8 – தொழுகை

அத்தியாயம்: 8 – தொழுகை.

பாடம் : 1

ளவிண்ணுலகப்பயணம் -மிஅராஜ் நடந்தன இஸ்ரா இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்:

(ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள்,தொழுகையை நிறைவேற்றும்படியும் தானதர்மம் செய்யும் படியும் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழும் படியும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுகின்றார்கள் என்று தாம் (ஹெராக்ளியஸிடம்) கூறியதாக என்னிடம் கூறினார்கள்.

349 அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்த போது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வாவனர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து)என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை ஸம்ஸம்தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் ஈமான் எனும் இறை நம்பிக்கை யாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழைய படியே நெஞ்சை) மூடிவிட்டார்கள்.

பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் சாவலரிடம்திறங்கள் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்யார் இவர்எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள்,ஜிப்ரீல் என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனராஎனக் கேட்டார். அவர்கள்ஆம்என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், (அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதாஎன்று கேட்கஜிப்ரீல் (அலை) அவர்கள் ஆம் என்று கூறினார்கள்.

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும் போது சிரித்தார்தமது இடப்பக்கம் பார்க்கும் போது அழுதார். (பிறகுஎன்னைப் பார்த்து,) நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்இவர் யார்எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள்,இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள் என்று பதிலளித்தார்கள்.

பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் திறங்கள் என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார்.

அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள்வானங்களில் ஆதம் (அலை)இத்ரீஸ் (அலை)மூசா (அலை)ஈசா (அலை),இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தனஎன்பதுபற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது* வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக! என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான்,இவர் யார்என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள்இவர் தாம் இத்ரீஸ் என்று பதிலளித்தார்கள்.

பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும்நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக! என்று கூறினார்கள். நான்இவர்யார்என்று (ஜீப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள்இவர்கள்தாம் மூசா என்று பதிலளித்தார்கள்.

நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக! என்று கூறினார்கள். நான்இவர் யார்என்று (ஜிப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள்இவர்தாம் ஈசா என்று பதிலளித்தார்கள்.

பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள்நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார்கள். நான்இவர் யார்என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள்,இவர் தாம் இப்ராஹீம் என்று கூறினார்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின்

முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி)அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறிவந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (இன்னும்) மேலே ஏறிச் சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக் கொண்டிருந்த போது (வானவர்கள் விதிகளை பதிவு செய்து கொண்டிருக்கும்) எழுது கோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர் மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக் கொண்டு நான் திரும்பிய போது மூசா (அலை) அவர்களை கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள்,உங்களிடம் உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்என்று கேட்டார்கள். நான், (என் சமுதாயத்தார் மீது) ஐம்பது தொழுகைகளை கடமையாக்கியுள்ளான் என்று பதிலளித்தேன். அவர்கள்அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும் படி சொ)ல்லுங்கள்! ஏனெனில் உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கேட்ட போது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் நான் திரும்பிச்சென்று அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்து விட்டான்என்று சொன்ன போது மீண்டும் அவர்கள்உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில்இதையும் உங்கள் சமூதாயத்தாரால் தாங்க முடியாது என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும் (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்த சொல் (இனி) மாற்றப் படாது என்று கூறிவிட்டான்.

உடனே நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள்உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் என்றார்கள். நான்என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன் என்று சொன்னேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) சித்ரத்துல் முன்தஹாவுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பலவண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு என்னை சொர்க்கத்துக்குள் பிரவேசிக்கச் செய்யப்பட்டது. அங்கே முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.

350 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மிஅராஜ் இரவில்) அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது சொந்த ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கினான். பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டு இரண்டு ரக்அத் களாகவே) நீடித்ததுசொந்த ஊரில் தொழும் தொழுகையில் (லுஹ்ர்அஸ்ர்இஷா ஆகியவற்றில்) தலா இரண்டு ரக்அத்கள் கூடுதலாக்கப்பட்டது.

பாடம் : 2

ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும்ஆதமுடைய மக்களே! தொழும் இடந் தோறும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் எனும் (7:31ஆவது) இறைவசனமும்ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும்.

(ஒரே ஒரு துணி மட்டும் அணிந்து தொழும் ஒருவர்) ஒரு முள்ளினாலாவது அதை மூட்டிக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சலமா பின் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால்இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற் கொண்ட ஆடையில் அசிங்கம் எதையும் காணாத வரை அதை அணிந்து கொண்டு தொழலாம்.

நிர்வாணர்கள் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

351 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு பெரு நாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பிவைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற,இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண்அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்! என்றார்கள்.

இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 3

தொழும் போது வேஷ்டி (சிறியதாயிருந்தால் அதன் இரு முனை)யைப் பிடரியில் முடிச்சிட்டுக் கொள்வது.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(நபித்தோழர்கள்) சிலர் தங்களுடைய வேஷ்டிகளை தமது தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர்.

352 முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் (ரலி) அவர்கள் (ஒரு முறை) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தமது பிடரியின் பாகத்தில் முடிச்சுப்போட்டுக் கொண்டவர்களாகத் தொழுவார்கள். அவர் களது இதர ஆடைகளோ துணி மாட்டும் கொளுகியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவர்களிடம் ஒருவர்ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள்உம்மைப் போன்ற விவரங்கெட்டவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன் என்று கூறிவிட்டுநபி (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் எவருக்குத் தான் இரு ஆடைகள் இருந்தன?என்று வினவினார்கள்.

353 முஹம்மது பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதை நான் பார்த்தேன். மேலும் அவர்கள்நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதை நான் கண்டேன் என்றும் கூறினார்கள்.

பாடம் : 4

(விசாலமான) ஒரே ஆடையில் அதன் இரு ஓரங்களையும் வல-இடத்தோள்கள் மீது மாற்றிப் போட்டு, (நெஞ்சில் முடிந்து கொண்டு) தொழுவது.

இது குறித்த தமது ஹதீஸில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள்

 முல்தஹிஃப் என்பதற்கு முத்தவஷ்ஷிஹ் என்று பொருள் என்று கூறினார்கள். இதுவே முகாலிஃப்ஆகும்..

(அதாவது,) ஒருவர் தமது வேஷ்டியின் (வலப்பக்க ஓரத்தை இடது தோளின் மீதும் இடப்பக்க ஓரத்தை வலது தோளின் மீதும் இருக்கும் அமைப்பில்) இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது போட்டுக் கொள்வது(ம்பிறகு வலத் தோள் மீது இட்ட ஓரத்தை இடக்கரத்திற்கு கீழேயும்இடத் தோள் மீது இட்டட ஓரத்தை வலக்கரத்திற்கு கீழே கொண்டுவந்து இரண்டையும் நெஞ்சின் மீது முடிந்து கொள்வது) ஆகும்.

இதற்கே அல்இஷ்திமாலு அலல் மன்கிபைனி  எனப்படுகிறது.

உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை சுற்றிக் கொண்டு அதன் இரு ஓரங்களையும் தமது (வல-இடத்) தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்..

354 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டுஅதன் ஒரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்.

355 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்து அதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.

356 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு சலமா (ரலி) அவர்களின் இல்லத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டுஅதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுவதை நான் பார்த்தேன்.

357 உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்களைஅவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்கஅவர்கள் குளித்துக் கொண்டி ருப்பதைக் கண்டேன். அப்போது அவர்களுக்கு நான் சலாம் (முகமன்) சொன்னேன். (அதைக் கேட்ட) அவர்கள்யாரம்மா இவர்எனக் கேட்டார்கள். அதற்கு நான் உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் என்றேன்.உம்மு ஹானியே வருக! வருக! என்று சொன்னார்கள். அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (வல-இடத் தோள்கள் மீது) மாற்றிப் போட்டுக் கொண்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்அவர்கள் தொழுது முடித்ததும்அல்லாஹ்வின் தூதரே! என் தாயாரின் மகன் (என் சகோதரர் அலீ,) நான் புக-டம் அளித்திருக்கும் ஒரு மனிதரை- ஹுபைராவின் மகன் இன்னாரை – தாம் கொல்லப் போவதாக கூறுகிறார் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்) என்று கூறினார்கள். ள நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றனஅந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது.

358 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உள்ளனவாஎன்று கேட்டார்கள்.

பாடம் : 5

ஒரே ஆடையை அணிந்து தொழும் போது அதன் இரு ஓரங்களையும் தோள்கள் மீது போட்டுக் கொள்ள வேண்டும்.

359 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தமது தோள்கள் மீது (அதில்) ஒரு பகுதியேனும் இல்லாதிருக்கத் தொழவேண்டாம்..

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

360 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்ஒரே ஆடையை அணிந்து கொண்டு எவரேனும் தொழுதால் அதன் இரு ஓரங்க ளையும் (வலப்புற ஓரத்தை இடது தோளிலும் இடப்புற ஓரத்தை வலது தோளிலுமாக) மாற்றிப் போட்டுக் கொள்ளட்டும். என்று கூறியதை நான் கேட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

பாடம் : 6

ஆடை சிறியதாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)

361 சயீத் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம்ஒரே ஆடை அணிந்து கொண்டு தொழுவது பற்றிக் கேட்டோம். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் செய்த ஒரு பயணத்தில் நான் அவர்களுடன் சென்றேன். ஒரு (நாள்) இரவு எனது தேவையொன்றிற்காக நான் வந்த போது நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அப்போது என் மீது ஒரே ஆடை மட்டுமே இருந்தது . அதை நான் என் உடல் முழுதும் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுது முடிந்ததும் என்ன,இரவு நேரத்தில் வந்திருக்கிறீர்ஜாபிரேஎன்று கேட்டார்கள். அப்போது நான் எனது நோக்கத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நான் சொல்லிமுடித்ததும்என்ன இப்படி (கைகள்கூட வெளியில் தெரியாமல்) போர்த்திக் கொண்டிருக்கிறீர்என்று கேட்டார்கள். நான் ஆடை சிறியது (அதனால் இப்படிப் போர்த்தியுள்ளேன்) என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்ஆடை விசாலமானதாக இருந்தால் அதனை (கீழேயும் தோள்மீதும்) சுற்றிக் கொள்ளுங்கள்ஆடை சிறியதாக இருந்தால் அதை இடுப்பில் (வேட்டியாக) அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

362 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம்,ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள் என்று சொன்னார்கள்

பாடம் : 7

(இறைமறுப்பாளர்களின் நாடாயிருந்த) ஷாம் நாட்டு நீளங்கி அணிந்து தொழுவது.

அக்னி ஆராதகர்கள்(மஜூசிகள்) நெய்யும் ஆடைகளை (கழுவப்படுவதற்கு முன்பே) அணிந்து தொழுவது தவறன்று என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஆடுமாடுஒட்டக) மூத்திரத்தில் நனைத்துச் சாயமேற் பட்ட யமன் நாட்டு ஆடையை அணிந்து தொழுவதை நான் பார்த்தேன் என மஅமர் பின் ராஷித் (ரஹ்) கூறுகின்றார்கள்.

அலீ (ரலி) அவர்கள் அடர்த்தி குறைக்கப்படாத (உடலோடு அப்பிக் கொள்ளும்) ஆடையுடன் தொழுதார்கள்.

363 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள்முஃகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடுங்கள்! என்றார்கள். நான் அதை எடுத்துக் கெண்டேன். நபி (ஸல்) அவர்கள் நடந்து (கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் (இறைமறுப்பாளர்கள் நெய்த) ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள். (உளூ செய்வதற்காக) அதன் கை பகுதியிலிருந்து தமது கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கைப் பகுதி குறுகலாக இருந்ததால் தமது கையை அதன் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் (அவர்கள் உளூ செய்வதற்காக) அவர்க(ளின் உறுப்புக்)கள் மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். (இறுதியில் கால்களைக் கழுவுவதற்கு பதிலாக கால்களில் அணிந்திருந்த) தமது காலுறைகள் மீது ஈரக்கையால் தொட்டுத் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பிறகு தொழுதார்கள்.

பாடம் : 8

தொழுகையின் போதும். மற்ற நேரங்களிலும் பிறந்த மேனியுடன் இருக்கலாகாது.

364 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியவர்களின் காலத்தில் குறைஷியரால் இறையில்லம் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது) அவர்களுடன் (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கஅபாவிற்காக கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் மீது வேட்டி (மட்டுமே) இருந்தது. அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் அவர்கள் (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர் களிடம்என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் வேட்டியை அவிழ்த்துத் தோள் மீது (வைத்துள்ள) கல்லுக்கு கீழே வைத்து (கற்களைச் சுமந்து) கொண்டு வரலாமே! என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தமது வேட்டியை அவிழ்த்து தமது தோள்கள் மீது வைத்தார்கள். (வைத்த) உடன் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் (ஒரு போதும்) பிறந்த மேனியுடன் (ஒரு போதும்) காணப்பட்டதில்லை.

பாடம் : 9

(முழுநீளச்) சட்டைமுழுக்கால் சட்டைஅரைக்கால் சட்டைவெளிப்புற மேலங்கி ஆகியவற்றை அணிந்து தொழுவது.

365 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை நோக்கி எழுந்துஓரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள்உங்களில் ஒவ்வொருவரும் இரு ஆடைகள் வைத்துள்ளனராஎன்று கேட்டார்கள்.

பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தில் இது பற்றிக்) கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ் உங்களுக்கு (ஆடைகளை) தாராளமாகத் தந்திருந்தால் நீங்களும் தாராளமாக அணிந்து கொள்ளுங்கள். (அதாவது:)

– ஒருவர் தமது ஆடை (வகை)கள் அனைத்தையும் அணிந்து தொழட்டும்..

– மற்றொருவர் கீழங்கியும் மேல்துண்டும் அணிந்து தொழட்டும்..

– மற்றொருவர் கீழங்கியும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..

– மற்றொருவர் கீழங்கியும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்..

– மற்றொருவர் முழுக்கால் சட்டையும் மேல்துண்டும் அணிந்து தொழட்டும்.

– மற்றொருவர் முழுக்கால் சட்டையும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..

– மற்றொருவர் முழுக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்..

– மற்றொருவர் அரைக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்.

– மற்றொருவர் அரைக்கால் சட்டையும் (முழு நீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..

(இறுதியாகக் குறிப்பிட்ட அரைக்கால் சட்டையும் (முழுநீளச்) சட்டையும் என்பதற்கு பதிலாக) உமர் (ரலி) அவர்கள் அரைக்கால் சட்டையும் (விசாலமான) மேல்துண்டும் அணிந்து தொழட்டும் என்று கூறியதாக நான் எண்ணுகிறேன்.

366 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்இஹ்ராம் கட்டியவர் (முழுநீளச்) சட்டை அணிய மாட்டார்முழுக்கால் சட்டை அணிய மாட்டார்முக்காடுள்ள மேலங்கி (இமதசஞஞநஊ) அணிய மாட்டார்குங்குமப் பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடை களையும் அணிய மாட்டார். (காலுறைகள் அணிய மாட்டார்) காலணிகள் கிடைக்காத வர்காலுறைகள் அணியட்டும்.காலுறை களைக் கணுக்கால்களுக்கு கீழே இருக்கும் படி கத்தரித்து அணிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

இதை சாலிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 10

அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்.

367 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ)மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால்கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(குறிப்பு: இதுபற்றி விரிவாக அறியக் காண்க: பாகம்-6, ஹதீஸ் எண்கள்: 5819-5822)

368 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் -மாஸ் (முலாமஸா)நபாத் (முனாபஃதா) எனும் இரு வியாபார முறைகளுக்குத் தடைவிதித்தார்கள். மேலும் ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற் கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ)ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள்.

