19 – தஹஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை)

அத்தியாயம்: 19 – தஹஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை).

பாடம் : 1

இரவில் தஹஜ்ஜுத் தொழுதல்.

அல்லாஹ் கூறுகிறான்: இரவில் (ஒரு சிறு பகுதியில்) உமக்கு உபரியான தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுதுவருவீராக! (17:79)

1120 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப் பார்கள்:

அல்லாஹும்ம! லக்கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்திவல்அர்ளிவமன் ஃபீஹின்ன. வலக்கல் ஹம்து. லக்க முல்க்குஸ் ஸமாவாத்திவல்அர்ளிவமன் ஃபீஹின்ன. வலக்கல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலக்கல் ஹம்து. அன்த்த முல்க்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலக்கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்கல் ஹக்கு. வ லிஆஉக்க ஹக்குன். வ கவ்லுக்க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந் நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் ஹக்குன். வஸ்ஸலாத்து ஹக்குன். அல்லாஹும்ம! லக்க அஸ்லம்த்துவ பிக்க அமன்த்துவ அலைக்க தவக்கல்த்துவ இலைக்க அனப்துவ பிக்க காஸம்த்துவ இலைக்க ஹாகம்த்து. ஃபக்பிர்லீ மா கத்தம்த்துவ மா அக்கர்த்துவ மா அஸ்ரர்த்துவமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமுவ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த / லா இலாஹ ஃகைருக்க.

ளபொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள்பூமி அவற்றில் உள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றில் உள்ளவை அனைத்துக்கும் உரிமையாளன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது தரிசனம் உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் உண்மை. மறுமை உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்தபிந்திச் செய்கின்றஇரகசியமாகச் செய்தபகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக! நியே முற்படுத்துபவன். பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.ன

அபூஉமைய்யா அப்துல்கரீம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை புரியும் ம் ஆற்றலோ இல்லை என்று கூறுவார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 2

இரவுத் தொழுகையின் சிறப்பு.

1121,1122 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவேநானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாக இருந்தேன். (ஒரு நாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்:

இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் இருப்பது போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர் களும் இருந்தனர். உடனே நான் நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் இனி ஒரு போதும் நீர் பீதியடைய மாட்டீர் என்று கூறினார்.

இதை நான் (என் சகோதரியும் நபி ளஸல்னஅவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் (பின் உமர்) அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்) என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் புதல்வரான) சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(நபி ளஸல்ன அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்.

பாடம் : 3

இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் சஜ்தாச் செய்தல்.

1123 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (இரவுத்) தொழுகையாக இருந்தது. உங்களில் ஒருவர் சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தாமல் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் அத்தொழுகையில் ஒரு சஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு (ஃபஜ்ர்) தொழுகைக்காக தம்மை அழைக்க தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தம்மிடம் வரும் வரை வலப் பக்கம் சாய்ந்து படுத்துக் கொண்டிருப்பார்கள்.

பாடம் : 4

நோயாளி இரவுத் தொழுகையை விட்டு விடலாம்.

1124 ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ஓர் இரவோ அல்லது இரண்டு இரவுகளோ (இரவுத் தொழுகைக்காக) அவர்கள் எழவில்லை.

1125 ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (சில நாட்கள்) வரவில்லை. அப்போது குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இவரது ஷைத்தான் (இவரை கைவிட்டுவிட்டான். எனவேதான்) அவன் இவரிடம் தாமதமாக வந்தான் என்று கூறினாள். அப்போது தான் முற்பகல் மீது சத்தியமாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லைகோபங் கொள்ளவுமில்லை எனும் (93:1-3) வசனங்கள் அருளப் பெற்றன.

பாடம் : 5

நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகைமற்ற உபரியான தொழுகைகள் ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தாமல் ஆர்வமூட்டியது.

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் ஃபாத்திமா (ரலி) அவர்களையும் அலீ (ரலி) அவர்களையும் (இரவுத் தொழுகைக்காக) எழுப்பிவிடச் சென்றார்கள்.

1126 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் (திடீரென) விழித்தெழுந்துசுப்ஹானல்லாஹ்(-அல்லாஹ் தூயவன்)! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள்தாம் என்ன? (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட கருவூலங்கள்தாம் என்னஎன்றுகூறிவிட்டு, (தம் துணைவியரை மனத்தில் கொண்டு) இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுபவர் யார்? (அவர்கள் இறைவனை வணங்கட்டும்.)இவ்வுலகில் உடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள் என்று கூறினார்கள்.

1127 அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்துநீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்தொழவில்லையாஎன்று கேட்டார்கள். நான்அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை எழுப்ப நினைத்தால்தான் எங்களால் எழ முடியும் என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள்.அவர்கள் திரும்பிச் சென்ற போது தமது தொடையில் அடித்துக் கொண்டே மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான் (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.

