனரா?

அபூசுஃப்யான   : தொடர்ந்து பெருகிவருகின்றனர்.

சீசர்  : நீங்கள் அவர் பொய் சொல்லிக் கண்டதுண்டா?

அபூசுஃப்யான   : ஒருபோதும் கண்டதில்லை.

சீசர்  : அவர் வாக்குறுதிக்கும் ஒப்பந்தத்திற்கும் மாறு செய்வதுண்டா?

அபூசுஃப்யான   : இதுவரை அவர் வாக்குறுதிக்கு மாறு செய்ததில்லை. இப்போது ஒரு புதிய உடன்படிக்கை நடைபெற்றுள்ளது. இனி, அவர் தன் ஒப்பந்தத்ததைப் பேணுகிறாரா? இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.

சீசர்  : நீங்கள் அவருடன் எப்போதாவது போரிட்டதுண்டா?

அபூசுஃப்யான   : ஆம். போரிட்டதுண்டு.

சீசர்  : போரின் முடிவு என்னவாயிருந்தது?

அபூசுஃப்யான   : சில வேளைகளில் நாங்கள் வெல்லுவோம், சில வேளைகளில் அவர் வெல்லுவார்.

சீசர்  : அவர் அறிவுறுத்தும் விஷயங்கள் யாவை?

அபூசுஃப்யான   : ஒரேயொரு கடவுளை வணங்கும்படியும் அவனுக்கு வேறெவரையும் இணை வைக்காதீர் என்றும் தொழுகையைப் பேணி வரும்படியும் தூய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் படியும், உண்மை பேசும்படியும் ஒருவர் மீதொருவர் இரக்கத்துடனும் பரிவுடனும் நடந்து கொள்ளும்படியும் அறிவுத்துகிறார்.

இந்த உரையாடலுக்குப் பின்னர் சீசர் பின்வருமாறு கூறினார்:-

‘இறைத் தூதர்கள் எப்போதும் கண்ணியமான குடும்பத்தில் தான் பிறப்பார்கள். அவருடைய குடும்பத்தில் வேறெவராவது நபித்துவ வாதம் புரிந்திருந்தால் அவருடைய குடும்பத்தில் மன்னர் எவரேனும் இருந்திருந்தால் ஆட்சியை அடைந்திடும் பேராசையில் இவற்றை எல்லாம் செய்கிறார் என்று எண்ணலாம். அவர் மற்ற மனிதர்களின் விவகாரங்களில் பொய் சொல்வதில்லை என்று அனுபவ ரீதியாக தெரிந்து விட்ட பின்னால் இறைவனின் விவகாரத்தில் இத்துணைப் பெரிய பொய்யைப் புனைந்து (இறைவன் தம்மைத் தூதராக்கி அனுப்பியுள்ளான் என்று) கூறுவார் என்று எப்படிக் கூற முடியும்!

மேலும் இறைத்தூதர்களின் ஆரம்ப கால சீடர்கள் (ஆரம்பத்தில் இறைத் தூதர்களைப் பின்பற்றுபவர்கள்) எப்போதும் ஏழைகளாகவே இருப்பார்கள் என்பதும் உண்மைதான். உண்மையான மார்க்கம் எப்போதும் பொருகிக் கொண்டுதான் செல்லும். இறைத் தூதர்கள் எப்போதும் யாரையும் ஏமாற்றுவதில்லை, மோசடி செய்வதில்லை என்பதும் உண்மையே.

மேலும் அவர் தொழுகை, ஒழுக்கத் தூய்மை, இறையச்சம் ஆகியவற்றை அறிவுறுத்துவதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள். இவையனைத்தும் உண்மையென்றால், என்றேனும் ஒரு நாள் அவர் என் அரசையே கூட கைப் பற்றி விடுவார் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ஓர் இறைத் தூதர் வரவிருக்கிறார் என்று மட்டும் எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் அவர் அரேபியாவில் தோன்றுவார் என்று நான் நினைக்கவேயில்லை. நான் அங்கே போக முடிந்தால் நானே அவரது பாதங்களைக் கழுவுவேன்.’

சீசருடைய இந்தக் கருத்துகளைக் கேட்டு அவனது அவையிலிருந்த பாதிரிமார்களும் அறிஞர்களும் மிகவும் கேபமும், வெறுப்பும் அடைந்தார்கள். சீசருக்குகெதிராக கலகம் வெடிக்குமோ என்னும் அச்சம் நிறைந்த சூழல் உண்டாகி விட்டது. இந்த அச்சத்தின் காரணத்தால் தான் சீசரின் உள்ளத்தில் எழுந்து கொண்டிருந்த வெளிச்சம் அமுங்கிப் போய்விட்டது. உண்மையில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் பாதையில் செல்வமும், அதிகாரமும்தான் மிகப்பெரிய தடைக் கற்களாக மாறிவிடுகின்றன.

ஈரான் மன்னருக்கு எழுதிய கடிதம்

ஈரான் மன்னர் குஸ்ரூ பர்வேஸ் என்பவருக்கு அண்ணலார் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு :-

பேரன்புடையோனும் பெருங்கருணையாளனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்… அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸ்ல) அவர்கள் பாரசீகத்தின் தலைமை ஆளுநரான கிஸ்ராவுக்கு எழுதும் கடிதம்.

நேர்வழியைப் பின்பற்றி இறைவனின் மீதும் இறைத்தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு வணக்கத்திற்கும் கிழ்ப்படிதலுக்கும் உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இலர் என்று சான்று பகர்கின்றவர்கள் மீது சாந்தி உண்டாவதற்குக.

மேலும் நான் மாந்தர்கள் அனைவருக்காகவும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவன் ஆவேன்.

அல்லாஹ்வுக்கு மாறு செய்வதால் விளையும் தீய கதீயைக் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக நான் தூதுவனாக அனுப்பப்பட்டுள்ளேன்.

நீரும் இறைவனுக்குப் பணிந்து வாழும் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும். அதனால் நீர் ஈடேற்றம் பெறுவீர். இல்லையெனில், நெருப்பை வணங்கி வரும் உமது மக்களான மஜுஸ்கள் அனைவருடைய பாவங்களும் உம்மையே சாரும்.

குஸ்ரூ பர்வேஸ் மிகவும் ஆடம்பரமும் படாடோபமும் நிறைந்த அரசனாக இருந்தான். அவனைப் பொறுத்த வரை கடிதம் எழுதப்பட்டிருந்த இந்தப் பாணியும் தொனியுமே சகிக்க முடியாததாயிருந்தது. இந்தக் கடிதத்தில் முதலில் அல்லாஹ்வின் பெயரும் பின்னர் கடிதத்தை எழுதி அனுப்புபவரின் பெயரும் பிறகு மன்னனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அவனுக்கு கடிதம் எழுதும் போது எடுத்துரைக்கப்படுகின்ற பட்டப்பெயர்கள், கட்டியங்கள், தாழ்ந்து, பணிந்து எழுதுகின்ற பாணி எதுவுமே அதில் காணப்படவில்லை.

குஸ்ரூ பர்வஸ் இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் வெகுண்டெழுந்த, ‘என் அடிமையாக பணியாளாக இருந்து கொண்டு இப்படியா எழுதுகிறாய்!’ என்று கூறி அண்ணலாரின் புனித மடலைக் கிழித்துப் போட்டு விட்டான். தனது யமன் நாட்டு ஆளுநருக்கு ‘இந்த நபித்துவ வாதம் புரிபவரைப் பிடித்து என் முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள்’ என்று கட்டளையிட்டான்.

யமன் நாட்டு ஆளுநர் அண்ணலாரை அழைத்து வரும்படி இரண்டு பேரை அண்ணலாரிடம் அனுப்பினார்கள். இதற்கிடையே குஸ்ரூ பர்வேஸின் மகன் தன் தந்தையைக் கொலை செய்துவிட்டு, தானே அரியணையில் அமர்ந்து விட்டான். யமன் ஆளுநரால் அனுப்பப்பட்டவர்கள் இருவரும் அண்ணலாரின் திருச் சமூகத்திற்கு வந்தபோது, அவர்களுக்குத் தங்கள் அரசன் கொல்லப்பட்ட விஷயம் தெரியமலிருந்தது. அண்ணலாருக் இந்த விஷயம் அல்லாஹ்வின் கட்டளையால் தெரிந்து விட்டிருந்தது. ஆகவே அண்ணலார் (ஸல்) அந்த இருவருக்கும் அந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். ‘நீங்கள் இருவரும் திரும்பிச் சென்று உங்கள் ஆளுநரிடம் இஸ்லாத்தின் ஆட்சி குஸ்ரூ பர்வேஸின்  தலைநகர் வரையும் செல்லும் என்று கூறுங்கள்.’ என அண்ணலார் பகர்ந்தார்கள். அந்த இருவரும் யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பின்னால் உண்மையிலேயே குஸ்ரூ பர்வேஸ் கொல்லப்பட்டதாக அண்ணலார் தெரிவித்த செய்தி சரியானதுதான் என்று அவர்களுக்குத் தெரியவந்தது.

மன்னர் நஜாஷிக்கும் எகிப்து நாட்டரசனுக்கும் எழுதிய கடிதங்கள்

ஏறத்தாழ மேற்சொன்ன அதே கருத்துடைய கடிதம்மொன்று அபிசீனியா நாட்டு மன்னர் நஜாஷி அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் ‘நீங்கள் அல்லாஹ்வின் உண்மைத் தூதரே என்பதற்கு நான் சாட்சி கூறுகின்றேன்’ என்று எழுதியிருந்தார். மன்னர் நஜாஷி ஜஅஃபர் பின் அபீதாலிப் அவர்களின் கரங்களில் இஸ்லாத்தைத் தழுவினார் என்றும் சில அறிவிப்புகளில் காணப்படுகிறது. ஜஅஃபர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்து அபிசீனியா சென்று இருந்தார்கள். இவரைப் பற்றி ‘அபிசீனிய ஹிஜ்ரத்’ என்னும் தலைப்பின் கீழ் முன்பே கூறப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டு மன்னர் அண்ணலாரின் கடிதத்தைப் படித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை யென்றாலும் கடிதத்தைக் கொண்டு சென்ற தூதுவர்களை கண்ணியப்படுத்தி அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி திருப்பியனுப்பினார்கள்.

இஸ்லாமிய ஆட்சி வலுப்பெறுதல்

________________________________________

பதினொன்றாம் அத்தியாயம்

மதீனா நகரிலிருந்து பனூநதீர் குலத்தார் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் கைபர் என்னும் பிரதேசத்தில் சென்று வசிக்கலானார்கள். கைபர் என்பது மதீனா நகரிலிருந்து ஏறத்தாழ 200 மைல்கள் வடமேற்கு திசையிலுள்ள ஓர் இடமாகும். இங்கு யூதர்கள் பல உறுதி வாய்ந்த கோட்டைகளைக் கட்டியிருந்தார்கள்.

