5 – குளியல்

அத்தியாயம்: 5 – குளியல்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் பெருந்துடக்குடையோராக (குளியல் கடமையானோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்தவிர நீங்கள் நோயாளிகளாகவோஅல்லது பயணத்திலோ இருந்தால்அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்து வந்தாலும்அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (தாம்பத்தியஉறவு கொண்டிருந்தாலும் (உங்கைளச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள். (அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும்,உங்களுடைய கைகளையும் தடவிக் கொள் ளுங்கள்அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும்இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். (5:6)

புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்அன்றியும் குளியல் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்பள்ளியை பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோபயணத்திலோமலஜலம் கழித்தோ,பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்.ணீரைப் பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும்உங்களுடைய கைகளையும் தடவி தயம்மும்செய்து கொள்ளுங்கள்; (இதன் பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும்,மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (4:43)

பாடம் : 1

குளிப்பதற்கு முன் உளூ செய்தல்.

248 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக குளிக்க முற்பட்டால் முத-ல் தம் (முன்) கைகள் இரண்டையும் கழுவுவார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்வார்கள். பிறகு தம் விரல்களைத் தண்ணீருக்குள் நுழைத்து அதைக் கொண்டு தமது (தலையின்) ரோமக்கால் (பகுதி)களைக் கோதிவிடுவார்கள். பிறகு தம் தலையின் மீது மூன்று முறை தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பிறகு தம்மேனி முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.

249 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பெருந்துடக்கிற்காக குளிக்கும் போது) தம்மிரு கால்களை விட்டு விட்டு (ஏனைய உறுப்புகளுக்கு) தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய் வார்கள். மேலும் தம் மர்மஸ்தலத்தையும் உட-ல் பட்ட அசிங்கத்தையும் கழுவுவார்கள். பிறகு தம்(முடல்)மீது தண்ணீர் ஊற்று வார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தமது கால்களைக் கழுவுவார்கள். இதுவே பெருந் துடக்கிற்காக நபி (ஸல்) அவர்களின் குளியல் (முறை) ஆகும்.

பாடம் : 2

ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது.

250 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளித்தோம். அந்தப்பாத்திரத்திற்கு ஃபரக் எனப்படுகிறது.

(குறிப்பு: ஃபரக் என்பது இரு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)

பாடம் : 3

ஒரு ஸாஉ அளவுள்ள தண்ணீரில் அல்லது ஏறக்குறைய அந்த அளவுத் தண்ணீரில் குளிப்பது.

251 அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரு சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின் இல்லத்திற்குச்) சென்றோம்அப்போது அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களின் குளியல் பற்றி (அவர்கள் எப்படிக்குளிப்பார்கள்என்று)க் கேட்டார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ஸாஉபோன்ற ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லிக் குளித்துக்காட்டினார்கள். தமது தலை மீது தண்ணீரை ஊற்றினார்கள். (அது மட்டும் தெரிந்தது) அப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு திரை இருந்தது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

ஷுஅபா (பின் ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் (ஸாஉ போன்ற என்பதற்கு பதிலாக) ஸாஉ அளவு என்று இடம் பெற்றுள்ளது

252 அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர் களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். ஒரு ஸாஉத் தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர்அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள்உன்னைவிட அதிக முடியுள்ள வரும் உன்னைவிடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.

253 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பது வழக்கம்.

ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஸாஉ அளவு(ள்ள பாத்திரத்திலிருந்து) என்று இடம் பெற்றுள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது அந்திமக் காலத்தில் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டு அறிவித்ததாகக் கூறுவது வழக்கம். (அவர்களை குளிக்கும் போது பார்த்ததாக அறிவிக்கவில்லை.) ஆயினும், (என் ஆசிரியர்) அபூநுஐம் (ரஹ்) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பே சரியானதாகும்.

பாடம் : 4

தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்.

254 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்நானோ (குளிக்கும் போது) மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன் என்று கூறியபடி தம்மிரு கைகளாலும் சைகை செய்து காட்டினார்கள்.

255 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (குளிக்கும் போது தம்மிரு கைகளால்) மூன்று முறை தமது தலையில் தண்ணீர் ஊற்றக்கூடியவர்களாக இருந்தார்கள்.

256 அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஜாபிர் (ரலி) கூறினார்கள்: உன் தந்தையின் சகோதரரின் புதல்வர் -ஹசன் பின் முஹம்மத் பின் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்களையே குறிப்பிடுகிறார்கள்- வந்துபெருந்துடக்கிற்காக குளிப்பது எப்படிஎன்று கேட்டார். அதற்கு நான்நபி (ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் எடுத்து அதைத் தமது தலையில் ஊற்று வார்கள்பின்னர் உடல் முழுவதும் ஊற்று வார்கள் என்று சொன்னேன். அதற்கு ஹசன் அவர்கள் நான் அதிகமான முடியுடைய வனாக இருக்கின்றேனே (மூன்று கைத் தண்ணீர் போதாதே)என்று கேட்டார். அதற்கு நான்நபி (ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்! (அவர்களுக்கே அது போதுமான தாயிருந்ததே?) என்று கூறினேன்.

பாடம் : 5

குளிக்கும் போது ஒரு தடவை தண்ணீர் ஊற்றுதல்.

257 (நபி ளஸல்ன அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அப்போது அவர்கள் இரண்டு முறைஅல்லது மூன்று முறை தமது (முன்)கைகளைக் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையில் தண்ணீரை ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது (இடக்)கையை பூமியில் தேய்த்(து சுத்தம் செய்)தார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். தமது முகத்தையும் இரு கைகளையும் (மூட்டு வரை) கழுவினார்கள். பிறகு அந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று இரு பாதங்களையும் கழுவினார்கள்.

பாடம் : 6

குளிக்கச் செல்லும் போது குவளை (ஹிலாப்) கேட்பதும் குளிப்பதற்கு முன் நறுமணம் தேய்ப்பதும்.

(குறிப்பு: ஒட்டகத்தில் ஒருமுறை கறக்கப்படும் பால் கொள்ளளவுள்ள குவளைக்கு ஹிலாப் என்பர்.)

258 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையான குளியல்) குளிக்கும் போது ஹிலாப் குவளை போன்ற ஒன்றை கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து (தமது கையில் அள்ளித்) தமது தலையின் வலப் புறம் ஊற்றுவார்கள். பிறகு இடப் புறம் ஊற்றுவார்கள். பிறகு தமது இரு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்.

பாடம் : 7

பெருந்துடக்கிற்கான குளியலின் போது வாய்கொப்பளித்து மூக்கில் தண்ணீர் செலுத்(திச் சிந்)துதல்.

259 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவிதலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக் கொள்ள) துண்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைத்துக் கொள்ளவில்லை.

பாடம் : 8

கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை மண்ணில் தேய்த்துக் கழுவுதல்.

260 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குளியலைக்) குளிக்கும் போது (முதலில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.

பாடம் : 9

பெருந்துடக்குடையவர் கையில் எவ்வித அசிங்கமும் இல்லாத போது கையைக் கழுவுவதற்கு முன்னர் கையைத் தண்ணீர் பாத்திரத்தில் நுழைக்கலாமா?

இப்னு உமர் (ரலி)பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத்தில் கையை நுழைத்துள்ளனர். பின்னர் உளூ செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது அதிலிருந்து தெறிக்கும் தண்ணீரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.

261 (நபி ளஸல்ன அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் போட்டியிட்டுச் செல்லும்.

262 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையான குளியல்) குளிக்கும் போது (முத-ல்) கைகளைக் கழுவிக் கொள்வார்கள்.

263 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந் துடக்கிற்கான (கடமையான) குளியலை ஒரே பாத்திரத்திலிருந்து (ஒன்றாக நீரள்ளிநிறைவேற்றினோம்..

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

264 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியரில் ஒருவரும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து (நீரள்ளிக்) குளிப்பார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து முஸ்லிம் (பின் இப்றாஹீம் – ரஹ்)வஹ்ப் (பின் ஜரீர் – ரஹ்) ஆகியோர் அறிவிக்கும் அறிவிப்பில் பெருந்துடக்கிற்காக (குளிப்பார்கள்) என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

பாடம் : 10

உளூவிலும் குளியலிலும் சிறிது நேரம் இடைவெளி விடுதல்.

உளூ செய்த தண்ணீர் (உறுப்புகளில்) காய்ந்த பின்னர் தம்மிரு கால்களையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுவியதாக அறிவிக்கப்படுகிறது.