1128 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உபரியான) சில கிரியை (அமல்)களைச் செய்ய விருப்பம் இருந்தாலும்கூட அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள். மக்களும் அவற்றைச் செய்ய அவர்கள் மீது அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். நான் ளுஹாத் தொழுகை தொழுதுவருகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் ளுஹாத் தொழுததில்லை.

1129 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகையை) ஓர் இரவில் பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத போது (அவர்களுக்குப் பின்னால் தொழ நின்ற) மக்கள் அதிகரித்தனர். மூன்றாவது அல்லது நான்காவது இரவில் (அங்கு மக்கள் திரண்ட போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரவில்லை. அதிகாலையானதும் நீங்கள் செய்ததை நிச்சயாக நான் பார்த்(துக் கொண்டுதான் இருந்)தேன். (இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டுமென) உங்கள் மீது அது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சியது தான் உங்களிடம் வரவிடாமல் என்னைத் தடுத்து விட்டது என்று கூறினார்கள். இது ஒரு ரமளான் மாதத்தில் நடந்ததாகும்.

பாடம் : 6

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை.

நபி (ஸல்) அவர்கள் தமது பாதங்களில் வெடிப்பு(ம் வீக்கமும்) ஏற்படும் அளவுக்கு (இரவில்) நின்று வணங்குவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ஃபுத்தூர் எனும் சொல்லுக்கு வெடிப்பு என்று பொருள். (ஃபுத்தூர் என்பதன் வினைச் சொல்லான) இன்ஃபத்தரத் எனும் சொல்லுக்கு வெடித்ததுபிளந்தது என்று பொருள்.

1130 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது பாதங்கள் அல்லது கணைக்கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமாஎன்று கேட்பார்கள்.

பாடம் : 7

சஹர் நேரத்தில் உறங்குதல்.

1131 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று தொழுவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மிண்டும்) உறங்குவார்கள். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று,ஒரு நாள் நோற்காமல் இருந்து விடுவார்கள்.

1132 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம்நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான நற்செயல் (அமல்) எது?என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நிலையாகச் செய்யும் நற்செயல் என்று விடையளித்தார்கள். (இரவுத் தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள்என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சேவல் கூவும் போது (இரவின் இறுதிப்பகுதியில்) எழுவார்கள் என்று விடையளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் சேவல் கூவும் போது எழுந்து தொழுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

1133 ளநபி (ஸல்) அவர்களின் துணைவியார்ன ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் தங்கியிருக்கும் தினத்தில் (சேவல் கூவும் நேரம் எழுந்து தொழுது விட்டு) சஹர் நேரம் ஆகும் போது உறங்கிக் கொண்டிருப்பார்கள்.

பாடம் : 8

சஹர் உணவு அருந்தியதும் உறங்காமல் சுப்ஹுத் தொழுகை தொழுதல்.

1134 அனஸ் பின் மாலக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் (நோன்பு நோற்க) சஹர் உணவு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ர்) தொழுகைக்கு எழுந்து சென்று தொழுதார்கள்.

இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்

நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம்அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடிப்பதற்கும் தொழுததற்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்ததுஎன்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் ஒருவர் ஐம்பது இறைவசனங்கள் ஓதும் அளவு நேரம் (இடைவெளி) இருந்தது என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 9

இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் நிற்பது.

1135 அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களுடன் (இரவுத் தொழுகை) தொழுதேன். அவர்கள் (நீண்டநேரம் நிலையில்) நின்று கொண்டே இருந்தார்கள். நான் ஒரு தவறான ஒரு முடிவுக்குக் கூட சென்றுவிட்டேன் (அந்த அளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள்) என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள். நான்அந்தத் தவறான முடிவு எதுஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள்நபி (ஸல்) அவர்களுடன் தொழுவதை விட்டுவிட்டு உட்கார்ந்து விடலாம் என்று எண்ணினேன் என விடையளித்தார்கள்.

1136 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுவதற்காக எழும் போது பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைச் சுத்தம் செய்)வார்கள்.

பாடம் : 10

நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படிஎத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?

1137 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால்சுபஹு (நேரம் வந்து விட்டது) பற்றி நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக என்று கூறினார்கள்.

1138 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.

1139 மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (தொழுவார்கள்) என்று பதிலளித்தார்கள்.

1140 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். வித்ர், ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) ஆகியன அவற்றில் அடங்கும்.

பாடம் : 11

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையும்உறக்கமும்இரவுத் தொழுகை (கட்டாயக் கடமைஎனும் சட்டம்) மாற்றத்திற்குள்ளானதும்.