கைபர், அப்போது இஸ்லாமிய இயக்கத்தின் பகைவர்களுடைய மிகப்பெரிய கேந்திரமாகவும் இஸ்லாத்திற்கு நிரந்தரமான ஓர் அபாயமாகவும் விளங்கிற்று. கைபர் பிரதேசத்தைச் சேர்ந்த யூதர்கள்தாம் போர் நடந்தபோது மதீனாவின் மீது கடும் தாக்குதல் நடத்துவதற்கான அபாயத்தை உருவாக்கி இருந்தனர். ஆனால் அவர்களுடைய இந்த சூழ்ச்சியை அல்லாஹ் தோல்வியடையச் செய்து விட்டபோது அதன் பின்னரும் அவர்கள் தொடர்ந்து எப்படியாவது. இஸ்லாமிய இயக்கத்தை வேரறுத்து விட வேண்டுமென்பதற்காக தில்லுமுல்லுகள் சூழ்ச்சிகள் பலவற்றைச் செய்த வண்ணமேயிருந்தார்கள்.

இந்த நோக்கத்திற்காக அவர்கள் அரபுலகத்தில் பல்வேறு குலங்களுடன் குறிப்பாக குறைஷிகளுடனும் சேர்ந்து சதிகள் பல் செய்ததோடு மதீனா நகரத்திலிருந்த நயவஞ்சர்களையும் தூண்டிவிட்டார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்குள்ளேயே இருந்துகொண்டு அவர்களுடைய வேர்களை அறுத்திடும் வேலையை விரைவு படுத்திடவும் வெளியிலுள்ள பகைவர்கள் தாக்குதல் நடத்தி இஸ்லாத்தை ஒழித்துக் கட்டிடவும் அவர்களைத் தொடர்ந்து ஆயத்தப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

யூதர்களுடைய இந்த முயற்சிகள் அனைத்தும் அண்ணலாருக்குத் தெரியாமலில்லை. எப்படியாவது யூதர்களுடன் பொருத்தமான ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் சதிகளைக் கைவிட்டு விட வேண்டும் என்று அண்ணலார் (ஸல்) முயற்சி செய்தார்கள். இந்த நோக்கத்திற்காக அண்ணலாரே ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்து அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார்கள். ஆனால் யூதர்கள் தமது சதிகளைக் கைவிடவில்லை.

எந்த அளவிற்கு அவர்கள் எல்லை மீறிச்சென்றார்கள் என்றால், அவர்கள் பல்வேறு குலங்களுக்கும் ‘நீங்கள் எங்களுடன் சேர்ந்து மதீனா நகரின் மீது தாக்குதல் நடத்துவீர்களாயின் நாங்கள் எங்கள் பேரீச்சந் தோட்டங்களின் விளைச்சலின் பாதிப் பங்கை உங்களுக்கு என்றென்றும் செலுத்தி வருவோம்’ என்று செய்தியனுப்பினார்கள். இறுதியில் யூதர்களின் இந்த சதித்திட்டங்களின் விளைவாக, பல குலங்களின் எண்ணங்கள் நோக்கங்களெல்லாம் சீர்கெட ஆரம்பித்தன. அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து மதீனாவின் மீது தாக்குதல் அனைவருமாகச் சேர்ந்து மதீனாவின் மீது தாக்குதல் தொடுப்போம் என்னும் கருத்தை எற்கலாயினர்.

தாமே முன்வந்து தாக்குதல் நடத்தும் உபாயம்

இதுவரை முஸ்லிம்கள் தம்மைத் தற்காத்து கொள்வதற்காகப் போரிட்டு வந்தார்கள் பகைவர்கள், அவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகத் தாக்குதல் நடத்தினார்கள். முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்த நேரிட்டது. அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிட்டியது. பகைவர்கள் தோற்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நிலைமைகள் புதிய வடிவமெடுத்து விட்டிருந்தன. இனி இஸ்லாமிய இயக்கத்திற்கு எங்கெல்லாம் அபாயம் தென்படுகிறதோ அங்கெல்லாம் அந்த அபாயம் முற்றிவிடுவதறகு முன்பே முன்சென்று அதனைத் தாக்கி தகர்த்து விடுவதும் அவசியமாயிற்று.

இஸ்லாமிய இயக்கத்தை நிலைநாட்டவும், அதனைப் பாதுகாக்கவும் ஒருபுறம் தற்காப்புப் போரின் தேவை ஏற்பட்டது. மறுபுறம் அதுபோலவே தம்மைத் தாக்கும் அபாயத்தை தகர்க்க, முன்சென்று சீர்திருத்தப் போர் புரிவதும் அவவியமானதாக இருந்தது.

இஸ்லாம் ஒரு வாழ்கைமுறை மட்டுமல்ல. வாழ்க்கைக்குத் தேவையான விதிமுறைகளைக் கொண்ட முழுமையான தொகுப்பும் ஆகும். இந்த வாழ்க்கை முறையை நிலைநாட்ட, அந்தத் தொகுப்பைச் செவ்வனே அமல்படுத்த பல முயற்சிகள் செய்வது அத்தியாயவசியமாகிறது. பகைவர்கள் இஸலாமயி இயக்கத்தை தாக்கும் சூழ்நிலை இருக்கும்போது, அப்பொழுது வெறும் தற்காப்பு உபாயங்களை மட்டுமேகையாளவது போதுமானதாக இருக்கவில்லை. மாறாக இந்த இஸ்லாமிய அமைப்பை நிலைநாட்ட தம்மை பிறர் தாக்குவதற்கு முன்பே அஞ்ஞான அமைப்புகளை முன்சென்று தகர்த்தெறிய வேண்டியதும் அதற்காக பேராட வேண்டியதும் அவசியமாகின்றது.

அகழ்ப் போருக்குப் பின்னால் இஸ்லாமிய இயக்கம், இனி தற்காப்பு வகைப் போர்கள் மட்டுமே போதமாட்டா என்னும் கட்டத்திற்குள் பிரவேசித்து விட்டிருந்தது. தேவைப்படும்போது தானே முன்சென்று அபாயத்தை அகற்ற வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான் அகழ்ப்போர் முடிந்த பின்னால் அண்ணலார் இவ்வாறு கூறினார்கள்: ‘எதிரிகள் நம்மீது தாக்குதல் நடத்தும் கட்டம் இனிவராது, நாமே சென்று தாக்குதல் நடத்தும் நிலைதான் இருக்கும்!’.

கைபர் மீது தாக்குதல்

இப்போது கைபர் பள்ளத்தாக்கில் வசித்த யூதர்களில் பெருகிவரும் சதிகளையும் தீமைகளையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டிருந்தது. ஆகவே அண்ணலார் (ஸல்) அவர்கள் கைபர் மீது தாக்குதல் நடத்திட ஆயத்தங்கள் செய்யலானார்கள். யூதர்களின் தரப்பிலிருந்து எந்தத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அச்சமிருந்ததோ அந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திட மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு முஹ்ர்ரம் மாதம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு அண்ணலாருடன் இருந்த படையினரின் எண்ணிக்கை 1600 ஆகும். அதில் இருநூறு வாகன வீரர்களும் (குதிரையிலும் ஒட்டகத்திலும் சவாரி செய்து சென்ற வீரர்களும்) மீதம் 1400 பேர் காலாட் படையினராகவும் இருந்தனர்.

கைபர் பள்ளத்தாக்கில் ஆறு கோட்டைகள் இருந்தன. அவற்றில் இருபதாயிரம் சிப்பாய்கள் இருந்தனர். முஸ்லிம்கள் கைபரைச் சென்றடைந்த பின்னரும் உண்மையிலேயே யூதர்கள் போருக்குத் தயாராக உள்ளனர் என்றும், எந்த நிலையிலும் சமாதான உடன்படிக்கைக்கோ, போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கோ அவர்கள் தயாராக இல்லை என்றும் அண்ணலாருக்கு உறுதியாகத் தெரிந்து விட்டபோது அவர்கள் தமது தோழர்கள் முன்னால் ஜிஹாத் குறித்து உரையொன்றை ஆற்றினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக உயிரையும் பணயம் வைத்துப் போராடிட தம் தோழர்களுக்கு ஆர்வம் ஊட்டினார்கள்.

ஏறத்தாழ இருபது நாட்கள் முற்றுகைக்குப் பிறகு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான். இந்தப் போரில் 93 யூதர்கள் கொல்லப்பட்டார்கள். 15 முஸ்லிம்கள் ஷஹீதானார்கள். யூதர்களின் பெரும் பலசாலியான முரஹ்ஹப் என்பவன் (அல்லது மர்ஹப் என்பவன்) அலீ (ரலி) அவர்களின் கரத்தால் கொல்லப்பட்டது. மகத்தானதொரு நிகழச்சியாக இருந்தது. ஏனெனில் யூதர்கள் அவனது பலத்தைக் குறித்து அளவுகடந்த பெருமை கொண்டிருந்தார்கள்.

வெற்றிகுப் பிறகு யூதர்கள், இதுவரை அவர்களிடம் இருந்த நிலங்களைத் தொடர்ந்து அவர்கள் வசமே விட்டுவைத்தால் அவற்றின் விளைச்சலில் பாதிப் பங்கை முஸ்லிம்களுக்குச் செலுத்திக் கொண்டிருப்பதாகக் கோரினார்கள். அண்ணலார், அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பாதிப் பங்கு விளைச்சலை வசூலிப்பதில், முஸ்லிம் ஆட்சியாளர்கள் யூதர்களிடம் மேற்கொண்ட நீதியான நேர்மையான வழிமுறைகள் சிறிது சிறிதாக யூதர்களின் உள்ளங்களையும் வெற்றி கொண்டன. முஸ்லிம் ஆட்சியாளர்கள் விளைச்சலை இரு குவியல்களில் அவர்கள் எதனை விரும்புகின்றார்களோ அதனை எடுத்துக் கொள்ளும்படி உரிமை வழங்கி விடுவார்கள்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒழுக்கப் பயிற்சியளித்தல்

________________________________________

உஹதுப் போருக்குப் பிறகு இஸ்லாமிய இயக்கத்திற்கு எந்த அளவிற்கு வெளிப்புற ஆபத்துக்கள் பெருகி விட்டிருந்தன என்பதை அகழ்ப் போரிலிருந்தும் அதற்குப் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்தும் நன்கு அறிந்து கொள்ளலாம். இந்தக் காலகட்டம் பெரும் போராட்டத்திற்குரிய காலகட்டமாய் இருந்தது. ஆனால் இதனைப் பிரச்சனைகளுக்குமிடையே இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுள்ள ஒரு தளபதியாக, இந்த நிகழ்ச்சிகளை சூழ்நிலையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்களோ அவ்வாறே ஓர் ஒழுக்க போதகள். பயிற்சியாளர்கள். உள்ளத் தூய்மைப்படுத்துபவர் என்னும் அந்தஸ்தில் இயக்க ஊழியர்களுக்குப் பயிற்சியும் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் புதிய இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையாயிருந்த சட்ட திட்டங்களும் விதிமுறைகளும் தொடர்ந்து கற்றுத் தரப்பட்டு வந்தன. திருமறையின் நான்காவது, ஐந்தாவது அத்தியாயங்களான ‘அந்நிஸா’ வும் ‘அல்மாயிதா’ வும் இந்தக் காலகட்டத்தில்தான் இறக்கியருளப்பட்டன. அவற்றை அழ்ந்து படிக்கும்போது இஸ்லாமியக் பண்பாட்டை உருவாக்கவும், முஸ்லிம் சமுதாயத்தை நிர்மாணிப்பதற்காகவும், எத்தகைய அரிய சட்ட திட்டங்கள் கற்றுத் தரப்பட்டன என்று தெரிய வருகின்றது.

