16 – கிரகணங்கள்

அத்தியாயம்: 16 – கிரகணங்கள்.

பாடம் : 1

சூரிய கிரகணத்தின் போது தொழுவது (நபி வழி).

1040 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் இருந்து கொண்டிருந்தோம். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங் களும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகுசூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவேஅவற்றை நீங்கள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட (கிரகண மான)து அகற்றப்படும் வரை நீங்கள் தொழுங்கள்பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள்.

1041 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த மனிதனின் இறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவேஅவற்றை நீங்கள் கண்டால் எழுந்துதொழுங்கள்.

இதை அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்-ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1042 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எந்த மனிதனின் இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே,அவற்றை நீங்கள் கண்டால் (இறைவனைத்) தொழுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

1043 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபி ளஸல்ன அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத் தான் கிரகணம் ஏற்பட்டது என்று பேசிக் கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவேஅவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்தொழுங்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 2

கிரகணத்தின் போது தானதர்மம் செய்தல்.

1044 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக் குத் தொழுகை நடத்தினார்கள். அதில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவை நீண்ட நேரம் செய்தார்கள். பிறரு (ருகூஉவிலிருந்து) எழுந்து நின்றார்கள். அந்த நிலையை நீண்ட நேரம் செய்தார்கள்.- இந்த நிலையானது முதல் நிலையைவிடச் சிறியதாகவே இருந்தது.-பிறகு சஜ்தா (சிர வணக்கம்) செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்து விட்டிருந்த நிலையில் தொழுகையை முடித்தார்கள். அப்போது அவர்கள் மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்)சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்தக்பீர் சொல்லுங்கள்தொழுங்கள்;தான தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். பிறகு,

முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.

முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்;அதிகமாக அழுவீர்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 3

கிரகணத் தொழுகைக்காக அஸ்ஸலாத்து ஜாமிஆ (கூட்டுத் தொழுகை நடைபெறுகிறது) என்று அழைப்புக் கொடுப்பது.

1045 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (கூட்டுத் தொழுகை நடைபெறுகிறது) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

பாடம் 4

கிரகணத்தின் போது இமாம் உரை நிகழ்த்துவது.

(கிரகணம் ஏற்பட்டிருந்த போது தொழுது விட்டு) நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியதாக ஆயிஷா (ரலி)அஸ்மா (ரலி) ஆகியோர் அறிவித் துள்ளனர்.

1046 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளி வாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக் குப் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் (தஹ்ரீமா) கூறிநீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர் சமி அல்லாஹு -மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்ந் தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் ஓதினார்கள். ஆனால் இது முத-ல் ஓதியதைவிட குறைந்த நேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிட குறைந்த நேரமே அமைந்திருந்தது. பின்னர் சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்ரப்பனா வல(க்)கல் ஹம்து என்று கூறி (நிமிர்ந்து) விட்டுசஜ்தாச் செய்தார்கள்.

பிறகு இதுபோன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.- அப்போது நான்கு சஜ்தாக்(கள் கொண்ட இரண்டு ரக்அத்)களில் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்தற்கு முன் (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்து விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான குணங்களைக் கூறிப் போற்றி(ய பின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள் (தமது உரையில்), (சூரியன் சந்திரன்) இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் (எனக்கு இதையறிவித்த) உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்ட தினம் உங்கள் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஸுபைர்-ரலி) இரண்டு ரக்அத்களைவிட கூடுதலாக்காமல் சுப்ஹுத் தொழுகை போன்று தொழுவித்தார்களேஎன்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள்ஆம்! (அவர் அவ்வாறு தொழுவித்தார்கள்.) அவர் நபி வழியை தவறவிட்டார்என்று பதிலளித்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாகவும் இதுபோன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அது கஸீர் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 5

(சூரிய கிரகணம் ஏற்பட்டது என்று கூற) கசஃபத்திஷ் ஷம்சு என்று சொல்வதாஅல்லது ஹசஃபத்திஷ் ஷம்சு என்று செல்வதா?