அல்லாஹ் கூறுகிறான்:

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் — சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக! அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக! மேலும் குர்ஆனைத் தெளிவாகவும் நிறுத்திநிறுத்தியும் ஓதுவீராக! நிச்சயமாகநாம் விரைவில் கனமாக — உறுதியான — ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம். நிச்சயமாகஇரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக நீரும்உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோஇன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்ஆகவேஅவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவேநீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும் உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்ஆகவேஅதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்இன்னும் ஜகாத்தும் கொடுத்துவாருங்கள். அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாகக் கடன் கொடுங்கள்நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காகச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ,அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மேலானதாகவும் நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்;அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்;மிக்க கிருபையுடையவன். ( 73:1-6, 20)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்:

(73:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள நாஷிஅத் எனும் சொல்லின் வினைச்சொல்லான) நஷஅ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் நின்றான் என்று பொருள். (இதே வசனத்திலுள்ள வத்அன் எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் வித்அன் என்று ஓதப்பட்டுள்ளது. பொருள்:) சமன் செய்யக்கூடியது.அதாவது குர்ஆனுடன் உமது செவிபார்வைமனம் ஆகியவற்றை நன்கு இயைந்து போகச் செய்யும்.

(9:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லி யுவாத்திஊ எனும் சொற்றொடருக்கு சமமாக்கு வதற்காகஎன்று பொருள்.

1141 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு சில மாதங்களில் அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்காமல் இருப்பார்கள். இந்த மாதம் அவர்கள் நோன்பை விடமாட் டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள். அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய். அவர்களை (இரவில்) உறங்கும் நிலையில் நீ காண விரும்பினால் அவ்வாறே காண்பாய்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 12

இரவில் தொழாவிட்டால் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் முடிச்சுப் போடுகிறான்.

1142 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறங்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவேநீ உறங்கு என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும்சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1143 சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில்அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று கூறினார்கள்.

(குறிப்பு: விரிவாக அறிய காண்க: பாகம்-2, ஹதீஸ்எண்-1386)

பாடம் : 13

ஒருவர் தொழாமல் உறங்குகிறார் எனில்அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்து விட்டான் என்று பொருள்.

1144 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள்அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்து விட்டான் என்று கூறினார்கள்.

பாடம் : 14

இரவின் கடைசி நேரத்தில் பிரார்த்திப்பதும் தொழுவதும்.

அல்லாஹ் கூறுகிறான்:

அவர்கள் இரவில் குறைவாகவே உறங்கு வார்கள். அதிகாலை முன்னேரங்களில் பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (51:17)

1145 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலோரு பகுதி நீடிக்கும் போதுஎன்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 15

இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு இறுதிப் பகுதியில் விழித்திருத்தல்.

(இரவின் ஆரம்ப நேரத்தில் தொழு முயன்ற) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள்உறங்குங்கள்! என்றார்கள். இரவின் கடைசி நேரம் ஆனதும் இப்போது எழுங்கள்! என்று கூறினார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் சல்மான் உண்மையே சொன்னார் என்று குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: காண்க பாகம்-6, ஹதீஸ்எண்-6139)

1146 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அயிஷா (ரலி) அவர்களிடம்நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்ததுஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள்இரவின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். பிறகு தமது படுக்கைக்குத் திரும்புவார்கள். முஅத்தின் தொழுகைஅறிவிப்பு (பாங்கு) சொன்னதும் விரைவாக எழுந்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் அங்கசுத்தி (உளூ) செய்து விட்டு (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 16

ரமளானிலும் ரமளான் அல்லாத மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை.

1147 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ளநபி (ஸல்) அவர்களின் துணைவியர்ன ஆயிஷா (ரலி) அவர்களிடம்ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்ததுஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள்நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழ மாட்டார்கள்.(முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.

நான்அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களாஎன்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் கண்தான் உறங்குகிறதுஎன் உள்ளம் உறங்குவதில்லை என்று விடையளித்தார்கள் எனவும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

1148 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (முதுமை அடையும் வரை) இரவுத் தொழுகை எதிலும் உட்கார்ந்து ஓதும் நிலையில் நான் பார்த்ததில்லை. அவர்கள் முதுமையடைந்த பின் உட்கார்ந்த நிலையில் ஓதினார்கள். ஓர் அத்தியாயத்தில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அவற்றை ஓதிவிட்டுப் பிறகு ருகூஉ செய்வார்கள்.

பாடம் : 17

இரவிலும் பகலிலும் அங்கசுத்தி (உளூ) உடன் இருப்பதன் சிறப்பும் அங்கசுத்தி செய்த பின் தொழுவதன் மேன்மையும்.

1149 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) பிலால் (ரலி) அவர்களிடம்பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள்நான் இரவு பகல் எந்த நேரத்தில் அங்கசுத்தி (உளூ) செய்தாலும் அந்த அங்க சுத்திக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத் தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன் என்று கூறினார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) தஃப்ப நஅலைக்க எனும் சொற்றொடருக்கு உங்கள் செருப்போசைஎன்று பொருள்.

