46 – அநீதிகளும் அபகரித்தலும்

அத்தியாயம்: 46 – அநீதிகளும் அபகரித்தலும்.

அல்லாஹ் கூறுகிறான்:

இந்த அக்கிரமக்காரர்களின் செயல் களை அல்லாஹ் கவனிக்காமல் இருக் கிறான் என்று (நபியே!) நீங்கள் கருத வேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான். அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும். அவர்கள் தம் தலை களை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள். அவர்களின் பார்வை நிலை குத்தியிருக்கும். மேலும், அவர்களின் இதயங்கள் சூனியமாகி விட்டிருக்கும். (14:42,43)

பாடம் : 1

அநீதிகளுக்காகப் பழிவாங்கல்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) வேதனை வரக் கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக் காரர்கள் கூறுவார்கள்:

எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! அவ்வாறு அளித்தால், உனது அழைப்பினை நாங்கள் (விரைந்து) ஏற்றுக் கொள்வோம்; மேலும், (உன்) தூதர்களையும் பின்பற்றுவோம்.

(அப்போது அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக பதில் கூறப்படும்:) எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் (பலமுறை) சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தவர்கள் தாமே நீங்கள்! உண்மையில் தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்கள் வாழ்ந்த ஊர்களில் தான் நீங்கள் வசித்து வந்தீர்கள். அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டிருந்தது. மேலும், அவர்களை உதாரணமாகக் கூறியும் உங்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருந்தோம். அவர்கள் வித விதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலை களையே பெயர்த்து விடக் கூடியவையாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சுமம் அல்லாஹ்விடம் இருந்தது. (நபியே!) அல்லாஹ், தன் தூதர்களிடம் அளித் துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று ஒரு போதும் நீங்கள் கருத வேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும் பழி வாங்கு பவனும் ஆவான். (14:44-47)

2440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின்கள் நரகத்திலிருந்து தப்பி வரும் போது, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக் கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக் கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும் போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர் களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இதை அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 2

அல்லாஹ் கூறுகின்றான்:

எச்சரிக்கை! அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். (11:18)

2441 ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர் களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள்,

 அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான். அதற்கு அவன், ஆம், என் இறைவா! என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த முஃமின், நாம் இத்தோடு ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான். அப்போது அவனது நற் செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந் துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகும் என்று கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

பாடம் : 3

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்-முக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான்.

2442 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்-மின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்;அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்-மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங் களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்-மின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 4

உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருந்தாலும் அக்கிரமத்துக்குள்ளான வனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்.

2443 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக் குள்ளான நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

2444 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக் குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக் காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள்,அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி) என்று கூறினார்கள்.

பாடம் : 5

அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுதல்.

2445 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல் களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல் களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்:

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது.

3. தும்மியவருக்கு அவர், அல்ஹம்து -ல்லாஹ் (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று) சொன்னால்,யர்ஹமுக் கல்லாஹ் – (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று துஆ செய்வது.

4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.

  1. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு

உதவுவது.

6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.

7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.1

2446 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின்கள் ஒருவருக் கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும் போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோ டொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

இதை அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 6

அக்கிரமக்காரனைப் பழிவாங்குதல்.

அல்லாஹ் கூறுகிறான்:

அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறு வோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (4:148)

மேலும், அவர்கள் (நம்பிக்கையாளர்கள்) தங்கள் மீது அநீதியிழைக்கப்படும் போது அதை எதிர்த்துப் போராடு கின்றார்கள். (42:39)

அவர்கள் இழிவுபடுத்தப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தனர். அவர்கள் பழிவாங்கும் சக்தியுடையவர்களாக மாறும் போது மன்னித்து விடுவார்கள் என்று இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள் (இந்த வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.

பாடம் : 7

அக்கிரமக்காரனை மன்னித்தல்.