265 ளநபி (ஸல்) அவர்களின் துணைவியார்ன மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (முத-ல்) தம்மிரு முன் கைகள் மீது தண்ணீர் ஊற்றி அவ்விரண்டையும் இரண்டு முறை அல்லது மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் வலக்கையால் (நீரள்ளிஇடக்கையின் மீது தண்ணீர் ஊற்றி தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையை தரையில் தேய்த் (துச் சுத்தம் செய்)தார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தையும் இரண்டு கைகளையும் (முழங்கை வரைக்) கழுவினார்கள்தலையை மூன்று முறை (தண்ணீர் ஊற்றிக்) கழுவினார்கள். பிறகு உடம்பிற்கு தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு அந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்று தமது பாதங்கள் இரண்டையும் கழுவினார்கள்.

பாடம் : 11

குளிக்கும் போது வலக் கையில் தண்ணீர் அள்ளி இடக் கையின் மீது ஊற்றுவது.

266 மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் வைத்து அவர்களுக்குத் திரையிட்டேன். அப்போது அவர்கள் தம்கையில் தண்ணீர் ஊற்றி அதனை ஒரு முறை அல்லது இரு முறை கழுவினார்கள்

அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் மூன்று முறை என்று சொன்னார்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை என சுலைமான் (பின் மிஹ்ரான் அல்அஃமஷ் – ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். –

பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் வலக் கையால் (நீரள்ளிஇடக் கையின் மீது ஊற்றி தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள்பிறகு தமது (இடக்) கையை பூமியில் அல்லது சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள்;முகத்தையும் (மூட்டு வரை) இரண்டு கைகளையும் கழுவினார்கள்தலையையும் கழுவினார்கள்;பிறகு உடம்புக்கு தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். அப்போது (துடைக்க) அவர்களுக்கு ஒரு துண்டைக் கொடுத்தேன். அப்போது வேண்டாம் என்பது போல் தமது கையினால் சைகை செய்தார்கள்.

பாடம் : 12

ஒரு முறை தாம்பத்தியஉறவு கொண்ட பின் மீண்டும் தாம்பத்திய உறவு கொள்வதும், (பலதார மணம் புரிந்தவர்) தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டபின் ஒரேயொரு முறை குளிப்பதும்.

267 முஹம்மத் பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 அ(ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்நான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் கட்டியவனாக இருக்க விரும்பவில்லை எனக் கூறிய)து பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் சொன்னேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள்அபூ அப்திர்ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசுவேன். அவர்கள் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு)விட்டு வருவார்கள். பிறகு காலையில் நறுமணம் கமழக் கமழ இஹ்ராம் கட்டியிருப்பார்கள் என்று கூறினார்கள்.

268 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்கள் இரவில் அல்லது பக-ல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவிட்டு வந்து விடு வார்கள். (அப்போது) அவர்களுக்கு பதினோரு துணைவியர் இருந்தனர் என்று கூறினார்கள். உடனே நான் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெற்றிருந்தார்களாஎன்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் பேசிக் கொள்வோம் என்று கூறினார்கள்.

கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் (அப்போது) நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

பாடம் : 13

இச்சைக் கசிவு நீரைக் (மதீகழுவுவதும் அது வெளியேறியதற்காக அங்க சுத்தி (உளூ) செய்வதும்.

269 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இச்சைக் கசிவு நீர் (மதீஅதிகமாக வெளியேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் புதல்வி (ஃபாத்திமா என் மண பந்தத்தில்) இருந்ததால் இது பற்றிக் கேட்குமாறு (வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்ட போது, (அவ்வாறு இச்சைக் கசிவு நீர் வெளியேறினால்) உளூ செய்து கொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை. ஆனால்,) பிறவி உறுப்பைக் கழுவிக் கொள்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 14

வாசனைத் திரவியம் பூசிய ஒருவரிடம் குளித்த பின்னரும்கூட நறுமணம் நீடித்துக் கொண்டிருப்பது.

270 முஹம்மத் பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள்நான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் கட்டியவனாக இருப்பதை விரும்புவதில்லை எனக் கூறியதைக் குறிப்பிட்டு ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேள்வி கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இரவில்) வாசனைத் திரவியங்கள் பூசினேன். அவர்கள் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் கட்டியவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்கள்.

271 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தே இருந்தார்கள்.

பாடம் : 15

தலை முடியைக் கோதுவதும் தலையின் சருமம் நன்றாக நனைந்து விட்டதாகக் தெரிந்த பின்னர் தலையில் தண்ணீரை ஊற்றுவதும்.

272 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக குளிக்கத் தலைப் பட்டால் (முதலில்) தம்மிரு (முன்)கை களையும் கழுவுவார்கள்: தொழுகைக்காக செய்வது போன்று உளூவும் செய்வார்கள். பிறகே குளிப்பார்கள். (ஈரக்)கையால் தலை முடியைக் கோதிவிடுவார்கள். தலையின் சருமம் நன்றாக நனைந்து விட்டதாகத் தெரியவந்ததும் தம் (தலை) மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் உட-ன் இதர பாகங்களைக் கழுவுவார்கள்.

273 ஆயிஷா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீர் அள்ளுவோம்.

பாடம் : 16

பெருந்துடக்கின் (கடமையான) குளிப்பை நிறைவேற்றுவதற்காக உளூச் செய்து குளித்த பின்னர் உளூச் செய்த உறுப்புகளை மீண்டும் கழுவாமலிருப்பது.

274 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெருந்துடக்கி(ன் கடமையான குளிப்பி)ற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் (வாங்கி) வைத்துக் கொண்டு தமது வலக் கையால் (தண்ணீரை அள்ளிதமது இடக் கையின் மீது இரண்டு முறை அல்லது மூன்று முறை ஊற்றி (க் கழுவி)னார்கள். பிறகு மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையை தரையில் அல்லது சுவற்றில் தேய்த்து இரண்டு முறை அல்லது மூன்று முறை(தண்ணீர் விட்டுக்) கழுவினார்கள். பிறகு வாய்கொப்பளித்துமூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். மேலும் தமது முகத்தையும் (மூட்டு வரை) கைகளையும் கழுவினார்கள். பிறகு உடலின் மற்ற பகுதிகளைக் கழுவினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தமது இரு கால்களையும் கழுவினார்கள். நான் (துடைப்பதற்காக) அவர்களிடம் துண்டு ஒன்றைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர்கள் விரும்பாமல் தமது கையால் தண்ணீரை (வழித்து) உதறலானார்கள்.

பாடம் : 17

தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டது பற்றி பள்ளிவாசலில் வைத்து ஒருவருக்கு நினைவுக்கு வந்தால் அவர் அப்படியே பள்ளியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். (அதற்கு முன்) தயம்மும் செய்ய வேண்டிய தில்லை.

275 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டுதொழுகை அணிகள் சரி செய்யப்பட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தாம் தொழும் தளத்தில் அவர்கள் போய் நின்றபோது தாம் பெருந்துடக்குடனிருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே எங்களிடம்உங்கள் இடத்திலேயே நில்லுங்கள் என்று கூறிவிட்டு (தமது வீட்டிற்குத்) திரும்பிச் சென்று குளித்தார்கள். பிறகு தலையிலிருந்து தண்ணீர் சொட்ட சொட்ட எங்களிடம் வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள்அவர்களுடன் நாங்களும் தொழுதோம்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 18

பெருந்துடக்கிற்காகக் குளித்த பின்னர் இரு கைகளையும் உதறுவது.

276 மைமூனா(ரலி) கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் வைத்து ஒரு ஆடையில் அவர்களுக்குத் திரையிட்டேன். அவர்கள் (முத-ல்) தமது கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (தண்ணீர் அள்ளிஇடக் கரத்தில் தண்ணீர் ஊற்றி தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள்வாய்க் கொப்பளித்துமூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். மேலும் தமது முகத்தையும் (மூட்டு வரை) இரு கைகளையும் கழுவினார்கள்: பிறகு தமது தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்: தமது உடம்பிற்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தமது பாதங்களைக் கழுவினார்கள். (குளித்த) உடன் அவர்களிடம் நான் (துடைப்பதற்கு) ஒரு துணியைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர்கள் வாங்கிக் கொள்ளவல்லைதம் கைகளை உதறிக் கொண்டே சென்றுவிட்டார்கள்.

பாடம் : 19

குளிக்கும் போது தலையின் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.

277 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ள நபி (ஸல்) அவர்களின் துணைவி யரானன எங்களில் ஒருவருக்கு பெருந்துடக்கு ஏற்பட்டால் இரு கைகளிலும் தண்ணீர் அள்ளி ஊற்றிக் குளிப்போம். பின்னர் கையால் தண்ணீர் அள்ளி (தலை முதல் கால் வரை) வலப் பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையினால் தண்ணீர் அள்ளி இடப் பக்கம் ஊற்றுவோம்.

பாடம் : 20

அறைக்குள் ஒருவர்தனியாகக் குளிக்கும் போது ஆடையின்றி குளிக்கலாம்மறைத்துக் கொண்டு குளிப்பது காலச் சிறந்தது.

ஒருவர் மனிதர்களைக் கண்டு வெட்கப்படுவதைவிடஅல்லாஹ்விடம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா பின் ஹைதா (ரலி) அறிவித்துள் ளார்கள்.