பாடம் : 18

வணக்க வழிபாடுகளில் (சக்திக்கு மீறிய) சிரமங்களை உருவாக்கலாகாது.

1150 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவாகள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்குள்) வந்த போது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. இந்தக் கயிறு என்ன (ஏன்)என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள்இது (தங்கள் துணைவியார்) ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்;அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக் கொள்வார் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்வேண்டாம். இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது (உபரியான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

1151 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் பனூஅசத் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்துயார் இவர்என்று கேட்டார்கள். நான் இவர் இன்னார் என்று கூறிவிட்டு இரவெல்லாம் உறங்க மாட்டார் (தொழுது கொண்டே இருப்பார்) என்று அவரது தொழுகை குறித்து (புகழ்ந்து) பேசினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் போதும் நிறுத்து! என்று கூறிவிட்டு (வணக்க வழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் இயன்றதையே (நிலையாகச்) செய்துவாருங்கள். நிச்சயமாக நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான் என்று கூறினார்கள்.

பாடம் : 19

இரவுத் தொழுகை தொழும் வழக்கமுடைய வர் அதை கைவிடக் கூடாது.

1152 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம்அப்துல்லாஹ்! இன்னாரைப் போன்று நீரும் ஆகிவிடாதீர்! இரவில் தொழும் வழக்கமு டைய அவர் அதை கைவிட்டுவிட்டார் என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 20

1153 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் கேள்விப் பட்டேனே (உண்மையா)என்று கேட்டார்கள். அதற்கு நான் அப்படித் தான் செய்கிறேன் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் இவ்வாறு செய்தால் உமது கண்கள் சொருகிவிடும். உடல் நலியும். உமதுஉடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உண்டு உமது குடும்பத் தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உண்டு. எனவே நீர் (ஒரு நாள்) நோன்பு நோற்பீராக! (ஒரு நாள்) நோன்பு நோற்காமல் இருந்து விடு வீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! என்று கூறினார்கள்.

பாடம் : 21

இரவில் உறக்கம் கலைந்தவர் தொழுவதன் சிறப்பு.

1154 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உறக்கம் கலைந்தவர் வாய்விட்டு லாயிலாஹ இல்லல்லாஹுவஹ்தஹுலாஷரீக்க லஹுலஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்துலில்லாஹிவ சுப்ஹானல்லாஹிவ லாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்லவலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்அவனுக்கு இணையானவர் எவரும் இல்லைஆட்சியதிகாரம் அவனுக்குரியதுபுகழ் அனைத்தும் அவனுக்கே உரியதுஅவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் தூயவன்அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை) என்று கூறிவிட்டுஅல்லாஹும்ம ஃக்பிர்லீ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக் கொள் ளப்படும்.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1155 ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் பேசிக் கொண்டி ருந்த போது தமது பேச்சினிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது) உங்கள் சகோதரர் தவறானவற்றைக் கூறுபவர் அல்லர் என -அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி)அவர்களைக் கருத்தில் கொண்டு- கூறிவிட்டுஅவர் நபி (ஸல்) பற்றி இயற்றிய (பின்வரும்) பாடலை எடுத்துக் கூறினார்கள்:

எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப் பொழுது புலரும் நேரம் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்குருட்டுத் தனத்தில் இருந்த எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதி யாக நம்புகின்றன. இணைவைப்பாளர்கள் இரவில் படுக்கைவிரிப்பில் அழுந்திக் கிடக்கும் போது அன்னார் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்தள்ளது.

1156,1157,1158 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு கனவு கண்டேன். அதில் பட்டுக் கம்பளத் துண்டு போன்ற ஒன்று என் கையில் இருந்தது. நான் சொர்க்கத்தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும் அது (என்னைக்) அந்த இடத்திற்கு என்னைக் கொண்டு போய்விட்டது. மேலும் நான் (வானவர்கள்) இருவரைக் கண்டேன். அவர்கள் இருவரும் என்னிடம் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் மற்றொரு வானவர் (மலக்) சந்தித்து இவரை விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டு என்னிடம்அஞ்சாதீர்! என்று கூறினார். இந்தக் கனவை நான் என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். உடனே ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர்தாம். அவர் இரவின் ஒருபகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்) என்று கூறினார்கள்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:)

(நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிரந்தார்கள்.

மக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவு அது (இரமளான் மாதத்தின்)கடைசிப் பத்துநாட்களில் இருபத்தி ஏழாம் இரவு என்று கனவில் காட்டப்பட்டதாக நபி (ஸல்) அவர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று நானும் கனவு கண்டேன். அது (கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாள்தான் எனும் விஷயத்தில் உங்கள் கனவும் எனது கனவும்) ஒத்தமைந்திருக்கின்றது. ஆகவேஅந்த (கண்ணிய மிக்க) இரவைத் தேடுபவர் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் தேடட்டும் என்று கூறினார்கள்.

பாடம் : 22

ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்)தை விடாமல் தொழுதுவருதல்.

1159 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷாத்தொழுகை தொழுது விட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (ஃபஜ்ருடைய) பாங்குக் கும் இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களையும் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் விட்டது இல்லை.

பாடம் : 23

ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுத பின் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வது.

1160 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவாகள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுததும் வலப் புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.

பாடம் : 24

ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்)திற்கப் பிறகு படுக்காமல் பேசிக் கொண்டிருக்கலாம்.

1161 ஆயிஷா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் (ஃபஜ்ர்) தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள்.

பாடம் : 25

உபரித் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது (அவசியம் என்பது) குறித்து வந்துள்ளவை.

இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி)அபூதர் (ரலி)அனஸ் (ரலி)ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)இக்ரிமா (ரஹ்)இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோரிடமிருந்து அறிவிக் கப்பட்டுள்ளது.

பகலில் (தொழும் உபரித் தொழுகைகளில்) நமது (மதீனா) நகர மார்க்க அறிஞர்கள் ஒவ்வோர் இரண்டு ரக்அத்களிலும் சலாம் கொடுப்பதையே நான் கண்டுள்ளேன் என யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1162 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யப் பிரார்த்திக்கும் முறையை குர்ஆனின் அத்தியாயங் களை எங்களுக்குக் கற்றுத் தருவது போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை (உபரியாகத்) தொழட்டும். பின்னர் (பின்வருமாறு) பிரார்த்திக்கட்டும்:

அல்லாஹும்ம! இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க. வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க. வ அஸ்அலுக்க மின் ஃபள்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திருவலா அக்திருவ தஅலமு வலா அஉலமு. வ அன்த்த அல்லாமல் ஃகுயூப். அல்லாஹும்ம! இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர கைருல்லீ ஃபீ தீனீ,வ மஆஷீவ ஆக்கிபத்தி அம்ரீ / ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி, ஃபக்தர்ஹு லீவ யஸ்ஸிர்ஹு லீ,ஸும்ம பாரிக் லீ ஃபீஹீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருல் லீ ஃபீ தீனீவ மஆஷீவ ஆக்கிபத்தி அம்ரீ / ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி, ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ. வக்தர்ஹு லீ அல்கைர ஹைஸு கானஸும்ம அர்ளினீ பிஹி.

ளபொருள்: இறைவா! நான் உன் ஞானத்தின் மூலம் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உன் ஆற்றல் மூலம் நான் (இந்தக் காரியத்தில்) ஆற்றல்பெறக் கோருகிறேன். உன் மிகப் பெரும் அருட்கொடையிலிருந்து வேண்டுகிறேன். ஏனெனில்நீயே (அனைத்திற்கும்) ஆற்றல் பெற்றுள்ளாய். (நீயின்றி) நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிந்தவன். இறைவா! எனது இந்தக் காரியம் எனக்கு எனது மார்க்கத்திலும் எனது வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும் /அல்லது என் உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் நன்மையானதாக அறிந்திருந்தால் இ(ந்தக் காரியத்தைச் செய்வ)தற்கு எனக்கு நீ ஆற்றலை வழங்குவாயாக! இதை எனக்கு எளிதாக்குவாயாக! பின்னர் இதில் எனக்கு சுபிட்சம் அளிப்பாயாக! இந்தக் காரியம் எனக்கு என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும் / அல்லது என் உலக வாழ்விலும் மறுமையிலும் தீமையாகுமென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னை விட்டும் திருப்பி விடுவாயாக! என்னையும் இக்காரியத்தை விட்டும் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருக்குமோ அந்த இடத்தில் (அதைச் செய்ய) எனக்கு ஆற்றலை வழங்குவாயாக! பிறகு அதனை மனத்திருப்தியுடன் என்னை ஏற்கச் செய்வாயாக!ன பிறகு அவர் தமது தேவையைக் குறிப்பிடட்டும்.

1163 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்.

இதை அபூகத்தாதா பின் ரிப்ஈ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1164 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து விட்டு திரும்பிச் சென் றார்கள்.

(குறிப்பு: காண்க ஹதீஸ் எண்கள் – 380, 874)

1165 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் (இல்லம் சென்று அங்கு) இரண்டு ரக்அத்களும் மஃக்ரிப் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்களும் இஷாத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத் களும் தொழுதிருக்கிறேன்.

1166 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அல்லது அவர் புறப்பட்டு வந்திருக்க (பள்ளிக்கு)வந்தால் இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும் என்று (ஜுமுஆ நாள் சொற்பொழிவில்) குறிப்பிட்டார்கள்.