அல்லாஹ் கூறுகிறான்:

ஆனால், நீங்கள் வெளிப்படையாக வும் மறைவாகவும் நற்செயலைச் செய்த வண்ணம் இருந்தால்,அல்லது குறைந்த பட்சம் அக்கிரமக்காரர்களின் தீங்கை மன்னித்து விட்டால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கிறான். (என்றாலும்) அவன் பெரிதும் மன்னிப் பவனாக இருக்கின்றான். (4:149)

தீமையின் பலன் அதே போன்ற தீமையே ஆகும். இனி, எவர் மன்னித்து விடுகின்றாரோ மேலும்,சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருக்குரிய நற்பலன் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கொடுமைக் காரர்களை நேசிப்பதில்லை. எவர் தம் மீது கொடுமை இழைக்கப்பட்ட பின் பழிவாங்குகின்றார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற முடியாது. ஆட்சே பணைக்குரியவர்கள் யாரெனில், இதர மக்கள் மீது கொடுமை இழைப்பவர் களும் இன்னும்,நியாயமின்றி பூமியில் வரம்பு மீறிய செயல் புரிபவர்களும்

தாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது. ஆயினும்,

யார் பொறுமையை மேற் கொண்டு, மன்னித்து விடவும் செய்கிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதிமிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்…

ஒருவரை அல்லாஹ் வழிகேட்டில் ஆழ்த்தி விட்டால் அவரைப் பாதுகாப் பவன் அல்லாஹ்வுக்குப் பிறகு வேறு யாரும் இல்லை. இந்த அக்கிரமக் காரர்கள் வேதனையைப் பார்க்கும் போது, இனி, உலக வாழ்விற்குத் திரும்பச் செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கின்றதா? என்று கேட்பதை நீர் காண்பீர். (42:40-44)

பாடம் : 8

அநீதி, மறுமை நாளில் பல இருள்

களாகக் காட்சி தரும்.

2447 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 9

அநீதியிழைக்கப்பட்டவரின் முறையீட்டு(சாப)ப் பிரார்த்தனைக்கு அஞ்சுவதும் அதைத் தவிர்ப்பதும்.

2448 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

பாடம் : 10

ஒருவர் ஒரு மனிதருக்கு அநீதி

யிழைத்திருந்து அதை அவர் மன்னிக்க முன்வந்தால் (அப்படி மன்னிக்கும் போது அநீதியிழைத்தவர்) தான் செய்த அநீதியை இன்னதென்று தெளிவாகக் கூற வேண்டுமா?

2449 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.)2 (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

இதை அபூஹுûரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 11

ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அல்லது தனது உரிமையை மன்னித்து விட்ட பிறகு மன்னிப்பைத் திரும்பப்பெறக் கூடாது.

2450 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் தன் கணவன் தன்னிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, (தன்னைப்) புறக் கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (தம் உரிமை களில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை. என்கிற திருக்குர்ஆனின் (4:128 ஆம்) வசனத்தைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் போது, ஒரு மனிதர் தன் மனைவியிடம் (தாம்பத்திய) உறவை நாடி அதிகமாக வந்து செல்லாமல் தன் மனைவியைப் பிரிந்து(எவனது நாளில் வெறொரு மனைவியிடம் சென்று) விட வேண்டும் என்று விரும்புகின்ற நிலையில் அவரது மனைவி என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் (நான் விட்டுக் கொடுத்து) உம்மை மன்னித்து விடுகிறேன் என்று கூறினார். அப்போது தான் இந்த இறைவசனம் அருளப்பட்டது என்று குறிப்பிட்டார்கள்.

பாடம் : 12

ஒருவர் தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை மன்னித்து விட்டார். ஆனால் மன்னிக்கும் போது,தனது அந்த உரிமை எவ்வளவு என்று குறிப்பிடவில்லை என்றால்…… (செல்லுமா?)

2451 சஹ்ல் பின் சஅது (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலப் பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், (இந்த பானத்தை) இவர்களிடம் (வயது முதிர்ந்தவர்களிடம்) கொடுக்க நீ எனக்கு அனுமதி தருவாயா? என்று கேட்டார்கள். அந்தச் சிறுவர், மாட்டேன், இறைவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். எனவே, அல்லாஹ்வின் தூதர் அச்சிறுவரின் கரத்தில் அந்த பானத்தை வைத்தார்கள்.3

பாடம் : 13

(பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டவனின் பாவம்.

2452 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க

விடப்படுவார்.

இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

2453 அபூசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்: அபூசலமாவே! (பிறரது) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், எவர் ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படும் என்று கூறினார்கள்.

2454 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

எவன் ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 14

இருவருக்கு (கூட்டு) உரிமையுள்ள ஒரு விசயத்தில் ஒருவர் மற்றவருக்கு சற்று அதிகமாகப் பயன் பெற்றுக் கொள்ள அனுமதியளித்தால் அது செல்லும்.

