9 – பெருநாள் தொழுகை

அத்தியாயம்: 9 – பெருநாள் தொழுகை

பாடம்: 1

பெருநாட்களில் பெண்கள், தொழும் திடலுக்கு வெளியேறிச் செல்வதும், ஆண் களுடன் கலக்காத விதத்தில் உரையில் பங்கேற்பதும் அனுமதிக்கப்பட்டவை யாகும்.

1613 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு பெருநாட்களில் இளம் பெண்களையும், திரைக்கப்பால் உள்ள பெண்களையும் புறப்படச் செய்யும்படி அவர்கள் – நபி (ஸல்) அவர்கள் – எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் முஸ்லிம்களின் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கியிருக்குமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.5

1614 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளை யிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு மக்களுடன் சேர்ந்து “தக்பீர்’ கூறுவார்கள்.6

1615 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளம் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட் டுள்ள பெண்களையும் திரைமறைவில் உள்ள பெண்களையும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய (இரு) பெருநாட் களிலும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய் யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழு கையிலிருந்து ஒதுங்கியிருப்பார்கள்; நல்ல உரைகளிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கெடுக்க வேண்டும் (என்றும் கட்டளையிட்டார்கள்). அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்தியிடம் துப்பட்டா இல்லாவிட்டால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுடைய சகோதரி தமது துப்பட்டாவில் ஒன்றை அவளுக்கு இரவலாக அணிவிக்கட்டும்!” என்று கூறினார்கள்.

பாடம் : 2

பெருநாள் தொழுகைக்கு முன்போ பின்போ தொழும் திடலில் எதுவும் தொழக் கூடாது.

1616 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ அல்லது நோன்புப் பெரு நாள் அன்றோ புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் (கூடுதலாகத்) தொழவில்லை; அதற்கு பின்பும் எதையும் (கூடுதலாகத்) தொழவில்லை. பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து (அறிவுரை வழங்கினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் தம் காதணி களையும் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் (கழற்றி பிலால் (ரலி) அவர் களின் கையிலிருந்த துணியில்) போட்டனர்.7

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 3

இரு பெருநாள் தொழுகைகளில் ஓத வேண்டியவை.

1617 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல் லைஸீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் (தொழுகை)களில் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூவாக்கித் (ரலி) அவர்கள் “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாத்தையும் “இக்தரபத்திஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர்’ எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என்று விடையளித்தார்கள்.

1618 அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளி(ன் தொழுகையி)ல் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று என்னிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் ” “இக்தரபத்திஸ் ஸாஅத்து’ எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்” என்று விடையளித்தேன்.

பாடம் : 4

பெருநாட்களில் பாவமில்லா (வீர) விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி உண்டு.

1619 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(அறியாமைக் காலத்தில் நடந்த) “புஆஸ்’ எனும் போரின்போது8 அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார் கள். -(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவ்விருவரையும் விட்டுவிடுங் கள்), அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.9

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “இரு சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்து விளையாடிக்கொண்டிருந்த னர்” என்று இடம்பெற்றுள்ளது.

1620 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஈதுல் அள்ஹா நாட்களான) “மினா’வின் நாட்களில் என் அருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை) அடித்து பாட்டு பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்திக்கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அச்சிறுமியர் இருவரையும் அதட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மீதிருந்த) துணியை விலக்கி “அவர்களை விட்டு விடுங்கள், அபூபக்ரே! இவை பண்டிகை நாட் கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க, (பள்ளி வாசல் வளாகத்தில் ஈட்டியெறிந்து) விளை யாடிக்கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக்கொண்டிருந் தேன். அப்போது நான் இளம்வயதுப் பெண் ணாக இருந்தேன். விளையாட்டுமீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.

1621 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒரு பெருநாள் தினத்தன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் ஈட்டியெறிந்து (வீர விளை யாட்டு) விளையாடிக்கொண்டிருந்தனர். அவர் களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறை வாசலில் நின்றபடி தமது மேல்துண்டால் என்னை மறைத்துக்கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கேளிக்கைகள்மீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.10

1622 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் அருகில் இரு சிறுமியர் “புஆஸ்’ போர் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்; படுக்கையில் படுத்து, தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவி களா?” என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரை முன் னோக்கி “அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் குறிப்பால் உணர்த்தி (வெளி யேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இரு வரும் வெளியேறிவிட்டனர். அன்று பெரு நாள் தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளை யாடிக்கொண்டிருந்தனர். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீர விளையாட்டு களைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்க, நான் “ஆம்’ என்று கூறியிருக்க வேண் டும் (சரியாக எனக்கு நினைவில்லை). உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (சூடானியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, “போதுமா?’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, நான் “ஆம் (போதும்)’ என்று சொன்னேன். “அப்படியானால் நீ போகலாம்!” என்று சொன்னார்கள்.11

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1623 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெருநாள் தினத்தில் அபிசீனியர்கள் (ஆயுதங்களை வைத்து) குதித்து விளையாடிக் கொண்டு பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் (வந்து) எனது தலையை நபி (ஸல்) அவர்களது தோள்மீது வைத்துக்கொண்டு அபிசீனியர்க ளின் (வீர) விளையாட்டுகளைப் பார்க்கலானேன். இறுதியில் அவர்(களின் வீர விளையாட்டு)களிலி ருந்து நானாகத் திரும்பிச் சென்றேன். (நபி (ஸல்) அவர்கள் என்னைப் போகச் சொல்லவில்லை.)

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “பள்ளிவாசலுக்குள்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

1624 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அந்த விளையாட்டு வீரர்களிடம் “நான் உங்க(ளின் விளையாட்டு)களைப் பார்க்க விரும்புகிறேன்’ எனக் கூறி (அனுப்பி)னேன். அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளை யாடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் (அதைப் பார்த்துக்கொண்டு) நிற்க, நான் (எனது அறை) வாசலில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காது களுக்கும் தோள்களுக்குமிடையே (எனது முகத்தை வைத்து) அதைப் பார்த்துக்கொண்டி ருந்தேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அந்த வீரர்கள்,) பாரசீகர்கள் அல்லது அபிசீனியர்கள் ஆவர். “அல்ல; அவர்கள் அபிசீனியர்களே ஆவர்” என என்னிடம் இப்னு அத்தீக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1625 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபிசீனியர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் ஈட்டியெறிந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அங்கு வந்து, அவர்கள்மீது எறிவதற் காகக் குனிந்து சிறு கற்களை எடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களை விட்டுவிடுங்கள், உமரே! (விளையாடட்டும்)” என்று சொன்னார்கள்.12

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1626 அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டி(த் தொழுகை நடத்தி)னார்கள். (திடலில்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்ற போது, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.2

1627 அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகைத் திடலுக் குப் புறப்பட்டுச் சென்று, கிப்லாவை முன் னோக்கி நின்று மழைவேண்டி (தொழுகை நடத்தி)னார்கள்; தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். மேலும், இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள்.

1628 அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழுவதற்காக) தொழுகைத் திடலுக்குச் சென்றார்கள்; பிரார்த்திக்க விரும்பியபோது கிப்லாவை முன்னோக்கி நின்று, தமது மேல் துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.

1629 அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்; (பிரார்த்திக்க முற் பட்டபோது) மக்களை நோக்கி இருக்கும் விதத்தில் தமது முதுகைத் திருப்பி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் இறைஞ்சினார்கள்; தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண் டார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவித் தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.