ளகுறிப்பு: இவ்விரு முறைகளிலும் மர்ம உறுப்பு வெளியே தெரிவதற்கு வாய்ப்பு இருப்பதால் இவ்விதமாக ஆடை அணிவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். அடுத்து,லிமாஸ் அல்லது முலாமஸா என்பதற்குத் தொடுதல் என்று பொருள். ஒருவர் தாம் வாங்க விரும்பும் துணியைக் கையால் தொட்டுப் பார்த்து விட்டாலே வியாபார ஒப்பந்தம் நிறைவேறியதாகக் கருதப்பட்டுவிரித்துப் பார்க்கும் போது குறையிருந்தாலும் வியாபாரத்தை ரத்துச் செய்யமுடியாத வணிக முறைக்கே முலாமஸா என்று பெயர். நபாத் அல்லது முனாபஃதா என்பதற்கு எறிதல் என்று பொருள். வாங்கவந்தவர் மீது துணியைத் தூக்கி எறிந்து விட்டாலே அதை அவர் வாங்கிவிட்டதாகக் கருதப்பட்டுவிரித்துப் பார்த்த பின் குறைதென்பட்டாலும் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத வியாபார முறைக்கே முனாபஃதா என்பர். இந்த இரு முறைகளாலும் நுகர்வோர் பாதிக்கப்பட இடமுண்டு என்பதால் இவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.ன

369 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தலைமையில் ஹஜ்ஜத்துல் வதாவிற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின் போது இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க்கூடாது;நிர்வாணமானவர் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அனுப்பினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப்) பின்னால் அலீ (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) பொறுப்பு விலகிக் கொண்டது குறித்து பிரகடனம் செய்யும்படி(யும்) அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொறுப்பு விலகிக் கொண்டது குறித்தும்,) இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்ய மாட்டார் என்றும்இறையில்லம் கஅபாபவை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.

பாடம் : 11

மேலாடையின்றித் தொழுவது.

370 முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ஒரே ஆடையை தம்மீது சுற்றியபடி தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய மேலாடை (துணி மாட்டும் கொளுகியில் மாட்டி) வைக்கப்பட்டிருந்தது. தொழுது முடித்ததும் அவர்களிடம் அபூஅப்தில்லாஹ்! உங்களது மேலாடையை (மாட்டி) வைத்து விட்டு (ஒரே ஆடையில்) தொழுகின்றீரேஎன்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள்ஆம்உங்களைப் போன்ற விவரம் புரியாதவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே நான் விரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை நான் கண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 12

தொடை (மறைக்க வேண்டிய பகுதியாஎன்பது) பற்றிய குறிப்பு.

தொடை மறைக்க வேண்டிய பகுதியாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி),ஜர்ஹத் (ரலி)முஹம்மத் பின் (அப்தில்லாஹ் பின்) ஜஹ்ஷ் (ரலி) ஆகியோர் வாயிலாக அறிவிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தமது தொடைப் பகுதியை திறந்தார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதில் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பே வலுவான அறிவிப்பாளர்தொடருடையதாகும்.

ஜர்ஹத் (ரலி) அவர்களின் அறிவிப்பு(ப் பிரகாரம் செயல்படுவதே) மார்க்கத்தை (கவனித்து)ப் பேணுவதாகும். இவ்வாறு கூறுவதன் மூலமே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்..

அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த தோட்டத்திற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் நுழைந்த போது நபி (ஸல்) அவர்கள் (திறந்திருந்த) தமது முழங்கால்களை மூடிக் கொண்டார்கள்.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை எனது தொடை மீதிருக்கஅவர்கள் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். அப்போது எனது தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி) விட்டது.

371 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் மீது (ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு) போர் தொடுத்தார்கள். (அந்தப் போரின் போது) கைபருக்கு அருகில் (அதன் புறநகரில்) நாங்கள் (கடைசி இரவின்) இருட்டிலேயே வைகறைத் தொழுகையைத் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களும் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் சாலையில் (தமது வாகனத்தைச்) செலுத்தினார்கள். அப்போது எனது முழங்கால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடையில் உராய்ந்து கொண்டிருந்தது. பின்னர் அவர்கள் தமது தொடையிலிருந்த வேட்டியை விலக்கினார்கள். எந்த அளவிற்கென்றால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையைப் பார்த்தேன். (பிறகு) அந்த நகருக்குள் அவர்கள் பிரவேசித்த போதுஅல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்கு வோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று மூன்று முறை கூறினார்கள். அந்த ஊர் மக்கள் தங்களது அலுவல்களுக்காப் புறப்ட்டு வந்த போது (எங்களைக் கண்டதும்)முஹம்மது (வந்து விட்டார்.) என்று கூறினர்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எமது நண்பர் களில் சிலர் (முஹம்மதும்அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்ற னர்) என்று அறிவித்தனர்.-

பிறகு (கைபர் வாசிகளை ஒடுக்கி) அதை நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தோம். போர்க் கைதிகளைத் திரட்டப்பட்ட போது திஹ்யா (அல்கல்பீ- ரலி) அவர்கள் வந்துஅல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்நீங்கள் சென்று ஓர் அடிமைப்பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று சொன்னார்கள். அவ்வாறே திஹ்யா (ரலி) அவர்கள் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயை எனும் பெண்மணியைப் பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம்) வந்து,அல்லாஹ்வின் தூதரே குறைழாநளீர் குலத்தாரின் தலைவியான ஸஃபிய்யா பின் ஹுயை அவர்களை திஹ்யா அவர்களுக்கு வழங்கிவிட்டீர்களே! ஸஃபிய்யாஉங்களுக்கல்லாமல் வேறெவருக்கும் தகுதியாக மாட்டார் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்அவரையும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள்! என்றார்கள். ஸஃபிய்யா அவர்களுடன் திஹ்யா (ரலி) அவர்கள் வந்தார்கள். ஸஃபிய்யா அவர்களைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ளதிஹ்யா (ரலி) அவர்களிடம்னகைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப்பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

(இந்த ஹதீஸை அறிவிக்கின்ற) அனஸ் (ரலி) அவர்களிடம் ஸாபித் (அல்புனானீ -ரஹ்) அவர்கள்,அபூஹம்ஸா! நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மணக் கொடையாக (மஹ்ர்) எனன கொடுத்தார்கள்என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள்அவரையே மணக் கொடையாக ஆக்கினார்கள்அதாவது) அவரை விடுதலை செய்வதையே மணக் கொடையாக ஆக்கி அவரை மணந்து கொண்டார்கள் என்று பதிலளித்தார்கள். நாங்கள் (கைபரிலிருந்து திரும்பி வரும்) வழியில் (சத்துஸ் ஸஹ்பா எனுமிடத்தில்) இருந்த போது (புது மணப்பெண்) ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அலங்கார) ஆயத்தம் செய்து அன்னாரிடம் ஒப்படைத்தார்கள். புது மாப்பிள்ளையாக காலையில் எழுந்த நபி (ஸல்) அவர்கள்,எவரிடமேனும் ஏதேனும் (உணவுப்) பொருள் இருப்பின் அதை (எம்மிடம்) கொண்டு வாருங்கள். அப்போது (அங்கிருந்த நபித்தோழர்களில்) ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரலானார். மற்றொருவர் நெய்யைக் கொண்டுவரலானார்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அனஸ் (ரலி) அவர்கள், (மற்றொருவர்) மாவு ( கொண்டு வரலானார் என்பது) பற்றிக் குறிப்பிட்டதாகவே நான் கருதுகிறேன்.-

அவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து ஹைஸ் எனும் (ம-தா போன்ற) ஒருவகை பலகாரத்தை தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலீமா-மண விருந்தாக அமைந்தது.

பாடம் : 13

ஒரு பெண் எத்தனை ஆடைகளை அணிந்து தொழ வேண்டும்?

இக்ரிமா (ரஹ்) அவர்கள்ஒரு பெண் ஒரே ஆடையில் தன் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டாலும் போதுமானதாகும். என்று கூறினார்கள்.

372 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள் அப்போது இறை நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களது ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) கலந்து கொள்வார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களை (யார் யார் என்று) எவரும் அறிய மாட்டார்கள்.

பாடம் : 14

வேலைப்பாடு மிக்க ஆடையணிந்து தொழும் போது அதன் வேலைப்பாடு கவனத்தை ஈர்த்தால் (என்ன செய்வது?)

373 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும்எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டுஅபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான் (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில்நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

பாடம் : 15

சிலுவை பொறிக்கப்பட்ட அல்லது (உயிரினங்களின்) உருவப் படம் வரையப்பட்ட ஆடையுடன் தொழுதால் தொழுகை பாழாகிவிடுமாஎன்பது பற்றியும்இவற்றுக்கு வந்துள்ள தடை பற்றியும்.

374 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள்இந்த திரைச் சீலையை நம்மிடமி ருந்து அகற்றிவிடு! ஏனெனில்இதிலுள்ள உருவப் படங்கள் என் தொழுகையில் (என்னிடம்) குறுக்கிட்டுக் கொண்டேயிருக் கின்றன என்று சொன்னார்கள்.

பாடம் : 16

ஒருவர் நீண்ட பட்டு உடுப்பை அணிந்து தொழுது விட்டுப் பின்னர் அதைக் கழற்றி விடுவது.

375 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆண்கள் பட்டு அணிவது தடை செய் யப்படுவதற்கு முன்பு) நபி (ஸல்) அவர்களுக்கு (ஃபர்ரூஜ் எனும்) நீளமான பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுது விட்டுத்) திரும்பியதும்அதை வெறுப்பவர்கள் போன்று கடுமையாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு,இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று எனக் கூறினார்கள்.

பாடம் : 17

சிவப்பு நிற ஆடையணிந்து தொழுவது (செல்லும்).

376 அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ-ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின் போது அப்தஹ் எனுமிடத்தில்) தோ-னாலான சிவப்பு நிற கூடாரமொன்றில் (தங்கியிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ (அங்கசுத்தி) செய்து விட்டு எஞ்சிய தண்ணீரை பிலால் (ரலி) அவர்கள் எடுத்துவருவதைக் கண்டேன். மேலும்யும்அந்த எஞ்சியத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிது கிடைத்த ஒருவர் அதைத் (தமது உடம்பில்) தடவிக் கொண்டார்.

பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை எடுத்து வந்து அதை ஊன்றுவதை நான் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேலங்கியை (தமது கணைக்கால்கள் தெரியுமளவிற்கு) உயர்த்திப்பிடித்தபடி வெளியில் வந்து (தடுப்பாக வைக்கப் பட்டிருந்த) அந்த கைத்தடியை நோக்கி மக்களுடன் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அந்த கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால் நடைகளும் கடந்து செல்வதையும் நான் பார்த்தேன்.

பாடம் : 18

மாடியிலும் மேடையிலும் மரப்பலகையிலும் தொழுவது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

பனிக்கட்டியின் மீதும் பாலத்தின் மீதும் தொழுவது தவறில்லைஅதற்குக் கீழே அல்லது மேலே அல்லது முன்பக்கத்தில் மூத்திரம் (போன்றவை) இருந்தாலும் சரியே! ஆனால்தொழுபவருக்கும் அந்த பாலத்திற் கும் இடையில் (அசுத்தம் சேராதபடி) தடுப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருதினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் இமாமைப் பின்தொடர்ந்து பள்ளிவாச-ன் கூரை (மாடி)யில் நின்று தொழுதார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் பனிக் கட்டியின் மேல் நின்று தொழுதார்கள்.

377 அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்களில் சிலர்) சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் பயன் படுத்திய) அந்த சொற்பொழிவு மேடை (மிம்பர்) எதனால் செய்யப்பட்டதுஎன்று வினவினர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள்மக்களில் என்னைவிட (இது பற்றி) நன்கு தெரிந்தவர்கள் எவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. அது ஒரு வகை சவுக்கு மரத்தினால் செய்யப்பட்டதாகும்அதை இன்ன பெண்மணியின் அடிமையான இன்னாரே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக செய்(து கொடுத்)தார்.

அது செய்யப்பட்டு (உரிய இடத்தில்) வைக்கப்பட்ட போது அதன் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறி) நின்று கிப்லாவை முன்னோக்கித் (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) சொன்னார்கள். மக்களும் அன்னாருக்குப் பின்னால் (தொழுகையில்) நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குர்ஆன் வசனங்களை) ஓதிவிட்டுருகூஉச் செய்தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் ருகூஉச் செய்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி (நிமிர்ந்து நின்றுவிட்டு)ப் பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து தரையில் (இறங்கி) சஜ்தா செய்தார்கள். பிறகு திரும்பவும் மேடைக்குச் சென்று ஓதினார்கள். பிறகு ருகூஉ செய்தார்கள். அதன் பின்னர் தலையை உயர்த்தி (நிமிர்ந்து நின்று விட்டு)ப் பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து வந்து தரையின் மீது சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். இது தான் நடந்த நிகழ்ச்சியாகும்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்.

அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிக் கூறுகையில், (தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள், (பின் பற்றித் தொழுத) மக்களைவிட உயரமான இடத்தில் (நின்று கொண்டு) இருந்தார்கள் என்பது பற்றிய இந்த ஹதீஸின் கருத்திலிருந்து மக்களைவிட உயரமான இடத்தில் இமாம் இருப்பதில் தவறில்லையென்றே நான் கருதுகின்றேன் என்றார்கள். அப்போது நான் (இது சம்பந்தமாக) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் ஏராளமாகக் கேட்கப்படுகிறதாமே! அவரிடமிருந்து இந்த ஹதீஸை நீங்கள் செவியுறவில்லையாஎன்று கேட்டேன். அதற்கு அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள்இல்லை (நான் அவரிடமி ருந்து இந்த ஹதீஸை செவியுறவில்லை) என்று பதிலளித்தார்கள்.

378 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்து கொண்டிருந்த போது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால் அல்லது தோள்பட்டை கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள் ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (தொழுகையை) முடித்த போது,பின்பற்றப்படுவதற்காக இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவேஅவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள் என்று சொன்னார்கள்.

(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கிவந்தார்கள். அப்போது மக்கள்ஒரு மாதகாலம் தங்கள் மனைவிமார்களை நெருங்க மாட்டேன் என தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே,அல்லாஹ்வின் தூதரேஎன்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்இந்த மாதத்திற்கு இருத்தொன்பது நாட்கள்தாம் என்று கூறினார்கள்.

பாடம் : 19

சஜ்தா செய்யும் போது தொழுது கொண்டிருப்பவரின் ஆடை அவருடைய மனைவியின் மேல் பட்டுவிட்டால் (அவருடைய தொழுகை பாழாகிவிடுமா?)

379 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களுக்கு எதிரில் நான் படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது சில நேரங்களில் அவர்களது ஆடை என் மீது படும். நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட) தொழுகை விரிப்பில் தொழுவார்கள்.

பாடம் : 20

பாயில் தொழுதல்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கப்பலில் நின்ற வண்ணம் தொழுதார்கள்.

(நீ கப்பலில் செல்லும் போது) உன் சகாக்களுக்கு சிரமம் ஏற்படாமலிருக்குமானால் நின்ற நிலையில் கப்பல் செல்லும் திசையிலேயே தொழுது கொள்அவர்களுக்கு சிரமம் ஏற்படுமாயின் உட்கார்ந்து தொழு! என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

380 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில்

சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர்எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டி ருந்தது. ஆகவேஅதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

பாடம் : 21

பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட தொழுகை விரிப்பில் தொழுவது.

381 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட தொழுகை விரிப்பின் மீது தொழுவார்கள்.

பாடம் : 22

படுக்கை விரிப்பில் தொழுவது.

அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

382 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (ப்படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் சஜ்தா செய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் சஜ்தாவிற்கு வரும் போது என்னை தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.

383 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் படுத்திருக்கும்) எனது படுக்கை விரிப்பில் தொழுவார்கள். அப்போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையே ஜனாஸாவைப் போன்று குறுக்கே படுத்திருப்பேன்.

384 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாமும் தம் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களும் உறங்கும் படுக்கை விரிப்பில் (இரவில்) தொழுவார்கள். அப்போது (என் சிறிய தாயாரான) ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்கள் சஜ்தா செய்யும்) கிப்லா திசைக்கும் இடையே குறுக்கே படுத்திருப்பார்கள்.