2455 ஜபலா பின் ஸூஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. ஆகவே,இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும் போது இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரரிடம் அனுமதி கேட்டுக் கொண்டாலே தவிர என்று கூறுவார்கள்.

2456 அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஷுஐப் என்றழைக்கப்பட்ட அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சிக் கடை வைத்திருந்த ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூஷுஐப் (ரலி) அவர்கள், எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐந்தாவதாக நபி (ஸல்) அவர்களை அழைக்கக் கூடும். என்று கூறினார். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தில் பசியின் அடையாள(மாக வாட்ட)த்தைப் பார்த்திருந்தார்கள். ஆகவே,அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடனும் அவர்களுடன் வந்திருந் தவர்களுடனும் விருந்துக்கு அழைக்கப் படாத ஒரு மனிதர் சேர்ந்து கொண்டார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அபூஷுஐப் (ரலி) அவர்களிடம்), இவர் எங்களைப் பின் தொடர்ந்து வந்து விட்டார்.

இவருக்கு (இந்த விருந்தில் கலந்து கொள்ள) நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம் (அனுமதியளிக்கிறேன்) என்று பதில் கூறினார்கள்.

பாடம் : 15

அல்லாஹ் கூறுகிறான்:

அவன் மிகவும் சச்சரவு செய்யும் (சண்டை பிடிக்கும்) வழக்க

முடையவனாக இருக்கிறான். (2:204)

2457 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 16

அறிந்து கொண்டே தவறுக்காக வழக்காடுபவனின் பாவம்.

2458 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக் கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந் ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகின்றார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட

வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி,நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்-மின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கின்றேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டு விடட்டும் என்று கூறினார்கள்.

பாடம் : 17

வழக்காடினால் அவமதிப்பான்

2459 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந் தாலும் அவன் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 18

அபகரித்தவனின் பொருள் ஏதேனும் கிடைத்தால், பொருளை இழந்தவன், தான் இழந்த பொருளுக்குப் பதிலாக அதை எடுத்துக் கொள்ளல்.

மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால் உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள். (16:126) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை ஓதிவிட்டு இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், இந்த வசனத்தில் ஆகிபூ என்னும் சொல் பதிலாக எடுத்துக் கொள்வதைக் குறிக்கின்றது என்று கூறினார்கள்.

2460 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிந்த் பின்த்து உத்பா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப் யான் மிகவும் கருமியாக இருக்கின்றார். அவரது பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தை குட்டிகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார்கள்.

2461 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகின்றீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கின் றோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந்துபசாரம் செய்ய மறுக்கிறார்கள் எனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் ஒரு சமூகத்திடம் சென்று விருந்தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லை யென்றால் அவர்களிடமிருந்து விருந் தினரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக் கொள்ளுங்கள் என்று எங்களுக்கு பதில் தந்தார்கள்.4

பாடம் : 19

சாவடிகள்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பனூ சாயிதா குலத்தாரின் சாவடியில் அமர்ந்தார்கள்.

2462 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களை மரணிக்கச் செய்த போது, அன்சாரிகள் பனூசாயிதா சாவடியில் ஒன்றுகூடி விட்டார்கள். நான் அபூபக்ரு (ரலி) அவர்களை, எங்களுடன் வாருங்கள் என்று அழைத்தேன். நாங்கள் அன்சாரி களிடம் பனூ சாயிதா (குலத்தாரின் பஞ்சாயத்துச்) சாவடிக்குச் சென்றோம்.5

பாடம் : 20

ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில் தனது அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை யைப் பதிப்பதைத் தடுக்கலாகாது.

2463 அப்துர் ரஹ்மான் பின் ஹுர் முஸ் அல் அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம் என்று கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, அபூஹுரைரா (ரலி) அவர்கள், என்ன இது? உங்களை இதை (நபியவர்களின் இந்தக் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின் றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன் என்று கூறுவார்கள்.6

பாடம் : 21

சாலையில் மதுவை ஊற்றுவது.

