81 – அத்தக்வீர்

அத்தியாயம்: 81 அத்தக்வீர் – சுருட்டுதல், மொத்த வசனங்கள்: 29

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. சூரியன் சுருட்டப்படும் போது,

2. நட்சத்திரங்கள் உதிரும் போது,

3. மலைகள் பெயர்க்கப்படும் போது,

4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது,

5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது,

6. கடல்கள் தீ மூட்டப்படும் போது,

7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது,

8, 9. என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

10. ஏடுகள் விரிக்கப்படும் போது,

11. வானம் அகற்றப்படும் போது,

12. நரகம் கொளுத்தப்படும் போது,

13. சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும் போது,

14. ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான்.

15, 16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறையக் கூடிய நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.

17. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக!

18. தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!

19. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்.

20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.

21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.

22. உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.

23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.

24. அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.

25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.

26. எங்கே செல்கிறீர்கள்?

27, 28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.

29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: