31 – தவறவிட்ட பொருட்கள்

அத்தியாயம்: 31 – தவறவிட்ட பொருட்கள்.
பாடம் : 1

ஹாஜிகள் தவறவிட்ட பொருட்கள்5

3555 அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாஜிகள் தவறவிட்ட பொருளை எடுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

3556 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் வழிகேட்டி லேயே உள்ளார்.

இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 2

உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்கு வந்துள்ள தடை

3557 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றி வேறெவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரது சரக்குப் பெட்டகத்திற்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்றுவிடுவதை விரும்புவாரா? கால் நடைகளின் மடிகள், கால்நடை உரிமையாளர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் உரிமையாளரின் அனுமதியின்றி எவரது கால்நடையிலும் பால் கறக்க வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்புகளிலும் “எடுத்துச் சென்றுவிடு வதை’ என்பதைக் குறிக்க “ஃபயுன்தஸல’ எனும் சொல் (மூலத்தில்) இடம்பெற்றுள்ளது. லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஃபயுன்தகல தஆமுஹு’ என்றே இடம்பெற்றுள்ளது.

பாடம் : 3

விருந்து உள்ளிட்ட உபசாரம்

3558 அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணி யமாக வழங்கட்டும்” என்று கூறினார்கள். மக்கள், “அவருடைய கொடை என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அவற்றுக்குப் பின்னால் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்” என்று கூறினார்கள்.7

3559 அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். ஒரு பகல் ஓர் இரவு (விருந்துபசாரம்) அவரு டைய கொடையாகும். ஒரு முஸ்லிமான மனிதர், தம் சகோதரரிடம் அவரைப் பாவத் தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை” என்று கூறினார்கள்.

மக்கள், “அவரைப் பாவத்தில் தள்ளுதல் எப்படி, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவ(ர் தம் சகோதர)ரிடம் தங்கி இருப்பார். ஆனால், விருந்துபசாரம் செய்யுமளவுக்கு அவரிடம் எதுவுமே இருக்காது” என்று கூறினார்கள்.

3560 மேற்கண்ட ஹதீஸ் அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன். என் கண்ணால் பார்த்தேன்; எனது உள்ளம் மனனமிட்டது” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில், “உங்களில் ஒருவர் தம் சகோதரரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை” என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று இடம் பெற்றுள்ளது.

3561 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பிவைக்கிறீர்கள். நாங்கள் (அங்கு) சென்று அவர்களிடம் தங்குகிறோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிக்க மறுக்கின்றனர். அவ்வாறெனில் (அது குறித்து) தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் செல்ல, அவர்கள் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், அவர்களிடமிருந்து விருந்தினர்க(ளான உங்க)ளுக்குத் தேவை யான விருந்தினர் உரிமையை (நீங்களே) எடுத்துக்கொள்ளுங்கள்” என்று பதிலளித் தார்கள்.8

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 4

தேவைக்கு மேல் எஞ்சியுள்ள செல் வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கதாகும்.

3562 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப் பக்கமும் இடப் பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார் வையாலேயே உதவி கேட்டு)க்கொண்டிருந்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்” என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு செல்வங்களைப் பற்றி (தேவைக்கு அதிகமாக இருந்தால் இல்லாதவருக்கு அவற்றைக் கொடுக்கட்டும் என்று) கூறினார்கள். எந்த அளவுக் கென்றால், தேவைக்கு அதிகமாக எஞ்சியிருக்கும் பொருளில் எங்களில் எவருக்கும் உரிமை யில்லையோ என்று நாங்கள் கருதினோம்.

பாடம் : 5

பயணத்தில் உணவு குறைவாக இருந்தால், அதை மற்ற உணவுகளுடன் கலந்து பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கதாகும்.

3563 சலமா பின் அம்ர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (“ஹவாஸின்’ எனும்) ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது எங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற் பட்டது. எனவே, நாங்கள் எங்கள் வாகன ஒட்டகங்களில் சிலவற்றை அறுக்க முடிவு செய்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடமிருந்த (எஞ்சிய) உணவுப் பொருட்களைத் திரட்டும்படி உத்தரவிட்டார்கள்.

நாங்கள் அவ்வாறே செய்தோம். அதற் காக நாங்கள் தோல் விரிப்பு ஒன்றை விரித்துப் போட்டோம். அந்த விரிப்பின் மீது மக்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்தனர். அதில் எந்த அளவு உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளன என்பதை மதிப்பிடுவதற்காக நான் எட்டிப் பார்த்தேன். ஓர் ஆடு படுத்திருக்கும் இடம் அளவுக்கு உணவுப் பொருட்கள் குவிந்திருப்பதாக நான் மதிப்பிட்டேன். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்பும் அளவுக்கு அதிலிருந்து உண்டோம். பிறகு எங்கள் தோல் பைகளிலும் நிரப்பிக்கொண்டோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்குத் தண்ணீர் உள்ளதா?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் தமது நீர்க் குவளையைக் கொண்டுவந்தார். அதில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அவர் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். அந்தத் தண்ணீரில் நாங்கள் அனைவரும் அங்கத் தூய்மை (உளூ) செய்தோம். நாங்கள் ஆயிரத்து நானூறு பேரும் தாராளமாக ஊற்றிக் கழுவினோம்.

அதன் பிறகு எட்டுப் பேர் வந்து “அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீர் உள்ளதா?” என்று கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அங்கத் தூய்மை செய்வதற்குரிய) தண்ணீர் தீர்ந்துவிட்டது” என்று கூறிவிட்டார்கள்.9

27.05.2010. 10:59

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.