2464 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறு பவனாக இருந்தேன்.7 அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை(பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, (மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், வெளியே சென்று இதை ஊற்றிவிடுஎன்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப் பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?) என்று கேட்டார்கள். அப்போது தான், இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.8

பாடம் : 22

வீட்டு முற்றத்தில் அமர்வதும் பாதைகளில் அமர்வதும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் வீட்டின் முற்றத்தில் தொழும் இடத்தை அமைத்துக் கொண்டு, அதில் தொழுது கொண்டும் குர்ஆன் ஓதிக் கொண்டும் இருந்தார்கள். இணைவைப்பவர்களின் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சுற்றிலும் நெரிசலாகத் திரண்டு, அவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டபடி நின்று கொண்டிருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்போது மக்கா நகரில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.

2465 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள்,எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், பாதையின் உரிமை என்ன? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோ

ருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 23

தொல்லை நேராத பட்சத்தில் பாதையில் கிணறுகள் இருக்கலாம்.

2466 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். (அதிலிருந்து) தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப் பதைப் பார்த்தார். எனக்கு ஏற்பட்டது போன்ற (கடும்) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும் என்று (தன் மனத்திற்குள்) கூறிக் கொண்டார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டு வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ்,அவருடைய இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற மக்கள், அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் உண்டு என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 24

தொல்லை தரும் பொருளை அகற்றுதல்.

தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவது தர்ம மாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 25

மேல்மாடங்கள்(உப்பரிகைள்), மாடியறைகள், உயரமற்ற (தாழ்வான) மாடியறைகள் மற்றும் மேல்தளங்கள் முத-யவற்றில் வசிப்பது.

2467 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர் களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் விளையவிருக்கும் இடங் களை மழைத்துளி விழும் இடங்களைப் (பார்ப்பதை) போன்று பார்க்கிறேன்என்று கூறினார்கள்.9

2468 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இருவரைப் பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந் தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித் தான் அல்லாஹ் (திருக்குர்ஆனில்), நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து (சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன (66:4) என்று கூறியிருந்தான்.