பாடம் : 23

கடுமையான வெப்பநேரத்தில் (தாம் அணிந்திருக்கும்) துணியின் மீது சிரவணக்கம் செய்வது.

நபித்தோழர்கள் (தாம் அணிந்திருக்கும்) தலைப்பாகையின் (ஓர் ஓரத்தின்) மீதும் தொப்பியின் மீதும் (வெயில் நேரத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்இருகைகளையும் (நிலத்தில் ஊன்றும் போது) சட்டைக் கைக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

385 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (நண்பகல் நேரத்தில்) தொழும் போது எங்களில் சிலர் கடுமையான வெப்பம் காரணமாக ஆடையின் ஒரு பகுதியை சிரவணக்கம் (சஜ்தா) செய்யுமிடத்தில் வைத்துக் கொள்வார்கள்.

பாடம் : 24

செருப்பணிந்து தொழுதல்.

386 சயீத் பின் யஸீத் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர் களிடம் நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுவார்களா?என்று கேட்டேன். அதற்கு அவர்கள்ஆம் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 25

காலுறைகள் அணிந்து தொழுதல்.

387 ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்தார்கள்; (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக்கையால் தடவி) தமது காலுறைகள் மீது மஸ்ஹுச் செய்தார்கள் பிறகு (காலுறை களுடனேயே) எழுந்து தொழுவதை நான் கண்டேன். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(காலுறைகளின் மீது மஸ்ஹுச் செய்து தொழலாம் என்ற கருத்துடைய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் முதலான) மக்களுக்கு ளஜரீர் (ரலி) அவர்களின் ன இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளிப்பதாய் அமைந்தது. ஏனெனில் ஜரீர் (ரலி) அவர்கள் ளநபி (ஸல்) அவர்களின் காலத்தில்னகடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார்.

388 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். (அவர்கள் உளூவின் இறுதியில்தமது கால்களைக் கழுவாமல்) தமது காலுறைகள் மீது (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்து)விட்டு (காலுறைகளுடனேயே) தொழுதார்கள்.

பாடம் : 26

(தொழுகையின் ஓர் அங்கமான) சிரவணக்கத்தை முழுமையாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் விளைவு).

389 அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தமது (தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா (பின் அல்யமான்-ரலி) அவர்கள்அவர் தொழுது முடித்த போது நீர் (உரியமுறையில்) தொழவில்லை என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், (இதே நிலையில்) நீர் இறந்து விட்டால் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழி முறைக்கு மாற்றம் செய்தவராகவே இறக்கின்றீர் என்று சொன்னதாகவும் நான் எண்ணுகிறேன்.

பாடம் : 27

சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது இரு புஜங்களையும் (விலாவோடு சேர்க்காமல் அவற்றை) இடைவெளிவிட்டு வைக்க வேண்டும்.

390 அப்துல்லாஹ்பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (சிரவணக்கத்தில்) அவர்களின் இரு அக்குள் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்.

இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 28

(இறையில்லம் கஅபாவின் திசையான) கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு.

(சிரவணக்கம் செய்யும் போது) ஒருவர் தமது இருகால் (விரல்)களின் நுனிகளை கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை பற்றி அறிவிக்கையில் அபூஹுமைத் (ரலி) அவர்கள் இதைக் கூறினார்கள்.

391 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாம் தொழுவது போன்று தொழுதுநமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி,நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் (காப்புறுதியும்) அவனுடைய தூதரின் பொறுப்பும் (காப்புறுதியும்) உண்டு. எனவே (இப்படிப்பட்டவர் மீது) அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப்பி(னைப் பாழாக்கும் விஷயத்தி)ல் அல்லாஹ்வுக்கு(ம் அவனுடைய தூதருக்கும்) வஞ்சனை செய்து விடாதீர்கள்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

392 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிடவேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறிநாம் தொழுவது போன்று தொழுதுநமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கிநம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

393 மைமூன் பின் சியாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம்அபூஹம்ஸா! ஓர் அடியாரின் உயிரையும் பொருளையும் தடைசெய்வது எதுஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள்யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்துநமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுதுநம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டுமற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு. என்று கூறினார்கள்.

பாடம் : 29

மதீனா வாசிகள்ஷாம்வாசிகள்கிழக்கில் வசிப்பவர்கள் ஆகியோரின் தொழும்திசை (கிப்லா).

கிழக்கிலோ மேற்கிலோ (மதீனா வாசிகளுக்கும் ஷாம் வாசிகளுக்கும்) கிப்லா இல்லை.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (மதீனாவாசிகளிடம்)மலஜலம் கழிக்கும் போது கிப்லா (கஅபா) திசையை முன்னோக்காதீர்கள். அப்போது கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ,திரும்பிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

(குறிப்பு: இந்தியா போன்ற நாடுகளுக்கு மேற்குத் திசையில் தான் கிப்லா அமைந்துள்ளது. இது மதீனாவாசிகளைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும் என்பதை நினைவில் கொள்க!)

394 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் கிப்லா (கஅபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) பின்னோக்கவும் வேண்டாம். மாறாககிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.

இதை அறிவித்த அபூஅய்யூப் (கா-த் பின் ஸைத்-ரலி) அவர்கள்நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்த போது (அங்குள்ள) கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம் ஆகவே நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம் என்று சொன்னார்கள்..

பாடம் : 30

இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக (கிப்லாவாக) வைத்துக் கொள்ளுங்கள் எனும் (2:125 ஆவது) இறைவசனத் தொடர்.

395 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உம்ராவிற்காக (இஹ்ராம் கட்டிய) ஒருவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார். ஆனால் ஸஃபா – மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் (சயீ) ஓடவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள லாமாஎன்று நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு) வந்த போது கஅபாவை ஏழுமுறைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்பிறகு மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்பிறகு ஸஃபா – மர்வாவிற்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் (சயீ) ஓடினார்கள். (ஆகவேநாமும் அவ்வாறே செய்யவேண்டும்.) என்று கூறிவிட்டுஅல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன் மாதிரி இருக்கிறது என்று சொன்னார்கள்.

396 அம்ர் பின் தினார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (இதுபற்றி) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்,ஸஃபா-மர்வா(மலை)களுக்குகிடையில் தொங்கோட்டம் (சயீ) ஓடாதவரை மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கவே கூடாது என்று கூறினார்கள்.

397 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்களிடம்இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் நுழைந்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்து கொண்டிருந்த போது நான் அங்கு சென்றேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் இரு கதவுகளுக்கிடையே நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம்கஅபாவிற்குள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்களாஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம்நீங்கள் கஅபாவிற்குள் நுழையும் போது இடப்பக்கமிருக்கின்ற இரு தூண்களுக்கு மத்தியில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்பிறகு வெளியே வந்து கஅபாவின் கதவை முன்னோக்கியபடி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்றார்கள்.

398 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி கொண்ட நாளில்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்து திசைகளிலும் பிராத்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டுஇது தான் கிப்லா (தொழும் திசை) என்று சொன்னார்கள்.

பாடம் : 31

எங்கிருந்தாலும் (தொழும் போது) கிப்லா (-கஅபாவின்) திசையையே முன்னோக்க வேண்டும்.

நீங்கள் கிப்லாவை முன்னோக்கித் (தொழுகையில்) தக்பீர் (தஹ்ரீமா) சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்

399 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு வந்து) பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள் (ஜெரூசலே மிலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) கஅபாவை நோக்கித் தாம் திருப்பப்பட வேண்டுமென்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே (தொழுகையில் கஅபாவை முன்னோக்கும் படி ஆணையிட்டு) அல்லாஹ், (நபியே!) நாம் உமது முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்… எனும் (2:144ஆவது) வசனத்தை அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் கஅபாவை முன்னோக்கி(த் தொழலா)னார்கள். (இதைக் கண்ட) அறிவற்ற மக்கள்: (முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எதுஎன்று கூறினர். (அதற்கு அல்லாஹ்,) (நபியே!) கூறுக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவைதான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான். (2:142) என்று சொன்னான்.

– இந்த வசனத்திலுள்ள அறிவற்ற மக்கள் எனும் சொற்றொடர் யூதர்களையே குறிக்கின்றது. –

(கஅபாவை நோக்கி கிப்லா மாற்றம் நடை பெற்ற அந்தத் தொழுகையில்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மனிதர் தொழுதார். தொழுது விட்டு அவர் புறப்பட்டு(ச் செல்லும் வழியில்) பைத்துல் மக்திஸை நோக்கி அஸ்ர் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த அன்சாரிகளில் சிலரைக் கடந்து சென்றார். அப்போது அவர் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன்அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன் என்றார். உடனே (தொழுகையிலிருந்த) அம்மக்கள் கஅபாவின் திசையில் திரும்பிக் கொண்டார்கள்

400 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது (அமர்ந்து சைகை செய்தவாறு,) அது செல்கின்ற திசையை நோக்கி (உபரித் தொழுகைகளை) தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையானத் தொழுகையினை அவர்கள் தொழநாடும் போது (வாகனத்திலிருந்து) இறங்கிகிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்.

401 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்து விட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்த போது அவர்களிடம்இந்தத் தொழுகையின் போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததாஎன்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள்ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு மக்கள்நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்) என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி,கிப்லாவை முன்னோக்கி இரு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்து விட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பிய போதுஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால்,கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடு கின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்து விடும் போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்;என்று கூறிவிட்டுஉங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்த தாகவோ குறைத்து விட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்யட்டும் என்று கூறினார்கள்.

பாடம் : 32

கிப்லா குறித்து வந்துள்ள இன்ன பிற தகவல்களும்மறதியாகக் கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும் போது) அந்தத் தொழுகையைத் திருப்பித் தொழவேண்டியதில்லை என்பதும்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுத்து விட்டு மக்களை நோக்கி அமர்ந்த (நபித் தோழர்களால் நினைவூட்டப்பட்டதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதிருக்கிறார்கள்.

402 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்:

1.. நான் (நபி (ஸல்) அவர்களிடம்)அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடத்தை (கஅபாவை) தொழும் திசையாக (கிப்லாவாக) நாம் ஆக்கிக் கொள்ள லாமே! என்று கேட்டேன். அப்போதுஇப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக (கிப்லாவாக) வைத்துக் கொள் ளுங்கள் எனும் (2:125 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

2. பர்தா (சட்டம்) குறித்த இறைவசனமும் (என் கருத்துக்கு இசைவாகவே அருளப் பெற்றது.) :

நான் (நபி (ஸல்) அவர்களிடம்)அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மனைவி மார்களை பர்தா அணியும்படி தாங்கள் பணிக்கலாமே! ஏனெனில் அவர்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) உரையாடலாம் என்று சொன்னேன். அப்போது (பர்தா (சட்டம்) குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.

3. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது நான் அவர்களிடம்இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்து விட்டால்உங்களைவிடச் சிறந்த துணைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம் என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறே) இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

403 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (மஸ்ஜித்) குபாவில் சுப்ஹுத் தொழுகையை தொழுது கொண்டிருந்த போது அவர் களிடம் ஒரு மனிதர் வந்துஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கடந்த இரவொன்றில் கஅபாவைத் தொழுகையில் முன்னோக்கும்படி ஆணையிட்டு அவர்களுக் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே நீங்களும் கஅபாவையே முன்னோக்கித் தொழுங்கள்! என்று கூறினார். உடனே (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுது கொண்டிருந்த அவர்கள் கஅபாவை நோக்கி அப்படியே தொழுகையிலேயே) சுழன்று (திரும்பிக்) கொண்டனர்.

404 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை ஐந்து ரக்அத்களாகத் தொழு(வித்)து விட்டார்கள். (தொழுகை முடிந்து திரும்பியமர்ந்த நபியவர்களை நோக்கி) மக்கள்தொழுகையில் (அதன் ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டுவிட்டதாஎன்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்)என்று கேட்டார்கள். மக்கள்நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழு(வித்) தீர்கள் (அதனால் தான் வினவினோம்.) என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வது போன்று) தமது கால்களை மடக்கி (கிப்லாவை நோக்கித் திரும்பி மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.

பாடம் : 33

பள்ளி வாச-ல் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது.

405 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டி ருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு உங்களில் ஒருவர் தொழுகையில் நின்று கொண்டிருக்கும் போது அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார் அல்லது அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்ஆகவேஎவரும் தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும் என்று கூறிவிட்டுப் பிறகுதமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டுஅல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

406 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி) ய பின்னர்,உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தமது முகத்துக்கெதிரே (கிப்லாத் திசையில்) உமிழவேண்டாம். ஏனெனில்அவர் தொழும் போது அல்லாஹ் அவரது முகத்திற்கெதிரே இருக்கின்றான் என்று கூறினார்கள்.

407 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாச-ன்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் மூக்குச் சளியை அல்லது எச்சிலை அல்லது காறல் சளியைக் கண்டார்கள். உடனே அதை சுரண்டி (சுத்தப்படுத்தி)விட்டார்கள்..

பாடம் : 34

பள்ளியில் (சிந்தப்பட்ட) மூக்குச் சளியை சிறுகற்களால் சுரண்டி (அப்புறப்படுத்தி) விடுதல்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்அருவருப்பானவற்றை நீ மிதித்து விட்டால் அது பச்சையாக இருந்தால் உடனே அதை கழுவிக் கொள்! அது காய்ந்து இருந்தால் (கழுவ) வேண்டியதில்லைஎன்றார்கள்.

408,409 அபூஹுரைரா (ரலி)அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் (கிப்லாத் திசை) சுவரில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகுஉங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே (கிப்லாத்திசையில்) உமிழ வேண்டாம்தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்.. தமது இடப் புறமோ தமது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

பாடம் : 35

தொழும் போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்பலாகாது.

410,411 அபூஹுரைரா (ரலி) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பின்னர்,உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழவேண்டாம்தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்தம் இடப்புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும் என்று சொன்னார்கள்.

412 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்கு முன்புறமோ தமக்கு வலப்புறமோ உங்களில் எவரும் துப்பக் கூடாது. எனினும் தமக்கு இடப் புறமோ காலுக்கடியிலோ (துப்பலாம்).

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 36

இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற்குக் கீழேயோ உமிழலாம்.

413 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறை நம்பிக்கையாளர் (மூமின்) தொழுது கொண்டிருக்கும் போது தம் இறைவனிடமே அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே அவர் தமது முன்புறத்திலும் உமிழ வேண்டாம்தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்.. எனினும் இடப் புறமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழட்டும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

414 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் கிப்லாத் திசைச் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றினால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு (தொழுகையிலிருக்கும்) ஒருவர் தம் முன்புறமோ அல்லது வலப் புறமோ துப்பக்கூடாது என தடைவிதித்து விட்டுஎனினும் அவர் தமது இடப்புறமோ அல்லது இடப் பாதத்திற்கு கீழேயோ உமிழட்டும் என்று சொன்னார்கள்.

இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 37

பள்ளிவாச-னுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம்.

415 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளி வாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 38

பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) சளியை மண்ணுக்குள் புதைத்து விட வேண்டும்.

416 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும் போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அதேபோல்) அவர் தம் வலப் புறமாகவும் உமிழ வேண்டாம். ஏனெனில்அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப் புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ உமிழ்ந்து விட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 39

(தொழுது கொண்டிருக்கும்) ஒருவரை எச்சில் முந்திக் கொள்ளும் போது அவர் தமது ஆடையின் ஓர் ஓரத்தைப் பிடித்து (அதில் உமிழ்ந்து)கொள்ளலாம்.