திருக்குர்ஆனின் நான்காவது அத்தியாயமான அந்நிஸா ஹிஜ்ரி 4 – 5 ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களில் இறக்கியருளப்பட்டது. அந்த நேரத்தில் அண்ணலார் (ஸல்) அந்தப் புதிய இஸ்லாமிய சமுதாயத்தை பழைய அஞ்ஞான காலச் சடங்குகள் சம்பிரதாயங்களிலிருந்து தூய்மைப்படுத்தி எப்படி அதனை ஒழுக்கம், நாகரீகம், சமூகக் கூட்டு வாழ்க்கை முறைகள், பொருளாதாரம் ஆகியவற்றுக்கான புதிய நெறிமுறைகளின் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கட்டுக் கோப்பான சமூக அமைப்பாய் வார்த்தெடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது இந்த அத்தியாயத்திலிருந்து தெரியவருகின்றது.

அப்போது முஸ்லிம்களுக்கு அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தமது கூட்டு வாழ்க்கையையும் எவ்விதம் இஸ்லாமிய வழிமுறைகளின்படி ஒழுங்குபடுத்திக் கொள்வது என்பதற்கான தெளிவான அறிவுரைகள் தரப்பட்டு வந்தன. அவர்களுக்கு குடும்ப அமைப்புக்கான விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. திருமணம், மணவிலக்கு அகியன குறித்தும் தெளிவான ஏவுரைகள் வழங்கப்பட்டன. பெண்களின் உரிமைகளும் ஆண்களின் உரிமைகளும் நிர்ணயிக்கப்பட்டு சமூகத்தின் தீமைகள் பலவும் களையப்பட்டன.

அனாதைகள் மற்றும் பலமற்றோர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சொத்துப் பங்கீடு, வாரிசுரிமை, அல்லது பாகப்பிரிவினைக்கான சட்டங்கள் இயற்றப்பட்டன. கொடுக்கல் வாங்கல், வியாபாரம் ஆகிய துறைகளைச் சீர்திருத்திட அறிவுரைகள் அளிக்கப்பட்டன. குடும்பச் சண்டைகள் சச்சரவுகள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன.

மது தடை செய்யப்பட்டது, தூய்மை, சுத்தம் தொடர்பான சட்டங்கள் வழங்கப்பட்டன. நேர்மையைப் பேணும் மனிதன் இறைவனுடன் தம் தொடர்பை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? அதே சமயம் மக்களுடன் அவனுடைய தொடர்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான முறைகள் தெளிவாகக் கற்றுத் தரப்பட்டன.

இவற்றுடன் வேதம் வழங்கப்பட்டவர்களின் தவறான போக்குகளையும், பொருத்தமற்ற வாழ்க்கை முறையையும் விமர்சித்து ஒருபுறம் வேதம் வழங்கப்பட்டவர்களின் தவறுகள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. மறுபுறம் முஸ்லிம்களுக்கு இத்தகைய தவறுகளை விட்டு அவர்கள் விலகி வாழ்வதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மக்களை அத்தகைய தவறுகளை விட்டு விலகி வாழச் செய்வதில்தான் இஸ்லாமிய இயக்கம் கண்ணும் கருத்துமாக இருந்தது. ஏனெனில் இந்த விஷயத்தை ஒழுங்குபடுத்தாமல் அசத்தியத்திற்கு எதிராகப் போராடி வெற்றி ஒருபோதும் முடியாது. இஸ்லாமிய இயக்கத்தின் ஊழியர்கள் அசத்தியவாதிகளுக்கு முன்னால் தம்முடைய தனிப்பட்ட வாழ்வில் மட்டும் ஒழுக்க ரீதியாக உயர்ந்து விளங்கினால் போதுமானதாகி விடாது. அத்தகைய ஒழுக்க சீலர்கள் ஒன்றிணைந்து ஒரு உன்னத சமூக அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும். அதன் வாயிலாக நடைமுறையில் சத்தியத்தை தௌ;ளத் தெளிவாக எடுத்துரைப்பதும், இஸ்லாத்திற்கு புறம்பான சமூக அமைப்பைவிட இந்த சமூக அமைப்பு எவ்வளவு மேன்மையானது என்று கூட்டாக சான்று பகர்வது அவசியமானதாகும்.

இந்தக் குறிக்கோளை அடைந்திட எவ்வித செயற்கையான உபாயங்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியமில்லை. இயக்க ஊழியர்கள் இறையச்சம் கொண்ட வாழ்வைப் பேணுவதும் இஹ்ஸான் என்னும் உன்னத நடத்தையை மேற்கொள்வதுமே தேவைப்படும் அந்த விளைவுகளை தோற்றுவித்து விடுகின்றன.

ஓர் இறைத்தூதரின் சீர்திருத்த மற்றும் புரட்சி இயக்கம் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பிற இயக்கங்கள் அனைத்தையும்விட தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. இறைத்தூதர் ஒருவர் தன்னைப் பின்பற்று வோருக்கு இறையறிவைப் புகட்டுவதிலும் அவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சியளிப்பதிலும் அவர்கள் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதிலும் மிக அக்கறையுடன் கவனத்தை செலுத்துவார். அதே சமயத்தில் இன்னும் தம்மைப் பின்பற்றாத மக்களிடம் அழைப்புப் பணியை நிறைவேற்ற மிகுந்த துடிப்புக் கொண்டவராகவும் இருப்பார்.

இந்தச் சிறப்புகள் அனைத்தும் திருமறையின் நான்காவது அத்தியாயமான அந்நிஸாவின் கருப்பொருள்களிலும் காண்க் கிடைக்கின்றன. இந்த அத்தியாயத்தில் எங்கெல்லாம் ஒழுக்கப் பண்பாடு, கூட்டு வாழ்க்கை தொடர்பான சட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளனவோ அங்கெல்லாம் அழைப்புப் பணிக்கான சிறப்புரைகளும் நம் முன் வருகின்றன.

மேலும் இணை வைப்பவர்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சத்திய மார்க்கத்தின்பால் அழைப்பு விடுக்கும் உரைகளும் இடம் பெற்றுள்ளன.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னால் ஏறத்தாழ ஹிஜ்ரி 7-இல் திருமறையின் ஐந்தாவது அத்தியாயமான ‘அல்மாயிதா’ இறக்கியருளப்பட்டது. ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி முஸ்லிம்கள் இந்த ஆண்டு உம்ரா செய்ய முடியாதவர்களாய் இருந்தனர். ஆனால் அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் இறையில்லமாம் கஅபாவைச் சந்தித்திட வருவார்கள் என்பது முடிவாகிவிட்டிருந்தது.

ஆகவே கஅபாவைச் சந்திக்கும் அந்தக் காலகட்டம் வருவதற்கு முன்பாகவே இறையில்லம் கஅபாவை தரிசிப்பதற்கு முன்பாகவே இறையில்லம் கஅபாவை தரிசிப்பதற்கான ஒழுக்கங்கள், சட்ட திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இறை மறுப்பாளர்கள் வரம்பு மீறி அக்கிரமம் புரிந்தாலும் முஸ்லிம்கள் தம் தரப்பிலிருந்து வரம்பு மீறிய அக்கிரமச் செயல்கள் எதுவும் புரியக் கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

அத்தியாயம் அல்மாயிதா இறக்கியருளப்படுவதற்குள் முஸ்லிம்களின் நிலை வெகுவாக மாறிவிட்டிருந்தது. உஹதுப் போரின் போது இருந்தது போல் இஸ்லாத்தை நாற்புறங்களிலும் அபாயங்கள் சூழ்ந்திருந்த அந்த நிலை இப்போதிருக்கவில்லை. ஆனால் இப்போதிருக்கவில்லை. ஆனால் இப்போதைய நிலை என்னவெனில் இஸ்லாத்திற்கென்று தினியொரு பலம் இருந்தது. இஸ்லாமிய அரசு பெருமளவுக்குப் பரவிவிட்டிருந்தது. மதீனா நகரின் நான்கு திசைகளிலும் நூற்றைம்பது இருநூறு மைல்கள் வரை பரவி வசித்து வந்த கோத்திரங்கள் அனைத்தும் தம் எதிர்ப்பு வலிமையை இழந்திருந்தன. மதீனா நகருக்கு யூதர்களிடமிருந்து ஏற்படவிருந்த நிரந்தர ஆபத்தும்கூட நீங்கிவிட்டிருந்தது. அங்குமிங்குமாக எஞ்சியிருந்த யூதர்களும் கூட அனைவருமாக மதீனாவின் இஸ்லாமிய அரசுக்கு கீழ்ப்படிந்து வாழும் நிலையை ஒப்புக் கொண்டிருந்தனர். ஆக இஸ்லாம் சில கொள்கைகளின் தொகுப்பு மட்டுமல்ல. பொதுவாக மதம் என்றழைக்கப்படும் நம்பிக்கைகள் மட்டுமல்ல. பொதுவாக மனிதர்களின் மனத்தோடும் மூளையோடும் மட்டுமே தொடர்புடைய சமயமல்ல, மாறாக அது ஒரு முழுமையான வாழ்க்கையமைப்பாகும். அது மனிதனின் மனத்தோடும் மூளையோடும் மட்டுமல்லாமல் அவனது அங்கம் முழுவதையும் தழுவியதாகும். இதில் அரசு, அரசியல், போர், சமாதானம் அனைத்துமே அடங்கும் என்று தெளிவாகப் புலப்படலாயிற்று. இப்பொழுது உருவாகியுள்ள நிலை :-

Ø      முஸ்லிம்கள் தாம் அறிந்து, புரிந்து ஏற்றுக் கொண்ட நெறியை யாதொரு தடையுமின்றி இனி, பேணி வாழலாம்.