 (ஒரு முறை) உமர் (ரலி) அவர் களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்கள் (மலஜலம் கழிப்பதற்காக) விலகிச் சென்றார்கள். நானும் அவர்களுடன் தண்ணீர்க் குவளையை எடுத்துக் கொண்டு விலகிச் சென்றேன். அவர்கள் மலஜலம் கழித்து விட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் குவளையிலிருந்த தண்ணீரை ஊற்றி னேன். (அதில்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது நான்,விசுவாசி களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இருவரைக் குறித்து, நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்) என்று இறைவன் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்? என்று நான் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (குர்ஆனின் விளக்கத்தில் பெரும் அறிஞரான உங்களுக்கு இது கூடவா தெரியாது?) ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் தான் அந்த இருவர் என்று கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது: நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக் காரர் ஒருவருடன் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மதீனாவை ஒட்டிய ஒரு குடியிருப்புப் பகுதியாகும். நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் தங்குவோம். அவர் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுடன் இருப்பேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது நபி (ஸல்) அவர்களுடைய அன்றைய நாளின் கட்டளைகள், போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார். குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை மிஞ்சி விடுபவர் களாக இருந்து வந்தோம். (பெண்களை எங்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தவர் களாக, எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் அன்சாரி களிடம் (மதீனா நகருக்கு) வந்த போது பெண்கள் அவர்களை (ஆண்களை) மிஞ்சி விடக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்துபவர்களாக, தம்முடைய மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும் போது ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம்.) (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங் கினார்கள். (ஒரு நாள்) நான் என் மனைவியிடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினாள். அவள் என்னை எதிர்த்துப் பேசியதை நான் வெறுத்தேன். அதற்கு அவள், நான் உம்மை எதிர்த்துப் பேசியதை நீர் ஏன் வெறுக்கிறீர்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் கூட அவர்களிடம் எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் ஒரு நாள் முழுக்கவும் இரவு வரை பேசுவதில்லை என்று கூறினாள். இதைக் கேட்டு நான் அச்சமுற்று, அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகி விட்டார் என்று கூறினேன். பிறகு உடை அணிந்து கொண்டு (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். ஹஃப்ஸாவே! உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் நாள் முழுக்க, இரவு வரை கோபமாக இருக்கிறார்களாமே! (உண்மையா?) என்று கேட்டேன். அதற்கு அவர், ஆம் என்று பதிலளித்தார். நான், அப்படி இருப்பவர் நஷ்டப்பட்டு விட்டார்;இழப்புக்குள்ளாகிவிட்டார். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் நம் மீது கோபமடைந்து நாம் அழிந்து போய்விடுவோம் என்னும் அச்சம் அவருக்கில்லையா? அல்லாஹ்வின் தூதரிடம் அதிகமாக (தேவைகளை) நீ கேட்காதே. எந்த விஷயத்திலும் அவர்களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா (ரலி)) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமான வராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள் வதைப் பார்த்து) நீ ஏமாந்து போய் (அவரைப் போல் நடந்து கொண்டு) விடாதே என்று நான் (அறிவுரை) கூறினேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள்,கஸ்ஸானியர்கள் (ஷாம் நாட்டில் வாழும் ஒரு குலத்தினர்) எங்கள் மீது படையெடுப்பதற்காக, தங்கள் குதிரைகளுக்கு லாடம் அடித்துத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம். என் அன்சாரித் தோழர் தமது முறை வந்த போது, நபி (ஸல்) அவர்களிடம் சென்று தங்கி, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை பலமாகத் தட்டி,அவர் (உமர்) அங்கே இருக்கிறாரா? என்று கேட்டார். நான் அச்சமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், மிகப் பெரிய ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது என்று கூறினார். நான், என்ன அது?கஸ்ஸானியர்கள் (படையெடுத்து) வந்து விட்டனரா? என்று கேட்டேன். இல்லை. அதை விடப் பெரிய,அதை விட (அதிகக்) கவலைக்குரிய சம்பவம் நடந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் மனைவிமார்களை விவாக ரத்து (தலாக்) செய்து விட்டார்கள் என்று கூறினார். நான், ஹஃப்ஸா நஷ்டமடைந்து பெரும் இழப்புக் குள்ளாகி விட்டாள். நான் இது (விரைவில் என்றாவது ஒரு நாள்) நடக்கத் தான் போகிறது என்று எண்ணியிருந்தேன் என்று கூறிவிட்டு உடை அணிந்து கொண்டு புறப்பட்டேன். நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகை தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்தவுடன் தமது மாடியறைக்குள் (சென்று) அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸா விடம் சென்றேன். அப்போது அவர் அழுது கொண்டிருந்தார். நான், ஏன் அழுகிறாய்? நான் உன்னை எச்சரித்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களை விவாகரத்து (தலாக்) செய்து விட்டாரா? என்று கேட்டேன். அதற்கு அவர், எனக் கொன்றும் தெரியாது. அவர் அந்த அறையில் தான் இருக்கிறார் என்று கூறினார். நான் மிம்பருக்கருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுது கொண்டி ருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் அந்த (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் நபியவர்கள் இருந்த அறைக்கு அருகே சென்றேன். அங்கிருந்த, நபி (ஸல்) அவர்களின் கறுப்பு அடிமையிடம், உமருக்காக (எனக்காக) நபியவர்களிடம் (அறைக்குள் வர) அனுமதி கேள் என்று சொன்னேன். அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி விட்டுப் பிறகு வெளியே வந்து, உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்து விட்டார்கள். என்று கூறினார். ஆகவே, நான் திரும்பி வந்து மிம்பருக் கருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்து கொண்டேன். பின்னர், அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் மீண்டும் அந்த அடிமையிடம் சென்று, உமருக்காக நீ (நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள் என்று கூறினேன். அவர் (உள்ளே சென்று வந்து) முன்பு சொன்னதைப் போன்றே இப்போதும் கூறினார். நான் (மறு படியும்) மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்து கொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலை யான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் அந்த அடிமையிடம் சென்று, உமருக்காக அனுமதி கேள் என்று கூறினேன். அப்போதும் அந்த அடிமை முன் போலவே கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்த போது அந்த அடிமை என்னை அழைத்து, உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்து விட்டார்கள் என்று கூறினார். உடனே, நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கு மிடையே மெத்தை எதுவும் இருக்க வில்லை. ஆகவே, அவர்களுடைய விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்கள் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலை யணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் சலாம் கூறினேன். பிறகு நான் நின்று கொண்டே, தங்கள் மனைவிமார்களை தாங்கள் தலாக் (விவாகரத்து) செய்து விட்டீர்களா? என்று கேட்டேன். அவர்கள் தமது பார்வையை என் பக்கம் உயர்த்தி, இல்லை என்று கூறினார்கள். பிறகு,நான் நின்று கொண்டே (அவர்களுடைய கோபத்தைக் குறைத்து) அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவர விரும்பி, பின் வருமாறு சொல்லத் தொடங்கினேன்: அல்லாஹ்வின் தூதரே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். குறைஷிகளான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந் தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரிடம் (மதீனா வாசிகளிடம்) நாங்கள் வந்த போது…. (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கி விட்டனர்)…. என்று தொடங்கி, (முன்பு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் என் மனைவி பற்றிச் சொன்னவை) எல்லாவற் றையும் கூறினேன். (அதைக் கேட்டு) நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு நான் (நபி (ஸல்) அவர்களிடம்), நான் ஹஃப்ஸாவிடம் சென்று,உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா (ரலி)) உன்னை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமான வராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்து போய் (அவரைப் போல நடந்து கொண்டு) விடாதே என்று கூறியதைச் சொன்னேன். (இதை நான் சொல்லக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னகைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் அமர்ந்து கொண்டேன். பிறகு, நான் அவர்களின் அறையை என் பார்வையை உயர்த்தி நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று (பதனிடப்படாத) தோல்களைத் தவிர. அப்போது நான், தங்கள் சமுதாயத்தினருக்கு உலகச் செல்வங்களை தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் உரோமர்களுக்கும் – அவர்கள் அல்லாஹ்வை வணங்காதவர்களாக இருந்தும் (உலகச் செல்வங்கள்) தாராளமாக வழங்கப் பட்டிருக்கின்றனவே என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் (தலையணை மீது) சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கத்தாபின் மகனே! நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள், தமது (நற் செயல்களுக்கான) பிரதிபலன்கள் எல்லாம் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாகக் கொடுக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறினார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! (அவசரப்பட்டு இப்படிக் கேட்டதற்காக) எனக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள் என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்களின் அந்த இரகசியத்தை10 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறி பகிரங்கப்படுத்தி விட்ட போது, அதன் காரணத்தால் தான் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களிடமிருந்து விலகித் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். மேலும், அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்ல மாட்டேன் என்றும் கூறியிருந்தார்கள். அல்லாஹ் அவர்களைக் கண்டித்த போது தம் மனைவிமார்கள் மீது அவர்களுக்கு ஏற்பட்ட கடும் வருத்தமே இவ்வாறு அவர்கள் சொல்லக் காரணமாகும். இருபத்தொன்பது நாட்கள் கழிந்து விட்ட பொழுது, நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களிலிருந்து (மற்ற மனைவிமார்களிடம் செல்லத்) தொடங்கினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, நாங்கள் இருபத் தொன்பது இரவுகளல்லவா கழித்திருக் கின்றோம்? (ஒரு நாள் முன்னதாக வந்து விட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகின் றேனே என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மாதம் என்பது (குறைந்த பட்சம்) இருபத்தொன்பது நாட்களும் தான் என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத் தொன்பது நாட்களாகவே இருந்தது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அப்போது தான் , (நபி (ஸல்) அவர்களுடன் வாழ்வது, அல்லது அவர்களின் மணபந்தத்திலிருந்து விலகி விடுவது ஆகிய இரு விஷயங்களில்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறை வசனம் அருளப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மனைவி மார்களில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றேன்: நீ உன் தாய் தந்தை யரிடம் (அதற்காக) அனுமதி வாங்கும் வரை அவசரப்படத் தேவையில்லை என்று கூறினார்கள். அதற்கு நான், என் தாய் தந்தையர் தங்களை விட்டுப் பிரிந்து வாழும்படி ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும் என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள்,நபியே! நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் கூறிவிடுங்கள்: நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பி விடுகின்றேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுவுலகையும் விரும்புகிறீர்கள் என்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளான் என்று அல்லாஹ் கூறுகின்றான். (ஆகவே, உங்கள் முடிவு என்ன?) என்று கேட்டார்கள். நான், இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் நான் அனுமதி கேட்பேன். நானோ அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமை உலகையும் தான் விரும்புகின்றேன் என்று கூறினேன். பிறகு, தம் மனைவிமார்கள் அனை வருக்கும் (தம்முடன் வாழ்வது, தம்மை விட்டுப் பிரிந்து விடுவது ஆகிய இரண்டில்) விரும்பியதைத் தேர்ந் தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.11