417 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லாத் திசையில் (உள்ள சுவரில்) சளியைக் கண்டார்கள். (இதைக் கண்ட) உடன் நபி (ஸல்) அவர் களிடம் வெறுப்புக் காணப்பட்டது அல்லது இந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதும் அதன் மீது அவர்கள் காட்டிய வேகமும் நேரடியாகத் தெரிந்தது.உடனே அவர்கள் அதைத் தமது கரத்தால் சுரண்டி விட்டுஉங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும் போது தமது கிப்லா திசையில் கட்டாயமாக அவர் உமிழ வேண்டாம்.. எனினும் அவர் தம் இடப் புறமோ அல்லது வலப் புறமோ தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழ்ந்து கொள்ளட்டும். என்று கூறினார்கள். பிறகுதமது மேலங்கியின் ஓர் ஓரத்தைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் சுருட்டி(க் கசக்கி)விட்டு அல்லது அவர் இவ்வாறு செய்து கொள்ளலாம் என்றார்கள்.

பாடம் : 40

(தொழுகையை முழுமையாக நிறைவேற்றா) மக்களிடம் இமாம்தொழுகையை குறைவின்றிப் பூர்த்தி செய்யுமாறு அறிவுரை கூறுவதும்கிப்லா பற்றிய குறிப்பும்.

418 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இந்த (கிப்லா) திசையில் முன்னோக்கிக் கொண்டிருக்கிறேன் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் நீங்கள் செய்வதையெல்லாம் நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களாஅல்லாஹ்வின் மீதாணையாக! உங்களின் பணிவும் (சஜ்தாவும்) உங்களின் குனிவும் (ருகூஉம்) எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் பார்க்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

419 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக ஓர் தொழுகையை தொழுவித்த பின்னர்சொற்பொழிவு மேடை (அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக ஓர் தொழுகையை தொழுவித்த பின்னர்சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி தொழுகையைப் பற்றியும் (அதன் முக்கிய நிலைகளில் ஒன்றான) ருகூஉ பற்றியும் (அவற்றை குறைவின்றி நிறைவேற்றுமாறு) கூறினார்கள். அப்போது, (உங்களை முன்புறமாக) நான் காண்பது போன்றே எனது முதுகுக்குப் பின் புறமாகவும் உங்களை நான் காண்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

பாடம் : 41

(ஒரு பள்ளிவாசல் குறித்து இது) இன்ன குலத்தாரின் பள்ளிவாசல் என்று கூறலாமா?

420 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே ஹஃப்யா எனும் இடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை சனிய்யத்துல் வதா எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெ-யவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை பந்தயம் வைத்தார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வார்கள்.

பாடம் : 42

பள்ளிவாசலுக்குள் காசு பணங்களைப் பங்கீடு (தானம்) செய்வதும்பழக்குலை களைப் தொங்கவிடுவதும் (செல்லும்).

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

அல்கின்வு எனும் சொல்லுக்குபழக் குலை என்று பொருள். இருமை : கின்வானி. இதன் பன்மை கின்வான் என்பதேயாகும். (வாய்பாட்டில்) ஸின்வ்ஸின்வானி எனும் சொற்களைப் போனறே (இதுவும் அமைந் துள்ளது).

421 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து நிதி (கப்பம்) கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள்,இதைப் பள்ளி வாச-ல் பரப்பி வையுங்கள் என்று உத்தரவிட்டார்கள். -அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே அதிகமானதாக இருந்தது.-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏறிட்டுப் பார்க்காமல் தொழுகைக்காச் சென்றார்கள். தொழுகையை முடித்து விட்டு அந்த செல்வம் நோக்கி வந்து (அதனருகில்) அமர்ந்து கொண்டு ஒருவர்விடாமல் தாம் காண்பவர்களுக்கெல்லாம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் பெரிய தந்தையார்) அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்துஅல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப்போரில் தங்களால் கைது செய்யப்பட்ட பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்; (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கின்றேன் என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம்எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது துணியில் அதை (அள்ளிஅள்ளிப் போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைத் தூக்க) முடியவில்லை. ஆகவேஅல்லாஹ்வின் தூதரே! (உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவரை இதை எனக்குத் தூக்கிவிடப் பணியுங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள்இல்லை (நான் எவரையும் பணிக்க மாட்டேன்) என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள்நீங்களாவது என் (தோள்) மீது தூக்கிவையுங்கள் என்று கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள்இல்லை (முடியாது) என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அதிலிருந்து சிறிதைக் கொட்டிவிட்டு பிறகு அதை தூக்கிச் சுமக்க முயன்றார்கள். (அப்போதும் அவர்களால் அதை தூக்க முடியவில்லை.) எனவே ள நபி (ஸல்) அவர்களிடம்னஅல்லாஹ்வின் தூதரே! இதைத் தூக்கிவிடுமாறு இவர்களில் ஒருவரைப் பணியுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள்இல்லை (பணிக்க மாட்டேன்) என்று சொல்லிவிட்டார்கள். நீங்களாவது என்(தோள்) மீது இதைத் தூக்கி வையுங்கள் என்று கேட் டார்கள். நபி (ஸல்) அவர்கள் இல்லை (முடியாது) என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதிலிருந்து இன்னும் சிறிதைக் கீழே கொட்டிவிட்டு அதைத் தூக்கி தமது தோள்களுக்கிடையில் வைத்துக் கொண்டு நடக்கலானார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்படைந்து அவர்களையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டேயிருந்தார்கள அங்கேஅந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம்கூட மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்து விட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இடத்தை விட்டு எழுந்தார்கள்.

பாடம் : 43

பள்ளிவாசலுக்குள் வைத்து ஒருவர் (மற்றவரை) விருந்துக்கு அழைப்பதும்பள்ளிவாச-லேயே அதை ஏற்றுக் கொள்வதும் (குற்றமல்ல).

422 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களை பள்ளிவாச-ல் இருக்கக் கண்டேன். அவர்களுடன் மக்கள் சிலரும் இருந்தனர். (அவர்களுக்கு முன்னால் சென்று) நான் நின்றேன். உடனேஅவர்கள் என்னிடம்உன்னை அபூதல்ஹா அனுப்பினாராஎன்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உணவு அருந்துவதற்காகவா?என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் இருந்தவர்களிடம்எழுந்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்கள் அனைவருக்கும் முன்னால் நடந்தேன்.

பாடம் : 44

பள்ளிவாசலுக்குள் வைத்து வழக்குகளுக்கு தீர்ப்பளிப்பதும், (தகுந்த சாட்சிகளின்றி மனைவியர் மீது கணவர்கள் விபசாரக் குற்றம் சாட்டுவதன் பேரில்) கணவர்- மனைவியருக்கிடையே சாப அழைப்புப் பிரமாணம் (–ஆன்) செய்விப்பதும் (செல்லும்).

குறிப்பு: தன் மனைவி மற்றொரு ஆடவனுடன் தகாத உறவு கொண்டுவிட்டாள் என்று கணவன் குற்றம் சுமத்திஇதற்கு நான்கு சாட்சிகளையும் கொண்டு வராத போது மனைவியும் அக்குற்றத்தை மறுத்தால்அவ்விருவரும் நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தாங்கள் உண்மையானவர்கள் எனக் கூற வேண்டும். ஐந்தாவது தடவையில் தாம் பொய் சொல்லி இருந்தால் தம் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று இருவரும் கேட்க வேண்டும். இதுவே லிஆன்எனப்படும். இவ்வாறு செய்த பின் அவ்விருவரும் ஒரு காலத்திலும் சேர முடியாது)

423 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ளநபி (ஸல்) அவர்களிடம் வந்துனஅல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனை (தகாத உறவு கொண்டபடி இருக்க)க் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமாஎன்று கேட்டார். (இந்த விவகாரத்தில் கணவன்-மனைவி இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.) எனவேபள்ளிவாசலுக்குள் அத்தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (-லிஆன்) செய்தனர். அப்போது நான் அந்த இடத்தில் ளநபி (ஸல்) அவர்களுக்கு அருகில்ன இருந்தேன்.

பாடம் : 45

(அழைப்பின் பேரில்) அடுத்தவர் வீட்டுக்குச் சென்ற ஒருவர் அவ்வீட்டில் தாம் விரும்பிய இடத்தில் தொழுது கொள்ளலாமாஅல்லது வீட்டுக்காரர் பணித்த இடத்தில் தொழ வேண்டுமாஎன்பதும், (வீட்டுக்காரர் குறிப்பிடும் இடத்தில் தொழும் போது அவ்விடத்தின் தூய்மை பற்றித்) துருவி விசாரிக்க வேண்டியதில்லை என்பதும்.

424 இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(எனது வீட்டில் ஓர் இடத்தில் தொழுவித்து அந்த இடத்தை எனது தொழுமிடமாக்க வருமாறு நான் அழைத்ததன் பேரில்) நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்கள். (வீட்டுக்குள் வந்ததும்) உமது வீட்டில் உமக்காக நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீர் விரும்புகின்றீர்என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் (குறிப்பிட்ட) ஓர் இடத்தைக் காட்டியதும் (அந்த இடத்தில் நின்று) நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறி(த் தொழலா)னார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால்அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள்.

பாடம் : 46

வீடுகளிலேயே தொழுமிடத்தை அமைத்துக் கொள்வது.

பராஉபின் ஆஸிப் (ரலி) அவர்கள் தமது வீட்டிலுள்ள தொழுமிடத்தில் கூட்டாகச் சேர்ந்து (ஜமாஅத்தாக) தொழுதார்கள்.

425 மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ருப்போரில் கலந்து கொண்ட அன்சாரிகளில் ஒருவரான நபித்தோழர் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! எனது பார்வை (மங்கிப்போய்)விட்டது. நான் என் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தி வருகிறேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும் அவர்களுக்குமிடையே உள்ளபள்ளத் தாக்கில் தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழுவிக்க முடியவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனது இல்லத்திற்கு வந்து அதில் (ஓர் இடத்தில்) தொழவேண்டும். அதை நான் தொழு(விக்கு)ம் இடமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என ஆசைப்படு கிறேன் என்று சொன்னார்கள். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறே நான் செய்வேன் என்று கூறினார்கள்.

இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களே கூறுகின்றார்கள்:

(மறுநாள்) முற்பகல் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (எனது இல்லத்துக்குள்) நுழைய அ.னுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன். வீட்டில் நுழைந்ததும். உட்காராமலேயேஉங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டு மென விரும்புகிறீர்கள்என்று (என்னிடம்) கேட்டார்கள். உடனே நான் அவர்களுக்கு வீட்டின் ஒரு பகுதியைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) நின்று தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)து விட்டு சலாம் கொடுத்தார்கள்.

(கொத்துக் கறியும் மாவும் கலந்து) நபி (ஸல்) அவர்களுக்கு நாங்கள் தயாரித்து வைத்திருந்த ஒரு வகை உணவைச் சாப்பிட்டு விட்டுத் தான் செல்லவேண்டுமென நாங்கள் அவர்களை வற்புறுத்தினோம். கலைந்து சென்ற எனது குடும்பத்தார் பலர் மீண்டும் வீட்டில் குழுமிவிட்டனர். அப்போது அவர்களில் ஒருவர்மாலிக் பின் துகைஷின் அல்லது இப்னு துக்ஷுன் எங்கே என்று கேட்டார். மற்றொருவர்அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்)அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைக் காண அவர் வரவில்லை) என்று சொன்னார்.

(இதைச் செவியுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அவ்வாறு சொல்லாதே! அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை(லாயிலாஹ இல்லல்லாஹ்) என அவர் சொல்லிவிட்டிருப்பதை நீ பார்க்கவில்லையாஎன்று கேட்டார்கள். அவர்அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறிவிட்டுஅவரது முகமும் அவரது அபிமானமும் நயவஞ்சகர்களை நோக்கியே அமைந்திருக்கக் காண்கிறோமேஎன்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ்என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடை செய்து விடுகிறான் என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ- ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு நான் பனூசாலிம் குலத்தாரும் அவர்களின் பிரமுகர்களில் ஒருவருமான ஹுசைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களின் ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவருடைய ஹதீஸை ஹுசைன் பின் முஹம்மத் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

பாடம் : 47

பள்ளியில் நுழையும் போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் வலப் பக்கத்திற்கு முதலிடம் அளித்தல்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வலக் காலை முத-ல் வைத்துப் பள்ளியில் நழை வார்கள். வெளியேறும் போது தமது இடக் காலை முத-ல் வைத்து வெளியேறுவார்கள்.

426 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும் போதும்தலைவாரும் போதும்செருப்பணியும் போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள்அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.

பாடம் : 48

அறியாமைக் காலத்தில் வாழ்ந்த இணை வைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப் படலாமா?அவ்விடத்தில் பள்ளி வாசல் கட்டலாமா? (என்றால் கட்டலாம்.)

ஏனெனில்நபி (ஸல்) அவர்கள் (மரணப்படுக்கையில் இருந்த போது)அல்லாஹ் யூதர்களைத் தம் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.

சவக்குழி (கப்று)களின் (அருகில் அல்லது அவற்றை நோக்கி அல்லது அவற்றின்)மீது தொழுவது தகாத செயலாகும்.

ஒரு சவக்குழிக்கு அருகில் தொழுது கொண்டிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் சவக்குழி(களைத் தவிருங்கள்! அதன் அருகில் தொழாதீர்கள்) சவக் குழி(களைத் தவிருங்கள்அதன் அருகில் தொழாதீர்கள்) என்று கூறினார்கள். ஆனால், (அங்கு தொழுத தொழுகையை) திருப்பித் தொழுமாறு அனஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் பணிக்கவில்லை.

427 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும்நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தாம் மறுமைநாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள் என்று கூறினார்கள்.

428 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்த போது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் பனூ அம்ர் பின் அவ்ஃப் என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரி டம் இறங்கிஅவர்களிடையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக தமது) வாட்களைத் தொங்கவிட்ட படி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்கஅபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கபனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன் றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் வாகனம் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது.- தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்று வார்கள்ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள்* – பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். (அவர்கள் வந்த போது)பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம் என்று பதில் (கூறிஅந்தத் தோட்டத்தை) அளித்தனர். நான் உங்களிடம் கூறப்போனவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தனஅதில் இடிபாடுகள் இருந்தனசிலபேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளி வாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும் படி உத்தரவிடஅவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாச-ன் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்.

பள்ளிவாச-ன் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். ரஜ்ஸ் எனும் ஒரு வித யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர்.

இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாதுஆகவே (மறுமையின் நன்மைகளுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர் களாக) இருந்தார்கள்.

பாடம் : 49

ஆட்டுத் தொழுவங்களில் தொழுவது.

429 ஷுஅபா (பின் அல்ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவித்துவந்தார்கள். பின்னர் பள்ளி வாசல் கட்டப்படுவதற்கு முன்னால் நபி(ஸல்) அவர்கள் (அவ்வாறு) ஆட்டுத் தொழுவங் களில் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று (காலவரையறையுடன் சேர்த்துக்) கூறக் கேட்டேன்.

பாடம் : 50

ஒட்டக(த் தொழுவ)ங்களுள்ள இடங்களில் தொழுவது.

430 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்தை நோக்கித் தொழுது விட்டுநபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை நான் கண்டிருக்கிறேன் என்று சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்.

பாடம் : 51

தனக்கு முன்னால் அடுப்போ நெருப்போ அல்லது (பிறரால்) வணங்கப்படும் எதோ ஒன்று இருக்கும் போது அவற்றை (சட்டை செய்யாமல்) ஏகயிறை அல்லாஹ்வை எண்ணித் தொழுவது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் தொழுது கொண்டிருக்கும் போது எனக்கு நரகத்தை எடுத்துக் காட்டப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

431 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சூரிய கிரகணத் தொழுகையை) தொழு(வித்)தார்கள். பிறகு, (இத்தொழுகையில் நான் இருந்த போது) எனக்கு நரகத்தை எடுத்துக்காட்டப்பட்டது. இன்று (நான் கண்டது) போன்று படு (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் ஒரு போதும் கண்டதில்லை என்று சொன்னார்கள்.