1167 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் இருந்த போது அவர்களிடம் இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குள் நுழைந்து விட்டர்கள்என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்து கொண்டிருந்த போது நான் அங்கு சென்று அவர்களைக் கண்டேன்பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) கதவருகில் நிற்பதையும் கண்டேன். நான் பிலால் அவர்களிடம்பிலாலே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் தொழுதார்களாஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். எந்த இடத்தில்?என்று கேட்டேன். இரு தூண்களுக்கு மத்தியில் (தொழுதார்கள்). பிறகு வெளியே வந்து கஅபா(வின் கத)வை முன்னோக்கியபடி தொழுதார்கள் என்று பதிலளித்தார்கள். (குறிப்பு: காண்க: ஹதீஸ் எண்கள்:397, 468, 504, 505, 506.)

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

ளுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னை வலியுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (குறிப்பு: காண்க: பின்வரும் ஹதீஸ்: 1178.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நண்பகலில் என்னிடம் வந்தார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்து நின்றோம். அவர்கள் (எங்களுக்கு) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள் என இத்பான் பின் மாலிக் (ரலி) குறிப்பிட் டுள்ளார்கள். (குறிப்பு: காண்க: ஹதீஸ் எண்: 425.)

பாடம் : 26

ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) திற்குப் பிறகு பேசிக் கொண்டிருப்பது.

1168 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுததும் நான் விழித்தி ருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் (தொழுகைக்கு அழைக்கப்படும் வரை) சாய்ந்து படுத்திருப்பார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

 நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம்சிலர் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத் (தொழுத பிறகுதான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வார்கள்) என இந்த ஹதீஸில் அறிவிக்கின்றனரேஎன்று கேட்டேன்.அதற்கு அவர்கள்ஆம்;அப்படித் தான் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 27

ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்)தைப் பேணித் தொழுவதும் அவ்விரு ரக்அத்களும் கூடுதல்தொழுகைதாம் எனும் கூற்றும்.

1169 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்கள்) அளவிற்கு வேறு எந்த கூடுதல் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

பாடம் : 28

ஃபஜ்ருடைய சுன்னத்தில் எவ்வாறு ஓத வேண்டும்?

1170 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு ஃபஜ்ருடைய பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக (ஓதி) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

1171 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்கு முன் சுருக்கமாக (ஓதி) இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள். எந்த அளவிற்கென்றால் அதில் அவர்கள் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார்களா என்று நான் நினைப்பேன்.

பாடம் : 29

கடமையான தொழுகைக்குப் பின் உபரியான தொழுகைகளைத் தொழுதல்.

1172 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ர் தொழுகைக்குக்குப் பின் இரண்டு ரக்அத்களும்மஃக்ரிப் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத் களும் இஷாத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் (இல்லம் சென்று அங்கு) இரண்டு ரக்அத்களும் தொழுதிருக் கிறேன். மஃக்ரிப்இஷாவின் சுன்னத் தொழுகை களை நபியவர்களின் இல்லத்திலேயே தொழுதிருக் கிறேன்.

மற்றோர் அறிவிப்பில்இஷாத் தொழுகைக்குப் பின் அவர்களது இல்லத்திலேயே (சுன்னத் தொழுதேன்) என்று இடம்பெற்றுள்ளது.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழி யாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

(குறிப்பு: காண்க முன் சென்ற ஹதீஸ் எண்கள்: 937, 1165)

1173 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரம் வந்ததும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள் என என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அந்த நேரம் நான் நபி (ஸல்) அவர்களிடம் செல்லாத நேரமாக இருந்தது.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

(குறிப்பு: காண்க ஹதீஸ் எண்-618)

பாடம் : 30

கடமையான தொழுகைக்குப் பின் உபரியான தொழுகைகளைத் தொழாமல் இருப்பது.

1174 அபுஸ் ஸஅஸஆ ஜஅஃபர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (லுஹ்ர்அஸ்ர் ஆகிய தொழுகைகளை இடையில் உபரித் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற் போல் எட்டு ரக்அத்கள் தொழுதிருக்கிறேன். (மஃக்ரிப்இஷாத் ஆகிய தொழுகைகளை இடையில் உபரித் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் ஏழு ரக்அத்கள் தொழுதிருக்கிறேன் என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அபுஸ் ஸஅஸஆ (ரஹ்) அவர்களிடம்நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை (அதன் கடைசி நேரத்திற்கு) பிற்படுத்தி அஸ்ர் தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்திற்கு) முற்படுத்தியிருப்பார்கள்இஷாத் தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்திற்கு) முற்படுத்தி மஃக்ரிப் தொழுகையை (அதன் கடைசி நேரத்திற்கு) பிற்படுத்தியிருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன்என்றேன். அதற்கு அபுஸ் ஸஅஸஆ (ரஹ்) அவர்கள் நானும் அவ்வாறே கருதுகிறேன் என்றார்கள்.

பாடம் : 31

பயணத்தின் போது ளுஹாத் தொழுகை தொழுவது.