2469 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு விலக்கி வைப்பதாக சத்தியம் செய்திருந்தார்கள். அவர் களுடைய கால் (நரம்பு) பிசகி விட்டிருந்தது; ஆகவே,அவர்கள் தமது மாடியறை ஒன்றில் அமர்ந்திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து,தாங்கள் தங்கள் மனைவிமார்களை விவாகரத்து (தலாக்) செய்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இல்லை; ஆனால், நான் அவர் களிடமிருந்து ஒரு மாத காலம் விலகியிருப்பதாக சத்தியம் செய்துள் ளேன் என்று கூறினார்கள்; அவ்வாறே இருபத்தொன்பது நாட்கள் (அதில்) தங்கியிருந்தார்கள். பிறகு இறங்கி வந்து தம் மனைவிமார்களிடம் சென்றார்கள்.

பாடம் : 26

ஒருவர் தம் ஒட்டகத்தைப் பள்ளி

வாச-ன் முற்றத்தில்12 அல்லது பள்ளி வாச-ன் வாயில் அருகே கட்டி வைப்பது.

2470 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ல் நுழைந்தார்கள். நானும் அவர்களைச் சந்திக்கப் பள்ளிவாச-ல் நுழைந்தேன். ஒட்டகத்தை (மஸ்ஜிதுந் நபவி) பள்ளி வாச-ன் முன்பு, கற்கள் பதிக்கப் பட்டிருந்த நடைபாதையில் கட்டி வைத்தேன். (நபியவர்களிடம் சென்று), இதோ, தங்கள் ஒட்டகம் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தைச் சுற்றி உலாவத் தொடங்கினார்கள். ஒட்டகமும் (அதன்) விலையும் உனக்கே என்று கூறினார்கள்.13

பாடம் : 27

ஒரு சமுதாயத்தாரின் குப்பை மேட்டிற்கு அருகே நிற்பதும் (அங்கு) சிறுநீர் கழிப்பதும்.

2471 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு குலத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து, (அங்கு) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள்.

 அல்லது நபி (ஸல்) அவர்கள் ……. சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன் என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று அறிவிப்பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 28

பாதையில் மக்களுக்குத் தொல்லை தருகின்ற மரக்கிளை போன்ற பொருள்களை எடுத்து எறிந்து விடுதல்.

2472 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 29

விசாலமான பொதுப் பாதையில் எவ்வளவு வழிவிடுவது என்ற சச்சரவு எழுமானால், நிலத்தின் உரிமையாளர் அதில் கட்டடம் எதுவும் எழுப்ப விரும்பினால் ஏழு முழங்கள் அளவிற்கு மக்களின் போக்குவரத்துப் பாதைக்காக இடம் விட வேண்டும்.

2473 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்து கொண்ட போது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக) விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பாடம் : 30

ஒருவரின் உடைமையை அவரது அனுமதியின்றி அபகரித்துக் கொள்வது.

நங்கள் நபி (ஸல்) அவர்களிடம், நாங்கள் (பணத்தைக்) கொள்ளை யடிக்கவோ (பிறர் சொத்தை) அபகரிக் கவோ மாட்டோம் என்று உறுதி மொழியளித்தோம் என்று உபாதா

(ரலி) அவர்கள் கூறினார்கள்.

2474 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கொள்ளையடிப்பதை(பிறர் பொருளை அவரது அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப் பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

2475 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரி, விபசாரம் புரியும் போது மூமினாக இருந்து கொண்டு விபசாரம் புரிவதில்லை. மேலும்,ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளை யடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்து இதே போன்று மற்றோர் அறிவிப்பும் உள்ளது. அதில் கொள்ளை யடிப்பது பற்றிய வாசகங்கள் மட்டும் இடம் பெறவில்லை.

அபூ அப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின்றேன்:

மூமினாக இருந்து கொண்டு இந்தச் செயல்களை ஒருவன் செய்வதில்லை என்பதின் கருத்து,இவற்றைச் செய்யும் நேரத்தில் இவற்றைச் செய்பவனிட மிருந்து ஈமான் (இறை நம்பிக்கையின் ஒளி)நீக்கப்பட்டு விடுகின்றது என்பதாகும்.