பாடம் : 52

அடக்கத்தலங்களில் தொழுவது வெறுக்கப்பட்ட காரியமாகும்.

432 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.

பாடம் : 53

(அக்கிரமம் புரிந்த மக்கள்) பூமிக்குள் புதையுண்ட இடங்களிலும் (பொதுவாக இறைவனின்) வேதனை இறங்கிய இடங்களிலும் தொழுவது.

(நும்ரூதும் அவனுடைய மக்களும் உயிருடன்) புதையுண்ட (இராக்கிலுள்ள) பாபில் எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்கள் தொழுவதை (விரும்பவில்லைஅதை) வெறுத்தார்கள் என்று கூறப்படுகிறது.

433 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ர் வாசிகளைக் குறித்து)இவர்களைத் தீண்டியது போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று (அஞ்சி) அழுதபடியே தவிரவேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லாதீர்கள். உங்களால் அழமுடியா விட்டால் அந்த இடத்திற்கே செல்லாதீர்கள்! என்று (ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது எங்களிடம்) கூறினார்கள்.

பாடம் : 54

கிறிஸ்தவ ஆலயங்களில் தொழலாமா?

உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத் தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம்என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உருவச் சிலைகள் இல்லாத கிறிஸ்தவ ஆலயங்களில் தொழுவார்கள்.

434 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபிசீனிய நாட்டில் தாம் கண்ட மரியா என்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அவர்கள் எத்தகைய மக்கள் எனில்அவர்களிடையே நல்ல அடியார் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டிவிடுவார்கள்அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள் என்று சொன்னார்கள்.

பாடம் : 55

435,436 ஆயிஷா (ரலி)அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து விலக்கிவிடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்கயூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறிஅவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

437 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 56

பூமி முழுவதும் எனக்குத் தொழுமிடமாகவும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் ஆக்கப்பட்டுள்ளது எனும் நபி மொழி.

438 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது:

1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.

2. தரை முழுவதும் சுத்தம் (-தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தயம்மும் செய்து கொள்ளட்டும்😉

3. (முந்தைய இறைத்தூதர்கள் எவருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.

4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.

5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை புரியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 57

பெண்கள் பள்ளிவாச-ல் (தங்கி) உறங்குவது.

439 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கருப்பு நிற அடிமைப்பெண் அரபு களில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமான வளாயிருந்தாள். பின்னர் அவளை அவர்கள் விடுதலை செய்து விட்டனர். ஆயினும் அவர் களுடனேயே அவள் இருந்துவந்தாள். அந்தப் பெண் (தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பின்வருமாறு என்னிடம்) கூறினாள்:

(ஒரு நாள்) அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் (மணமுடித்த புதிதில்) சிவப்புத் தோ-ல் முத்துக்கள் பதிக்கபட்ட அரையணித் தோள் பட்டிகை அணிந்து கொண்டு (குளியலறைக்குப்) புறப்பட்டாள். அப்போது அவள் அதை (ஓர் இடத்தில் கழற்றி) வைத்தாள் அல்லது (எதிர்பாராத விதமாக) அந்தப் பட்டிகை அவளிடமிருந்து (கழன்று) விழுந்து விட கீழே கிடந்த அதைக் கடந்து சென்ற பருந்துக் குஞ்சு ஒன்று அதை இறைச்சி என்று நினைத்துக் கொத்திச் சென்றுவிட்டது. அவர்கள் அதைத் தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்தார் (அதை நான் தான் களவாடியிருப்பேன் என்று) என் மீது குற்றம் சாட்டி (என்னை வதைத்த)னர். (எந்த அளவிற் கென்றால்,) எனது பிறவி உறுப்பில் கூட சோதனையிட்டனர்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களுடன் நின்று கொண்டிருந்த போது பறந்து வந்த அந்தப் பருந்துக் குஞ்சு அந்தப் பட்டிகையைக் (கீழே) போட அவர்களுக்கு மத்தியில் அது விழுந்தது. (உடனே) நான் (அவர்களிடம்)நிரபராதியான என் மீது (திருட்டுக்)குற்றம் சாட்டி, (அதை நான் எடுத்து விட்டதாக)க் கூறினீர்களே அந்தப் பட்டிகை இதோ இங்கு இருக்கிறது என்று சொன்னேன். இதற்குப் பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவினேன்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாச-ல் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம் அல்லது சிறிய குடில் இருந்தது. (அதில் அவள் வசித்துவந்தாள்.)

அந்தப் பெண் என்னிடம் வந்து பேசிக் கொண்டிருப்பாள். அவள் என்னிடம் அமர்ந்திருந்த ஒவ்வோர் அமர்வி(ன்முடிவி)லும் அவள் (பின் வருமாறு) பாடாமல் இருந்ததில்லை:

எம் இறைவனின் விந்தைப் பட்டிய-ல்

அந்த அரையணிப்பட்டிகை நாளும் ஒன்றே!

எனை இறைமறுப்பின் பட்டியிலிருந்து

ஈடேற்றிக் காத்த நாளும் அன்றே!

(இந்நிலையில் ஒரு நாள்) நான் அவளிடம்நீ என்னுடன் அமரும்போதெல்லாம் இதை நீ சொல்லாமல் இருப்பதில்லையே! உனக்கு என்ன நேர்ந்ததுஎன்று கேட்டேன். அப்போது தான் அந்தப் பெண் (மேற்கண்ட) அந்தச் செய்தியை என்னிடம் கூறினாள்.:

பாடம் : 58

பள்ளியில் ஆண்கள் உறங்குவது.

உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) திண்ணையில் (தங்கி) இருந்தனர் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தனர் என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

440 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மணமாகாதகுடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது நபி (ஸல்) அவர் களின் பள்ளிவாசல் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன்.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

441 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்விர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவேஉன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கேஎன்று கேட்கஅதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள்எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ் தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்) என்று கூறினார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம்அவர் எங்கே என்று பாருங்கள்என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்துஅவர் பள்ளிவாச-ல் உறங்கிக் கொண்டிருக்கிறார்அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்த போது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப்படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே எழுந்திருங்கள்மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள்மண்ணின் தந்தையே!! என்று கூறலானார்கள்.

442 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

திண்ணைத் தோழர்களில் எழுபது பேரை நான் பார்த்திருக்கிறúன். அவர்களில் ஒருவருக்குக் கூட மேலங்கி இருந்ததில்லை. (ஒரேயொரு ஆடைதான் அவர்களுக்கு இருந்தது.) ஒன்று அது வேட்டியாக இருக்கும்அல்லது (அது) ஒரு துணியாக (மட்டும்) இருக்கும். அதை அவர்கள் தங்கள் பிடரியில் முடிந்து கொண்டிருப்பார்கள். அதில் சில துணி (பற்றாக் குறையால்) கணைக்கால்களின் பாதியளவே இருக்கும். இன்னும் சில (துணிகள்) கணுக்கால்களை எட்டுமளவிற்கு இருக்கும். அதை அவர்கள் (தொழும் போதும் மற்ற நேரங்களிலும்) தமது கரத்தால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். மறைக்க வேண்டிய தமது உறுப்புக்களை பிறர் பார்த்து விடக் கூடாதே! (அதற்காகத் தான் அவ்வாறு சேர்த்துப் பிடித்தனர்.)

பாடம் : 59

பயணத்திலிருந்து திரும்பியதும் தொழுவது.

நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பியதும் முத-ல் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது வழக்கம் என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

443 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பயணத்தை முடித்துக் கொண்டு) பள்ளி வாச-ல் இருந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), (பயணத்திலிருந்து திரும்பிய நீங்கள்) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள்.

எனக்கு நபி (ஸல்) அவர்கள் தரவேண்டிய கடன் (பாக்கி) ஒன்றும் இருந்தது. அப்போது அவர்கள் அதை எனக்குத் தந்தார்கள்மேலதிகமாகவும் தந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த) முஹாரிப் பின் திஃஸார் (ரஹ்) அவர்கள் முற்பகல் நேரத்தில் (நான் நபிகளாரிடம் சென்றேன்) என்று (ஜாபிர் (ரலி) அவர்கள்) கூறிய தாகவும் குறிப்பிட்டார்கள் என நான் எண்ணுகிறேன்.

பாடம் : 60

பள்ளிவாசலுக்குச் சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழுவீராக.

444 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.

இதை அபூகத்தாதா (ஹர்ஸ் பின் ரிப்ஈ) அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 61

பள்ளி வாச-ல் இருக்கும் போது (உளூவை முறிக்கக் கூடிய) சிறுதுடக்கு ஏற்படுதல்.

445 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 62

மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாச-ன் கட்டுமானம்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது (காலத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளால் (வேயப்பட்டதாக) இருந்தது. உமர் (ரலி) அவர்களே (தமது ஆட்சிக் காலத்தில்) பள்ளிவாசலை (விரி வாக்கிக்) கட்டும்படி உத்தரவிட்டார்கள். (கட்டடப் பணி நடைபெறும் போது) மக்களை மழை நீரிலிருந்து பாதுகாக்கும் விதமாகக் கட்டுவீராக! சிவப்பு வர்ணமோ மஞ்சள் வர்ணமோ தீட்டவேண்டாமென உன்னை நான் எச்சரிக்கிறேன். அதனால் மக்களின் கவனம் திசை திரும்பிவிடக்கூடும் என்று (கட்டடப் பணியாளரிடம்) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு காலம் வரும். அக்காலத்தில்) பள்ளி வாசல்களின் மூலம் மக்கள் பெருமையடித் துக் கொள்வார்கள். (வணக்க வழிபாடுகள் மூலம்) அவற்றை மிகக் குறைவாகவே புழங்குவார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

யூதகிறிஸ்தவர்கள் (தங்கள் ஆலயங்களை) அலங்கரித்தது போன்றே நீங்கள் பள்ளிவாசல்களை அலங்கரிக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதி.

446 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசல் (உடைய சுவர்கள்) செங்கற்கற்களால் கட்டப்பட்டிருந்தனஅதன் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளாலும்அதன் தூண்கள் பேரீச்ச மரங்களாலும் அமைந்திருந்தன.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. என்றாலும் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவு படுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல்பேரீச்சமர ஓலை ஆகியவற்றின் மூலமே அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்போன்றே பேரீச்சமரங் களால் அமைத்தார்கள்.

பின்னர் (ஆட்சிப்பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்தார்கள். அதில் அநேக விஷயங்களை அதிகப்படுத்தினார்கள்.

வேலைப்பாடுகள் பொறிக்கப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள்.

பாடம் : 63

பள்ளிவாசல் கட்டும் பணியில் ஒருவருக் கொருவர் ஒத்துழைப்பது.

(அல்லாஹ் கூறுகின்றான்:)

குஃப்ரின் மீது தாங்களே சாட்சியம் சொல்லிக் கொண்டிருக்கும்இந்த இணை வைப்பாளர்களுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிது களைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லைஅவர்களுடைய (நற்) கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்து விட்டன – அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள்;அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள்மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையைக் கடைபிடித்து ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம்,இத்தகையவர்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள். (9:17,18)

447 (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான)ன இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பஸ்ராவின் ஆளுநராயிருந்த காலகட்டத்தில்) என்னிடமும் தம் புதல்வர் அலீ அவர்களிடமும்நீங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று அவருடைய ஹதீஸைச் செவிமடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் தோட்டத்தில் (நீர்பாய்ச்சி) அதை பராமரித்துக் கொண்டிருந்தார்கள். (அவர்கள் எங்களைக் கண்ட) உடன் தமது மேலாடையை எடுத்துப் போர்த்திக் கொண்ட பின் (பலஹதீஸ் களை) எங்களுக்குக் கூறத் தொடங்கினார்கள். கடைசியாக மஸ்ஜிதுந் நபவீ கட்டியது பற்றிய பேச்சுக்கு வந்த போது (பின்வருமாறு) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) செங்கற்களை ஒவ்வொன்றாக சுமந்து எடுத்துக் கொண்டு சென்றோம்.. அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற்களாக சுமந்த வண்ணமிருந்தார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (அவரது தலையில் படிந்திருந்த) புழுதியைத் தட்டிவிட்டுபாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள். அம்மார்அவர்களை சொர்க்கத்தி(ற்கு காரணமான தலைமைக்கு கட்டுப்படுவத)ன் பக்கம் அழைக்கஅந்தக் கூட்டத்தாரோ அவரை நரகத்தி(ற்குக் காரணமாக அமையும் நல்ல தலைமைக்கு எதிராகச் செயல் படுவத)ன் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள். (இதைக் கேட்ட உடன்) அம்மார் (ரலி) அவர்கள்,அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று சொன்னார்கள்.

பாடம் : 64

சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள் மற்றும் (தொழிற்) கலைஞர்களின் உதவியை நாடுதல்.

448 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (அன்சாரிப்) பெண்ணிடம் ஆளனுப்பிநான் மக்களுக்கு உரையாற்றும் போது அமர்ந்து கொள்வதற்கு (ஏற்றவகையில் மேடை தயாரிக்க) எனக்கு மரச்சட்டங்களை செய்து தருமாறு தச்சு வேலை தெரிந்த உன் அடிமையைப் பணிப்பா யாக! என்று கூறினார்கள்.

449 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (அன்சாரிப்) பெண்மணிஅல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஓர் அடிமை இருக்கிறார்நீங்கள் அமர்ந்து கொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்கு செய்து தரலாமாஎன்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)என்று கூறஅப்பெண்மணி சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்றை செய்(து கொடுத்)தார்.

பாடம் : 65

பள்ளி வாசல் கட்டியவர் (அடையப் பெறும் வெகுமதிகள்).

450 உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (நபியவர்களின்காலத்திலிருந்த அமைப்பை மாற்றி விரிவுபடுத்திக்) கட்டத் திட்டமிட்ட போது அது குறித்து மக்கள் (ஆட்சேபனை) கூறினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்) நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கிவிட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் அல்அஷஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஆஸிம் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி (யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ) என்று (நபியவர்கள்) கூறியதாகவே நான் கருதுகிறேன்.

பாடம் : 66

பள்ளியினுள் செல்லும் போது (கையில் அம்புகளை வைத்திருப்பவர்) அம்பின் முனைப் பகுதியை பிடித்துக் கொள்ள வேண்டும்.

451 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றின் முனைகளைப் பிடித்துக் கொள்! என்று சொன்னார்கள்.

பாடம் : 67

(அம்பின் முனையைப் பிடித்துக் கொண்டு) பள்ளிவாசலைக் கடந்து செல்லலாம்.

452 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அம்புடன் நமது பள்ளி வாசல்களிலோ நமது கடைவீதிகளிலோ நடந்து செல்பவர் அதன் முனையைப் பிடித்துக் கொள்ளட்டும்தமது கையால் எந்த முஸ்-மையும் அவர் காயப்படுத்திவிட வேண்டாம்..

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 68

பள்ளிவாச-ல் கவிபாடுதல்.

453 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பள்ளிவாசலுக்குள் கவிபாடுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டித்த போது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம்அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள்ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் (ஆகிய என்) சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ் (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் மூலம்) துணைபுரிவாயாக! என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களாஎன்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள்ஆம் (செவியுற்றிருக்கிறேன்) என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 69

பள்ளிவாச-ல் ஈட்டி வீரர்கள் (வீர விளையாட்டுகளில் ஈடுபடுவது).

454 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாச-ல் நின்று கொண்டி ருப்பதையும் அப்போது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் (வீர விளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருப்பதையும் நான் பார்வையிட்டேன். அவர்களின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் (மற்றவர்கள் என்னைப் பார்க்காத வகையில்) மறைத்துக் கொண்டிருந்தார்கள்.

455 இப்ராஹீம் பின் முன்திர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில்அபிசீனியர்கள் தமது ஈட்டிகளால் (வீரவிளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களை (இவ்வாறு நிற்பதைக்) கண்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

பாடம் : 70

பள்ளிவாச-ல் உள்ள சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி விற்பது வாங்குவது பற்றிப் பேசுவது.

