48 – அடைமானம்

அத்தியாயம் : 48 – அடைமானம்.

பாடம் : 1

ஊரிலிருக்கும் போது அடைமானம் வைத்தல்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் பயணத்திலிருந்தால், மேலும் (ஒப்பந்தப் பத்திரம் எழுதுவதற்கு) எந்த ஓர் எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்க வில்லையென்றால் அடகுப் பொருளைப் பெற்றுக் கொண்டு நீங்கள் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளலாம். (2:283)

2508 அனஸ் (ரலி) அவர்கள்

கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டி யையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப் பையும் கொண்டு சென்றேன். முஹம் மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர,காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.

பாடம் : 2

கவசத்தை அடகு வைத்தல்.

2509 அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்களிடம் அடைமானம் பற்றியும் கடனில் பிணை (ள்ங்ஸ்ரீன்ழ்ண்ற்ஹ்) பற்றியும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்போது இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு (பிறகு பெற்றுக் கொள்வதாக) உணவுப் பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) தமது கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக எமக்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 3

ஆயுதத்தை அடகு வைத்தல்.

2510 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ் வுக்கும் அவனது தூதருக்கும் அவன் பொல்லாங்கு விளைவித்து (தொல்லை தந்து) விட்டான் என்று கூறினார்கள். உடனே, முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்கள். (பிறகு) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிடம் சென்று, ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகள் (உணவுப் பொருளைக்) கடனாக எங்களுக்கு நீ தரவேண்டும் என்று விரும்புகின்றோம் எனக் கூறினார். அதற்கு அவன், உங்கள் பெண்களை என்னிடம் அடகு வையுங்கள் என்று கூறினான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், நீயோ அரபிகளிலேயே அழகு மிக்கவன். உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை நாங்கள் அடகு வைக்க முடியும்? என்று பதிலளித்தார்கள். அதற்கு அவன், உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகு வையுங்கள் என்று கேட்டான். அதற்கு அவர், நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகு வைக்க முடியும்? (அப்படி அடகு வைத்தால்) ஓரிரண்டு வஸக்குகளுக்காக அடகு வைக்கப்பட்டவன் தானே இவன் என்று அவர் களை மற்றவர்கள் (இழிவாகப் பேசிப் பரிகாசமாக) ஏசுவார்களே! இது எங்க ளுக்கு அவமானமல்லவா? ஆயினும், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகு வைக்கிறோம் என்று கூறினார்கள். (அவனும் அதற்குச் சம்மதிக்க) பின்னர் வருவதாக வாக்களித்துச் சென்று விட்டார்கள். (பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகு வைக்கின்ற சாக்கில்) அவனைக் கொன்று விட்டார்கள்; பிறகு, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (கஅப் பின் அஷ்ரஃபைக் கொலை செய்து விட்ட) செய்தியைத் தெரிவித்தார்கள்.2

பாடம் : 4

அடைமானம் வைக்கப்பட்ட கால் நடையை வாகனமாகப் பயன் படுத்தலாம்; அதன் பாலைக் கறக்கலாம்.

இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

வழி தவறி வந்த பிராணியின் மீது (அதற்குப் போடுகின்ற தீனியின் அளவுக் கேற்ப) சவாரி செய்யலாம். அதற்குப் போடும் தீனியின் அளவுக்கேற்ப அதன் பாலைக் கறந்து (பயன்படுத்திக்)

கொள்ளலாம். அடகுப் பிராணியும் அதைப் போன்றதே.

2511 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகன மாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டி ருப்பின், அதன் பாலை (அடகு வாங்கிய வர்) அருந்தலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2512 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடகு வைக்கப்பட்ட பிராணிக் காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப் பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.

இதையும் அபூஹுரைரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

பாடம் : 5

யூதர்கள் முதலானவர்களிடம் அடகு வைத்தல்.

2513 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) தமது கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள்.

பாடம் : 6

அடகு வைப்பவர், அடகு வாங்குபவர் முதலானோர் கருத்து வேறுபாடு கொண்டால் வாதி ஆதாரத்தைச் சமர்ப்பிப்பதும், பிரதிவாதி சத்தியம் செய்வதும் கடமையாகும்.

2514 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஒரு வழக்கில் விளக்கம் கேட்டு) கடிதம் எழுதினேன். அவர்கள், நபி (ஸல்) அவர்கள் பிரதிவாதி (தன் மீதுள்ள வழக்கை மறுப்பதற்கு) சத்தியம் செய்ய வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள் என்று குறிப்பிட்டு பதில் (கடிதம்) எழுதினார்கள்.

2515 & 2516 அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், எவன் ஒரு சொத்தை அடை வதற்காகப் பொய் சத்தியம் செய்கின் றானோ அவன், தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டுள்ள நிலையில் அவனைச் சந்திப்பான்என்னும் நபி மொழியைக் கூறிவிட்டு, இந்த நபி மொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ், எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது என்னும் (3:77) வசனத்தை அருளினான் என்று கூறினார்கள்.

பிறகு, அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்ஊத்) உங்களிடம் என்ன பேசினார்? என்று கேட்டார். நாங்கள் அவர் (இப்னு மஸ்ஊத் (ரலி)) சொன்னதை எடுத்துரைத்தோம். அதற்கு அவர், அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அது அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணற்றின் விஷயத்தில் தகராறு இருந்து வந்தது; ஆகவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் (எங்கள்) வழக்கைத் தாக்கல் செய்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ இரண்டு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்; அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான், அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே, (பொய் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்பட மாட்டாரே என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவர் ஒரு செல்வத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்கின்றாரோ அவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார் என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான்என்று கூறிவிட்டு, 3:77ம் வசனத்தை (இறுதிவரை) ஓதிக் காட்டினார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.