278 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே வெறும் மேனியுடன் குளிப்பது வழக்கம். மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். இதனால் அல்லாஹ்வின் மீதானையாக! மூசா குட-றக்க நோயாளியாய் இருப்பதனால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என பனூ இஸ்ராயீல் சமூகத்தினர் (குறை) கூறினார்கள்.

ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க் கழற்றி) ஒரு கல்-ன் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அதனைப் பின்தொடர்ந்துகல்லே எனது துணி! கல்லே எனது துணி! என்று குரல் எழுப்பி(யபடி ஓடி)னார்கள். (ஆடையில்லா கோலத்துடன் பனூ இஸ்ராயீல் சமுதாயம் குளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது) பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர் மூசா (அலை) அவர்களை (வெறும் மேனியுடன்) பார்த்து விட்டுஅல்லாஹ்வின் மீதாணையாக ! மூசாவிற்கு எந்தக் கோளாறுமில்லை என்று கூறினர்.

இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் மீதானையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையிலிருந்த தடியால்) கல்லின் மீது அடித்த காரணத்தால் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்-ல் பதிந்து விட்டன.

279 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யூப் (அலை) அவர்கள் வெறும் மேனியுடன் குளித்துக் கொண்டிருந்த போது தங்க வெட்டுக்கிளிஒன்று அவர்கள் மீது விழுந்தது. உடனே அய்யூப் (அலை) அவர்கள் அதை தம் துணியால் பிடிக்கப்போனார்கள். அப்போது அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துஅய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்த(ச் செல்வ) நிலை உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (தன்னிறைவுடையவராக) வைத்திருக்கவில்லையாஎன்று கேட்டான். அதற்கு ஆம்உன் வலிமையின் மீதாணையாக! (உண்மைதான்.) ஆயினும் உன் (செல்வ) மேம்பாடு (பரக்கத்) எனக்குத் தேவைப்படு கின்றதே! என்று அய்யூப் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 21

மக்களிடையே குளிக்கும் போது திரையிட்டு மறைத்துக் கொள்ளுதல்.

280 உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் சென்றேன். (வெற்றிகிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்களை, (அவர் களுடைய புதல்வி) ஃபாத்திமா திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்கஅவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். (அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன்.) அப்போது அவர்கள் யாரம்மா இவர்எனக் கேட் டார்கள். நான் அபூதா-பின் புதல்வி உம்மூ ஹானீ என்று பதிலளித்தேன்.

281 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கினால் (கடமையானக் குளியலைக்) குளித்துக் கொண்டி ருக்கம் போது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் (முத-ல்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுகள் வரைக்) கழுவினார்கள். பிறகு தமது வலக் கையினால் (தண்ணீர் அள்ளிஇடக் கையின் மீது ஊற்றி தமது மர்மஸ்தானத்தையும் அதில் பட்டிருந்த (இந்திரியத்)தையும் கழுவினார்கள். பிறகு (அந்தக்)கையை சுவரின் மீதோ அல்லது தரையின் மீதோ தேய்த்தார்கள். பிறகு இரு கால்களைத் தவிர மற்ற உளூவின் உறுப்புகளுக்கு) தொழுகைக்காகச் செய்வது போன்று உளூ செய்தார்கள். பிறகு தம் உடம்பிற்குத் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சிறிது நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள்.

குளிக்கும் போது திரையிட்டுக் கொள்வது தொடர்பாக அபூஅவானா (ரஹ்)இப்னு புளைல் (ரஹ்) ஆகியோர் அஃமஷ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும் இடம் பெற்றுள்ளது.

பாடம் : 22

பெண்களுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால்…

282 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்களின் மனைவி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்க-தம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாஎன்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்ஆம்; (விழித்தெழும் போது தன் மீது) அவள் (மதன) நீரைக் கண்டால் (குளியல் அவள் மீது கடமைதான்) என்று பதிலளித்தார்கள்.

பாடம்: 23

பெருந்துடக்குடையவரின் வியர்வையும், (பெருந்துடக்கினால்) ஒரு முஸ்லிம் அசுத்தமாகி விடுவதில்லை என்பதும்.

283 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளியல் கடமையான நிலையில்) நான் மதீனாவின் ஒரு சாலையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்து கொண்டேன். உடனே நான் (வீட்டிற்குச்) சென்று குளித்து விட்டு வந்தேன். (இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய்அபூஹுரைராஎன்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் பெருந்துடக்குடைவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர்வதை நான் வெறுத்தேன் என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்மாகி விட மாட்டார் என்று கூறினார்கள்.