456 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப்பெண்) பரீராதனது விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக உதவி கோரியபடி) என்னிடம் வந்தார். நான்நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத் தொகையும்) நான் செலுத்திவிடு கிறேன். ஆனால்உன் வாரிசுரிமை எனக்கே உரியதாகிவிட வேண்டும் என்று கூறினேன். ஆனால் பரீராவின் எஜமானர்கள் என்னிடம்,நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டிய பாக்கித் தொகையைத் தந்து (பரீராவை விடுதலை செய்து) கொள்ளலாம் என்று கூறினார்கள்.

– (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கையில் நீங்கள் விரும்பினால் அவரை விடுதலை செய்து கொள்ளலாம். ஆனால், (பரீராவின்) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாகி விடவேண்டும். என (பரீராவின் எஜமானர்கள் நிபந்தனையிட்டுக்) கூறியதாகச் சொன்னார்கள்.-

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்த போது நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள்அவரை வாங்கி விடுதலை செய்து விடு! ஏனெனில் வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-லுள்ள) சொற்பொழிவு மேடை மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்:)மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்து விட்டதுஇறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! எவர் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லைஅவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே என்று குறிப்பிட்டார்கள்.

இன்னும் மூன்று அறிவிப்பாளர்தொடர் வழியாக இந்த ஹதீஸ் வந்துள்ளது.

மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் சொற்பொழிவு மேடை மீது நபி (ஸல்) அவர்கள் ஏறியதுபற்றியக் குறிப்பு இல்லை.

பாடம் : 71

(பள்ளி வாசலுக்குள் கடனாளியிடம்) கடனைக் கேட்பதும்அதைத் திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்துவதும்.

457 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்லாஹ்வின் தூதர் ளஸல்ன அவர் களின் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு குரல்கள் உயர்ந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கிகஅப்! என்றழைத்தார்கள். நான்இதோ வந்து விட்டேன்அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து தள்ளுபடி செய்து விடு!என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன்அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) எழுந்து சென்று கடனை அடைப்பீராக! என்று சொன்னார்கள்.

பாடம் : 72

பள்ளிவாசலைப் பெருக்குவதும் துண்டுத் துணிகள்குப்பைகுச்சிகள் (கிடந்தால் அவற்றைப்) பொறுக்கியெடுத்து (அப்புறப்படுத்தி)விடுவதும்.

458 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுப்பு ஆண் அல்லது ஒரு கறுப்புப் பெண் இறந்து விட்டார். (அவர் இறந்த செய்தி நபி ளஸல்னஅவர்களுக்குத் தெரியாமலிருந்தது.) ஆகவே அவரைப் பற்றி (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள்அவர் இறந்து விட்டார் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள்அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதாஅவருடைய அடக்கத்தலத்தை அல்லது அந்தப் பெண்மணியின்அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக பிரார்த்தனைத் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.

பாடம் : 73

மதுபானங்கள் விற்பது விலக்கப்பட்டது (ஹராம்) என்று பள்ளிவாசலில் அறிவிப்பது.

459 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாத்தின் (இறுதி) வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலுக்கு புறப்பட்டு வந்து அவற்றை மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

பாடம் : 74

பள்ளிவாசலுக்கென சேவகர்கள் இருப்பது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நேர்ந்து கொள்கிறேன் எனும் (3:35 ஆவது) வசனத்தி(ற்கு விளக்கம ளிக்கையி)ல் இந்த மஸ்ஜிது (ல் அக்ஸா பள்ளிவாலு)க்கு சேவகம் செய்வதற்காக (நேர்ந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள்.

460 அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை ஒரு ஆண் அல்லது ஒரு பெண் பெருக்குபவராக இருந்தார். என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். – ஒரு பெண்மணி என்று அவர்கள் கூறியதாகவே நான் கருது கிறேன்.- பிறகு அவரது அடக்கத்தலத்தில் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைத் தொழுகை தொழுதது பற்றிய (மேற்கண்ட 458 ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.

பாடம் : 75

கைதிகளையும் குற்றவாளிகளையும் பள்ளிவாசலில் கட்டிவைப்பது.

461 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள்நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோஅல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காதே ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.

ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஆகவேஅதை நான் இழிந்த நிலையில் விரட்டி அடித்து விட்டேன் என்றும் இடம்பெற்றுள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 76

இஸ்லாத்தைத் தழுவும் போது குளிப்பதும்பள்ளிவாச-ல் கைதியைக் கட்டிவைப்பதும்.

(கூஃபாவின் நீதிபதியாயிருந்த) ஷுரைஹ் பின் ஹர்ஸ் அல்கிந்தீ (ரஹ்) அவர்கள்குற்றவாளியைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிவைக்குமாறு ஆணையிடுவார்கள்.

462 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (யமாமா வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்த (நாட்களில் முன்றாம் நாளின்) போதுஸுமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த ளஅபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானன பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளிவாசலுக்குள் வந்து அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும்முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன்என்றார்.

பாடம் : 77

நோயாளிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பள்ளிவாச-ல் கூடாரம் அமைப்பது.

463 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் நாடி நரம்பில் (ஹிப்பான் பின் அரிஃகா என்பவனால்) தாக்குண்டார்கள். அப்போது அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாச-லேயே (அவருக்காக) கூடாரமொன்றை அமைத்தார்கள். (அவருடைய கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் இட்டிருந்த பனூ கிஃபார் குலத்தாரை நோக்கி வழிந்தோடிய சஅத் (ரலி) அவர்களின் இரத்தம் அவர்களை திடுக்கிடச் செய்து விட்டது. அப்போது மக்கள்கூடாரவாசிகளே! உங்கள் பகுதியிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதேஇது என்னஎன்று கேட்டுக் கொண்டேஅங்கே பார்த்த போதுதமது காயத்திலிருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அ(ந்த நோயிலேயே அல்லது அந்த கூடாரத்) திலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள்.

பாடம் : 78

தேவை நிமித்தம் ஒட்டகத்தை பள்ளிவாசலுக்குள் கொண்டுவருவது.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது (அமர்ந்தபடி இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

464 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நோயுற்றுள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள்மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக!என்று சொன்னார்கள். அவ்வாறே நான்சுற்றி வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.

பாடம் : 79

465 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் கப்பிய ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்துசென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது,அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றறொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.

பாடம் : 80

பள்ளிவாச-ல் நுழைவாயில் அமைப்பதும் நடைபாதை ஏற்படுத்துவதும்.

466 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில்தூயோன் அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமி ருப்பது – இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி சுயாதிகாரம் அளித்தான். அ(ந்த அடியாரான)வர்அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) உடன்அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளேஅல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது – ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளித்த போது அ(ந்த அடியாரன)வர்அல்லாஹ் விடமிருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழவேண்டும்.என்று வினவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் அந்த (சுயாதிகாரம் அளிக்கப்பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள். (ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள்என்று கூறிவிட்டு தன் நட்பிலும் தனது செல்வத்தி லும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபுபக்ரேயாவார். (என் இறைவனல்லாத வேறு) ஒருவரை சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களேயே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதைவிடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாச-ல் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்கவேண்டாம்அபூபக்ரின் வாசலைத் தவிர என்று சொன்னார்கள்.

467 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகுதன் நட்பிலும்தனது செல்வத்திலும் எனக்கு அபூபக்ரைவிட வேறெவரும் பேருதவி புரிந்தவர் கிடையாது. (இறைவனைத் தவிர) மக்களில் ஒருவரை நான் (என்) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதைவிட) இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்ததாகும்என்று கூறி விட்டுஇந்தப் பள்ளிவாச-ல் என்னிடம் வருவதற்காக உள்ள எல்லா நுழைவாயில் (சுவர்ப்புழை) களையும் அடைத்து விடுங்கள்அபூபக்ரின் நுழைவாயிலைத் தவிர என்று கூறினார்கள்.

பாடம் : 81

கஅபாவுக்கும் இதர இறையாலயங்களுக்கும் கதவுகள் பூட்டுகள் அமைத்தல்.

இப்னு ஜுரைஜ் (அப்துல் ம-க் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் இப்னு அபீ முலைக்கா ஸுபைர் பின் அப்தில்லாஹ் அத்தைமீ (ரஹ்) அவர்கள்இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களது பள்ளிவாசல்களையும் அவற்றின் கதவுகளையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே! (அவற்றின் தூய்மையையும் உறுதியையும் கண்டு வியந்து போயிருப்பீர்கள்) என்றார்கள்.

468 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவிற்கு வந்த போது உஸ்மான் பின் தல்ஹா அவர்களை வரச் சொன்னார்கள். அவர் (வந்து) இறையில்லம் கஅபாவின் கதவைத் திறந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களும்பிலால்உசாமா பின் ஸைத்உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டனர். அதில் சிறிது நேரம் இருந்து விட்டு பிறகு அனைவரும் வெளியே வந்தனர். நான் விரைந்து வந்து பிலால் (ரலி) அவர்களிடம்ள நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களாஎன்றுன கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், (ஆம்) அதனுள் தொழுதார்கள் என்று பதிலளித்தார்கள். எ(ந்தப் பகு)தியில் தொழுதார்கள்என்று கேட்தற்கு இரண்டு தூண்களுக்கிடையே என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள் என்று கேட்காமல் போய்விட்டேன்.

பாடம் : 82

இணைவைப்பாளர் பள்ளிவாச-ல் நுழைவது.

469 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப்படைப் பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் கட்டி வைத்தனர்.

பாடம் : 83

பள்ளிவாச-ல் உரத்த குரலில் (வீண்பேச்சு) பேசுவது.

470 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் நின்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என் மீது பொடிக் கல்லை வீசினார். நான் (திரும்பிப்) பார்த்த போது அங்கே (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நீர் சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள். அவ்வாறே நான் அவ்விருவருடனும் உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் (அவ்விருவரிடமும்)நீங்கள் யார்அல்லது நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும்நாங்கள் தாயிஃப்வாசிகள் என்று பதிலளித் தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், (நல்ல வேளை! நீங்கள் வெளியூர்க்காரர் களாய்ப் போய் விட்டீர்கள்) நீங்கள் இந்த (மதீனா) நகரைச் சேர்ந்தவர்களாயிருந்திருந்தால் நிச்சய மாக நான் உங்கள் இருவரையும் (சவுக்கால்) நையப் புடைந்திருப்பேன்; (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதரது பள்ளி வாச-ல் நீங்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று சொன்னார்கள்.

471 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தரவேண்டியிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக) தமது அறையின் திரையை விலக்கிகஅப் பின் மாலிக்! கஅப்! என்று அழைத்தார்கள். உடனே நான்இதோ வந்து விட்டேன்அல்லாஹ்வின் தூதரே! என்றேன். அப்போது அவர்கள் உன் கடனிலிருந்து பாதியைத் தள்ளுபடி செய்வீராக என்று சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன்அல்லாஹ்வின் தூதரே! என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத்தை நோக்கி)எழுந்து சென்று கடனைச் செலுத்துங்கள் என்றார்கள்.

பாடம் : 84

பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்.

472 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்து கொண்டிருக்கும் போது ஒரு மனிதர்இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகின் றீர்கள்என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். (அதன் நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (கடைசியில்) ஒரு ரக்அத் தொழுது கொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள்உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள் ளுங்கள்;ஏனெனில்நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே பணித்தார்கள் என்று கூறுவார்கள்.

473 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளியில் அமர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு) உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்துஇரவுத் தொழுகை எவ்வாறு (தொழவேண்டும்)என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழவேண்டும்சுப்ஹுத் தொழுகையை (அதன் நேரம் நுழைந்து விட்டது பற்றி) நீங்கள் அஞ்சினால் (கடைசியில்) ஒற்றையான ஒரு ரக்அத் தொழுது கொள்வீர்களாக! நீங்கள் தொழுது முடித்தவற்றை அது ஒற்றையாக அக்கிவிடும் என்றார்கள்.

474 அபூவாக்கித் அல்ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் (மக்களுடன்) இருந்து கொண்டிருந்த போது மூன்று பேர் (அவர்களை நோக்கி) வந்தனர். (அவர்களில்) இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். பிறகு அவ்விருவரில் ஒருவரோ (வட்டமாக அமர்ந்திருந்த அந்த அவையில்) ஓர் இடைவெளியிலிருப்பதைக் கண்டு அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ (வெட்கப்பட்டுக் கொண்டு) அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். மூன்றாமவரோ திரும்பிச் சென்றுவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

(சற்று முன்னர் வந்த) அந்த மூன்று பேரைப் பற்றி உங்களுக்கு நான் சொல் லட்டுமா?

அவர்களில் ஒருவரோஅல்லாஹ்வின் (அருளின்) அளவில் ஒதுங்கினார்அல்லாஹ் வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றொருவரோ வெட்கப்பட்டு (அவையின் கடைக் கோடியில் உட்கார்ந்து) கொண்டார். எனவே அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (கருணைக் கண் காட்ட) வெட்கப்பட்டான்.

மூன்றாமவரோ (காரணமின்றி கல்வி அவையை) அலட்சியப்படுத்தினார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியம் செய்து விட்டான்.

பாடம் : 85

பள்ளிவாசலில் (ஓய்வெடுக்கும் போது) மல்லாந்து படுப்பதும் கால்களை நீட்டுவதும்.

475 அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் ஒரு கா-ன் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு (கீழாடை விலகாதவாறு) மல்லாந்து படுத்து (ஓய்வெடுத்துக்) கொண்டிருந்ததை நான் கண்டேன்.

சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

உமர் (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தார்கள்.

பாடம் : 86

மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதையில் பள்ளிவாசல் அமையவேண்டும்.

இதுவே ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்)அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்)மாலிக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.

476 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 என் பெற்றோர் (அபூபக்ர்-உம்முரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பக-ன் இரு பக்ககங்ளான காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ (யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது இனைவைப்பாளர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவர்களைச் சூழ்ந்து (வேடிக்கை பார்த்துக் கொண்டு) நிற்பர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களது மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம் இணைவைப்பாளர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது.

பாடம் : 87

கடைத்தெருவிலுள்ள பள்ளிவாச-ல் தொழுவது.

கதவு மூடப்படும் ஒரு வீட்டுக்குள் அமைந்திருந்த பள்ளிவாச-ல் இப்னுஅவ்ன் (ரலி) அவர்கள் தொழுதார்கள்.

477 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிட வும்தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவதுமதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில்உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்துஅதை செம்மையாகச் செய்து,தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளி வாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்;ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாச-ல் இருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள்இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.

பாடம் : 88

பள்ளிவாசல் முத-யவற்றில் இரு கைவிரல்களை (ஒன்றுடனொன்றை) கோத்துக் கொள்வது (குற்றமன்று).

478,479 இப்னு உமர் அல்லது இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோத்துக் காட்டினார்கள்.

480 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி ளஸல்ன அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோத்துக் காட்டி) அப்துல்லாஹ் பின் அம்ரே! மக்களில் மகா மட்டமானவர் களுடன் இப்படி நீ வாழநேர்ந்தால் உனது நிலை எப்படியிருக்கும்?என்று கேட்டார்கள்.