அல்லாஹ் (சந்திர கிரகணம் பற்றிக் கூறுகையில்) ஹசஃபல் கமர் (75:8) எனும் செல்லை ஆண்டுள் ளானே?

1047 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் நின்று தக்பீர் (தஹ்ரீமா) கூறிநீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்திசமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் என்று கூறி முன்புபோன்றே நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ஓதினார்கள்.- இ(ப்போது அவர்கள் ஓதிய)து முன்பு ஓதியதைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முத-ல் செய்த ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு நீண்ட நேரம் சஜ்தாச் செய்தார்கள். பின்னர் இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். பிறகு (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்து விட்டிருந்த நிலையில் சலாம் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். சூரியசந்திர கிரகணங்கள் பற்றி அவர்கள் குறிப்பிடுகையில்அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவ தில்லை. அவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்கள்.

(குறிப்பு: அல்குர்ஆன் ள75:8 என்றன வசனத்தில் சந்திர கிரகணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையை இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்கள்.)

பாடம் : 6

கிரகணத்தின் மூலம் மனிதர்களை இறைவன் எச்சரிக்கிறான் எனும் நபிமொழி.

1048 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. மாறாக அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக்கிறான்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர்களிடமி ருந்து அப்துல் வாரிஸ் (ரஹ்)ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்)கா-த் பின் அப்தில்லாஹ் (ரஹ்)ஹம்மாத் பின் சலமா (ரஹ்) ஆகியோர் அறிவிக்கும் அறிவிப்புகளில் அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக்கிறான் எனும் வாக்கியம் இடம் பெறவில்லை.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 7

கிரகணத்தின் போது கப்றுடைய வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுதல்.

1049,1050 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதப் பெண் என்னிடம் யாசித்தபடி வந்தாள். அப்போது அவள் என்னிடம்அடக்கக் குழியின் (கப்று) வேதனையிலிருந்து உம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! என்று கூறினாள். ஆகவே நான் இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிமனிதர்கள் தம் அடக்க விடங்களில் வேதனை செய்யப்படுவார்களாஎன்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(டக்கவிடத்தின் துன்பத்)திலிருந்து நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினார்கள்.

பின்னர் (ஒரு நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டுவிடவேஉடனே அவர்கள் முற்பகல் நேரத்தில் திரும்பி வந்தார்கள் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர் வசிக்கும்) அறைகளைக் கடந்து சென்று (கிரகணத் தொழுகை) தொழ நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களும் அணிவகுத்து நின்றனர். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் அவர்கள் நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முதல் நிலையைவிட குறைவானதாகவே அமைந்திருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிட குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து சஜ்தாவுக்குச் சென்றார்கள். பிறகு (எழுந்து) நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இது முதல் நிலையைவிடக் குறைவான தாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இது முந்திய ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து சஜ்தாவுக்குச் சென்றார்கள். தொழுதுமுடித்தபின் அல்லாஹ் சொல்ல நாடியிருந்ததைச் சொன்னார்கள். பிறகு அடக்கக்குழியின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு மக்களைப் பணித்தார்கள்.

பாடம் : 8

கிரகணத் தொழுகையில் நீண்ட நேரம் சஜ்தா செய்யவேண்டும்.

1051 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இன்னஸ் ஸலாத்த ஜாமிஆ (கூட்டுத் தொழுகை நடை பெறுகிறது) என்று (மக்களுக்கு) அறிவிப்புச் செய்யப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூஉகள் செய்தார்கள். பின்னர் (அடுத்த ரக்அத்தில்) எழுந்து (மீண்டும்) ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூஉகள் செய்தார்கள். பின்னர் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமர்ந்தார்கள். கிரகணமும் விலகியது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அதைவிட நீண்ட நேரம் நான் ஒரு போதும் சஜ்தா செய்ததில்லை.