Ø      பிற வாழ்கை நெறியோ, சட்டமோ அந்தப் பாதையில் அவர்களுக்கு இடையூறாக இருக்காது.

Ø      அத்துடன் தாம் ஏற்றுள்ள நெறியின்பால் மற்றவர்களுக்கு அழைப்பும் விடுக்கலாம்.

ஆக யாதொரு தடையுமின்றி தம் நெறியின் தம் நெறியின்படி வாழ்ந்து பிறரையும் அதன்பால் அழைப்பு விடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் இப்பொழுது வலிமை பெற்றிருந்தனர்.

இந்தக் காலகட்டத்திற்குள் முஸ்லிம்களுக்கென்று தனியொரு நாகரீகம், பண்பாடு உருவாகி விட்டிருந்தது. அது பிற நாகரீகங்களைவிட தனிச் சிறப்புடையதாக தனித்தன்மை கொண்டதாக விளங்கியது. முஸ்லிம்களின் பண்புகள் அவர்களுடைய வாழும் முறைகள், பழக்கவழக்கங்கள், அவர்களுடைய கொடுக்கல் வாங்கல்கள் ஆக, அவர்களுடைய வாழ்வின் அமைப்பு முழுவதுமே இஸ்லாமியக் கொள்கைகளின் நெறிகளின் அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்டு வந்தது.

இப்போது அவர்கள் மற்ற சமுதாயங்களுக்கு முன்னே முற்றிலும் வெளிப்படையான சிறப்புத் தகுதியை அடைந்து விட்டிருந்தார்கள். அவர்களுக்கே உரித்தான குடியியல் மற்றும் குற்றவியல் சட்டங்கள் இருந்தன. அவர்களுக்குகென்று தனி நீதிமன்றங்கள் இருந்தன. கொடுக்கல் வாங்கல், விற்பனை, கொள்முதல் ஆகியவற்றுக்கான சொந்த வழிமுறைகள் இருந்தன. வாரிசுரிமைக்கான தனிச்சட்டம் இருந்தது. திருமணம், மணவிலக்கு, பர்தா மற்றும் இதுபோன்ற பல நடைமுறைகளுக்கு அவர்களுக்கேயுரிய சட்டதிட்டங்களும் நெறிமுறைகளும் இருந்தன.

எந்த அளவுக்கொன்றால் அவர்களின் நடை உடை பாவனை, உணவுப் பழக்கவழக்கங்கள், நட்பு, சுற்றும் ஆகியவற்றுக்கான ஒழுக்கங்களைக் குறித்தும் தெளிவான ஏவுரைகள் இருந்தன. இவையனைத்துமாகச் சேர்ந்து இஸ்லாமியச் சமூகம் மற்றும் இஸ்லாமிய வாழ்க்கைமுறையை இஸ்லாத்திற்குப் புறம்பான மற்றெல்லா சமூக அமைப்புகளை விடத் தனிச் சிறப்புடையதாய் விளங்கச் செய்தன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அளித்த பயிற்சியின் அவர் புகட்டிய அறிவுரைகளின் விளைவாகவே இத்தகைய உன்னத சமூக அமைப்பு மலர்ந்தது.

இந்தத் தலையாய விஷயமான அதாவது இந்தப் பயிற்சியை அளிப்பதிலும் கல்வியைப் புகட்டுவதிலும் அண்ணல் (ஸல்) அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்திய வண்ணமிருந்தார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்களின் வாழ்வு நாளுக்கு நாள் அப்பழுக்கற்றதாக, தூய்மையானதாக மலர்ந்துகொண்டே போனது.

அத்தியாயம் ‘அல்மாயிதா’ வில் ஹஜ் பயணத்தின் ஒழுக்கங்கள், உண்ணும், பருகும் பொருள்களில் ஆகுமானது (ஹலால்), விலக்கப்பட்டது (ஹராம்) என்னும் பாகுபாடு, அங்குசுத்தி (உளூ), குளிப்பு, தயம்மும் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் இடம் பெற்றன. அது செய்யும் கட்டளை, சாட்சியைக் சட்டம் குறித்து ஏவுரைகள். நீதி நாயத்தை நிலைநாட்டும்படி வலியுறுத்த தாக்கீதுகள் ஆகிய இன்னபிற கருத்துரைகள், இஸ்லாமியச் சமுதாயத்தை நிர்மாணித்திடத் தேவையான அவசியமான விஷயங்கள் அனைத்தும் அந்த அத்தியாயத்தில் காணப்படுகிறது.

உம்ராவை நிறைவேற்றல்

முஸ்லிம்கள் அடுத்த ஆண்டு மக்கா நகர் வந்து உம்ரா செய்யலாம் என்பது ஹுதைபிய்யா உடன்படிக்கையின் ஒரு நிபந்தனையாக இருந்தது. ஆகவே அடுத்த ஆண்டு அதாவது ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் அண்ணலார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒரு பெரும் எண்ணிக்கையினருடன் இறையில்லம் கஅபாவைத் தரிசிக்கச் சென்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நபித்தோழர்கள் அளவிலா மகிழ்ச்சியுடனும் உத்வேகத்துடனும் இருந்தனர். இந்தக் காட்சி குறைஷி இறைமறுப்பாளர்களின் உள்ளங்களில் அமுங்கிக் கிடந்த பொறாமைத் தீயையும் மாச்சரிய உணர்வுகளையும் இன்னும் அதியமாகத் தூண்டிவிட்டது. இப்பொழுது குறைஷிகளுக்கு தமது விருப்பத்திற்கேற்ப தமது நிலையைப் பலமாக்கிடச் செய்துகொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை துச்சமானதாக தென்படலாயிற்று.

மக்கா வெற்றி : ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறுதல்

________________________________________

;முஸ்லிம்கள் அல்லது குறைஷிகள் ஆகிய இருவரில் யாருடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றார்களோ, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அரபுக் குலங்களுக்கு உரிமை உண்டு என ஹுதைபிய்யா உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே இந்த நிபந்தனையின் படியே குஸாஆ குலத்தார் முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்கள். பனூ பக்ரு குலத்தார் குறைஷிகளின் தோழர்களாகி விட்டிருந்தார்கள். ஏறத்தாழ ஒன்றரை ஆணடுக் காலம் வரை இந்த உடன்படிக்கை முழுமையாக அமலில் இருந்தது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் புதியதொரு நிகழச்சி நடைபெற்றது. பல்லாண்டு காலமாக தொடர்ந்து தமக்குள்ளே பரஸ்பரம் போரிட்டு வந்த குஸாஆ குலத்தாருக்கும் பனூபக்ரு குலத்தாருக்குமிடையே மீண்டும் போர் மூண்டது.

இந்தப் போர் இவ்வாறு தொடங்கியது: பனூபக்ரு குலத்தார், குஸாஆ குலத்தார் மீது தாக்குதல் நடத்திவிட்டார்கள். குறைஷிகள் பனூபக்ரு குலத்தாருக்கு உதவி புரிந்தார்கள். ஏனெனில் குஸாஆ குலத்தார், குறைஷிகளின் விருப்பதிற்கு மாறாக முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்ததால் குறைஷிகள் முன்பிருந்தே அவர்கள் மீது கோபம் கொண்டிருந்தனர். ஆக, பனூபக்ரு குலத்தாரும் குறைஷிகளும் ஒன்றாகச் சேர்ந்து குஸாஆ குலத்தாரைக் கொல்லத் தொடங்கி விட்டனர். இறுதியில் குஸாஆ குலத்தார் இறையில்லம் கஅபாவில் தஞ்சம் புகுந்தபோதும் கூட அங்கும் அவர்களை விட்டு வைக்கவில்லை, ஹரம்ஷரீஃபிலும் குஸாஆ குலத்தாரின் ரத்தத்தைச் சிந்தச் செய்தார்கள்.

குஸாஆ  குலத்தார் மிகவும் இயலாமைக்குள்ளாகி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நிலைமைகளைத் தெரிவித்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமக்கு உதவி புரியும்படி கோரினார்கள். குஸாஆ குலத்தாருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கேட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரும் மன வேதனை அடைந்தார்கள். நபி (ஸல்) குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்பி வைத்தார்கள். பின்வரும் மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி குறைஷிகளுக்கு தூது அனுப்பினார்கள். அந்த நிபந்தனைகள் பின்வருமாறு :-

1.      குஸாஆ குலத்தாரில் கொல்லப்பட்டவர்களுக்கு இரத்த ஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.

அல்லது

2.      குறைஷிகள் பனூபக்ரு குலத்தாருக்கு ஆதரவு தரக் கூடாது.

அல்லது

3.      ஹுதைபிய்யா உடன்படிக்கை முடிவடைந்து விட்டது என்று அறிவித்துவிடுவது.

தூதுவரின் வாயிலாக இந்தச் செய்தியை செவியுற்ற குறைஷிகளில் ஒருவரான குர்த்தா பின் உமர் என்பவன் எங்களுக்கு மூன்றாவது நிபந்தனைதான் ஏற்புடையது என்று கூறிவிட்டான்.

தூதுவர் சென்றுவிட்ட பின்னால் குறைஷிகள் தமது இந்தப் பதிலுக்காக வருத்தமடைந்து, மீண்டும் தம் தரப்பிலிருந்து அபூசுஃப்யானைத் தூதராக்கி, ஹுதைபிய்யா உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொண்டு வரும்படி ஆனுப்பி வைத்தார்கள். ஆனால் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு நிலைமைகள் தெரிந்து விட்டிருந்தன. இந்த நிலைமைகளின் அடிப்படையிலும் குறைஷிகள் இதுவரை மேற்கொண்ட நடத்தையைக் கருத்தில் கொண்டு குறைஷிகள் மீண்டும் எழுப்பிய கோரிக்கையில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருப்தியடையவில்லை. இதன் காரணமாக அபூசுஃப்யானின் வேண்டுகோளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஏறக மறுத்துவிட்டார்கள்.

மக்கா நகர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகுதல்

இறையில்லமான கஅபா ஏக இறைவனின் வழிபாட்டுக்காக மட்டும் நிர்மாணிக்கப்பட்ட கேந்திரமாக இருந்தது. ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்ராஹிம் (அலை) அவர்கள் நிர்மாணித்திருந்தார்கள். ஆனால் அந்த ஏகத்துவ ஆலயம் அன்றுவரை இணை வைப்பாளர்களின் கரங்களிலேயே இருந்துவந்தது. இணைவைப்பின் மிகப்பெரும் கேந்திரமாக மாறிவிட்டிருந்தது.