481 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக் கொருவர் (துணைநிற்கும் விஷயத் தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும் போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

482 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலைத் தொழுகை களில் ஒன்றை (லுஹ்ர்/அஸ்ர்) தொழுவித்தார்கள். – (இதன் அறிவிப்பாளரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தத் தொழுகையின் பெயரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் நான் அதை மறந்து விட்டேன்.- (நான்கு ரக்அத்துடைய அத்தொழுகையில்) எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுவித்து விட்டு சலாம் கொடுத்து விட்டார்கள். உடனே எழுந்து பள்ளிக்குள் அகலவாட்டில் போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை நோக்கிச் சென்று ஏதோ கோபத்திலிருப்பவர்போன்று அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலக் கரத்தை இடக் கரத்தின் மீது வைத்துகைவிரல்களை பின்னிக் கோத்துக் கொண்டார்கள். மேலும் தமது வலக் கன்னத்தை இடது புறங்கையின் மீது வைத்துக் கொண்டார்கள். அவசரமாகச் செல்பவர்கள் பள்ளியின் வாயில்கள் வழியாக வெளியேறிய போது தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது (போலும்) என்று கூறினர். அந்தக் கூட்டத்தில் அபூபக்ர் (ரலி)உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். ஆனால் (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் பேச அவர்களிருவர் (மரியாதை கலந்த) பயத்தில் இருந்தனர். அந்தக் கூட்டத்திலேயே நீளமான இருகைகளுடைய ஒரு மனிதர் இருந்தார். அவர் துல்யதைன் (இரு கையாளர்) என்று அழைக்கப்படு வார். அவர்நீங்கள் மறந்து விட்டீர்களாஅல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா,அல்லாஹ்வின் தூதரேஎன்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்நான் மறக்கவுமில்லை; (தொழுகை) சுருக்கப்படவுமில்லை என்று கூறிவிட்டு (மக்களைப் பார்த்து)துல்யதைன் சொல்வது சரிதானாஎன்று கேட்கமக்கள் ஆம் (சரிதான்) என்று பதிலளித்தனர்.

உடனே (தொழுமிடத்தை நோக்கி) முன்னேறிச் சென்று விடுபட்டதைத் தொழுது சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (அல்லாஹு அக்பர் என்று) சொல்லி (வழக்கமாக) தாம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வது போன்று அல்லது அதைவிட நெடிய (நேரம்) சஜ்தா செய்தார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தித் தக்பீர் சொன்னார்கள். பின்னர் தக்பீர் சொல்லி (வழக்கமாகத்) தாம் செய்யும் சஜ்தாவைப் போன்று அல்லது அதைவிட நெடிய (நேரம்) (மறதிக்குரிய) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தியவாறு தக்பீர் சொன்னார்கள்.

மக்கள் சில சந்தர்ப்பங்களில் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், (கடைசியாக நபி -ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள் என்று (அபூஹுரைரா தமது அறிவிப்பில்) கூறினார்களாஎன்று கேட்பார்கள். அதற்கு முஹம்மத்

பின் சீரீன் (ரஹ்) அவர்கள்இம்ரான் பின் ஹுஸைன் அவர்களிடமிருந்து எமக் கெட்டிய ஹதீஸில்தான் (மறதிக்குரிய சஜ்தா செய்த) பின்னர் நபியவர்கள் சலாம் கொடுத்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது. (அபூஹுரைராவின் அறிவிப்பில் அவ்வாறு இல்லை) என்று பதிலளிப்பார்கள்.

பாடம் : 89

(மக்காவிலிருந்து) மதீனாவின் சாலைகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு இடங்களும்.

483 மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் சாலையோரத்தில் அமைந்த சில இடங் களைத் தேடிப்பிடித்து அங்கே தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும் தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர்-ரலி) அவர்கள் அந்த இடங்களில் தொழுதுவந்ததாகவும் அவ்விடங்களில் நபி (ஸல்) அவர்கள் தொழுததை தம் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுவார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்விடங்களில் தொழுது வந்ததாக நாஃபிஉ (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறியுள்ளார்கள். சாலிம் (ரஹ்) அவர்களிடம் நான் இது பற்றிக் கேட்ட போது ளஅப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதன அனைத்து இடங்களைப் பற்றி நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள். என்றாலும் (மதீனாவிலிருந்து இரண்டு நாள் தொலை தூரத்திலிருந்த) ஷரஃபுர் ரவ்ஹாஎனும் சிற்றூரில் அமைந்த பள்ளிவாசல் விஷயத்தில் இருவரும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர்.

484 (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக (மக்கா செல்லும் போது) துல்ஹுலைஃபாஎனும் இடத்தில் அமைந்துள்ள கருவேல மரமொன்றிற்குக் கீழே துல்ஹுலைஃபா பள்ளிவாசல் (இன்று) அமைந்துள்ள இடத்தில் இறங்கி இளைப்பாறுவார்கள். தமது (விடைபெறும்ஹஜ்ஜிற்காகச் சென்றபோதும் (இங்கு) இறங்கி இளைப்பாறினார்கள்.

அறப்போரோ அல்லது ஹஜ்ஜோ உம்ராவோ செய்து விட்டு அந்தப் பாதையில் திரும்பி வ(ர நேர்)ந்தால் பத்னுல்வாதீ (அகீக்) பள்ளத்தாக்கு வழியாக இறங்குவார்கள். பத்னுல் வாதீ பள்ளத் தாக்கைத் தாண்டியதும் அதன் கரையிலுள்ள கிழக்கு பத்ஹாவில் தமது ஒட்டகத்தைப்படுக்க வைத்து அதிகாலையாகும் வரை ஒய்வெடுப்பார்கள்.

அந்த இடம்கற்களாலான இந்தப் பள்ளிவாச-ன் அருகிலுமில்லைபள்ளிவாசல் அமைந்துள்ள மேட்டிலுமில்லை.

அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அதன் அருகில் அப்துல்லாஹ் பின் உமர்

(ரலி) அவர்கள் தொழுவார்கள். அதன் நடுவே மணற்குவியல் இருந்தது. அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) பத்ஹாவிலுள்ள அந்த இடத்தில் வெள்ளம் புகுந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதுவந்த அந்த இடத்தை புதையுண்டுவிடச் செய்து விட்டது.

485 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷரஃபுர் ரவ்ஹா எனும் சிற்றூரில் உள்ள பெரிய பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள சின்னப் பள்ளி வாசல் அமைந்திருக்கும் இடத்தில் தொழுதி ருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறிவிட்டு அந்த இடத்தின் அடையாளம் பற்றிக் கூறுகையில், (நீ மதினாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில் பாதையின் வலப் பக்கம் அமைந்த பள்ளியில் (கிப்லாநோக்கி) நீ தொழுது கொண்டிருக்கும் போது அந்த இடம் உனது வலப் பக்கத்தில் இருக்கும். (நபி ளஸல்ன அவர்கள் தொழுத) அந்த இடத்திற்கும் அந்தப் பெரிய பள்ளிவாசலுக்கும் இடையே கல்லெறியும் தூரம்தான் உள்ளது என்றோ அல்லது இதே கருத்திலமைந்த வேறொரு வார்த்தையோ குறிப்பிட்டார்கள்.

486 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இரக் (இரக்குல் ழப்யா எனும் பள்ளத்தாக்கு அமைந்துள்ள) பகுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவார்கள். அந்த இரக் பள்ளத்தாக்கின் எல்லை நீ (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில்ரவ்ஹா கிராமத்தின் எல்லைக்கும் அங்குள்ள பள்ளிவாசலுக்கும் மத்தியில் அமைந்துள்ள சாலையில் முடிவடைகிறது. (அந்த இரக் பள்ளத்தாக்கில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள்.)

அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பள்ளிவாச-ல் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவதில்லை. தமது இடப் புறத்தில் தமக்குப் பின்னால் அந்தப் பள்ளிவாசல் இருக்கும் விதத்தில் அந்தப் பள்ளியைவிட (சற்று) முன்னால் நின்று கொண்டு அந்த இரக் பள்ளத்தாக்கை நோக்கிய வாறு அவர்கள் தொழுவார்கள். ரவ்ஹா எனும் கிராமத்திலிருந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்குப்) புறப்பட்டுச் செல்லும் போது (இரக் எனும்) அந்த இடத்தைச் சென்றடையும் முன் அவர்கள் லுஹ்ர் தொழுகையைத் தொழ மாட்டார்கள். இரக்வந்ததும்) அங்குதான் லுஹ்ர் தொழுவார்கள். மக்காவிலிருந்து (மதீனாவிற்குத்) திரும்பி வரும் போது சுப்ஹு நேரத்திற்கு சற்று முன்னர் அல்லது சஹர் நேரத்தின் கடைசிப் பகுதியில் அந்த (இரக் எனும்) இடத்தைக் கடக்க நேரிட்டால் அங்கேயே சற்று நேரம் ஓய்வெடுப் பார்கள். (நேரம் வந்ததும்) அந்த இடத்தில் சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

487 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்கா செல்லும்) சாலையின் எதிர்த் திசையில் வலப் புறம் அமைந்துள்ள ருவைஸா எனும் சிற்றூருக்கு சற்று அருகில் உள்ள ஒரு பெரிய மரத்தினடியில் இறங்கித் தங்குவார்கள். அந்த இடம் விசாலமானதாகவும் பள்ளமான தாகவும் இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் தங்கிய அந்த இடம் அவ்வூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. அந்த மரத்தின் மேற்கொப்புகள் முறிந்து அதன் மையப்பகுதிக்குள் மடங்கிக் கிடந்தன. அதன் அடிமரம் நின்று கொண் டிருந்ததுஅந்த அடி மரத்தில் மணல் மிகுதியாக விந்து கிடந்தது.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

488 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நீ (மதீனாவிலிருந்து) ஹல்பா செல்லும் வழியில் அர்ஜ் எனும் சிற்றூருக்குப் பின்புறத்திலுள்ள நீரோடையின் ஓரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அந்தத் தொழுமிடத்திற்கு அருகில் இரண்டோ மூன்றோ சவக்குழிகள் இருந்தன. அக்குழிகள் மீது பெரும் கற்கள் இருந்தன. அந்தப் பள்ளிவாசல் சாலையின் வலப் புறம் அமைந்தி ருந்தது. அந்தச் சாலைக்கு கிளைச் சாலைகளும் இருந்தன என்று அப்துல்லாஹ் (ரலி) என்னிடம் கூறினார்கள். அந்த கிளைச் சாலைகளின் நடுவே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நடந்து அர்ஜ் எனும் சிற்றூருக்குள் நுழைந்து (ஓடைக் கரையில் அமைந்துள்ள) அந்தப் பள்ளிவாச-ல் நண்பக-ல் சூரியன் உச்சி சாய்ந்ததும் லுஹ்ர் தொழுவார்கள்.

489 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கும் ஷாமுக்கும் இடையே உள்ள) ஹர்ஷா எனும் மலைக்கு அருகில் (ஷாம் செல்லும்) சாலையின் இடப் புறம் அமைந்த சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கின் அருகிலுள்ள மரங்களுக்குக் கீழே இறங்கித் தங்கினார்கள். அந்த சிற்றாறு ஹர்ஷாஎனும் மலையின் அடிவாரத்தை ஒட்டிச் செல்கிறது. ளநபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடத்திற்கும் சாலைக்கும் மத்தியில் கிட்டத்தட்ட அம்பெய்தால் சென்றடையும் தொலைவே இருந்தது. சாலைக்கு மிக அருகிலும்அங்கிருந்த மரங்களில் மிக நெடியதுமான ஒரு மரத்திற்குப் பக்கத்தில் தொழுவது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் வழக்கம்.

490 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 மர்ருழ் ழஹ்ரான் எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள நீர் அரித்தோடிய மலையிடுக்கில் நபி (ஸல்) அவர்கள் தங்கி இளைப்பாறுவார்கள். அந்த மலையிடுக்கு (மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது (மர்ருழ்ழஹ்ரான் தாண்டியதும்) ஸஃப்ராவாத் எனும் இடத்தைக் கடந்ததும். சாலையின் இடப்புறம் அமைந்துள்ளது. ளநபி (ஸல்) அவர்கள் தங்கி இளைப்பாறியன அந்த இடத்திற்கும் சாலைக்கும் இடையே ஒரு கல்லெறியும் தொலைவே உண்டு என அப்துல்லாஹ் பின் உமர்

(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

491 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் போது தூத்துவா என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு அங்கேயே காலையில் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம் அங்குள்ள கெட்டி யான மேட்டின் மீது அமைந்துள்ளது. அங்கு (தற்போது) பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் ளநபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடமன்று;அந்தப் பள்ளிக்கு கீழ்ப் புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடே ளநபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடமாகும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்டம் கூறினார்கள்.

492 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மலைக் கணவாயை முன்னோக்கி (நின்று இறைவனை வணங்கி)னார்கள். அந்த இடத்திற்கும் உயரமான அந்த மலைக்கம் இடையே கஅபாவின் திசை அமைந்திருந்தது. எனவேநான் (அந்த இடத்தில் தொழும் போது) அங்கு தற்போது கட்டப்பட்டுள்ள பள்ளிவாச-ன் இடப் பக்கத்தை அந்த மேட்டின் ஒரு பகுதியில் வரும்படி செய்தேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம்அதைவிடக் கீழே ஒரு கறுப்பு மேட்டின் மீதே அமைந்திருந்தது. ளநபி (ஸல்) அவர்கள் தொழுத அதே இடத்தில் நீ தொழ நினைத்தால் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ளன அந்த மேட்டிலிருந்து பத்து முழம் அல்லது அதைப் போன்றதை விட்டுவிட்டுஉனக்கும் கஅபாவிற்கும் இடையே அமைந்துள்ள அந்த மலைக் கணவாயை முன்னோக்கித் தொழு! என்று கூறினார்கள். இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிகிறார்கள்.

(குறிப்பு: இந்தப் பாடத்தில் உள்ள பத்து ஹதீஸ்களையும் சில பேர் ஒரு ஹதீஸாகக் கணக்கிட்டுள்ளதால் ஸஹீஹுல் புகாரியின் எண்களில் வித்தியாசம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்!)

பாடம் : 90

(கூட்டுத் தொழுகையின் போது) இமாம் வைத்துக் கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னாலிருப்போருக்கும் போதுமானதாகும்.

493 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்தவெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதை ஒன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன்- (தொழுது கொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்க வில்லை

494 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரு நாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காக தொழுகைத் திடல் நோக்கிப்) புறப்படும் போது ஈட்டியை எடுத்துவருமாறு (தம் ஊழியரைப்) பணிப்பார்கள். (தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளியில்) மக்களுக்கு முன்னால் அந்த ஈட்டியை (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் (குறுக்குச் சுவரில்லாத திறந்தவெளியில் தொழநேர்ந்தால்) இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள்.- இதனால்தான் (நம்) தலைவர்களும் ஈட்டியை (பெரு நாள் முத-யவற்றில் முன்னால் கொணரும் வழக்கத்தை) ஏற்படுத்திக் கொண்டனர்.

495 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (புறநகர் மக்காவிலுள்ள) பத்ஹா எனுமிடத்தில் எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண்போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்களும் கழுதைகளும் நடந்து சென்றனர்.

பாடம் : 91

தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடைவெளி இருக்க வேண்டும்?

496 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ நிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாச-ன் கிப்லாத்திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஆடு ஒன்று நடமாடும் அளவுக்கு இடைவெளி இருந்தது.

497 சலமா பின் அக்வாஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் மிம்பர் (-மேடை) பக்கமிருந்த சுவரின் இடைவெளியில் ஓர் ஆடு கடந்து செல்லமுடியும்.

பாடம் : 92

(தொழுபவர் தமக்கு முன் தடுப்பாக நட்டுவைக்கப்பட்டுள்ள) ஈட்டியை நோக்கித் தொழுவது.

498 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்(கள் திறந்த வெளியில் தொழும் போது அவர்)களுக்காக ஈட்டியை (பூமியில்) நட்டுவைக்கப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.

பாடம் : 93

கைத்தடியை (தடுப்பாக்கி அதை) நோக்கித் தொழுவது.

499 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நண்பகல் வேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது உளூ (அங்கசுத்தி) செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அவர்கள் உளூ செய்து விட்டு எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து- ஜம்உசெய்து) தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. பெண்மணிகள்கழுதைகள் அந்த கைத்தடிக்கு அப்பால் சென்று கொண்டிருந்தனர்.

500 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் எங்களுடன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியும் தண்ணீர் நிரம்பிய தோல்ப்பையும் இருக்கஅவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். அவர்கள் தமது தேவையை முடித்துக் கொண்டதும் நாங்கள் அவர்களிடம் அந்தத் தண்ணீர்பையைக் கொடுப்போம்.