1175 முவர்ரிக் பின் மு.ஷம்ரிஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம்நீங்கள் ளுஹா (முற்பகல்) தொழுகை தொழுவது உண்டா?என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இல்லை என்றார்கள். சரிஉமர் (ரலி) அவர்கள் தொழுவார்களா?என்று கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றார்கள். சரிஅபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவார்களா?என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். சரிநபி (ஸல்) அவர்கள் (தொழுவார்களா)என்று கேட்டேன். அது தெரியவில்லை என்றார்கள்.

1176 அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ளுஹாத் தொழுததாக உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எவரும் எமக்கு அறிவிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தமது இல்லத்திற்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுததாக உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அதைவிடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகைகளையும் தொழுததை நான் ஒரு போதும் கண்டதில்லை. ஆயினும் அவர்கள் ருகூஉவையும் சஜ்தாவையும் பரிபூரணமாகச் செய்தார்கள் என்றும் உம்முஹானீ (ரலி) குறிப்பிட்டார்கள்.

பாடம் : 32

ளுஹாத் தொழுகை தொழாமல் இருப்பதும்தொழாமல் இருக்க அனுமதி உண்டு எனும் கூற்றும்.

1177 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ளுஹாத் தொழ நான் பார்த்ததில்லை. நான் அதைத் தொழுவேன்.

பாடம் : 33

உள்ளூரில் இருக்கம் போது ளுஹாத் தொழுவது.

நபி (ஸல்) அவர்களைப் பற்றி (அவர்கள் ளுஹாத் தொழுததாக) இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

1178 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோற்பதுஇரண்டு ரக்அத் ளுஹாத் தொழுகை தொழுவது,வித்ர் தொழுது விட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். நான் இறக்கும் வரை அவற்றை விட மாட்டேன்.

1179 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உடல் பருமனாக இருந்த ஓர் அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) என்னால் (பள்ளிவாசுலுக்கு வந்து) உங்களுடன் நின்று என்னால் தொழ முடிவதில்லை என்று கூறினார். மேலும் நபியவர்களுக்காக உணவு சமைத்துத் தமது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார்.ள அவரது இல்லத்திற்கு நபி (ஸல்) அவர்கள் சென்றபோதுன அவர்கள் தொழுவதற்காக அவர் (பாயொன்றை விரித்து பதப்படுத்துவதற்காக அந்தப்) பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். நபி (ஸல்) அவர்கள் அதன் மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

இப்னுல் ஜாரூத் (அப்துல் ஹமீத் பின் அல்முன்திர்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம்நபி (ஸல்) அவர்கள் ளுஹாத் தொழுகை தொழுவார்களாஎன்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள்,அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை என விடையளித்தார்கள்.

இதை அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 34

லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது.

1180 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுத பத்து ரக்அத் (சுன்னத்) தொழுகைகளை நான் நினைவில் வைத்துள்ளேன். (அவை:) லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள். லுஹ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள். மஃக்ரிப் தொழுகைக்குப் பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத்கள். இஷாத் தொழுகைக்குப் பின் தமது வீட்டில் தொழுத இரண்டு ரக்அத்கள். சுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள்.

சுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி (ஸல்) அவர்களிடம் (அந்நியர்) யாரும் செல்ல முடியாத நேரமாகும்.

1181 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஅத்தின் பாங்கு சொல்லி, ஃபஜ்ருடைய நேரம் வந்திருக்க நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்.கள்

1182 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும் சுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்களும் தொழாமல் இருந்த தில்லை.

பாடம் : 35

மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுவது.

1183 அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள் (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும் போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சிஇது விரும்பியவர்களுக்கு மட்டும்தான்என்றார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழி யாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

1184 மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (எகிப்தின் ஆளுநராயிருந்த) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் சென்று,அபூதமீம் (அப்துல்லாஹ் பின் மாலிக்-ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களேஉங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையாஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்துவந்தோம் என்று விடையளித்தார்கள். இப்போது ஏன் நீங்கள் செய்வதில்லைஎன்று நான் கேட்டேன். அதற்கவர்கள் அலுவல்களே காரணம் என்றார்கள்.

பாடம் : 36

உபரித் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது.