அண்ணலார் (ஸல்) அவர்கள் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் எடுத்துரைத்த அதே மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பவராகத்தான் இருந்தார்கள். தூய்மையான கலப்பற்ற ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பு விடுக்கும் கொள்கைவாதியாக, செயல்வீரராகத் திகழ்ந்தார்கள். இந்த அடிப்படையில் ஏகத்துவத்தின் இந்தத் தலைமைப்பீடத்தை முடிந்தவரை விரைவாக இணைவைப்பின் மாசுகளிலிருந்து தூய்மைப்படுத்தும் அவசியமானதாயிருந்தது.

ஆனால் இதுவரை சூழ்நிலை அதற்கு இடம் தராமலிருந்தது. ஆனால் இனி அல்லாஹ்வின் இந்தப் புனித இல்லத்தை அவனை வணங்குவதற்காகவேயுள்ள இடமாக ஆக்கி, சிலை வணக்கத்தின் மாசுகளனைத்தையும் விட்டு இதனைத் தூய்மைப்படுத்திட வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் எண்ணினார்கள்.

அகவே அண்ணலார் (ஸல்) அவர்கள் தாம் எந்தக் குலத்தாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்களோ அந்தக் குலங்கள் அனைத்திற்கும் தூது அனுப்பினார்கள். அதே நேரத்தில் மக்காவாசிகளுக்கு இந்த முன்னேற்பாடுகளும் ஆயத்தங்களும் முன்கூட்டியே தெரிந்துவிடாமலிருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்.

ஆயத்த ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்து விட்ட பின்னால் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு ரமளான் மாதம் 10 ஆம் தேதி மக்கா நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். ஏறத்தாழ பத்தாயிரம் தோழர்களின் மகத்தான படையொன்றும் அண்ணலார் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டது. வழியில் அண்ணலார் (ஸல்) அவர்களுடன் அரபுலகத்தின் பிற குலங்களும் முஸ்லிம்களின் சேனையுடன் வந்து இணைந்து கொண்டன.

அபூசுஃப்யான் கைது செய்யப்படல்

இஸ்லாமியச் சேனை மக்கா நகரையடைந்த பொழுது ஒளிந்திருந்து முஸ்லிம்களின் சேனையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த அபூசுஃப்யான் கைது செய்யப்பட்டு, அண்ணலார் (ஸல்) அவர்களின் திருச்சமூகத்தில் கொண்டு வரப்பட்டார். இவர் இதுவரை இஸ்லாத்தை எதிர்ப்பதில் முன்னணியில் நின் அதே அபூசுஃப்யான்தான்! இவர்தான் மதீனாவின் மீது தாக்குதல் நடத்த பலமுறை சதித் திட்டங்கள் தீட்டியவர். எந்த அளவிற்கென்றால், அண்ணலார் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய இரகசியத் திட்டங்களும் வகுத்திருந்தார்.

இத்தகைய கொடூரக் குற்றங்களுக்காக அபூசுஃப்யானை உடனடியாகக் கொல்ல உத்திரவிட்டிருந்தாலும் பொருத்தமானதாகவே இருந்திருக்கும்! ஆனால் அண்ணலார் (ஸல்) அவர்கள் அவரைக் கருணையுடன் நோக்கினார்கள். ‘செல்லுங்கள், இன்று உங்கள் மீது விசாரணை எதுவும் நடத்தப்படாது. அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும், அவன் அனைவரையும் விடக் கருணை புரியக்கூடடியவன் ஆவான்’. அபூசுஃப்யானுடன் அண்ணலார் (ஸல்) அவர்கள் நடந்துகொண்டவிதம் முற்றிலும் புதுமையானதாய் இருந்தது. அகிலத்தாருக்கோர் அருட்கொடையான அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தக் கருணைமிக்க போக்கு, அபூசுஃப்யானின் இதயக் கண்களைத் திறந்து விட்டது!

மக்கா நகரின் மீது படையெடுத்து வந்தவர், தன் எதிரிகளிடம் பழிவாங்குவதற்காக அவர்களின் ரத்தத்தைக் குடித்திடத் துடிப்பவரும் அல்லர். உலகத்தின் அரசர்களைப் போல் அகந்தையும் கர்வமும் படைத்த வரும் அல்லர் என அபூசுஃப்யான் அறிந்தார். இதனால் தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் அபூசுஃப்யானை விடுதலை செய்துவிட்ட பின்னரும்கூட அவர் மக்காவில் நிலை கொள்ளவில்லை. உடன் இஸ்லாத்தை ஏற்று அண்ணலார் (ஸல்) அவர்களின் உயிர்த் தோழர்களில் ஒருவராகிவிட்டார்.

மக்கா நகருக்குள் பிரவேசித்தல்

________________________________________

இப்பொழுது அண்ணலார் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு, ‘நீங்கள் மக்கா நகரின் ஒரு பக்கத்திலிருந்து அதனுள் நுழையுங்கள். ஆனால் எவரையும் கெல்லக்கூடாது, எவராவது உமக்கெதிராகக் கரத்தை ஓங்கினால், உம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நீரும் கரத்தை ஓங்கிட அனுமதியுண்டு’ என்று உத்திரவிட்டார்கள். அவ்வாறே காலித் பின் வலீத் (ரலி) மக்கா நகரின் ஒரு பக்கத்திலிருந்து நகருக்குள் பிரவேசித்தார்கள். அதற்கு எதிர்த் திசையில் அண்ணலார் (ஸல்) அவர்கள் நகருக்குள் பிரவேசித்தார்கள்.

காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் படையின் மீது சில குறைஷிக் குலங்கள் அம்பு மாரி பொழிந்தார்கள். முஸ்லிம்களில் மூவரை ஷஹீதாக்கி விட்டார்கள். அதனால் காலித் (ரலி) அவர்களும் அவர்கள் மீது எதிர்தாக்குதலை மேற்கொண்டார்கள். இதன் விளைவாக அவர்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்தவர்கள் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு காலித் (ரலி) அவர்கள் நடத்திய தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தது. அவர்களைக் கண்டித்தார்கள். ஆனால் நடந்த சம்பவம் அனைத்தும் தெறிந்தபிறகு, ‘அல்லாஹ்வின் நாட்டம் இதுதான் போலும்’ என்று கூறினார்கள்.

மறு திசையில் அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்கா நகரில் பிரவேசித்தார்கள். அங்கு அவருக்கு எந்தவிதமான தடையும் ஏற்படவில்லை. மேலும் அண்ணலார் (ஸல்) அவர்கள் தலைமை தாங்கிய படையினரால் எவரொருவரும் கொல்லப்படவில்லை.

மக்காவில் அமைதிப் பிரகடனம் செய்தல்

அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைந்தவுடனே பின்வருமாறு பிரகடனம் செய்தார்கள்:

1.      எவர் தன் வீட்டினுள் கதவை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கின்றாரோ அவருக்குப் பாதுகாப்புண்டு.

2.      அபூசுஃப்யானின் இல்லத்தினுள் புகுபவருக்கும் பாதுகாப்புண்டு.

3.      இறையில்லம் கஅபாவினுள் அடைக்கலம் தேடிக் கொள்பவருக்கும் பாதுகாப்புண்டு.

ஆனால் இந்தப் பொதுமன்னிப்பு பிரகடனத்திலிருந்து ஏழு பேருக்கு மன்னிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் முன்னிலையில் இருந்தவர்கள் ஆவர். அவர்களைக் கொல்வது அவசியமாக இருந்தது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எத்தகைய மாட்சியுடன் அந்த நகருக்குள் பிரவேசித்தார்கள் என்று பாருங்கள். அண்ணலார் அவர்கள் வெள்ளை நிறப் பாதகையை ஏந்தியிருந்தர்கள். கொடி கறுப்பு நிறத்தில் இருந்தது. மக்ஃபர் அணிந்து அதற்கு மேல் கருப்பு நிற தலைப்பாகை அணிந்திருந்தார்கள். திருமறையின் 48ஆவது அத்தியாயத்தின் வசனங்களான, ‘இன்னாஃப தஹ்னாலக ஃபத்ஹன் முபீனா’ (உமக்கு பகிரங்கமானதொரு வெற்றியை நாம் அளித்து விட்டோம்) என்ற வசனங்களை ஓதி வந்தார்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் எந்த அளவிற்கு உள்ளச்சத்தோடும் பணிவோடும் இருந்தார்கள் எனில், தாம் சவாரி செய்து கொண்டிருந்த ஒட்டகத்தின் மீதே அதன் முதுகில் தமது திருமுகம் படும் அளவிற்கு சிரம்பணிந்த நிலையில் பிரவேசித்தார்கள்.

இறையில்லம் கஅபாவினுள் நுழைதல்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹாமில் (இறையில்லம் கஅபாவில்) நுழைந்தபோது அனைத்திற்கும் முதலாக எல்லாச் சிலைகளையும் அதிலிருந்து எடுத்தெந்து விடும்படி உத்திரவிட்டார்கள். அப்பொழுது கஅபாவினுள் 360 சிலைகள் இருந்தன. சுவர்களில் உருவப்படங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவையும் அழிக்கப்பட்டன.

இவ்விதம் அல்லாஹ்வின் இந்த இல்லம் இணைவைப்பின் மாசுகளிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டது. அதன் பின் அண்ணலார் (ஸல்) அவர்கள் தக்பீர் (இறைவனே பெரியவன் என்று) முழங்கினார்கள். இறையில்லம் கஅபாவை வலம் வந்தார்கள். மகாமே இப்ராஹிம் என்னுமிடத்தில் சென்று தொழுகை நிறைவேற்றினார்கள். ஆக இதுதான் அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது வெற்றியைக் கொண்டாடிய விதம்.

இதனைக் கண்ட மக்காவாசிகளின் கண்கள் திறந்தன. இத்துணை மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பத்திலும் இத்துணைப் பெரிய வெற்றியின் போதும்கூட இவர்களிடையே பெருமையோ படாடோமோ இல்லை, ஆணவப் போக்கோ, இறுமாப்புச் செயல்களோ இல்லை, மாறாக மிகவும் பணிவுடனும் நன்றியுணர்வுடனும் இவர்கள் தமது இறைவனின் முன்னால் பணிந்து போய் விடுகின்றார்கள். அவனது புகழை எடுத்துரைப்பதிலும் அவனது பெருமையை எடுத்துரைப்பதிலும் தான் முழ்கிக் கிடக்கிறார்கள் என்பதனைக் கண்டார்கள். இந்தக் காட்சியைக் கண்டபின், ‘உண்மையில் இது மன்னராட்சியும் அல்ல, நாடு பிடிக்கும் ஆசையும் அல்ல, இது வேறு ஏதோ ஒன்று’ என்று கூறாவர் யார்தான் இருக்க முடியும்?