பாடம் : 24

பெருந்துடக்கு ஏற்பட்டவர் (குளிக்காமல் வீட்டிலிருந்து) வெளியேறலாம்கடைவீதி முதலிய இடங்களில் நடக்கலாம்.

பெருந்துடக்கு ஏற்பட்டவர் உளூ செய்யாமல் குருதி உறிஞ்சி எடுக்கலாம்தமது நகங்களை வெட்டிக் கொள்ளலாம்தலைமுடி மழித்துக் கொள்ளலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

284 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்.

285 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெருந்துடக்குடனிருந்த என்னை (மதீனாவின் ஒரு சாலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்துஎன்னுடைய கையைப் பிடித்தார்கள். அவர்களுடன் நான் நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் (அங்கிருந்து) நழுவிச் சென்று வீட்டிற்குப் போய் குளித்து விட்டு வந்தேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டி ருந்தார்கள். (என்னைக் கண்டதும்) எங்கே இருந்தாய்என்று கேட்டார்கள். நான் (எனது நிலையை) அவர்களிடம் சொன்னேன். அப்போதுசுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அபூஹிர்! ஓர் இறை நம்பிக்கையாளர் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகி விட மாட்டார் என்று சொன்னார்கள்.

பாடம் : 25

பெருந்துடக்கு ஏற்பட்டவர் (கடமையான) குளியலை நிறைவேற்றாமல் உளூசெய்து கொண்டு வீட்டில் தங்கியிருத்தல்.

286 அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம்நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும் நிலையில் உறங்குவார்களாஎன்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்ஆம்;ஆயினும் (உறங்கும் முன்) உளூ செய்து கொள்வார்கள் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 26

குளியல் கடமையானவர் உறங்குவது.

287 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள்எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருக்கும் நிலையில் உறங்கலாமாஎன்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்ஆம்உங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருந்தாலும் அவர் உளூ செய்து விட்டு உறங்கலாம் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 27

குளியல் கடமையானவர் (உறங்க நாடினால்) உளூ செய்து விட்டு உறங்கலாம்.

288 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளியல் கடமையாகி (பெருந்துடக்குடன்) இருக்கும் நிலையில் உறங்க நினைத்தால் தமது மர்மஸ்தானத்தைக் கழுவிட்டு தொழுகைக்குரிய உளூ செய்வார்கள். (அதன் பின்னர் உறங்குவார்கள்.)

289 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள்எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருக்கும் நிலையில் (குளிக்காமல்) உறங்கலாமாஎன கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஆம்உளூ செய்து விட்டு (உறங்கலாம்.) என்று பதிலளித்தார்கள்.

290 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள்இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்யுங்கள்உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்பிறகு உறங்குங்கள் என்றார்கள்.

பாடம் : 28

ஆண்-பெண் பாலுறுப்புகள் சந்தித்து விட்டால்…

291 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்து விட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகிவிடுகிறது. (விந்து வெளியாகா விட்டாலும் சரியே!)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 29

பாலுறவின் போது பெண்ணுறுப்பிலிருந்து பட்ட ஈரக் கசிவை கழுவுவது.

292 ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம்ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொண்டு விந்தை வெளியேற்றாமலிருந்தால் (அவர் மீது குளியல் கடமையாகுமா)கூறுங்கள்என்றேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள்அவர் தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள்ள வேண்டும்தமது பிறப்புறுப்பைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

பிறகு இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன். இது குறித்து அலீ பின் அபீதா-ப் (ரலி)ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்ட போதும் அவர்கள் அனைவரும் இவ்வாறே செய்யும் படி பணித்தார்கள் என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமி ருந்து அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் செவியேற்றதாக உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

293 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம்அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார்ஆனால் விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில் அவர் மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள்மனைவியிடமிருந்து (கசிந்து) தம் மீது பட்ட இடங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு அங்கசுத்தி (உளூ) செய்து கொண்டு தொழலாம் என்று சொன்னார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

(பாலுறுப்புகள் சந்தித்து விட்டால்) குளியல்தான் (மார்க்கத்தில்) பேணுதலான நடவடிக்கை யாகும். இந்த ஹதீஸ் கடைசிக் கட்டளையாகும். இதில் கருத்து வேறுபாடு உள்ளதால்தான் இந்த ஹதீஸை நாம் இங்கு குறிப்பிட்டோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.