பாடம் : 9

கிரகணத் தொழுகையை மக்களுடன் இணைந்து (ஜமாஅத்தாகத்) தொழுவது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸம்ஸம் கிணற்றிற்கு அருகில் மக்களுக்கு ஜமாஅத்தாக (கிரகணத்) தொழுகை நடத்தினார்கள். (இத்தொழுகையை) அலீ பின் அப்தில்லாஹ் பின் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவித்தார்கள். (இவ்வாறே) இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்.

1052 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் (ஜமாஅத்தாக கிரகணத்தொழுகை) தொழுவித்தார்கள். அத்தொழுகையில் அல்பகரா (2ஆவது) அத்தியாயம் போன்றதை ஓதும் அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையைவிட குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூச் செய்தார்கள் அந்த ருகூஉ முந்திய ருகூஉவைவிட குறைவானதாக இருந்தது. பின்னர் சஜ்தாச் செய்தார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) எழுந்து (இரண்டாவது ரக்அத்தில்) நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையைவிட குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முந்திய ருகூஉவைவிட குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து வெகு நேரம் நிலையில் நின்றார்கள். இது முந்திய நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இது முந்திய ருகூஉவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்து விட்டிருந்த நிலையில் தொழுது முடித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரையாற்றுகையில்சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்று கூறினார்கள்.

அப்போது மக்கள்அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண்டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்நான் (தொழுது கொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிலிருந்து பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அது கிடைத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(தப் பழத்தி லிருந்)து புசித்திருப்பீர்கள். மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகம் எனக்குக் காட்டப்பட் டது. இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கர மான காட்சி எதையும் ஒரு போதும் நான் கண்டதேயில்லை. மேலும்நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன் என்று கூறினார்கள்.

மக்கள்ஏன் (அது)அல்லாஹ்வின் தூதரேஎன்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,பெண்களின் நிராகரிப்பே காரணம் என்றார்கள். அப்போது பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்என்று வினவப்பட்டது. அதற்கு கணவன் மார்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்துபிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒரு போதும் நான் கண்டேதேயில்லை என்று சொல்லிவிடுவாள் என்று பதிலளித்தார்கள்

பாடம் : 10

கிரகணத் தொழுகையில் ஆண்களுடன் பெண்களும் தொழுவது.

1053 ஃபாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) கூறினார்கள்: ஒரு சூரிய கிரகணத்தின் போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (கிரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தனர். அப்போது (அவர்களுடன்) ஆயிஷா (ரலி) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் (ஆயிஷா (ரலி)அவர்களிடம்)மக்களுக்கு என்னவாயிற்றுஎன்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் தம் கையால் வானை நோக்கி சைகை செய்துசுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். நான்ஏதேனும் அடையாளமாஎன்று கேட்டேன். அதற்கு அவர்கள்ஆம் என்பதுபோன்று சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில் நீண்ட நேரம்) நின்றேன். எனக்கு கிறக்கமே வந்து விட்டது. (கிறக்கம் நீங்க) நான் என் தலையில் தண்ணீரை ஊற்றலானேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுக் கூறினார்கள்:

நான் இதோ இந்த இடத்தில் (தொழுதவாறு) நின்று கொண்டிருக்கையில் சொர்க்கம் நரகம் உட்பட இதுவரை நான் பார்த்திராக அனைத்தையும் நான் பார்த்தேன். நீங்கள் (உங்கள் அடக்கக் குழிகளில்) மகாக் குழப்பவாதியான தஜ்ஜா-ன் குழப்பத்தைப் போன்ற அல்லது அதற்கு நிகரான குழப்பத்துக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என எனக்கு வஹீ (இறைச் செய்தி) அறிவிக்கப்பட்டது.