மக்கா வெற்றிக்குப் பின்னால் அண்ணலார் (ஸல்) அவர்கள ஆற்றிய உரை

மக்கா வெற்றிக்குப் பிறகு அண்ணலார் (ஸல்) அவர்கள் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையொன்றை ஆற்றினார்கள். அவ்வுரையின் சில பகுதிகள் நபிமொழி நூல்களில் இடம்பெற்றுள்ளன. அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

‘ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் உரிய இறைவன் வேறெவருமில்லை. எவரும் எதுவும் அவனுக்கு இணையானவர் அல்லர். அவன் தன் வாக்குறுதியை உண்மையாக்கி காட்டிவிட்டான். அவன் தன் அடியாருக்கு உதவினான். சத்தியத்தின் பகைவர்கள் அனைவருடைய படைகளையும் தன்னந் தனியாய் முறியடித்து விட்டான்.

ஆம்!

கேட்டுக் கொள்ளுங்கள்! அஞ்ஞான காலப் பெருமைகள் அனைத்தும் பழைய (முந்தைய கடந்தகால) கொலகளுக்கான பழிவாங்கல்கள், இரத்த ஈட்டுத் தொகை அனைத்தும் என் காலடிகளுககுக் கிழேயுள்ளன. கஅபாவைப் பராமறிக்கும் பொறுப்பும் ஹஜ் செய்ய வருவோருக்கு நீர் புகட்டும் பணியும் மட்டும் இதிலிருந்து விலக்குப் பெற்றவையாகும். குறைஷிகளே! இப்பொழுது இறைவன் அஞ்ஞான காலப் பெருமைகளையும் குலப் பெருமை மற்றும் ஆணவங்களையும் அழித்து விட்டான். மக்கள் அனைவரும் ஆதமுடைய வழித்தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்’.

பின்னர் திருக்குர்ஆனின் இந்த வசனத்தை ஓதினார்கள்: ‘மக்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம், மேலும் உங்களைப் பல கோத்திரங்களாகவும் கிளைகளாகவும் ஆக்கினோம் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு (இவ்வாறு செய்தோம்) ஆயினும் எவர் அதிக இறையச்சமுடையவரோ அவரே இறைவனிடம் மிகுந்த கண்ணியத்திற்குரியவர் ஆவார். அல்லாஹ் மிக அறிந்தவனும் மதி நுட்பமுடையவனுமாவான்’. (49:13)

இத்துடன் இன்னும் சில முக்கிய விஷயங்களையும் அறிவுறுத்தினார்கள்

;இதுதான் இஸ்லாத்தின் வெற்றியாளர் அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு ஆற்றிய உரையின் பாங்காகும். இந்த உரையின் பகைவர்களுக்கெதிராக எந்தக் கோபமும் தொனிக்கவில்லை, வெறுப்பும் தொனிக்கவில்லை, தமது உயர் பணிகளை, தமது சாதனைகளைக் குறித்து தம்பட்டமடிக்கவோ, ஏன் பெருமிதமாகவோ கூடக் கூறிக் கொள்ளவில்லை. தமது உயிர்த் தோழர்களை பாராட்டவுமில்லை. ‘புகழ் அனைத்தும் ஒரே இறைவனுக்கே உரித்தானது. அடைந்த வெற்றியும், புரிந்த சாதனைகளும் அவனது அருளின் விளைவே!’ என்று பேருண்மை பிரகடனம் செய்யப்பட்டது.

அரபுகளிடையே கொலைக்குப் பழிவாங்குவது மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் வேறெவருடைய கரத்திலாவது கொல்லப்பட்டுவிட்டால், அந்தக் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக அதனைத் தங்கள் நினைவில் பசுமையாக வைத்திருப்பார்கள். பல்லாண்டுகள் கழிந்த பின்பும் வருங்கால (பிற்கால) வழித்தோன்றல்கள் கொலை புரிந்தவனின் குடும்பத்தாரிடம் கொல்லப்பட்டவனுக்காகப் பழி வாங்கவில்லையெனில் அவர்கள் நிம்மதியடைவதில்லை. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணலார் (ஸல்) அவர்கள் இத்தகைய எல்லாப் பழிவாங்கல்களையும் ஒழித்துக் கட்டிவிட்டார்கள். ரத்துச் செய்துவிட்டார்கள். அரபுகளுக்கு உண்மையான அர்த்தத்தில் அமைதியும் பாதுகாப்பும் மிக்க ஒரு வாழ்க்கையை அளித்தார்கள்.

மேலும், குலம், குடும்பம் ஆகியன குறித்து பெருமை பாராட்டிக் கொள்வது அரபுகளிடையே நிலவிவந்த ஒரு மிகப் பழைய நோயாக இருந்தது. ஆனால் மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் எந்தவித பாகுபாடும் சரியானதல்ல என இஸ்லாம் அவர்களுக்கு எடுத்துரைத்து. யார் இறைக் கட்டளைக்கு பணிந்து வாழ்கின்றானோ அவனே மேலானவன் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் யார் இறைக்கட்டளைக்கு எந்த அளவுக்கு கீழ்ப்பட்டிருக்கின்றானோ, இறைஉவப்பைப் பெறுவதற்காக எந்த அளவுக்கு உழைக்கின்றானோ, இறைவன் வெறுக்கும் செயல்களிலிருந்து எந்த அளவுக்கு விலகி வாழ்கின்றானோ அவனே அந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆவான்.

குலச் சிறப்புக்கு இஸ்லாத்தில் சிறிதும் இடமில்லை, குடும்ப உறவுகளும் குலத் தொடர்புகளும் ஒருவரையொருவர் அறிமுகமாவதற்கேயாகும். அல்லாஹ்வின் தூதர் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நோயையும் ஒழித்துக் கட்டினார்கள். மக்கள் அனைவருக்குமிடையில் நடைமுறையில் சமத்துவத்தை நிலை நாட்டினார்கள். இவ்வாறு மனித சமத்துவத்திற்கான பிரகடனம் செய்தார்கள். மக்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள இந்த அருள் பாக்கியத்தை இன்று வரையில் வேறெந்த நெறியும் எந்தத் தத்துவமும் மனித குலத்திற்கு அளிக்கவில்லை.

பொது மன்னிப்பு

எந்த மக்கட் திரளின் முன்னால் அண்ணலார் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்களோ அவர்களிடையே குறைஷிகளின் பெரும் பெரும் தலைவர்களெல்லாம் இருந்தனர்.

இஸ்லாத்தை அழித்திட வரிந்து கட்டிக் கொண்டு பாடுபட்டவர்களும் இருந்தனர்.

முஸ்லிம்கள் தம் தாயகத்தைத் துறந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் வண்ணம் அவர்களைக் கொடூரமாகத் துன்புறுத்தியவர்களும் இருந்தனர்.

முஸ்லிம்களின் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டவர்களும் இருந்தனர்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் மீது வசைமாரி பொழிந்தவர்களும் இருந்தனர். அவர்கள் மீது குப்பை கூளங்களைக் கொட்டி மகிழ்ந்தவர்களும் இருந்தனர்.

அண்ணலார் (ஸல்) அவர்களின் உயிரையே குடித்திட விரும்பி இரத்தவெறி பிடித்து அலைந்தவர்களும் இருந்தனர்.

அண்ணலார் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையாரைக் கொன்று அவர்களுடைய ஈரலைப் பிடுங்கியெடுத்து கடித்துத் துப்பியவர்களும் இருந்தனர்.

முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டுமே வணங்கி, அவனுக்கு மட்டுமே கீழ்ப்படிவதாக அறிவித்த ஒரே குற்றத்திற்காக அவர்களைக் கொலை செய்தவர்களும் இருந்தனர்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்தார்கள். பின்னர் வினவினார்கள்: ‘சொல்லுங்கள்! இன்று நான் உங்களிடம் எப்படி நடந்து கொள்ளப் போகின்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா?’.

அல்லாஹ்வின் தூதர் மக்கா நகருக்குள் எவ்விதம் அடியெடுத்து வைத்தார்கள் என்பதையும் இதுவரை அவர்களுடைய நடத்தை எப்படியிருந்தது என்பதையும் கண் கூடாகக் கண்ட அந்த மக்கள் ‘நீர் கண்ணியமிக்க சகோரராவீர், கண்ணியமிக்க சகோதரரின் மகன் ஆவீர்!’ என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டு அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சொல்லுங்கள்! இப்பொழுது உங்கள் மீது எநதக் குற்றச்சாட்டும் இல்லை, நீங்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள்’.

முஸ்லிம்கள் விட்டுச் சென்ற இல்லங்களையும் இடங்களையும் கைப்பிற்றிக் கொண்டவர்களிடமிருந்து அதனைத் திருப்பி வாங்கித் தரவுமில்லை. மாறாக, அண்ணலார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த முஸ்லிம்களிடம் அவர்கள் தமது உரிமையை விட்டுக் கொடுத்து விடும்படிக் கூறிவிட்டார்கள்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இந்த எல்லையற்ற கருணைவாய்ந்த நடத்தையின் தாக்கத்தினால் கொடிய எதிரிகளும் அவர்களுடைய மகிமையை ஏற்று அவரை பினபற்றுபவர்களாக மாறினர்!

ஆம்! இவர் இறைத்தூதர் தான் என்று அவர்கள் மனதாரக் கூறினர். இவர் நாட்டை வெல்லும் மன்னரல்லர், தம்முடைய ஆதிக்கத்துக்காக செயல்பட்டவருமல்லர், இவர் இறைத்தூதர் ஆவார். அவர் சத்தியத்தின் பால்தான் அழைக்கிறார் என்று பேருண்மைக்கு அவர்களும் சான்று அளித்தார்கள்.

இதுதான் மக்கா வெற்றியின் காட்சி. இந்த வெற்றி சொத்தின் மீதோ, பொருள்களின் மீதோ பெற்ற வெற்றியல்ல. மாறாக மனித உள்ளங்களின் மீது பெற்ற வெற்றியாகும். ஆம்! மாபெரும் மகத்தான வெற்றியாகும்.

ஹுனைன் யுத்தம் மக்கா வெற்றியின் பாதிப்பு

அண்ணலார் (ஸல்) அவர்களின் கருணை மிகுந்த போக்கின காரணத்தாலும் முஸ்லிம்களுடன் கலந்து பழிகியதால் ஒருபுறம் மக்கா நகரில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தைத் தழுவினார்கள். மற்றொரு புறம் மக்கா வெற்றி கொள்ளப்பட்டதன் விளைவாக அரபுலகத்தின் கோத்திரங்கள் அனைத்தும் உண்மையிலேயே இஸ்லாத்தின் பக்கம் அழைப்பவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆட்சியதிகாரத்திற்காகவும் செல்வத்திற்காகவும் அலைபவரல்லர், மாறாக அல்லாஹ்வின் திருத்தூதரேயாவார் என்பதை புரிந்து கொண்டனர்.