பாடம் : 94

மக்கா உட்பட எல்லா இடங்களிலும் (திறந்தவெளியில் தொழும் போது) தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

501 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் புறப்பட்டுவந்து (புறநகர் மக்காவிலுள்ள) பத்ஹா எனுமிடத்தில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) இரண்டிரண்டு ரக்அத்களாக (எங்களுக்குத்) தொழுவித்தார்கள். தமக்கு முன்னால் கைத்தடி ஒன்றை (தடுப்பாக) நட்டுவைத்தார்கள். (தொழுகைக்காக) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்த போது அவர்கள் அங்க சுத்தி செய்த தண்ணீரில் எஞ்சியதை மக்கள் (தம் மேனியில்) தடவிக் கொண்டார்கள்.

பாடம் : 95

தூண்களை நோக்கித் தொழுவது.

(பள்ளிவாச-ல் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களைவிட தொழுபவர்களே அத(னைத் தடுப்பாக வைத்துத் தொழுவ)தற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுது கொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்ட போது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்திஇதை நோக்கித் தொழுவீராக! என்று கூறினார்கள்.

502 யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூமுஸ்லிம் சலமா பின் அக்வஉ (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ பள்ளிக்கு) செல்வது வழக்கம். சலமா (ரலி) அவர்கள் குர்ஆன் (வைக்கப்படும் இடத்திற்கு) அருகிலுள்ள தூணருகேத் தொழுவார்கள். ஆகவே நான்அபூமுஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே நான் காண்கிறேனே (என்ன காரணம்)என்று கேட்டேன அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்த தூணைத் தேர்ந்தெடுத்துத் (அதை முன்னோக்கி நின்று) தொழுவைத நான் பார்த்திருக்கிறேன். (ஆகவேதான் நானும் இதைத் தேர்ந்தெடுத்து தொழுகிறேன்) என்று பதிலளித்தார்கள்.

503 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மஃக்ரிப் (தொழுகைக்காக பாங்கு சொல்லும்) நேரம் முதல் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) வெளியேறும் வரை மூத்த நபித் தோழர்கள் (இரு ரக்அத்கள் முன் சுன்னத் தொழுவதற்காக பள்ளிவாச-லுள்ள) தூண்களை நோக்கி விரைவதை நான் பார்த்திருக்கிறேன்.

பாடம் : 96

கூட்டுத் தொழுகை அல்லாதவற்றை தூண்களுக்கு இடையே தொழுவது.

504 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) நபி (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி)உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்றனர். நீண்ட நேரம் உள்ளிருந்து விட்டு வெளியே வந்தனர். நபி (ஸல்) அவர்கள் (வெளியே வந்த கையோடு) அவர்களுக்குப் பின்னால் முதல் ஆளாக நானே கஅபாவினுள் நுழைந்தேன். பிலால் (ரலி) அவர்களிடம்நபி (ஸல்) அவர்கள் (கஅபாவுக்குள்) எங்கே (எந்த இடத்தில்) தொழுதார்கள்என்று கேட்டேன். அதற்கு பிலால் முன்னால் உள்ள இரண்டு தூண்களுக்கு இடையில் என்று பதிலளித்தார்கள்

505 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத்பிலால்,உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்று உள்தாழிட்டுக் கொண்டார்கள். (நிண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்(து கொண்டிருந்)த பிலால்

(ரலி) அவர்களிடம்நபி (ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள்ஒரு தூணை தமது இடபக்கமும் மற்றொரு தூணை தமது வலப் பக்கமும் மூன்று தூண் களை பின்புறமும் இருக்குமாறு செய்(துதொழு)தார்கள் என்று கூறினார்கள். அன்று இறையில்லம் கஅபாவினுள் ஆறு தூண்கள் இருந்தன.

(அபூஅப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகின்றேன்:)

(இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான) மாலிக் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் தமது வலப் பக்கம் இரண்டு தூண்கள் (இருக்குமாறு தொழுதார்கள்) என்று இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 97

506 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும் போது கஅபாவை நோக்கி நோராகச் சென்று அதன் கதவு தமது முதுகுகிற்குப் பின்னால் இருக்குமாறு தமக்கும் எதிர் சுவருக்குமிடையே மூன்று முழ இடைவெளி இருக்கும் விதத்தில் நெருக்கமாக நின்று தொழுவார்கள். (அதாவது,) நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் எந்த இடத்தில் நின்று தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் தெரிவித்தார்களோ அந்த இடத்தைத் தேடித் தொழுவார்கள். நம்மில் ஒருவர் கஅபாவில் தாம் நாடிய எந்தப் பகுதியில் நின்று தொழுதாலும் தவறேதுமில்லை என்றும் கூறுவார்கள்.

பாடம் : 98

வாகன ஒட்டகம்சிவிகை (ஆகியவற்றை தடுப்பாக்கி தொழுவது போன்று) ஒட்டகம்மரம் ஆகியவற்றை(த் தடுப்பாக வைத்து அவற்றை) நோக்கித் தொழுவது.

507 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் (திறந்தவெளியில் தொழும் போது) தமது வாகன ஒட்டகத்தை குறுக்கே (தடுப்பாக) நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் (அவர்களிடம்)ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்…என்று கேட்டேன். இந்த சிவிகையை எடுத்து அதை நேராக வைத்து அதன் (பின் கடை) சாய்மானத்தை நோக்கித் தொழுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறே செய்துவந்தார்கள்.

பாடம் : 99

கட்டிலை நோக்கித் தொழுவது.

508 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நாய்கள்கழுதைகள்பெண்கள் தொழுப வருக்கே குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும்என்று கூறிய ஒருவரிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள்எங்களை ஏன் நாயுக்கும் கழுதைக்கும் சமமாக்கினீர்கள்நான் கட்டி-ல் சாய்ந்து படுத்திருப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்கள் பார்வையில் படும் விதமாக படுத்திருக்கப் பிடிக்காமல் கட்டி-ன் இரு கால்களினூடே நுழைந்து வெளியேறிவிடு வேன்எனது போர்வையிலிருந்தும் நழுவிச் சென்றேவிடுவேன்

பாடம் : 100

தொழுது கொண்டிருப்பவர் தமக்கு முன்னால் குறுக்கே நடந்து செல்பவரைத் தடுப்பது.

தொழுகை இருப்பின் போதும் (மக்கள் நடமாட்டம் நிறைந்த) கஅபாவிற்குள் தொழும் போதும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் குறுக்கே சென்றவரைத் தடுத்திருக்கிறார்கள். சண்டையிட்டுத் தான் அ(வ்வாறு செல்ப)வரைத் தடுக்க முடியுமென்றால் அவ்வாறு செய்து கொள்! என்றும் கூறுவார்கள்.

509 அபூஸா-ஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தடுப்பு ஒன்றை வைத்துக் கொண்டு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் தொழுது கொண்டிருப்பதை நான் கண்டேன்.

அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்லப் போனார். எனவேஅபூசயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் கையால் உந்தினார்கள். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் (அவர்களைக் கடந்து) செல்வதைத் தவிர நடை பாதையேதும் இல்லையெனக் கண்ட அந்த இளைஞர்மீண்டும் அவர்களைத் தாண்டி (குறுக்கே) செல்லப் போனார். எனவே அபூசயீத் (ரலி) அவர்கள் அவரை முன்பைவிடக் கடுமையாக உந்தினார்கள். உடனே அந்த இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களை ஏசினார். பிறகு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று அபூசயீத் (ரலி) அவர்கள் தம்மிடம் நடந்து கொண்டது பற்றி முறையிட்டார். அவருக்குப் பின்னால் அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள்.

அப்போது மர்வான்உங்களுக்கும் உங்கள் சகோதரரின் புதல்வருக்குமிடையே என்ன பிரச்சினை,அபூசயீத் அவர்களேஎன்று கேட்டார். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள்மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தமக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை தடுப்பாக வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும் போதுஎவரேனும் தமக்கு முன்னால் (குறுக்கே) கடந்து செல்ல முயன்றால் அவரைத் தள்ளிவிடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அவருடன் சண்டையி(ட்டுத்த)டுங்கள். ஏனெனில் அவன் தான் ஷைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (எனவேதான்இந்த இளைஞரிடம் இவ்வாறு நான் நடந்து கொண்டேன்) என்று கூறினார்கள்.

பாடம் : 101

தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே (அவர் சஜ்தா செய்யும் எல்லைக்குள்) நடந்து செல்வது பாவச்செயலாகும்.

510 புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே நடந்து செல்பவர் அடைந்து கொள்ளும் பாவம் என்ன என்பது பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?என்று அபூஜுஹைம் அப்துல்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டுவருமாறு ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் என்னை அனுப்பிவைத்தார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர்அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்)தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீ உமைய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களாஅல்லது மாதங் களில் நாற்பது என்று கூறினார்களா அல்லது வருடங்களில் நாற்பது என்று குறிப்பிட்டார்களாஎன்று எனக்குத் தெரியவில்லை.

பாடம் : 102

தொழுது கொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமரலாமா?

தொழுது கொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமர்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுத்துள்ளார்கள். தம்மால் தொழுபவரின் கவனம் சிதறும் என்றால்தான் இந்த நிலை. கவனம் சிதறாது என்றால் (அதனால் தவறில்லை. ஏனெனில்,) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள்இவ்வாறு முன்னோக்கினால் என்ன (தவறு)ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் தொழுகையை முறித்து விடமுடியாது என்று கூறியுள்ளார்கள்.

511 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிக்கும் காரியங்கள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது சிலர், (தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்லும்) நாயும் கழுதையும் பெண்ணும் தொழுகையை முறித்து விடுவன என்று கூறினர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள, (பெண்களாகிய) எங்களை நாய்களுக்கு சமாமாக்கிவிட்டீர் களேநபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கையில் நான் அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையே கட்டி-ல் படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். (தொழுது கொண்டிருக்கும்) அவர்களுக்கு முன்னால் செல்ல விருப்பமில்லாமல் (நான் கட்டி-லிருந்து) ஒரே நழுவு நழுவிவிடுவேன் என்று கூறினார்கள்.

இந்த கருத்தில் அமைந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது

பாடம் : 103

தூங்கிக் கொண்டிருப்பவரை நோக்கித் தொழுவது.

512 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்கையில் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள் வித்ருத் தொழ எண்ணும் போது என்னை எழுப்புவார்கள் (அதன் பின்) நான் வித்ருத் தொழுவேன்.

பாடம் : 104

பெண்ணை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுவது (செல்லும்).

513 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் சிரவணக்கம்செய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் சிரவணக்கத்திற்கு வரும் போது என்னைத் தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இல்லை

பாடம் : 105

தொழும் போது குறுக்கே செல்லும் எதுவும்தொழுகையை முறிக்காது எனும் கூற்று.

514 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிப்பவை குறித்துப் பேசப்பட்டது. -நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுப வருக்கு குறுக்கே செல்வது தொழுகையை முறித்து விடுவன என்று கூறினர்.). அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களை கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டி-ல் படுத்துக் கொண்டிருக்கநபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற் பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர்களுக்கு இடையூறு செய்யப் பிடிக்காமல் கட்டி-ன் இரு கால்களினூடே நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.

515 முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தையின் சகோதரர் (முஹம்மது பின் முஸ்லிம் பின் ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ – ரஹ்) அவர்களிடம்எவை (குறுக்கே செல்வது) தொழுகையை முறிக்கும்என்று கேட்டேன். அதற்கு அவர்கள்தொழுகையை எதுவும் முறிக்காது என்று கூறிவிட்டு உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக (பின்வருமாறு) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தம் குடும்ப விரிப்பில் தொழுவார்கள். அப்போது நான் அவர்களுக்கும் அவர்களின் கிப்லாவிற்கும் (சிரவணக்கம் செய்யும் இடத்திற்கும்) இடையே குறுக்கு வாட்டில் படுத்துக் கொண்டிருப்பேன்.

பாடம் : 106

தொழும் போது ஒரு சிறுமியை தமது தோளில் தூக்கி ஒருவர் சுமந்தால்…?

516 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி ஸைனபுக்கும் – அபுல் ஆஸ் பின் ரபீஆ பின் அப்தி ஷம்ஸ் அவர்களுக்கும் பிறந்த (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் (தமது தோளில்) சுமந்து கொண்டு தொழுதிருக்கிறார்கள். சிரவணக்கம் (சஜ்தா மற்றும் ருகூஉ) செய்யச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்நிலைக்குச் செல்லும் போது (மீண்டும்) உமாமாவை (தமது தோளில்) தூக்கிக் கொள்வார்கள்.

பாடம் : 107

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் படுத்திருக்கும் படுக்கை அருகில் தொழுவதால்…?

517 மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது படுக்கை விரிப்பு நபி (ஸல்) அவர் களின் தொழுகை விரிப்புடன் பட்டுக் கொண் டிருக்கும். சில சமயம் நான் எனது படுக்கையில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்களின் ஆடை என் மே(னியி)ல் படுவதுண்டு.

518 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டி ருக்கும் போது அவர்களுக்கு அருகில் நான் (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது அவர்களது ஆடை என் மீது படும். அப்போது நான் மாதவிடாய் ஏற்பட்ட வளாய் இருப்பேன்.

அப்போது நான் மாதவிடாய் ஏற்பட்ட வளாய் இருப்பேன் எனும் குறிப்பு முசத்தத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலேயே அதிகப் படியாக இடம்பெற்றுள்ளது.

பாடம் : 108

ஒருவர் சஜ்தா செய்யும் போது சஜ்தாச் செய்திட (இடம் விடுமாறு சமிக்ஞை செய்ய உறங்கிக் கொண்டிருக்கும்) தம் துணைவி யைத் தொட்டுணர்த்தலாமா?

519 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கும் அவர்களது (சிரவணக்க இடமான) கிப்லாவுக்கும் இடையே சாய்ந்து படுத்திருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யச் செல்லும் போது எனது கால்களைத் தொட்டு (என்னை) உணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். இவ்வாறிருக்க (தொழுபவருக்கு குறுக்கே நாயும்கழுதையும் பெண்ணும் செல்வது தொழுகையை முறித்து விடும்என்று கூறுவதன் மூலம் பெண்களாகிய) எங்களை நாயுக்கும் கழுதைக்கும் நீங்கள் சமமாக்கியது தவறாகும். (நாகரீகமற்றதாகும்).

பாடம் : 109

தொழுது கொண்டிருப்பவர் மீது விழுந்துள்ள அசுத்தத்தை ஒரு பெண் அப்புறப்படுத்துவது.

520 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல்உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையாஎன்று கூறிவிட்டுஇறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும்அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்துமுஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படு பாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்ட னர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.

(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷி யர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி ளஸல்ன அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.

அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள்அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிராத்தித்தார்கள்:

இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டுஅல்லாஹ்வே அம்ர் பின் ஹிஷாம் (அபூஜஹ்ல்),உத்பா பின் ரபிஆஷைபா பின் ரபீஆவலீத் பின் உத்பாஉமய்யா பின் கலஃப்உக்பா பின் அபீமுஐத்,உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (ஏழு பேரின்) பெயர் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள்.

தொடர்ந்து அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (அல்லாஹ்வின் தூதர் ளஸல்ன அவர்கள் எவர்களுக்கெதிராகப் பிராத்தித்தார்களோ ஒருவர் நீங்கலாக) அவர்கள் அனைவரும் பத்ருப்போர் நாளில் (உடல் உப்பி நிறமாறி) உருமாறி மாண்டு கிடந்ததையும் பின்னர் கலீபு பத்ர் எனும் பாழுங் கிணற்றை நோக்கி அவர்களை இழுத்துச் செல்லப்பட்டதையும் நான் பார்த்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இந்த பாழுங்கிணற்றிலுள்ளோரை (இனியும்) சாபம் தொடரும் என்று கூறினார்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.