– (குழப்பத்தைப் போன்ற அல்லது அதற்கு நிகரான என்பதில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என எனக்குத் தெரியவில்லை என இதன் அறிவிப்பாளரான ஃபாத்தி பின்த் அல்முன்திர் ஐயுறுகிறார்.)-

(நீங்கள் அடக்கக்குழிகளில் இருக்கும் போது) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி) இம் மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்என்ற வினாவை முன் வைக்கப்படும். அதற்கு இறை நம்பிக்கையாளரோ அல்லது (இறைத் தூதின் மீது) உறுதி கொண்டிருந்தவரோ -(இந்த இரண்டில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என அறிவிப்பாளர் ஃபாத்திமா பின்த் அல் முன்திர் ஐயம் தெரிவிக்கிறார்.)- இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் எங்களிடம் சான்றுகளையும் நேர்வழி யையும் கொண்டுவந்தார். நாங்கள் (அவருடைய) அழைப்பேற்றோம்; (அவரை) நம்பினோம்பின்பற்றினோம் என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம்,நலமுடன் உறங்குவீராக! நீர் (உலகில் வாழ்ந்த போதும் அவரை) நம்பிக்கை கொண்டி ருந்தீர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம் என்று கூறப்படும்.

நயவஞ்சகனோ அல்லது (என்னைப் பற்றி) சந்தேகத்துடன் இருந்தவனோ-(இவ்விரண்டில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.)- (அந்த வினாவிற்கு) (அவரை) எனக்குத் தெரியாதுமக்கள் ஒன்றைச் சொல்லக் கேட்டேன். நானும் அதையே சொன்னேன் என்று பதிலளிப்பான்.

பாடம் : 11

சூரிய கிரகணத்தின் போது அடிமைகளை விடுதலை செய்ய ஒருவர் விரும்புவது.

1054 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின் போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

பாடம் : 12

கிரகணத் தொழுகையை பள்ளிவாச-ல் தொழுவது.

1055,1056 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதப் பெண் என்னிடம் யாசித்தபடி வந்தாள். அப்போது அவள் என்னிடம்அடக்கக்குழியின் (கப்று) வேதனையிலிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவானாக! என்று கூறினாள். ஆகவே நான் இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிமனிதர்கள் தம் அடக்கவிடங்களில் வேதனை செய்யப்படுவார்களாஎன்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(டக்கவிடத்தின் துன்பத்)திலிருந்து நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினார்கள்.

பின்னர் (ஒரு நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் புறப் பட்டார்கள். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டு விடவேஉடனே அவர்கள் முற்பகல் நேரத்தில் திரும்பி வந்தார்கள் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர் வசிக்கும்) அறைகளைக் கடந்து சென்று (கிரகணத் தொழுகை) தொழ நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களும் அணிவகுத்து நின்றனர். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் அவர்கள் நிலையில் நின் றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முதல் நிலையைவிட குறைவானதாகவே அமைந்திருந் தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிட குறைவான தாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து சஜ்தாவுக்குச் சென்றார்கள். பிறகு (எழுந்து) நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இது முதல் நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இது முந்திய ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து சஜ்தாவுக்குச் சென்றார்கள். தொழுது முடித்தபின் அல்லாஹ் சொல்ல நாடியிருந்ததைச் சொன்னார்கள். பிறகு அடக்கக்குழியின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு மக்களைப் பணித்தார்கள்.

பாடம் : 13

எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை.

இது பற்றி அபூபக்ர் (ரலி)முஃகீரா பின் ஷுஅபா (ரலி)அபூமூசா (ரலி)இப்னு அப்பாஸ் (ரலி)இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

1057 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். கிரகணத்தை நீங்கள் கண்டால் (இறைவனைத்) தொழுங்கள்.

இதை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1058 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவை நீண்ட நேரம் செய்தார்கள். பிறரு (ருகூஉவிலிருந்து) எழுந்து நின்றார்கள். அந்த நிலையை நீண்ட நேரம் செய்தார்கள்.- இந்த நிலையானது முதல் நிலையை விடச் சிறியதாகவே இருந்தது.-பிறகு சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்து விட்டிருந்த நிலையில் தொழுகையை முடித்தார்கள். அப்போது அவர்கள் மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்)சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்தக்பீர் சொல்லுங்கள்தொழுங்கள்;தானதர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள்: பிறகு,

முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வை விடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.

முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்;அதிகமாக அழுவீர்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 14

கிரகணத்தின் போது இறைவனை நினைவு கூர்தல்.

இது பற்றி இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (குறிப்பு: ஹதீஸ் எண்-1052).

1059 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் உலகமுடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்ளிக்குச் சென்றார்கள்.

நிலைருகூஉசஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒரு போதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்)அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுவனவல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக்கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 15

கிரகணத்தின் போது பிரார்த்தித்தல்.

இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூசா (ரலி)ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

1060 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத் தான் கிரகணம் ஏற்பட்டது என்று பேசிக் கொண்ட னர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படு வதில்லை. எனவேஅவற்றை நீங்கள் கண்டால் பிரகாசம் வரும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்தொழுங்கள்! என்று சொன்னார்கள்.

பாடம் : 16

இமாம் கிரகணத் தொழுகையின் சொற் பொழிவில் அம்மா பஅத் (இறைவாழ்த்துக் குப் பின்…) என்று கூறுவது.

1061 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) இறைவனை அவனுக்குத் தகுதியானவற்றைக் கூறிப் புகழ்ந்தபின் அம்மா பஅத் எனக் கூறினார்கள்.

பாடம் : 17

சந்திர கிரகணத்தின் போது தொழுவது (நபி வழியாகும்).

1062 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள்.

1063 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தமது மேலாடையை இழுத்தபடியே பள்ளிவாசலைச் சென்றடைந்தார்கள். (தொழுது விட்டுச் சென்றிருந்த) மக்களும் அவர்களிடம் வந்து குழுமினர். அப்போது அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்ததும்சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. இ(த்தகைய கிரகணமான)து ஏற்பட்டால் உங்களைவிட்டும் இதை அகற்றப்படும் வரை தொழுங்கள்பிரார்த்தியுங்கள்! என்று கூறினார்கள்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் காரணம், (கிரகணம் ஏற்பட்ட தினம்) நபி (ஸல்) அவர் களுடைய இப்ராஹீம் எனும் ஒரு புதல்வர் இறந்து விட்டார். இதையொட்டி மக்கள் (இப்ராஹீமின் இறப்புக்காகவே கிரகணம் ஏற்பட்டது என்று) பேசிக் கொண்டனர்.

பாடம் : 18

கிரகணத் தொழுகையின் முதல் ருகூஉவை நீட்டுதல்.

1064 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு சூரிய கிரகணத் தொழுகை தொழுவித்த போது இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகள் செய்தார்கள் அதில் முந்திய முந்திய ருகூஉகள் (அடுத்தடுத்த ருகூஉகளைவிட) நீளமானதாக இருந்தன.

பாடம் : 19

19-கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுதல்.

1065 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். ருகூஉவிலிருந்து நிமிர்ததும் சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்ரப்பனா! வல(க்)கல் ஹம்து (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறினார்கள். பிறகு மீண்டும் ஓதினார்கள். இவ்வாறு அந்த கிரகணத் தொழுகையில் இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.

1066 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அஸ்ஸலாத்து ஜாமிஆ (கூட்டுத் தொழுகை நடைபெறுகிறது) என்று அறிவிக்கஅறிவிப்பாளர் ஒருவரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். (மக்கள் கூடியதும்) முன்னே சென்று இரண்டு ரக்அத்களில் நான்கு ரகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்து தொழு(வித்)தார்கள்.

 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இதை எனக்கு அறிவித்த உர்வா பின் ஸுபைர் ளரஹ்னஅவர்களிடம்) உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் மதீனாவில் (கிரகணத் தொழுகை) தொழுவித்த போது சுப்ஹுத் தொழுகை போன்று இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள் (அவ்வளவுதான். மற்றபடி நீங்கள் கூறியது போன்று) அவர்கள் செய்யவில்லையே! என்று சொன்னேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள்,ஆம். அவர் நபி வழியை தவறவிட்டார் என்று சொன்னார்கள்.

(கிரகணத் தொழுகையில்) சப்தமிட்டு ஓதுவது தொடர்பாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.