மேலும் இதற்குள் இஸ்லாமும் அதன் தனித் தன்மைகளும் மறைவான விஷயங்களாய் இருக்கவில்லை. மாறாக அரபுலகம் முழுவதும் இந்த அழைப்பு என்னவென்று அறிந்து விட்டிருந்தது. எவருடைய உள்ளத்தில் புரிந்து கொள்ளும் திறன் இருந்ததோ அவர்கள் சத்தியம் இதுதான் என்று அறிந்து கொண்டிருந்தனர். ஆகவே மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்டவுடன் அரபுலகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பல்வேறு கோத்திரங்களின் தூதுக் குழுக்கள் வருகை தரலாயின. இஸ்லாத்தை ஏற்றுக் கௌ;ளலாயின.

இஸ்லாமிய இயக்கத்திற்கெதிராக வெறுப்பும் கோபமும் எவருடைய உள்ளங்களில் இன்னும் குடி கொண்டிருந்தனவோ அவர்கள் இந்த நிலையைக் கண்டு மிகவும் நிம்மதியிழந்து தவிக்கலாயினர். அவர்களுக்குள் காழ்ப்புணர்ச்சியும் மாச்சரிய உணர்வும் எதிர்ப்பு மற்றும் பகைமை உணர்வுகளும் தீயெனக் கொழுந்துவிட்டு எரியலாயின. இந்தப் பகைமை உணர்வில் கவாசின் மற்றும் ஸஃகீப் என்னும் இரு கோத்திரங்கள் முன்னணியிலிருந்தனர். இவர்கள் பொதுவாகவே அதிகமாகப் போரிடுவோராய் இருந்தனர். இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு மிகவும் நிம்மதியிழந்து போய் இருந்தனர். மக்கா நகரத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் நம் மீதுதான் படையெடுத்து வருவார்கள் என்று அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர்.

இரு குலங்களின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஆலோசனை செய்தனர். ‘என்னவானாலும் சரி, முஸ்லிம்களை எதிர்த்துப் போராடியே தீருவது, பெருகி வரும் இந்த ஆர்வத்தைத் தடுத்து நிறுத்தியே தீருவது என்று கருதினர். அவர்கள் தங்கள் தலைவர் ‘மாலிக் பின் அவ்ஃப் நஷ்ரீ’ என்பவரைத் தமது அரசராக முடிசூட்டி முஸ்லிம்களை எதிர்த்திட ஆயத்தங்கள் செய்யலானார்கள். அவர்கள் இன்னும் பல கோத்திரங்களை தங்கள் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள்.

ஹுனைன் யுத்தம்

அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு இந்த விவரங்கள் தெரிய வந்தவுடன் அவர்களும் தம் தோழர்களுடன் கலந்து ஆலோசித்தார்கள். பெருகி வரும் இந்தக் குழப்பத்தை உடனடியாக நசுக்கிட முயற்சி செய்வது அவசியம் என்று முடிவாயிற்று. ஆகவே ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் ஏறத்தாழ பன்னிரண்டாயிரம் முஸ்லிம்களைக் கொண்ட படையுடன் அண்ணலார் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

இந்த நேரத்தில் இஸ்லாமிய சேனை எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையுடையதாகவும் ஆயுத தளவாட பலமுடையதாகவும் இருந்ததென்றால் அவற்றைக் காணும்போதே எதிரிகள் மோதலில் தாக்குப் படிக்கமாட்டார்கள். உடனே களத்தை விட்டு ஓடி விடுவார்கள் என்று உறுதியாகத் தெரிந்தது. ஆகவே முஸ்லிம்கள் சிலரின் நாவிலிருந்து ‘நம்மை இன்று வெல்லக்கூடியவர் யார்?’ என்னும் சொற்களும்கூட உதிர்ந்து விட்டன. ஆனால் இது முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டிய உயர் பண்புக்கு மாற்றமானதாகும். முஸ்லிம்கள் எந்த நிலையிலும் தங்கள் சொந்த பலத்தின் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது. அவர்களுடைய நம்பிக்கையும் பலமும் அல்லாஹ்வின் அருளாக மட்டுமே இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்

________________________________________

;’ஹுனைன் (போர் நடந்த) நாளை நினைவு கூருங்கள். நீங்கள் உங்கள் எண்ணிக்கை பலத்தைக் குறித்து நீங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் குறித்து பெருமை கொண்டிருந்தபோது (நடந்தவற்றை நினைவு கூருங்கள்) அது உங்களுக்கு சிறுதும் பயனளிக்கவில்லை. மேலும் பூமி விசாலமானதாயிருந்தும் அன்று அது உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகி விட்டது. நீங்கள் காட்டி ஓடலானீர்கள். பின்னர் அல்லாஹ் தன் திருத்தூதர் மீதும் முஸ்லிம்கள் மீதும் தன் தரப்பிலிருந்து ஆறுதலையும் நிம்மதியையும் இறக்கியருளி நீங்கள் பார்க்காத ஒரு படையையும் அனுப்பினான். இறைமறுப்பாளர்களுக்குரிய தண்டனை இதுதான்’. (9 :25,26)

ஹுனைன் என்பது மக்காவுக்கும் தாயிஃப் நகருக்குமிடையேயுள்ள ஒரு பள்ளத்தாக்கின் பெயராகும். இந்த இடத்தில் தான் இந்தப் போர் நடைபெற்றது. இஸ்லாமியச் சேனை எதிரிகள் முன்னே வந்தபோது அவர்கள் சுற்றிலுமுள்ள மலைகளின் மீதிருந்து முஸ்லிம்கள் மீது கண்மண் தெரியாமல் அம்பு மாரி பொழியத் தொடங்கி விட்டார்கள். இந்தத் தாக்குதலை சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த அம்பு மாரியின் விளைவாக அவர்களுடைய அணிகள் சீர்குலைந்து விட்டன. சிறிது நேரம் வரை அவர்களுடைய பாதங்கள் தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. பல காட்டரபிக் கோத்திரங்கள் களத்தைவிட்டு பின்வாங்கி ஓடத் தொடங்கின. அவர்களில் பலர் அண்மையில்தான் இறைநம்பிக்கை கொண்டு இஸ்லாமிய அணியில் சேர்ந்திருதனர். அதனால் அவர்கள் முழுமையாக பக்குவம் பெறாமல் இருந்தார்கள்.

இந்த அமளிதுமளியான நிலையில் அண்ணலார் (ஸல்) அவர்கள் மிகவும் மன நிம்மதியுடன் போர்க்களத்தில் உறுதியாக நிலைத்து நின்று போராடினார்கள். முஸ்லிம்களை நோக்கி பகைவர்களை எதிர்த்துப் போராடும்படியும் போர்க்களத்திலிருந்து பின்வாங்க வேண்டாமென்றும் கூவியழைத்த வண்ணமிருந்தார்கள்.

அண்ணலார் (ஸல்) அவர்களின் நிலைகுலையாத தன்மையையும் அவர்களைச் சுற்றிலும் ஏராளமான நபித் தோழர்கள் தளராத உறுதியுடன் நின்று போராடுவதையும் கண்ட பிற முஸ்லிம்கள் மீண்டும் களத்தில் உறுதியாக நின்று போராடலானார்கள். பின்னர் ஒவ்வொருவரும் முழு தீரத்துடனும் வீரத்துடனும் பகைவர்களை எதிர்க்கலானார்கள். அச்சமயத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின் உள்ளங்களில் தான் ‘நிம்மதியையும், அமைதியையும்’ அருளியதால்தான் அவர்கள் மனந்தளராமல் உறுதியுடன் போரிட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

இதன் விளைவாக அல்லாஹ்வின் அருளால் சிறிது நேரத்திற்குள்ளாகவே போரின் போக்கு திசைமாறிவிட்டது. முஸ்லிம்களுக்கு முழு வெற்றி கிட்டியது. இறை மறுப்பாளர்களில் ஏறத்தாழ எழுபது பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

பகைவர்களைப் பின் தொடர்ந்து செல்லுதலும் அவர்களுக்காக நலம் நாடிப் பிராத்தனை புரிதலும்

இறைமறுப்பாளர்களில் எஞ்சியிருந்த படையினர் தப்பியோடிச் சென்று தாயிஃப் நகரில் தஞ்சம் புகுந்தனர். இது மிகப் பாதுகாப்பான ஒரு இடமாகக் கருதப்பட்டது. அண்ணலார் (ஸல்) அவர்கள் பகைவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டு சுற்றி வளைத்துக் கொண்டார்கள். தாயிஃப் நகரத்தில் பிரபலமான உறுதி வாய்ந்த கோட்டையொன்று இருந்தது. அந்தக் கோட்டையில் தான் பகைவர்கள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்த முற்றுகை ஏறத்தாழ 20 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் பகைவர்களின் அசல் வலிமை தகர்ந்து போய்விட்டது. இனி எதிரிகளின் தரப்பிலிருந்து எந்தக் காலமும் எதிர்ப் புரட்சி நடக்க வாய்ப்பில்லை என்று அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு நன்கு தெரிந்து விட்டபோது அவர்கள் முற்றுகையை அகற்றிக் கொண்டார்கள். மேலும் எதிரிகளுக்காக இவ்வாறு இறைஞ்சினார்கள்:

‘இறைவா! ஸகீஃப் கோத்திரத்தாருக்கு நேர்வழியைத் தந்தருள்வாயாக! அவர்கள் என்னிடம் வருகை தருவதற்கான நற்பேற்றினை அவர்களுக்கு வழங்குவாயாக!’

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் தன் எதிரிகள் மீது இவ்வளவு பரிவும் பாசமும் கொண்டு யார் தான் பிரார்த்தனை செய்வார்கள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லாமல், இறை நெறிக்காக மட்டும் போராடும் இறுதித் தூதரைத் தவிர!.

தபூக் போர்:

ரோமப் பேரரசுடன் மோதல்

அரபு நாட்டிற்கு வடக்கே ரோமப் பேரரசு இருந்தது. இந்தப் பேரரசுடன் வெற்றிக்கு முன்பிருந்தே மோதல் தொடங்கி விட்டிருந்தது. அண்ணலார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அழைப்பை ஏந்திய வண்ணம் ஒரு தூதுக் குழுவை வடக்கே நோக்கி, சிரியா நாட்டின் எல்லைக்கருகே வசித்து வந்த கோத்திரங்களிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் பெருபாலும் கிறிஸ்தவர்களாய் இருந்தார்கள். ரோமப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தார்கள். அந்தக் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரக் குழுவின் உறுப்பினர்கள் பதினைந்து பேரைக் கொன்று விட்டிருந்தார்கள். பிரச்சாரக் குழுவின் தலைவர் கஅப்பின் உமர் பிஃபாரி (ரலி) அவர்கள் மட்டும் தப்பிப் பிழைத்துத் திரும்பி வந்தார்கள்.