பாடம் : 31

சிலுவையை உடைப்பதும் பன்றியைக் கொல்வதும்.

2476 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்யமின் குமாரர் (ஈசா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப்பார்கள்; பன்றியைக் கொல்வார்கள்; ஜிஸ்யா வரியை (ஏற்க) மறுப்பார்கள்; எவரும் பெற்றுக் கொள்ள முன்வராத அளவுக்கு செல்வம் பெருகி வழியும். இவையெல்லாம் நடக்காதவரை உலக முடிவு (மறுமை) நாள் வராது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 32

மது வைக்கப்பட்டுள்ள பானைகளை உடைப்பது, அல்லது மது வைக்கப்பட்டுள்ள தோல் குடுவைகளைக் கிழிப்பது அனுமதிக்கப்பட்டதா?

ஒருவன் ஒரு சிலையையோ, ஒரு சிலுவையையோ, கிதார் (மற்றும் யாழ், முரசு போன்ற) இசைக் கருவியையோ எந்தப் பொருளின் மரக் கட்டையால் பலன் எதுவுமில்லையோ அத்தகைய பொருளையோ உடைத்து விட்டால்…. (நஷ்டஈடு தரவேண்டுமா?)

(நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்)14 அவர் களிடம் உடைக்கப்பட்ட ஒரு கிதார் (குறித்த வழக்கு) கொண்டு வரப்பட்டது. அதில் உடைத்தவர் நஷ்டஈடு ஏதும் வழங்க வேண்டும் என்று அவர் தீர்ப்பளிக்கவில்லை.

2477 சலமா பின் அக்வஃ (ரலி) அ0வர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது நெருப்பு ஒன்று மூட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, எதற்காக இந்த நெருப்பு மூட்டப்படுகின்றது? என்று கேட்டார்கள். நாட்டுக் கழுதை இறைச்சியைச் சமைப்பதற்காக என்று மக்கள் பதிலளித்தார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், பானைகளை உடைத்து அவற்றிலுள்ள(இறைச்சி, உணவு ஆகிய)வற்றை எறிந்து விடுங்கள்என்று உத்திரவிட்டார்கள். மக்கள், அதிலுள் ளவற்றை எறிந்து விட்டு அவற்றைக் கழுவி விடலாமா?என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (அவ்வாறே) கழுவிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

2478 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்து விட்டது (திருக்குர்ஆன்-17: 81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.15

2479 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் எனது அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்க விட் டிருந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கிழித்து விட்டார்கள். ஆகவே, அதிலிருந்து நான் இரு மெத்தை இருக்கை களைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள்.

பாடம் : 33

தன் செல்வத்தைக் காப்பதற்காகப் போராடுதல்.

2480 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப் பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ரு

(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 34

அடுத்தவரின் உணவுத் தட்டு முத-ய பொருள்களை உடைத்து விட்டால் (நஷ்ட ஈடு தர வேண்டுமா?)

2481 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி மார்களில் ஒருவரிடம் இருந்தார்கள். விசுவாசிகளின் தாய்மார்களில் ஒருவர் (நபியவர்களின் மனைவிமார்களில் ஒருவர்) பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத் தனுப்பினார்கள். (அவர்கள் உணவு) கொடுத்தனுப்பிய வீட்டிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து (அனுப்பி) விட்டார்கள்.16

பாடம் : 35

அடுத்தவரின் சுவரை இடித்து விட்டால் அதே போன்று கட்டித் தரவேண்டும்.

2482 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஜுரைஜ் என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு மனிதர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரது தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்து விட்டார். நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா? என்று (மனத்திற் குள்) கூறிக் கொண்டார். பிறகு (மீண்டும்), அவரது தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க

வில்லையே என்ற கோபத்தில்), இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே என்று கூறினார். (ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக் குள்ளாக்குவேன் என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்து விட்டார். ஆகவே, அவள் ஓர் இடையனிடம் சென்று, தன்னை அவனது ஆளுகைக்குள் ஒப்படைத்து விட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன் என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரது ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்து விட்டனர்; அவரை (அவரது அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளூ செய்து தொழுதார். பிறகு அக் குழந்தையிடம் வந்து, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), (இன்ன) இடையன் என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தரு

கின்றோம் என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ், இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும் என்று கூறி விட்டார்.17

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.