நபி (ஸல்) அவர்கள் குறித்து (அவர்கள் இவ்வாறு தொழுவித்ததாக) அனஸ் (ரலி)ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

(குறிப்பு: காண்க முன்சென்ற ஹதீஸ்கள்-380, 1044)

1185,1186 மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவிருக்கிறது. (நான் சிறுவனாக இருந்த போது) அவர்கள் என் வீட்டிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து (ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒருமுறை (அன்பாக) உமிழ்ந்தை இப்போதும் நினைவில் வைத்திருக்கி றேன். (குறிப்பு: காண்க ஹதீஸ் எண்-77.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் என் சமுதாயத்தாரான பனூசாலிம் குலத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தி வந்தேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க் கும் என் குலத்தாரு(டைய பள்ளிவாசலு)க்குமி டையே இடையே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் ஓடியது. ஆகவேஅதைக் கடந்து அவர்களின் பள்ளிக்கு வருவது சிரமமாகிவிட்டது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுஅல்லாஹ்வின் தூதரே! நான் என் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழைவந்தால் எனக்கும் என் சமுதாயத்தாருக்குமிடையே வெள்ளநீர் வழிந்தோடுகிறது. என்னால் அதைக் கடக்க முடியவில்லை. எனவேதாங்கள் வந்து எனது வீட்டில் தொழுகை நடத்த வேண்டும் என்றும் அவ்விடத்தை நான் (எனது) தொழுமிடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்என்றேன்.அதற்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அல்லாஹ் நாடினால்) அவ்வாறே செய்கிறேன் என்று கூறினார்கள்.

மறுநாள் நண்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்வீட்டிற்குள் வர) அனுமதி கோரினார்கள். நான் அனுமதியளித்தேன். (வீட்டில் நுழைந்ததும்) அல்லாஹ்வி.ன தூதர் (ஸல்) அவர்கள் உட்காரக்கூட இல்லை (இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்என்று கேட்டார்கள். அவர்கள் (என் வீட்டில்) எந்த இடத்தில் தொழவேண்டுமென நான் விரும்பினேனே அந்த இடத்தை அவர்களுக்கு சுட்டிக் காட்டினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று (தொழுகைக்காக) தக்பீர் கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து விட்டு சலாம் கொடுத்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்த போது நாங்களும் சலாம் கொடுத்தோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த கஸீர் எனும் (கோதுமைக் குறுணைக் கஞ்சி) உணவி(னை உண்பத)ற்காக அவர்களை நாங்கள் இருக்க வைத்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள் என் வீட்டில் இருப்பதைக் கேள்விப்பட்ட கணிசமான மக்கள் எனது வீட்டில் திரண்டுவிட்டனர்.

அவர்களில் ஒருவர் மாலிக் பின் துக்ஷுன் என்ன ஆனார் (அவர் ஏன் வரவில்லை)என்று கேட்டார். அங்கிருந்த மற்றொரு மனிதர் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர் (முனாபிக்). (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை) என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொல்லாதீர்கள்! அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹுவைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறியதை நீங்கள் பார்க்கவில்லையாஎன்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்அல்லாஹ்வின் மீதாணையாக! அவரது நேசமும் அவரது உரையாடலும் நயவஞ்சகர்களிடமே இருப்பதையே நாங்கள் காண்கிறோம்என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்ன வருக்கு அல்லாஹ் நரகத்தை தடைசெய்து விட் டான் (ஹராமாக்கி)விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸை நான் மக்களிடம் எடுத்துரைத் தேன். அப்போது அவர்களிடையே நபித்தோழர் அபூ அய்யூப் (காலித் பின் ஸைத்-ரலி) அவர் களும் இருந்தார்கள்.-அன்னார் அப்போது நடைபெற்ற (கான்ஸ்டன்டி நோபிள்) போரிலேயே இறந்தார்கள். அப்போது ரோமாபுரியில் யஸீத் பின் முஆவியாவே அவர்களுக்கு ஆளுநராக இருந்தார்.- இந்த ஹதீஸை நான் கூறிய போது அதை அய்யூப் (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் கூறிய செய்தியை நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் எனவும் கூறினார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)து எனக்குப் பெரும் கவலையளித்தது. இந்தப் போரிலிருந்து அல்லாஹ் என்னை உயிரோடு திரும்பச் செய்தால்இத்பான் (ரலி) அவரது பள்ளியில் உயிரோடு இருந்தால் இது பற்றி அவரிடம் கேட்காமல் இருக்கப்போவதில்லை என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சபதம் எடுத்துக் கொண்டேன். நான் ஊர் திரும்பி ஹஜ்ஜுக்கோ உம்ராவுக்கோ இஹ்ராம் கட்டினேன். பின்னர் நான் மதீனா சென்றேன். பனூ சாலிம் கூட்டத்தாரிடம் சென்றேன். அங்கே வயது முதிர்ந்து பார்வையும் இழந்து இத்பான் (ரலி) அவர்கள் தம் சமுதாயத்திற்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். தொழுது சலாம் கொடுத்ததும் அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லி நான் யார் என்பதையும் கூறினேன். பிறகு இந்த ஹதீஸைப் பற்றியும் (திரும்ப) விசாரித்தேன். முதலில் எனக்குக் அறிவித்தவாறே மீண்டும் எனக்கு அந்த ஹதீஸை அறிவித்தார்கள். (குறிப்பு: காண்க ஹதீஸ் எண்-424, 425)

பாடம் : 37

உபரியானத் தொழுகைகளை வீட்டில் தொழுதல்.

1187 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.