இதே காலகட்டத்தில் அண்ணலார் (ஸல்) அவர்கள் புஸ்ரா நகரின் ஆட்சியாளன் ஷுரஹ்பீல் என்பவனுக்கும் இஸ்லாமிய அழைப்புப் செய்தியை அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவனும் அண்ணலார் (ஸல்) அவர்களின் தூதுவரான ஹாரிஸ் பின் உமைர் (ரலி) அவர்களைக் கொன்று விட்டிருந்தான். இந்த ஆட்சியாளனும் ரோம நாட்டின் சீசரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தான். இந்த காரணங்களின் அடிப்படையில் தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு ஜமாதுல் ஊலா மாதம் மூவாயிரம் முஸ்லிம்கள் கொண்ட ஒரு படையை சிரியா நாட்டின் எல்லைகளை நோக்கி அனுப்பினார்கள். மீண்டும் அந்தப் பகுதியில் முஸ்லிம்களை பலவீனர்களென்று கருதித் துன்புறுத்தாமலிருப்பதற்கான சூழலை உருவாக்க இந்த நடவடிக்கையை அண்ணலார் (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள்.

இந்தச் சேனை புறப்பட்டு வருகின்ற தகவல் ஷுரஹ்பீலுக்குக் கிடைத்தவுடன் அவன் ஏறத்தாழ ஒரு லட்சம் வீரர்களை அழைத்துக் கொண்டு அதனை எதிர்த்துப் போராடக் கிளம்பினான். ஆனால் முஸ்லிம்கள் இந்தத் தகவலை அறிந்தும் கூட முன்னேறிச் சென்று கொண்டேயிருந்தனர். ரோமப் பேரரசர் சீசர் அப்போது ‘ஹம்மஸ்’ என்னுமிடத்தில் இருந்தான். அவன் தன் சகோதரன் தியோதர் என்பவனுடன் இன்னும் லட்சம் வீரர்களை அனுப்பி வைத்தான். ஆனாலும் முஸ்லிம்கள் அஞ்சாமல் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொணடடேயிருந்தார்கள். இறுதியில் ‘மூத்தா’ என்னுமிடத்தில் தம் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராய் இருந்த மூவாயிரம் வீரர்கள் பிரம்மாண்டமான் அந்த ரோமப் படையுடன் மோதினார்கள்.

வெளிப்படையான சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது. முஸ்லிம்களின் இந்தச் சின்னஞ்சிறு குழு இத்துணைப் பெரிய படையின் முன்னே முற்றிலுமாக அழிந்து ஒழிந்து போயிருக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் அல்லாஹ்வின் அருளால் ரோமர்களின் மாபெரும் படையால் முஸ்லிம்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இது எத்தகைய நிகழ்ச்சியாய் இருந்ததெனில் இதனால் அக்கம் பக்கத்திலிருந்த கோத்திரங்கள் அனைத்தினுள்ளும் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு வகையாக மதிப்பச்சம் பதிந்துவிட்டது. நெடுந்தொலைவிலெல்லாம் வாழ்ந்து வந்த கோத்திரங்கள் கூட இஸ்லாத்தின் பக்கம் கவனம் செலுத்தலாயின. அவற்றில் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாத்தை தழுவினர்.

அனைத்தையும் விட பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்த நிகழ்ச்சி எதுவெனில், ரோமப்படையின் தளபதி ஃபர்வான் பின் அம்ரு அல்ஜுலாமி என்பவர் இஸ்லாத்தின் அறிவுரைகளில் கவனம் செலுத்தினார். இஸ்லாத்தை தழுவினார். இதன் காரணமாக சீசர் அவரைக் கைது செய்தான். ‘நீர் இஸ்லாத்தைத் துறந்தால் மீண்டும் உம்மைப் பதவியில் அமர்த்துவேன். இல்லையெனில் மரண தண்டனையும் ஏற்கத் தயாராய் இருக்க வேண்டும்’ என்று கூறினான்.

‘மறுமை வெற்றிக்கு முன்னால் உலகின் தலைமைப் பதவிகளை ஏற்றுக்கொள்ள நான் தயாராயில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் அவர் கொல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் காரணத்தால், ஆயிரக்கணக்காக மக்கள் இஸ்லாத்தின் ஒழுக்க வலிமையையும் அதன் முக்கியத்துவத்தையும் மிகச் சரியாக அறிந்து கொண்டார்கள். இந்தப் புதிய இயக்கம் எந்தப் புரட்சி வெள்ளத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கினறதோ அதளை எதிர்த்துப் போராடுவதென்பது சாதாரணமான விஷயமல்ல என்று அறிந்து கொண்டார்கள்.

சீசரின் தரப்பிலிருந்து தாக்குதலுக்கான ஆயத்தங்கள்

சீசர் இரண்டாவது ஆண்டே முஸ்லிம்களைப் பழிவாங்க சிரியா நாட்டின் எல்லையில் போர் ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிவிட்டான். தனக்குக் கீழிருந்த அரபுக் கோத்திரங்களிடமிருந்து படைகள் திரட்ட ஆரம்பித்தான். அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு இந்தப் போர் ஆயத்தங்கள் குறித்து தெரியவந்தது. இந்தச் சந்தர்ப்பம் இஸ்லாமிய இயக்கத்திற்கு மிக நெருக்கடியானதாக இருந்தது. இத்தருணத்தில் சிறிதேனும் சோம்பல் அல்லது மந்தம் காட்டினால். விவகாரம் அனைத்தும் சீர்கெட்டு விடும் என்னும் நிலை உருவாகி இருந்தது. (இந்த நேரத்தில் முஸ்லிம்கள் தோற்று விட்டால் அல்லது அஞ்சிப் பணிந்து விட்டால் மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கும்) ஒருபுறம் இப்பொழுது தான் மக்கா வெற்றியின் போதும் ஹுனைன் போரின் போதும் தோல்வியடைய நேரிட்ட அரபுக் கோத்திரங்கள் அனைத்தும் மீண்டும் தலைதூக்க ஆரம்பிக்கும். மற்றொருபுறம் இஸ்லாத்தின் பகைவர்களோடு ரகசியத் தொடர்பு வைத்திருந்த மதீனா நகர் நயவஞ்சகர்கள் சரியான நேரத்தில் இஸ்லாமியக் குழுவிற்குள் புகுந்து குழப்பத்தை விளைவிக்கக்கூடும். இதனால் இயக்கத்தையும் அமைப்பையும் மீண்டும் சகஜநிலைக்குக் கொண்டு வருவதும் நடத்துவதும் மிகவும் கடினமாகி விட்டிருக்கும்.

இத்தகைய நிலையில் ரோமப் பேரரசின் முழு மூச்சான இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவது எளிதாள ஒன்றல்ல. மேலும் மும்முனைத் தாக்கு தலைச் சமாளித்திட முடியாமல் இஸ்லாமிய இயக்கம் இறைமறுப்பின் முன்னே தோற்றுவிடவும்கூடும். ஆக இதுவரை பெரும் தியாகங்கள் செய்து உழைத்து உருவாக்கப்பட்ட உன்னத அமைப்பு நிலைகுலைந்துவிடக்கூடிய அபாயம் சூழ்ந்து நிற்க அதனைத் தவிர்ப்பது. அவசியமானதாயிருந்தது. எனவே அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது நிகரற்ற மதிநுட்பத்தால் இறைவானால் வழங்கப்பட்ட தன்னிகரில்லாத விவேகத்தால் சற்றும் தாமதிக்காமல் தயங்காமல் இந்தச் சந்தர்ப்பத்தில் சீசருடைய மகத்தான வலிமையுடன் மோதுவதுதான் பொருத்தமானது. ஏற்புடையது என்று முடிவு செய்தார்கள்.

எதிர்த்துப் போராடுவது என முடிவுவெடுத்தல்

இந்த நேரங்களில் போர் ஆயத்தங்களில் ஈடுபடுவது முஸ்லிம்களுக்குப் பெரும் சோதனையாகவே இருந்தது. அப்பொழுது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. கடும் வெயில் காலமாயிருந்தது. பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. போர்த் தளவாடங்கள் முழுமையானவையாய் இல்லை. போருக்கான பயணமோ வெகு தொலைவுப் பயணமாக இருந்தது. ஒரு வல்லரசுடன் மோத வேண்டியிருந்தது. இத்தகைய நிலைமைகளையும் இந்த நெருக்கடியாக சூழ்நிலையை மதிப்பிட்டு அறிந்து கொண்ட பின்னரும் அண்ணலார் (ஸல்) அவர்கள் போர்ப் பிரகடனம் செய்து விட்டார்கள். எங்கு செல்லவேண்டியுள்ளது? எதற்காகச் செல்லவேண்டியுள்ளது என்பதையும் தெளிவாக அறிவித்து விட்டார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். இதுவரை இஸ்லாமிய இயக்கம் வெளிப்படையாக வெளிநாட்டுப் பகைவர்களுடன் மோதிவந்தது. மக்கா வெற்றி, ஹுனைன் போர் ஆகியவற்றுக்குப் பிறகு இந்த எதிர்ப்பு வலுவிழந்து விட்டிருந்தது. ஆனால் இதுவரை உள்ளேயிருக்கும் எதிரிகளான நயவஞ்சகர்களிடம் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததற்குக் காரணம் ஒரே நேரத்தில் வெளியுலுள்ள பகைவர்களுடனும் உள்ளேயிருக்கும் பகைவர்களுடனும் மோதலை விலைகொடுத்து வாங்கிக் கொள்ளுமளவிற்கு இஸ்லாமிய இயக்கம் இன்னும் வலிமையும் உறுதியும் அடைந்திருக்காததேயாகும்.

இரண்டாவதாக நயவஞ்சகர்களில் அனைவரும் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. அவர்களில் சிலர் பலவீனமான இறைநம்பிக்கை உடையவர்களாய் இருந்தார்கள். அல்லது சில ஐயப்பாடுகளும் சந்தேகங்களும் கொண்டிருந்தார்கள். இத்தகையவர்களுக்கு அவர்கள் தங்கள் பலவீனங்களையும் ஐயங்களையும் போக்கி கொள்வதற்காக பொருத்தமான ஒரு காலகட்டம் வரை அவகாசம் அளிப்பதும் அவசியமானதாயிருந்தது. இறுதியில் அறிந்தும் புரிந்தும் வேண்டுமென்றே இஸ்லாத்தை தகர்த்திடுவதற்காக முஸ்லிம்களுக்கிடையே புகுந்து, ஊடுருவி விட்டிருந்தவர்களை மட்டும் தனியாக அடையாளம் தெரிவதற்காக இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது.

ஆகவே ஒரு குறிப்பிட்ட காலம் வரை இத்தகையவர்களுக்கு வன்மையாகவும் மென்மையா